Tuesday, August 31, 2010

அறிவித்தல்

rdweek ஓ யா பேபி……

Friday, August 27, 2010

தடம்


sil2 மரகதக் கடல் போல் விரிந்து கிடக்கிறது காடு. கதிரவன் தன் இளம் கதிர்களால் ஆசையுடன் விருட்சங்களினை வருடிக் கொடுக்கிறான். பரந்த காட்டின் மேலாகப் பறந்து வருகிறது சிலாஜ் கூட்டமைப்பை சேர்ந்த கோள வடிவமான வேவு பார்க்கும் கலமொன்று.

சிலாஜ் என்பது, அண்டவெளியின் பல்வேறுபட்ட கிரகங்களை சேர்ந்த, வெவ்வேறு இன மக்களை உள்ளடக்கிய, மில்லியன் கணக்கிலான விண்கலங்களை தன்னகத்தே கொண்ட, புதிய கிரகங்களையும், அறிவு கொண்ட உயிரினங்களையும், தொழில்நுட்பங்களையும் தேடி தொடர்ந்து பயணம் செய்யும் விண்கலத்தொடரின் கூட்டமைப்பு ஆகும். சிலாஜ் இதுவரை அறிந்திராத இனம், மனித இனம் என்பதாகும்.

கலத்தை ஓட்டி வரும் ஒற்றன், கலத்தின் திசை நோக்கி பறந்து வரும் பறவைக் கூட்டமொன்றை கலத்தினுள் உள்ள திரையில் காண்கிறான். கலத்தை சுற்றி போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு கவசப் புலத்தில் மோதி பறவைகள் இறந்து விடக்கூடாது என்பதற்காக அப்புலத்தை செயலிழக்க செய்கிறான் அவன். அப்பகுதியில் நடத்திய தேடலில் அறிவு விருத்தி அடைந்த உயிரினங்கள் எதுவும் தன்னால் கண்டு கொள்ளப்படவில்லை எனவும் சிலாஜின் கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் தருகிறான்.

கலத்தை விட்டு பார்வையை கீழே வீழ்த்தி, விருட்சங்களின் நுனிகளைக் கடந்து, கிளைகள் வழி இறங்கி கீழே வந்தால், மரமொன்றின் கிளையில் கால்கள் ஊன்றி, கைகளில் வில்லுண்டி ஏந்தி, அருகிலிருக்கும் மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் பறவையொன்றை குறி பார்த்துக் கொண்டிருக்கிறாள் சிறுமி நவி.

தன் காலை கிளையின் மீது சற்று வலிமையாக நவி ஊண்டி விட, அக்கிளை முறிந்து விழுகிறது. இதனால் தன் சமனிலை இழக்கும் நவி கீழே வீழ்கிறாள். அவள் வில்லுண்டியிலிருந்து விடுபட்ட தட்டையான உலோகம் காற்றைக் கிழித்துக் கொண்டு மேலே பறக்கிறது. பறவைக்கு வைத்த அக்குறி பறவையைத் தாக்காது மேலே பறந்து கொண்டிருந்த வேவு பார்க்கும் கலத்தை சென்று தாக்குகிறது.

மரக்கிளையிலிருந்து கீழே விழும் நவி, மரங்களிற்கிடையில் அங்கும் இங்குமாய் படர்ந்திருக்கும் காட்டுக் கொடிகளில் ஒன்றைப் பிடித்து தான் தரையை நோக்கி விழும் வேகத்தை குறைத்துக் கொள்கிறாள். காட்டின் தரையில் வீழ்ந்து விட்ட நவியைச் சற்றுத் தொலைவில் இருந்து நோட்டம் விடுகிறது அவளின் உயிர்த் தோழனான கரடிப்புலி கூயோ.

sil3 நவி வீழ்ந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி கிளைகளை உடைத்தவாறே வந்து விழுகிறது வேவு கலம். வீழ்ந்த அதிர்ச்சியில் அதில் தீப்பிடித்துக் கொள்ள, வட்ட வடிவமான கதவொன்று கலத்தில் திறக்கிறது. திறந்த கதவின் வழியாக வெளியே குதிக்கிறது, விண்கவச உடை அணிந்த, குழந்தை முகம் கொண்ட சிறிய உருவம் ஒன்று. தரையில் குதித்த அக் குழந்தை முக ஒற்றனின் விண்கவசம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

கலத்திலிருந்து வெளியே குதித்த ஒற்றனை வியப்புடன் பார்க்கிறாள் நவி. அவளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் கூயோ தன் மோப்ப சக்தியால் வரவிருக்கும் அபாயத்தை உணர்ந்து அவளை நோக்கி வேகமாக ஓட ஆரம்பிக்கிறது. கலத்தின் உட் பகுதியில் பொறிகள் பறக்கின்றன. தான் ஓடி வந்த வேகத்திலேயே நவியின் கையை தன் வாயில் கவ்வியபடி கலத்தை விட்டு விலகி ஓடுகிறது கூயோ. பொறிகளை துப்பியவாறே காட்டின் தரையில் கிடந்த வேவு கலம் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறுகிறது.

வெடித்து சிதறிய கலத்திலிருந்து பாதுகாப்பான தூரத்திற்கு நவியைக் கொண்டு செல்கிறது கூயோ. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக அதனை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறாள் நவி. கூயோவும் தன் நாக்கினால் நவியின் கன்னங்களை நக்கி தன் அன்பை வெளிப்படுத்துகிறது.

சற்று நிதானித்துக் கொண்டபின், ஆர்வமிகுதியால் வெடித்து சிதறிய கலத்தினைக் காணச் செல்கிறாள் நவி. கலத்தை செலுத்தி வந்த ஓற்றன் தீயில் கருகிப் போய்க் கிடப்பதைக் காணும் அவள், அந்த சிறு உடலை எடுத்து உண்ண முயற்சிக்கிறாள். அதன் ருசி அவளிற்கு பிடிக்கவில்லை என்பதால் அதனைக் கீழே வீசிவிட்டு, காட்டில் உணவு வேட்டையை தொடரச் செல்கிறாள் அவள்.

காடு அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு வேளை. பிரகாசமான ஒளியை தன்னைச் சுற்றி படரவிட்டவாறே காட்டில் இறங்குகிறது ஒர் பிரம்மாண்டமான விண்கலம். விண்கலத்திலிருந்து கிளம்பும் ஒர் வகை கதிர் வளையம், கீழே காணப்படும் காட்டைப் பஸ்பமாக்கி கலம் பாதுகாப்பாக இறங்க வழி அமைத்து தருகிறது.

தூசியைக் கிளப்பியவாறே தரையிறங்கும் கலத்தின் கதவுகள் திறக்கின்றன. திறந்த கதவுகள் வழி வெளியேறுகிறது, ஒரே உருவம், மற்றும் வடிவம் கொண்ட அடிமைகள் சேனை. கலத்தினை விட்டு வெளியேறும் இச்சேனை, ஒழுங்காக பிரிந்து, அணி வகுத்து கலத்திற்கு வெளியே யாரையோ எதிர்பார்த்து நிற்கின்றது.

sil4 பிரம்மாண்டமான கலத்தின் மற்றுமோர் கதவு திறக்க, பறவையும், பூச்சியும் கலந்த உருவமாய், கார் வண்ண உடற் கவசம் இரவில் மிளிர, செங்கண்கள் ஒளிர, கம்பீரமாக நடந்தபடி வருகிறான் மஜெஸ்டோ ஹெய்லிக். ஹொட்டார்ட் இன மக்களின் பெயரில் இப்புதிய கிரகத்தை தம் சொந்தமாக்கி கொள்வதாக அவன் அறிவிக்கிறான். இதன் பின் ஹா ஹா ஹா என ஒர் வில்லச் சிரிப்பையும் உதிர்க்கிறான்.

அவன் அருகே பணிவுடன் நிற்கும் அவன் காரியதரிசியான யந்திரன் சினிவெல், மஜெஸ்டோ ஆணையிட்டால் தான் அடிமைகள் சேனை வேலையை ஆரம்பிக்கும் என மென்மையான குரலில் கூறுகிறான். சுயமாகச் சிந்திக்கும் திறனற்ற அடிமைகளைக் கடிந்தவாறே, அவர்களிற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறான் ஹெய்லிக். மறுநாள் காணாமல் போய்விட்ட வேவுகலத்தைப் தேடிச் செல்ல வேண்டியதை ஹெய்லிக்கிற்கு நினைவு படுத்தும் சினிவெல், அவனை ஓய்வெடுக்க சொல்கிறான். சிலாஜின் கட்டளைகளை மீற முடியாத நிலையை எண்ணி, மனதில் கறுவிக் கொண்டே ஓய்வெடுக்க செல்கிறான் மஜெஸ்டோ ஹெய்லிக்.

sil5 அதே இரவில் காட்டின் பிறிதோர் பகுதியில் கூயோவுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள் நவி. அவளின் ஆழ்ந்த உறக்கம் திடீரெனக் கலைய, தன் கண்களை விழித்துப் பார்க்கும் அவள், வெடித்து சிதறிய வேவுகலத்தின் ஒற்றனின் உருவத்தை ஒத்த, வெள்ளை நிறமான சிறு உருவம் தன் மேல் அமர்ந்திருப்பதைக் காண்கிறாள். அவள் மனம் சற்றுக் குழப்பமடைய, தன் கண்களை ஒரு முறை கசக்கி விட்டு நன்கு விழித்துப் பார்க்கும்போது, ஒற்றனின் சிறு வெள்ளை ஆன்மா மறைந்து விடுகிறது. இது வெறும் கனவு என்றபடியே மறுபடியும் தூங்கச் செல்கிறாள் அவள்.

மறுநாள் காலையில் அடிமைகளின் வேகமான செயற்பாட்டில் உருவாகியிருக்கும் புதிய கட்டமைப்புக்களை பார்த்து மகிழ்வுறும் மஜெஸ்டோ ஹெய்லிக், பறக்கும் தெப்பமொன்றில் சினிவெல் மற்றும் சில அடிமைகளுடன் காணாமல் போன வேவுகலத்தினையும், ஒற்றனையும் தேடிச் செல்கிறான்.

இந்த சிறு ஓற்றர்கள் கார்டோனியா எனப்படும் இனத்தை சேர்ந்தவர்கள். சிலாஜ் அமைப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுபவர்கள். இவற்றின் இனப்பெருக்கம் அரிதானது. எண்ணிக்கை குறைவாகவே உள்ள இனம் என்பதால் இத்தேடல் வேட்டை மிக முக்கியமானது என்பதை ஹெய்லிக்கிற்கு விளக்குகிறான் சினிவெல். அவன் கையில் இருக்கும் கருவியின் திரையில், ஒற்றனின் எண்ண அலைகள் குவிந்திருக்கும் இடம் தெரிகிறது. அப்பகுதியை நோக்கி வேகமாக பறக்கிறது பறக்கும் தெப்பம்.

காலையில் கண் விழிக்கும் நவி, காட்டில் வெப்பம் வழமைக்கு மாறாக அதிகரித்திருப்பதையும், பருவத்திற்கு முன்பாகவே இலைகள் பழுத்து விட்டதையும் கண்டு வியக்கிறாள். அவளிற்கு முன்பாகவே எழுந்து விட்ட கூயோ, தனக்கு பசி தாங்கவில்லை மீன் பிடித்து தா என நவியிடம் கேட்கிறது. கூயோவின் பசியை ஆற்றுவதற்காக கூயோவையும் அழைத்துக் கொண்டு நீர்வீழ்ச்சி ஒன்றை சென்று அடைகிறாள் நவி.

