Monday, May 24, 2010

சிங்கம் சென்ற பாதைகாமிக்காலாஜி நிறுவனர் திரு. ரஃபிக் அவர்கள் சமகால காமிக்ஸ் படைப்புக்களை காமிக்ஸ் ரசிகர்களிற்கு மின்னல் வேகத்தில் அறிமுகப்படுத்துவதில் இன்று முன்னனியில் இருப்பவர். அவரது பதிவுகள் அழகையும், ஆழத்தையும் ஒருங்கே பெற்றவை என்ற பாராட்டுக்களை அள்ளிக் கொள்ளத் தவறியதேயில்லை.

phantom2_0405 ராணி காமிக்ஸ், ஒரு மென்பொருளாளனின் நாட்கள் [அங்கத்தவர்களிற்கு மாத்திரம்] என மேலும் இரு வலைப்பூக்களையும் அவர் மிகத் திறமையுடன் நிர்வகித்து வருகிறார். நாளொன்றிற்கு 30 மணிநேரம் அயராது பணிபுரியும் திரு. ரஃபிக் அவர்கள் தனது பரபரப்பான மணித்துளிகளிடையே எமக்கும் சிறிது நேரம் ஒதுக்கினார். அவரது நீண்ட பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கு நாம் உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

நிருபர்: வணக்கம் திரு ரஃபிக் அவர்களே, உங்கள் பொன்னான நேரத்தை எங்களிற்கு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள். நீங்கள் பதிவிடும் வேகம் உலகப் பிரசித்தம் பெற்றது. எனவே முதல் கேள்வியை அதிலிருந்தே ஆரம்பிக்கிறேன். எப்படி இவ்வளவு வேகமாக உங்களால் சராமாரியாக பதிவுகளை பிரசுரிக்க முடிகிறது ?

ரஃபிக்: ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது உலக வழக்கு. அதையே 30 மணி நேரமாக மாற்றியது என் கணக்கு. தூக்கம் ஒய்வை மட்டுமே தரும். சிலர் கனவுகளையும் தரும் என்பார்கள்.[ பெரிதாக சிரிக்கிறார்.. அது செல்போன் சிணுங்கியது போல் இருக்கிறது] ஆனால் நான் நேரத்திற்கு முன்பாக ஓட விழைகிறேன். இது காலத்துடன் நான் நடத்தும் போட்டி. ஒவ்வொரு தடவையும் அதில் வெற்றி என்னைத் தழுவும் போதும் அது எனக்கு மேலும் உத்வேகத்தை தருகிறது. இன்னும் வேகமாக ஓட உந்துகிறது.

நி: எவ்வாறு உங்களால் ஒரு நாளிற்குள் 3 பதிவுகளை பிரசுரிப்பது என்பது சாத்தியமாகிறது?

Aldebaran-TheGroup ர: காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் நாம் உணவருந்த மறக்கிறோமா? அதில் தவறுகிறோமா? என் பதிவுகளை உணவாக அருந்துபவர்களை நான் பட்டினி போட விரும்புவதில்லை! அவர்களில் ஒருவரின் மனம் நிரம்பாவிடில் கூட நான் என் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்து விடுகிறேன்.

நி: உங்களின் இந்த வேகத்தில் ராணி காமிக்ஸ் வெளியிட்ட அனைத்து இதழ்களும் இன்னம் சில வாரங்களிற்குள் பதிவாக இடப்பட்டுவிடும். இது ராணிக் காமிஸ் வலைப்பூவின் இயக்கத்தை முடங்க செய்து விடுமே. அதாவது உங்கள் வேகமே இங்கு உங்களிற்கு எதிராக திரும்பும் ஒரு சாத்தியம் தோன்றுகிறது அல்லவா?

ர: இது எனக்கு ஒரு சவால். என் வேகம் எனக்கு விடுக்கும் சவால். என்னுடன் நானே மோதுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் நான் ஒய்ந்து விடப் போவதில்லை. ராணிக் காமிக்ஸ் இதழ்கள் அனைத்தும் பதிவாக்கப்பட்டுவிடும் தருணத்தில், அப்பதிவுகள் அனைத்தையும் தூக்கி ஒரு பக்கம் போட்டு விட்டு மீண்டும் புதிதாக பதிவிட ஆரம்பிப்பேன். அதனை நினைக்கையில் இப்போதே என் உடல் சிலிர்க்கிறது[ கைகளைக் காட்டுகிறார், கை முடிகள் சிலிர்த்துப் போய் எழுந்து நிற்கின்றன. கூர்மையான அவதானிப்பில் பிடரி முடிகள் கூட சிலிர்த்திருப்பதை அவதானிக்க முடிகிறது]

நி: ஒரு மென்பொருளாளனின் நாட்கள் வலைப்பூவில் நீங்கள் அலசாத விடயங்களே இல்லை எனலாம். மிகவும் குறுகிய காலத்தில் உங்கள் மற்றைய வலைப்பூக்களை விட, பதிவு மற்றும் வாசகர் எண்ணிக்கையில் முந்திச் செல்லும் வலைப்பூவாக அது நிமிர்ந்து நிற்கிறது. இது நீங்களே விரும்பிச் செயல்படுத்தும் ஓர வஞ்சனையா?

blueberry 85-03 ர: இங்கு நீங்கள் பிரயோகிக்கும் ஓர வஞ்சனை எனும் சொற்பதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் [ கண்கள் சிவப்பேறி கனல் பறக்கிறது, மிகவும் சிரமபட்டு தன் கோபத்தை அடக்குகிறார். குருஜி குத்தானந்தாவின் போட்டோவைப் பார்த்து அமைதியாகிறார்] ஒவ்வொரு நாளும் பகிர்வதற்கும், சிந்திப்பதற்கும், வாதிடுவதற்கும் உரிய எண்ணற்ற விடயங்களுடனேயே பிறக்கிறது. மென்பொருளாளின் நாட்கள் வலைப்பூ அதற்கு ஒரு களமாக செயற்படுகிறது. அதன் உருமாற்றமும், கவர்ச்சியும் தானே உருவானது. காமிக்ஸ் வலைப்பூக்களை அது மிஞ்சுவதற்கு காரணம் அதில் மிகவும் சூடான விடயங்கள் உடனுக்குடன் நேர்மையாக அலசப்படுவதுதான். ஒரு தந்தைக்கு தனது பிள்ளைகள் எப்படியோ அதே அக்கறையுடனேயே என் மூன்று வலைப்பூக்களையும் பராமரித்து வருகிறேன்[ தண்ணீர் குடிக்கிறார்]

நி: நீங்கள் முழுமை செய்த வேதாள மாயத்மா- கானகக் காற்று [10 பாகப் பதிவு], Bone- ஒரு மீள் பார்வை, மாண்ட்ரெக்கின் மந்திரம்- மனோவசிய மஸ்தான், அல்டெப்ரான் – வேற்று அறிவு, ஸ்கார்பியோன் – தேளின் பொந்திற்குள்ளே, மாடஸ்டி- ஒரு அழகான வாழ்க்கை, ஃப்ளுபெரி- மேற்குத் தடம் போன்ற பதிவுகள் சர்வதேச அங்கீகாரம் வென்றவை. எவ்வாறு உங்களால் இதனை நிகழ்த்த முடிகிறது? உங்கள் ரகசியம் என்ன ?

modesty-blaise-1 ர: ஒரு கதையைப் படிக்கும் போதே என் மனதில் பதிவு சூல் கொண்டு விடுகிறது. மறு நாள் உதயத்தின் முன்பாக அக்கதைகள் அல்லது அக்கதையின் நாயகர்கள் குறித்த என் பதிவு தயாராகி விட வேண்டுமென்பதில் நான் உறுதியாகவிருக்கிறேன். அதனையே செயற்படுத்தியும் வருகிறேன். இது தொடரும். ஒரு முறை ஒரே நாளில் இரு கதைகளைப் படித்து முடித்து விட்டதால் இரு பதிவுகளை எழுதியே ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியது. நான் தயங்கவில்லை. ஒரு பதிவை இடது கையாலும், மற்றயதை வலது கையாலும் இரு வேறு கணினிகளில் தட்டினேன். இரண்டு பதிவுகளையும் நான் ஒரே நாளில் இட்ட போது பதிவர் மைனர் மச்சான் ஒரு நாளில் இரு உதயம் என்று எழுதினார். அது உண்மைதான்.[ முகத்தில் ஒரு புன்சிரிப்பு, அதில் பெருமை கலந்திருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது] மேலும் குருஜி குத்தானந்தாவின் கை மாற்றிக் கை தியானம் என் சக்தியை மேலும் பெருக்குகிறது.[ குருஜியின் படத்தை மீண்டும் பரவசத்துடன் பார்க்கிறார்]

playboyg நி: கொஞ்சம் கடினமான கேள்வி, தொடர்ந்து எழுதுவது சலிப்பைத் தரவில்லையா? என்றாவது பதிவுகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று உங்கள் மனதில் ஒர் எண்ணம் ஓடியதில்லையா?

ர: [பதிலளிப்பதற்கு முன்பு சற்று சிந்தனையில் ஆழ்கிறார், அதிர்ந்த கைத்தொலைபேசியை அடக்குகிறார்] மூச்சு விடுவதை நான் நிறுத்தும் போது என் எழுத்துக்களும் நிற்கும்.

பதிலைக் கூறி விட்டு எழுகிறார் ரஃபிக், அவர் எமக்கு ஒதுக்கியிருந்த நேரம் ஓடிச் சென்றிருந்தது. அவரிற்கு மீண்டும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம். தன் மந்திரப் புன்னகையுடன் எம்மிடமிருந்து விடைபெற்ற ரஃபிக் கம்பீரமாக நடந்து சென்றார். அவரது அலுவலக அறையை அவர் அடைவதற்குள் அவர் பதிவுகளின் எண்ணிக்கை மேலும் இரண்டாக அதிகரித்திருக்கும். அந்த தன்னம்பிக்கையும், வேகமும் சிங்கம் சென்ற பாதையில் பதிந்த தடமாக அவர் பின்னால் சென்று கொண்டேயிருந்தன.

குத்து டைம்ஸுக்காக - கபால் வைரவ்

தவிர்க்க முடியாத காரணங்களினால் தமிழ்நாட்டு மார்க்கோபோலோ அவர்களின் பேட்டியை எம்மால் பிரசுரிக்க முடியவில்லை. இயன்றளவு விரைவில் அவரின் பேட்டியை உங்களிற்கு குத்து டைம்ஸ் வழங்கும்.

13 comments:

 1. மீ த பர்ஸ்ட்.

  ReplyDelete
 2. வளர்க குத்து டைம்ஸ்.

  ஆனாலும் பூங்காவனதிர்க்கு போட்டியாக வளருவது?????????????????????

  ReplyDelete
 3. யாருங்க அவரு கபால பைரவ்?

  அவரால எங்க பயப்கரவாதிய பேட்டி எடுக்க முடியுமா?

  ReplyDelete
 4. விஸ்வா, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. பூங்காவனம் அம்மையாருக்கு போட்டியாக குத்து டைம்ஸ் உருவாகாது என்பதனை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். கபால் வைரவ் குத்து டைம்ஸின் தலைமை நிருபர், ஆப்கான் முதல், பாக்தாத் வரை உள்ள பொந்துகளில் சுழியோடுபவர், பயங்கரவாதிகளை பேட்டி எடுப்பதில் கபால் வைரவ் தனியார்வம் காட்டுவார். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. ம்ம்ம்ம் யார் அந்த மார்க்கோபோலோ!!!

  ReplyDelete
 5. அன்பு நண்பரே மற்றும் ஜெ ச

  கடமை என்ற நாலெழுத்தையே தாரக மந்திரமாக கொண்டு வாழ்பவர் ரபீக் என்பது குறுகிய வட்டத்திற்கே தெரிந்த உண்மையாகும். இது பாரிஷ் வரை சென்றது அவரின் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசாகும். அன்பர் ரபீக் லேப்டாப்பை டேபிளிலும், டெஸ்க்டாப்பை மடியிலும் வைத்து பதிவிடும் ஒரு அரிய புகைப்படம் என்னிடம் உள்ளது.

  வேலை பளு என்னை நெருக்கும்போது அதை பார்த்தே மனம் தேற்றிக் கொள்கிறேன். சிங்கம் சென்ற பாதை முதல் பாகம் படிக்கும் போது மனம் நிறைகிறது. அடுத்த பாகங்களையும் வேதாள மாயத்மா படங்களுடன் வெளியிடுங்கள்.,

  ReplyDelete
 6. //என் பதிவுகளை உணவாக அருந்துபவர்களை நான் பட்டினி போட விரும்புவதில்லை!//

  ஆஹா ஆஹா....
  சந்தோசத்தில் எனக்குப் புல்லரிக்கிறதே...

  ஹாஹாஹா ....
  இதுக்கு பதில் மரியாதையாக ரபிக் அவர்கள் இன்று முதல் நாள் ஒன்றிற்கு நூறு பதிவுகள் இடுவார் என்று எங்கள் 'வரும் ஆனா வராது' சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.... :)

  ReplyDelete
 7. காதலரே,

  எப்படி மனதில், மட்டும் கனவில் நான் நினைத்தவைகளை நிகழ்காலத்தில் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்.... அப்படியே கால இயந்திரத்தில் நிகழாத ஒரு எதிர்காலத்தை நேரில் பார்த்து வந்து உணர்வு....

  30 மணி நேர நாட்கள் சாத்தியமாகும் போது, நீங்கள் கூறிய அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது... அப்புறம் என்ன குத்தானந்தா அருளால் பதிவுகள் கரகோசம் செய்யலாம்.

  நிரம்ப நாட்கள் அடங்கி கிடந்த மொத்த ஆசையும் தீர தீர இந்த ஒரு சின்ன பதிவிலேயே அறைந்து சாத்தி விட்டீர்களே... இனி இன்னும் இட மேலும் என்ன பாக்கி இருக்கிறதா ? குத்து டைம்ஸ் இனி மார்க்கோபோலோவை தொடரட்டும்....

  இன்னொன்று தமிழ்நாட்டின் என்று கூறிய சொல்லிற்கு எதிராக, பாண்டியில் பைரவ் உருவ பொம்மை கொளுத்தபடுவதாக தகவல். அவரை பேட்டி என்ற பெயரில் அங்கு அழைய வேண்டாம் என்று எச்சரித்து விடுங்கள்.

  ஜோஷ்: அப்புகைபடத்தை கண்டிப்பாக வெளியிடுங்கள்.... புரட்சி செய்யும் அக்காட்சிந நம் கண்களுக்கும் தேவை.

  இலுமி: வரும் ஆனா வராது.............. :)

  பி.கு.: இப்பதிவை தமிலிஷில் சேர்க்காமல் செய்த புண்ணியத்திற்கு கோடி கும்பிடு சாமியோவ் :)

  ReplyDelete
 8. அடுத்த பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கும்....
  இலுமி....
  'வரும் ஆனா வராது' சங்கம்....
  குறிப்பு:எங்களுக்கு தமிழ்நாடு தவிர வேறு கிளைகள் இல்லை... :)

  ReplyDelete
 9. ஜோஸ், அந்த அரிய புகைப்படத்தை வெளியிடும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஜெ ச எனும் சொற்கள் ஏற்படுத்தப் போகும் விபரீதங்களிற்கு நீங்களே பொறுப்பு :) வேதாளர் இடத்தில நான் இருக்கக் கூடாதா:) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் இலுமினாட்டி, சந்தோசஷம் ஆகும் போது இனி புற்களின் அருகில் நிற்காதீர்கள் ;) வரும் ஆனா வராது சங்கத்திற்கு ஒரு கருவாட்டு பார்சல் ப்ளீஸ். அடுத்த பேட்டி வரும் ஆனா வராது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ரஃபிக், முதலில் நன்றிகள். பெரிய மனதுடன் இந்தப் பதிவில் உங்கள் கருத்துக்களைப் பதிந்தமைக்கு. பைரவ், மார்க்கோபோலோவை தொடர்பு கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்,தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 10. நண்பரே, தங்களின் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 11. அட ச்சே இந்த விஸ்வா அண்ணன் எங்கே போனாலும் சொன்ன மாதிரி Me the 1st அப்படின்னு போர்டு போட்டுடுரர்


  எப்புடி சொல்லுறதுன்னு தெரியலே பாசு
  ரூம் போட்டு இப்புடி எல்லாம் யோசிப்பாங்களோ

  ReplyDelete
 12. அடப்பாவிகளா . . தூங்கி எழுந்து ஆபீஸுக்கு வந்து பார்த்தா (வூட்டாண்ட இண்டர்நெட்டு ப்ரச்னபா), இப்புடி ஒரு பதிவு. . ஆனால் இந்தப் பதிவுக்குக் காரணம், ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிடப்பட்ட ஒரு புகைப்பட ஆல்பமே என்று நம்பத்தகுந்த (மற்றும் தகாத) வட்டாரங்களில் உள்ள சிட்டுகள் தெரிவிக்கின்றன. . :-) [ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... அப்பாடி (த்தாத்தாடா, பாட்டிடி போன்ற மானே தேனே வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்). .நம்மால முடிஞ்ச ஒரு நாரதர் வேலை] . .

  நிற்க. . நண்பர் ஜோஷ் சொல்லியுள்ள படம், நினைத்துப் பார்ப்பதற்கே புளகாங்கிதத்தை வரவழைக்கிறது என்ற எனது கருத்தை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் . . :-)

  பிட(தி)ரி மயிர் சிலிர்க்கும் வருணனை அபாரம் :-) குருஜி குத்தானந்தா வாழ்க. . வளர்க. . ’கை மாற்றிக் கை’ தியானமா? அதைப் பற்றியும் நண்பர்களை ஒரு விரிவான செய்முறை வெளக்கப் பதிவு எழுத விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன் . . :-)

  ஆமாம்.. அது யாருங்க மார்க்கோபோலோ? அந்தப் பேர்ல லோக்கல்ல கிடைக்கும் சரக்கு தான் எனக்குத் தெரியும் (உவ்வே . . ) . .

  அப்புறம்... தமிழிஷில் வராவிட்டால் என்ன? இதோ இப்போது ஃபேஸ்புக்கில் வரப்போகிறதே ! :-) :-)

  ReplyDelete
 13. நண்பர் சிபி, இதற்கு கூடவா ரூம் போட வேண்டும் :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சரவணக்க்குமார் தங்கள் வருகைக்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், இயற்கைக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் :)) கை மாற்றிக் கை தியானம் ஆச்சிரமத்தில் மட்டுமே கற்றுத் தரப்படும். இல்லாவிடில் ரஃபிக் கற்றுத்தருவார். ஒரு லோக்கல் சரக்கிற்கு மார்க்கோபோலோ பெயரா! அதனை அடித்தால் உலகப் பயணம் செய்த கிக் கிடைக்குமா?
  தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete