Thursday, April 8, 2010

இருளின் விளிம்பில்


போஸ்டன் காவல் துறையில் பணியாற்றும் டாம் கிராவெனின் [Mel Gibson] மகளான எமா, தன் தந்தையுடன் சில நாட்களை அமைதியாகக் கழிப்பதற்காக அவன் நகரிற்கு வருகை தருகிறாள். எமா அணு அறிவியலில் பட்டம் பெற்றவள். நோர்த்மோர் எனும் பெரும் நிறுவனத்தில் அவள் பணியாற்றி வருகிறாள்.

நகரின் பரபரப்பான ரயில் நிலையத்திற்கு சென்று தன் ஒரே ஒரு செல்ல மகளை வரவேற்கும் டாம், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு உணவுக்கடையில் சில பொருட்களை வாங்குவதற்கு செல்லும் டாம், கடையில் தான் வாங்கிய பொருட்களுடன் திரும்புகையில் எமா, காரின் வெளியே வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.

மிகுந்த அக்கறையுடன் தன் மகளை நோக்கி ஓடி வரும் டாம், அவளது வாந்தி குறித்து சந்தேகத்துடன் விசாரிக்கிறான். அழகான புன்னகை ஒன்றை மலர்த்தியவாறே தான் கர்ப்பமாகவில்லை என்று தன் தந்தையிடம் கூறிச் சிரிக்கிறாள் எமா.

தன் மகளுடன் வீடு வந்து சேரும் டாம், இரவு உணவைத் தயாரிக்கும் வேலைகளில் இறங்குகிறான். சமையலிற்கான காரியங்களைச் செய்தபடியே தன் மகளுடன் உரையாடலைத் தொடர்கிறான் டாம். தன் மகள் மீது உள்ளார்ந்த பாசம் கொண்ட தந்தை அவன். நேர்மையான மனிதன். எமாவின் தற்போதைய வாழ்வு குறித்து அவன் அதிகம் அறிந்திருக்கவில்லை எனிலும் அவள் மேல் அவன் கொண்ட அன்பு என்றுமே குறைந்ததில்லை.

இருவருமே மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கையில் எமா மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறாள். அவள் மூக்கிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பிக்கிறது. எமாவின் முகத்தில் பயம் அப்பிக் கொள்கிறது. தான் ஒரு மருத்துவரைப் உடனே பார்க்க வேண்டும் எனக் கதற ஆரம்பிக்கிறாள் எமா. தன் மகளை ஆதரவுடன் அணைத்துக் கொள்ளும் டாம், அவளை ஒரு மருத்துவரைக் காண அழைத்துச் செல்வதற்கு ஆயத்தமாகிறான்.

hors-de-controle-2010-16982-1035159286 தன் தந்தையுடன் வீட்டின் வாசல் கதவு நோக்கி அழுதபடியே செல்லும் எமா, தான் டாமிடம் ஒரு விடயத்தைக் கூற வேண்டுமென சொல்கிறாள். இதனைக் கேட்டபடியே தன் வீட்டின் வாசல் கதவைத் திறக்கிறான் டாம். வீட்டிற்கு வெளியே பலத்த மழை முழு வீச்சுடன் பெய்து கொண்டிருக்கிறது. வீட்டிற்கு வெளியே தரித்து நிற்கும் காரை நோக்கி அவர்கள் செல்ல விழைகையில் கிராவென் எனும் குரல் மழையின் ஓசையைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கிறது.

தன் பெயரைச் சொல்லி அழைத்ததால் திடுக்கிட்டு, குரல் வந்த திசை நோக்கித் திரும்புகிறான் டாம். கொட்டும் மழையில் துப்பாக்கியைக் கைகளில் ஏந்தியபடி, தலையில் குல்லாய் முகமூடி அணிந்த உருவம் ஒன்று அங்கு நிற்பதை அவன் காண்கிறான். அவன் அந்த உருவத்தைக் காணும் அக்கணமே அதன் கைகளில் இருந்த துப்பாக்கி வெடிக்கிறது.

