Sunday, December 5, 2010

ஜோன்ஸு குட்டி


XIII மிஸ்டரி காமிக்ஸ் கதை வரிசையின் மூன்றாவது ஆல்பத்தின் அட்டைப்படத்தையும், அதன் தலைப்பையும் காணும் XIII ரசிகர்கள், இந்த ஆல்பமானது கனவு+ கவர்ச்சி சிட்டு மேஜர் ஜோன்ஸின் கதையை கூறுவதாக எண்ணிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. நானும் அவ்வாறே எண்ணி வியந்தேன். ஏனெனில் கடந்த ஆல்பமான இரினாவில், அடுத்த கதை ஜோன்ஸ் குறித்தது என்று இருக்கவில்லை.

ஆல்பத்தின் ஆரம்ப பக்கங்களை செக்ஸ்பீர் தாடிவைத்த ஆடு மேய்வதுபோல் மேய்ந்தாலும்கூட, மேஜர் ஜோன்ஸ் ஒரு சிறுமியாக தன் அண்ணன் மார்க்கஸுடன் கறுப்பின மக்கள் அடர்ந்து வாழும் புறநகர்ப் பகுதியொன்றின் சீர்கெட்ட தெருக்களில் நடமாடுவதையே அங்கு காணமுடியும்.

ஆனால் Little Jones எனத் தலைப்பிடப்பட்ட இந்த ஆல்பம் பிரதானமாக James Elroy Wittaker குறித்தே பேசுகிறது. அதேவேளையில் அது சிறுமி ஜோன்ஸின் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியையும் முன்வைக்கிறது. விட்டேக்கரின் வாழ்வின் இப்பகுதியில் நடைபெறும் சம்பவங்களின் ஒரு சாட்சியாக சிறுமி ஜோன்ஸ், விட்டேக்கரை நிழல்போல் தொடர்வதை கதையில் காணக்கூடியதாக இருக்கிறது.

அனாதைகளான ஜோன்ஸும் அவன் சகோதரன் மார்கஸும் பொலிசாரால் துரத்தப்படும் ஆரம்ப பக்கங்களிலேயே, கறுப்பு மற்றும் வெள்ளை இனத்தவர்களிற்கிடையிலனான பரஸ்பர இனத்துவேஷமானது காட்சிகள் வழியாகவும், உரையாடல்கள் வழியாகவும் கதையில் கூறப்பட்டு விடுகிறது. கதை 1960களில் இடம்பெறுகிறது. பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் காயப்படும் ஜோன்ஸ், அவ்வழியாக காரில் வரும் கறுப்பின ராணுவ அதிகாரி ஒருவரால் பாதுகாப்பாக அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, காயத்திற்கு சிகிச்சையும், பசிக்கு உணவும் அளிக்கப்படுகிறாள். அந்த இளம் ராணுவ அதிகாரி வேறுயாருமல்ல, மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர்தான் அவர்.

lj1 ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தாலும்கூட வெள்ளையர்களின் இனத்துவேஷக் கிண்டல்களிலிருந்து அவரிற்கு விலக்கு அளிக்கப்படுவதில்லை. வயதான தாய், சகோதரி ஏஞ்சலா, சகோதரன் ஃபீனிக்ஸ் என்பவர்களை கொண்ட சிறிய குடும்பம் விட்டேக்கரினுடையது. விட்டேக்கரின் தந்தையாக கதையில் காட்டப்படுபவர் மார்ட்டின் கால்வின் X என்பவராவார். மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் X ஆகியோரின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாத்திரம், கறுப்பின மக்களின் நியாயமான உரிமைகளிற்காக அமைதி வழியில் போராடி கொலை செய்யப்பட்ட மதிப்புமிகு தலைவராக கதையோட்டத்தில் சித்தரிக்கப்படுகிறது. இது போதாது என்று “நான் ஒரு கனவு கண்டேன்” எனும் சொற்றொடரும் விட்டேக்கரின் தந்தையின் புகழ் பெற்ற கூற்றாக கதையில் இடம்பிடித்திருக்கிறது.

தாயினால் மிகவும் அன்பு செய்யப்படும் விட்டேக்கர், தன் சகோதரி ஏஞ்சலாவின் கோபத்திற்குள்ளாகி இருப்பவனாக காட்டப்படுகிறான். இதற்கு காரணம், விட்டேக்கர் தன் தந்தையின் வழியில் கறுப்பின மக்களிற்காக போராடாமல் வெள்ளை தேசியத்தின் தேசபக்தி கொடியை தூக்கச் சென்றதே.

Black Panthers எனும் கறுப்பின தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து, கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு விட்டேகரை கேட்கிறாள் ஏஞ்சலா. ஆனால் ப்ளாக் பன்தர்களின் வன்முறைச் சித்தாந்ததிலும், நடவடிக்கைகளிலும் வெறுப்புற்ற விட்டேக்கர், ஏஞ்சலாவின் வேண்டுகோளை முதலில் மறுத்து விடுகிறான். ஆனால் இதே விட்டேக்கர், ப்ளாக் பன்தர்களின் தலைவனான Booby Snake [பாம்பு பாபி], வன்முறை வழிகளை கைவிடுவதாக வாக்குறுதி அளித்ததும் கறுப்பின மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல சம்மதிப்பவனாக கதையின் பிறிதொரு பகுதி ஆச்சர்யப்படுத்துகிறது.

விட்டேக்கரின் தம்பியான ஃபீனிக்ஸ், தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். விட்டேக்கரைப் போலவே உயரிய பதக்கங்களை வென்று, பிறர் மதிக்கும் திறமையான ராணுவ அதிகாரியாக ஆகிவிட வேண்டுமென்பது அவன் ஆசை. ஆனால் அமெரிக்க ராணுவத்தின் இனத்துவேஷத்திற்கு அவன் பலியாகிவிடுகிறான். தன் மீதான கிண்டல்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஃபீனிக்ஸ், ஒரு வெள்ளையின ராணுவ அதிகாரியை தாக்கிவிடுகிறான். இதனால் அவன் அமெரிக்க ராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுகிறான். இந்த தோல்வியும் தன் சகோதரனின் வெற்றியும் அவனை அழுத்துகிறது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தன் வாழ்வையும் தன் சகோதரன் வாழ்வையும் ஒப்பிட்டு மருகி வாழ்கிறான் அவன். வாழ்வின் புன்னகைக்கும் பக்கத்தில் இடம்பெற வாய்ப்பும் அதன்கூடவே வரும் அதிர்ஷ்டமும் இன்றியமையாதது என்பதை ஃபீனிக்ஸ் பாத்திரம் கதையோட்டத்தில் மெலிதாக உணர்திக்கொண்டே செல்கிறது.

lj2 வியட்நாமில் போரிட்ட விட்டேக்கர், அங்கு அவன் ஆற்றிய தீரச் செயல்களிற்காக உயரிய மதிப்பிற்குரிய பதக்கங்களை வென்ற ஒரு கறுப்பின அதிகாரியாக சித்தரிக்கப்படுகிறான். விட்டேக்கர் தன் இனத்தையே வெறுக்கும் ஒருவனாகவும், வெள்ளையர்கள் விரும்பும் கறுப்பினத்தவனாக இருப்பவனாகவும், அவர்களின் பிருஷ்டதுளைகளை நக்குபவனாகவும் கதையோட்டத்தில் பிற கதை மாந்தர்களால் குற்றம் சாட்டப்படுகிறான். போர் முனையில் கறுப்பின இளைஞர்கள் அதிகம் பலியானது வெள்ளை முதலாளித்துவ யுக்தி என்பதும், கறுப்பின மக்களின் வறுமையே அந்த சமூக இளைஞர்களை அமெரிக்க ராணுவத்தில் அதிகம் இணைந்து கொள்ள தூண்டியது என்பதும் ப்ளாக் பன்தர் குழுவின் கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன.

