Wednesday, December 1, 2010

அமெரிக்கன்


சுவீடனில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த ஒப்பந்தக் கொலைஞனான ஜாக்[George Clooney], அவனைக் கொலை செய்ய எடுக்கப்படும் ஒரு முயற்சியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொள்கிறான். இந்தக் கொலைச்சதியின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பொறுப்பை தனக்கு ஒப்பந்தங்களை வழங்கும் பவேல் என்பவனிடம் ஒப்படைக்கும் ஜாக்,சிறிது காலம் தலைமறைவாக இருப்பதற்காக இத்தாலியின் மலைக்கிராமம் ஒன்றிற்கு வந்து சேர்கிறான்…

Martin Booth எனும் நாவலாசிரியர் எழுதிய A Very Private Gentelman எனும் நாவலினைத் தழுவி, இயக்குனர் Anton Corbijn இயக்கியிருக்கும் The American திரைப்படமானது ஒரு பரபரப்பான அதிரடி த்ரில்லர் அல்ல. ஒப்பந்தக் கொலைகாரன் ஜாக், தலைமறைவாக வாழ்ந்திட வந்து சேரும் மலைக் கிராமத்தில் வாழ்ந்திருக்கும் அமைதியை திரைப்படமும் தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கிறது.

மலைக்கிராமத்திற்கு புதியவனாக வந்து சேரும் ஜாக், அக்கிராம மக்களால் அமெரிக்கன் என அழைக்கப்படுகிறான். காலையில் அவன் செய்யும் உடற்பயிற்சி முதல், மாலையில் சந்தேகப் பார்வையுடன் ஒடுங்கிய தெருக்கள் வழியாக நடந்து அவன் தன் வீடு திரும்புவதுவரை, ஜாக்கின் சந்தேகம் பீடித்த தினசரி வாழ்வின் உயிரற்ற தன்மையை படத்தின் மெதுவான ஓட்டம் கனமாக மாற்றியடிக்கிறது.

வழக்கமாக தனது காந்தக் கவர்ச்சியாலும், அதிசயிக்க வைக்கும் உடல் மொழியாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிடும் க்ளுனி, பிறரை அதிகம் நெருங்காமல், உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாத கொலைஞன் வேடத்தில் இதைவிட சிறப்பாக செய்துவிட முடியாது. இருப்பினும் அவரது தீவிர ரசிகர்கள்கூட அவரின் இந்தப் பாத்திரப்படைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா என்பது ஐயத்திற்குரிய ஒன்று. அந்தளவிற்கு உணர்வுகள் விறைத்த நடிப்பை திரைப்படத்தில் வழங்கியிருக்கிறார் க்ளுனி. ஆனால் பெண்களுடான காட்சிகளில் மட்டும் அவரிடம் குடியிருக்கும் அந்தக் கவர்ச்சி இயல்பாகவே வெளிப்பட்டு மனதை கொஞ்சம் ஆறுதல் செய்கிறது. படத்தின் தயாரிப்பிலும் க்ளுனிக்கு பங்கிருக்கிறது.

the-american-2010-18065-1849181211

ஒரு கொலைஞனின் நுட்பத்தைக் காட்டும் காட்சிகளாக, ஜாக் புதிதாக தயாரிக்கும் ஒரு துப்பாக்கி குறித்த கணங்களும், அத்துப்பாக்கியை ஒரு ஆற்றங்கரை அருகில் பிறிதொரு கொலைகாரியுடன் சோதித்துப் பார்க்கும் சந்தர்பத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். அதிலும் ஆற்றங்கரை அருகில் துப்பாக்கியை சோதித்துப் பார்க்கும் தருணங்களில் மனது திக்திக் என்கிறது.

மலைக்கிராமத்தின் மதகுருவானவர்க்கும், ஜாக்கிற்குமிடையில் ஆத்ம பரிசோதனைக்கான வாயில் ஒன்று திறக்கிறது. ஆனால் ஆன்மீக வழியில் பிராயிசித்தம் தேடுவதற்குப் பதிலாக ஜாக் காதல் வழியாக தன் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள விருப்பம் கொள்கிறான். கிராமத்தின் விலைமாது ஒருத்தியுடன் ஆரம்பமாகும் உடல்பசி தீர்த்தலானது மெல்ல மெல்ல ஜாக்கில் காதலாக உருக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்தக் காதலிற்காக ஜாக் தன் கடந்த காலத்தை இழப்பானா என்பதும், ஜாக்கை கொலை செய்ய முயன்றவர்கள், முயல்பவர்கள் யார் என்பதும் திரைக்கதையை முன்னே நகர்த்திச் செல்கின்றன.

திரைப்படத்தின் கதையில் ஏற்கனவே சுவைத்த ஒன்றின் உணர்வை பெறுவது தவிர்க்க இயலாதது. படத்தைப் பார்த்து முடிப்பதற்கு அசாத்திய பொறுமையும் தேவை. ஒரிரு தருணங்களை தவிர்த்து படத்தில் பரபரபிற்கு இடமில்லை. இப்படியாகவே கதை நகரும், இப்படியாகவே கதை முடியும் என்பதை இலகுவாக ஊகித்து விட முடிகிறது. கொலைஞனின் வாழ்வில் எல்லாக் கணங்களும் பரபரப்பாக இருப்பதில்லை ஆனால் அக்கொலைஞன் தீராத சந்தேகத்துடன் தன் நாட்களை பாரமாக சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது என்பதை படம் இயல்பாக உணர்த்த முயல்கிறது.

அழிந்துபோகும் நிலையிலிருக்கும் ஒரு வகை பட்டாம் பூச்சியை குறியீடாகக் கொண்டு சில கவித்துவமான காட்சிகளை இயக்குனர் படைத்திருக்கிறார். [ஜாக்கை கூட பெண்கள் மிஸ்டர் பட்டர்ஃப்ளை என்று படத்தில் அழைக்கிறார்கள்]. விலைமாதுவிற்கும், ஜாக்கிற்குமிடையிலான காதல் காட்சிகள் மனதை வருடுகின்றன. ஆனால் க்ளுனி திரைப்படத்தை நீக்கமற நிறைத்திருந்தும் அவரால்கூட திரைப்படத்தை தூக்கி நிறுத்திட முடியவில்லை. க்ளூனியின் அதிதீவிர ரசிகர்களும், பொறுமையின் அழகை ரசிப்பவர்களும் இந்த வேகம் துறந்த அமெரிக்கனை ரசிக்க முடியும். [**]

ட்ரெயிலர்

20 comments:

 1. // க்ளூனியின் அதிதீவிர ரசிகர்களும், பொறுமையின் அழகை ரசிப்பவர்களும் இந்த வேகம் துறந்த அமெரிக்கனை ரசிக்க முடியும். //

  மொத்தத்துல வயசாயிடுச்சுன்னு சொல்லாம சொல்ல வரீங்க :))
  .

  ReplyDelete
 2. இந்த படத்த ஆக்ஷன் படம்னு என்கிட்டே தள்ளி விட்ட கடைக்காரன கொலை வெறியோட தேடிட்டு இருக்கேன். ஆனாலும் அநியாயத்துக்கு ஸ்லோ பாஸ்...

  ReplyDelete
 3. // ஆற்றங்கரை அருகில் துப்பாக்கியை சோதித்துப் பார்க்கும் தருணங்களில் மனது திக்திக் என்கிறது. //

  போட்டிருக்குற படத்துல வேற எதையோ சோதிக்கிற மாதிரி தெரியுது காதலரே ;-)

  துப்பாக்கின்னு எத சொல்லுறீங்க காதலரே :))
  .

  ReplyDelete
 4. காதலரே,
  நான் டிவிடியில் தான் முதலில் பார்த்தேன். பின்னர் தியேட்டரில் பார்க்கும்போது பல அழகியல் காட்சிகளை தணிக்கைதுரையினர் சற்று கூட ரசனையில்லாமல் வெட்டியிருப்பதை கண்டு மனம் நொந்து போனேன். நீங்கள் எப்படி?

  படம் கொஞ்சம் ஸ்லோ தான். ஆனால் பின்னணி இசை பல இடங்களில் திடுக்கிட வைத்தது.

  ReplyDelete
 5. படத்தில் டிடேய்லிங் அபாரமாக இருக்கும். அதுவும் துப்பாக்கி தயாரிக்கும்போது சரியாக கோவில் மணி அடிக்கும்போதே தன்னுடைய ஆயுதத்தை இரும்பினால் அடிப்பது போன்ற காட்சிகள் கதாநாயகனின் முதிர்ச்சியையும் நிதானத்தையும் காட்டுகின்றன. ஆனால் அதே நிதானம் சற்று ஓவராக நம்மை பிற்பகுதியில் சோதிக்கும்போது, நெளிய வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 6. வழமை போல அழகான தொகுப்பு.
  பாத்திட வேண்டியது தான்

  ReplyDelete
 7. கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு காமிக்ஸ் படித்திருக்கிறேன். ஆனால்,நாவல் எழுதப்பட்டது 1990 இல் என்று விக்கி சொல்லுகிறது. அந்த காமிக்ஸ் பெயர் The Killer.

  ஒரு ஈவு இரக்கம் இல்லாத கொலைகாரனின் ரத்தம் தோய்ந்த வாழ்கையைப் பற்றி அலசும் இக்கதை,அவன் வேட்டையாடப்படும் நேரம் வருகையில் என்ன நடக்கும் என்று சொல்லப் பார்க்கிறது.முகம் தெரியாத எதிரிக்கும்,மரண பயத்திற்கும் இடையில் தவிக்கும் கொலைகாரனது கதை இது.ஆனால்,பிரச்சனை இதோடு முடிவதில்லை.தான் சிறிது சிறிதாக தன் அறிவை இழந்து கொண்டு இருப்பதை உணர்கிறான் அந்தக் கொலைகாரன்.போதாதற்கு, அவனை தேடி அலையும் ஒரு போலிஸ் அதிகாரி..

  லிங்க் இதோ...

  http://en.wikipedia.org/wiki/The_Killer_%28comics%29

  //மொத்தத்துல வயசாயிடுச்சுன்னு சொல்லாம சொல்ல வரீங்க :))
  . //

  யோவ்,நீ ரொம்ப லேட்டுயா ! ;)

  ReplyDelete
 8. Here is the complete download link for the 10 books released so far.

  http://www.megaupload.com/?d=W1O3QGW9

  It has been a long while since I read it, so I don't remember much of it except for the fact that it was very grim and violent.Guys of tender heart,please avoid this. :)

  ReplyDelete
 9. அப்ப இது ஆக்சன் படம் இல்லையா..அப்ப நமக்கு வேணாம்பா...

  ReplyDelete
 10. மீ த லெவந்த் :-)

  ReplyDelete
 11. எனக்குக் க்ளூனியின் செக்ஸி சிரிப்பு பிடிக்கும். ஆனால் அதையே இன்னும் எத்தனை படங்களுக்குத்தான் பார்ப்பது :-)

  ReplyDelete
 12. புன்னகை மன்னன் கிஸ்ஸா வேணும்? அதுக்கெல்லாம் வேற ஒருத்தர் இருக்காரு :-)

  ReplyDelete
 13. Its C-L-O-O-N-E-Y CLOONEY. Michael Clayton, Up in the air கூட ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு தானே. ரொம்பவே அவரது ரசிகர்களால் அப்ரிஷியேட் பண்ணப்பட்டவை. அதுக்கு அவொர்ட் கிடைக்காதது எனக்கு ரொம்பவே கடுப்பு.

  சைக்கோத்தனமா யார் வேணுமானாலும் கத்தலாம். இயல்பான நடிப்பு எல்லோருக்கும் வருவதில்லை. பெரும்பாலான படங்களில் (Ocean's Series) ஓவர் ஆக்டிங் கொடுத்தாலும் தேவையான போது அதிசயிக்கத்தக்க வகையில் இயல்பாக நடிக்க க்ளுனியால் முடியும்.

  ReplyDelete
 14. @ The Scorp,

  //எனக்குக் க்ளூனியின் செக்ஸி சிரிப்பு பிடிக்கும். //

  ஹல்லோஓஓஓஓஓஓஒ. க்ளூனியோட செய்து விட்ட மாதிரி நேர்த்தியாக இருக்கும் நெத்தி சுருக்கத்தையே இன்னும் 10 படங்களில் பாக்கறதுக்கு ஆளுங்க இருக்கோம். இன்னும் வேணுமா?

  http://reap-and-quip.blogspot.com/2010/07/blog-post_08.html

  ReplyDelete
 15. நண்பர் சிபி, வயதுபோனால் ஆற்றங்கரையில் சகலவிதமான துப்பாக்கிகளையும் பரிசோதிக்க வேண்டிய நிலைமை உருவாக வாய்ப்புக்கள் உண்டு :) துப்பாக்கி பரிசோதனை நிபுணரான இலுமினாட்டி அவர்களை இது குறித்த மேலதிக சந்தேகங்களிற்கு தொடர்பு கொள்ளலாம் :)) முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் பாஸ்கி, ஆம் திரைப்படம் மிக மெதுவாகவே நகர்கிறது, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  விஸ்வா, இங்கு தணிக்கை குழு அழகியல் காட்சிகளில் பெரிதாக ஏதும் செய்வதில்லை. அழகியல் காட்சிகள் வரும் வேளையில் நானாக கண்ணை மூடிவிடுவேன் :)ஓவராக பொறுமையை சோதிப்பது என்பதில் இரு வேறு கருத்தில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் நிஸ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, உங்கள் கருத்து அப்படியே உங்களிற்கு பொருந்திப் போகும் விந்தையை அவதானியுங்கள் :) நீங்கள் பதிவு போட்டாலே அந்தக் காமிக்ஸை நீங்கள் படித்திருப்பீர்களா என்பது சந்தேகமே இருப்பினும் தகவலிற்கும், சுட்டிக்கும் மிக்க நன்றி.

  நண்பர் லக்கி, இது ஒரு மென் ஆக்‌ஷன் திரைப்படம். கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், க்ளுனியின் சிரிப்பெல்லாம் ஒரு சிரிப்பா. எங்கள் அருகில் க்ளுனி நெருங்க முடியுமா :) க்ளுனியை என்னுடன் குத்து டான்ஸ் ஆடவரும்படி சவால் விடுக்கிறேன் - முடியுமா- தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. புன்னகை மன்னனையும், த்ரிஸையும் இணைத்து இன்னும் புகையவில்லையே என்பது வியப்பாக இருக்கிறது. மன்மத அம்பின்முனை மழுங்கிவிட்டதா என்ன :)

  அனாமிகா, க்ளுனியின் நடிப்பு மீது எமக்கு மிகுந்த மதிப்புண்டு இருப்பினும் கிழட்டுப் பயல் க்ளுனி, உலக சிட்டுக்களை வலை போடாமல் பிடித்து விடுவதால் அவர் ஒழிக, ஒழிக என கூச்சல் போடுவதில் நான் முதலிடம் வகிக்க விரும்புகிறேன். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினால் போல் உங்கள் பதிவு வேறு :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. க்ளுனி.. ஒழிக. நெஸ்கபே விற்பனை கவிழ்க :)

  ReplyDelete
 16. //அழகியல் காட்சிகள் வரும் வேளையில் நானாக கண்ணை மூடிவிடுவேன்//

  ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம், இதுதான் எனக்கு நன்றாக தெரியுமே? நீங்கள் வேறு சொல்லவேண்டுமா? இருந்தாலும் அழகியல் காட்சி ஆரம்பிக்கும்போது உங்களுக்கு தெரியும், கண்களை மூடிககொள்வீர்கள். ஒக்கே, ஆனால் அந்த காட்சி முடிந்துவிட்டதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? ஒலியை கொண்டா?

  ReplyDelete
 17. நண்பர் விஸ்வா, இவ்வகையான அழகியல் காட்சிகளிற்கு என ஒரு இசை, மற்றும் சத்தங்கள் உண்டு அல்லவா :) அதை வைத்துதான்.

  ReplyDelete
 18. மிகவும் அருமை

  ReplyDelete