Sunday, May 16, 2010

இகோமுசி


ரிவால்வர் ரீட்டா, கன் பைட் காஞ்சனா போன்ற படங்களிலிருந்து என் நினைவுகளில் இன்று எஞ்சி நிற்பவை கறுப்பு வெள்ளையும், கதாநாயகிகளின் கனத்த மார்புகளுமே! அவர்களின் பின்னழகுகளை ரசிக்கும் வயது அப்படங்களை பார்த்தபோது எனக்கு வந்திருக்கவில்லை. ரீட்டாவினதோ அல்லது காஞ்சனாவினதோ முகங்கள் எனக்கு இன்று நினைவில் இல்லை.

ஆனால் கவ்பாய் கதைகள் என்றதும் லக்கி லூக்கும், கப்பு அங்கிள் டெக்ஸும், குடிகார ப்ளுபெரியும் சொய்ங் என காமிக்ஸ் காதலர்கள் முன்பாக குதிரைகளில் வருவது போல், குதிரைகள் மேல் ஏறி வந்து, தீயவர்களைக் கொன்றொழித்து, வஞ்சம் தீர்த்து, வணக்கம் போடும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் எனக்கு ரீட்டா, காஞ்சனா பெயர்கள் மறையவில்லை. துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்படத்தில் ஜெய்ஷங்கர் தன்னுடன் இழுத்துக் கொண்டலையும் ஒரு சவப்பெட்டியால்!

மேற்குலக கவ்பாய் திரைப்படங்கள் மற்றும் காமிக்ஸ்கள் குறித்து நண்பர்களிற்கு கூறத்தேவையில்லை. அவை ஏறக்குறைய ஒரு மதமாக ரசிகர்கள் மனதில் ஒளிந்திருக்கின்றன. கவ்பாய் காமிக்ஸ் கதைகளில் இன்றும் சூப்பர் ஸ்டாராக கப்பு அங்கிள் டெக்ஸும், அல்டிமேட் ஸ்டாராக ப்ளுபெரியும் இருந்து வருகிறார்கள்.

ஆனால் டாக்டர் இளைய தளபதியாக இன்றும் எம் மனதில் சுறா போல் இடம் பிடித்திருப்பவர் லக்கி லூக் அவர்களே. ஏனெனில் அவர் ஒரு அப்புரானி, வன்முறையை விரும்பாதவர், சிகரெட் புகைப்பதை தன் ரசிகர்களிற்காக விட்டொழித்தவர், கப்பு அங்கிள் டெக்ஸ் போலில்லாது குறைந்தது ஒரு கதைக்கு ஒரு முறையாவது தான் அணியும் துணிகளைக் கழுவுபவர், துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவர். இவற்றையெல்லாம் தாண்டி தன் கதைகளிலுள்ள நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்து உசுப்பேற்றுபவர்.

Irumbu-Kottai-Murattu-Singam-movie-latest-stills-pics-photo-gallery-01 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கமும் கவ்பாய் கதைதான். காமெடி கலந்த கவ்பாய் கதை. நீண்ட காலத்தின் பின் தமிழ் திரைகளில் ஒரு கவ்பாய் கதை வெளிவந்திருக்கிறது. நீண்ட கால இடைவெளி என்பதால் தமிழ் கவ்பாய் கதைகளுடனான தமிழ் திரைப்பட ரசிகர்களின் உறவை அது புதுப்பிக்க முயல்கிறது. திரைப்படத்தை தன் வழமையான பாணியில் கலவையாக உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன்.

தூக்கு தண்டனைக் கைதியான சிங்காரத்தை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றி, காணாமல் போன நாடோடி புரட்சிக்காரனான சிங்கம் போல் நடிக்கச் சொல்கிறது ஜெய்சங்கர் புரத்தை சேர்ந்த நால்வர் குழு. சிங்காரம் அச்சு அசலாக சிங்கம் போல் தோற்றம் அளிப்பதே இதற்குரிய பிரதான காரணம்.[ அடுத்த காரணம் அவர்தான் படத்தின் கதாநாயகன் லாரன்ஸ் ராகவேந்திரா என்பது]

சிங்கம் போல் ஜெய்ஷங்கர் புரத்தில் காலடி எடுத்து வைக்கும் சிங்காரம், ஒடுக்கப்பட்டதால் அடங்கியிருந்த ஜெய்சங்கர் புர மக்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்து, அவர்களை ஏறக்குறைய அடிமைகளாக நடாத்தி வந்த உசா புர கொடுங்கோலன் கிழக்கு கட்டையின் சர்வதிகார ராஜ்ஜியத்திற்கு ஒரு முடிவு கட்டுவதே இகோமுசியின் கதை ஆகும்.

