சாம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். அழகிய இளம் மனைவி கிரேஸ், இரு பெண் குழந்தைகளான இசபெல், மஹி எனச் சிறிய அன்பான குடும்பம் அவனுடயது. தன் காதல் மனைவியுடனும், மகள்களுடனும் ஆனந்தமாக தன் வாழ்வைக் கழிக்கிறான் சாம்.
சாமிற்கு டாமி எனும் சகோதரன் இருக்கிறான். சாமைப் போல் நேர்வழியில் நடக்கத் தெரியாதவன் டாமி. வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் டாமி, நிபந்தனைக்குட்பட்ட விடுதலையில் சிறையிலிருந்து வெளியே வருகிறான்.
தன் சகோதரன் டாமி மேல் மிகுந்த பாசம் கொண்டவன் சாம். அவர்கள் தந்தையான ஹாங்ஸ், டாமியை அவன் செயல்களிற்காக வெறுப்பவராக இருந்தாலும் தன் சகோதரன் டாமிக்கு அன்பும், ஆதரவுமாக இருக்கிறான் சாம். அதே போல் டாமியும் தன் சகோதரன் சாமை அதிகம் மதிப்பவனாகவும், அவன் மேல் அன்பு கொண்டவனாகவும் இருக்கிறான். சிறையில் இருந்து விடுதலை பெறும் டாமியை நேரில் சென்று அழைத்து வரும் சாம், அவனிற்கு நல்ல வழியில் நடக்கும்படி ஆலோசனைகள் வழங்குகிறான்.
இவ்வேளையில் சாம் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு சென்று பணியாற்ற வேண்டும் எனும் அழைப்பு அவனிற்கு விடுக்கப்படுகிறது. நல்லதொரு வீரனாக அந்த அழைப்பை ஏற்று, தன் அன்பான உறவுகளைப் பிரிந்து ஆப்கானிஸ்தானிற்கு செல்கிறான் சாம்.
ஆப்கானிஸ்தானில் சாம், தன் சக வீரர்களுடன் ஒரு ஹெலிஹாப்டரில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அக்ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகிறது. விபத்துக்குள்ளான ஹெலியில் பயணம் செய்தவர்களைத் தேடித் தீவிர தேடுதலை நடத்தும் அமெரிக்க ராணுவத்தினால், சாமையோ, அவன் உடலையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் சாம் இறந்து விட்டதாக கருதி, அமெரிக்காவில் இருக்கும் அவன் மனைவி கிரேஸிடம் அவன் இறந்து விட்டதான தகவலைத் தருகிறது அமெரிக்க ராணுவம்.
தன் அன்புக் கணவன் சாம் மீது மிகுந்த காதல் கொண்ட பெண்ணாகிய கிரேஸ், இத்தகவலால் உள்ளே நொருங்கிப் போகிறாள். சாமின் இரு பெண் பிள்ளைகளின் மீதும் கூட தந்தையின் மரணம் குறித்த வேதனையின் துகள்கள் மெல்ல விழுந்து விடுகின்றன. சாமின் சகோதரன் டாமி இந்த செய்தியறிந்து துடித்துப் போகிறான்.
சாம் வாழ்ந்த நகரில் அவனிற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சாம் மிகவும் சிறந்த வீரன், நல்லதொரு நண்பன் என அவனைப் பற்றி சக வீரர்கள் நினைவு கூருகிறார்கள்.
இளம் வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த கிரேஸ், கண்ணீரிற்கு மத்தியில் தன் வாழ்வைத் தேடுகிறாள். தன் கணவனின் மேல் சட்டைகளில் அவன் வாசனையை நுகர்கிறாள். சாமுடன் ஆனந்தமாக கழித்த தருணங்களை மனதில் மீட்டிப் பார்க்கிறாள். சாமின் பிரிவு மெல்ல அவளை உள்ளே கொல்கிறது.
சாமின் சகோதரன் டாமி, தன் சகோதரனின் மரணத்தின் பின் தன் நடவடிக்கைகளை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறான். சாமின் மகள்கள் இருவரோடு தன் நேரத்தை செலவிடுகிறான். இஸபெலும், மகியும் டாமியை விரும்ப ஆரம்பிக்கிறார்கள். கிரேஸின் வசதிகளற்ற சிறிய சமையலறையை தன் நண்பர்களின் உதவியுடன் புதுப்பித்து தருகிறான் சாம். தன் சகோதரனின் குடும்பத்தை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறான். கிரேஸின் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகையை மலர வைக்க முயல்கிறான் அவன்.
குழந்தைகளினதும், டாமியினதும் தொடர்ந்த முயற்சிகளால் கிரேஸ் தன் கணவனின் மரணத்தின் சோகச் சுழலிலிருந்து மேலெழ ஆரம்பிக்கிறாள். கிரேஸும், டாமியும் அவர்கள் அறியாமலே தங்களிற்குள் நெருங்கிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு நாள் இரவு, கிரேஸிற்கும், டாமிக்குமிடையிலான இந்தப் புதிய உறவானது அதன் எல்லைகளை சற்றுத் தாண்டிப் பார்த்து விட அவர்களை அழைத்து செல்கிறது. ஆனால் எல்லை தாண்டலின் ஆரம்ப நிலையிலேயே இருவரும் சுதாரித்துக் கொண்டு தங்கள் மரியாதையான உறவின் எல்லைகளிற்குள் திரும்பி விடுகிறார்கள். எல்லையை சற்றுத் தாண்டியதற்காக உண்மையிலேயே அவர்கள் உள்ளம் வேதனை கொள்கிறது.
இச்சம்பவத்தின் பின்னும் கிரேஸின் குழந்தைகளை வந்து சந்தித்து அவர்களுடன் விளையாடி மகிழ்கிறான் டாமி. இப்போது கிரேஸிற்கும் டாமிக்குமிடையில் புரிந்துணர்வு கூடிய ஆரோக்யமான உறவு நிலவுகிறது. இந்நிலையில் கிரேஸிற்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பானது அவள் கணவன் சாம் இறக்கவில்லை உயிருடனேயே இருக்கிறான் எனும் தகவலை அவளிற்குத் தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து தன் வீட்டிற்கு திரும்பும் சாம் வேறொரு மனிதனாக மாறியிருக்கிறான். தாலிபான்களின் கொடூரமான சித்திரவதைகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு வரும் சாம்,மன அழுத்தங்களின் பயங்கரக் குவியலாக இருக்கிறான். அவன் மனதில் இருக்கும் ஒரு ரகசியம் அவனை அகச் சித்திரவதை செய்கிறது. வீடு திரும்பிய சாம், தன் மனைவிக்கும், சகோதரனிற்குமிடையில் நிலவும் உறவு குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கிறான்……
போர் அது நிகழும் இடத்தில் ஏற்படுத்தும் அழிவுகளை தாண்டி உருவாக்கக்கூடிய அழிவுகள் உண்டு. போர் உருவாக்கும் அவ்வகை அழிவுகளின் மாயக் கரங்களின் நீட்சி எல்லையற்றது. யுத்த முனையிலிருந்து வீடு திரும்பும் ஒரு ராணுவ அதிகாரி, எவ்வாறு தன் வாழ்வையும், தன் அன்பான குடும்பத்தின் வாழ்க்கையையும் நரகத்தின் வாயிலிற்கு அழைத்துச் செல்ல ஆரம்பிக்கிறான் என்பதை அதிர்ச்சியுடன் விரிக்கிறது Brothers திரைப்படம்.
டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குனர் Susanne Bier இயக்கிய Brodre எனும் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படமிது. திரைப்படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Jim Sheridan.
திரைப்படத்தின் அதிர்வைத் தரும் ஆச்சர்யம், சாம் வேடத்தில் வரும் Tobey Maguire. ஸ்பைடர் மேனில் நாம் கண்ட அந்த இனிய ஹீரோவா இவர் என்று புருவங்களை வியப்பால் உயர வைக்கிறார் டாபி மாக்குவைர்.
படத்தின் ஆரம்பத்தில் சிரித்த முகமும், அன்பு நிறைந்த குடும்பத் தலைவனாகவும் வரும் சாம், ஆப்கானில் தாலிபான்களின் சித்திரவதைகளின் போது படிப்படியாக மாற்றம் பெற்று முற்றிலுமாக வேறொரு உருவம் எடுத்து விடுகிறார். வெறித்த பார்வையும், உயிரற்ற கண்களும், மெலிந்த உடலுமாக, பின் வரும் அவரின் தோற்றமே மிரட்டுகிறது.
சாம், தன் மனைவியின் மீதும், சகோதரன் மீதும் சந்தேகம் கொள்ளும் கணங்கள் நுன்னிய ஊசி முனையால் குத்தும் உணர்வை வழங்குகிறது. போர் ஒன்றின் விளைபொருளான சாம் பாத்திரம் தன் மனதில் அடக்கி வைத்திருக்கும் ரகசியத்தையும், அழுத்தங்களையும் சுமக்க முடியாது உடைந்து அமிழ்வது வேதனையானது.
சாமின் அழுத்தங்கள் அவன் கட்டை மீறி வெடிக்கும் இரு கணங்கள் படத்தில் உண்டு. முதலாவது கணம் சாமின் மகள் மஹியின் பிறந்த நாள் இரவுணவின் போது இடம் பெறுகிறது அந்த வெடிப்பின் தொடர்ச்சியாக சாமின் அன்பு மகள் இஸபெல், நீ ஆப்கானில் செத்துப் போனவனாகவே இருந்திருக்கலாம் என சாமைப் பார்த்துக் கதறுவது கனமானது.
இரண்டாவது கணம், டாமி புதிதாக திருத்தியமைத்த கிரேஸின் சமையலறையை சாம் அடித்து நொருக்கும் காட்சி. டாபி மாக்குவைரின் நடிப்பு மிகையானதா அல்லது அழுத்தங்கள் குவிந்த ஒரு மனிதனின் இயல்பு இதுதானா என்று பிரித்தறிய முடியாதவாறு வன்மம் பீரிடும் உக்கிரமான காட்சி அது. அன்பு, சந்தேகம், வன்மம், உடைதல் என டாபி மாக்குவைரின் சினிமாப் பாத்திரங்களில் மிகவும் பேசப்படும் ஒரு பாத்திரமாக சாம் பாத்திரம் அமையும். [ ஸ்பைடர் மேன் 4ல் டாபி மாக்குவைர் இல்லையாம்]
சந்தேகமும், வன்முறையும், அச்சமும் குடிகொண்ட ஒரு கணவனை அன்புடன் சகித்துக் கொள்ளும் கிரேஸ் பாத்திரத்தில் Natalie Portman. பித்துப் பிடித்த நிலையில் சந்தேக வெறி கொண்டாடும் கணவனை தன் அன்பால் அணைக்கத் துடிக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் நத்தாலியின் திறமைக்கு இப்பாத்திரம் அதிக வாய்ப்பை வழங்கி விடவில்லை. திரைப்படத்தை பார்க்கும் யுத்த முனையிலிருக்கும் அமெரிக்க வீரர்கள் கிரேஸ் போல் ஒரு மனைவி தங்களிற்கும் வேண்டும் என்று ஏங்குவார்கள்.
கொஞ்சம் முரடனாக இருந்து, நல்ல வழிக்கு திரும்புவனாக டாமியின் பாத்திரத்தில் நடிகர் Jake Gyllenhall. ஆரம்ப காட்சிகளில் தன் தந்தையுடன் மோதுவதும், சாமின் மரணத்தின் பின் அவன் குடும்பத்தின் மீது அக்கறை எடுப்பதும், கிரேஸ் மீது கவரப்பட்டு பின் ஒதுங்குவதும், வீடு திரும்பும் சாம் தன் சந்தேக கேள்விகளால் தாக்கும் போது அதனை அமைதியாக எடுத்துக் கொண்டு தன் சகோதரனை எப்போதும் அன்பால் அணைத்துக் கொள்வதுமென மிக இயல்பாக நடிக்க வருகிறது ஜேக் ஜிலன்ஹாலிற்கு. டாமிக்கும் அவரது தந்தை ஹாங்ஸிற்குமிடையிலான உறவு சாமின் மறைவின் பின் மீண்டும் வலுப்பெற ஆரம்பிப்பது மிக மென்மையாக கூறப்பட்டிருகிறது.
இரு சகோதரர்களினதும் தந்தையான ஹாங்ஸ், வியட்னாம் போரில் கலந்து கொண்டவர். அப்பாத்திரம் வழியே வியட்னாம் போரிலிருந்து வீடு திரும்பிய போர் வீரர்கள் முகம் கொடுத்திருக்ககூடிய சில பிரச்சினைகள் குறித்தும் கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குனர்.
படத்தில் மஹி, இஸபெல் ஆகிய இரு சிறுமிகளின் நடிப்பும் அருமையானது. அன்பில் ஆனந்தமாய் மகிழ்வதும், தந்தையின் வெறியின் முன் பயந்து ஒடுங்குவதுமாக எப்படி இவ்வாறான பக்குவமான நடிப்பை இந்தச் சிறுமிகளால் வழங்க முடிகிறது என்று மனம் வியக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு மென்மையான குடும்பக்கதையை ஒரு தளத்திலும், ஆப்கானில் சாம் சந்திக்கும் கொடிய நிகழ்வுகளை இன்னொரு தளத்திலும் காட்சிப்படுத்தி படத்தை வேகமாக நகர்த்துகிறார் இயக்குனர் ஜிம் ஷெரிடன். ஆப்கானிலிருந்து சாம் வீடு திரும்பிய பின் திரைப்படம் அழுத்தங்கள் நிறைந்த ஒரு துன்பியல் நாடகமாக மாறி விடுகிறது.
படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகளின் நீளம் சலிப்பைத் தருகிறது. இருப்பினும் உச்சக்கட்ட காட்சியின் மூலம் பார்வையாளர்களைப் பற்றிக் கொள்கிறார் ஜிம் ஷெரிடன். படத்தில் சில கேள்விகளை அவர் அதிகாரங்களை நோக்கி உறுதியாக முன் வைத்திருப்பார் எனில் படம் இன்னமும் வீர்யமாக இருந்திருக்கக்கூடும்.
“போரில் மரணமுற்றவர்களே அதன் முடிவைக் காண்கிறார்கள். நான் போரின் முடிவைக் கண்டிருக்கிறேன் ஆனால் என்னால் மறுபடியும் ஜீவிக்க முடியுமா?” தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே, தன் மனைவியைக் கட்டியணைத்தவாறு, அவன் கண்களில் கண்ணீர் வழிய, சாம் தன் மனதிற்குள்ளே எழுப்பும் கேள்வி இது. கனமான இக்கேள்வி இலகுவாக பார்வையாளனின் தோளில் ஏறி உட்கார்ந்து விடுகிறது. இதற்கான விடை அன்பிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று! [**]
ட்ரெயிலர்
காதலரே,
ReplyDeleteநாந்தான் மொத.
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteபதிவைப் படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
அடச்சே!
ReplyDeleteஜஸ்ட்டு மிஸ்ஸு!
மீ த செகண்டு அண்டு த தர்டு ஆல்ஸோ!
தலைவர்,
அ.கொ.தீ.க.
இந்தப் படத்தினை தமிழில் செல்வராகவன் இயக்கி தனுஷுடன் நடித்தால் எப்படி இருக்கும்? ஹீரோயின் சோனியா.
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகரே, தலைவர் அவர்களே முதன்மைக் கருத்திற்கு நன்றிகள். ஒலக காமிக்ஸ் ரசிகரே நீங்கள் கூறியது நடக்குமானால் படத்தின் தலைப்பை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை :)
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteபோரானது மனிதனை எந்த அளவிற்கு மாற்றிவிடும் என்பதற்கு பல கதைகளை உதாரணமாக சொல்லலாம். அதில் இதுவும் ஒன்றோ? உங்களுக்கு டீர் ஹன்டர், பார்ன் ஆன் தி போர்த் ஜூலை போன்ற படங்கள் நினைவிருக்கலாம்.
நல்லதொரு பதிவானாலும் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே என்பது புருவத்தினை உயர்த்துகிறது. காரணம் என்னவோ?
அந்த முதல் படத்தையும் , பதிவின் தலைப்பையும் பார்த்த உடனே என்னால் கதையை தொண்ணூறு சதம் யூகிக்க முடிந்தது.
ReplyDeleteவிஸ்வா, நீங்கள் கூறியிருக்கும் படங்களை நான் பார்க்கவில்லை நண்பரே. இரண்டு நட்சத்திரங்களிற்கு காரணம் திரைப்படமானது ஆழமாக மனதை தொடும் வகையில் இல்லை என்பதே கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteஆம் விஸ்வா, அருமையான போஸ்டர் அது. மிகச் சிறப்பான அவதானம் உங்களது. தேவாங்கு காமிக்ஸ் போஸ்டர் மற்றும் அட்டைப்படம் அளவிற்கு வரவில்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.
ReplyDeleteகதைய ஏதோ ஒரு தமிழ் படத்துல பாத்த மாதிரியே ஒரு ஃபீலிங்! அந்த போர் பேக் டிராப்பை தவிர!
ReplyDeleteஅதுவும் அந்த எதையும் தாங்கும் பத்தினி தெய்வம் பாத்திரமெல்லாம் டூ மச்! சொல்லிபுட்டேன் ஆமா!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//அருமையான போஸ்டர் அது//
ReplyDeleteகவலையே படாதீங்க! கூடிய சீக்கிரம் ஏதேனும் தமிழ் படத்துக்கு இதே டிஸைன பயன் படுத்துவாங்க!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//இந்தப் படத்தினை தமிழில் செல்வராகவன் இயக்கி தனுஷுடன் நடித்தால் எப்படி இருக்கும்? ஹீரோயின் சோனியா.//
ReplyDeleteஇல்ல, இப்போதைக்கு ஆண்ட்ரியாதான் ஹீரோயின்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//நீங்கள் கூறியிருக்கும் படங்களை நான் பார்க்கவில்லை நண்பரே//
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது? தயவு செய்து உடனடியாக டீர் ஹன்டர் பார்த்து விடவும்.
தலைவரே, நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்களா, கருத்துக்களில் காரமோ காரம், வறுத்தெடுக்கிறீர்கள் கருத்துக்களிற்கு நன்றி
ReplyDeleteவிஸ்வா, நேரம் எனும் எதிரியை வென்றால் நிச்சயமாக நீங்கள் கூறிய படங்களை பார்த்து விடுகிறேன் நண்பரே.
பாஸ்,நான் பிரதர்ஸ் பார்த்த போது இருந்த என் உணர்வுகளை அப்படியே எழுத்துக்களில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான விமர்சனம்.
ReplyDelete//
ReplyDeleteவிஸ்வா, நேரம் எனும் எதிரியை வென்றால் நிச்சயமாக நீங்கள் கூறிய படங்களை பார்த்து விடுகிறேன் நண்பரே//
அந்த டீர் ஹன்டரில் வரும் ரஷ்யன் ரவ்லேட் மறக்கவே முடியாது.
நினைவூட்டியமைக்கு நன்றி. இன்று இரவு அந்த படத்தை மறுபடியும் பார்க்கப்போகிறேன்.
அருமை நண்பரே
ReplyDeleteமிக அழகாக இந்த படத்தை எழுதியுள்ளீர்கள்.
டோபி மிக நல்ல நடிகர் என்று ஸீபிஸ்கட்டில் பார்த்தேன்.படத்தை தரவிறக்குகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
ட்ரெய்லர் பார்தேன்.நன்றாய் இருந்தது
ReplyDeleteமிகவும் தாமதமாகத் தான் இதைப் படித்தேன் .. . நானும் வ்ஸ்வா போல் முதல் படத்தையும் டைட்டிலையும் பார்த்தவுடன், கதையை யூகித்தேன் . . இதே போல் கிட்டத்தட்ட ஒரு கதையமைப்புடன் ஒரு பழைய தமிழ்ப்படம் உள்ளதல்லவா? சிவாஜி, ஜெமினி நடித்தது என்று நினைக்கிறேன் . . விமர்சனம் அருமை. குரிப்பாக, அந்தப் பெண், தனது கணவனின் இல்லாமையை அவனது சட்டையை முகர்ந்து பார்த்துத் தீர்த்துக் கொள்வது. . அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தேன் . . மனதில் மழை பெய்தது. . :-)
ReplyDeleteஅது நான் தான் .. வேறு ப்ரொஃபைலில் இருந்த போது பின்னூட்டிவிட்டேன் . . :-)
ReplyDeleteசகோதரர்கள் என்பதற்கு பதில் நண்பர்கள் என்று மாற்றி கொண்டால் படத்தின் முதல் பாதி தமிழின் 'பாறை' படத்தை போலவே உள்ளது. எனினும் இரண்டாவது பாதி வித்தியாசமான ஒன்று. போர் கொடுமையையும் குடும்ப உறவுகளையும் இணைத்த இயக்குனரின் சாமர்த்தியம் பாராட்டுகுறியது.
ReplyDeleteநண்பர் தாமோதர் சந்துரு, கனிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் ராமசாமி கண்ணன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் கார்திகேயன், உற்சாகம் ஊட்டும் உங்கள் கருத்துக்களிற்கு மிக்க நன்றி.
நண்பர் கருந்தேள், இரட்டை வேடமா :) கலக்குங்கள் , அதிக வேலைகள் நிறைந்த இக்கணத்திலும் வந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.
நண்பர் சிவ், பாறை திரைப்படம் குறித்த உங்கள் தகவல்கள் எனக்குப் புதிது. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பரே
ReplyDeleteஒரு வழியாக 'Ghost writer' பார்த்துவிட்டேன். இந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக இருந்தது. இப்பொழுது இந்த படத்தை தேடிகொண்டிருக்கிறேன். பதிவினை படிக்கும் போது 'பாறை' (இதன் மூலம் : மலையாளம் நண்பர் SIV அவர்களே ) படம் நினைவுக்கு வருகிறது. விரைவில் பார்த்து விடுவேன் நண்பரே
நண்பர் பாலாஜி, உங்கள் வலைப்பூவிற்கு மனதார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநண்பர் வேல்கண்ணன், கோஸ்ட் ரைட்டர் திரைப்படம் உங்களைக் கவர்ந்ததையிட்டு உவகை கொள்கிறேன். தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி நண்பரே.