வியட்நாம் போரில் விட்டேக்கரால் காப்பாற்றப்பட்ட ஜெனரல் பேட்டின் மகளான ஷரோன் மீது விட்டேக்கரிற்கு இன்னமும் காதல் இருக்கிறது. சரோனும் அவனை தன் மனதில் இன்னமும் நேசிக்கிறாள். ஆனால் ஷரோன் திரைப்பட இயக்குனர் நார்மன் பால்டான்ஸ்கியை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறாள். சர்ச்சைக்குரிய இயக்குனரான நார்மன் பால்டான்ஸ்கி, கறுப்பின புரட்சிக்குழுவான ப்ளாக் பன்தரை மையமாக கொண்டு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஷரோன் தேர்வாகி இருக்கிறாள். இந்நிலையில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஷரோன் பேட்டின் உடல் அவள் வீட்டில் கண்டுபிடிக்கப்படுகிறது..

இக்கொலையை உண்மையில் செய்தது யார்? அதற்கான காரணம் என்ன ? இக்கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது யார்? இக்கொலையின் பின் மறைந்திருக்கும் சதித்திட்டம் என்ன ? அதன் சூத்திரதாரிகள் யார் ? மேஜர் ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கர், கறுப்பின மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பானா இல்லை வெள்ளை அதிகாரத்தின் சதியை எதிர்த்துப் போராடுவானா? இவற்றிற்கான விடைகளையெல்லாம் விறுவிறுப்பாகவும் சீரான வேகத்துடனும் கூறிச் செல்கிறது இக்காமிக்ஸின் கதாசிரியர் Yann le Pennetier வழங்கியிருக்கும் சிறப்பான கதை.

சர்ச்சைக்குரிய இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியை நண்பர்கள் அறியாமல் இருக்க வாய்புக்கள் இல்லை. அவரிற்கு Sharon Tate எனும் மனைவி இருந்தார். வளர்ந்து வரும் நடிகையாக இருந்த அவர் 1969ல் தன் வீட்டில் சில நண்பர்களுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கதாசிரியர் இயான் தகுந்த முறையில் கற்பனை கலந்து கதையில் இணைத்திருக்கிறார். மேலும் கதையில் வரும் இயக்குனர் நார்மன் பொல்டான்ஸிக்கும் நிஜ இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கிக்கும் உருவத்திலும் சரி, செயல்களிலும் சரி ஒற்றுமைகள் அதிகமாகவே உள்ளன. நிஜ சம்பவங்களையும், பாத்திரங்களையும் கற்பனை கலந்து கதையில் இணைத்தன் மூலம் XIII ன் மரபான கதை சொல்லல் முறையிலிருந்து விலகி புதிய பாதைக்கு தன் கதையை இட்டுச் சென்றிருக்கிறார் கதாசிரியர் இயான்.

lj3 காரிங்டன், மங்கூஸ், ஜியோர்டினோ என XIII ன் பிரபல பாத்திரங்கள் கதையில் கவுரவ வேடங்களில் [ நட்பிற்காக] இடம் பிடித்திருக்கிறார்கள். கதையின் இறுதியில் வரும் அந்த இரு அட்டகாசமான திருப்பங்களும் கதையின் மிகப் பெரிய பலமாக அமைந்து விடுகின்றன. அதில் ஒரு திருப்பத்தின் பின்பாக விட்டேக்கரை நாம் பார்க்கும் பார்வையே வேறாக இருக்கும். அந்த திருப்பத்தை XIII தனமான ஒரு திருப்பமாக நிச்சயம் வகைப்படுத்த முடியும். அந்த விதத்தில் ஜான் வான் ஹாமிற்கு சிறிது கிச்சு கிச்சு காட்டியிருக்கிறார் இயான்.

அதேபோல் ஜோன்ஸின் உண்மையான பெயர் என்ன என்பதை அறியும் தருணமும் அருமையே. ஜோன்ஸின் உண்மையான பெயரிற்கு பொருத்தமானவள்தான் அவள். அவள் பெயர் ஒரு கவிதையாக அந்த தருணத்தில் ஒலிக்கும்.சிறுமியாக இருக்கும்போதே ஆண்களின் ஆணாதிக்க கருத்துக்களை எதிர்க்கும் ஒருத்தியாகவும், ராணுவத்தில் சேர விரும்புபவளாகவும், தன் சுற்றுப்புறத்தை கூர்ந்து அவதானித்து தகவல்களை கிரகிக்கும் இயல்பு கொண்டவளாகவும் ஜோன்ஸ் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ப்ளாக் பன்தர் போஸ்டரை பின்னணியாகக் கொண்டு விரல்களை துப்பாகியாக்கி சிரிக்கும் அட்டைப்பட ஜோன்ஸை பாருங்கள். ஒரு ஆபத்தான அழகி உருவாகிறாள் என்பதற்கு சான்றல்லவா அது.

கதையின் சில பக்கங்களில் வரும் சித்திரங்கள் இக்கதை வளர்ந்தவர்களிற்கானது என்று நிரூபிக்கிறது. ஓவியர் எரிக் ஹெனானோவின் சித்திரங்கள் கதைக்கு சிறப்பாக துணை நிற்கின்றன. இருப்பினும் அவர் அடக்கி வாசித்திருப்பதாக எழும் உணர்வை அடக்க முடியவில்லை. ஹெனானோவின் சித்திரத்திறமையை நாம் கார்த்தகாவோவில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த தரம் இக்கதையில் இல்லை என்பதே உண்மை. வில்லியம் வான்ஸின் சித்திரங்களை வேறு யாரும் தாண்டி சென்று விடக்கூடாது என்பது XIII மிஸ்டரி கதைவரிசையின் எழுதப்படாத நியதியாக இருக்கும் போல் தெரிகிறது.

விட்டேக்கரின் வாழ்க்கையினூடாக நிழல்போல் நகர்ந்து அனாதையாக விடப்படும் சிறுமியான ஜோன்ஸை, காரிங்டன் தத்தெடுத்து ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அழைத்து செல்வதோடு ஜோன்ஸுடன் ஆரம்பித்த விட்டேக்கரின் கதை ஜோன்ஸுடன் ஒரு முடிவிற்கு வருகிறது.

தேசப்பற்று, இனப்பற்று, காதல், பாசம், சதி, அளவான ஆக்‌ஷன், அதிர வைக்கும் முடிவுகள் என இதுவரை வந்த XIII மிஸ்டரி கதைகளில் சிறப்பான இடத்தை எட்டிப் பிடிக்கிறது லிட்டில் ஜோன்ஸ். ஆனால் அட்டைப்படமும், தலைப்பும் விட்டேக்கரை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஜோன்ஸ் பாத்திரத்தை பயன்படுத்தி அதிக ஆல்பங்களை விற்றுத்தள்ள பதிப்பகம் உபயோகித்திருக்கும் ஒரு வணிக யுக்தி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜேம்ஸ் எல்ராய் விட்டேக்கரின் கதையை பிரதானமாக கூறும் இக்காமிக்ஸ் ஆல்பத்தின் அட்டையில் அவர் பெயரும், உருவமும் இல்லாதது பொருத்தமற்ற ஒன்றாகவே எனக்கு தெரிகிறது. இல்லை அதிலும் கூட ஏதேனும் மர்மத்தை பதிப்பகத்தார் வைத்திருக்கிறார்களா என்பது கடவுளிற்கே இருட்டான ஒன்றுதான். [***]

22 comments:

  1. அருமை நண்பரே வாங்கி படித்து விடுகிறேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஜஸ்ஸு மிஸ்ஸூல மீ த செகண்டு!

    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. அடப்பாவிகளா! அட்டையில ஜோன்ஸுக் குட்டின்னு போட்டுட்டு கதையில முழுக்க விட்டேக்கர் தான் வர்றாரா? இந்த அநியாயத்த தட்டிக் கேட்க யாருமேயில்லையா?