IMG 1 மன்னர் ஜோக்ஸ் கலாச்சாரம் தமிழ் மக்களின் நகைச்சுவை ரசனையில் பங்கேற்ற அளவிற்கு, கவ்பாய்களின் ஜோக்ஸ் பங்கேற்றிருக்குமா என்பது இங்கு முக்கியமான ஒரு கேள்வி. ஆனால் மேற்குலக காமெடிக் கவ்பாய் திரைப்படங்கள் அந்தப் பங்கை செய்திருக்கின்றன. டெரென்ஸ் ஹில், பட் ஸ்பென்ஸர் போன்றவர்கள் ரசிகர்கள் மனதில் இன்றும் இருப்பவர்கள். காமெடிக் கவ்பாய் படமொன்றினுள் மன்னர் ஜோக்ஸை புகுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். விளைவுகள் கவ்பாய் ரசிகனையோ அல்லது காமெடி ரசிகனையோ முழுமையாக திருப்தி செய்யும் வகையில் அமைந்திடவில்லை என்பது கவலைக்குரியது.

சிம்பு தேவன் கதை நடப்பது 18ம் நூற்றாண்டில் எனக் கூறினாலும் அவர் கதையில் பிரதானப்படுத்துவது சமகால நிகழ்வுகளையே. ஒரு நகைச்சுவைத் துணுக்கு கலைஞன் பார்வையில் சமகால நிகழ்வுகளை காமெடி கலந்து கலாய்த்திருக்கிறார் அவர். அமிதாப், ஜெய்சங்கர், அசோகன், க்ளிண்ட், ஜான் வெய்ன் போன்ற இருபத்தோராம் நூற்றாண்டின் பிரபலங்களை ஜெய்சங்கர் புரத்தின் சரித்திரம் ஆக்கியிருக்கிறார் சிம்பு தேவன்.

வில்லன் கிழக்கு கட்டை ஆட்சி செலுத்தும் USA என்கிற உசா புரத்தை மேற்குலக ஆதிக்க அதிகாரமாக முன்னிறுத்தும் இயக்குனர் அந்த ஆதிக்க சக்திகளிற்கு எதிரான ஒரு கலைஞனின் குரலாக தன் படைப்பை நிறுத்த விழைந்திருக்கிறார். தமிழ் மக்கள் பேச்சிலும், எழுத்திலும் உணர்ச்சியும் வீரமும் தெறிக்கப் பாய்ந்து விட்டு, வெட்டியாய் டீக்கடையில் இருந்து பேசும் பண்பாட்டை அவர் சாடுகிறார். யாவர்க்கும் கல்வி வழங்குதல் என்பதே சகல ஆதிக்கங்களினதும் அழுத்தும் அடிமைப்படுத்தல்களிற்கு எதிரான முக்கியமான ஆயுதம் என எடுத்துக் கூறுகிறார். வேறுபட்ட சமூகங்களிற்கு இடையில் நல்லிணக்கம் என்பது அவசியமானது என்று சுட்டிக் காட்டுகிறார்.

279IKMS_PREVIEW மேற்கூறியவை எல்லாவற்றிற்கும் அவர் தமிழ் கவ்பாய் வேடம் போட்டு குதிரைகளில் ஏற்றி விட்டிருக்கிறார். எனவே முழுமையான ஒரு கவ்பாய் படைப்பு தர வேண்டிய அனுபங்களிலிருந்து சிம்பு தேவனின் படம் விலகிச் செல்கிறது. இது ஒரு வகைக் கலவையான கவ்பாய் படம் என்பதனை ரசிகன் ஊகித்துக் கொண்டு அது அளிக்கும் உணர்வுகளை ஏற்க வேண்டியிருக்கிறது. நேர்மையாகச் சொன்னால் இது கவ்பாய்களை காமெடி செய்யும் ஒரு படமாகும். அந்த வகையில் சிம்புதேவன் வெற்றி பெற்று இருக்கிறார்.

உலக்கை, கிழக்கு கட்டை, பாஸ்மார்க், ஷோலே புரம் எனச் சொற்களை வைத்து நகைச்சுவை காட்ட விழைகையில் இயக்குனர் பலவீனமாகத் தெரிகிறார். குறைந்த பட்ஜெட் என்பது படத்தின் செட்டுக்களிலும், அலங்காரங்களிலும் ஆடை அணிகலன்களிலும் கண்கூடாக தெரிகிறது என்பதனை விட ஒரு தமிழ் கவ்பாய் சமூகத்தை உயிரோடு எம் கண்முன் கொண்டு வந்திருக்கிறது திரைப்படம் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

நகலெடுத்த காட்சிகளை, நான் அவருடைய சிஷ்யன் என்று நாயகனை கூறவைப்பதன் மூலம் நியாயப்படுத்தி தன் நேர்மையைக் காட்டுகிறார் இயக்குனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கரீபியன் கடற் கொள்ளையர்கள் படத்தின் பின்னனி இசையை நகலெடுத்து சிறு துண்டுகளாக இசையில் கலந்து தன் நேர்மையைக் காட்டியிருக்கிறார். லாரன்ஸ் யாரை நகலெடுத்தார் என்பது சின்னக் குழந்தையும் சொல்லக் கூடிய ஒன்றே.

தன் நிழலை விட வேகமாக சுடும் திறனை லக்கி லூக்கிடமிருந்து சுட்டாலும், தன் நிழலை விட வேகமாக எதிரியின் காலில் விழும் திறனை உருவாக்கியதிலும், இதய வடிவில் மயக்க அம்பெய்யும் செவ்விந்தியர்கள்,அசோகனை சுதந்திர சிலை போல் சித்தரிதது போன்றவற்றிலும் சிம்பு தேவன் தெரிகிறார். ஆனால் இவ்வகையான கற்பனைகளின் வறட்சி பாலை நிலம் போல் படைப்பில் பரந்திருக்கிறது.

173656_757407783_concarne_H125730_L images (1) இகோமுசி திரைப்படத்தில் உண்மையிலேயே வாய்விட்டு சிரிக்க வைக்கும் காட்சிகள் செவ்விந்தியக் குடியிருப்பில் இடம்பெறும் காட்சிகளே. அதுவும் அந்தப் பரத நாட்டியமும், உல்டா பாடலும், வாத்தியக் கோஷ்டியும், ஜதி சொல்லலுமென இத்திரைப்படத்தின் மறக்க முடியாத தருணம் அதுவே எனலாம்.

செவ்விந்தியத் தலைவராக வரும் பாஸ்கரும், அவரது மொழிபெயர்ப்பாளரும் படத்தின் ஏனைய பாத்திரங்களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவிற்கு பின்னியிருக்கிறார்கள். அழுவதைக் கூட மொழிபெயர்க்க வைத்திருக்கிறார் சிம்புதேவன். இவர்களிற்கு அடுத்து என்னைக் கவர்ந்தவர் உலக்கை. முன்னாள் நடிகர் பாலையாவின் ஸ்டைலுடன் அமைந்திருக்கும் அவர் நடிப்பு, சில பல இடங்களில் மிகையாகத் தெரிந்தாலும் ரசிக்க வைக்கிறது. லாரன்ஸ் நன்றாக நடனம் ஆடுவார், ஆடுகிறார். இந்தப் படத்தில் பெண் நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள சிரமமாகவிருக்கிறது.

எந்தவித சுவாரஸ்யமுமற்ற, புதையல் தேடிச் செல்லும் ஒரு நீண்ட பயணம் சலிப்பைத் தருகிறது. க்ளைமாக்ஸ், அதனையும் ஒரு காமெடியாக சேர்த்துக் கொள்ளலாம். நடனங்கள் ஒரு ஆறுதல். இசை!!?

பொதுவாக கவ்பாய் படங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற வரும் படங்களாக இருப்பதில்லை. அதிலும் தமிழர்களிற்கு எந்தப் பாதார்தத்திலும் கொஞ்சம் காரம் வேண்டும் என்பது போல் தன் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூற விரும்பியிருக்கிறார் இயக்குனர். ஒரு சாதரண ரசிகன் என்ற வகையில் இயக்குனர் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. கேளிக்கையை தரமான ஒரு கேளிக்கையாக வழங்குவதினால் ஒரு கலைஞன் குறைந்து போய்விடப் போவதில்லை. கருத்து, காமெடி, கவ்பாய்க் கலவையாக வந்திருக்கும் இகோமுசி மெக்ஸிகன் சில்லியையும் மசாலா தோசையும் குழைத்து சாப்பிட்ட உணர்வையே தருகிறது. [**]

34 comments:

  1. மீ த பர்ஸ்ட்

    ReplyDelete
  2. //அடுத்த காரணம் அவர்தான் படத்தின் கதாநாயகன் லாரன்ஸ் ராகவேந்திரா என்பது//

    ஹா ஹா ஹா, மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. காதலருக்கு இகோமுசி ஏமாற்றத்தையே தந்திருக்கிறது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. தற்போதைய சூழலில் மொக்கை படங்களை மட்டுமே பார்த்து மனம் நொந்த மனிதர்களுக்கு இகோமுசி ஓரளவு ஆறுதலை தருகிறது என்பது கண்கூடு.

    நான் பார்த்தவரையில் மிகவும் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் திரையரங்குக்கு மக்களை வரவழைத்து இருக்கிறது இகோமுசி. தமிழகத்தின் பல பகுதிகளில் வார நாட்களில் மதிய ஷோக்கள் கூட ஹவுஸ் புல் ஆக ஓடுவது நல்ல விஷயமே.

    ReplyDelete
  4. கடைசி வரை அரேபிய குதிரை, தொப்புள் அழகி லக்ஷ்மி ராயை பற்றி காதலர் ஒன்றுமே கூறாததால் நான் இந்த பதிவை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  5. விஸ்வா, இகோமுசி நன்றாக ஓடினால் எனக்கு மகிழ்ச்சியே ஏனெனில் இரும்பு மனிதனை விட அது என்னை கவர்ந்திருந்தது. ஆனால் இத்திரைப்படம் எனக்கு முழுமையான திருப்தியை வழங்கவில்லை என்பதே உண்மை நண்பரே. லஷ்மி ராய்க்கு உங்கள் மனதில் இடமிருப்பது எனக்கு தெரியாமல் போய்விட்டதே :)) நான் லஷ்மி ராயின் தொப்புளையா பார்த்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.. ஹிஹிஹி.. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  6. //நான் லஷ்மி ராயின் தொப்புளையா பார்த்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்//

    நானாக இருந்தால் யா + யும் பார்த்திருப்பேன்.

    ReplyDelete
  7. //யா+யும் பார்த்திருப்பேன்// ஒரு குழந்தை பேசும் பேச்சா இது :))

    ReplyDelete
  8. சுறா படத்தை (இரண்டாவது முறையாக) பார்த்துக் கொண்டு இருப்பதால் சுமார் இரண்டு/மூன்று மணி நேரம் பதிவுலகம் பக்கம் வரமுடியாது. ஆகையால் நண்பர்கள் நிம்மதியாக கமென்ட் இடலாம்.

    ReplyDelete
  9. //சுறா படத்தை (இரண்டாவது முறையாக) பார்த்துக் கொண்டு இருப்பதால்// கண்கள் கசிகின்றன, இதயம் நெகிழ்கிறது, ஆனந்தம் ஐஸ்லாந்து எரிமலையின் சாம்பல் புகைபோல் என் மனதில் படர்கிறது.

    ReplyDelete
  10. அண்ணே.. லக்கி மேல உங்களுக்கு ஏதாவது வெறுப்பு இருந்தா சொல்லிருங்கண்ணே.. அத விட்டுட்டு அவரப் போய் இளைய தளபதி கூட.. வேண்டாம்னே.. அது பாவம்..:-)))

    மத்தபடி விமர்சனம் பட்டாசு கிளப்பி இருக்கீங்க.. எனக்கும் இந்தப் படம் ஒரு முழுமையான அனுபவத்த தரலையோன்னு வருத்தம் உண்டு..

    ReplyDelete
  11. அருமை நண்பரே சுறாவை தொடர்ந்து முரட்டு சிங்கத்திலும் சரியான நகைச்சுவை விமரிசன நடை,அருமை.போட்டோ கமெண்ட்ஸ் இருந்தால் இன்னும் சிறப்பு

    ReplyDelete
  12. மிக அருமையான விமர்சனம். படம் முழுமையான திருப்தியைத் தரவில்லை எனினும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளித்தது. நன்றி.

    ReplyDelete
  13. காமெடி கலந்த கவ்பாய் படம்தான் வேறு விசேசம் இல்லை

    ReplyDelete
  14. Ultimately you liked the film, is it not? the film has given wonderful cinematic pleasure, a cool entertainer, above all it has saved masses from sura..:)) jokes apart- good review.

    ReplyDelete
  15. // ஆனால் டாக்டர் இளைய தளபதியாக இன்றும் எம் மனதில் சுறா போல் இடம் பிடித்திருப்பவர் // இன்னும் சுறா பாதிப்பு போகல போல.. :)

    ReplyDelete
  16. ஆஹா . . அடுத்த படமும் கோயிந்தா . . இப்படத்தை நேற்று பார்த்திருப்பேன் . . ஆனால் முடியவில்லை. . எனவே, இந்த வீக்கெண்ட் பார்க்கலாம் என்று நினைத்தேன் . . ஆனால், இனி எப்படிப் போக முடியும்? :-)

    ஆனால், விஸ்வாவின் கருத்து கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது . . எதுவாக இருந்தாலும் பார்த்து விட முயல்கிறேன் . .

    கருத்து சொல்லும் விஷயத்தில் உங்கள் கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன் . . கருத்தே கூறாமல் ஒரு மெகா எண்டர்டைனர் எடுத்தால், கலைஞன் குறைந்துவிட மாட்டான் . . ஆனால், சிம்புதேவன் எப்பொழுதுமே கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கிளம்பி விடுகிறார். . அது தான் கொடுமை . .

    மத்தபடி . . என்னாது சுறா ரெண்டாவது தபாவா? எனக்கு இதயம் அடைக்கிறது . . முழி பிதுங்குகிறது . . கை துடிக்கிறது . .

    ReplyDelete
  17. நண்பர் கார்திகைப் பாண்டியன் தங்கள் ஊக்கம்தரும் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கார்திகேயன், போட்டோக்களே கமெண்டுகள்தானே :)) தமிழ் கவ்பாய்களின் தனி அடையாளம் தொப்பை என்பது இங்கு சிறப்பம்சம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சரவணக்குமார், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    உமா ஷக்தி , தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ஜெய், சுறா மனதில் என்றும் நிற்கும், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கருந்தேள், படத்தைப் பாருங்கள். அப்போதுதானே தமிழ் கவ்பாய்களின் கொட்டத்தை கண்டு களிக்க முடியும் :) விஸ்வா, லஷ்மி ராய் பற்றி கூறியுள்ள கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுவது மகிழ்ச்சியை தருகிறது :)) இப்படத்தில் கருத்துக் கூறுவதன் மூலம் சிம்புதேவன், தன் படைப்புக்கள் வழி தான் நல்ல கருத்துக்களை கூற வருவதாக நிரூபிக்க முயன்றிருக்கிறார். படம் முடிந்து வெளியேறும்போது எறியப்படும் டிக்கட்டுடன் அவர் கூறவந்த கருத்துக்களும் வீழ்ந்திருக்கும் என்பது அவர் அறியாததல்ல.

    தமிழ் திரைப்படங்களில் உண்மையான புரட்சியை ஏற்படுத்தியிருப்பது பிரபஞ்சக் காவியமான சுறாவே. அது ஒரு சினிமா பிக் பாங். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  18. நண்பர் உதயன், வருகைக்கும் தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  19. // இந்தப் படத்தில் பெண் நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள சிரமமாகவிருக்கிறது //
    இதே கேள்வியைத்தான் சுவாமி நித்தியானந்தா கேட்டுகொண்டிருக்கிறார் சிறையில் :-(


    Sunday also Posting no holiday Very good cheers......

    ReplyDelete
  20. //விஸ்வா, லஷ்மி ராய் பற்றி கூறியுள்ள கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுவது மகிழ்ச்சியை தருகிறது ://

    என்ன கொடுமை காதலரே இது?

    ReplyDelete
  21. //என்னாது சுறா ரெண்டாவது தபாவா? எனக்கு இதயம் அடைக்கிறது . . முழி பிதுங்குகிறது . . கை துடிக்கிறது//

    உலக அதிசயமாக இன்று சற்று சீக்கிரமாக வந்து விட்டதால் இன்று மூன்றாம் தடவையும் பார்த்து விட முடிவெடுத்துள்ளேன். குறிப்பாக அந்த ஹீரோயிச பாடலை மனப்பாடம் செய்தால் பயங்கரவாதி டாக்டர் செவன் எனக்கு ஒரு அரிய முத்துக்காமிக்ஸை தருவதாக கூறி இருக்கிறார். அதனால் இந்த முறை படத்தை பார்த்து ரசித்து, அந்த ஹீரோயிச பாடலை மனப்பாடம் செய்து விடுவேன்.

    He is the Heart of the nation

    He is the real sensation

    He is Sooooooooooooooooooooo Raaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  22. //ரிவால்வர் ரீட்டா, கன் பைட் காஞ்சனா//

    இதுல கன்ஃபைட் காஞ்சனா ஒரிஜினல் விசிடியை ஒரு வழியாக தேடி கண்டுபிடிச்சு வாங்கிட்டேன்! ஆனா ரிவால்வர் ரீட்டா எங்கேயுமே கிடைக்கல!

    ஆனால் ஜெய்ஷங்கர் நடித்த கெள-பாய் படங்கள் சிலவற்றை வாங்கிவிட்டேன்! கங்கா, ஜக்கம்மா, ஒரே தந்தை, எங்க பாட்டன் சொத்து போன்ற தமிழ் கெள-பாய் காவியங்கள் அதில் அடக்கம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  23. //துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்படத்தில் ஜெய்ஷங்கர் தன்னுடன் இழுத்துக் கொண்டலையும் ஒரு சவப்பெட்டியால்!//

    துணிவே துணை படத்தை முழு நீள கெள-பாய் படம்னு CLASSIFY பண்ண முடியுமான்னு தெரியல! ஏன்னா அதுல ஜேம்ஸ்பாண்ட், திகில் படங்களின் அம்சங்களும் நிறைந்திருக்கும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  24. இன்னும் நான் இகோமுசி பாக்கல! அதனால் உங்க கருத்துக்களை நான் முழுமையா ஏத்துக்க முடியாது! படம் பாத்துட்டு சொல்றேன்!

    ஆனா நீங்க கொங்கு நாட்டுத் தங்கம் தமிழ் கெள-கேர்ள் காவியம் பாத்திருக்கீங்களா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  25. இந்த இகோமுசி குறித்த இனிய விமர்சனத்தில் இருபத்தியைந்தாவதாக கருத்து தெரிவிப்பது நானேதான்!

    அதாவது... மீ த 25வது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  26. என்ன கொடுமை ஐயா இது?!!

    25வதாக கமெண்டு, ஓட்டு ரெண்டையும் போட்டது நானேதான்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  27. தானே வந்த தானைத் தலைவர் வாழ்க

    ReplyDelete
  28. //ஆனா நீங்க கொங்கு நாட்டுத் தங்கம் தமிழ் கெள-கேர்ள் காவியம் பாத்திருக்கீங்களா//

    மறக்க முடியுமா? அதுவும் அந்த குதிரை ஓட்டம் மறக்க முடியுமா?

    ReplyDelete
  29. ////துணிவே துணையும் நினைவில் நிற்கிறது; அத்திரைப்படத்தில் ஜெய்ஷங்கர் தன்னுடன் இழுத்துக் கொண்டலையும் ஒரு சவப்பெட்டியால்!//

    துணிவே துணை படத்தை முழு நீள கெள-பாய் படம்னு CLASSIFY பண்ண முடியுமான்னு தெரியல! ஏன்னா அதுல ஜேம்ஸ்பாண்ட், திகில் படங்களின் அம்சங்களும் நிறைந்திருக்கும்!//

    அது ஒரு ட்ரான்ஸ் ஜெனரிக் படம். சில படங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அதுவரை வந்த போக்கே முற்றிலும் மாறிவிடும். குறிப்பாக நம்ம Robert Rodriguez இயக்கத்தில் வந்த From Dusk Till Dawn படம்.

    அதில் அவர்கள் நைட் கிளப் செல்லும் வரை ஒரு திரில்லர் படமாக இருக்கும், பின்னர் அதன் போக்கே (Fantasy) மாறிவிடும்.

    அதைப்போல இந்த துணிவே துணை படத்தில் முதலில் ஒரு திரில்லர் படமாக ஆரம்பித்து நடுவில் கவ் பாய் வெஸ்டர்ன் ஆக மாறி முடிவில் மறுபடியும் சேசிங் திரில்லர் ஆக முடியும்.

    அதில் வரும் ஒரு பாத்திரம் நம்ம காமிக்ஸ் பதிவரின் பெயர். தெரியுமா?

    ReplyDelete
  30. //இந்த இகோமுசி குறித்த இனிய விமர்சனத்தில் இருபத்தியைந்தாவதாக கருத்து தெரிவிப்பது நானேதா//

    இ னாவுக்கு இ னா போட்டு ரைமிங் ஆக டைமிங் காட்டும் பயங்கரவாதி வாழ்க.

    ReplyDelete
  31. நண்பர் சிபி, நித்ஸ் மட்டுமல்ல ஏறக்குறைய வீட்டுக் காவலில் உள்ள பிரபல இயக்குனர் ரொமான் பொலான்ஸ்கி கூட இதே கேள்வியை தன் மனதில் கேட்டுக்கொண்டிருக்கிறார் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    தலைவர் அவர்களே, பின்னூட்ட ஜாக்குவார் விஸ்வா அவர்களே துணிவே துணை திரைப்படம் குறித்த தெளிவான விளக்கங்களிற்கு முதற்கண் என் நன்றிகள்.

    தலைவரே விஸ்வாவை பாடச் சொல்லி பரிசு வழங்க வேண்டாம்.. உம்மாயி உம்மாயி பாடலில் திரு சுறா ஒரு நிமிடம் நிறுத்தாமல் நடனம் ஆடுவதுபோல் நடனம் ஆடினால் மட்டுமே அரிய முத்தை வழங்கவும்.

    பிலிம் நீயூஸ் ஆனந்தன் போல் தலைவரும் தமிழ் சினிமா குறித்த ஆவணங்களை சேகரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. தமிழ் சினிமாவில் கவ்பாய் படங்கள் குறித்து ஒரு தொடர் பதிவு இட்டால் அனைவரும் பயனடைவோம்.

    கொங்கு நாட்டுத் தங்கம் கவ் கேர்ள் படத்தை நான் பார்க்கவில்லை. இணையத்தில் கிடைத்தால் பார்த்து விடுகிறேன்.

    விஸ்வா யார் அந்த காமிக்ஸ் பதிவர் ?!

    தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பர்களே. எங்க ஊரு பாட்டுக்காரன் கவ்பாய் பட வகைக்குள் அடங்காதா ?

    ReplyDelete
  32. visit my blog and comment
    http://thecowboycomics.blogspot.com/

    ReplyDelete
  33. நண்பரே,

    அருமையான விமர்சனம். என்னை பொருத்த வரை இகோமுசி போன்ற படங்கள் தமிழ் திரையுலகில் அவ்வபோது வர வேண்டும். இல்லையேல் நிஜமான தென்மாவட்ட கதைகளை காட்டுகிறோம் என்று “ கோரிபாளையம்” போன்ற வன்முறை காட்சிக்ள் நிறைந்த திரைபடங்கள் வெளியிட்டு மனிதனின் வக்கிரமான எண்ணங்களை நியாய படுத்த ஆரம்பிப்பார்கள்.

    ReplyDelete
  34. நண்பர் cap tiger, தங்கள் கருத்து நியாயமானதே. நான்கு பேர், சில அரிவாள்களுடன் படமொன்று எடுத்து விடுவது ட்ரெண்டாகி விட்டது கருத்துப் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete