Monday, May 31, 2010

ரேப் ட்ராகன் - 3


குத்தலகேசியும் குத்துப்பிடியும்

இளவரசி குந்தவி கடத்தப்பட்ட செய்தி அறிந்த குத்து நகர மன்னன் குத்தலகேசி, முதலில் அந்த செய்தியை நம்ப முடியாது வியந்தான். அவன் மனதில் ரகசியமாக நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்தது. அப்பாடா தீர்ந்தது பெரும் தலைவலி என்று மனதில் களி கொண்டவாறே மந்திராலோசனை மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் மன்னன் குத்தலகேசி.

மன்னர் குத்தலகேசியின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை ஒருவாறு ஊகித்துக் கொண்ட குத்து நகர மந்திரி குத்துப்பிடி தொண்டையை மென்மையாக செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

- மன்னாதி மன்னனே, என்ன இருந்தாலும் குந்தவி உங்கள் புத்ரி

- ஹா.. குந்தவி என் புத்ரியல்ல என் மானத்தை வாங்க வந்த சத்ரி அவள்.

- அதற்காக!! மன்னன் மகளை புரட்சிக்காரன் ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து, எம் கடுங்காவலைக் கடந்து, அந்தப்புர பள்ளியறைக்குள் நுழைந்து கடத்திச் சென்றிருப்பதனை அப்படியே விட்டுவிட முடியுமா?!

- விட்டு விட்டோமானால் எம்மிடம் எஞ்சியிருக்கும் கொஞ்ச மானமாவது மிஞ்சும், இவ்வார்த்தைகளை உதிர்த்தபோது மன்னன் குத்தலகேசியின் குரல் தாழ்ந்திருந்தது.

- மன்னா, நாளை இந்த ஊரும், உலகமும் உம்மைத் தூற்றுமே, பெற்ற மகளையே காப்பாற்ற முடியாத மன்னன் என இகழுமே, ஏனைய நகர மன்னர்கள் எம்மைப் பார்த்து நகைப்பார்களே என்பதனைச் சற்று சிந்தித்துப் பாருங்கள் என்றவாறே மந்திரி குத்துப்பிடி மதுபான வகையறாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தன மர மேஜையை அணுகினார்.

- குத்துப்பிடி என் மகள் குந்தவி பற்றி உனக்குத் தெரியாதா? அவள் உன்னையும்கூட…. மன்னன் மேலும் வார்த்தைகளை தொடரமுடியாதபடி அவனை அவசர அவசரமாக இடைவெட்டிய மந்திரி குத்துப்பிடி,

- வேண்டாம் மன்னர் மன்னா, அதனை நான் மறந்து விட்டேன். இன்னமும் காயங்கள்கூட சரியாக ஆறவில்லை. ராஜ வைத்தியர் ஏழு அவர்கள் தந்த பச்சிலை வைத்தியம்தான் கொஞ்சம் உதவுகிறது என்றவாறே மதுக்குப்பி ஒன்றிலிருந்த மதுவை ஒரு குவளையில் அளவாக ஊற்றி, இரு குளிர் கட்டிகள் போட்டு மன்னன் குத்தலகேசியிடம் தந்தார் மந்திரி குத்துப்பிடி. குந்தவி தனக்குச் செய்த அந்தப் பாதகச் செயலை எண்ணிப் பார்க்கையில் அவர் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் கட்டியணைத்துக் கொண்டு சிலிர்த்தெழுந்தன.

மந்திரியிடமிருந்து மதுக் குவளையைப் பெற்ற மன்னன் குத்தலகேசி, குளிர் கட்டிகள் மதுக் குவளையின் சுவரில் மோதி மென்சதங்கை ஒலி எழுப்பும் வகையில் குவளையைச் சில சுழட்டுகள் சுழட்டி, பின் தன் இதழ்களில் குவளையைப் பொருத்தி ஒரு மெகா இழுவை இழுத்தார். தரமான அந்த மது அவர் தொண்டையை ஆலிங்கணம் செய்தது. ஹ்ம்ம்ம்ம்… என்ற பெருமூச்சொன்று மன்னன் குத்தலகேசியிடமிருந்து சோகமாக வெளிவந்தது.

- மந்திரியாரே, இந்த குத்து நகரில் என் மகள் குந்தவியால் கற்பழிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஆண்கள் வெகு சிலரே. அவள் தொலைந்தாள் எனில் இந்நகரம் அவள் கொடும் பிடியிலிருந்து விடுபடும். என் மனமும் வேதனைகள் சிலவற்றிலிருந்து விடைபெறும். மன்னரின் மனதின் சோகங்களை மது, வார்த்தைகளாக மாற்றி வெளியே தள்ளியது.

- மன்னா, நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனாலும் இது எங்கள் கவுரவப் பிரச்சினை. குந்தவியை காப்பாற்ற நாம் முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடத்தியவன் இந்நாட்டின் முன்னாள் வீர கவி, ஆயனச் சிற்பி ரஃபிக். முன்பு ஒரு காலத்தில் உங்கள் மகள், அவனை உயிராக காதலித்தாள். ஆனால் அதனை நீங்கள் தடுத்தீர்கள். ரஃபிக்கிற்கு நீதியற்று தண்டனை வழங்கினீர்கள். இன்று அவன் புரட்சி எனும் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான். உங்கள் மகள் அதனால் மனம் வெம்பி… வார்த்தைகளை முடிக்காது விட்டார் மந்திரி குத்துப்பிடி.

- என்னிலும் தவறிருக்கிறது மந்திரியாரே, குந்தவியின் இஷ்டப்படி ரஃபிக்கையே அவள் மணமுடிக்க நான் சம்மதித்திருக்க வேண்டும், ஆனால் ரஃபிக்கிற்கு ஏற்கனவே மூன்று மனைவியர் எனும் அந்தக் காரணம் என் மதியின் குறுக்கே பாய்ந்த காட்டாறு ஆகி விட்டதே.. ஹாஆஆஆ மன்னன் குத்தலகேசியின் வேதனைக்குரல் மந்திரியின் மனதைப் பிசைந்தது.

- மன்னா, நடந்தது நடந்து விட்டது இனியும் நாம் தாமதித்தல் ஆகாது. இளவரசி குந்தவியின் பள்ளியறையில் கிடைத்த கைக்குட்டையில் ட்ராகன் இலச்சினை இருக்கிறது. புரட்சி நகரின் இலச்சினை அது. பிரபஞ்ச புரட்சிக்காரர்களின் குருகுலம் அது. நாம் விரைந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் எமக்கு எம் ஒற்றர்கள், வீரர்களைத் தவிர நம்பிக்கையாக உதவி செய்யக்கூடியவர் ஒருவர்தான்… மந்திரி வார்த்தைகளை வேகமாகக் கொட்டினார்.

- யார் அந்த ஒருவர் மந்திரியாரே ?

- ராஜ மந்திரவாதி மன்னர் பெருமானே, எம் ராஜ மந்திரவாதி.

[தொடரும்]

17 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. //மதுக்குப்பி ஒன்றிலிருந்த மதுவை ஒரு குவளையில் அளவாக ஊற்றி, இரு குளிர் கட்டிகள் போட்டு//

  அந்த காலத்திலேயே ஆன் த ராக்ஸா?!!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 3. அய்..குந்தவியின் போட்டோ வா அது.கன ஜோர்.... :)

  //ஆனால் ரஃபிக்கிற்கு ஏற்கனவே மூன்று மனைவியர் எனும் அந்தக் காரணம் என் மதியின் குறுக்கே பாய்ந்த காட்டாறு ஆகி விட்டதே//

  ஆஹா,இது எப்போ.சொல்லவே இல்ல... ;)

  ReplyDelete
 4. //ராஜ மந்திரவாதி மன்னர் பெருமானே, எம் ராஜ மந்திரவாதி.//

  அடுத்து ராஜ மந்திரவாதியா? ரைட்... :)

  ReplyDelete
 5. மந்திரியாரை குந்தவி கற்பழித்த பிளாஷ்பேக் காட்சி வருமா வராதா?

  ReplyDelete
 6. //இந்த குத்து நகரில் என் மகள் குந்தவியால் கற்பழிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஆண்கள் வெகு சிலரே.//

  காதலரே, இப்படிப்பட்ட இளவரசிக்கு குந்தவி என்ற பெயரையா வைப்பது. இதை கல்கி அவர்கள் கேள்விப்பட்டால் என்ன ஆகும்?

  ReplyDelete
 7. அன்பு நண்பரே,

  பயங்கர சஸ்பென்ஸ். வீர ரபீக் உத்தமர் என இந்த அத்தியாயத்தில் நிருபித்து விட்டீர்கள். குத்தலகேசி போல குடும்பபாங்கான கதாபாத்திரத்தை இப்படியொரு கதையில் பார்த்து நிரம்ப நாட்கள் ஆகிவிட்டது.

  ட்ராகன் மற்றும் இதர படங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இக்கதை இலக்கியமாகியிருக்கும்.

  ReplyDelete
 8. குந்தவிக்கு இவ்வளவு பிளாஸ் பேக்கா...

  ReplyDelete
 9. குந்தவி, குத்தலகேசி, குத்துப்பிடி, குளிர் கட்டிகள், குத்துநகர்... கதை போற போக்கே சரியில்லையே....

  சரி சரி... என் பெயரை வைத்த கதாபாத்திரம் என்றபடியால், அவனும் ஒரு நல்ல குடிமகன் தான் என்று வெளிச்சமிட்டதுக்கு நன்றி.... பின்ன எப்படி ஒரு கற்பழிப்பு செம்பலை சிறைபிடித்து மக்களை காப்பாற்றி இருக்கிறான்... தன்னையும் துச்சமாக மதித்து :)

  இனி கதை மந்திரவாதி பக்கம் திரும்பட்டும்.... கிவ் சம் ப்ரேக் டூ த புவர் கய் யா... :)

  ReplyDelete
 10. எங்க நம்ம கருந்தேள இன்னும் காணோம் ? :)

  ReplyDelete
 11. //எங்க நம்ம கருந்தேள இன்னும் காணோம் ? :) // இதில் ஏதும் ட்ரிபிள் மீனிங் இல்லையே ?? :-)

  வந்தாச்சில்ல . . இதோ இப்பதான் படிச்சேன் .. வழக்கப்படி தாமதமாக.. :-)

  குத்துப்பிடி மன்னன் குத்தலகேசி - பெயர்ப்பொருத்தம் அபாரம் :-)

  குத்தலகேசியின் பாத்திரத்தைத் தமிழில் செய்யத் தகுதியுடையவர், நம்ம ‘சிபிஅய்’ ஷண்முகசுந்தரமே தான் ;-) .. அவரது குரலில், இந்த டயலாக்கை நினைத்துப் பாருங்கள் -

  ‘ரஃபிக்கிற்கு ஏற்கனவே மூன்று மனைவியர் எனும் அந்தக் காரணம் என் மதியின் குறுக்கே பாய்ந்த காட்டாறு ஆகி விட்டதே.. ஹாஆஆஆ’ - ஷண்முகசுந்தரம் - கலக்கிட்டீருய்யா நீரு :-)

  எனக்கென்னமோ இந்த ராஜ மந்திரவாதி, நம்ம பயங்கரவாதியாக இருக்குமோ என்ற எண்ணம், எனது மூளையில் உதித்தவண்னமே இருக்கிறது.. ரவாதி, ரவாதி என்று இரு பெயர்களும் முடிவதே காரணம் :-)

  ReplyDelete
 12. இதுக்கு MPAA certificate மாதிரி எதுவும் கிடையாதுங்களா? ஏன்னா, நாங்கள்லாம் R-க்கு கம்மியா எதுவும் படிக்கறதில்லை.. :-P

  ReplyDelete
 13. நண்பரே,
  கலக்குறீர்களே,தொடரட்டும் இனிதே..

  ReplyDelete
 14. // இந்த மாதம் கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அளவிற்கு மீறி உபயோகித்ததால்தான் இந்த வேகம்:) அடுத்த மாதம் நிதானம். //

  என்ன காதலரே சென்ற மாதத்தை விட கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அளவிற்கு மீறி உபயோகித்த மாதிரி தெரிகிறது மொத்தம் 12 பதிவுகள்

  Keep it up

  ReplyDelete
 15. தலைவரே, ஆன் த ராக்ஸ் மட்டுமல்ல பல விடயங்கள் இன்னமும் உண்டு. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, குந்தவியின் போட்டோ தனியாக உங்களிற்கு அனுப்பி வைக்கப்படும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிவ், குந்தவைக்கும், குந்தவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மந்திரியாரின் ரேப் ஸீனை எழுதினால் என்னை தடை செய்து விடுவார்களே:) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ஜோஸ், இந்த இலக்கியத்திற்கு ஏதாவது விருது கிடைக்குமா!! ஆம் குத்தலகேசி இதயத்தை தொட்டு விட்டார். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ரஃபிக், சரி சரி உங்களிற்கு சற்று ஓய்வு தர எண்ணியுள்ளோம். அனுபவியுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் கருந்தேள், ஷண்முகசுந்தரத்தை புக் பண்ணி விடலாம் :)) மந்திரவாதி யார் எனும் கேள்விக்குதான் உங்களிற்கு விடை தெரியுமே. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் ஜெய், இதுவே R ஐ விட மோசமாகத்தானே செல்கிறது :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கார்திகேயன், மிக்க நன்றி நண்பரே.

  நண்பர் சிபி, அதெல்லாம் கண்ண்டு கொள்ளக்கூடாது ஆமா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 16. நண்பர் உதயன், ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் ஒரு பிளாஷ் பேக் உண்டு :) தங்கள் ஆதரவிற்கு நன்றி.

  ReplyDelete
 17. I hаve been brоwsing οnline more than three houгѕ todaу, yеt Ι never found any
  intегesting artіclе like
  yours. It's pretty worth enough for me. Personally, if all website owners and bloggers made good content as you did, the net will be a lot more useful than ever before.
  Here is my site simply click the up coming internet site

  ReplyDelete