Wednesday, April 28, 2010

இரும்பால் செய்த சுறா


அமெரிக்காவின் புகழ் பெற்ற தொழிலதிபரும், இரும்பு மனிதன் எனும் புதிய ஆயுத தொழில் நுட்பத்தின் கண்டு பிடிப்பாளருமான டோனி ஸ்டார்க் [Robert Downey Jr], தன் அசகாயச் செயல்களால் கிடைத்த புகழ் சாரலில் திளைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் அமெரிக்க அரசோ, ஸ்டார்க்கின் இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை தேச நலன் கருதி அமெரிக்க அரசிற்கு ஸ்டார்க் வழங்க வேண்டும் என கிடுக்கிப் பிடி போடுகிறது.

இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை அமெரிக்க அரசிற்கு தர மறுத்து விடும் ஸ்டார்க், போனால் போகிறதென்று அமெரிக்க அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்நிலையில் ஸ்டார்க் உயிர் வாழ்வதற்காக தன் உடலில் பொருத்தியிருக்கும் கருவியின் பேட்டரியே அவன் உயிரிற்கு பேராபத்தாக அமைய ஆரம்பிக்கிறது.

ஸ்டார்க்கின் ரத்தத்தில் பலேடியம் எனும் தனிமத்தின் நச்சுத்தன்மையின் அளவு இதனால் நாள்தோறும் அதிகரிக்கிறது. தான் உயிர் வாழக்கூடிய நாட்கள் இனி அதிகமில்லை என்பதனை உணர்ந்து கொள்ளும் ஸ்டார்க், தனது கம்பனியின் முழுப் பொறுப்புகளையும் தன் காரியதரிசி பெப்பரிடம் [Gwyneth Paltrow] ஒப்படைத்து விட்டு தனக்கு எஞ்சியிருக்கும் நாட்களை உல்லாசமாகக் கழிப்பதற்குத் தயாரகிறான். தனது உடல்நிலை சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது எனும் தகவலை ஸ்டார்க் பிறர் அறியாது ரகசியமாக வைத்துக் கொள்கிறான்.

தன் வாழ்வினை உல்லாசமாக கழிப்பதன் ஆரம்பமாக, மொனாக்கோவில் நடைபெறவிருக்கும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக மொனாக்கோவிற்கு பயணமாகிறான் ஸ்டார்க். தனக்கு புதிய உதவியாளராக நத்தாலி [Scarlett Johansson] எனும் இளம் பெண்ணையும் அவன் பணிக்கமர்த்திக் கொள்கிறான்.

iron-man-2-2010-17000-749832716 இக்காலப் பகுதியில் ரஷ்யாவின் ஒரு மூலையில், வசதிகள் அற்ற வீடொன்றில், தன் அன்பு மகன் இவானின் [Mickey Rourke] பராமரிப்பில் மரணப் படுக்கையில் கிடக்கிறார் விஞ்ஞானி அன்ரன் வான்கோ. அமெரிக்க தேசமே கொண்டாடும் இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பத்தில் தன் பங்கும் உண்டு என்பதை வேதனையுடன் நினைவு கூர்ந்தவாறே தன் மகனின் கைகளில் தன் உயிரை விடுகிறார் அவர்.

அன்ரனின் மகனான இவான் ஒரு பெளதிக விஞ்ஞானி. தன் தந்தையின் மரணத்தின் பின், ஸ்டார்க் கம்பனி தன் தந்தைக்கு இழைத்த அநீதிக்காக, புகழ் பெற்ற இரும்பு மனிதன் ஸ்டார்க்கிற்கு ஒரு பாடம் புகட்ட விரும்புகிறான் இவான். இதற்காக தன் தந்தை விட்டுச் சென்ற இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பத் தகவல்களைப் பயன்படுத்தி, தன்னிடமிருக்கும் குறைவான வசதிகளுடன் புதியதொரு ஆயுதத்தை உருவாக்க ஆரம்பிக்கிறான் அவன். தன் தந்தை இறந்து ஆறு மாதங்களின் பின்பாக, ஸ்டார்க் கலந்து கொள்ளவிருக்கும் அதே மொனாக்கோ கார் ரேஸ் திடலிற்கு தன் புதிய ஆயுதம் சகிதம் வந்து சேர்கிறான் அவன்.

மொனாக்கோ கார் பந்தயத் திடலில் ரேஸ் ஆரம்பமாகிறது. வேகமெடுத்துப் பாய்கின்றன கார்கள். இவ்வேளையில் கார்கள் ஓடும் திடலில் தன் கால்களை உறுதியுடன் எடுத்து வைக்கிறான் இவான். இரும்பு மனிதன் தொழில் நுட்பம் சேர்த்து உருவாக்கப்பட்ட சாட்டை போன்ற அமைப்புக்களால் தன் முன் பாய்ந்து வரும் கார்களை அடித்து துண்டாக்க ஆரம்பிக்கிறான் இவான். அவன் துண்டாக்கிய கார்களில் இரும்பு மனிதன் ஸ்டார்க்கின் பந்தயக் காரும் அடக்கம்.

iron-man-2-2010-17000-1547120092 பந்தயத் திடலில், பலம் பொருந்திய இவானிடம் மிகவும் வகையாக மாட்டிக் கொள்கிறான் ஸ்டார்க், அதிஷ்டவசமாக ஸ்டார்க்கின் நண்பர்கள் உதவியுடன் தன் இரும்பு மனிதன் கவசத்தை அணிந்து இவானைக் கார் பந்தயத் திடலில் இடம்பெறும் மோதலில் வீழ்த்துகிறான் அவன். இதன் பின் மொனாக்கோ பொலிஸ் இவானைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது.

இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பம் உலகில் எவரிடமும் இல்லை எனக் கூறி வந்த ஸ்டார்க்கின் முகத்தில், கார் பந்தயத் திடலில் நிகழ்ந்த மோதல் கரி பூசி விடுகிறது. இவான் சிறையில் இருக்கிறான் எனும் நம்பிக்கையில் தனக்கு எஞ்சியிருக்கும் நாட்களை ஜாலியாக, பொறுப்பற்ற வகையில் கழிக்கிறான் ஸ்டார்க். இது அவனிடமிருந்து ஆதரவை எதிர்பார்த்திருந்த அமெரிக்க ராணுவத்திற்கு திருப்தி தருவதாக இல்லை. அமெரிக்க ராணுவ அதிகாரியும், ஸ்டார்க்கின் நண்பனுமான கேணல் ரோடி[Don Cheadle] இதனால் ஸ்டார்க் மீது கோபம் கொள்கிறான்.

இவ்வேளையில் ஸ்டார்க் கம்பனிக்கு போட்டியாக இயங்கி வரும் கம்பனியின் தலைவனான ஜஸ்டின் ஹாமர் [Sam Rockwell], மொனாக்கோ சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவானைத் தன் முயற்சிகளால் சிறையிலிருந்து தப்பிக்க வைக்கிறான். இவானின் அறிவை மெச்சும் ஜஸ்டின், ஸ்டார்க்கின் இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை உலகம் குப்பையில் தூக்கி எறிந்திட வைக்கும் வகையில் புதிய ஆயுதக் கவசங்களை தனக்காக இவான் உருவாக்கித் தர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறான். இதற்கு மகிழ்ச்சியுடன் உடன்படுகிறான் இவான். அவன் மனதில் மறைந்திருக்கிறது ஒரு திட்டம். ஸ்டார்க் கம்பனியை மட்டுமல்ல ஸ்டார்க்கின் இரும்பு மனிதனையே பொடிப்பொடியாக்கும் திட்டமது…..

iron-man-2-2010-17000-1423148502 அதிருப்தியுற்ற அமெரிக்க ராணுவம் என்ன செய்தது? தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கின் கதி என்ன? இவானின் பயங்கரமான திட்டத்தை ஸ்டார்க்கால் முறியடிக்க முடிந்ததா? இக்கேள்விகளிற்கு விடையளிக்கிறது Iron Man 2 திரைப்படத்தின் மீதிக் கதை….. ஆனால்!! கடவுளே அது ஒரு நிறைவான சித்திரவதை!

மார்வல் காமிக்ஸ் நாயகர்களில் ஸ்பைடர் மேனைத் தவிர என் மனதைக் கவர்ந்தவர்கள் வேறு யாருமில்லை என்றிருந்தபோது, இரு வருடங்களிற்கு முன்பு வெளியாகிய Iron Man திரைப்படத்தின் வழியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேன் பாத்திரம் என்னைக் கவர்ந்திழுத்தது. அத்திரைப்படத்தின் அபத்தமான உச்சக்கட்டக் காட்சிகளைத் தவிர்த்து அதனை என்னால் ரசிக்க கூடியதாகவிருந்தது.

அந்த நம்பிக்கையிலேயே அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தைரியமாக காணச் சென்றேன். என் நம்பிக்கையின் மேல் இவானின் சாட்டை அடிகள் போல் இரக்கமேயில்லாமல் இடிகள் வந்து வீழ்ந்தன. ஆரம்பம் அமர்க்களம்தான். அமெரிக்க அரசைச் சீண்டும் ஸ்டார்க், தன் தந்தைக்காக பழி வாங்கத் துடிக்கும் இவான், இவற்றுடன் சேர்ந்து AC DCயின் பாடல்கள் என எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது படம்.

அந்த எதிர்பார்புக்கள் எல்லாம் படத்தில் இடிந்து விழும் கட்டிடங்களுடன் சேர்ந்து நொருங்கிப்போய் விடுகிறது. மொனாக்கோ சிறையிலிருந்து இவான் காப்பாற்றப்பட்டதிலிருந்து, திரைப்படம் முடியும் வரை ரசிகர்கள் திரையில் சந்திக்கும் தருணங்கள் பெருத்த ஏமாற்றத்தை இரும்பை ஒத்த உறுதியுடன் வழங்கிச் செல்கின்றன.

iron-man-2-2010-17000-1664946236 ஜானி ஸ்டார்க் பாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர், படு ஸ்டைலாக பேசுகிறார், குடிக்கிறார், இரும்பு மனிதன் உடையில் நடனமாடுகிறார் பறந்து பறந்து சண்டை போடுகிறார். முதல் பாகத்தில் பின்பற்றிய பாணியை அச்சுப் பிசகாமல் தொடர்கிறார். தன் தந்தை தனக்கு விட்டுச் சென்ற செய்தியைக் கேட்டு வீறு கொண்டு எழுந்து புதிய தனிமம் ஒன்றை அவர் தனியாக கண்டுபிடிக்கும் காட்சி படத்தின் நகைச்சுவை வறட்சிக்கு நல்ல நிவாரணி.

இவான் வேடத்தை ஏற்றிருப்பவர் நடிகர் மிக்கி ரோர்க். ஆஜானுபாகுவான பாத்திரம். மிகவும் எதிர்பார்க்க வைத்த பாத்திரம். மிக்கி ரோர்க்கியின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு ஏற்ற ஏமாற்றம் ரசிகர்களிற்கு தாராளமாகக் கிடைக்கிறது. ரஷ்ய மொழியிலும், கொஞ்சம் ஆங்கிலத்திலும் வசனம் பேசிக் கொண்டு ஆரம்பத்தில் அசத்த ஆரம்பிக்கும் ரோர்க்கியை படத்தின் முக்கால் பகுதிக்கு ஆய்வுகூடங்களில் சிறை வைத்து விடுகிறது மோசமான திரைக்கதை. ரோர்கி, வெள்ளைக் கிளியைக் கொஞ்சிக் கொண்டு மந்தகாசப் புன்னகை புரிகிறார். இறுதியில் ஒரு நழுநழுத்த சண்டை. இப்படி ஒரு வீணடிப்பா. ரோர்கி எப்படி இப்பாத்திரத்தினை ஏற்பதற்கு உடன்பட்டாரோ தெரியவில்லை.

iron-man-2-2010-17000-778820578 நத்தாலி வேடத்தில் வருபவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன். ஸ்டார்க்கின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளும், S.H.I.E.L.D எனும் அமைப்பின் ரகசிய ஏஜண்ட்டாக வருகிறார். தன் தலைமுடியின் வண்ணத்தையும், சிகையலங்காரத்தையும் மாற்றி செக்ஸியான தோற்றம் பெற்றிருக்கிறார் ஜோஹான்சன். ஜோஹான்சன், ஸ்டார்கின் கழுத்தில் ஊசி குத்துகிறார், கைக்கடிகாரம் எடுத்து தருகிறார், இறுதியில் சிரமப்பட்டு ஒரு சண்டை போடுகிறார். ஹிட் கேர்ல் சிறுமி மட்டும் அந்த சண்டையைப் பார்ப்பாள் எனில் புதன் கிரகத்திற்கு டிக்கட் இன்றே புக் பண்ணியிருப்பாள்.