    ஜோன்ஸின் பால்ய காலத்துடன் ஆல்பம் நின்று விடுவது சற்று ஏமாற்றமே! காரிங்க்டனுடன் இனைந்து XIIIஐ அவர் எப்படி முதன்முதலில் சந்தித்தார் என்று விவரித்திருக்கலாம்! கொஞ்சம் சுவாரசியமாகவாவது இருந்திருக்கும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. //Booby Snake [பாம்பு பாபி]//

    ஸ்நேக் பாபு?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. அடடே,இங்கயும் ஒரு XIII போஸ்ட்டா?
    இதோ என்னுது.அனைவரும் வருக,ஆதரவு தருக. ;)

    http://illuminati8.blogspot.com/2010/12/xiii.html

    ReplyDelete
  6. கதை ஜோன்சை விட விட்டேகரை சுற்றியே நிகழ,பெயர்க் காரணம் நீங்கள் சொன்னதற்க்காகவே இருக்கும் என்று நினைக்கிறன்.ஆனால் இக்கதையை பற்றி எதுவும் சொல்ல இயலாது.இக்கதை ஆங்கிலத்தில் கிடைப்பது எப்போது?அதை படிப்பது எப்போது? :)

    ReplyDelete
  7. நண்பர் வேல்கண்ணன், வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    தலைவர் அவர்களே, மேஜர் ஜோன்ஸ் எனும் தலைப்பில் இன்னொரு ஆல்பம் வந்தாலும் வரும் :) பதிவின் மூன்றாவது ஸ்கேனில் மஞ்சள் நிற முடியுடன் விட்டேக்கருடன் உரையாடுவது சாட்சாத் காரிங்டனே :) அவருடைய அதிரடி குழுவான SPADS குறித்தும் அங்கு சிறிது பேசப்படுகிறது. காரிங்டனின் கதையில் மக்லேன் வர வாய்ப்பிருக்கிறது என்றே எண்ணுகிறேன். இக்கதையில் மக்லேன் இல்லை. கதை அப்படி. ஆம் ஸ்னேக் பாபு பொருத்தமான பெயர்தான் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, ஆதரவு தர வந்தவர்களை இரக்கமேயின்றி நீர் போட்டுத் தள்ளியதாக வதந்திகள் உலா வருகின்றன. இக்கதை ஆங்கிலத்திற்கு முன்பாக தமிழில் வெளியாகும் வாய்ப்புகள் அதிகம். கேட்பவரிற்கு கேட்டால் சரி :)! கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் செ.சரவணக்குமார், கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  8. " கனவு+ கவர்ச்சி சிட்டு மேஜர் ஜோன்ஸின் கதை"

    ஏமாற்றம் எங்களுக்கும் தான் காதலரே ;-)
    .

    ReplyDelete
  9. // கதையின் சில பக்கங்களில் வரும் சித்திரங்கள் இக்கதை வளர்ந்தவர்களிற்கானது என்று நிரூபிக்கிறது.//

    கொஞ்சம் பகிர்ந்திருக்கலாமே காதலரே :))
    .

    ReplyDelete
  10. //பதிவின் மூன்றாவது ஸ்கேனில் மஞ்சள் நிற முடியுடன் விட்டேக்கருடன் உரையாடுவது சாட்சாத் காரிங்டனே :)//

    அடடே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  11. //இக்கதை ஆங்கிலத்திற்கு முன்பாக தமிழில் வெளியாகும் வாய்ப்புகள் அதிகம்.//

    எதுங்க வெளி வரும்? விளம்பரமா? ;)

    // கேட்பவரிற்கு கேட்டால் சரி :)!//

    வரும் ஆனா வராது.கேட்கும் ஆனா கேட்காது! :P

    ReplyDelete
  12. தலைவர் அவர்களே, பதிவில் நான் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும், உங்கள் கருத்தின் வழியாக அது நிறைவேறிற்று :)

    நண்பர் இலுமினாட்டி, விளம்பரமும் வரும், இதழும் வரும். பொறுத்திருந்து பாருங்கள் :)

    ReplyDelete
  13. //பொறுத்திருந்து பாருங்கள் :) //

    எத்தனை வருஷம் னு இந்த தடவையாவது தெளிவா சொல்லுங்கய்யா யோவ்..;)

    ReplyDelete
  14. நண்பர் இலுமினாட்டி, இன்னமும் ஆறே மாதங்கள் பொறுத்திருங்கள்..ப்ளீஸ்.

    ReplyDelete
  15. ஆறு ஆறு மாசமா எத்தன வருசம்ங்க? ;)

    ReplyDelete
  16. எனக்கு வளரிந்து பெரியவளான ஜோன்ஸு குட்டியின் மீதுதான் ஆர்வம் அதிகம் என்ற கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் :-)

    ReplyDelete
  17. இலுமினாட்டி ஆறு மாசம்னா, அரை வருடம் என்று பொருள்படுகிறது :)

    நண்பர் கருந்தேள், பெரிய ஜோன்ஸின் பதிவு 18+ ஆக நிச்சயம் இடம்பெறும் :)

    தமிழ் காமிக்ஸ்களின் விரோதி, விதேசி காமிக்ஸ்களின் பிரியன் இலுமினாட்டி ஒழிக.. ஒழிக..

    ReplyDelete
  18. காதலரே,

    13 மிஸ்டரி தொடரிலேயே சரியான ஆல்பம் ஒன்று இப்போது தான் வெளிவந்திருக்கிறது போல. இனபகை புகைந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த அமெரிக்க கரிய வருடங்களில் கதைகளை நகர்த்த கதாசிரியருக்கு, இரு கறுப்பினத்தவர்கள் பிரதான கதாபாத்திரங்களாக 13ன் நெடித்து வெளியான ஆல்பங்களில் கிடைத்து போனது லக்கி ப்ரைஸ் அடித்து விட்டது போல. ஆனால் மூல ஆல்பங்களில் ஒருவருக்கு ஒருவர் யார் என்று கூட தெரியாமல் வந்து போகும் இரு கதாபாத்திரங்களை, ஏதோ அப்பா பொண்ணு மாறி இங்கு கதை அமைத்திருப்பது தான் ஏனோ கிரகிக்க முடியவில்லை. நீங்கள் கூறியது போல ஜோன்ஸை அட்டையில் போட்டு விட்டேக்கரின் கதையை நீட்டி முழக்கி இருப்பது, வியாபார யுத்தியாக தான் தெரிகிறது.

    மேஜர் ஜோன்ஸ் என்ற பெயரில் பெரிய ஜோன்ஸின் லீலைகள் அடங்கிய புத்தகம் விரைவில் வரும் போல :)

    மொழிமாற்றத்தில் சின்னி விரல், காய் பவுடர், எனக்கு பொறந்தவனேன்னு, நிறைய பிராக்ட்டீஷ் பண்ணி இருக்கீங்க... இதற்கு தான் இலுமியோடு அதிக நேரம் உரையாடாதீங்கன்னு சொல்றது.

    பி.கு.: பதிவில் இடபட்ட ஸ்கான் பிரதிகள், சரிவர தெரியவில்லை (அட்டையை தவிர). கிளிக்கிய பிறகே அவைகள் வேறு வின்டோவில் பிரசன்னமாகின்றன... அதை கொஞ்சம் கவனிக்கவும்.

    ReplyDelete
  19. //இதற்கு தான் இலுமியோடு அதிக நேரம் உரையாடாதீங்கன்னு சொல்றது.//

    ஹிஹி,இது கோராம இல்ல நைனா,இத்து கூட சேர்ந்து எனக்கும் ஒரே கவுஜயா வருதே,அத்து தான்மே கிரகம்.

    ReplyDelete
  20. ரஃபிக், இது நல்ல கதையுடன் கூடிய ஆல்பம் என்பது என் கருத்து. //ஒருவருக்கு ஒருவர் யார்// இங்குதான் கதையின் அட்டகாசமான திருப்பம் இருக்கிறது :) டார்லிங் ஜோன்ஸின் ஆல்பம் வரும் என்பது உறுதி. ஆம் பதிவில் ஸ்கேன்கள் தெரியவில்லை. ஏதோ ஒரு சிறு குழப்பம். சரிப்படுத்த முயன்றும் சரிவரவில்லை :) எனக்கு இலுமினாட்டியை தெரியாது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    விதேசிகளின் ஆதரவாளர் இலுமினாட்டி ஒழிக.. ஒழிக..

    ReplyDelete