Sunday, May 30, 2010

ரேப் ட்ராகன் - 2


மாடத்தில் ஒரு சுறா

பஞ்சணையில் மயங்கிய பைங்கிளி குந்தவியை, மென்மையான ரோஜாவைத் தாங்குவது போல் ஏந்திக் கொண்டு பள்ளியறையை விட்டு மாடத்தை நோக்கி ஓடியது அவ்வுருவம். அவ்வுருவம் மாடத்தை நெருங்குவதற்கும் அந்தப்புர ராஜலேடிகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிரடிப்படையின் தலைமை வீரன், தன் வீரர் குழுவோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்தவாறே அதே மாடத்தை நெருங்குவதற்கும் சரியாகவிருந்தது.

இளவரசியின் பள்ளியறையிலிருந்து ஒரு உருவம் தன் கைகளில் இளவரசியுடன் ஓடி வருவதைக் கண்ட தலைவனும் வீரர்களும் உஷாரானார்கள். அடடா ஒரு பெரும் தொல்லை இன்றுடன் தீர்ந்ததே என்று அவர்கள் தங்களிற்குள் நினைத்து மகிழ்ந்தாலும் குத்து நகர மன்னனின் தண்டனைக்கு அஞ்சி, மர்ம உருவத்தை தடுத்து நிறுத்துவது எனும் முடிவிற்கு வந்தார்கள்.

- ஏய்ய்ய்ய், யாரங்கே ஓடாதே நில். வீரர் தலைவனின் குரல் மாடமெங்கும் மோதியது. மாடத்தினைக் கடந்து கீழே பாய எத்தனித்த மர்ம உருவமோ இக்குரலால் சற்று நிதானித்தது. குத்து நாட்டு அந்தப்புர அதிரடிக் காமாண்டோக்களை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையையும் அது வீசியது.

- என்னையா யாரென்று கேட்கிறீர்கள் ? உருவத்தின் குரலில் இடியின் வலிமையும், சிங்கத்தின் கர்ஜனையும் கலந்திருந்தது. அந்தப்புர காமாண்டோகளிற்கு இந்தக் குரலை முன்பு எங்கோ கேட்ட உணர்வு தோன்றி மறைந்தது.

- ஆம், யார் நீ? காமாண்டோக்களின் தலைவன் குரலில் உறுதி அதிகரிக்க எத்தனித்து, தோற்றது.

- என்னை நன்றாகப் பாருங்கள் வீரர் தலைவனே, என் கண்களைப்பாருங்கள், முறுக்கேறிய இந்த உடலைப் பாருங்கள், உளி ஏந்திய இந்தக் கரங்களைப் பாருங்கள், கவிதை படைத்த இந்த விரல்களை பாருங்கள். ம்ம்.. நன்றாகப் பாருங்கள். வன்முறையும், மதுவும், காமமும் மறைத்து திரையிட்டிருக்கும் உங்கள் நினைவுகளை அவை விழித்தெழச் செய்கின்றனவா என்று பார்க்கலாம்

மாடத்தில் ஒளிர்ந்த விளக்குகளின் பிரகாசம் அந்த உருவத்தின் முகத்தை தெளிவாக பார்த்தறிய உதவவில்லை என்பதால் வீரர் தலைவன் அந்த உருவத்தை சற்று நெருங்கி இரு அடிகள் எடுத்து வைத்தான். அந்த உருவத்தின் முகம் இப்போது அவனிற்கு தெரிந்தது. பேரிடி அவன் மேல் வீழ்ந்தது. அவன் குரல் திக்கியது.

- நீயா? என்ற வீரர் தலைவன் குரலில் நடுக்கம் சேர்ந்திருந்தது

-ஆம், நானேதான். ஆனால் முன்பு போல் உங்களைக் கண்டு இந்த மாடத்தில் நடுங்கி, ஒடுங்கி உறையும் புறா அல்ல நான், உங்கள் உயிர்களெல்லாம் மறுபிறப்பே வேண்டாம் எனக் கதற வைக்கும் வகையில் உங்களைக் கூறு போடும் சுறா நான். இளவரசி குந்தவியை நான் உங்கள் முன் கடத்திச் செல்கிறேன் வீரம், திறமை இருந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றவாறே மர்ம உருவம் மாடத்திலிருந்து கீழே மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

- ஆயன சிற்பி, வீரக் கவி, புரட்சிக்காரன் என்ற சொற்களை வீரர் தலைவன் உதடுகள் திகிலுடன் முனுமுனுத்தன. மாடத்திலிருந்து கீழே குதித்து குதிரை வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி விற்களையும், அம்புகளையும் எய்ய முனைந்த வீரர்களை தடுத்த வீரர் தலைவன்,

- ஆயுதங்கள் குறி தவறிப் பாயட்டும், உங்கள் மேல் பொய்க் காயங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள், இங்கு பெரும் மோதல் நிகழ்ந்ததாக காட்டிக் கொள்ளுங்கள். குந்தவி எனும் தொல்லை இன்றுடன் ஒழிந்தது. ரஃபிக், எங்களைக் குந்தவியிடமிருந்து காப்பாற்றிய தெய்வமே உனக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வோம். இது குருஜி குத்தானந்தா மேல் சத்தியம் என்று உணர்ச்சிவசப்பட்டான்.

வீரர்கள் விட்ட அம்புகள், விற்கள் என்பன அந்தப்புர பூங்காவனத்தின் செடி, கொடிகளை தாக்கிக் கொண்டிருக்க, சளைக்காத வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான் அவன். ஆம் முன்பொருகாலத்தில் அவன் ஆயனச் சிற்பி, வீரக் கவி, இன்று குத்து நகரமே அஞ்சும் புரட்சிக்காரன். குத்து நகர மன்னன் மகள் குந்தவியின் முன்னாள் காதலன். இன்று காதலை இழந்து அவளையே கடத்திச் செல்லும் கயவன். அவன் பெயர் ரஃபிக். அவனிற்கு பிடித்த வார்த்தை குவிக்.

- யாரங்கே?

- நாங்கள் மட்டும்தான் நிற்கிறோம் வீரர் தலைவரே

- குத்து நகர மன்னனிற்கு இந்த மகிழ்ச்சியான அதிர்ச்சியான செய்தியை உடனே தெரிவியுங்கள்

- ஒகே ..பாஸ்

- அதன் பின்பு இந்த மகிழ்சியான தருணத்தைக் கொண்டாட ஒரு குளிர் பீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

- ஜெய் ஜக்கம்மா ஜாலியோ ஜாலி பாஸ்

- அது மட்டுமல்ல, துகிலுரி நடன அழகிகளின் ஆட்டம் தூள் பறக்க வேண்டும். ராஜ மந்திரவாதிக்கும் அழைப்பு வையுங்கள்.

- அவரில்லாமாலா…. .ஏய் டண்டனக்கா டனக்கு னக்கா டனக்கு டனக்கு டன்கு டங்கா…..

[ இன்னும் வேணுமா!]

12 comments:

 1. அன்பு நண்பரே,

  அய்யகோ, இன்னும் பல டவுசர்கள் கழற்றப்படும் அபாயம் உள்ளதே இத்தொடரில். வீரக் கவி கடற்கொள்ளைக்காரனாகும் போது இத்தொடர் முடியும் என நினைக்கிறேன்.

  கடத்திக் கொண்டு போயிப்பது வீரக் கவி என்பதால் குந்தவையை பற்றிய பயம் இப்போது போய்விட்டது. பாவம் ஆயன சிற்பி.

  ReplyDelete
 2. அய்யோ, அரண்மனை காவலர்கள் முதற்கொண்டு எல்லாரும் மகிழ்ச்சி கடலில் ஆழுவதை பார்த்தால், அந்த கேப்மாரி தப்பான ஒரு காரியத்தை செய்து விட்டான் போலிருக்கிறதே...

  மாதுவில் மயங்கி மதி இழந்த அந்த அப்பாவி, அந்த குத்தாட்ட குந்தவியிடம் சிக்கி சின்னாபின்னாமாக போகிறேனா என்று நினைத்தால் பகீரென்று இருக்கிறது.... இது அநியாயம் அக்கிரமம்... அந்த வீரனை காப்பாற்ற இன்னொரு வீரன் இல்லையா.... அய்யகோ.....

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. //அவன் பெயர் ரஃபிக். அவனிற்கு பிடித்த வார்த்தை குவிக்.//

  காதலரே,ஒரு கொலை வெறியோட தான் கிளம்பி இருக்கீறு.நடத்துங்க...கலக வீரன் ரபிக்குக்கு பிடித்த வேறு வார்த்தைகள் என்னவோ? :)

  ReplyDelete
 5. ஆஹா . . ஆயனச் சிற்பி, ரஃபீக்கா? ரைட்டுண்ணா . . :-)

  முன்னாள் காதலன், இந்நாள் விரோதியாக மாறியதற்குக் காரணங்கள் ஏதும் உண்டோ?

  மேலும், ரஃபீக்குக்கு அந்த ராஜ காலத்து உடை, தலைப்பாகை, வாள் எல்லாம் யோசித்துப் பார்த்தால், ஜோராகத்தான் இருக்கிறது . .:-)

  அது யாருங்க ராஜ மந்திரவாதி? இந்தப் புது பலியாடு யாரோ?? :-)

  மதுவருந்தி, மண்டைக்கு ஏறி, ரஃபீக் குந்தவியிடம் பேசும் காதல் (??!!) வசனங்களைக் கேட்க ஆவலாக இருக்கிறோம் . . :-)

  ReplyDelete
 6. //[ இன்னும் வேணுமா!]//

  இப்பவே கண்ணக் கட்டுதே...

  முடியல...

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 7. என்னங்க...கொஞ்சம் பொன்னியின் செல்வன்..கொஞ்சம் சுஜாதா..கொஞ்சம் ராஜேஸ்குமார் எல்லாமே மிக்ஸிங்..மிக்ஸிங்....

  ReplyDelete
 8. என்ன ரஃபீக் இப்படி பண்நீடீங்க...... சரி சரி... ஆசை யாரைவிட்டது.... நீங்க உங்க கச்சேரியை களை கட்டுங்கோ காதலரே.....

  ReplyDelete
 9. // உயிர்களெல்லாம் மறுபிறப்பே வேண்டாம் எனக் கதற வைக்கும் வகையில் உங்களைக் கூறு போடும் சுறா நான் //

  இன்னுமுமா பகவானே !!! ?????

  ReplyDelete
 10. // இது அநியாயம் அக்கிரமம்... அந்த வீரனை காப்பாற்ற இன்னொரு வீரன் இல்லையா.... அய்யகோ..... //


  ஏன் இல்லை இதோ கிளம்பிவிட்டார் குருஜி குத்தானந்தா

  ReplyDelete
 11. ஜோஸ், உங்கள் டவுசரிற்கு எந்தவிதசேதமும் ஏற்படாது என்று உறுதி செய்கிறேன் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ரஃபிக், தயவு செய்து அமைதியாகுங்கள் எண்ட்ரியிலே இப்படி ஆர்ப்பாட்டம் செய்தால் எப்படி. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் கருந்தேள், காதலன் புரட்சிக்காரனாக மாறியதற்கு காரணம் உண்டு, ரஃபிக்கிடம் குந்தவி பேசும் சூடான வசனங்கள் உண்டு. மந்திரவாதி யார் என்று என்னைக் கேட்டால் நான் எங்கே போவது :)) குருஜி கண் திறந்தால் சரி, கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் ஆநி ஆர் ராமமூர்த்தி, தங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது மிக்க நன்றி நண்பரே.

  நண்பர் ரமேஷ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. ரஃபிக் இப்படிச் செய்திருக்க கூடாது என்பதில் நியாயமிருக்கிறது :))

  நண்பர் சிபி, பகவானை ஏன் கூப்பிடுகிறீர்கள் :)) குத்தானந்தா அருளால் யாவும் நலமாக நிறைவுறும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 12. இது சுறா இரண்டாம் பாகத்தின் கதைமாரி இருக்கே...

  ReplyDelete