துப்பாக்கியிலிருந்து சிறிது மழையில் நனைந்து பாய்ந்து வந்த குண்டு, கிராவெனிற்கு பதிலாக அவன் மகள் எமாவின் நெஞ்சில் ஆவேசமாக புதைகிறது. அந்தக் குண்டின் ஆவேச உதையில் வீட்டின் வாசல் கதவை நோக்கி தூக்கி எறியப்படுகிறாள் எமா. கீழே விழுந்த தன் அன்பு மகளைக் தன் கைகளில் ஏந்துகிறான் டாம், ஆனால் அவள் உயிர், அவள் உடலை மட்டும் டாமின் கரங்களில் தவழ விட்டுப், பெய்யும் மழையில் கரைந்து ஓடி விடுகிறது.

பொலிஸ் விசாரனைகள் ஆரம்பமாகின்றன. டாமைக் குறி வைத்த கொலைஞன் யாராக இருக்கலாம் எனும் விசாரணை மும்முரமாகிறது. தான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு செல்லும் டாம், தன்னைக் குறிவைத்த கொலைகாரன் குறித்த விசாரனையை தன் கைகளில் எடுத்துக் கொள்கிறான். தன் அன்பு மகளின் இழப்பு, அவனை வெறுமையின் காதலை அனுபவிக்க செய்கிறது. உடைந்த உணர்வுகளுடன் தன் அன்பு மகளின் இறுதிக் காரியங்களை செய்து முடிக்கிறான் டாம். தன் மகளின் அஸ்தியை அவள் சிறுமியாக இருந்தபோது தன்னுடன் விளையாடிக் களித்த கடற்கரையொன்றின் கவலையற்ற அலைகளில் அவளின் சிரிப்புக்களைக் கேட்டவாறே கரைக்கிறான் அவன்.

hors-de-controle-2010-16982-1155037322 மனதில் வேதனையுடன் தன் வீட்டில் எமா விட்டுச் சென்ற பொருட்களை ஆராய்கிறான் டாம். அந்தத் தேடலில் எமாவின் உடமைகளினுள் ஒரு கைத்துப்பாக்கியும் இருப்பதைக் காணும் டாம் மனதில் சந்தேகம் முளைவிட ஆரம்பிக்கிறது. அவன் கண்டெடுத்த கைத்துப்பாக்கி மீதான தேடலில் டாம், எமாவின் நண்பர்களை சந்திக்கிறான். அவர்களை விசாரிக்கிறான். எமா வாழ்ந்த வீட்டிற்கு செல்கிறான் அங்கு அவள் வீட்டில் திருடு போயிருக்கிறது என்பதைக் கண்டு கொள்கிறான். எமா பணிபுரிந்த நோர்த்மோர் நிறுவனத்திலும் தன் விசாரணைகளைத் தொடர்கிறான் அவன். அவன் தேடல்களும், விசாரணைகளும் மழை இரவில் கொலைகாரன் குறிவைத்தது தன்னை அல்ல என்பதை அவனிற்கு அறிவிக்க ஆரம்பிக்கின்றன.

தன் மகள் எமாவின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்பதை அறிந்து கொள்கிறான் டாம். அந்தக் கொலைக்கான காரணம் தன் மகள் தெரிந்து கொண்ட ஒரு பயங்கரமான ரகசியம் என்பதையும் அவன் தெரிந்து கொள்கிறான். தன் மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த வலிமையான சில சக்திகளை எவ்வகையிலாவது வேரறுக்க தயாராகிறான் அவன்..

மெல் கிப்சனை ஹீரோவாக வெள்ளித்திரையில் பார்த்து ஏறக்குறைய ஏழு வருடங்கள் ஓடி விட்டது. தன் மீள் வருகையை Edge of Darkness திரைப்படத்தின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் அவர். 1985களில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, இதே பெயரைக் கொண்ட ஒரு தொலைக்காட்சித் தொடரினைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் Martin Campbell இயக்கியிருக்கிறார்.