நீர்வீழ்ச்சியின் நீரோட்டத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மீனொன்றினை தன் வில்லுண்டியால் குறிபார்த்து அடிக்கிறாள் நவி. அவள் குறி தவறாது மீனின் தலையில் பாய்கிறது. அடிபட்ட மீனை எடுப்பதற்காக, நீர்வீழ்ச்சியின் நுனியிலிருந்து நீரோட்டத்தினுள் குதிக்கிறாள் நவி. நீரினுள் மூழ்கிய அவள், கையில் மீனுடன் வெளியேறி, கூயோவிற்கு அதனை உண்ணக் கொடுப்பதற்காக தயார் செய்கிறாள்.

வேவுகல ஓற்றனின் எண்ண அலைகளை காட்டும் கருவி, மஜெஸ்டோ ஹெய்லிக்கின் பறக்கும் தெப்பத்தை ஒர் நீர்வீழ்ச்சிக்கருகில் எடுத்து வருகிறது. நீர்வீழ்ச்சியை அண்மித்ததும் அக்கருவி பீப்பீப் எனும் ஒலியை எழுப்ப ஆரம்பிக்கிறது. ஆனால் நீர்வீழ்ச்சியின் அருகில் கருவி காட்டுமிடத்தில் ஒற்றனின் உருவத்தை சினிவெலால் காணமுடியவில்லை. பீப் ஒலியின் மூலமான ஒற்றனின் எண்ண அலைகள், நவியின் உடலில் இருந்து வருவதை சினிவெல் அறிந்து கொள்கிறான். இதென்ன புதுக்குழப்பம் என முனகும் சினிவெல்லிடம், நேரத்தை மேலும் வீணடிக்காமல் காற்றுத் தெப்பத்தைக் கீழிறக்கி, அடிமைகள் உதவியுடன் நவியைப் பிடிக்க சொல்கிறான் ஹெய்லிக்.

sil6 தனக்காக நவி தயார் செய்து கொண்டிருக்கும் மீனை, நாக்கில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருக்கும் கூயோவின் கண்களில் தம்மை ரகசியமாய் நெருங்கி கொண்டிருக்கும் நபர்கள் தெரிந்து விட நவியை உடனே எச்சரிக்கை செய்கிறது. அடிமைகளை பார்த்து அடடா இது நான் இதுவரை காணாத மந்தையாய் இருக்கிறதே என ஆச்சர்யப்படுகிறாள் நவி. இருகாலியைப் பிடி என மஜெஸ்டோ ஹெய்லிக் அடிமைகளிடம் ஆணையிட்டு விட ஆரம்பமாகிறது படுபயங்கரமான மோதல்.

வில்லுண்டியாலும், கூரான கத்தியாலும் அடிமைகளைத் தாக்குகிறாள் நவி. தன் கூரிய நகங்களினாலும், வலிய பற்களாலும் அடிமைகளை துவம்சம் செய்கிறது கூயோ. மோதலின் நடுவில், நவியின் பின்னலைப் பிடித்து அவளைத் தூக்கியவாறே தெப்பத்தை மேலே எழுப்புகிறான் ஹெய்லிக். இதைக் கண்டு விடும் கூயோ அருகிலிருக்கும் மலை ஒன்றில் செங்குத்தாக ஏற ஆரம்பிக்கிறது.

மிக வேகமாக மலையின் சுவரில் ஏறிய கூயோ, பறக்கும் தெப்பம் மிதக்கும் உயரத்தை தாண்டியவுடன், கீழே அந்தரத்தில் நிற்கும் தெப்பத்தை நோக்கிப் பாய்கிறது. அதன் பாய்ச்சல் ஹெய்லிக்கின் மேல் இறங்க, தன் பிடியிலிருந்து நவியை விட்டுவிடுகிறான் ஹெய்லிக். கீழே விழுந்த நவியை பார்த்து தப்பி ஓடும்படி கத்துகிறது கூயோ. அடிமைகளின் கரங்களில் அகப்படாது தப்பி ஓட ஆரம்பிக்கிறாள் நவி.

பறக்கும் தெப்பத்தில் ஹெய்லிக்குடன் ஆக்ரோஷமாக மோதுகிறது கூயோ. ஹெய்லிக்கின் தலையில் கூந்தல்கள் போல் தோற்றம் தரும் கலோரிக் குழாய்களை வெறியுடன் கடித்து துண்டாக்குகிறது அது. துண்டாக்கப்பட்ட கலோரிக் குழாய்களிருந்து வெளிப்பட்ட தீ கூயோவின் முகத்தை எரித்து விட, தெப்பத்திலிருந்து கீழே வீழ்கிறது கூயோ.

மலையின் பகுதிகளில் விழும் கூயோவின் உடல் அடிபட்டு, தெறித்து கீழே இறங்குகிறது. வலுவிழந்த அதன் நகங்கள் காற்றைப் பற்ற முயன்று தோற்கின்றன. கீழேயிருக்கும் நீர்வீழ்ச்சிக்குள் வந்து வீழ்கிறது கூயோ.

கூயோ நீர்வீழ்ச்சியின் நீரோட்டத்தில் மிதந்து செல்வதைக் காணும் நவி, உடனே நீரினுள் பாய்ந்து கூயோவை நோக்கி நீந்துகிறாள். கூயோவை நெருங்கி அன்புடன் அதனை தழுவும் அவள் கரங்கள், தன் உயிர் நண்பனின் உயிர் அவனிடத்தில் இல்லை என்பதனை அறிந்து கொள்கின்றன. உரத்த குரல் எடுத்து கதறுகிறாள் நவி.மேலிருந்து கீழே விழும் நீர் வீழ்ச்சியிலிருந்து ஈருடல், ஒருயிராக வீழ்கிறார்கள் நவியும், கூயோவும். நீரோட்டத்தில் நவியின் கண்ணீரை மீன்கள் மட்டும் கண்டு கொண்டன.

மோதலினால் களைப்படைந்திருக்கும் ஹெய்லிக், தெப்பத்தை தாங்கள் முகாமிட்டிருக்கும் இடத்தை நோக்கி திருப்ப சொல்கிறான்.கலோரிக் குழாய்கள் தாக்கப்பட்டதால் அவன் உடல் குளிரத் தொடங்குகிறது. எந்த வழியிலாவது நவியைப் பிடித்து வரும்படி அடிமைகளிற்கு புதிய உத்தரவு பிறப்பித்த பின், தெப்பத்தில் சினிவெலுடன் கிளம்பிச்செல்கிறான் ஹெய்லிக். மோதல் நடந்த இடத்தில் நவியின் கத்தி ஒன்றை கண்டு எடுத்த சினிவெலிடம் கேள்விகள் ஏராளமாய் துளிர்த்தன.

sil7 கலம் திரும்பி, தன் கம்பீரமான கறுப்பு உடல் கவசத்தை அகற்றி, மிகச்சூடான வெப்பநிலை உள்ள தன் பிரத்தியேக அறையில் ஒய்வெடுக்க ஆரம்பிக்கின்றான் ஹெய்லிக். அவன் முன்னே இருந்த ஹொலொகிராம் கருவியில் அவன் அன்புக் காதலி சஹாரின் உருவம் உருப்பெற ஆரம்பிக்கிறது.

சிலாஜ் விண்கப்பல்கள் கூட்டத்தில் ஹொட்டோ இன மக்கள் வினோத நோயொன்றால் பீடிக்கப்பட்டு இறப்பதாகவும், புதிய கிரகத்தை ஹெய்லிக் விரைவாக ஹொட்டார்ட் இன மக்களிற்கு ஏற்புடையதாக ஆக்கிவிட வேண்டுமெனவும் அவள் ஹெய்லிக்கிடம் கேட்கிறாள். அது வெகு விரைவில் நிறைவேறும் என தன் அன்பிடம் தெரிவிக்கிறான் ஹெய்லிக்.

நீரோட்டத்தின் கரையில் நவியைக் கண்டுகொள்ளும் அடிமைகள் அவளைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடமிருந்து விரவாக ஒடும் நவி தன் மறைவிடத்தினுள் நுழைந்து மறைந்து விடுகிறாள். அவளைத் தொடர்ந்து ஓடிவரும் அடிமைகள், அவள் நுழைந்த இடம் என்னவென்று அறியவேண்டி சினிவெலைத் தொடர்பு கொள்கிறார்கள். நவி நுழைந்து மறைந்தது கீழே வீழ்ந்து தரையில் புதையுண்டு போயிருக்கும் ஒர் விண்கலம் என்பதனை தன் திரையில் தெரியும் காட்சிகள் வழி அறிந்து கொள்கிறான் சினிவெல்.

அந்த விண்கலத்தின் நுட்பங்கள் சிலாஜ் இன்னமும் அறியாத ஒன்று. தங்கள் அறிவை விட வேறுபட்ட வகையான அறிவு கொண்ட இனத்தின் இருப்பின் தடத்தை அவர்கள் கண்டுபிடித்து விட்டதிற்கு சான்றாக அவ்விண்கலம் இருக்கிறது. அவ்விண்கலத்திலிருந்து தப்பியவள் நவி மட்டுமே என்பதை விரைவாகக் கணிக்கிறான் சினிவெல். இந்த மகிழ்வான செய்தியை அறிவிக்க ஹெய்லிக்கின் அறைக்கு செல்கிறான் அவன்.

சூடான தன் அறையில் சினிவெல் கூறுவதை அவதானமாகக் கேட்கும் ஹெய்லிக், தன் கவச உடையை அணிகிறான். சிலாஜ் உடனான வழமையான தகவல் பரிமாற்றத்திற்கான நேரம் நெருங்குவதை ஹெய்லிக்கின் அறையிலிருக்கும் தொடர்புக் கருவி பச்சை ஒளி உமிழ்ந்து அறிவிக்கிறது. சிலாஜிடம் உடனடியாக இந்த அற்புத தகவல்களை பகிர்ந்து கொள்ளச் சொல்கிறான் சினிவெல்.

உடற்கவசமணிந்த நிலையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஹெய்லிக், சிலாஜுடனான தொலைதொடர்பு இணைப்பைத் துண்டிக்கிறான். தன் பிரம்மாண்டமான உருவத்துடன் சினிவெலை நெருங்குகிறான் அவன். பின்பு அந்த அறையில் கேட்டதெல்லாம் சினிவெலின் திணறல் சத்தம் மட்டுமே. நிலத்தில் புதையுண்டு இருக்கும் விண்கலத்தையும், நவியையும் தடயமேயின்றி அழிக்கும்படி யந்திரப் படை ஒன்றிற்கு கட்டளையிடுகிறான் ஹெய்லிக்.

sil8 காட்டில் வெப்பம் அதிகரித்ததும், இலைகள் பழுக்க ஆரம்பித்ததினதும் காரணம் என்ன? சிலாஜ் கூட்டமைப்பிற்கு தெரியாது ஹெய்லிக் திட்டமிட்டும் பயங்கர சதி என்ன? நவியின் மறைவிடமான விண்கலம் அங்கு வந்தது எப்படி? அடிமைகள், யந்திரங்களின் தாக்குதலில் மாட்டிக்கொள்ளும் நவியின் நிலை என்ன? ஹொட்டார்ட் இன மக்கள் வாழ்வதற்கு புதிய கிரகத்தை ஹெய்லிக்கால் வெல்ல முடிந்ததா? இக்கேள்விகளிற்கெல்லாம் பதில் தருகிறது SILLAGE எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பமான A FEU ET A CENDRES [தீயும் சாம்பலும்].

கதையின் ஆரம்பம் முதல் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. எளிமையான கதை சொல்லல் கதையின் வெற்றிக்கு முக்கிய காரணம். விஞ்ஞானக் கதையை கடினமாக்கி திணிக்காமல் தெளிவாகக் கூறியிருக்கிறார் கதை ஆசிரியர். மர்மத்தை இறுதி வரை கொண்டு செல்வதில் அவரிற்கு வெற்றிதான் எனினும், மிக அட்டகாசமான ஆக்‌ஷனுடன் ஆரம்பித்த கதை இறுதிப்பகுதியில் சற்று அடங்கிப் போகிறது. அதனால் ஆக்‌ஷன் ரசிகர்களிற்கு சற்று ஏமாற்றம் ஏற்படலாம்.

கதையில் மிகச்சிறந்த பாத்திரமாக எங்கள் மனதில் நிறைந்து விடுபவர் மஜெஸ்டோ ஹெய்லிக். கடமையா, தன் இன மக்களின் மீட்சியா எனும் போராட்டத்தில் அவரிற்கு கிடைக்கும் முடிவு நெகிழ வைக்கும். எழுகை விசாரனைக் குழுவுடனான இறுதிக் காட்சியில் ஹெய்லிக் ஹீரோவாகி விடுவார்.

sil9 காமிக்ஸ் தொடரிற்கான கதையை எழுதியிருப்பவர் JEAN DAVID MORVAN எனப்படும் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர். கதைக்கு மிகச்சிறப்பான சித்திரங்களை வரைந்திருப்பவர் PHILIPPE BUCHET ஆவார். இவரும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரே. புஷே ஒர் நிறுவனத்தில் காமிக்ஸ் வடிவில் உள்சுற்று தொடர்பு ஆவணங்களை உருவாக்குபவராக பணியாற்றிக் கொண்டிருந்த போது மோர்வானின் அறிமுகம் அவரிற்கு கிடைத்தது. NOMAD எனும் விஞ்ஞான காமிக்ஸ் தொடரில் இருவரும் இணைந்தார்கள். ஆனால் இருவரையும் சிலாஜ் தொடரின் வெற்றி உச்சத்திற்கு கொண்டு சென்றது.

1998ல் சிலாஜின் முதல் ஆல்பம் வெளியாகியது, இன்றுவரை மொத்தம் பனிரெண்டு ஆல்பங்கள் இத்தொடரில் வெளியாகியுள்ளன. ஒர் ஆல்பத்தில் ஆரம்பிக்கும் கதை அந்த ஆல்பத்திலேயே நிறைவு அடையும். சிலாஜின் வெற்றியை தொடர்ந்து LES CHRONIQUES DE SILLAGE, NAVIS ஆகிய காமிக்ஸ் தொடர்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் இவை சிலாஜ் தொடர் அடைந்த வெற்றியை அடையவில்லை என்பது தெளிவு. சிலாஜ், சுவாரஸ்யமான வாசிப்புக்கு உகந்த ஒர் தொடர் என்பது என் தாழ்மையான கருத்து ஆகும். [***]

ஆர்வலர்களிற்கு

சிலாஜ் ஏனைய ஆல்பங்கள்

சிலாஜ் ஆங்கிலப் பதிப்பு

Saturday, August 21, 2010

ரேப் ட்ராகன் - 13




வேங்கையாட்டம்

ஸ்னான அறையை விட்டு மழையில் நனைந்த சிங்கம்போல் கோபத்துடன் வெளியேறிய புரட்சிக் காளை ரஃபிக், தன் அறைக்குள் நுழைந்து, தன் உடலை நன்கு துவட்டி முடித்து, ஆடைகளை அணிய ஆரம்பித்தான். ரஃபிக்கின் விழிகள் அறையினுள் ஒரு வட்டம் போட்டன.

ரஃபிக்கின் சொகுசு அறையானது அங்கு தங்கக்கூடிய பலவகையான வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது. மது வகைகள், பழ வர்க்கங்கள், மேலும் ரஃபிகிற்கு தெரிந்திராத பலவகைப் பொருட்களால் அந்த அறை நிரம்பியிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கும் அறையில் ஏன் விலங்குகளும், சவுக்குகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ரஃபிக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புரட்சி நகரிலிருந்து குந்தவியை கடத்திச் செல்வதற்காக வரும் வீரர்களிற்காக இந்த சொகுசு விடுதியில் சில காலம் தான் தங்கியிருக்க வேண்டும் என்பது அவன் எண்ணத்தில் அமிலமாய் இனித்தது. இரு பருவச்சிட்டுக்களினதும் வினோதமான போக்கை அவனால் தாங்கிக் கொள்ள இயலாது இருந்தது. ரஃபிக்கின் உடலின் ஒவ்வொரு துளையிலுமிருந்து புரட்சி தீவிரத்துடன் சுவாசித்துக் கொண்டிருந்தது.

குந்தவியை புரட்சி நகர வீரர்கள் கையில் ஒப்படைத்துவிட்டால் தன் கடமை நிறைவேறிற்று என்று தன் மனதில்கூறி பெருமூச்சு விட்டான் ரஃபிக். குத்து நகர் சிறையில் திருக்கை வால் சவுக்கடி பெற்றுக் கொண்டிருக்கும் தொரசிங்கம், ராவணன், வேலாயுதம் போன்ற புரட்சிக்காரர்களை விடுவிப்பதற்காக இளவரசி குந்தவி பயன்படுவாள் என்பதை ரஃபிக் நன்கறிந்திருந்தான். இருப்பினும் இளவரசி குந்தவியுடன் தன் கவிதைகளை அவன் பகிர்ந்து சுவைத்த நாட்கள் அவன் மனநதியில் அலைகளாக சுழன்றன.

ஹா… என்ன இனிமையான நாட்கள் அவை! மன்னன் குத்தலகேசி மட்டும் குறுக்கே வந்திராவிடில்…. இவ்வாறாக சுழன்ற தன் எண்ணங்களை ரஃபிக் சிரமத்துடன் கட்டுப்படுத்தினான். புரட்சியை தவிர வேறு எதுவுமே அவன் சிந்தனைகளிலும், எண்ணங்களிலும் நுழைந்துவிடக்கூடாது என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். காதல்கூட ஒருவகையில் புரட்சிதான் என்பதை ஏற்க மறுத்தது அவன் உள்ளம். அறையிலிருந்த சாளரத்தின் வழியாக தன் கண்களை செலுத்தினான் ரஃபிக்.

இந்தவேளையில் ரஃபிக்கின் அறைக்குள் நீரில் நனைந்த புஷ்பமாக உள்ளே நுழைந்தாள் இளவரசி குந்தவி. இளவரசியின் பின்னால் தன் கவர்ச்சி உடலை நளினமாக அசைத்து நடை பயின்று வந்த மராக்கோ மாதுளை டேனி, இளவரசியின் கண்சிமிட்டல்களை புரிந்து கொண்டவளாக ரஃபிக்கின் அறையின் கதவை இழுத்து மூடி அதன் தாழ்ப்பாளையும் போட்டாள்.

வான் மேகம் பூமியை தன் துளிகளால் நனைக்கும். இதைக் கண்ட மயில்கள் தோகை விரித்து ஆடும். செடிகளில் பூத்திருந்த புஷ்பங்கள் வான் துளிகளின் ஸ்பரிசத்தில் தம்முடல் வியர்க்கும். இவ்வாறு உடல் வியர்த்த அழகிய மலர்களாக தன் அறைக்குள் நுழைந்த பெண்களைக் கண்ட ரஃபிக்கின் புருவங்கள் உயர்ந்தன. மேலும் தன் அறையின் கதவுகளை டேனி தாழ்பாளிட்டதைக் கண்டு வியப்புற்ற புரட்சிக்காரன்… பெண்ணே ஏன் என் அறைக் கதவுகளை தாழிட்டாய்… என்று ஒரு கேள்வியையும் ஆடையில்லா மலரான டேனியை நோக்கி வீசினான்.

- மான் ஓடிவிடக்கூடாது அல்லவா…. தன் மயக்கும் விழிகளால் ரஃபிக்கை பார்த்தபடியே பதில் தந்தாள் இளவரசி குந்தவி.

- மானா!?.. அறையைச் சுற்றி தன் விழிகளை நாடகபாணியில் சுழலவிட்ட புரட்சிக்காரன் ரஃபிக்… இங்கு மான்கள் ஏதும் இருப்பதாக என் கண்களிற்கு தெரியவில்லையே இளவரசி என்றான் கேலியாக.

- மான் இங்கு இருக்கிறதா இல்லையா என்பது பார்ப்பவர்களின் பார்வையையும், பசியையும் பொறுத்திருக்கிறது.. அறையின் கதவின்மீது தன் முதுகைச் சாய்த்து, தன் பருவ அழகுகளை ஒய்யாரமாக வளைத்து செக்ஸி போஸ் தந்தவாறே நின்றிருந்த டேனியின் தேனிதழ்களிலிருந்து இந்தச் சொற்கள் மென்மையாக வெளிப்பட்டன.

- பசி கொண்ட பார்வையாளர்கள் இங்கு யாரோ?… ரஃபிக்கின் குரலில் கிண்டல் குறைந்திருக்கவில்லை.

- நாங்கள்… குந்தவி, டேனி இருவரும் ரஃபிக்கின் வினாவிற்கு ஒருசேரப் பதிலளித்தார்கள்.

- ஹாஹாஹாஆஆ.. உங்கள் கண்களிற்கு நான் மானாகக் காட்சியளிக்கிறேனா! வேடிக்கை, வினோதம், விசித்திரம். நீங்கள் அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்களின் ஒளடதங்களை சுவைத்து விட்டீர்களா என்ன? இதைக்கூறிய ரஃபிக் பருவச்சிட்டுக்களை நோக்கி ஒரு புன்னகையையும் வீசினான்.

- இல்லை, நாங்கள் இன்னமும் சுவைக்கவில்லை. ஆனால்.. என்று இழுத்தாள் இளவரசி குந்தவி.

- ஆனால்.. என்ன? ரஃபிக் பொறுமையிழக்க ஆரம்பித்தான்.

- ஆனால் இனிமேல்தான் சுவைக்கப்போகிறோம். ம்ம்ம்ம்ம்.. யமி யமி யம் என்று கிசுகிசுப்பாக பதிலளித்த மரக்கோ மாதுளை டேனி, தன் உதடுகளை அவள் நாக்கினால் தடவினாள். அந்த நாக்கின் அசைவு புரட்சிக்காரனின் அடிவயிற்றில் தேள் ஒன்றை ஊரச்செய்தது.

- என்ன உளறுகிறீர்கள் நீங்கள்.. என்று கோபமாக துடித்தான் ரஃபிக்.

