Saturday, May 8, 2010

கண்கள் பேசும் ரகசியம்


பெஞ்சமின், நீதிமன்றம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி. சலிப்பான அவன் வாழ்க்கையிலிருந்து விடுபட வழிதேடும் பெஞ்சமின், அவன் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கொலை விசாரணை குறித்து நாவல் ஒன்று எழுதுவது எனும் தீர்மானத்திற்கு வருகிறான்.

பெஞ்சமின் பலவாறாக முயன்றும் நாவலின் ஆரம்பத்தை அவனால் சரியாக எழுதிவிட முடியாமலிருக்கிறது. இதனால் தனது முன்னைநாள் மேலதிகாரியும், தற்போதைய அரச சட்டத்தரணியுமான இரெனைச் சென்று சந்திக்கிறான் பெஞ்சமின். இரெனின் ஆலோசனைகள் நாவலை ஆரம்பிக்க அவனிற்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை அவனிற்கு இருக்கிறது. இரெனின் மீதான அவன் காதலும் அவன் மனதில் இன்றுவரை மெளனமாகவே இருக்கிறது.

பெஞ்சமின் மனதிலிருந்து இலகுவாக எது வெளிவருகிறதோ அதிலிருந்து நாவலை ஆரம்பிக்கச் சொல்லி அவனிற்கு ஆலோசனை தருகிறாள் இரென். பெஞ்சமினின் நினைவுகள் 25 வருடங்களிற்கு முன்பான ஒரு நாளை இலகுவாக மீட்டெடுக்கின்றன. இலைதுளிர் காலத்தின் மென்மையான சூரியனின் அழகுடன், அந்த நாளில் பிரகாசித்த இரெனின் அழகிய முகம் அவன் மனதில் அழகாக புன்னகைக்கிறது.

1974, Beunos Aires நீதிமன்றத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறான் பெஞ்சமின். அவன் பணியாற்றி வரும் நீதிமன்ற நீதிபதி பெஞ்சமினின் புதிய மேலதிகாரியான இரெனை அவனிற்கும், அவன் சக ஊழியனான பாவ்லோவிற்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். இரெனின் அழகு பெஞ்சமினையும், பாவ்லோவையும் அசத்துகிறது. காதலின் முதல் துளி பெஞ்சமினின் இதயத்தை தொடுகிறது.

இந்த சமயத்தில் கொலை ஒன்று நடந்த இடத்திற்கு சென்று விசாரணைகளில் கலந்து கொள்ளும்படி பெஞ்சமின் பணிக்கப்படுகிறான். கொலை நடந்த வீட்டிற்கு அதிருப்தியான மனத்துடன் செல்லும் பெஞ்சமின், அங்கு வன் புணர்ச்சிக்கு முரட்டுத்தனமாக உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் இளம் மனைவியான இலியானவின் உடலைப் பார்த்து உடைந்து போகிறான். பொலிஸ் அதிகாரி, பெஞ்சமினின் துணை தமக்கு தேவையில்லை என்று கூறியபோதிலும் கொலை விசாரணையில் தானும் கலந்து கொள்ள ஆரம்பிக்கிறான் அவன்.

dans-ses-yeux-2010-19834-690940918 தொடரும் விசாரணைகளில் இலியானாவின் கொலைக்கு காரணமான குற்றவாளிகள் என அவள் வீட்டிற்கருகில் வேலைபார்த்த இரு கொத்தனார்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களை பொலிஸ் காவலில் சென்று விசாரிக்கும் பெஞ்சமின், கொத்தனார்கள் அக்கொலையைச் செய்யவில்லை என்பதை அறிந்து கொள்கிறான். இந்த தவறான கைதுக்கு காரணமான அதிகாரி ரோமானோவுடன் கைகலப்பில் இறங்கும் பெஞ்சமின், ரோமானோ மீது புகார் தந்து அவனிற்கு தண்டனை இடம்மாற்றம் கிடைக்கவும் செய்கிறான்.

பின்வரும் நாட்களில் கொலையுண்ட இலியானவின் கணவனான ரிக்கார்டோவைச் சென்று சந்தித்து அவனுடன் உரையாடுகிறான் பெஞ்சமின். தன் காதல் மனைவியைக் கொலை செய்தவனிற்கு தண்டனை கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறான் ரிக்கார்டோ. காப்பியை அருந்தியபடியே ரிக்கார்டோ தந்த புகைப்பட ஆல்பங்களை பார்வையிடும் பெஞ்சமினின் பார்வை திடீரென அந்தப் போட்டோகளில் காணப்படும் ஒரு நபரின் மீது நிலைக்கிறது.

அந்த நபர் இருக்கும் போட்டோக்களில் எல்லாம், அவன் பார்வை இலியானா மீது பதிந்திருப்பதை காண்கிறான் பெஞ்சமின். ரிக்கார்டோ மூலம் அந்த நபர் இலியானாவின் இளமைப் பருவத்து நண்பன் கொமெஸ் என்பதனையும் அவன் அறிந்து கொள்கிறான். கொமெஸ் மீது பெஞ்சமினிற்கு சந்தேகம் உருவாக பொலிஸ் துணையுடன் கொமெஸை விசாரணை செய்வதற்காக அவன் தேட ஆரம்பிக்கிறான்.

பொலிஸ் தன்னைத் தேடுகிறது எனும் விடயத்தை அறிந்து கொள்ளும் கொமெஸ் தலை மறைவாகி விடுகிறான். பிறிதொரு நகரத்தில் வாழ்ந்து வரும் கொமெஸின் தாயாரின் வீட்டைச் சோதனையிட தனக்கு அனுமதி தர வேண்டுமென தான் பணியாற்றும் நீதிபதியிடம் வேண்டுகிறான் பெஞ்சமின். அவரோ அது தன் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது எனக்கூறி அவனது வேண்டுகோளை நிராகரித்து விடுகிறார்.

இந்த நாட்களில் இரெனிடம் தன் மனதை முழுமையாக பறி கொடுத்து விடுகிறான் பெஞ்சமின். ஆனால் அது குறித்து இரெனிடம் அவன் பேசாது தன் மனதிற்குள்ளேயே மருகுகிறான். காதலை அவளிடம் சொல் என்ற சகா பாவ்லோவின் ஆலோசனைகளைக் கூட அவன் கேட்காதவன் போல் இருந்து விடுகிறான். இவ்வேளையில் இரெனிற்கு கவுரவமான குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒருவனை திருமண நிச்சயம் செய்யவிருப்பதாக தகவல்களும் கசிய ஆரம்பிக்கின்றன.

dans-ses-yeux-2010-19834-1446397071 நீதிபதி, கொமெஸின் தாயின் வீட்டில் சோதனை போட அனுமதி தர மறுத்த நிலையில் தன் சகா பாவ்லோவுடன், கொமெஸின் தாய் வசிக்கும் இல்லத்தில் சட்ட விரோதமாக நுழைந்து தேடுதல் நடாத்துகிறான் பெஞ்சமின். அந்த வீட்டில் கொமெஸைக் கண்டு பிடிப்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அங்கு கண்டெடுத்த சில கடிதங்களை தன்னுடன் கூடவே எடுத்து வருகிறான் பாவ்லோ.

பெஞ்சமின் மற்றும் பாவ்லோவின் இந்த அத்து மீறிய செயல் குறித்த புகார் அவர்கள் பணிபுரியும் நீதிபதியை வந்தடைகிறது. அவர்கள் இருவரையும் அழைத்துக் கண்டிக்கும் நீதிபதி, இலியானா கொலை விசாரணையை இழுத்து மூடி விடுகிறார்.

சில மாதங்களின் பின் ரயில் நிலையமொன்றில் உட்கார்ந்திருக்கும் இலியானவின் கணவன் ரிகார்டோவைச் சந்திக்கிறான் பெஞ்சமின். தன் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் கொமெஸ், என்றாவது ஒரு நாள் ரயில் நிலையத்தில் தன்னிடம் மாட்டுவான் எனும் நம்பிக்கையில் தினந்தோறும் ரிக்கார்டோ அங்கு வந்து காத்திருப்பதை அறியும் பெஞ்சமினின் மனம் வேதனை கொள்கிறது.

தனது மேலதிகாரியான இரெனுடன் இது குறித்துப் பேசும் பெஞ்சமின், இலியானா கொலை விசாரணையை மீண்டும் முடுக்கி விட தனக்கு உதவ வேண்டுமென அவளிடம் வேண்டுகிறான். மூடப்பட்ட கொலை விசாரணையானது இரெனின் உதவியால் மீண்டும் திறக்கிறது.

பெஞ்சமினின் சகாவான பாவ்லோ, கொமெஸின் தாயாரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதங்களை தொடர்ந்து படிக்கிறான். ஒரு நாள் அவனது புத்திசாலித்தனமான கணிப்பால் கொமெஸை எங்கு பிடிக்கலாம் என்பதை அவன் கண்டுபிடித்து விடுகிறான். இந்த தகவலின் அடிப்படையில் கொமெஸ், பொலிஸின் உதவியுடன் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். பெஞ்சமினதும், ரிக்கார்டோவின் மனங்களும் ஆறுதல் கொள்கின்றன.

சிறைக்கு செல்லும் கொமெஸ், அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் அரசிற்கு எதிரான கெரில்லாக்கள் குறித்த தகவல்களை அரசிற்கு போட்டுக் கொடுத்து சிறையில் இருந்து விடுதலையாகிறான். அரசிற்கு எதிரான சக்திகளை ஒடுக்கும்! அமைப்பொன்றில் அவன் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறான்.

இலியானவின் கணவன் ரிக்கார்டோ வழியாக இது குறித்து அறிந்து கொள்ளும் பெஞ்சமின், இரெனுடன் கொமெஸ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட காரணமாக இருந்த அதிகாரியை காணச் செல்கிறான். அந்த அதிகாரி வேறு யாருமல்ல, பெஞ்சமினால் தண்டனை இடமாற்றம் பெற்ற ரோமானோதான் அவன். கொமெஸ் போன்றவர்களின் சேவை நாட்டிற்கு தேவை எனக்கூறும் ரோமானோ, கொமெஸின் விடுதலை குறித்து பெஞ்சமினும், இரெனும் எதுவும் செய்ய முடியாது என எச்சரித்து அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறான்.

dans-ses-yeux-2010-19834-815165919 இதே வேளையில் தன் விடுதலை குறித்து பெஞ்சமின் விசாரணைகளை நிகழ்த்துவதை அறியும் கொமெஸ், பெஞ்சமினின் கதையை முடித்து விடுவதென்ற முடிவிற்கு வருகிறான்….

25 வருடங்கள் மனதில் ரகசியமாக காத்திருக்கும் ஒரு காதல், நீதி தூக்கி எறியப்பட்ட ஒரு கொலை விசாரணை, தாகம் தீராத ஒரு வஞ்சம் இவை ஒவ்வொன்றின் சுவையும் குறையாத வகையில், மனதின் உணர்வுகளை குழைய வைக்கும் மென்மையான ஒரு திரைப்படமாக அசத்துகிறது ஆர்ஜென்டினத் திரைப்படமான El Secreto de Sus Ojos [அவர்கள் கண்களில் இருக்கும் ரகசியங்கள்]. படத்தை திறமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Juan José Campanella.

மனிதரின் மனதில் வாழ்ந்திருக்கும் ரகசியங்கள், அவற்றின் துணையுடன் அவர்கள் வாழும் வெறுமையான வாழ்க்கை என்பவற்றை கதை மாந்தர்களின் உணர்வுகள் வழி சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் கேம்பநெலா. தனது மனதில் இரெனாவிற்கான காதலை வளர்த்துக் கொண்டு அதுபற்றி அவளுடன் எதுவுமே பேசாத பெஞ்சமினிற்கும், இரெனாவிற்குமிடையிலான காட்சிகளில் அவர்கள் கண்களை பேசவைத்திருக்கிறார் அவர்.

இலியானாவின் கொலை விசாரணை குறித்து தன்னுடன் பேச வரும் பெஞ்சமின், தன்னுடன் அந்தரங்கமாக ஏதோ பேச வருவதாக எண்ணி ஏமாறும் இரென், பெஞ்சமினை அந்தக் கணம் தன் கண்களால் பார்க்கும் காதல் பார்வையில் உள்ளங்களை அள்ளி எடுக்கிறார். 25 வருட கால ஓட்டத்தில் அவர்கள் இருவரிற்குமிடையில் மெளனமாக உட்கார்ந்திருக்கும் அந்தக் காதல் சுகமான ஒரு வலி. அதனை ரசிகர்களிடம் கொண்டு வந்து தருகிறார் கேம்பநெலா.

dans-ses-yeux-2010-19834-1602691208 பெஞ்சமினாக வரும் ஆர்ஜெண்டின ஜார்ஜ் க்ளுனி! Ricardo Darin, இரெனாக வேடமேற்றிருக்கும் நடிகை Soledad Villamil ஆகியோர் சிறப்பான கலைஞர்கள். அமைதியான நடிப்பாலும், புன்னகையாலும் ரசிகர்களைக் கவர்ந்து விடுகிறார்கள். இயக்குனர் பிரதான பாத்திரங்களிற்கு வழங்கிய அதே முக்கியத்துவத்தை சில துணைப்பாத்திரங்களிற்கும் வழங்கியிருக்கிறார். ஆச்சர்யப்படும் வகையில் இந்த துணைப் பாத்திரப் படைப்புக்கள் திரைப்படத்தின் பிரதான பாத்திரங்களை விட மனதில் நின்று விடுகின்றன.

பெஞ்சமினின் சகாவான பாவ்லோ பாத்திரத்தில் வரும் நடிகரான Guillermo Francella, அடக்கி வாசித்து ஆனால் பிரம்மிக்க வைக்கும் நடிப்புத் திறமைக்கு ஒரு சரியான உதாரணம். கொமெஸின் தயார் வீட்டில் அவர் அடிக்கும் கூத்து அருமை. படத்தின் நகைச்சுவைக்கு முக்கிய காரணம் இவரின் திறமையான நடிப்பே. மதுபான விடுதியில் கொமெஸ் எழுதிய கடிதங்களை வைத்தே அவனை எங்கு பிடிக்கலாம் என்பதற்கு அவர் நடாத்தும் அந்த விபரிப்பு கனகச்சிதம். தனக்கு மேலிருக்கும் அதிகாரத்தால் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு தன் வாழ்வை சிதைக்கும் பாத்திரமாக எளிமையான நடிப்பில் மனதை கொள்ளை கொள்கிறார் பிரான்செலா. திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரங்களில் முதலிடம் பாவ்லோ பாத்திரத்திற்கே.

25 வருடங்களின் பின் தன் நாவலிற்காக, கொலையுண்ட இலியானவின் கணவன் ரிக்கார்டோவை சென்று சந்திக்க பெஞ்சமின் கிளம்பும் போது கதையில் உருவாகும் திருப்பங்கள் அதிர வைக்கின்றன. அந்த இறுதிக் கணங்களில் திரைப்படம் ஒரு மர்மக் கவிதையாகிவிடுகிறது. இலியானாவின் கணவன் என்ற வகையில் சாதரண ஒரு துணைப் பாத்திரமாக இருந்த ரிக்கார்டோவின் பாத்திரமும் உறுதி வாய்ந்த ஒன்றாக உருவெடுக்கிறது. ரிக்கார்டோ பாத்திரத்தை அதன் உணர்வுகளுடன் சிறப்பாக செய்திருக்கிறார் நடிகர் Pablo Rajo.

கணவன், நாவலாசிரியன், கொலைகாரன், இந்த மூவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த இறுதித் தருணம் போல் அதிர்ச்சி நிறைந்த, வேதனையான காட்சியை நான் அண்மைக்காலத்தில் திரையில் பார்த்ததில்லை. மனிதாபிமானம், அறம், நீதி, மனச்சாட்சி போன்றவை எல்லாம் அகலமாக தம் வாயை மூடிக் கொண்டு தப்பி வெளியேறும் தருணமாக அது அமைந்திருக்கிறது. இந்த வருடம் சிறந்த அயல் நாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் இத்திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது உரித்தான ஒன்றே.

இனிய இசை, உறுத்தாத அழகான ஒளிப்பதிவு, காட்சிப்படுத்தலில் கலந்திருக்கும் யெளவனம், காதல், மர்மம் கலந்த ஒரு அருமையான திரைக்கதையை தொய்வின்றி கவிதைபோல இழைத்து திரையில் சொல்லியிருக்கும் திறமையான இயக்கம் என அருமையான ஒரு படைப்பாக இருக்கிறது இந்த திரைப்படம்.

கண்கள் பேசும் ரகசியம் என்பது, வாய் திறந்து சொல்லாது மனதினுள் துடித்துக் கொண்டிருக்கும் காதலாகவும் இருக்கலாம் அல்லது தொலைந்து போன காதல் வழங்கிச் சென்ற வெறுமையான வாழ்வினைக் கடக்க உதவும் வஞ்சத்தின் மொழியற்ற கண்ணீராகவும் இருக்கலாம். [****]

ட்ரெயிலர்

29 comments:

 1. மறுபடியும் நாந்தான் முதலில் வந்துள்ளேன் காதலரின் இந்த Post'ல்.

  எப்புடி?

  ReplyDelete
 2. கலக்குங்க குழந்தை :)) உங்கள்கூட போட்டி போட சுறாவால்தான் முடியும்:)

  ReplyDelete
 3. உங்களைப்போல பல மொழி வித்தகனாக இருந்தால் கண்டிப்பாக பார்த்துவிடுவேன். நம்ப மாட்டீர்கள். ஒரே மூச்சில் படித்து முடித்த பதிவு இது. அத்துணை வேகத்தில் சென்றது இந்த பதிவு.

  உண்மையில், உண்மையிலேயே படத்தை பார்க்க தூண்டிவிட்டது உங்களின் இந்த பதிவு.

  ReplyDelete
 4. வேறு ஏதேனும் மொழிகளில் இந்த படம் வந்துள்ளதா காதலரே?

  அல்லது ஆங்கிலத்தில் சப் டைட்டில் உள்ளதா? :)

  ReplyDelete
 5. உண்மையாகவே நல்ல பகிர்வு நண்பரே. உங்களின் பதிவின் வழி படிக்கும் போதே பார்க்க தூண்டிவிடுகிறது.
  எந்த மொழியாக இருந்தால் என்ன .. ? கலைக்கு மொழி எது ? கண்டிப்பாக பார்த்து விடுவேன்.

  ReplyDelete
 6. மீ தி செகண்ட்
  இப்படி வைத்துகொள்ளலாமா
  படித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
 7. அண்ணே... அண்ணே..... எங்கிருந்தன்னே இந்த மாதிரி படங்களை பிடிக்கிறீர்கள் / பார்க்கிறீர்கள்
  கதை மிக நன்றாக உள்ளது
  வழக்கம் போல மிக அழகாக கண் முன்னே காட்சியை கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்

  Keep it up

  ReplyDelete
 8. //வேறு ஏதேனும் மொழிகளில் இந்த படம் வந்துள்ளதா காதலரே?

  அல்லது ஆங்கிலத்தில் சப் டைட்டில் உள்ளதா? :)//
  கிங் விஸ்வா அவர்களே www.subscene.com என்ற வலைத்தளத்தில் நீங்கள் விரும்பும் எல்லா இங்கிலீஷ படங்களுக்கும் சப் டைட்டில் கிடைக்கும் but this movie i searched i can't get it

  ReplyDelete
 9. விஸ்வா, இந்த திரைப்படம் எங்கள் யாழ்நகர் குப்பத்தில் இந்த வாரம்தான் வெளியாகியது முதல் காட்சியை சுறாவுடன் இருந்து கண்டு களித்தோம். அமெரிக்காவில் சென்ற வருடமே வெளியாகி விட்டது. நிச்சயமாக ஆங்கில சப்டைட்டில்களுடன் நீங்கள் இதனை தரவிறக்க முடியும். பிரெஞ்சு சப்டைட்டில்களை சுறா உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்த அந்தக் கணம் ஒரு அழகான தென்றல்:) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  நண்பர் வேல்கண்ணன், இணையத்தில் அல்லது நல்ல டிவிடி கிளப்புகளில் கண்டிப்பாக கிடைக்கும் தவறவிடாதீர்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிபி, யாழ்நகர் குப்பத்தில் சுறா மூவிஸிற்கு வேலையே இவ்வகையான திரைப்படங்களை வெளியிட்டு பின்பு ஒரு கலந்துரையாடலை நிகழ்த்துவதுதான். தாங்கள் விஸ்வாவிற்கு வழங்கியிருக்கும் சுட்டிகளிற்கும், தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 10. அடப்பாவி விஸ்வா . . இங்கயுமா ? நீர்தான் பின்னூட்டப் புலி . . :-)

  பதிவு அட்டகாசம் !! இந்தப் படத்தைப் பற்றி நான் கேள்வியே பட்டதில்லை . . இப்பொழுதுதான் தெரிந்து கொள்கிறேன் . .

  அருமையான இப்படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி . .தேடிப்பிடித்து விடுகிறேன் . .

  வஞ்சத்தின் மொழியற்ற கண்ணீர் - மிகவும் அழகான சொற்றொடர் . . மனதில் நின்றுவிட்டது . . :-)

  ReplyDelete
 11. //அடப்பாவி விஸ்வா . . இங்கயுமா//

  Yeah, It's Me................

  ReplyDelete
 12. நல்லாருக்குங்க உங்க விமர்சனம். டோரண்ட் லிங்க் கிடைக்குமா ஆங்கில் ச்ப்டைடிலோட.

  ReplyDelete
 13. நண்பர் கருந்தேள், என்ன செய்வது.. விஸ்வா இஸ் பக் இன் பிஸ்னஸ் :)) நண்பரே இப்படத்தை கண்டிப்பாக பாருங்கள். சில தருணங்களில் உரையாடல்கள் கவித்துவமாக இருக்கும். ஆரம்பக் காட்சியில் பெஞ்சமின் ஓடும் ரயிலில் இருந்து இரெனைப் பார்பான், ரெயினைத் தொடர்ந்து ஓடி வரும் இரெனின் உருவம் ஒரு புள்ளியாகி மறையும் அந்த சமயம் / மேடையில் அவள் உருவம் புள்ளியாகி மறைய அவன் மனதில் அவள் உருவம் விஸ்வரூபமாக நிறைந்தது/ என்று ஒரு வசனம் வரும், அருமையாக இருக்கும், அதேபோல் உச்சக்கட்டக் காட்சிக்காகவும் இத்திரைப்படத்தை நீங்கள் காண வேண்டும் என்று விரும்புகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  விஸ்வாவிற்கு அடப்பாவி என்று பட்டத்தை வழங்கியவர்கள் யார், இது எப்போது நடந்தது :)

  நண்பர் ராமசாமி கண்ணன், நிச்சயமாக கிடைக்கும் என்றே நம்புகிறேன். You Tubeல் கூட ட்ரெயிலர்கள் ஆங்கில சப்டைட்டில்களோடு காணக்கூடியதாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 14. //விஸ்வா இஸ் பக் இன் பிஸ்னஸ்//

  இது Back in Business என்பதின் தமிழ் வடிவமா? நம்ம பயங்கரவாதி என்னை BUG in business என்று கூறுகிறார்.

  //விஸ்வாவிற்கு அடப்பாவி என்று பட்டத்தை வழங்கியவர்கள் யார், இது எப்போது நடந்தது :)//

  இது என்ன புது கரடி? ஆரம்பித்து விட்டீர்களா?

  காதலரே,
  "நம்ம" காலத்து பாக்கியராஜ் படங்கள் எனக்கு பிடிக்கும். போதுமா?

  ReplyDelete
 15. விஸ்வா, Back in Buisness ன் தமிழ் வடிவம்தான் அது, நம்ம என்ற சொல் கேட்கும் போதிலே இன்பத்தேன் வந்து பாயுதே காதிலே. தலைவர் உங்களைச் சீண்டாமல் வேறு யார் உங்களைச் சீண்டுவது. சுறா அணுகுண்டு காட்சியைப் பார்க்கும் போது தலைவர் தன் பழைய காலத்திற்கு சென்று வந்திருப்பார் :))

  ReplyDelete
 16. //சுறா அணுகுண்டு காட்சியைப் பார்க்கும் போது தலைவர் தன் பழைய காலத்திற்கு சென்று வந்திருப்பார் :)//

  தலைவர் பதிவிடாமல் இருப்பதன் காரணமே அந்த கடைசி காட்சிதானாம். கேப்டன் விஜையகாந்த் கூட ஏதாவது பச்சை அல்லது சிவப்பு கலர் வயரை தான் கட் செய்வார். ஆனால் ஜோசப் ச்சேன்ட்ரா மொத்த வயரையும் புடுங்கியதை பார்த்து விட்டு மறு பேச்சில்லாமல் இருக்கிறார்.

  காதலர் போன்ற இளம் சிங்கங்கள் சுறா போன்றவற்றை பார்த்து விட்டு இன்னமும் பதிவிடாமல் இருந்தால் எப்புடி?

  ReplyDelete
 17. என்னுடைய படத்தை பற்றியா பேசுகிறீர்கள்?

  ReplyDelete
 18. விஸ்வா, சுறா பற்றி பதிவிட என் அனுபவம் போதாது :))

  வாங்க ஜோஸஃப் ச்சேண்ட்ரா, குளோபல் ரீதியாக உங்கள் படத்தை மட்டும்தானே பேச முடியும்.

  நண்பர் த.சொ.ரொ.பெ, தங்கள் தகவலிற்கு நன்றி.

  ReplyDelete
 19. அடடே.. க்ரைம் த்ரில்லர், IMDB Top 250-ல இருக்கு, R Rated வேற.. பாத்துடுவோம்.. ;-)

  ReplyDelete
 20. நல்ல பதிவு காதலரே. பார்த்தால் போச்சு. ஓட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 21. யோவ் ஜோசப்பு . . அண்டவெளியே தற்கொல பண்னிக்குற மாதிரி ஒரு படத்த எடுத்து வெச்சிட்டு, இங்க வேற வந்து, ‘என்னுடைய படத்தைப் பற்றியா பேசுகிறீர்கள்? ன்னு செந்தமிழ்ல வேற பேசுறியா . . மவனே அங்க வந்தேன் . . மெர்சலாய்ருவ . . இதுல நன்றி வேற. . பிச்சிப்புடுவேன் பிச்சி . .

  அடப்பாவி பட்டத்தை வழங்கியவர் உங்கள் கருந்தேள் . . கருந்தேள் . . கருந்தேள் . .

  பக் இன் பிஸினஸ் - பிரமாதம் :-)

  ReplyDelete
 22. நண்பர் ஜெய், பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துகளிற்கு நன்றி.

  நண்பர் பிரசன்னா ராஜன், வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள் ஜோஸப்ப மன்னிச்சு விட்டுடுங்க, காவற்காரன் நடிக்க வேண்டாமா :))

  ReplyDelete
 23. எனக்கு இங்கே இடமில்லையா?

  ReplyDelete
 24. நான் ரொம்ப லேட்....
  அருமையான படமா இருக்கும் போல.முதல் ஸ்டில் அருமை.இருவருக்குள் இருக்கும் காதல்,வலி,சோகம் எல்லாம் அதிலேயே தெரியுதே.... வாவ்..டவுன்லோட் பண்ண வேண்டிய படங்களோட லிஸ்ட் ஏறிகிட்டே போகுது... :)

  ReplyDelete
 25. அப்புறம்,நானும் காமிக்ஸ் பத்தி எழுதுறேன் பேர்வழின்னு மொக்க போட்டு வச்சுருக்கேன்.முடிஞ்சா வந்து பாத்துபுட்டு போங்க.....

  ReplyDelete
 26. மீ த ஃப்ர்ஸ்ட்டு இது தேவையா :) நண்பர் இலுமினாட்டி இல்லாவிடில் நீங்கள்தான் மீ த லாஸ்ட்டு.

  நண்பர் இலுமினாட்டி, நேரம் கிடைக்கும்போது இப்படத்தினை தவறாது பார்த்திடுங்கள். உங்கள் முக்கூட்டு விருந்து பதிவைப் படித்து மகிழ்ந்தேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 27. Viswa rompa super nalla padangala niraivana kathaiutan solluvathu arumai valthukkal.

  ReplyDelete