அமெரிக்க தேச பாதுகாப்பு, ரகசிய அணு ஆயுத உற்பத்தி, ரகசியங்களை தெரிந்து கொண்டவர்களை பக்காவாக முடித்துக் கட்டும் வலிமையான சக்திகள். ரகசிய ஏஜண்ட், தன் மகளின் மரணத்திற்காக வஞ்சம் தீர்க்க துடிக்கும் உறுதியான ஒரு தந்தை என ஒரு த்ரில்லரிற்குரிய அனைத்து மூலங்களையும் திரைக்கதை கொண்டிருக்கிறது. ஆனால் அதனை விறுவிறுப்பாக பரிமாறத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

hors-de-controle-2010-16982-106004785 படத்தில் ஆரம்பக் காட்சிகளில் ரசிகன் எதிர்பார்க்கும், மர்ம கொழுக்கி, கொலை செய்யப்படும் மகள், உறுதியாக விசாரணையை ஆரம்பிக்கும் தந்தை போன்ற அம்சங்கள் விரைவாக வந்து சேர்கின்றன. தன் மகளின் மரணத்தின் பின் டாம் ஆரம்பிக்கும் அந்த விசாரணை ஜவ்வாக நகர ஆரம்பித்து விடுகிறது.

திரைக்கதை மெல் கிப்சனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்கிறது. நாங்களும் அவரைத் தொடர்கிறோம். ஆனால் நாங்கள் ரசிகர்கள், தன் மகளைக் கொன்றவர்களை வஞ்சத்துடன் தேடி அலையும் தந்தையின் பொறுமை எங்களிற்கு இல்லை என்பதை திரைக்கதை ஏனோ மறந்து விடுகிறது. பார்வையாளர்களை அவர்கள் அறியாமலேயே கொட்டாவி உற்பத்தி ஆலைகள் ஆக்குவதில் திரைக்கதை வெற்றி காண்கிறது.

திரைப்படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகளில் தரப்படும் தகவல்களிலிருந்தே ஒரு சாதாரண பார்வையாளன் மர்மம் என்ன என்பதை சற்று ஊகித்து விட முடிகிறது. அம்மர்மமானது பின் பலமான பெரு நிறுவன, அரசியல் சக்திகளுடன் தொடர்பு படுத்தப்படும்போது பரபரப்பாக நகர்வதற்கு பதிலாக நத்தைகளை ஓட்டப் போட்டிக்கு அழைக்கிறது திரைப்படம்.

மெல் கிப்சனை நம்பி, அவரை மட்டுமே நம்பி! திரைப்படத்தினை அவர் மேல் சுமத்தி விட்டிருக்கிறார்கள். அவரும் பாசம் கொண்ட உறுதியான ஒரு தந்தையாக , நேர்மையான அதிகாரியாக, நல்ல மனிதனாக தன்னால் இயன்றதை செய்திருக்கிறார். ஆனால் மெல் கிப்சனை இப்படி நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே அவரின் ஆட்டம், முன்பு பார்த்த ஒரு பாடலை ரீ மிக்ஸ்ஸில் மீண்டும் பார்க்கும் உணர்வைத் தருகிறது. ஆனால் ஆர்ப்பாட்டமில்லாத கிளாசிக் ரீ மிக்ஸ்.

hors-de-controle-2010-16982-1797487588 தன்னை நோக்கி பாய்ந்து வரும் காரை, தைரியமாக நேராக எதிர் கொண்டு, அதன் முன் கண்ணாடிகள், அதன் சாரதி, அதன் முன் சக்கரம் என்பவற்றில் குண்டுகள் பாய்ச்சும் காட்சி இப்படத்திலும் உண்டு. அந்தக் கார் புதர் செடி கொடிகளைத் தாண்டி பாய்ந்து ஏரியில் விழுவதே படத்தின் குறிப்பிடதக்க ஆக்‌ஷன் என்றால் படத்தின் மிகுதி ஆக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

டாம், தன் கற்பனையில் தன் மகளின் சிறு வயது நினைவுகளை மீட்டும் தருணங்கள் மட்டுமே திரைப்படத்தின் மனதில் நிற்கும் காட்சிகளாகின்றன. தன் மகளின் இறப்பின் பின் மெல் கிப்சன் கடுமையாக வருந்தி பூங்கா, கட்டில், என மெளனமாக அமர்ந்திருப்பது தொடர்ந்து வரும் போது சலிப்பைத் தருகிறது.

Edge of Darkness, ரசிகர்களை இருக்கைகளின் விளிம்புகளில் தொங்க வைப்பதற்கு பதிலாக, இந்தப் படம் எப்போது முடியும் எனக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வைக்கும் படமாக அமைந்துவிடுகிறது. [*]


ட்ரெயிலர்

29 comments:

  1. காதலரின் இந்த சிறப்பு பதிவில் முதலில் வந்து கருத்து கூறுவது - நாந்தான்.

    ReplyDelete
  2. //விஸ்வா, Edge of Darknessக்கு ஒரு ஸ்டார்தான் வழங்கியிருக்கிறேன். ஆம் பதிவு தயாராகி 3 வாரங்களாக தூங்கிக் கொண்டிருக்கிறது//

    தங்களின் பழைய பதிவில் கூறி இருந்தது இன்னமும் நினைவு கொண்டிருப்பதால் நான் இந்த படத்தினை இன்னமும் பார்க்கும் முடிவில் இல்லை.

    ReplyDelete
  3. //மெல் கிப்சனை நம்பி, அவரை மட்டுமே நம்பி//
    நானும் அவரை நம்பித்தான் உங்களின் பதிவை படிக்க தொடங்கினேன் . சற்று ஏமாற்றம் தான்
    இருப்பினும் அவருக்கா பார்க்கத்தான் வேண்டும் . பகிர்வுக்கும் நேர்மையான விமர்சனத்திற்க்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  4. கதையைப் படித்த உடன் இது கேப்டனுக்கு அல்லது சுப்ரீம் ஸ்டாருக்கு ஏற்ற கதை என்று தோன்றுகிறது!

    அவர்களது சமீபத்திய படங்களது கதைகளுக்கும் இதற்கும் மைல்டாக தொடர்புள்ளன (மகளுக்காக வில்லன்களுடன் மோதும் தந்தை)!

    ஆனால் வேகத்தில் கண்டிப்பாக இதை விட நம்ம கேப்டன் படம் சிறப்பாக இருக்கும்!

    என்ன நான் சொல்றது?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. செம மொக்கை படம் காதலரே. நானும் இப்ப எதுனாச்சும் நல்லா பண்ணுவானுங்க, அடுத்த சீன் நல்லா இருக்கும் என எதிர்பார்த்தேன். ஊஹீம்... வேலைக்கே ஆகலை. படம் பார்த்ததும் செம தூக்கம். இருந்தாலும், இந்த விமர்சனம் “இந்த படத்தை வேற யாரும் பார்த்துராதீங்கோ” என்ற செய்தியை கொண்டிருப்பதை பாராட்டுகிறேன்.

    இந்த படத்துக்கு “From Paris With Love" எம்புட்டோ பரவாயில்லை...

    ReplyDelete
  6. காதலரே ,
    நானும் இந்த படத்தை பார்த்தேன் ... மெல்கிப்சன் படம் ..பழைய கதை தான் என்றாலும் எதாவது வித்தியாசமாக இருக்கும் என நினைத்தேன் .எப்படா முடியும் எனஆகிவிட்டது

    ReplyDelete
  7. ஏம்பா,

    நம்ம ஜக்குபாய் படத்தின் கதையை சற்று மாற்றி எடுத்த படம் இதுதானே? நம்ம சுப்ரீம் ஸ்டார் இன்டர்நேஷனல் கோர்ட்டில் ஏதோ கேஸ் போட்டது கூட இதற்குத்தானே? அந்த படம் ரிலீஸ் ஆகும் முன் பிரின்ட் வந்து அதனை பார்த்து தானே இவர்கள் காப்பி அடித்து இந்த படத்தை எடுத்தார்கள்?

    ReplyDelete
  8. படம் பரவாயில்லை

    ReplyDelete
  9. //Edge of Darkness, ரசிகர்களை இருக்கைகளின் விளிம்புகளில் தொங்க வைப்பதற்கு பதிலாக, இந்தப் படம் எப்போது முடியும் எனக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வைக்கும் படமாக அமைந்துவிடுகிறது//
    ரிப்பீட்டு...இந்த மாதிரிப் படங்கள் நிறைய பாத்தாச்சு...

    ReplyDelete
  10. //ஆனால் அவள் உயிர், அவள் உடலை மட்டும் டாமின் கரங்களில் தவழ விட்டுப், பெய்யும் மழையில் கரைந்து ஓடி விடுகிறது.//

    Enakkum konjam intha mathiri elutha sollik kodunga thala...
    Naanum ennannavo try pandren....onnum uruppadamattenguthu... :)

    ReplyDelete
  11. விஸ்வா, வேறு நல்ல திரைப்படமாக பார்த்து நேரத்தைக் கழியுங்கள், முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன், உங்களிற்கு உண்மையிலேயே காண்பதற்கு வேறு படம் இல்லையெனில் இதனைப் பாருங்கள், நேரம் வீணாகும் என்பது என் தாழ்மையான கருத்து. தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    தலைவர் அவர்களே, மீசைக்கார நாட்டாமை போல் சரியான தீர்ப்பை வழங்கி விட்டீர்கள், கேப்டன் படம் என்றாலே வேகம்தானே, ஸ்பீட் படத்தை தமிழில் உருவாக்கினால் கெனு ரீவ்ஸ் பாத்திரத்தில் நடிக்க எங்கள் அன்புக் கேப்டனை விட்டால் யார் இருக்கிறார்கள். தீர்ப்புக்கு நன்றி தலைவரே.

    பிரசன்னா, நீங்கள் கூறுவது உண்மையே.சரியான இழுவையான படம். தூங்குவதற்கு மாத்திரைகளிற்குப் பதிலாக மருத்துவர்கள் இப்படத்தை சிபாரிசு செய்திடலாம் தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    லக்கி லிமட், மெல் கிப்சனிற்காகத்தான் பெரும்பாலானோர் இத்திரைப்படத்தை பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஏமாற்றம்தான் மிச்சம். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ஒலக காமிக்ஸ் ரசிகரே, நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த தகவலில் உண்மை வெளிப்பட்டிருக்கிறது, உங்கள் பணி தொடரட்டும், உண்மையை வெளிப்படுத்திய துணிச்சலிற்கு நன்றி நண்பரே.

    மொக்கை மாமா, நல்ல பதிவு உங்களிற்கு அலுக்கவேஅலுக்காதா :))

    நண்பர் உதயன், திரைப்படம் உங்களைச் சற்றுக் கவர்ந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். மெல் கிப்சனின் Mad Max 1,2,3 மற்றும் Lethal Weapon 1,2,3 ஆகிய ஆக்‌ஷன் படங்களுடன் இத்திரைப்படத்தை சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்களேன். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் பேபி ஆனந்தன், ஆம் நண்பரே ஹாலிவூட்டிலும் நல்ல ஆக்‌ஷன் கதைகளிற்கு பஞ்சம் போலும் தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் இலுமினாட்டி, நீங்கள் நன்றாகத்தானே எழுதி வருகிறீர்கள், அனுபவம் உங்கள் எழுத்துக்களை மேலும் மெருகூட்டும். இருந்து பாருங்கள் உங்கள் வரிகளில் மயங்கி பெண் ரசிகைகள் உங்களை நோக்கி படையெடுக்கும் காலம் விரைவில் வரும் :) தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. // பாருங்கள் உங்கள் வரிகளில் மயங்கி பெண் ரசிகைகள் உங்களை நோக்கி படையெடுக்கும் காலம் விரைவில் வரும் :)//

    அது ஏன் தல உங்களுக்கு என் மேல இவ்ளோ காண்டு?
    உருபட்ரதுக்கு வழி கேட்டா இப்படி அதல பாதாளத்துல விழுறதுக்கு வழி சொல்றிங்க....
    எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.கொலை முயற்சி பண்ற அளவுக்கு நான் வொர்த் இல்ல தல ...

    ReplyDelete
  13. காதலரே - பதிவை எப்பொழுதோ படித்து விட்டாலும், பின்னூட்டம் மற்றும் வோட்டுப் போட நேரம் இப்பொழுதுதான் கிடைத்தது . . இப்படத்தின் விளம்பரம் வெளியான பொழுது முதல் இதனை ஆவலோடு எதிர்பார்த்த ரசிகர்களில் அடியேனும் ஒருவன் . . ஆனால், இப்படத்தின் ரிசல்ட் குறித்து மிகவும் வருந்தினேன் . .எனக்கு விண்டேஜ் ஆக்‌ஷன் படங்கள் மீது தீராத காதல் உண்டு . .தொண்ணூறுகளில் வெளியான அதிரடிப் படங்கள் . . எனவே, அடுத்தது தலைவரின் ‘எக்ஸ்பெண்டபிள்ஸ்’ ஐ மிக மிக ஆவல் மற்றும் வெறியோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன் . . தலைவன் இருக்கின்றான் !! :-)

    ReplyDelete
  14. //தலைவன் இருக்கின்றான்//

    தலைவர் கலைஞரை பற்றி ஏற்கனவே அழகிரி அவர்கள் பேசியது போதாதா? நீங்கள் வேறா? :)

    ஒரு கிசுகிசு: நம்முடைய காமிக்ஸ் பதிவர் ஒருவர் அரசியலில் குதிக்கின்றாராம்.

    ReplyDelete
  15. நண்பர் இலுமினாட்டி, பாதாளம்தான் எங்களிற்கு சொர்க்கம் :))

    நண்பர் கருந்தேள், தலைவரின் ஃபர்ஸ்ட் பிளட்டை மறக்க முடியுமா இல்லை ராம்போவைத்தான் வெறுக்க முடியுமா. இளம் வயது, மீசை பூக்கத் தொடங்கியிருந்தது, கிழவிகளிற்கும் காதல் கடிதம் தர மனம் துடித்த காலம், பிரீடேட்டர், டெர்மினேட்டர், ராக்கி, ஜாக்கி சானின் குங்ஃபூ குத்துக்கள், சூரசம்ஹாரம், அக்னி நட்சத்திரம், வருஷம் 16, அமெரிக்கன் நின்ஜா[ அந்த கோக்கா கோலா காட்சி வாவ்] சக் நொரிஸின் மிஸ்ஸிங் இன் ஆக்‌ஷன்,டெல்டா ஃபார்ஸ், குருஜி க்ளிண்ட் இஸ்வூட்டின் இன்ஸ்பெக்டர் ஹாரி அத்து மீறல்கள், இடையிடையே கராத்தே மன்னன் ப்ரூஸ் லீயின் வே ஆஃப் த ட்ராகன், எண்டர் த ட்ராகன், கேம் ஆஃப் த டெத்கள், மெல்லின் மேட் மாக்ஸ், அசத்தலான லெதல் வெப்பன், டால்ஃப் லாண்டர்கனின் பனிஷர், ரெட் ஸ்கார்பியோன், மொட்டை மாமா ஃப்ரூஸ் வில்லிஸின் டை ஹார்ட் தொடர்கள், கெவின் காஸ்ட்னரின் பாடி கார்ட், ஸ்டீவன் சீகலின் நிக்கோ அதனை தொடர்ந்த அவரின் அகிடோ ஆக்‌ஷன்கள் என்ன ஒரு காலம் அது, ஆனால் இன்று ஆக்‌ஷன் படங்களைத் தேட வேண்டியுள்ளது, எக்ஸ்பெண்டபிள்ஸ் எங்கள் பசியை ஆற்றும் என நம்புவோம், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. விஸ்வா,

    என்றும் பதினாறான உங்களிற்கு ஏன் இந்த அரசியல், அந்த காமிக்ஸ் பதிவர் யார் என்று எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேனே :))

    ReplyDelete
  17. நண்பர் கருந்தேள், என் அன்புக் கண்மணி சில்வியா கிறிஸ்டலின் இம்மானுவல், லேடி சேட்டர்லிஸ் லவ்வர், த பிக் பெட், மட்டா ஹரி ஆகிய அமர காவியங்களையும் மறக்க முடியாது. ஹிஹிஹி

    ReplyDelete
  18. கருந்தேள் மற்றும் காதலரே,

    எக்ஸ்பெண்டபிள்ஸ் படம் பற்றி உங்களின் பின்னுட்டம் மூலமே தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு படம் ஸ்டால்லன் மூலம் வரும் என்று நான் பல வருடமாக காத்து இருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை, ரேம்போ படம் இரண்டாம் பாகத்தில் ஸ்டால்லன் அந்த வியட்நாம் பெண்ணிடம் கூறும் வசனம் தான் இந்த படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.

    அந்த பெண் கேட்பார், "பல ராணுவ வீர்கள் இருக்கும்போது , தனியாளாக ஏன் உங்களை அனுப்பினார்கள்?".

    ஸ்டால்லன்: "ஏனென்றால், நான் எக்ஸ்பெண்டபிள்".

    பெண்:" அப்படி என்றால்?".

    ஸ்டால்லன்: "எக்ஸ்பெண்டபிள் என்றால், When you invite someone to your party and if that person does not turn up, you just do not miss him".

    Wow.

    ReplyDelete
  19. //விஸ்வா,

    என்றும் பதினாறான உங்களிற்கு ஏன் இந்த அரசியல், அந்த காமிக்ஸ் பதிவர் யார் என்று எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேனே ://

    அப்போ, விஸ்வாதான் அரசியல்ல குதிக்கிறாரா?

    ReplyDelete
  20. //கிழவிகளிற்கும் காதல் கடிதம் தர மனம் துடித்த காலம்//

    என்ன கொடுமை? இப்போதும் அப்படியாமே? ஸ்டீல் பூரிக்கட்டைகள் ஒவ்வொரு மாதமும் புதிதாக வாங்கப்படுகிறதாமே?

    ReplyDelete
  21. //மொக்கை மாமா, நல்ல பதிவு உங்களிற்கு அலுக்கவேஅலுக்காதா//

    ரிபீட்டே

    ReplyDelete
  22. இந்த படத்தில் ஸ்டீவன் சிகால் இல்லாதது வருத்தமே. தயாரிப்பாளர் காரணமாக அவர் நடிக்க வில்லையாம்.

    மொக்கையான புது படங்களால் மனம் நொந்து சென்றவாரம் கூட ஸ்டீவன் சிகாலின் அண்டர் சீஜ் இரண்டு பாகங்களையும் பார்த்து பொழுதை போக்கினேன்.

    ReplyDelete
  23. ஒலக காமிக்ஸ் ரசிகரே, எக்ஸ்பெண்டபிள் படத்தின் தலைப்புக் குறித்த தங்கள் கணிப்பு சரியாகக்கூட இருக்கலாம். நீங்கள் வழங்கியிருக்கும் அந்த வசனம் உண்மையிலேயே வாவ்தான். விஸ்வாவை வம்பிற்கு ஏன் இழுக்கிறீர்கள், குஷ்பு காமிக்ஸ் சர்ச்சையில் அவர் பெற்ற அனுபவம் போதாதா :))ஒரு கட்டத்தில் அடி வாங்கி வாங்கி உடம்பு பழகிவிடும், தமிழ் படத்தில் ஹீரோக்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் ஸ்டண்ட் நடிகர்கள்போல் அப்பால் உருண்டு எங்கள் காரியத்தைப் பார்க்க வேண்டியதுதான், ஒலக காமிக்ஸ் ரசிகரே பழைய சட்டியில்தான் சுவையான கறி சமைக்க முடியும் என்ற பொன்மொழியை மறந்து விடாதீர்கள், நண்பரே ஸ்டீவன் சீகலை இன்று திரையுலகம் மறந்திருக்கலாம் ஆனால் அவரால் சுவாரஸ்யமாக பொழுதைக் கழித்த ரசிகர்களாகிய எங்கள் நினைவில் அவர் இருப்பார். கருத்துக் கணைகளிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  24. படம் அவ்வளவு நல்லாயில்லாவிட்டாலும் சிலருடைய எழுத்து படத்தை உடனடியாக பார்க்காவிட்டாலும் தரவிறக்கவாவது நம்மை தள்ளும்....அந்தவகை எழுத்தாளர் பட்டியலில் தாங்களும் உண்டு.நன்றி.

    ReplyDelete
  25. ஆஹா . . பின்னி விட்டீர்கள் காதலரே . . உங்களது லிஸ்ட் படிக்கையில், நான் நிஜமாகவே மீசை முளைக்காத அந்த இளம் பருவத்துக்குச் சென்று விட்டேன் . . . சூப்பர் !!

    அப்புறம், ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு நன்றி . . அந்த வசனத்தை நினைவு படுத்தியமைக்கு . .

    ஸ்டீவன் சீகல் - சத்தியமாக சில வருடங்களுக்கு முன் வரை எனக்கு மிக மிகப் பிடித்த ஹாலிவுட் நடிகர். . அவரது அலட்டிக்கொள்ளாத கராத்தே சண்டைகளுக்கு நான் அடிமை . . என்ன ஒரு பெர்சனாலிட்டி !! அவர் இப்பொழுது பாடல்கள் பாடிக்கொண்டு உலகை வலம் வருகிறார். . அவ்வப்போது நடித்துக் கொண்டு . .

    இன்னமும் நாமெல்லாம் அதிரடிப் படங்களின் ரசிகர்கள் தான் என்று மறுபடி நன்றாகத் தெரிகிறது . . :-) நல்லது தான் . .

    ReplyDelete
  26. //விஸ்வாவை வம்பிற்கு ஏன் இழுக்கிறீர்கள், குஷ்பு காமிக்ஸ் சர்ச்சையில் அவர் பெற்ற அனுபவம் போதாதா ://

    ஒரு சிறுவனை, பால் மனம் மாறாத பாலகனை பற்றி இப்படியெல்லாம் எழுதுவதா?

    ReplyDelete
  27. நண்பர் மயில்ராவணன், ஊக்கம் தரும் உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கருந்தேள், வாத்தியார் படங்கள் பார்த்துதான் சினிமாப்படங்கள் மீது என் ஆர்வம் வளர்ந்தது. நல்ல ஒரு ஆக்‌ஷன் படத்திற்கு நான் உங்களைப் போலவே என்றும் ரசிகன். மீள் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, உங்கள் கருத்திற்குப் பதிலளிக்க தலைவரின் புதிய பதிவில் கருத்திட்டிருக்கும் திரு கவுண்டமணி அவர்களை அன்புடன் அழைக்கிறேன். எக்ஸ்பெண்டபிளை தமிழில் எடுத்தால் யார் யாரையெல்லாம் நடிகர்களாக தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெரியப்படுத்துங்கள். இயக்கம் பேரரசு அல்லது விஜய டி ராஜேந்தர்.

    ReplyDelete