- உளறவில்லை புரட்சிக்காரரே, உறுதியுடன் சொல்கிறோம். நீர் இங்கு மான். நாங்கள் வேங்கைகள். வெறிகொண்ட, பசிகொண்ட பெண் வேங்கைகள். பசிகொண்ட பெண்வேங்கை என்ன செய்யும் தெரியுமா புரட்சிக்காரரே..

- புரட்சிக் கவரிமானின் கூரிய கொம்புகளிற்கு தலைப்பாகையாகும்… குந்தவியிடமிருந்து கேள்வி வந்த வேகத்திலேயே பதிலை வீசினான் ரஃபிக்.

- இல்லை.. புரட்சிக் கவரிமானின் சுவையான உடலை, அடித்து, கிழித்து, சிதைத்து, புசித்து தன் பசியாறும்.. தன் கீழுதடுகளை உதடுகளை பற்களால் கவ்வியபடியே கதவிலிருந்து முன்னே நகர்ந்தாள் டேனி.

ஏதோ விபரீதம் அரங்கேறப்போகிறது என்பது ரஃபிக்கிற்கு தெளிவாக ஆரம்பித்தது. ஹாஆ… இந்த இரு பெண்களும் என்னை என்ன செய்து விட முடியும். மலர்கள் மோதியா மலைக்கு வலிக்கப் போகிறது என்று எண்ணிய அவன்…

- பெண்களே, நீங்கள் நெருப்புடன் விளையாட விரும்புகிறீர்கள் என்றான்.

- நெருப்பு, நெருப்புடன்தான் விளையாட வேண்டும், நீருடன் அல்ல புரட்சிக்காரரே என்று வேகமாகக்கூறிய குந்தவி, ரஃபிக்கை நோக்கிப் பெண்வேங்கைபோல் பாய்ந்தாள். மராக்கோ மாதுளை டேனி, பசிகொண்ட விலங்குபோல் பின்புறமாக ரஃபிக்கை நெருங்கினாள். ரஃபிக்கின் மேல் பாய்ந்த குந்தவி, அவனது மேலங்கியை தன் கைகளினால் கிழித்து எறிந்தாள். ரஃபிக்கின் பாறைபோன்ற மார்புகளை குந்தவியின் விரல் நகங்கள் கீறின.

- வேங்கையாட்டம் ஆரம்பம் புரட்சிக்காரரே.. குந்தவியின் உதடுகள் ரஃபிக்கின் காதில் முணுமுணுத்தன. அச்சொற்களின் அனல் ரஃபிக்கின் உடலை தகிக்க வைத்தது.

[ஓடி விளையாடு பாப்பா...]

Thursday, August 19, 2010

ஒதுக்கப்பட்டவர்கள்


“எந்தப் பிரபல இயக்குனரும் என்னுடன் பணியாற்ற விரும்பியதில்லை. அது என் சாபம். எனவே மற்றவர்களைவிட நான் அதிகமாக பாடுபடவேண்டியிருந்தது. மற்றவர்களைவிட நான் அதிக தோல்விகளை சந்திக்க வேண்டியுமிருந்தது”…ஸ்டாலோன் ஒரு பேட்டியில்.

எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படத்தைப் பார்க்கும் வேளையில் என்னை மிகவும் உலுக்கியது என்னவெனில் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் முகத்தில் குடிகொண்டிருந்த அந்த சோகமான அயர்ச்சியே ஆகும். அந்த அயர்ச்சியை தன்னால் இயலுமானவரை பார்வையாளர்களிடம் கடத்திவிடாதவகையில் அவர் போராடியிருக்கிறார். இது அவரின் நடிப்பிற்கும், இயக்கத்திற்கும் பொருந்தும்.

இன்றைக்கு 25 வருடங்களிற்கு முன்பாக ஆக்‌ஷன் திரைப்படங்களின் தீவிர ரசிகனாக இருந்த என்னை தன் பங்கிற்கு மகிழ்வித்த அதே ஸ்டாலோனை இன்று திரையில் எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்று. ஸ்டாலோன் மட்டுமல்ல ROCKY 4ல் அவருடன் தன் உயிரிற்காக மோதிய Dolph Lundgren கூட மாறித்தான் போய்விட்டார். ராக்கி 4ல் இந்த இரு நடிகர்களிற்குமிடையில் நிகழும் அந்த உச்சக்கட்ட மோதலிற்காகவே அத்திரைப்படத்தை நான் பலதடவை திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.

என்பதுகளின் இறுதியிலும் தொன்னூறுகளின் ஆரம்பத்திலும் என்னை ஆக்கிரமிப்பு செய்த ஆக்‌ஷன் நாயகர்களான Chuck norris, Carl Weathers, Dolhp Lundgren, Steven Segal, Jean-Claude Van Damme போன்ற நடிகர்கள் இன்றைய ஹாலிவூட் ஆக்‌ஷன் படைப்புக்களிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அவ்வகையில் அவர்கள் எக்ஸ்பெண்டபில்கள்தான். அதனை எனக்கு நினைவுபடுத்துவதாக இந்தப்படம் அமைந்திருந்தது. நடிகர் ஸ்வார்ஸ்னேகர் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் அவரைப்போல் புகழ் பெற்றிராத ஏனைய நாயகர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை என்னால் கேள்வியாக மட்டுமே ஆக்க முடிகிறது.

சில வருடங்களிற்கு முன்பு வெளியாகிய ராக்கி மற்றும் ராம்போ ஆகிய திரைப்படங்களின் இறுதிப்பாகங்கள்! தந்த நம்பிக்கை தரும் வெற்றியே ஸ்டாலோனை எக்ஸ்பென்டபில்ஸ் திரைப்படத்தை இயக்கத் தூண்டியது எனலாம். எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படம் சமகால ஆக்‌ஷன் திரைப்படங்களின் தரத்துடன் எந்த வகையிலும் போட்டி போடுவதற்காக உருவாக்கப்படவில்லை. என்பதுகளில் கோலோச்சிய ஒருவகை மிகைத்தன்மை வாய்ந்த ஆக்‌ஷன் சினிமா குறித்த ஒரு நினைவூட்டலாக இந்தப்படம் இருக்கிறது. அந்தவகை சினிமாவின் ரசிகர்களை மீள வெல்ல முடியுமா என்ற ஒரு கேள்வியாகவும் திரைப்படம் அமைகிறது.

தென் அமெரிக்காவின் ஒரு சிறு தீவில் சர்வதிகாரியாக செயற்படும் ஒரு ராணுவ ஜெனரலையும், அவனிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரு முன்னைநாள் CIA ஏஜெண்ட்டையும், ஒரு இளம் பெண்ணிற்காக வேரறுக்கிறது ஒரு கூலிப்படை குழு. இங்கு பெண்ணிற்காகவென்பது காதல் அல்லது இரக்கம் என்பதனைத் தாண்டி கையறு நிலையில் உள்ளவர்கள் குறித்த அறம் சார்ந்ததாகவும், கூலிப்படையினரின் சபிக்கப்பட்ட ஆன்மாக்களிற்கு ஒரு தற்காலிக விமோசனத்தை வழங்கும் காரணியாகவும் உள்ளது என்று கொள்ளப்படலே பொருத்தமானதாக இருக்கும்.

திரைப்படத்தின் முதல் ஆக்‌ஷன் காட்சியே அது எப்படி இருக்கும் என்பதை தெளிவாக காட்டிவிடுகிறது. அதற்குப் பின்பாக மனதில் உருக்கொண்ட அதீத எதிர்பார்ப்புக்களை உதறிவிட்டே படத்தை பார்க்க வேண்டும். இல்லையேல் ஏமாற்றம் என்பது திரைப்படத்தின் முடிவில் நிச்சயமான ஒன்றாகவிருக்கும்.

ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம்போல் முகச்சாயல் கொண்ட ஒரு கடற்கொள்ளையனை ரத்தப் பஸ்பமாக்குவதுடன் கோலாகலமாக ஆரம்பமாகும் திரைப்படம், அத்திரைப்படத்தில் பங்கேற்றிருக்கும் அனைத்து நடிகர்களிற்கும் தமது திறமையைக் காட்ட சமமான வாய்ப்பை தந்திருக்கிறது என்று கூறிவிட முடியாது. ஜேசன் சாட்ஹேம் மாத்திரமே நடிகர் கும்பலில் மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தப்படுகிறார். சில வேளைகளில் ஸ்டாலோனையும் விட என்றால் அது மிகையல்ல.

expendables-unite-speciale-2010-17756-2065527183 திரைப்படத்தின் பாத்திரங்களில் ஸ்டாலோனிற்கும், ஜேசன் சாட்ஹேமிற்குமிடையில் உள்ள பொருத்தம் இயல்பிற்கு மிகநெருங்கியதாக இருக்கிறது. திரைப்படத்தின் எந்த ஒரு தருணத்திலும் அந்தப் பொருத்தமானது வலிய திணிக்கப்பட்ட ஒன்றிற்கான உணர்வை அளிக்கவில்லை. ஜேசன் சாட் ஹேமிற்கு திரைப்படத்தின் சில சிறப்பான அதிரடி ஆக்‌ஷன்களை தூக்கி தந்திருக்கிறார் ஸ்டாலோன். ஆனால் ஜேசன் சாட்ஹேம் இன்றைய தலைமுறைக்குரிய ஆக்‌ஷன் ஹீரோ என்பதை நாம் மறந்துவிடலாகாது. புதிய தலைமுறைக்கு வழிவிட்டு தான் ஒதுங்கி கொள்வதாகக்கூட ஸ்டாலொனின் இந்த ஆக்‌ஷன் தியாகங்களை அர்த்தம் செய்து கொள்ளலாம்.

தனது வயது குறித்தும், குறைந்துவரும் தன் வேகம் மற்றும் ஆற்றல் குறித்தும் ஸ்டாலோன் திரைப்படத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அடியாள் ஸ்டீவ் ஆஸ்டினிடம் சரமாரியாக அடிகளை வாங்கிவிட்டு “என்னைப் பின்னி எடுத்துவிட்டான்” என்று கூலாகச் சொல்கிறார். இவைதான் இத்திரைப்படத்தில் ஸ்டாலோனை யதார்த்தத்தை உணர்ந்த ஒரு நாயகனாக முன்னிலைப்படுத்துகிறது.

பெரும்பாலும் தனிமையான வாழ்க்கை கொண்ட கூலிப்படையினரின் அவலநிலை குறித்தும் திரைப்படம் பேசுகிறது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தனி இனமாக அவர்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதுவே தொழில் முறை நட்பு என்பதை மீறி தமக்கு எதிராக செயற்பட்டவர்களைக்கூட மன்னித்து, அரவணைத்து அவர்கள் தங்களிற்கிடையில் பேணும் நட்பின் ஆதாரமாக இருக்கக்கூடும். இந்தக் கூலிப்படையினரின் வாழ்க்கையின் சில கூறுகளாவது ஒதுக்கப்பட்ட ஆக்‌ஷன் நாயகர்களின் வாழ்வில் பிரதிபலிக்காமல் இருக்க முடியுமா என்ன.

