Tuesday, June 1, 2010

ரேப் ட்ராகன் - 4


ராஜ மந்திரவாதி

அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த ஆளுயர நிலைக் கண்ணாடியில் தெரிந்த கவர்ச்சியான ஆணின் உருவம், தன் தலையை அப்படியும், இப்படியுமாக அசைத்துப் பார்த்து கண்ணாடியில் தெரிந்த தன் அழகிய வதனத்தின் பிரதிபலிப்பில் திருப்தி கொண்டது.

மின்னும் சிவப்பு சட்டை, பளபளக்கும் நாவல் வண்ண கால் சராய், சீனத்தின் மென்பட்டால் செய்த கடல் நீல மேலங்கி என அந்த ஆணுருவம் அணிந்திருந்த உடைகள் அதன் அழகை மேலும் எடுப்பாக்கி காட்டின.

நிலைக் கண்ணாடிக்கு அருகிலிருந்த தட்டொன்றில் பலவிதமான மோஸ்தர்களில் தலைப்பாகைகள் சீரான ஒழுங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தட்டை நெருங்கிய அந்த அழகனின் விரல்கள், மென்மையாக தலைப்பாகைகள் மீது ஒரு கோடாக ஊர்ந்தன. அந்த விரல்களின் ஊர்வலமானது பப்பாசிப் பச்சை தலைப்பாகையில் தடைப்பட்டது.

பப்பாசிப் பச்சைத் தலைப்பாகையை தன் தலையில் அணிந்து கொண்ட அந்த அழகன், மீண்டும் நிலைக் கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியுற்றான், உவகை கொண்டான். முன்னைய இரவில் அவன் கலந்து கொண்ட துகிலுரி நடன விருந்தின் நினைவுகள் அவன் மனதை மெதுவாக தட்டின.

- ஹ்ம்ம்ம்ம்…. என நீண்டதொரு பெருமூச்சு ஆண் அழகனிடமிருந்து வெளிவந்தது.

- அழகான இளம் பெண்கள், வாளிப்பான தேகங்கள், கை விரல் சொடுக்கில் தீர்ந்து விடக்கூடிய காமதாகம், ஆனால் நான் விரும்புவது அதுவல்லவே….என்று அந்த கம்பீரமான ஆணின் மனம் முணுமுணுத்தது.

- காதல். உண்மைக் காதல். ஒரு இரவு மழையின் சுகத்தை தன் விரல்களில் பிசைந்து ஊட்டக்கூடிய அமர காதல்… ஏன்?……. ஏன்? இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அழகில்லையா… திறமையில்லையா இல்லை வசதிகள்தான் இல்லையா… ஏன் என் இதயம் இரவுகளின் மெளனத்தில் ஊமையான அனாதையாக அழுகிறது…. ஏன் இன்னும் நான் கன்னி கழியாதவனாக என் காலத்தைக் கடத்துகிறேன்..

அந்நிலையில் – பிரபோ… என அழைத்த குரலானது அழகனின் சிந்தனைகளிலிருந்து அவனை கலைத்துப் போட்டது.

- ம்ம்ம்… அழகனின் ம்மில் கூட இனிமை இருந்தது.

- அரண்மனையிலிருந்து அவசர ஓலை வந்திருக்கிறது பிரபு.

- அந்த ஓலையை மேசையின் மீது வைத்து விட்டு செல்.

பணியாளன் பவ்யமாக அறையினுள் நுழைந்து, அரண்மனையில் இருந்து வந்த அவசர ஓலையை மேஜை மீது வைத்துவிட்டு நகர்ந்தான். சிறிது நேரம் மேஜையில் இருந்த அந்த ஓலையையே வெறித்துப் பார்த்தான் ஆண் அழகன். அரண்மனை ஒலையைப் பிரிக்காமலே அதில் எழுதியிருக்கும் செய்தியை அவனால் படித்துவிட முடியும். அவனிடம் அழகும், கம்பீரமும் மட்டுமல்ல பல சக்திகளும் குடி கொண்டிருந்தன. வேகமாக தன் அறையை விட்டு வெளியேறி, அரண்மனைக்கு செல்ல ஆரம்பித்தான் ராஜ மந்திரவாதி கருந்தேள்.

[தொடரும்]

10 comments:

  1. //ராஜ மந்திரவாதி கருந்தேள்.//

    அப்டி போடு அரிவாள.... :)

    ReplyDelete
  2. // ஏன் இன்னும் நான் கன்னி கழியாதவனாக என் காலத்தைக் கடத்துகிறேன்.. //
    அடடா.. ஃபீல் பண்ண வச்சுட்டீங்க காதலரே..

    // ராஜ மந்திரவாதி கருந்தேள் //
    ரைட்டு..

    ReplyDelete
  3. // அழகான இளம் பெண்கள், வாளிப்பான தேகங்கள், கை விரல் சொடுக்கில் தீர்ந்து விடக்கூடிய காமதாகம், ஆனால் நான் விரும்புவது அதுவல்லவே…. //

    சூப்ப்ரப்பு

    // ராஜ மந்திரவாதி கருந்தேள் //


    அவரையும் விட்டு வைக்கவில்லையா

    ReplyDelete
  4. ஜிங்குச்சா! ஜிங்குச்சா! செவப்பு கலரு ஜிங்குச்சா! பச்சக் கலரு ஜிங்குச்சா! மஞ்சக் கலரு ஜிங்குச்சா!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. //ஏன் இன்னும் நான் கன்னி கழியாதவனாக என் காலத்தைக் கடத்துகிறேன்..//

    குந்தவி வசிக்கும் அதே அரண்மனையில் வாழ்ந்து கொண்டேவா?!! HOW IS IT POSSIBLE?!! இது எப்படி சாத்தியம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. அப்பா ஒருவழியா இன்னொருத்தர் தலை உருள ஆரமபிச்சிடுச்சி

    // ராஜ மந்திரவாதி கருந்தேள்.கன்னி கழியாதவனாக //

    ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….

    // பப்பாசிப் பச்சை தலைப்பாகை //

    அது என்னாதுங்க பப்பாசி ?

    ReplyDelete
  7. வரவுக்கு தரவு தந்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. :-) //மின்னும் சிவப்பு சட்டை, பளபளக்கும் நாவல் வண்ண கால் சராய், சீனத்தின் மென்பட்டால் செய்த கடல் நீல மேலங்கி //

    //பப்பாசிப் பச்சை தலைப்பாகை//

    இதை நமது தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு முன்னரே ஒரு கட்டுடைப்புவாதி அணிந்து, இந்த ரீதியான உடைகளுக்கு இறவாத அமரத்துவம் தேடித் தந்துவிட்டார் - அவர் பெயர் பசுநேசன் :-)

    //அழகான இளம் பெண்கள், வாளிப்பான தேகங்கள், கை விரல் சொடுக்கில் தீர்ந்து விடக்கூடிய காமதாகம்//

    அட்றா அட்றா அட்றா அட்றா !!! இதுமட்டும் நிஜவாழ்வில் அமைந்துவிட்டால் . . . ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….

    மதுக்குவளைகள் மிஸ்ஸாகிறதே . . ஒருவேளை அடுத்த எபிஸோடில் வரும் என்று நினைக்கிறேன் . . :-)

    ராஜ மந்திரவாதி - இந்தப்பேரே சூப்பரா இருக்கே . . இனி இந்தப் பேருலயும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி, அதுல ஏதாவது மேட்டர் போட்டா என்ன????????

    ReplyDelete
  9. //ஜிங்குச்சா! ஜிங்குச்சா! செவப்பு கலரு ஜிங்குச்சா! பச்சக் கலரு ஜிங்குச்சா! மஞ்சக் கலரு ஜிங்குச்சா!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.//

    தலைவருக்கு ரொம்ப ஆனந்தம் போல இருக்கிறது . . அடுத்தது அவர்தான் என்ற உண்மை எனக்கு சில ரகசிய ஒற்றர்கள் மூலம் தெரியவந்துள்ளது . . :-)

    ReplyDelete
  10. நண்பரே இலுமினாட்டி, அரிவாள் எல்லாம் வன்முறை, அன்பே எமது முறை என குருஜி கூறியதை மறந்து விட்டீர்களா :) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஜெய், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது :) மந்திரவாதி யார் என்றபோது கருந்தேள் என்ற பெயர் தானாக வந்து சல்யூட் செய்தது. என்ன பெயர் பொருத்தம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, நண்பர் கருந்தேளை விட்டு வைக்க முடியுமா, அவர் ஒரு சிங்கம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    தலைவரே, குந்தவியின் கடைக்கண் பார்வையிலிருந்து தப்பிய சிலரில் மந்திரவாதியும் ஒருவர். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ரஃபிக், மகிழ்ச்சியாக இருக்கிறதா :) நல்லது. மீண்டும் குந்தவியுடன் சந்திப்போம். பப்பாசி என்பது நன்கு உருண்டு, திரண்டு, செழித்துக் கனிந்த பப்பாளிகள். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் உழவன், தங்கள் ஆதரவிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், பின்னியெடுக்கப் போகும் மந்திரவாதியை பசு நேசனுடன் ஒப்பிட்டிருக்கும் கருத்து மனவேதனை தருகிறது :) அடுத்த எபிஸோடில் மது உண்டு, மந்திரம் உண்டு. பிளாக்க ஆரம்பிச்சு போட்டு தக்குங்கள் நண்பரே. தலைவர் தொடரில் ஏற்கனவே இடம்பெற்று விட்டார் :). தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete