Saturday, August 21, 2010

ரேப் ட்ராகன் - 13




வேங்கையாட்டம்

ஸ்னான அறையை விட்டு மழையில் நனைந்த சிங்கம்போல் கோபத்துடன் வெளியேறிய புரட்சிக் காளை ரஃபிக், தன் அறைக்குள் நுழைந்து, தன் உடலை நன்கு துவட்டி முடித்து, ஆடைகளை அணிய ஆரம்பித்தான். ரஃபிக்கின் விழிகள் அறையினுள் ஒரு வட்டம் போட்டன.

ரஃபிக்கின் சொகுசு அறையானது அங்கு தங்கக்கூடிய பலவகையான வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது. மது வகைகள், பழ வர்க்கங்கள், மேலும் ரஃபிகிற்கு தெரிந்திராத பலவகைப் பொருட்களால் அந்த அறை நிரம்பியிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கும் அறையில் ஏன் விலங்குகளும், சவுக்குகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ரஃபிக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புரட்சி நகரிலிருந்து குந்தவியை கடத்திச் செல்வதற்காக வரும் வீரர்களிற்காக இந்த சொகுசு விடுதியில் சில காலம் தான் தங்கியிருக்க வேண்டும் என்பது அவன் எண்ணத்தில் அமிலமாய் இனித்தது. இரு பருவச்சிட்டுக்களினதும் வினோதமான போக்கை அவனால் தாங்கிக் கொள்ள இயலாது இருந்தது. ரஃபிக்கின் உடலின் ஒவ்வொரு துளையிலுமிருந்து புரட்சி தீவிரத்துடன் சுவாசித்துக் கொண்டிருந்தது.

குந்தவியை புரட்சி நகர வீரர்கள் கையில் ஒப்படைத்துவிட்டால் தன் கடமை நிறைவேறிற்று என்று தன் மனதில்கூறி பெருமூச்சு விட்டான் ரஃபிக். குத்து நகர் சிறையில் திருக்கை வால் சவுக்கடி பெற்றுக் கொண்டிருக்கும் தொரசிங்கம், ராவணன், வேலாயுதம் போன்ற புரட்சிக்காரர்களை விடுவிப்பதற்காக இளவரசி குந்தவி பயன்படுவாள் என்பதை ரஃபிக் நன்கறிந்திருந்தான். இருப்பினும் இளவரசி குந்தவியுடன் தன் கவிதைகளை அவன் பகிர்ந்து சுவைத்த நாட்கள் அவன் மனநதியில் அலைகளாக சுழன்றன.

ஹா… என்ன இனிமையான நாட்கள் அவை! மன்னன் குத்தலகேசி மட்டும் குறுக்கே வந்திராவிடில்…. இவ்வாறாக சுழன்ற தன் எண்ணங்களை ரஃபிக் சிரமத்துடன் கட்டுப்படுத்தினான். புரட்சியை தவிர வேறு எதுவுமே அவன் சிந்தனைகளிலும், எண்ணங்களிலும் நுழைந்துவிடக்கூடாது என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். காதல்கூட ஒருவகையில் புரட்சிதான் என்பதை ஏற்க மறுத்தது அவன் உள்ளம். அறையிலிருந்த சாளரத்தின் வழியாக தன் கண்களை செலுத்தினான் ரஃபிக்.

இந்தவேளையில் ரஃபிக்கின் அறைக்குள் நீரில் நனைந்த புஷ்பமாக உள்ளே நுழைந்தாள் இளவரசி குந்தவி. இளவரசியின் பின்னால் தன் கவர்ச்சி உடலை நளினமாக அசைத்து நடை பயின்று வந்த மராக்கோ மாதுளை டேனி, இளவரசியின் கண்சிமிட்டல்களை புரிந்து கொண்டவளாக ரஃபிக்கின் அறையின் கதவை இழுத்து மூடி அதன் தாழ்ப்பாளையும் போட்டாள்.

வான் மேகம் பூமியை தன் துளிகளால் நனைக்கும். இதைக் கண்ட மயில்கள் தோகை விரித்து ஆடும். செடிகளில் பூத்திருந்த புஷ்பங்கள் வான் துளிகளின் ஸ்பரிசத்தில் தம்முடல் வியர்க்கும். இவ்வாறு உடல் வியர்த்த அழகிய மலர்களாக தன் அறைக்குள் நுழைந்த பெண்களைக் கண்ட ரஃபிக்கின் புருவங்கள் உயர்ந்தன. மேலும் தன் அறையின் கதவுகளை டேனி தாழ்பாளிட்டதைக் கண்டு வியப்புற்ற புரட்சிக்காரன்… பெண்ணே ஏன் என் அறைக் கதவுகளை தாழிட்டாய்… என்று ஒரு கேள்வியையும் ஆடையில்லா மலரான டேனியை நோக்கி வீசினான்.

- மான் ஓடிவிடக்கூடாது அல்லவா…. தன் மயக்கும் விழிகளால் ரஃபிக்கை பார்த்தபடியே பதில் தந்தாள் இளவரசி குந்தவி.

- மானா!?.. அறையைச் சுற்றி தன் விழிகளை நாடகபாணியில் சுழலவிட்ட புரட்சிக்காரன் ரஃபிக்… இங்கு மான்கள் ஏதும் இருப்பதாக என் கண்களிற்கு தெரியவில்லையே இளவரசி என்றான் கேலியாக.

- மான் இங்கு இருக்கிறதா இல்லையா என்பது பார்ப்பவர்களின் பார்வையையும், பசியையும் பொறுத்திருக்கிறது.. அறையின் கதவின்மீது தன் முதுகைச் சாய்த்து, தன் பருவ அழகுகளை ஒய்யாரமாக வளைத்து செக்ஸி போஸ் தந்தவாறே நின்றிருந்த டேனியின் தேனிதழ்களிலிருந்து இந்தச் சொற்கள் மென்மையாக வெளிப்பட்டன.

- பசி கொண்ட பார்வையாளர்கள் இங்கு யாரோ?… ரஃபிக்கின் குரலில் கிண்டல் குறைந்திருக்கவில்லை.

- நாங்கள்… குந்தவி, டேனி இருவரும் ரஃபிக்கின் வினாவிற்கு ஒருசேரப் பதிலளித்தார்கள்.

- ஹாஹாஹாஆஆ.. உங்கள் கண்களிற்கு நான் மானாகக் காட்சியளிக்கிறேனா! வேடிக்கை, வினோதம், விசித்திரம். நீங்கள் அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்களின் ஒளடதங்களை சுவைத்து விட்டீர்களா என்ன? இதைக்கூறிய ரஃபிக் பருவச்சிட்டுக்களை நோக்கி ஒரு புன்னகையையும் வீசினான்.

- இல்லை, நாங்கள் இன்னமும் சுவைக்கவில்லை. ஆனால்.. என்று இழுத்தாள் இளவரசி குந்தவி.

- ஆனால்.. என்ன? ரஃபிக் பொறுமையிழக்க ஆரம்பித்தான்.

- ஆனால் இனிமேல்தான் சுவைக்கப்போகிறோம். ம்ம்ம்ம்ம்.. யமி யமி யம் என்று கிசுகிசுப்பாக பதிலளித்த மரக்கோ மாதுளை டேனி, தன் உதடுகளை அவள் நாக்கினால் தடவினாள். அந்த நாக்கின் அசைவு புரட்சிக்காரனின் அடிவயிற்றில் தேள் ஒன்றை ஊரச்செய்தது.

- என்ன உளறுகிறீர்கள் நீங்கள்.. என்று கோபமாக துடித்தான் ரஃபிக்.

- உளறவில்லை புரட்சிக்காரரே, உறுதியுடன் சொல்கிறோம். நீர் இங்கு மான். நாங்கள் வேங்கைகள். வெறிகொண்ட, பசிகொண்ட பெண் வேங்கைகள். பசிகொண்ட பெண்வேங்கை என்ன செய்யும் தெரியுமா புரட்சிக்காரரே..

- புரட்சிக் கவரிமானின் கூரிய கொம்புகளிற்கு தலைப்பாகையாகும்… குந்தவியிடமிருந்து கேள்வி வந்த வேகத்திலேயே பதிலை வீசினான் ரஃபிக்.

- இல்லை.. புரட்சிக் கவரிமானின் சுவையான உடலை, அடித்து, கிழித்து, சிதைத்து, புசித்து தன் பசியாறும்.. தன் கீழுதடுகளை உதடுகளை பற்களால் கவ்வியபடியே கதவிலிருந்து முன்னே நகர்ந்தாள் டேனி.

ஏதோ விபரீதம் அரங்கேறப்போகிறது என்பது ரஃபிக்கிற்கு தெளிவாக ஆரம்பித்தது. ஹாஆ… இந்த இரு பெண்களும் என்னை என்ன செய்து விட முடியும். மலர்கள் மோதியா மலைக்கு வலிக்கப் போகிறது என்று எண்ணிய அவன்…

- பெண்களே, நீங்கள் நெருப்புடன் விளையாட விரும்புகிறீர்கள் என்றான்.

- நெருப்பு, நெருப்புடன்தான் விளையாட வேண்டும், நீருடன் அல்ல புரட்சிக்காரரே என்று வேகமாகக்கூறிய குந்தவி, ரஃபிக்கை நோக்கிப் பெண்வேங்கைபோல் பாய்ந்தாள். மராக்கோ மாதுளை டேனி, பசிகொண்ட விலங்குபோல் பின்புறமாக ரஃபிக்கை நெருங்கினாள். ரஃபிக்கின் மேல் பாய்ந்த குந்தவி, அவனது மேலங்கியை தன் கைகளினால் கிழித்து எறிந்தாள். ரஃபிக்கின் பாறைபோன்ற மார்புகளை குந்தவியின் விரல் நகங்கள் கீறின.

- வேங்கையாட்டம் ஆரம்பம் புரட்சிக்காரரே.. குந்தவியின் உதடுகள் ரஃபிக்கின் காதில் முணுமுணுத்தன. அச்சொற்களின் அனல் ரஃபிக்கின் உடலை தகிக்க வைத்தது.

[ஓடி விளையாடு பாப்பா...]

9 comments:

  1. ஹ்ம்ம் ரபிக் கொடுத்து வைத்தவர்
    பாவம் இளவரசன் இழுமி

    ReplyDelete
  2. ணா..தப்பா நெனைச்சுகாதீங்க..சத்தியமா எனக்கு ஒண்ணும் புரியல..சரி பழைய பதிவுகள படிச்சுப் பார்ப்போம்னு படிச்சாலும் எனக்கு ஒண்ணும் புரியல. இது எதுனா காமிக்ஸா?( ரேப் ட்ரகான்னா காமிக்ஸ்க்கு பேர் வெப்பாங்க..)

    ReplyDelete
  3. அன்பு நண்பரே

    நாம் ரசிக்கின்ற ஒரு கதாநாயகன் தீடிரென நமக்கு பிடிக்காத செயல்களை செய்தால் கதாசிரியர் மீது கோபம் வருவது இயல்பு.

    அது போன்ற அறச்சீற்றம்தான் தங்கள் மீது தற்போது ஏற்படுகிறது. கதாநாயகன் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி இந்த அத்தியாயத்தில் தாங்கள் எழுதியது கதாநாயகனை கீழ்க்கண்ட இரண்டு வட்டங்களிற்குள் எதிர்காலத்தில் தள்ளும் சூழ்நிலை உள்ளது.

    வில்லன் கீழே விழுந்திருக்கையில் அவன் முகத்தில் குத்தாமல் ஒரு சுவர் மீது காலை வைத்து எகிறி அவனை உதைத்து விட்டு கீழ்க்கண்ட வசனத்தை பேசுவது

    "டேய், நாடு உனக்கு இன்னா செய்தது கேக்குறதத்தை விட்டுட்டு நாட்டுக்கு நீ என்ன செய்தேன்னு கேளு. ஆங்"

    அல்லது

    தனக்கு நேர்ந்த அவலத்தை தழுதழுத்த குரலில்

    "தங்கச்சி, புறா செத்து போச்சிம்மா"

    கோடிக்கணக்கான ரசிகர்கள் கோபத்திலிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  4. நண்பர் சிபி, யார் கொடுத்து வைத்தவர் என்பதுதான் இன்னமும் சில வாரங்களில் தெரிந்துவிடுமே :) தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கிறது. இது காமிக்ஸ் இல்ல ஆனால் லத்பானிய இலக்கியத்தின் உயரிய விருது கிடைக்க இதற்கு வாய்ப்பிருக்கிறது :) கருத்துக்களிற்கு நன்றி.

    ஜோஸ், எங்கள் நாயகன் சாதாரண நாயகன் அல்லவே மற்ற நாயகர்களைப்போல் பெண்களுடன் நடந்து கொள்வதற்கு :) கோடிக்கணக்கான ரசிகர்களும் நம் நாயகனிற்கு ஆதரவாக உலக அளவில் ஆர்ப்பாட்ட போராட்டங்கள் நிகழ்த்தும் நாட்கள் தொலைவில் இல்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  5. புகைப் படத்தைவிட எழுத்து மிரட்டுகிறது போங்க நல்ல இருக்கு

    ReplyDelete
  6. //ரஃபிக்கின் சொகுசு அறையானது அங்கு தங்கக்கூடிய பலவகையான வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது. //

    இதுல ஏதோ எக்குத்தப்பான மீனிங் இருக்குறதா தோணுது.அது எனக்கு மட்டுமா,இல்ல எல்லோருக்கும் தானா? ;)

    //ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கும் அறையில் ஏன் விலங்குகளும், சவுக்குகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ரஃபிக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை.//

    சத்தியமா அது தான். :)

    //மலர்கள் மோதியா மலைக்கு வலிக்கப் போகிறது என்று எண்ணிய அவன்…//

    ஹிஹி...

    //பாவம் இளவரசன் இழுமி //

    யோவ்,என்னய ஏன்யா இழுக்கீங்க? :)
    //யார் கொடுத்து வைத்தவர் என்பதுதான் இன்னமும் சில வாரங்களில் தெரிந்துவிடுமே :) //

    ஆஹா,பொடி வச்சுப் பேசுரானுகளே! :)

    //இழுமி //

    ஆமா,அது என்னய்யா இழுமி ? உம்ம இழுக்கனுமா?காதலரே,இத நோட் பண்ணுங்க.இந்த பீசுக்கு ஒரு பாத்திரம் குடுத்து அது நெளியிற அளவுக்கு அடிங்க. :)

    ReplyDelete
  7. நானு எதயும் பாக்கலை...படிக்கலை... முருகா என்ன காப்பாத்து :)

    ReplyDelete
  8. நண்பர் பனித்துளி சங்கர், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பொடி வைத்துப் பேசவில்லை :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் மயில்ராவணன், முருகன் உங்களைக் காப்பாற்றட்டும் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete