Sunday, March 14, 2010

அம்போ ஸ்பெஷலும் மக்கு லேனும் பாக்தாத் கார் வெடிகுண்டும்


வாழ்க்கை ஒரு கமெரா, அதன் முன்பாக நாமெல்லாம் நடிகர்கள்- ஜுவாமி குத்தானந்தா

மக்கு லேன்! இந்தப் பெயரைக் கேட்டாலே தமிழ் கூறும் நல்லுலகைச் சேர்ந்த காமிக்ஸ் ரசிகர்களின் இரக்கம் அலையடிக்கும் இதயங்களிலெல்லாம் பாலைவனத்தில் தனியே அலையும் ஒரு பூனையின் கேவலான மியாவ் சத்தம் மெதுவாக எழுந்து மறையும்.

சொத்தைப் படலம்! எனும் பிரபல காமிக்ஸ் தொடரின் நாயகனே மக்கு லேன். கடற்கரையில் ஓவராகப் பீரடித்து விட்டு மயங்கி கிடந்த மக்கு லேனிற்கு, தன் முற்கால நினைவுகள் மறந்து போய் விடுகின்றன. நாய் ஒன்றை நெடுங்காலமாக வளர்க்க விரும்பும் முதிய தம்பதியினர் நாய்க்கு பதிலாக மக்கு லேனைத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.

மக்கு லேனின் இடது பிருஷ்டத்தில் III என்றும் வலது பிருஷ்டத்தில் XXX என்றும் பச்சைகள் குத்தப்பட்டிருக்கிறது. ஒரு மாலை பீரடிப்பதற்காக மக்கு லேன் கடற்கரைக்கு சென்று விடுகிறான். கடலின் அலைகளாவது தன் நினைவுகளைத் தன்னிடம் எடுத்து வராதா என்றவாறே பீரில் மூழ்குகிறான் மக்கு லேன்.

ஃபுல்லாக ஏற்றியபின் முதிய தம்பதியினரின் வீட்டிற்கு பிரியாணிப் பார்சல்களுடன் திரும்பும் மக்கு லேன், வீட்டிலிருந்த தன் உடமைகளுடன் முதிய தம்பதி கம்பி நீட்டி விட்டிருப்பதை, மறுநாள் மதியம் மப்பு தெளிந்து எழும்போது அறிந்து கொள்கிறான். அவர்களைத் தேடி ஆவேசமாக தன் தேடலை ஆரம்பிக்கிறான் ஹீரோ மக்கு லேன். இதுவே சொத்தைப் படலத்தின் சுருங்கிய கதைச் சுருக்கம்!

மக்கு லேன் தன் தேடலின்போது கண்டு கொள்ளும் மர்மங்களும், அவன் நடாத்தும் அதிரடிகளும், கதையில் ஒட்டுத்துணி கூட உடலில் இல்லாது காட்சி தரும் ஓவரேஜ் அம்மிணிகளும் இக்காமிக்ஸ் தொடரை தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் நம்பர்1 காமிக்ஸ் தொடர் ஆக்குவதில் பெரும் பங்கு வகித்தன.

parishilton2 மக்கு லேன், தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, மருத்துவர்,ஆட்டோக்காரன், பால்காரன், பக்கத்து வீட்டு பையன்[ காலேஜில் படிக்கும்] என எல்லாவும் ஆனான். மக்கு லேனிற்காக ஒரு கோவில் அவன் ரசிகர்களால் உருவாக்கபட்டது.

எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழ் காமிக்ஸுலகம் மக்கு லேனின் பெயரைக் கேட்டாலே திடுக்கிட்டு விழித்தெழும். வந்திருச்சா, எப்ப வரும், என்ன இந்த தபாவும் வரல்லியா என சோம்பலான மந்திரப் புன்னகையில் தோய்த்த கேள்விகளை அது எழுப்பும். பின்பு மீண்டும் வழமை போலவே தூங்கச் சென்று விடும். மீண்டும் திடுக்கிட்டு விழித்தெழலாம் எனும் நம்பிக்கையுடன்.

மக்கு லேன் ஹீரோவாக அதிரடிக்கும் சொத்தைப்படலம் காமிக்ஸ் தொடரானது, தமிழில் வெளிவரும் ஒரு டஜனிற்கு மேற்பட்ட காமிக்ஸ் இதழ்களிலேயே மிகவும் பிரபலமான தேவாங்கு காமிக்ஸில் வெளியாகியது [தேவாங்கின் படத்தை மட்டும் பார்க்கவும்]. நல்ல ரசனை கொண்ட தேவாங்கு காமிக்ஸின் ஆசிரியர் அத்தொடரை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததையிட்டு இன்றும் ரசிகர்கள் அவரிற்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

சொத்தைப் படலம் சூடான வடை போல் விற்றது. உள்ளத்தை உருக்கும் மக்கு லேனின் கதை ரசிகர்களை தாக்கியது, தலைகீழாகத் திருப்பி அடித்துப் போட்டது. என்றும் அவர்கள் மனதில் கூடவேயிருந்தது.

குறிப்பாக தேவாங்கு காமிக்ஸ் சொத்தைப் படலம் கதைக்காக உபயோகித்த விசேட கறுப்பு மை, பல சமயங்களில் கதையின் காட்சிகளை வாசகனே தன் மனக் கண்ணில் ஊகத்தோற்றம் கொள்ள வைக்கும் ஒரு உத்தியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல உதவியது. கதையின் மிக முக்கியமான வில்லியான புளிச்சட்டியின் மார்பகங்களின் அளவுகள் குறித்து இதனால் வாசகர்களிடையே ஒரு பிரளயமே உருவானது. இறுதியாக புளிச்சட்டி ஒரு ஆண் என்பதை தேவாங்கு காமிக்ஸ் ஆசிரியர் அறிவித்து இப்பிரளயத்தை தீர்த்து வைத்தார் என்பது குத்து டைம்ஸ் வாசகர்கள் அறிந்ததே.

சொத்தைப் படலம் தொடரிற்காகவே எக்ஸ்குளுசிவாக வரவழைக்கப்பட்ட சாணித்தாள்களில் அச்சடிக்கப்பட்ட கதை, ரசிகர்களின் கண்களிற்கும், ஆன்மாவிற்கும், மூக்கிற்கும் மறக்கவே முடியாத விருந்தானது. அடுத்த இதழ் எப்போது வரும் என ரசிகர்கள் தங்கள் விரல் நகங்களை கடிக்க ஆரம்பித்தார்கள். நகம் வெட்டியின் விற்பனை இதனால் கணிசமாக கீழே வந்தது. பிரபல நடிகை த்ரிஸ், குளியல் அறையில் ரகசியமாக சொத்தைப் படலம் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு உண்டானது.

indlindseylohan இலைகள் உதிர்ந்து காற்றில் பறந்து சென்றபின்பாக வரும் குளிர்காலத்தில் கரடிகள் நீண்ட உறக்கத்திற்கு செல்வதுபோல் தேவாங்கு காமிக்ஸ் காலத்திற்கு காலம் ஒரு சின்ன பிரேக் எடுப்பதுண்டு. தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து மாதங்களிற்குள் குறைந்தது அறுபது காமிக்ஸ் இதழ்களை வெளியிட்டு சாதனை படைக்கும் தேவாங்கு, படீரென எதுவும் சொல்லாமல் உறங்கிப் போவதுண்டு.

தேவாங்கு காமிக்ஸின் வரலாறு அறிந்தவர்கள் அது மீண்டும் விழித்தெழும் என்று நன்கு தெரிந்தவர்களே. தேவாங்கின் இந்த தூக்கங்களை அறிந்திருந்தும் அதன் ரசிகர்கள் தேவாங்கின் மீது வைத்திருக்கும் அன்பும், மதிப்பும், ஈடுபாடும் என்றும் குறைந்ததில்லை. ஆனால் தேவாங்கோ ரசிகர்களின் உணர்ச்சிகள் குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாது உறக்கமும், விழிப்புமாக தன் ரூட்டில் ஜாலியாகச் சென்று கொண்டேயிருந்தது.

இவ்வாறாக தேவாங்கு விழிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் அந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியது. சொத்தைப் படலம்அம்போ ஸ்பெஷல்முன்பதிவிற்கு மட்டும்கலெக்டர்ஸ் எடிசன்முன் பணம் திருப்பித் தரப்படமாட்டாது! ஒரு சிறிய தொகை விலையுடன், ஏராளமான பக்கங்களுடன், உலகிலேயே முதல் முதலாக முழுத்தொகுப்பாக சொத்தைப் படலத்தை வெளியிடப் போவதாக விளம்பரம் செய்தார் தேவாங்கு காமிக்ஸின் ஆசிரியர்.

ஏறக்குறைய பாதிக் கதையில் தொங்கிக் கொண்டிருந்த சொத்தைப் படல ரசிகர்கள், அம்போ ஸ்பெஷலை முன்பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். முன் பதிவு செய்தவர்களின் திரு நாமங்கள் தேவாங்கு காமிக்ஸின் பக்கங்களில் இடம் பிடித்து அந்த ரசிகர்களை நோபல் பரிசு வென்ற உணர்ச்சியைப் பெற வைத்தன. ஆனால் அவர்களின் அந்த உணர்ச்சி எவ்விதமாக அவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகப் போகிறது என்பதை பாவம் அந்த அப்பாவி ரசிகர்கள் அறிந்திருக்கவில்லை[ ரொம்ப நல்லவங்க, எத்தனை வருசமானாலும் வெய்ட் பண்ணுவாங்க!]

அம்போ ஸ்பெஷலை அறிவித்து வருடங்கள் உருண்டோடின. அதற்காக காத்திருந்த ரசிகர்கள், பள்ளி விட்டு, கல்லூரி சென்று, வேலை கிடைத்து திருமணமாகி, அவர்களின் குழந்தைகள் வேட்டைக்காரன் சூப்பர் படம்பா என அவர்களை உசுப்பேற்றியபோதும் கூட அம்போ ஸ்பெஷல் வருவதாக இல்லை. ஆனால் அது வரும் என்று தேவாங்கின் இதழ்களில் விளம்பரம் வந்தவண்ணமேயிருந்தது.

உணர்ச்சிவசப்பட்ட சில தீவிரமான ரசிகர்களின் மடல்களை அடுத்து தேவாங்கின் ஆசிரியர் 99999 முன்பதிவுகள் கிடைத்தாலே அம்போவை வெளியிட முடியும் என அறிவித்தார். இதுவரையில் 99998 முன்பதிவுகள் மட்டுமே கிடைத்திருப்பதையும் அவர் வேதனையுடன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். விளம்பரங்கள் செய்து ரசிகர்களைப் பிடிப்பதில் அவரிற்கு அதிக இஷ்டமில்லை என்பதால் சொத்தைப் படலத்தின் தீவிர ரசிகர்கள் சிலர் தாமே முன் வந்து அதற்கான விளம்பரங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.

தாங்கள் வசிக்கும் தெருவெங்கிலும் அம்போ ஸ்பெஷலிற்கான விளம்பரங்களை அந்த ரசிகர்கள் இட்டார்கள். இன்றும் கூட அந்த அமைதியான தென்றல் முத்தமிடும் தெருக்களிற்கு நீங்கள் சென்றால், இன்று ஒட்டிய போஸ்டரின் பசுமையுடன் அந்த விளம்பரங்கள் மின்னிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.[ இந்த இயக்கத்தை தொடக்கி வைத்த ரசிகர், காத்திருந்தது போதும் என்று வேலை தேடச் சென்று விட்டதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் அறிவிக்கின்றன]

indparishilton சொத்தைப் படலத்தின் அருமை பெருமைகளைக் குறித்து ரசிகர் கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதில் ஒரு ரசிகர் அல்பானிய மொழியில் வெளியான சொத்தைப் படலத்தின் கதைச் சுருக்கங்களை கதாகலாட்சேபமாக நடாத்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சொத்தைப் படலத்தை வாங்கி உங்கள் எதிரிகளிற்கு வழங்குங்கள், திருமணவிழாவில் சொத்தைப்படலத்தை பரிசளியுங்கள், பிறந்த நாள் விழாவா பீரடிக்காதீர்கள் சொத்தைப் படலம் ட்ரீட் வழங்குங்கள், புது வருடத் தீர்மானமா, 25 சொத்தைப் படலத்திற்கு ஆர்டர் தாருங்கள் பின்பு இமய மலைக்குச் செல்லுங்கள் என ரசிகர்கள் புயலானார்கள். ஆனால் இதோ, இதோ வருகிறேன் என்ற சிட்டு, அந்த நைட் வராமல் விட்டதைப்போல் இதுவரை அம்போ வரவேயில்லை.

அண்மையில் நிகழ்ந்தேறிய தலையணைக் கண்காட்சி சமயம் அம்போ ஸ்பெஷல், சர்ப்ரைஸ் சாக்கலெட்டாக வெளிவரும் என பல ரசிகர்கள் நம்பியிருந்தார்கள் அதனால் அவர்கள் தூக்கம் போனதுதான் சர்ப்ரைஸ் சாக்கலெட்டாக எஞ்சி இருந்தது. இறுதியாக முட்டாள்கள் தின அல்லது உழைப்பாளிகள் தின மாதங்களிற்குள் அம்போ வெளிவரும் என்கிறார்கள் காமிக்ஸ் துறையில் பழத்தை அதன் கொட்டையுடனேயே சாப்பிடும் நிபுணர்கள்.

அம்போ வெளிவருவதை மையமாகக் கொண்டு சில தீய சக்திகள் பந்தய சூதாட்டங்களில் இறங்கியிருப்பதும் இப்போது புலானய்வுப் பத்திரிகையான பூந்தொட்டி மூலம் தெரிய வந்திருக்கிறது. வெளிவரும் என பெட் கட்டியவர்கள் வயிற்றில் புளிச் சுனாமி இப்போதே உருவாக ஆரம்பித்து விட்டது என்கிறது ஒரு குருவி. புத்திசாலி வாசகர் ஒருவர் அம்போ வெளிவராவிடில் தன் மனைவியை விவாகரத்து செய்வேன் என்று மனைவியின் காதலனிடம் பந்தயம் கட்டியிருக்கிறார். எது எப்படியோ, இந்த டெட் லைனிற்குள்ளாவது அம்போ ஸ்பெஷல் வருமா இல்லை அதுவும் அம்போதானா என்பதுதான் காமிக்ஸ் ரசிகர்கள் மனதில், பாக்தாத்தின் கார் குண்டு போல் ரகசியமாக ஒளிந்திருக்கும் கேள்வி.

குத்து டைம்ஸ்க்காக ஜுவாமி குத்தானந்தா

29 comments:

 1. ஐ மீ த ஃபர்ஸ்ட்டு !!

  இந்தக் கட்டுரையை மக்கள் ஆவலோடு படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அம்போ ஸ்பெஷலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பல பேரில் நானும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் . . (நற நற. . ). . இப்ப வருமோ . . எப்ப வருமோ . . காச கொடுத்தா . . அப்ப வருமோ . .

  ReplyDelete
 2. படங்கள் சூப்பர். . அதனை குட்டியாக வெளியிட்ட உங்களுக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  //இதில் ஒரு ரசிகர் அல்பானிய மொழியில் வெளியான சொத்தைப் படலத்தின் கதைச் சுருக்கங்களை கதாகலாட்சேபமாக நடாத்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது//

  எங்கியோ கேள்விப்பட்ட மேரி இர்க்கே !! :-)

  ReplyDelete
 3. இந்த பதிவு பூங்காவனத்தின் பூந்தொட்டதில்? மலர்ந்து இருக்க வேண்டியது. இங்கு என்ன செய்கிறது?

  ReplyDelete
 4. எச்சூஸ் மீ! இது கனவுகளின் காதலன் வலைப்பூ தானே!

  எங்கே ட்ராக் மாறி பூங்காவனம் அம்மையாரின் படுக்கையறையிலுள்ள பெர்சனல் பதிவேட்டிற்கு வந்து விட்டோமோ என பதிவைப் படித்து முடிக்கும் வரை மைல்டாக ஒரு டவுட்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. //மக்கு லேனின் இடது பிருஷ்டத்தில் III என்றும் வலது பிருஷ்டத்தில் XXX என்றும் பச்சைகள் குத்தப்பட்டிருக்கிறது.//

  XXX-ன்னா ரம் அல்லது மேட்டர் படமுன்னு என் சிற்றறிவுக்கு சரியாக எட்டுகிறது! அது என்ன III?

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 6. புளிச்சட்டியின் பாண்டேஜ் படத்தை வெளியிட்டு என் பருவ உணர்ச்சிகளை பறந்தெழச் செய்த உமக்கு நன்றிகள்!

  இதே போல் கண்மணி, கருங்கட்டழகி, காமப்பிசாசு கோன்ஸுக்குட்டியின் படத்தையும், என் உள்ளம் கவர்ந்த கள்ளி தேசிக்காயின் படத்தையும் வெளியிட்டிருந்தால் உமக்கு புண்ணியமாக போயிருக்கும்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 7. கடைசி வரைக்கும் அந்த பாக்தாத் கார் வெடிகுண்டு பத்தி ஒன்னுமே சொல்லல?

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 8. //படங்கள் சூப்பர். . அதனை குட்டியாக வெளியிட்ட உங்களுக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

  அமுக்குங்க...

  பெரிசாகும்...

  படத்தை சொன்னேன்!!!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 9. //படங்கள் சூப்பர். . அதனை குட்டியாக வெளியிட்ட உங்களுக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

  அமுக்குங்க...

  பெரிசாகும்...

  படத்தை சொன்னேன்!!!//

  யோவ், யோவ் - என்னையா நடக்குது இங்கே? நானும்தான் பார்த்துக் கொண்டே போகிறேன் அக்குரமம் அக்குரமமா இருக்கே?

  ReplyDelete
 10. நண்பர் கருந்தேள், வரும் வேளையில் அம்போ வரும், நாம் என் மனதை தியானத்தில் ஈடுபடுத்துவோம். நீங்களும் கேள்விப்பட்டீர்களா :)) நல்லது. பெரிதாக்குவதற்கு மருத்துவர் 7 வழங்கியிருக்கும் ஆலோசனையை முயலவும் அனுபவஸ்தர் சொன்னால் சரியாகவே இருக்கும். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  விஸ்வா,பூங்காவனத்தின் அடர்த்தியான புற்கள் நிறைந்த பூந்தோட்டத்தின் உள்ளே நுழைய குத்தானந்தாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாலேயே இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது. அக்குரமம் நடக்கிறதா!! எங்கே குத்தானந்தாவைக் கமெராவுடன் அனுப்பி வைத்து விடுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  தலைவரே, காதலனின் வலைப்பூதான் ஆனால் ஜுவாமி குத்தானந்தாவின் கும்மாங்குத்துக்கு இலக்காகி விட்டது. III என்பது பச்சை குத்திய கலைஞரின் கையொப்பம் :)) உங்களது பருவ உணர்ச்சிகளில் அத்து மீறியதற்கு மன்னித்து விடுங்கள், இதற்கே இப்படியானால் கோன்ஸின் படத்தையும் ஜுவாமி குத்தானந்தா போட்டிருந்தால் என்ன கதியாகியிருக்கும். பாக்தாத் கார்வெடிகுண்டுதான் ரசிகர்களின் மனங்களில் இருக்கிறதே, வெடிக்கும்போது பார்க்க ஆவலாக உள்ளேன்[ நான் வெடி குண்டை சொன்னேன் !!] எதையுமே அமுக்கி வைக்கக் கூடாது வெளியேற்றுவதே மனதிற்கும்,உடலிற்கும் நல்லது. சூடான கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.

  ReplyDelete
 11. ஒன்னியும் பிரியலை...நான் அப்பாலிக்கா வாரேன்...

  ReplyDelete
 12. அன்பு நண்பரே

  பிரமாதமாக அம்போ ஸ்பெஷலின் முன்னோட்டம் வந்திருக்கிறது. இரண்டாம் பாகமான செவ்விந்திய குடியிருப்பில் கசமுசாவையும், ஐந்தாம் பாகமான ப்ளூ அலர்ட் இரண்டையும் பற்றி விரிவாக விளக்கியிருக்கலாம். அல்லது முதல் பாகமான பீச்சாங்கரை ஒரமா என்ற பாகத்திலிருந்து கதையோட்டத்தை ஆரம்பிக்கலாமே.

  தேவாங்கு படம் க்ளாஸிக்!

  ReplyDelete
 13. ///அதற்காக காத்திருந்த ரசிகர்கள், பள்ளி விட்டு, கல்லூரி சென்று, வேலை கிடைத்து திருமணமாகி, அவர்களின் குழந்தைகள் வேட்டைக்காரன் சூப்பர் படம்பா என அவர்களை உசுப்பேற்றியபோதும் கூட அம்போ ஸ்பெஷல் வருவதாக இல்லை. //

  காதலரே ,
  கலக்கி விடீர்கள் போங்கள்...

  ReplyDelete
 14. இது போன்ற பதிவுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 15. அதாவது, நான் மட்டும்தானே இது போன்ற பதிவுகளை இட்டுக் கொண்டு இருந்தேன்? திடீரென்று பூங்காவனமும், ஏஜென்ட் காத்தவ்வும் வேறு வந்து விட்டார்கள் என்றால் இப்போது நீங்களுமா?

  அதனால் எங்களுடைய இறையாண்மையில் கை வைக்கும் உங்களை எங்கள் மொக்கை சங்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

  வேறொன்னும் இல்லை, காதலரே.

  ReplyDelete
 16. ரொம்ப நல்லா இருக்கு காதலரே.
  அப்புறம் என் இனிய தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு,உங்களில் ஒருவனான காமிக்ஸ் முட்டாள் ஒருவன் சொல்லிக்கொள்வது,
  வரும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராது.......

  ReplyDelete
 17. //பூங்காவனத்தின் அடர்த்தியான புற்கள் நிறைந்த பூந்தோட்டத்தின் உள்ளே நுழைய குத்தானந்தாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாலேயே இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது//

  என்னை பற்றி எழுதாமல் உங்களால் பதிவே இட முடியாதா? என்னுடைய "பெயரையும்" ஏன் கெடுக்கிறீர்கள்?

  ReplyDelete
 18. நண்பர் மயில்ராவணன் அவர்களே, வருகைக்கும் தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் நன்றி.

  ஜோஸ், நன்றி. எல்லாம் உங்களிடம் எடுத்த பயிற்சிதான் காரணம். செவ்விந்தியக் குடியிருப்பில் கசமுசா, நீல எச்சரிக்கை போன்றவை குறித்து எழுதினால் 18 + என்று போடவேண்டி வருமே!! தேவாங்கு படத்தை ரசித்தவர் நீங்கள் மட்டுமாகத்தான் இருப்பீர்கள். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் லக்கி லிமட், கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ஒலக காமிக்ஸ் ரசிகரே, உங்கள் கண்டிப்பை ஏற்றுக் கொள்கிறேன், உங்கள் இறையாண்மையில் கை வைத்ததிற்கும் மன்னிப்புக்களை கோருகிறேன். இயலுமானவரையில் எதிர்காலத்தில் இவ்வகையான தவறுகள் நிகழாமல் குத்தானந்தா ஜுவாமிகளை அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் இலுமினாட்டி, நீங்களும் இப்படி புளியைக் கரைக்கிறீர்களே :) கருத்துக்களிற்கு நன்றி.

  பூங்காவனம் அம்மையாரே, தேன் இருக்கும் வண்டைப்பற்றி பாடாத வண்டு இந்த உலகில் உண்டா!! வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 19. சொத்தை படலம் விளம்பரத்துக்காக செலவிட்ட பக்கங்களிளெல்லாம் கதையை கொஞ்சம் கொஞ்சம் போட்டிருந்தால் இந்நேரம் முதல் 8 பாகங்கள் முடிந்திருக்கும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.

  படங்களுக்கு நன்றி காதலரே, அம்மணி யாருன்னு சொல்லவே இல்லையே. இந்த மாதிரி அடக்க ஒடுக்கமான அம்மணிகளை சற்று கவனமாக பார்த்துகொள்ளவும். சுவாமி குத்தானந்தா கதவு எங்கு திறந்திருந்தாலும் காற்று வரட்டும் என்று பூந்து விடுகிறாராம்.

  ReplyDelete
 20. அம்போ ஸ்பெஷல் எப்படி இருந்தாலும் லயன் காமிக்ஸின் ஜம்போ ஸ்பெஷல் விரைவில் வரும் என நம்புகிறேன்

  ReplyDelete
 21. நண்பர் சிவ்,

  உங்கள் புள்ளிவிபரங்கள் அசத்தி விட்டன :)) மேலேயும் கீழேயும் இருப்பது பாரிஸ் ஹில்டன், நடுவில் லிண்ட்சே லோகான் போன்ற குடும்ப குத்து விளக்குகள். குத்தானந்தா கதவிடுக்கிலேயே காற்று போல் புகுந்து சென்று விடுவார் என்பது உண்மைதான். தேவாங்கிற்கும் லயனிற்கும் இடையில் இருக்கும் போட்டி நீங்கள் அறிந்ததே, என்று அம்போ வெளியாகிறதோ அன்று உங்கள் கைகளில் ஜம்போவும் ஜம்மென்று இருக்கும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 22. சத்தியமா ஒன்னுமே புரியல... சின்னப் புள்ளையாவே இருந்துட்டேன்... :(

  ReplyDelete
 23. நண்பர் பேபி ஆனந்தன், தேவாங்கு காமிக்ஸ் படித்தால் உடனே முதிர்ச்சி பெறலாம். வாங்குங்கள் தேவாங்கு காமிக்ஸ். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 24. காதலரே, மீ த லாஸ்டு.

  அம்போ ஸ்பெஷலை நம்பி ஏமாந்திருக்கும் எண்ணற்றவர்களில் நானும் ஒருவனாக இருந்து வெளிவந்து பல மாமாங்கள் ஆகி விட்டன. தேவாங்கு காமிக்ஸை நம்பி காத்திருந்தால், தேவாங்கு போல நானும் கண்கள் விழி பிதுங்கி நிலைகுத்தி பாயை பிராண்டியிருக்க வேண்டும். இன்றும் அது வெளிவரும் என்று தானும் ஏமாந்து மற்றவரையும் ஏமாற்றி கொண்டிருக்கும் மக்களை எண்ணி தான் வருத்தபட வேண்டியிருக்கிறது.

  எப்ப போடுவீங்க எப்ப போடுவீங்க... ஆங்ங்... எப்ப போடுவீங்க, என்று பருவ மங்கைகள் முதல், கிழடு தட்டிய ரசிகர்கள் வரை நாக்கில் எச்சில் விட்டு கேட்டும், இன்றும் கம்பீரமாக மவுனம் காக்கும் அந்த விஜயமகாபிரபுவை, இன்னும் எவ்வகையில் பாராட்ட முடியுமோ தெரியவில்லை.... வார்த்தைகளால் வடிக்க முடியாத சோகம்.

  சாணி பேப்பரில் மக்கு லேன் தமிழ் பேசினால்தான் நமக்கு பிடிக்குமா... போதும், இனி வந்தால் வரட்டும்... வராவிட்டால் போகட்டும் என்று வேறு சோலிகழுதையை பார்க்க வேண்டியதுதான்... தேவாங்கு ஆசிரியரே இப்போது அதை தான் பண்ணி கொண்டிருப்பார்... காத்திருப்பது தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒன்றும் புதிது இல்லையே....

  வயாக்கரா தாத்தாவின் 110 வயது அகால மரணத்திற்கு பிறகு கனவுகளின் காதலர் பதிவில் தெரிந்த வரட்சியை போக்க குத்தானந்தாவின் வருகையை மனமார வரவேற்கிறேன். மிட்நைட் மசாலா போல காரசாரமாக பதிவுகள் தொடரட்டும்....

  ReplyDelete
 25. கவலைப்படாதீர்கள் 2011ல வெளிவந்துவிடும் :)

  ReplyDelete
 26. ரஃபிக், உங்கள் உள்ளத்தில் எரிமையாகக் கொதித்துக் கிடந்த உணர்சிகளை இறக்கி வைத்து விட்டீர்கள். தேவாங்கு காமிக்ஸ் ரசிகர்கள் என்ன செய்வது, பொறுத்திருந்துதான் படிக்க வேண்டும் என்ற விதி. வயக்கரா தாத்தா மரணிக்கவில்லை, குத்தானந்தாவே அவர்தான் என்கிறது பூச்சாடி புலனாய்வுப் பத்திரிகை. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் பின்னோக்கி, நீங்கள் சொன்னால் நடக்கும்:) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

  ReplyDelete
 27. neenga yen intha mathiri tension aagaringa. jumbo... sorry ambo spl vantha yenna varalaina yenna. regular issue-ye olunga varra mathiri theriyala, idhula spl issue sonna mathiri vanthura pogutha yenna. intha karumathuku than nan reserve pandrathaiye vittuten[mds vithi vilaku]. so, yennai follow pannunga bossu... idhu varai kathirunthavargal melum kathirukavum, reserve pannathavanga yennai mathiri jollya irunga. don,t worry be happppppy. pin kurippu; intha comment lion jumbo spl-iyo or lion, muthu regular issue-yo kurippathalla. thevangu-vai mattume kurikkum. mr.r.s.k.

  ReplyDelete
 28. mr.r.s.k. illumi yenla puliya karaikura. yeppadiyum 20,010-la vanthurum. hiya jolly. yepadiyum unga grand son-ku grand*3 son padippanla.

  ReplyDelete
 29. அனானி நண்பரே எப்படி நீங்க மட்டும் இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க :)

  ReplyDelete