மொட்டை மாமா ப்ரூஸ் வில்லிஸ், கவர்னர் ஸ்வார்ஷ்னேகர், ஸ்டாலோன் ஆகிய மூவரும் திரைப்படத்தில் தோன்றும் தருணம் மிக சொற்ப நேரமே திரையில் நீடிக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் தமக்குள் ஒருவர் குறித்து ஒருவர் பரிமாறிக் கொள்ளும் கிண்டல்கள் அபாரம். இந்த தருணத்தை நான் மிகவும் ரசித்தேன். இவன் ஜனாதிபதியாக விரும்புகிறான் என்று ஸ்வார்ஷ்னேகரைப் பார்த்து ஸ்டாலோன் அடிக்கும் கிண்டல் சூப்பர்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆக்‌ஷன் விருந்து தடையின்றி தொடர்கிறது. திகட்ட திகட்ட பார்வையாளனிற்கு ஆக்‌ஷன் ஊட்டப்படுகிறது. திரைப்படமும் சரி உச்சக்கட்ட ஆக்‌ஷன் காட்சிகளும் சரி எந்தவித கேள்விகளுமின்றி பார்க்கப்பட வேண்டியவையாகும். திரைப்படத்தை நோக்கி தர்க்கரீதியான கேள்விகளை முன்வைப்பதை விடுத்து இருபது வருடங்களிற்கு முன்பாக எப்படி ஒரு ஆக்‌ஷன் படத்தை ரசித்திருப்பேனோ அவ்வாறே இத்திரைப்படத்தை நான் ரசித்தேன்.

திரைப்படத்தில் இறுதித் தருணங்களில் “நீங்கள் மீண்டும் வருவீர்களா” எனக் கேட்கப்படும் கேள்விக்கு ஸ்டாலோன் தரும் பதில் “நான் உன்னை விட்டு அதிக தொலைவில் இருக்கமாட்டேன்” என்பதாகவிருக்கும். ஸ்டாலோனின் உண்மையான ரசிகர்களிற்கு அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்திருக்கும். [**]

Wednesday, August 18, 2010

வேண்டியிருந்த பணம்


எனக்கு அந்தப் பணம் வேண்டியிருந்தது” நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட கேள்விக்கு குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த Edward Pierce தந்த பதில் நகைப்புக்குரியதான எளிமையை கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பணத்தை கவர்வதற்கு அவன் சென்றிருக்ககூடிய எல்லைகள் எளிமை கொண்டவை அல்ல.

1854ல் ரஷ்யாவிற்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற தன் நேச நாடுகளின் துணையுடன் யுத்தத்தில் இறங்கியிருந்தது. இந்த யுத்தம் Crimean War என்றழைக்கப்படுகிறது. களமுனையில் போரிட்ட இங்கிலாந்து வீரர்களிற்கு சம்பள பட்டுவாடா பணமானது அக்காலப்பகுதியில் மிக வேகமான போக்குவரத்து முறையாகவிருந்த புகையிரதம் வழியாக தங்கப்பாளங்கள் வடிவில் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.

London Bridge புகையிரத நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் தென்கிழக்குகரைகளில் அமைந்திருக்கும் Folkestone ஐ நோக்கி பயணிக்கும் ரயிலில், பொதிகளிற்கான தனி ரயில்பெட்டியில் நிறுவப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பான, நம்பத்தகுந்த, Chubb நிறுவனத்தின் தயாரிப்பான பாதுகாப்பு பெட்டகங்களில், அக்கால பெறுமதிப்படி 12000 £ மதிப்பு கொண்ட இந்த தங்கப்பாளங்கள் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி எடுத்து செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

அந்த இரு பாதுகாப்பு பெட்டகங்களையும் தகுந்த முறையில் திறப்பதற்கு நான்கு சாவிகள் உபயோகிக்கப்பட்டன. இந்த நான்கு சாவிகளும் மூன்று வெவ்வேறான நபர்களின் பாதுகாப்பான பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. இந்த இரு பாதுகாப்பு பெட்டகங்களையும் திறப்பதற்கு சாவிகளை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில், அசாத்தியமான கொள்ளை ஒன்றை மேற்கொள்ள திட்டம் வகுக்கும் சூத்திரதாரியான எட்கார் பிய்யர்ஸின் முதல் நகர்வானது, வெவ்வெறு நபர்களிடம் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிகளை கவர்ந்து கொள்வது என்பதாகவே Michael Crichton எழுதியிருக்கும் The Great Train Robbery நாவல் ஆரம்பமாகிறது.

1855ல் இங்கிலாந்தில் இடம்பெற்ற Great Gold Robbery ன் தகவல்களை ஆதாரமாக கொண்டு தன் மெச்சத்தகுந்த கற்பனையினால் இக்கற்பனைக் கதையை உருவாக்கியிருக்கிறார் மைக்கேல் கிரைட்டன். உண்மையான சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களின் பெயர்களில் சிறிய மாற்றங்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ஆனால் கதையில் இடம்வகிக்கும் பெரும்பாலான தகவல்களும், நிகழ்வுகளும் அக்கால வரலாற்றில் இடம் வகிப்பவையே.

பியர்ஸ், பாதுகாப்பு பெட்டக சாவிகளை அணுகிச்செல்ல எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒவ்வொரு தருணத்திலும் நாவலாசிரியர் மைக்கேல் கிரைட்டன், விக்டோரியா காலத்து இங்கிலாந்து சம்பந்தமான தகவல்களை தாரளமாக ஆனால் கதையானது தன் பாதையிலிருந்து நழுவிக் கொள்ளாத வகையில் சுவையாக பரிமாறுகிறார்.

great_train_robbery_poster_sean_connery1 மதுபான விடுதிகளில் இடம்பெறும் நாய்-எலிச் சண்டைகள் முதல், கவுரவமான குடும்பங்களில் திருமண வயதை எட்டியும் தகுந்த மணமகன் கிடைக்காத பெண்கள் வரை, பாலின நோய்கள் முதல், சிறுவர் விபச்சாரம்[ அக்காலப்பகுதியில் சகஜமான ஒன்று] மற்றும் விக்டோரியா காலப்பகுதியில் உயர்மட்ட சமூகத்தின் பெருமைமிகு புழங்குமிடங்களை தைரியமாக ஆக்கிரமிப்பு செய்த மேல்தட்டு விலைமாதர்கள் மேலும் அதற்குரிய காரணங்கள் வரை, தப்பிச் செல்ல முடியாதென கருதப்பட்ட இங்கிலாந்து சிறைகள், பாடல்கள் பாடி வேடிக்கையான கேளிக்கையாக பொதுமக்களால் ரசிக்கப்பட்ட மரணதண்டனைகள், குறுகிய கழிவறைகளில் தம் உடல்களை ஒடுக்கி படுத்துறங்கிய மனிதர்கள், லண்டனின் நகரமயமாக்கம், புகையிரத சேவையின் அறிமுகம், அதன் அபரித வளர்ச்சி. ஸ்காட்லாண்ட்யார்ட்டின் வளர்ச்சி, இறக்கும் மனிதர்களின் உடல்களை சிறிது காலம் காக்க வைத்து பின்பாக புதைக்கும் வினோதமான வழக்கம் என விக்டோரியா கால இங்கிலாந்தின் சமூக, பொருளாதார, வரலாற்று பார்வையாகவும் கிரைட்டனின் நாவல் இருக்கிறது. கிரைட்டனின் அடிக்க முடியாத கதைசொல்லும் பாங்கிற்கு இந்நாவல் ஒரு மிகச்சிறந்த சான்று.

தங்கப் பாளங்களை கொள்ளை அடிக்கும் நிகழ்வைவிட அதனை நிறைவேற்றுவதற்காக எட்வர்ட் பிய்யர்ஸ் இயற்றும் திட்டங்களே நாவலின் பெரும் விறுவிறுப்பாக அமைகின்றன. ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்பாராதவிதமாக தடைகள் வந்து சேரும்போதும் அவற்றை எட்வர்ட் பிய்யர்ஸ் சமயோசிதமாக எதிர்கொள்ளும் விதம் அப்பாத்திரத்தின் மீதான கவர்ச்சியை கதை நெடுகிலும் அதிகரித்தபடியே செல்கிறது. ஒவ்வொரு சாவியையும் அணுகுவதற்காக பிய்யர்ஸ் ஆற்றும் செயல்கள் பரபரப்பின் உச்சம். அதுவும் லண்டன் பிரிட்ஜ் புகையிரத நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டக சாவிகளை அணுகுவதற்காக நடாத்தப்படும் திட்டம்போல் திக்திக் தருணத்தை சமீபகாலத்தில் நான் படித்துணர்ந்ததில்லை.

கொள்ளையின் சூத்திரதாரியான எட்வார்ட் பிய்யர்ஸ், அவனது சகா Agar, புகைபோக்கிகளை துப்புரவு செய்பவனாக இருந்த Clean Willy, வங்கி அதிகாரிகளான Henry Fowler, Trent, பிய்யர்ஸின் ஆசைநாயகி Miriam, புகையிரதக் காவலன் Burgees, வங்கி அதிகாரி Trentன் மகளான Elizabeth போன்ற பாத்திரங்களை கதையில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் கிரைட்டன். இப்பாத்திரங்கள் நாவலில் மிகவும் உயிர்ப்புடன் உலாவருகின்றன.

எட்வார்ட் பிய்யர்ஸ் தன் தேவைகளிற்காக அணுகும் விளிம்பு நிலை மனிதர்கள் வழி அவர்களின் வாழ்க்கை குறித்த ஒரு சித்திரத்தை நாவலில் இலகுவாக கிறுக்குகிறார் கிரைட்டன். வங்கி அதிகாரிகளான ட்ரெண்ட் மற்றும் ஃபவுலர் வாயிலாக மேல்தட்டு சமூகம் குறித்த பார்வை நாவலில் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு வேறுபட்ட சமூக நிலையிலிருந்த மனிதர்களையும் சரியாக புரிந்து கொண்ட நிலையில் அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒருவனாகவே எட்கார் பிய்யர்ஸை காணமுடிகிறது.

ஒரு சமூகமானது தன் வளர்ச்சிக்கான அடிகளை நவீனத்துவத்தை நோக்கி எடுத்துச் செல்லும்போது அந்த சமூகத்தினுள் ஒரு கூறாக உறையும் குற்றசமூகமானது அவ்வளர்ச்சியால் ஒடுக்கப்பட்டு அழிவை எட்டிவிடாது தானும் நவீனத்துவத்தை நோக்கி தன் வளர்சியை கொண்டுசெல்கிறது என்பதும் நாவலால் உணர்த்தப்படும் ஒன்றாகும்.

michael-crichton-415x275 குற்றங்களும், குற்றவாளிகளும் விளிம்பு நிலை சமூகத்தின் உற்பத்தியாக மட்டுமே இருக்கக்கூடும், கல்வியறிவு பெற்ற, மேல்தட்டு மக்களிடமிருந்து அவை உருவாவதில்லை என்று அக்காலத்தில் நிலவியிருந்த ஒரு கருத்தை உலுக்கிப் பார்ப்பதாகவும் கதையில் எட்கார் பிய்யர்ஸின் பாத்திரம் அமைந்திருக்கிறது.

கிரைட்டனின் Sphere, Next, State of Fear ஆகிய நாவல்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்து நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி முடிவில் அந்த எதிர்பார்ப்பை மங்கவைப்பதாக நிறைவுபெறும். ஆனால் இதற்கு மாறாக இந்நாவல் ஆரம்பம் முதல் இறுதிவரை தன் சுவையையும் விறுவிறுப்பையும் சிறப்பாக தக்கவைத்துக் கொள்கிறது.

தெளிவான, நகைச்சுவையை சற்று கலந்த கிரைட்டனின் கதைசொல்லல் , சுவையான தகவல்கள் என்பன நாவலை எந்த தருணத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. நாவலின் இறுதிப் பக்கம்வரை சஸ்பென்ஸை கடத்திச் செல்வதில் பெரும் வெற்றி காண்கிறார் கிரைட்டன். இதுவரை நான் படித்த கிரைட்டனின் நாவல்களிலேயே The Great Train Robbery எனக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. உண்மையான நிகழ்வு ஒன்றின் பின்னனியில் இவ்வளவு ரசமான நாவலைத் தர முடியுமா என பிரம்மிக்க வைக்கிறார் கிரைட்டன். நாவல் வெளிவந்து இன்று 35 வருடங்கள் ஓடிச்சென்ற பின்பாகவும் அருமையான ஒரு த்ரில்லரின் வாசிப்பனுபவத்தை நாவல் முழுமையாக தருகிறது. கிரைட்டனின் நாவல்களில் தவறவிடக்கூடாத ஒன்றாகவே இந்நாவலை என்னால் பார்க்க முடிகிறது.

1979ல் இந்நாவல் The First Great Train Robbery எனும் பெயரில் திரைப்படமாக வெளியாகியது [அமெரிக்காவில் இத்திரைப்படம் நாவலின் தலைப்பிலேயே வெளியாகியது]. பிரபல நடிகர்களான Sean Connery, Donald Sutherland ஆகியோர் முறையே எட்கார் பிய்யர்ஸ் மற்றும் ஆகார் ஆகிய பாத்திரங்களை திரையில் ஏற்க நாவலாசிரியர் மைக்கல் கிரைட்டனின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவானது. [***]

Thursday, August 12, 2010

விம்மும் நாய்கள்


பந்தயத்தில் பொருதும் நாயை துப்பாக்கியால் சுடுவதிலிருந்து, குறிபார்த்து அடித்ததும் சிதறும் கோலிக் குண்டுகள்போல் திசையெங்கும் நிகழ்வுகள் ஓட ஆரம்பிக்கின்றன.

மூன்று வாழ்க்கைகளை அவைகளை சுற்றிவரும் நாய்களுடன், வெவ்வேறு நிலைகளிலிருந்து பார்வையாளனிடம் எடுத்து வரும் மெக்ஸிக்க இயக்குனர் Alejandro Gonzalez Inarritu வின் திரைப்படமான Amores Perros [நாய்க் காதல்] சிரமங்கள் ஏதுமின்றி அதிர, நெகிழ, கலங்க வைக்கிறது. மூன்று வாழ்க்கைகளும் வேறுவேறு எனிலும் குறித்த ஒரு தருணத்தில் அவை தம்மில் சந்திந்து மீள்கின்றன எனலாம்.

ஒழுக்கநெறிகளிற்கு பொருந்தாது, தன் சகோதரனின் மனைவியின்மீது வாலிபன் ஒருவன் கொண்டுள்ள காதல். தன் குடும்ப வாழ்வில் அன்பைக் காணமுடியாது, தன் மனைவியைத் தாண்டி அழகான ஆசைநாயகி ஒருத்தி மீது ஒருவன் கொள்ளும் காதல். எதை உதற முடிந்தாலும் வானத்தை எம்மேல் இருந்து உதறமுடியாது என்பதுபோல் தன் மகள்மீது ஒரு தந்தை கொண்ட அன்பு. இவையாவும் கதையின் ஒரு தருணத்தில் ஒரு புள்ளியில் தொட்டுச் செல்கின்றன. இவர்கள் அனைவரையும் சுற்றி நாய்கள் இருக்கின்றன.

தன் சகோதரனின் மனைவிமீது காதல் கொள்ளும் வாலிபன், அவன் விரும்பிய வாழ்வை அடைய அவன் பேணிவளர்க்கும் நாய், நாய்ச்சண்டைகளில் வெற்றி பெற்று அவனிற்கு உதவுகிறது. ஆனால் பின்பு துரோகத்தின் கடியை வலியுடன் அவன் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நாயானது துப்பாக்கியால் சுடப்படும்போது அவனது கனவுகள் புதைகுழிகளில் விழித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன் காதலை அவன் மீண்டும் நெருங்கி தன் வாலை ஆட்டியபோதும்கூட அவன் தொடரும் பயணத்தில் தனிமையே அவனுடன் பயணிக்க காத்திருக்கிறது. கண்ணீரை கண்டு தனிமை ஓடிவிடுவதில்லை. மாறாக வழியும் கண்ணீரை பெரும்தாகத்துடன் நக்கி அது தாகம் தீர்க்கும்.

ஆசைநாயகியின் செல்ல நாய், புதிதாக அவர்கள் குடிபுகுந்த வீட்டின் ஒரு குழியில் ஓடி மறைந்தபின்பாக அந்த மனிதனின் காதல் வாழ்க்கை தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிறது. வாழ்க்கையின் குழிகளில் திடீரென நிரம்பும் வெறுமைகளை எதைக்கொண்டு வெளியே எடுக்கலாம்? இருள்கவிய ஆரம்பித்து விட்ட மனப்பரப்புக்களினை நோக்கி நாலு கால்களில் விரைந்து நெருங்கி வரும் அன்பும், காதலுமே புற்தரைகளின் பறவைக்கீத காலைகளை அங்கு இசைக்க வைக்ககூடும்.

amores_l துப்பாக்கியால் சுடப்பட்ட நாயானது தன் மகளின் நினைவால் வாடும் மனிதனின் கைகளை வந்தடைந்தபின்பாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வுடன் அது மறைமுகமாக மோத ஆரம்பித்துவிடுகிறது. கடந்த காலம் எவ்வாறாக இருப்பினும் அன்பு அம்மனிதனை செலுத்தும் திசையில் அவன் எடுத்து வைக்கும் முதல் அடி புன்னகையுடன் ஆரம்பமாகிறது. அது தன் ஜோடிப்புன்னகையை கண்டடைய பாதையின் ஓரங்களில் அரும்பும் பாசத்தின் வெதுவெதுப்பான சுவடுகள் உதவிடும்.

அன்புடன் வளர்க்கும் நாய்கள் எதிர்பாராதவிதமாக கடித்துவிடுவது போலவே வாழ்க்கையின் நிகழ்வுகளும் இம்மனிதர்களை கடந்து செல்கின்றன. அவர்கள் மீது காயங்களையும், பற்தடங்களையும் அவை பதிக்கின்றன. எவை வாழ்க்கைகளின் மீது மண்ணை அள்ளிப் போடுபவையோ, அவை வழியேதான் ஒளிபூசிய புதியதொரு துவக்கத்தின் நாணம் கொண்ட சிரிப்பும் காத்திருக்கிறது.

பந்தயத்தில் வெற்றிகொள்ள வெறித்தனமாக மோதும் நாய்கள் போலவே மனிதர்களும் பணத்திற்காகவும், வெற்றிக்காகவும், புகழிற்காகவும், அன்பிற்காகவும் மோதிக்கொள்கிறார்கள். காதலிற்காக உறுமுகிறார்கள். அறங்கள் குறித்த கலக்கங்கள் ஏதுமின்றி புணர்கிறார்கள். எந்த இலக்குமின்றி வாழ்க்கையின் பக்கங்களில் எழுதிய கனங்களை தள்ளுவண்டியில் தள்ளியபடியே தெருவில் அலைகிறார்கள்.படுக்கை அறைக்கு வெளியே உறங்குகிறார்கள். படுக்கை அறைக்கதவுகளை பிறாண்டுகிறார்கள். குண்டடிபட்டு சாகிறார்கள். நாய்கள் ஏக்கம் கொண்டு விம்முவதைப்போலவே மனிதர்களின் உணர்வுகளும் விம்முகின்றன. நாய்களின் அரூப அவதாரங்களாக அவர்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதன் தப்பித்து ஓடலாம், துரோகங்களை எதிர்கொள்ளலாம், புகழின் அதீத உயரங்களிலிருந்து உருகும் பனியின் கண்சிமிட்டல்களாக கீழே இறக்கப்படலாம், அர்த்தமற்ற வாழ்வின் மாறாத வட்டச்சுழலின் யந்திரச்சுற்றிலிருந்து துள்ளும் மீனென விடுபட்டு வேறு ஒரு சுழலில் பயணிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் காதலும், அன்பும், பிரியமும் அவனைவிட்டு பிரியாது அவன் கூடவே ஒரு நாய்போல் அவன் கால்களை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அவைதான் எல்லா வலிகளையும், கண்ணீர்களையும் வறளச்செய்து அவன் முன்பாக கிளைகளென விரியும் வாழ்வின் முடிவற்ற பாதைகளின் கண்காணா எல்லைகள் வரையும் வினோத சித்திரங்களை கண்டடையும் அவன் பயணத்தில் அவன் அருகே பயணிக்கின்றன. அவனை மேலும் வாழச் சொல்கின்றன. நாய்கள் கடிக்கின்றன. ஈரலிப்பான தம் நாக்குகளினால் வருடிக்கொடுக்கவும் செய்கின்றன.

சற்று நீண்ட திரைப்படமாகவிருந்தாலும் தேர்ந்த நடிகர்கள், அழகியல் கரைந்த காட்சிமொழி, இசை, சிறப்பான இயக்கம் என Amores Perros நல்லதொரு அனுபவம். [***]

Monday, August 9, 2010

வருத்தம் இறந்த விழிகள்


அழகிய இளம்பெண்ணான சோனியா, இத்தாலியிலிருக்கும் துயுரின் நகரில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறைகளை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறாள். பிரம்மச்சாரிகளின் மாலை சந்திப்பு ஒன்றில் அவள் Guido வுடன் அறிமுகமாகிக் கொள்கிறாள்.

சில வருடங்களிற்கு முன்பாக தன் மனைவியை இழந்த கிய்டோ, அவனது பொலிஸ் பதவியை உதறிவிட்டு மாளிகை ஒன்றை காவல் காப்பவனாக பணியாற்றுகிறான். பெண்களை இலகுவாக தன் வாழ்க்கையில் அனுமதிக்காத கிய்டோ, சோனியாமீது உண்மையான பிரியம் கொள்கிறான். அவளை தான் காவல் காக்கும் மாளிகைக்கு அழைத்து செல்கிறான். ஆனால் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அவர்களிற்காக அந்த மாளிகையில் காத்திருக்கிறது….

அசம்பாவிதத்தின் பின்பாக வரும் La Droppia Ora [The Double Hour], எனப்படும் இத்தாலிய திரைப்படத்தின் பகுதியானது இளம்பெண் சோனியாவின் மனம் ஆடும் ஆட்டத்தில் பார்வையாளனை ஒரு சுழல்போல் இழுக்க ஆரம்பிக்கிறது. சோனியாவின் கடந்தகாலம் குறித்த சில தகவல்கள் அவள் மீதான நல்லபிப்பிராயத்தை சந்தேகத்திற்குரியதாக்கின்றன. நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கும் சோனியாவிற்கும் இடையில் இருந்திருக்ககூடிய தொடர்பு குறித்த ஐயம் மனதில் விதைக்கப்படுகிறது.

புதிர்களும், வினோதமான நடத்தையை வெளிப்படுத்தும் பாத்திரங்களையும் கொண்ட திரைப்படத்தின் இப்பகுதியானது த்ரில்லர் நிலையிலிருந்த திரைப்படத்தை பராநார்மல் நிலைக்கு மெதுவாகக் கடத்துகிறது. சோனியா குறித்த குழப்பங்களை திரையில் விரிக்கும் கதையானது, திரைக்கு அப்பால் எடுத்து வரும் கேள்விகளையும், சலிப்பையும் தகர்த்தெறிகிறது முதற்பகுதியில் வரும் அந்த திருப்பம்.

l-heure-du-crime-2010-19047-1428187947 அந்த திருப்பம், ஒரு தந்திரமான கதை சொல்லல் எவ்வாறு ஒரு ரசிகனை ஏமாற்றமுடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. அதேவேளையில் திரைப்படத்தின் புதிரான முதற்பகுதி குறித்த சிறந்த விளக்கமாகவும் அந்த திருப்பம் அமைகிறது. இவ்வாறாக பார்வையாளனை ஏமாற்றிய இயக்குனர் Giuseppe Capotondi யின் திறமைமீது சற்றுக் கோபமும் ஏற்படுகிறது. படம் இவ்வளவுதானா என்ற கேள்வியும் உருவாகிறது. ஆனால் தொடரும் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி உணர்ச்சிகளால் ரசிகர்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது.

ஒரு பெண்ணின் மீது நிஜமான பிரியம் கொண்ட ஆணொருவனின் கதை அது. காதல், காமம், பொறாமை, ஏமாற்றம், எனும் அவன் உணர்வுகளோடு பார்வையாளனை தேடிவருகிறது கதை. சோனியா குறித்த உண்மைகள் யாவையும் அவன் அறிந்திருந்தபோதிலும் கூட அவளுடன் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்கும் ஒருவனின் கதை அது.

புத்திசாலித்தனமும், நடைமுறை யதார்த்தமும் ,உணர்வுகளாலும், மனதில் கனிந்த துணையை தேடிக்கொள்ளும் விருப்பாலும் புறந்தள்ளப்படும் சந்தர்பங்கள் பல உண்டு. அந்த ஆணும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல. ஆனால் அவன் காணும் முடிவு ஆண் ரசிகர்களை கலங்கடிக்கும். அந்த முடிவு ஆண்களை சற்று பெருமை கொள்ளவும் வைக்கும். திரைப்படத்தின் இப்பகுதியில் சோனியா வேடத்தில் நடித்திருக்கும் Kseniya Rappoport, கிய்டொ வேடத்தில் நடித்திருக்கும் Flippo Timi ஆகிய கலைஞர்கள் சிறப்பான பங்கை ஆற்றியிருக்கிறார்கள். படத்தில் ரசிகனைக் கட்டிப்போடும் பகுதி இதுதான் என்பதில் ஐயமில்லை.

ஒரு பெண்மீது கொண்ட நேசத்தால் ஆணொருவன் தன் வாழ்க்கையை மீண்டும் அர்தமற்றதாக, முன்பிருந்ததைவிட மோசமானதாக ஆக்கிக்கொள்கிறான். ஆனால் அவன் அந்தப்பெண் மேல் கொண்ட பிரியமே, அவளின் புதிய வாழ்வின் மகிழ்ச்சி தெறிக்கும் கணங்களாக, புன்னகைகளாக நிழற்படங்களில் பதிவு பெறுகிறது. தனக்கு இந்த வாழ்வை வாழ்வதற்குரிய வாய்ப்பை தந்த அந்த ஆண் குறித்த வருத்தங்கள், வேதனைகள் நிழற்படத்தில் இருக்கும் பெண்ணின் கண்களின் இறந்த பாலையாகவே இருக்கிறது. [**]

இத்தாலிய மொழி ட்ரெயிலர்

Thursday, August 5, 2010

முத்தமிட நேரமில்லை


அமெரிக்காவின் உளவுத்துறையை சேர்ந்த ராய் மில்லர்[Tom Cruise], விச்சிட்டா விமானநிலையத்தில் ஜூன்[Cameron Diaz] எனும் அழகிய நங்கையுடன் அறிமுகமாகிக் கொள்கிறான். ராய் கவர்ந்து செல்லும் ஒரு புதிய கண்டுபிடிப்பை தம் கையகப்படுத்துவதற்காக அமெரிக்க உளவுத்துறையும், ஸ்பெயின் ஆயூத விற்பனைக் கோஷ்டி ஒன்றும் அவனை விடாது துரத்துகின்றன. ராயின் சாகச ஓட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இணைந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள் அழகிய நங்கை ஜூன்….

டாம் குருஸின் தற்போதைய வயது 48. கமரொன் டயஸிற்கு வெறும் 38 மட்டுமே. சில வருடங்களிற்கு முன்பு இவர்களை சூழ்ந்திருந்த கவர்ச்சி, புகழ், வெற்றி என்பன இன்றையதினத்தில் அவை எட்டவேண்டிய உச்சத்தை அடைந்தோ அடையாமலோ படிகளில் கீழே இறங்க ஆரம்பித்துவிட்டன.

இயக்குனர் James Mangold இயக்கியிருக்கும் Knight and Day திரைப்படத்தில் குருஸும், டயஸும் தமக்குள் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளும் ஆரம்பக்காட்சிகள் இதற்கு சான்று பகர்கின்றன. குருஸினதும், டயஸினதும் தொலைந்து கொண்டிருக்கும் கவர்ச்சிகளே விமானநிலையத்தில் தம்மை அறிமுகம் செய்து கொள்வதுபோல் ஒரு உணர்வு மனதை ஆக்கிரமிக்கிறது.

ஆனால், பறக்கும் விமானத்தினுள், டாய்லெட்டிற்குள் நுழைந்து, அங்கிருக்கும் முகக்கண்ணாடியில் தன் பிம்பத்துடன் டாம் குருஸை மடக்குவது சம்பந்தமாக கமரொன் டயஸ் உரையாட ஆரம்பிக்கும்போது அவரின் அந்த எஞ்சியிருக்கும் கவர்ச்சி திறமையாக தன் கைகளை பார்வையாளன் தோள்மேல் போட்டுவிடுகிறது. நம்பவே முடியாத வகையில் மனதிற்குள் நுழைகிறார் டயஸ். அவரது துறுதுறுப்பும், செயற்கையான இளைமையும் மனதை மெதுவாக கவர்கிறது. ஆனால் பார்வையாளனை நெருங்குவதற்கு டாம் குருஸ் சற்று நேரம் எடுத்துக் கொள்கிறார். கிறுக்குத்தனமான செய்கைகளோடு அவர் பார்வையாளனை நெருங்கிவரும் வேளையில் திரைப்படம் பாதி ஓடிவிடுகிறது.

திரைப்படத்தில் புதிதாக சொல்லிவிட ஏதுமில்லை. தப்பி ஓடும் உளவாளியுடன் சந்தர்ப்பவசத்தால் இணைந்து கொள்ளும் ஒரு பெண், ஆரம்பத்தில் உளவாளியின் செய்கைகளை வெறுக்கும் அப்பெண் பின் அவன் மீது காதல் வயப்படல், பின்வரும் ஒரு தருணத்தில் அந்த உளவாளியின் நிஜமுகம் தெரிய வரும்போது காதலை தூக்கி எறிந்து அப்பெண் அவனைப் பிரிந்து செல்லல், பின் அந்த உளவாளியின் நிஜமான நிஜ முகமும் அவனின் செயல்களிற்கான அர்த்தங்களும் புரிய வரும்போது அந்த உளவாளியை அப்பெண் தன் உயிரை துச்சமென மதித்து தேடிச்செல்லல், தீயவர்களிற்கு சொர்க்கத்திற்கு டிக்கெட்டுகள். நிலைநாட்டப்படும் நீதி. ஈரமான முத்தத்துடன் இனிமையான சுபம்.

night-and-day-2010-18526-972215141 அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின் என நாடுவிட்டு நாடு பாய்கிறது படம். விரைவாக நகர்த்தப்படும் திரைக்கதையும், மெலிதான நகைச்சுவையும், க்ருஸ்-டயஸ் ஜோடிகளிற்கிடையில் வியக்கத்தக்கவகையில் உருவாகி ரசிகனை கட்டிபோடும் கவர்ச்சியும் அதலபாதாளத்திற்கு சென்றிருக்கவேண்டிய திரைப்படத்தை கைகொடுத்து காப்பாற்றியிருக்கின்றன.

விமானொமொன்றை வீதியில் இறக்கி பின் அதனை சோளவயலில் கவிழ்த்தாலும் க்ருஸும், டயஸும் அவ்விமானத்திலிருந்து சில சிராய்ப்புக்களுடன் மட்டும் தப்பிப்பார்கள். இந்த ஆக்‌ஷனை பார்த்தபோது நான் என் காதுகளை தடவிவிட்டுக் கொண்டேன். இருப்பினும் திரைப்படத்தில் பின்பு இடம்பெறும் பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் கிராபிக்ஸ் உதவியுடனேயே உருவாக்கப்பட்டிருந்தாலும் ரசிக்கக்கூடியதாகவிருக்கின்றன. குறிப்பாக ஸ்பெயினில் காளை மாடுகள் துரத்தலின் மத்தியில் இடம்பெறும் சேஸிங், அமெரிக்காவின் ஹைவேயில் இடம்பெறும் ஆக்‌ஷன் என்பன சிறப்பாக இருக்கின்றன.

ஒவ்வொரு தடவையும் பெரிதாக ஒரு ஆக்‌ஷன் வரும் சமயத்தில் கமரொன் டயஸை மயக்கமூட்டி வேறொரு நாட்டில் விழிக்கவைப்பார் குருஸ். இதனால் அந்த ஆக்‌ஷன் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறாது. குருஸ் தன் அசாத்திய திறமையால் எதிரிகளை வீழ்த்திவிட்டார் என்பதை பார்வையாளன் ஊகிக்கவேண்டியதுதான். இது ஆக்‌ஷன் காட்சிகளின் செறிவிலிருந்து திரைப்படத்தை மீட்டாலும் ஆக்‌ஷன் பிரியர்களிற்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.

காதல் காட்சிகளில் முத்தம் கொடுக்ககூட நேரமின்றி ஓடுகிறார்கள் குருஸும், டயஸும். அவர்களின் கவர்ச்சி இன்னமும் மொத்தமாக அவர்களிடமிருந்து ஓடிவிடவில்லை. அவர்களிருவரினதும் குறும்புகளையும், நளினங்களையும் ரசிக்க முடிகிறது. குருஸை விட கமரொன் தன் பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களின் பின் அவரை என்னால் எரிச்சல் இன்றி ரசிக்க முடிந்தது. அழகான மாலை வேளையொன்றை குஷியாக்கும் இத்திரைப்படம் ரசிகர்களை ஜாலியான மனநிலையில் துரத்தி அடிக்கிறது. [**]

[வயதான நடிகைகளின் ரசிகர் சங்கங்கள் என்ற பெயரில் செயற்படும் கூலிப்படையினர் முன்பாக என் எழுதுகோல் தலைகுனியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் :))]

ட்ரெயிலர்

Sunday, August 1, 2010

ரேப் ட்ராகன் - 12


புரட்சி கற்சிலை

குளோபல் ஹீரோ ரஃபிக் சாகஸம்!

வெதுவெதுப்பான நீரும், நானாவித மலர் இதழ்களும் கலந்திருந்த குளியல் தொட்டிக்குள், தன் உடலை இருத்தி, காட்டுப்பூனையே பொறாமை கொள்ளும் விழிகளை மூடி, நீரின் ஸ்பரிசத்தையும் மறந்து, புரட்சி மாதாவை தன் மனக் கண்ணின் மத்திய புள்ளியில் நிறுத்திக் கொண்டிருந்தான் ரஃபிக். அவன் உள்ளம் புரட்சி, விடுதலை, சுதந்திரம் போன்ற வார்த்தைகளை மெளனமாக உச்சாடனம் செய்து கொண்டிருந்தது.

நறுமண சுகந்தத்தால் தழுவப்பட்ட அந்தக் குளியல் அறையில் புரட்சிக்காரன் ரஃபிக்கிற்கு தன் கனிவான சேவைகளை வழங்கிட வேண்டி, அந்த சொகுசு விடுதியின் பணிப்பெண், மராக்கோ மாதுளை டேனியும் ஆடைகள் ஏதும் அற்ற நிலையில் குளியல் அறையின் ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.

- ஹும்ம்ம்.. இவ்வளவு நேரமாக கண்களை மூடி இருக்கிறாரே, இவர் என்ன விஸ்வாமித்திரரின் சீஷ்யரா… என்ற கேள்வியையும் மராக்கோ மாதுளை டேனியின் இளமனம் எழுப்பவே செய்தது. இதனால் அவள் இள மாதுளைகள் இக்கேள்வியை தாமே ரஃபிக்கிடம் கேட்டு விடுபவைபோல் சற்று நிமிர்ந்து நிற்கவும் முயன்றன. புரட்சியை மணந்துவிட்டவனிற்கு வேறு பெண்கள் இனிப்பதில்லை என்பது அந்த இளம் கனிக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யம் ஏதுமில்லையல்லவா.

இவ்வாறான கேள்வியை தன் மனதில் எழுப்பிக் கொண்டிருந்த இளமாதுளை டேனியின் கண்களில்தான் குளியல் அறையின் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த குத்து நகரின் அழகுச்சிலை குந்தவி முதலில் பட்டாள்.

டேனியை முன்னர் கவனிக்கத்தவறிய குந்தவி, குளியல் அறையின் ஒரு ஓரத்தில் ரஃபிக்கின் மதயானை உடலை பிடித்து, மசித்து விடுவதற்காக எண்ணெய் வகையறாக்களை தயார் செய்துகொண்டிருந்த டேனியைப் பார்த்தாள், சுட்ட பொன்னின் மீது மலைத்தேனை ஊற்றிய நிறத்தில் பளபளத்த டேனியின் உடலைக் கண்டாள், சிலையொன்றின் அங்கங்களைப்போல் கச்சிதமாக திரண்டிருந்த டேனியின் இளமை அழகுகளைக் கண்டாள். குந்தவியின் மனதில் பொறாமை எழுந்தாலும் தன் கண்களில் குறும்பையும், சினத்தையும் வரவழைத்துக் கொண்ட அவள்.. சிவபூஜைக்குள் நுழைந்து விட்டேன் போலிருக்கிறது என்றாள்.

dany verissimo அமேசான் காடுகளில் வாழும் அழகிய கிளியின் குரல்போல் குளியல் அறைக்குள் ஒலித்த குந்தவியின் குரலைக் கேட்ட ரஃபிக், தன் தியானம் கலைந்து கண்களைத் திறந்தான். குளியல் அறையின் வாசலிற்கருகில் ஒய்யாரமாக நின்ற குந்தவியைப் பார்த்த அவன்… குளியல் அறையில் பூஜை செய்ய மாட்டார்கள் இளவரசி என்றான்.

- அது பக்தர்களைப் பொறுத்தது வீரக் கவியே என்ற குந்தவியின் பதிலில் ஏளனம் தெறித்தது. மேலும் அழகான பக்தைகள் பூஜையில் உதவுவதற்கு முன்வரும்போது பூஜை களைகட்டும், பரவசம் பொங்கும்… பொன்னிறச் சிலையாக நின்ற டேனியைப் பார்த்தவாறே இதைக்கூறிய குந்தவி ரஃபிக் அமர்ந்திருந்த குளியல் தொட்டியை நெருங்கவும் செய்தாள்.

- குந்தவி, நான் இப்போது கவிஞன் அல்ல, புரட்சிக்காரன். நான் மலர்களின் அழகைப் பாடுவதில்லை. வீரமரணத்தின் மான்பை இசைப்பவன். விடுதலை என்பது என் பேச்சு, புரட்சிதான் என் மூச்சு.. இவ்வாறு பதிலளித்த ரஃபிக், தன் விரல்களால் டேனியை நோக்கி சைகை செய்தான். ரஃபிக்கின் விரல்களை கடித்து தின்று விடலாமா என்று ஏங்கியவாறே ரஃபிக்கின் உடலைத் துவட்டிவிடுவதற்காக ஒரு துணியை எடுத்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த குளியல் தொட்டியை நெருங்கினாள் டேனி.

- உங்கள் செயல்களைப் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் புரட்சிக்காரர் என்பது. ஆம் உங்கள் குறுவாளுடன் குளிக்கிறீர்களே அதுவும் புரட்சியில் அடக்கமா என வினவிய குந்தவி தன் விரல்களால் குறுவாளைச் சுட்டிக் காட்டி கலகலவென நகைத்தாள். மின்னல் நீரில் பாய்ந்தால்போல் அகன்றிருந்த தன் கால்களை விரைவாக ஒடுக்கினான் புரட்சிக்காரன் ரஃபிக். தன் கண்களில் அந்தக் குறுவாள் படாவிடிலும் இன்னமும் சில வினாடிகளில் தன் கைகளால் அதனை தொட்டு கூர்பார்க்கும் பாக்யம் கிடைக்கப்போகிறதே என எண்ணி உருகினாள் டேனி.

குந்தவியின் சிரிப்பும், மராக்கோ மாதுளை டேனியின் வித்தியாசமான பார்வையும் புரட்சிக்காரன் ரஃபிக்கிற்கு சற்று எரிச்சலை தரவே என்ன பெண்களோ என்று தன் மனதில் எண்ணியவாறே குளியல் தொட்டியிலிருந்து எழுந்து நின்றான். நீர்த்திவலைகள் தழுவி ஓடி வழுகி விழுந்த ரஃபிகின் உடல் மீது லாவகமாக துணியைப் போர்த்திய டேனி, ரஃபிக்கின் வைர உடலை துவட்டிவிட ஆரம்பித்தாள். ரஃபிக்கின் மேடு பள்ளங்களில் அவளது அனுபவம் பெற்ற விரல்கள் கவிதையொன்றின் படிக்கப்படா வரிகள்போல் ஊர்ந்தன. மேலும் குறிப்பிட்ட ஒரு மேட்டை ஆதுரத்துடன் தடவிக் கொடுக்கவும் செய்தன. மேட்டின் உயரத்தை அளக்கவும் முற்பட்டன. புரட்சி மாதாவிற்கு பிடிக்காத இவ்வகையான தொடுதல்களை மேலும் நீட்ட விரும்பாத ரஃபிக்.. டேனி போதும் நிறுத்து உன் துவட்டலை, இனி நானே துவட்டிக் கொள்கிறேன் என்றவாறே குளியல் தொட்டியிலிருந்து வெளியேறினான்.

- துவட்டி விடுவதற்கு என் கரங்களை அனுமதிக்காமல், உங்கள் கரங்களை நம்பும் நீங்கள் ஒரு கல்நெஞ்சர் என்று கூறிய டேனியின் கண்களில் கண்ணீர் அரும்பு பூத்தது. புரட்சி..புரட்சி..என்று உங்கள் உங்கள் உடல், மனம், சிந்தனை யாவும் கல்லாகி விட்டன. நீங்கள் ஒரு புரட்சிக் கற்சிலை என விம்மினாள் டேனி.

1221649816 - உடல், உள்ளம் மட்டுமல்ல புரட்சிக்காரரிற்கு இன்னொன்றும் கல்லாகி விட்டது எனக்கூறிய குந்தவியின் விரல்கள், ரஃபிக் இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை சுட்டிக்காட்டவே தன் ஏக்கத்தையும் மறந்து கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள் அழகி டேனி. இளவரசி குந்தவியும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள். அப்போது அந்தக் குளியல் அறை கிளிகளின் சிரிப்புகளால் தழுவப்படும் பாக்யம் பெற்றதாகியது.

அந்த இரு பருவசிட்டுக்களின் சிரிப்பொலிகளும் புரட்சிமாதாவின் பக்தனாகிய ரஃபிக்கின் காதுகளில் அக்கினி திராவகம்போல் பாயவே, கோபத்துடன் வேகமாக குளியல் அறையை விட்டு வெளியேறினான் அவன்.

- நீங்களும் உங்கள் உடலைக் கழுவிக் கொள்கிறீர்களா இளவரசி… தன் அழகிய விழிகளால் குந்தவியை பார்த்தவாறே வினவினாள் டேனி.

- ஆம், நன்றாகக் கழுவிக் கொள்ளப் போகிறேன். ஏனெனில் இந்த நீராடலின் பின் ஒரு பெரிய பூஜை நடக்கவிருக்கிறது. அப்பூஜையில் உன் உதவியும் எனக்குத் தேவை பெண்ணே என்றவாறே தன் உடைகளை களைந்த குந்தவி, தன் பூரண அழகுகளுடன் நீர் தொட்டியினுள் இறங்கினாள். குந்தவியின் அசர அடிக்கும் மேனியழகு டேனியின் உணர்வுகளை அலைபாயச் செய்தது.

- டேனி, நான் புரட்சிக்காரி அல்ல எனவே உன் வித்தைகளை தயங்காது நீ என்னிடம் காட்டு என்றவாறே தன் பொன்னுடலை நீரினுள் இருத்தினாள் குந்தவி. குளியல் தொட்டியினுள் திடீரென இரு தாமரைகள் பூத்தன. புதிதாய்ப் பூத்த அந்த தாமரைகளைச் சுற்றி, நீரில் மிதந்த மலரிதழ்கள் மெதுவாக நடனமாடின.

குளியல் தொட்டியினுள் இருந்த குந்தவியை நெருங்கிய டேனியின் காதுக்குள் குந்தவி ரகசியமாக ஏதோ சொன்னாள். அதைக் கேட்ட மராக்கோ மாதுளையின் முகம் குப்பெனச் சிவந்தது. டேனியின் விரல்கள் தாமரைகளை நாடி நீந்த ஆரம்பித்தன. புரட்சிமாதாவின் பக்தனான ரஃபிக்கின் சோதனை காலமும் அக்குளியல் தொட்டியில் தாமரைகளுடன் நீராட ஆரம்பித்தது.

[ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மி கொட்டுங்களே]

[தொடரில் இடம்பிடித்திருக்கும் படங்கள் நெய்க்காரான்பட்டி குளோபல் ஹீரோ ரஃபிக் ரசிகர் மன்றத்தலைவர் முனியாண்டி அவர்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்யும் வகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.]