முதல் பாகத்தில் நடிகர் டெரென்ஸ் ஹாவார்ட் செய்த கேணல் ரோடி பாத்திரத்தை இம்முறை நடிகர் டொன் சீடேல் ஏற்றிருக்கிறார். பாவம். பரிதாபம். உச்சக் கட்டக் காட்சியில் இரும்பு மனிதனிற்கு பங்காளியாக மாறும் சீடேலைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. இரும்பு மனிதன் கவசத்திற்குள் பொருந்திக் கொள்ள முடியாது தவிக்கிறார் அவர். க்வினெத் பல்ட்ரோ, சாமுவேல் ஜாக்சன் ஆகியோர் சொல்லித் தந்தபடி சுவாரஸ்யமற்ற நடிப்பை வழங்கிச் செல்கின்றனர்.

இந்த ஏமாற்றங்களையெல்லாம் எம்மேல் திணித்த இயக்குனர் Jon Favreau கூட திரைப்படத்தில் ஒரு வேடமேற்றிருக்கிறார். அவரது மனச்சாட்சி அவரை வறுத்தெடுத்திருக்க வேண்டும். ஸ்டார்க்கின் கார் டிரைவர் பாத்திரமேற்று தான் செய்யும் அபத்த செயல்களால் ரசிகர்களை சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் அவர். நல்ல மனம் கொண்ட இயக்குனர். ஆனால் ரசிகர்களை சிரிக்க வைக்க அவர் எடுத்த முயற்சியும் பரிதாபமாக தோல்வியைத் தழுவிவிடுகிறது.

விறுவிறுப்பான கதை, சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என்பவற்றை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களிற்கு இத்திரைப்படம் வழங்குவது பூரணமான பெப்பெப்பே ஒன்று மட்டுமே. அதிலும் உச்சக் கட்ட சண்டைக் காட்சியில் இரண்டு டஜன் இயந்திரங்களுடன் நடைபெறும் அந்த மோதல் எப்போது இது முடிந்து தொலையும் என்ற உணர்வை வழங்குகிறது. Iron Man 2, உடனடியாக பழைய பாத்திரக் கடைக்கு அனுப்பி வைப்பதற்கு உகந்த ஒரு அயிட்டம். [*]

ட்ரெயிலர்

35 comments:

  1. என்னதான் இரும்பு மனிதாக இருந்தாலும் நம்ம இரும்பு மனிதன் ஆர்ச்சிக்கு ஈடாகுமா?

    அதே போல் என்னதான் மொக்கைப் படமாக இருந்தாலும் அது சுறா முன் வெறும் நெத்திலி தான்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. தலைவர் அவர்களே, சுறா த லெஜண்ட் ரசிகக் கண்மணிகள் சார்பில் உங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறேன் :)

    ReplyDelete
  3. ஏப்ரல் மாதத்தில் பத்து பதிவுகளா?!!

    அதுவும் சமீபத்தில் நான்கு நாட்களில் மூன்று பதிவுகள்!

    உங்கள் வேகம் அசத்துகிறது! பாராட்டுக்கள்! கீப் இட் அப்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. தலைவரே, பாராட்டுக்களிற்கு நன்றி. இனி சிறிது ஓய்வெடுக்கலாம் என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  5. //மார்வல் காமிக்ஸ் நாயகர்களில் ஸ்பைடர் மேனைத் தவிர என் மனதைக் கவர்ந்தவர்கள் வேறு யாருமில்லை என்றிருந்தபோது, இரு வருடங்களிற்கு முன்பு வெளியாகிய Iron Man திரைப்படத்தின் வழியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேன் பாத்திரம் என்னைக் கவர்ந்திழுத்தது.//

    இங்கும் அதே.....

    //Iron Man 2, உடனடியாக பழைய பாத்திரக் கடைக்கு அனுப்பி வைப்பதற்கு உகந்த ஒரு அயிட்டம். //

    போச்சா,நான் ரொம்ப எதிர்பார்த்த படம்.முக்கியமா trailer ரொம்ப நல்லா இருந்துச்சு....ஹும்...

    ReplyDelete
  6. நண்பர் இலுமினாட்டி, ஒரேயடியாகத் தளர்ந்து விடாதீர்கள், வாய்புக் கிடைக்கையில் படத்தைப் பாருங்கள் அதுவும் ஒரு அனுபவமே :) கருத்துகளிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. சரி, இதுல ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் கடைசி வரைக்கும் ஒன்னுமே பண்ணலியா?!! அவர் தன் ‘தெறமை’யை வெளிப்படுத்த வாய்ப்புகள் ஏதுமே அமையலையா?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. தலைவரே, ஸ்கார்லெட் எதனையுமே வெளிப்படுத்தவில்லை என்பது எனக்கு பெரும் ஏமாற்றமே :)

    ReplyDelete
  9. முதல் பாகமே அதிக எதிர்பார்ப்புடன் அமர வைத்து கழுத்தை அறுத்து அனுப்பி வைத்த கோராமை இருந்தது. இதில் இரண்டாம் பாகமும் மொக்கையாக்கி விட்டார்கள் போல :((

    ReplyDelete
  10. காதலரே,

    நம்மை பிரமிக்க வைத்த சில படைப்புகள், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, பாகத்திற்கு பாகம் மாறுவது நமக்கு ஒன்றும் புதிதான வியடமல்லவே... ஐயன் மேனும் அந்த வரிசையில் சேர்ந்திருப்பது, பணம் ஈட்ட வேண்டும் என்று குறுகிய கால கட்டத்தில் முயலும் படாதிபதிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    கிட்டதட்ட 10 வருடங்கள் ப்ரொடக்ஷ்ன் ஹெல்லில் தத்தளித்து மீண்டு வந்த ஐயன் மேனின் முதல் பாகத்திற்கு உங்களை போலவே நானும் ஒரு ரசிகன்தான். ஐயன் மேனின் ஆரம்ப கட்ட கவச உடை பரிணாமங்களை அழகாக படம் பிடித்து காட்டி இருந்த தொனி, ஸ்பைடர் மேனுக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட மார்வலின் ஐயன் மேன் காமிக்ஸ் ரசிகர்களுக்கு முற்றிலுமாக பிடித்து போனது. அந்த எதிர்பார்ப்பை பலதரபட்ட கதாபாத்திரங்களுடன் துவம்சம் செய்திருக்கிறார்கள் போல.

    ராபர்ட் டவுனி ஜுனியரிற்கு சவால் விடும் அளவிற்கு மிக்கி ரோர்க்கேவால் நடிக்க முடியும் என்பதால் தான் ஒரு வேளை அவரை பெரும்பகுதிக்கு ஜெயில் வாசம் செய்ய வைத்து விட்டார்களோ... ஆனால், ஸ்கார்லட் ஜோஹன்சனை புதிய காரியதரிசரியாக அறிமுகபடுத்தி விட்டு அவரையும் உபயோகிக்காமல் போனதே, இயக்குனர் தடுமாறியதற்கு சாட்சியாக நிற்கிறதே...

    இயக்குனர் தன் செய்கைகளால் காமடி செய்யாவிட்டால் என்ன, மொத்த படத்திலும் தன் காட்சி அமைப்பில் அதை மறக்க செய்துவிட்டாரே.... இதற்கு பேசாமல் மார்வலின் ஆவன்ஜர் படத்திற்கு மொத்த பட்ஜெட்டையும் ஒதுக்கி வைத்திருக்கலாம்....

    நிறை குறைகளை சரியான விகிதத்தில் வைத்து, நடுநிலையான ஒரு விமர்சனத்திற்கு நன்றி தோழரே.

    இம்மாதத்தில் 10வது பதிவாக மிளர்கிறது உங்கள் வேகம்.. மாதம் முடிய இன்னும் 2 நாட்கள் இருக்கையில், அடுத்து ஒரு பதிவையும் பார்த்து விடலாம் என்று தோன்றுகிறது... இல்லை அது மே தின சிறப்பாக வெளியிட உத்தேசமா ?

    ReplyDelete
  11. நண்பர் சென்ஷி அவர்களே, முதல் பாகம் இரண்டாம் பாகத்துடன் ஒப்பிடுகையில் எவ்வளவோ மேல், வருகைக்கும் தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ரஃபிக், ரபார்ட் டவுனி ஜுனியருடன் போட்டி போட்டு நடித்து, அவரைத் திணற வைக்கும் நட்சத்திரப் பட்டாளம் இத்திரைப்படத்தில் இருந்தும், அவர்களின் பாத்திரப் படைப்புக்கள் எதுவுமே மனதைக் கவரவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
    அடுத்த பதிவிற்கு முன்பு சற்று ஓய்வெடுக்கலாம் என்றே எண்ணுகிறேன் இல்லையேல் அதனையும் இன்னமும் இரு நாட்களில் பதிவிட்டு விட்டும் ஓய்வெடுக்கலாம் :)) நீண்ட்ட்ட்ட்ட்ட கால இடைவெளியின் பின்னான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  12. காதலரே,
    மீ த ....(நீங்களே என்னிக்கொங்க, நம்மால முடியல).

    இந்த படம் மக்கள் நாயகன் பசு நேசன், இந்தியாவின் இரும்பு மனிதன் ராமராஜன் அவர்களால் தமிழில் எடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதனை நீங்கள் குறிப்பிடாததால் பல கோடி மக்கள் நாயகன் பசு நேசன், இந்தியாவின் இரும்பு மனிதன் ராமராஜன் அவர்களின் ரசிகர்கள் சார்பில் நான் இந்த பதிவினை கண்டிக்கிறேன்.

    சற்றே யோசித்து பாருங்கள் - மக்கள் நாயகன் பசு நேசன், இந்தியாவின் இரும்பு மனிதன் ராமராஜன் அவர்களின் கம்பேக் இந்த படம் மூலம்தான் என்றால் சுறா தி லெஜன்ட் என்னாகும்?

    ReplyDelete
  13. விஸ்வா, சுறா த லெஜண்ட் VS பசு [இரும்பு] நேசன், கவுண்ட்டவுன் ஆரம்பம். கருத்திற்கு நன்றி நண்பரே.[ மெய்யாலும் அவர் இந்தப் படத்தை ரீ மேக்குகிறாரா!!]

    ReplyDelete
  14. காதலரே,
    //மெய்யாலும் அவர் இந்தப் படத்தை ரீ மேக்குகிறாரா!!//
    என்ன கொடுமை சார் இது? அந்த படத்தின் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் படங்களை அனுப்புகிறேன். பாருங்கள்.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. //Iron Man 2, உடனடியாக பழைய பாத்திரக் கடைக்கு அனுப்பி வைப்பதற்கு உகந்த ஒரு அயிட்டம்//
    இப்புடி அசிங்கப்படுத்திட்டீங்களே நண்பரே...நான் மிகவும் எதிர்பார்த்த படம். Trailer நல்லா இருந்தமாதிரி இருந்துதே...!

    அப்புறம்,மொதல்ல 'சுறா'னு மட்டும் வாசிச்சிட்டு, நான் தப்பான முடிவு எடுக்கத்தெரிஞ்சேன்...|:-)

    ReplyDelete
  17. இலங்கையில் இந்த திரைப்படமும் வெளியாகவில்லை நண்பரே. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டிவிடி நல்ல கொப்பி கிடைத்தால் பார்க்கலாம். அருமையான விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  18. விஸ்வா, நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் படங்களை ரசித்தேன் நன்றி, என்ன கொடுமை கடவுளே, தமிழ் ரசிகர்களைக் காப்பாத்த யாருமேயில்லையா.

    நண்பர் பேபி ஆனந்தன், திரைப்படத்தைப் பாருங்கள்,உங்கள் எதிர்பார்ப்பை அது நிறைவு செய்ததா என்பதை அறிய அதனை விட்டால் வேறு வழியில்லை :) சுறா த லெஜண்ட் படத்திற்கு உங்கள் வலைப்பூவில் விமர்சனம் உண்டா :)) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் ஹாலிவுட் மயு, சற்றுப் பொறுத்திருங்கள், சில வேளைகளில் இலங்கையில் இது ரீலிஸாகும் வாய்ப்பு தானாகவே அமையும். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  19. நல்லவேளைங்க.. இது இங்க அடுத்த வாரம்தான் ரிலீஸ் ஆகுது. அப்ப மெதுவா போனா போதுங்கறீங்க..!!!

    ஆனந்த கண்ணீர் வருதுங்க தல..!!! :) :)

    ReplyDelete
  20. இந்த படத்தை வைச்சு ஒரு எக்ஸ்குளுஸிவ் பதிவு போட்டு, கொஞ்சம் ஹிட்ஸ், ஓட்டு வாங்கலாம்னு பார்த்தா முந்திகிட்டீங்க. நல்ல விமர்சனமாத் தான் இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் படத்தை பாத்துட்டு வந்து சொல்றேன்...

    ஹாலிவுட் வாத்யாரே. அபசகுனமா கேட்க கூடாது. இருந்தாலும் கேக்குறேன். நீங்க இன்னும் உயிரோடத் தான் இருக்கீங்களா??

    ReplyDelete
  21. நண்பர் ஹாலிவுட் பாலா, முதல் நாள், முதல் காட்சிக்கு சென்று விடுங்கள். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் கொட்டும். 3ம் பாகத்திற்கும் அடி போட்டுவிட்டார்கள். கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பிரசன்னா ராஜன், படத்தை பார்த்து விட்டு நீங்களும் ஒரு பதிவைப் போட்டு விடுங்கள். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  22. இதோ நானும் வந்தாச்சு . . இப்போது தான் இந்தப் பதிவைப் பார்த்தேன் . .

    ஹாலிவுட்டில் இது ஒரு சாபக்கேடாகவே விளங்குகிறது. முதலில் ஒரு பட்டையைக் கிளப்பும் படம் வரும் (உதா: ராக்கி, ராம்போ, லீதல் வெப்பன், மிஸ் கஞ்சீனியாலிட்டி, ஸ்பீட், ஸ்பைடர்மேன், மம்மி, இன்னும் நிறைய்). . அது வசூல் சாதனையும் படைக்கும். உடனே, வெறும் பணத்துக்காக அதன் சீக்வெல்கள் அடுத்தடுத்து வெளிவந்து, நம்மைக் கொல்லும். இதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல என்று எண்னுகிறேன்.

    இப்படம், எனது மஸ்ட் சீ லிஸ்டில் இருந்தது. விமர்சனம் படித்துவிட்டு, பொசுக்கென்று ஆகிவிட்டேன் . .

    அதே போல், இன்க்ரெடிபிள் ஹல்க் படத்தின் இறுதிக் காட்சியில், அயர்ன் மேனைப் பற்றிய ஒரு ரெஃபரன்ஸ் வரும் . . சாமுவேல் ஜாக்ஸன் டோனி ஸ்டார்க்கிடம் பேசுவதைப் போன்ற ஒரு காட்சி அது.. அதனை இப்படத்துடன் லின்க் செய்யப்போகிறார்கள் என்று அப்பொழுது நினைத்தேன் . . ஆனால், ஹல்க் , அயர்ன் மேனுடன் டீம் சேரப்போவது, 2012ல். ஹல்க்கின் சீக்வெலில். எனவே, அயர்ன் மேனை அடுத்த வருடத்திலும் எதிர்பார்க்கலாம்.. . :-)

    நிற்க. மிக்கி ரூர்க் எனது மோஸ்ட் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். கெட் கார்ட்டரில் அருமையான வில்லனாகக் கலக்கியிருப்பார். ஏந்தான் இப்படி மொக்கைகளில் நடித்து, பெயரைக் கெடுத்துக் கொள்கிறாரோ தெரியவில்லையே . . :-(

    ReplyDelete
  23. காதலரே,
    உங்களை போலவே நானும் ஸ்பைடர் மேன் தீவிர ரசிகன்.தனக்கு தானே பேசி கொள்ளும் ஸ்பைடர் மேன் பாத்திரமே அலாதியானது.

    Iron Man 2 வை நானும் மிகவும் எதிர்பார்த்தேன் ...போச்சா..

    ReplyDelete
  24. நண்பர் கருந்தேள், நானும் அதிக எதிர்பார்ப்புகளுடன் பார்த்து ரசிக்க சென்ற படம். மரண அடி அடித்து விட்டார்கள். எதற்கும் படத்தைப் பாருங்கள். அதன் பின் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்கி ரோர்க்கிக்கு என்ன நடந்து தொலைத்ததோ, ஆய்வு கூடத்தில் நட்டு பொறுக்கியவாறு கிளியைக் கொஞ்சுவதற்கு எப்படித்தான் இணங்கினாரோ. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் லக்கி லிமட், ஸ்பைடர்மேன் போல் புகழ் பெற்ற மார்வலின் பாத்திரங்கள் வேறு உண்டா என்ன. உங்களைப்போலவேதான் நண்பரே என் நிலையும். ஏமாற்றம் வலிக்கிறது. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  25. படம் எப்படி இருந்தால் என்ன? காந்த உதட்டழகி Scarlett Johansson காகவே படத்தைப் பார்த்து தொலைக்க வேண்டியது தான் :)

    ReplyDelete
  26. நண்பர் பென், முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதானால் தாராளமாக பார்த்து மகிழலாம் :)

    ReplyDelete
  27. படம் பார்க்க முதல் உங்கள் விமர்சனம் பார்த்ததாலே என்னவோ நல்லாவே இருக்காது என்று நினைத்து தான் போனேன். ஒரே Rush பண்ணி படம் எடுத்திருந்தாலும், வசனங்கள் FANTASTIC . ஜுனியரின் நடிப்புக்காகவே இன்னொரு முறை படம் பார்க்கலாம். =))

    ReplyDelete
  28. அனாமிகா துவாரகன்,

    வசனங்கள் உங்களைக் கவர்ந்த அளவிற்கு என்னைக் கவரவில்லை :) ஜூனியரின் நடிப்பு இதனைவிட ஷெர்லாக்கில் ரசிக்கும்படி இருந்ததாகவும் எண்ணுகிறேன். படம் உங்களிற்கு திருப்தியளித்தது மகிழ்ச்சியே. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  29. True, Sherlock Holmes was one hell of a movie and R.D.Jr awed me with his performance. R.D.Jr-ன் 4 படம் தான் பாத்திருக்கிறேன். Iron Man 1,2, Sherlock Holmes & Kiss kiss bang bang. கடைசி படம் பிடிக்கவே இல்லை. ஒரு வேளை படம் நல்லா இருக்கவே இருக்காதுனு உங்க பதிவு பாத்திட்டு போனதால, அவ்வளவு Disappointing ஆக இருக்கலனு நினைக்கிறேன். Enjoyed it=)).

    ReplyDelete
  30. அனாமிகா துவாரகன், Iron Man முதல்பாகம் என்னை கவர்ந்த அளவிற்கு இரண்டாம் பாகம் கவரவில்லை. என்னைக் கேட்டால் ஆரம்பக் காட்சிகளைத் தவிர்த்து இரண்டாம் பாகம் என்னை முழுமையாக ஏமாற்றியது என்றே கூறுவேன். என் பதிவு உங்களை ஏமாற்றத்திலிருந்து காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சியே :)மீண்டும் வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  31. I am still waiting for this movie to be released in the US. Surprised to see that hollywood movies get released in India before they get released here!

    ReplyDelete
  32. BN USA, ஆம் நண்பரே எங்கு நன்றாக வசூலாகுமோ அங்கேதான் கடை விரிக்க முடியும் இல்லையா!

    ReplyDelete
  33. Try the recently released but not very well known "Punisher : War Zone" for a good movie adaptation of a Marvel character. It is extremely violent (little too much for me) but was good overall.

    ReplyDelete
  34. அன்பு நண்பரே,

    ஜுனியரின் திறமையே வசனங்களை உச்சரித்தல். அந்த வகையில் இரும்பு மனிதன் முதல் பாகத்திலும், ஷெர்லக் ஹொம்ஸிலும் அசத்தியிருந்தார். அதற்கு மேல் அவரிடம் நிறைய எதிர்பார்ப்பதில் பயனில்லை. ஆனால் நீங்கள் ஜோஹன்ஸனிடத்தில் நிறைய எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பது உங்களின் விமர்சனத்திலிருந்து தெரிகிறது. :)

    இருப்பினும் மூன்றாம் பாகம் இரும்பு காவக்காரன் வெளிவந்தே தீரும். மேகன் பாக்ஸ் இருந்தால் பார்க்கவேண்டியதுதான் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

    சுறா என்று சொல்லிவிட்டு ஒரு ஸ்டாரை வழங்கியுள்ளது சற்று குழப்பமாக இருக்கிறது. ஸ்டார்களுக்கு அப்பாற்பட்டதுதானே சுறா?

    ReplyDelete
  35. நண்பர் BN USA, இங்கு அத்திரைப்படம் வெளியாகும் போது பார்த்து விடுகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ஜோஸ், ஜூனியரின் வசன வழங்கல்கள் மட்டும் ஒரு படத்தை ரசிக்க போதாதே. ஜோகான்ஸனிடம் எதைத்தான் எதிர்பார்க்க முடியும், இவ்வகையான படங்களில் எதனையுமே எதிர்பார்க்க முடியாது. பிரின்ஸ் ஆஃப் பெர்சியா செல்லமாவது எங்களைத் திருப்திப்படுத்துகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம். வழங்கிய ஸ்டார்க்ளில் சுறா விழுங்கியது போக எஞ்சியிருப்பதுவே இந்த ஒரு ஸ்டார். சுறா ஒரு காவியம் என்பது உண்மையே :) கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete