Wednesday, December 15, 2010

பிரசவ தினம்


பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்ட தன் மனைவிக்கு அருகில் துணையாக இருக்க விரும்பும் பீட்டர் [Robert Downey Jr], எதிர்பாராத சில நிகழ்வுகளால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அட்லாண்டாவில் முடக்கப்படுகிறான். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நோக்கி காரில் பயணத்தை ஆரம்பிக்கும் ஏதன் [Zach Galifianakis], தன்னுடன் கூடவே பயணம் செய்யுமாறு பீட்டரிற்கு அழைப்பு விடுக்கிறான்….

சுயமைதுனம் செய்யும் நாயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?! இயக்குனர் Todd Phillips ஐத் தவிர வேறு எவராலும் கார் ஒன்றினுள் சுயமைதுனம் செய்யும் ஒரு நாயை இவ்வளவு அப்பாவித்தனத்தோடும், நகைச்சுவையோடும் திரைப்படுத்த இயலுமா என்பது சந்தேகமே. அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Due Date திரைப்படமானது நம்ப முடியாத சூழ்நிலைகளினுள் ஒருமித்து மாட்டிக் கொள்ளும் இரு அந்நியர்களின் அசாத்தியமான பயணத்தை நகைச்சுவையுடன் திரைக்கு எடுத்து வந்திருக்கிறது.

பீட்டரும், ஏதனும் முதன் முதாலக சந்தித்துக் கொள்ளும் தருணமே அபசகுனமான ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்தக் கணம் முதலே ஏதனை தன் முழு மனதுடனும் வெறுக்க ஆரம்பித்து விடுகிறான் பீட்டர். ஆனால் தொடரும் சம்பவங்கள் பீட்டரை ஏதனுடனும் அவன் நாயான Sonny யுடனும் ஒரே காரில் பயணிக்கும் நிர்பந்தத்திற்குள்ளாக்குகிறது.

மிக இலகுவாக கோபத்தை எட்டி விடும் இயல்புடைய பீட்டர், ஒரு சில நாட்களில் தந்தை எனும் ஸ்தானத்தை அடையப் போபவன். முதிர்ச்சியடையாத குழந்தை ஒன்றின் குணத்தையும், அறிவையும் கொண்ட ஏதன், தன் தந்தையை பறிகொடுத்துவிட்டு, ஒரு காப்பி டப்பாவினுள் அவருடைய சாம்பலுடன் பயணிப்பவன். இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் பீட்டர் ஏறக்குறைய ஏதனிற்கு ஒரு தற்காலிக தந்தையாகி விடுகிறான். கட்டுப்படுத்தவியாலாத பையன் ஒருவனை தன்னுடன் கொண்டு பயணிக்கும் தந்தை படக்கூடிய அவஸ்தைகளிற்கு மேலாக வேதனைகளை பீட்டர், ஏதன் வழியாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதன் வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளும் பீட்டர், பொறுப்பான ஒரு தந்தையின் நிலைக்கு தன்னை சீராக்கி கொள்கிறான். இதேவேளையில் தன் தந்தையின் பிரிவின் பின் யாருமே தனக்கில்லை என எண்ணி மனதினுள் உடையும் ஏதன், படிப்படியாக பீட்டரின் மனதில் ஒரு சிறிய இடத்தை தேடிக் கொள்கிறான்.

ஏதன் செய்யும் ஒவ்வொரு தகிடுதத்தமும் பீட்டரை கொலைவெறி கொள்ளத் தூண்டுகிறது. ஏதன், பீட்டரை இட்டுச் செல்லும் அசாத்திய சந்தர்ப்பங்களும், அவற்றினுள் மாட்டிக் கொண்டு பீட்டர் படும் அவஸ்தைகளும், இந்த தருணங்களை கஞ்சா உறிஞ்சும் இலகுடன் ஏதன் கடந்துவரும் பாணியும் இந்த இரு நடிகர்களினதும் நடிப்புத்திறனை திரையில் அருமையாக சிறைப்படுத்தி அசரவைக்கும் நகைச்சுவையாக மிளிரச் செய்துவிடுகிறது.

date-limite-2010-19017-1679640818 கஞ்சா விற்கும் வீட்டு சிறுவனைக் குத்துவதாகட்டும், ஏதனின் நாயின் முகத்தில் காறி உமிழ்வதாகட்டும், கொலைவெறி கொண்டு ஏதனை தாக்குவதாகட்டும், அதே ஏதன் மேல் நெகிழ்வாகி அவனை அணைப்பதாகட்டும் பரவசப்படுத்தியிருக்கிறார் நடிகர் ராபர்ட் டவ்னி ஜீனியர். அவரின் நகைச்சுவை நடிப்பும் அட்டகாசம்தான். ஏதனை நடிக்க சொல்லி பரிசோதிப்பதும், தன் மனைவிமீது சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பதும், வெஸ்டர்ன் யூனியன் ஊழியரிடம் மரண அடி வாங்குவதும் என [நான் என் பிள்ளை பிறந்தபோது எங்கிருந்தேன் தெரியுமா என வெஸ்டர்ன் யூனியன் ஊழியர் வினவ, மக்சில்லிஸிலா என டவுனி அடிக்கும் அந்த ஒரு சொல் டைமிங் டயலாக் அதகளம்] ஒரு சூப்பர் ஹீரோ நாயகன் எனும் நிலையிலிருந்து மிகவும் கீழிறங்கி வந்தது மட்டுமலாது, வழமையான தன் ஸ்டைலிலிருந்து அடக்கி வாசித்து தன் ரசிகர்களை வியக்க வைக்கிறார் டவுனி.

ஆனால் ஏதன் வேடமேற்றிருக்கும் நடிகரான ஸாக் கலிபையானாகிஸ், டவுனியையும் மிஞ்சி விடுகிறார் என்பதே உண்மை. இவ்வளவு இயல்பாக அவரால் எப்படி தகிடுதித்தங்களை திரையில் ஆற்ற முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அது அவரின் கூடப்பிறந்த இயல்பா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் திறன் அவரது. விமான நிலையத்தில் அவர் ரசிகர்களிற்கு அறிமுகமாகும் தருணம் முதல் கொண்டே அவரின் உடல்மொழியும், நடிப்பும் சிரிப்பு அலைகளிற்கு வலை போடுகிறது.

நடிகராக ஆகவிரும்பும் ஏதன், மார்லன் பிராண்டோ போல் காட்ஃபாதர் காட்சி ஒன்றை நடித்துக் காட்டுவதாகட்டும் [ அவர் அதை நடித்துக் காட்டி முடித்ததும் இந்த வசனங்கள் எல்லாம் நீயே எழுதியதா என சீரியஸாக ஒருவர் கேட்பார் பாருங்கள் ], பீட்டர் அருகில் தூங்குவதை சட்டை செய்யாது சுயமைதுனம் செய்வதாகட்டும், காமாண்டோ போல் மெக்ஸிகோவில் பீட்டரை மீட்பதாகட்டும் வழங்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் மரண அடி அடித்திருக்கிறார் அவர். அதே வேளை தன் தந்தையின் பிரிவால் வாடும்போதும், பீட்டர் தன்னை விட்டு பிரியப் போகிறான் என்பதை அறியும்போதும் நெகிழவும் வைக்கிறார். பீட்டர் காரில் தனியாக ஓட்டம் எடுத்தபின், ஒய்வெடுக்கும் இடத்தில் சூட்கேஸ் மீது அவர் அப்பாவியாக அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி மனதை பிசையும்.

திரைக்கதையை சலிப்பின்றி இவ்வளவு நகைச்சுவையுடன் எடுத்து வந்த இயக்குனர் டாட் பிலிப்ஸ், சந்தேகமின்றி திறமையான நகைச்சுவை திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை மீண்டும் முன்னிறுத்தியிருக்கிறார். அவரின் சிறப்பான இயக்கத்தில் நகைச்சுவையும், மென்மையான உணர்வுகளும் நிரம்பி வெளியாகியிருக்கும் இப்படைப்பு குதூகலமான சுகப்பிரசவம். [**]

ட்ரெயிலர்

12 comments:

 1. கோபப்படும் அப்பாக்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் :)

  ReplyDelete
 2. // இப்படைப்பு குதூகலமான சுகப்பிரசவம் //

  கண்டிப்பாக பாத்துடுவோம் :))
  .

  ReplyDelete
 3. கலக்கல் விமர்சனம் க.கா..
  ஆங்கிலத்தில் பலதரப்பட்ட நகைச்சுவைகளைப் பார்த்து சிரித்திருக்கிறேன். இதுவும் கலக்கும் என்று விமர்சனம் சொல்லுகிறது!!
  இந்த படத்தில் தாடி வைத்த நடிகர்தானே The Hangover ல் வரும் நால்வரில் ஒருவர்?? அதிலும் சிறப்பாக நடித்து சிரிக்கவைப்பார்!!

  ReplyDelete
 4. என்னங்கயா யோவ்,கதை கொஞ்சம் Trains,Planes and Automobiles மாதிரி ச்சே,நம்ம 'உலக நாயகன்' கமல் அவர்கள் நடித்த 'திருட்டே சுகம்' ச்சே..அன்பே சிவம் மாதிரி இருக்குது? :)

  நல்ல காமெடி கதைன்னு சொல்லிப்புட்டு ஏன் ஓய் ரெண்டு ஸ்டார் மட்டும் கொடுத்து இருக்கீர்?

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம்!

  ReplyDelete
 6. தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://tamilthirati.corank.com/

  ReplyDelete
 7. கதைக்களம் உண்மையிலேயே வித்தியாசமானது தான். ஆனால், அதை திரைக்கதை ஆக்கிய விதம் - பயங்கர சொதப்பல். Todd Phillipsஇன் ஹேங்கோவர் எதிர்பார்ப்பில் திரையரங்கிற்கு சென்ற எனக்கு, லாஜிக்கல் ஓட்டைகளின் ஓவர்டோஸ் எரிச்சல் தான் கிடைத்தது...

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி நண்பரே , நானும் பார்த்துவிட்டேன். நண்பர் சொன்ன இந்த வாக்கியத்தை //கதைக்களம் உண்மையிலேயே வித்தியாசமானது தான். ஆனால், அதை திரைக்கதை ஆக்கிய விதம் - பயங்கர சொதப்பல்.// நானும் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 9. நண்பர் சிபி, பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் nis, கோபப்படும் அப்பாக்களைதான் அம்மாமார்கள் பார்த்துக் கொள்வார்களே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் ஆதவா, ஆம் ஹாங் ஓவரில் வரும் நடிகர்தான் அவர். சிறப்பான ஒரு நடிகர்தான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, இரண்டிற்கும்மேல் கொடுக்க மனது இல்லை என்பதுதான் காரணம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் எஸ்.கே., நன்றி.

  நண்பர் பிரசன்னா ராஜான், இவ்வகையான படங்களில் லாஜிக்கை எதிர்பார்க்க முடியுமா! திரைப்படுத்தல் எனக்கு பிடித்தே இருந்தது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் வேல்கண்ணன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 10. அன்பு நண்பரே,

  கழிப்பிடத்தில் டவுனி அவரை நடிக்கச் சொல்லி சோதிக்கும்போது, அவரின் முகபாவம் அட்டகாசம். அவ்வளவு சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுக்கிறார். ஆளும் அட்டகாசமாக இருக்கிறார்.

  காட்பாதர் வசனம், வெஸ்டர்ன் யூனியனில் சக்கர நாற்காலியில் இருந்தவாறு அவரை புரட்டியெடுக்கும் தருணம், மெக்ஸிகோ என பயண நகைச்சுவையில் இத்திரைப்படம் க்ளாஸிக்.

  அந்த நாய்............. இயக்குநர் பின்னியிருக்கிறார். மனதை இலகுவாக்கும் திரைப்படம்.

  ReplyDelete
 11. ஜோஸ்,

  அந்த நாய் ஒரு கில்லாடி :)) ஜாலியாக பார்த்து ரசிக்க ஏற்ற படம். ஹாலிவூட்டின் நகைச்சுவைப் புயல்களை விட ஸாக், உண்மையிலேயே அமைதியாக அசத்துகிறார். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete