Sunday, June 6, 2010

ஒரு அன்பான வேண்டுகோள்


அன்பு நண்பர்களே,

ரேப் ட்ராகன் தொடர் ஆரம்பித்ததிலிருந்து பல நண்பர்கள் ரஃபிக் எங்கே, குந்தவி எங்கே என்ற வகையிலான கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள். சற்று முன் கிடைத்த புறா மெயில் வாயிலாக ஒரு துக்ககரமான, வேதனையான, உடலை வலிக்க வைக்கும் சம்பவம் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

இளவரசி குந்தவி, வீரக்கவி, புரட்சிக்காரர் ரஃபிக்கை பலாத்காரம் செய்து விட்டாள் என்பதே அந்த துக்ககரமான சேதி. இது குறித்து ரேப் ட்ராகன் தொடரில் எழுதுவதற்கு அதன் வாசகர்களாகிய உங்களிடமே ஒரு வாக்கெடுப்பை நிகழ்த்தவிருக்கிறோம். நீங்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு கதாசிரியர் அந்த அத்தியாத்தை எழுதுவார்.

ரஃபிக்கிற்கு நிகழ்ந்த இந்த கொடூரத்தை நினைத்து நாம் மனவேதனைப்படுகிறோம். அதே சமயம் உண்மைகளை நண்பர்களிற்கு எடுத்து செல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பும் எமக்கிருக்கிறது. அன்புத் தோழர் ரஃபிக்கிற்கு எம் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளும் அதே சமயம் உங்கள் வோட்டுக்களை குத்தோ குத்து எனக் குத்துங்கள், உண்மைக்கு தோள் கொடுங்கள் நண்பர்களே.

வோட்டுப் பெட்டி சைட்பாரின் உச்சத்தில் மனவேதனையுடன் உங்களிற்காக காத்திருக்கிறது.

8 comments:

 1. குந்தவியின் கோர கரங்களில் சிக்கி நான் சிதைந்து போன கதை, என் சோரத்தின் சோக கதை, என் வீரத்தின் தோழ்வி கதை, என் மானத்தின் வேள்வி கதை, என்னுடையே இருக்கட்டும்... அதை நேரில் பார்த்த சாட்சியான காதலர் அப்போது மவுனமாக இருந்ததை போல, இப்போதும் மவுனமாக இருக்க வேண்டி என் மறுப்பு ஓட்டை பதிவு செய்கிறேன்.

  இருளை நோக்கி சோகத்துடன் பயணிக்கும் ஒரு ஜீவன்.

  ReplyDelete
 2. அன்பு நண்பரே,

  எந்த இருட்டறையிலும் உண்மை எப்போதுமே ஜோதி போல் பிரகாசிக்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயமென்பதை மறந்து விடாதீர்கள். கொடூர குந்தவையின் கோர கைகளில் சிக்கிய ஒரு புள்ளிமானின் கதையை எழுதி எங்கள் மனதை சோகமாக்குங்கள்.

  பி கு கள்ள ஒட்டு போடுவது பிறப்புரிமை என்பதை மறவாதீர்கள்.

  ReplyDelete
 3. பி பி கு இது தொடர்பாக ஏதேனும் தெளிவான வீடியோ க்ளிப்கள் இருந்தாலும் நீதிக்கு நேர்ந்த சித்ரவதை குறித்து அறிய பார்க்க விரும்புகிறோம்.

  ReplyDelete
 4. நண்பரே நண்பர் ரஃபீக்கின் சோகத்தில் என்னையும் பங்கெடுக்க விடுங்கள்,:(

  ReplyDelete
 5. காதலரே . . உள்ளத்தை உருகியோடச்செய்யும் இந்தத் துன்பியல் சம்பவத்தைப் பற்றி உடல்மொழியுடன் எழுதும் பொறுப்பு, கதாசிரியரான உங்களுக்கு உண்டு என்று நினைவு படுத்தும் அதே நேரத்தில், இந்தக் கொடுமைக்கு ஆளான ரஃபீக்கிற்கு எனது ஆழ்ந்த துக்கங்களைப் பதிவு செய்வதாயும் எனது கருத்தைப் பதிக்கிறேன்.

  ரஃபீக்கிற்கு நேர்ந்த துயரம், இந்த அண்டவெளியில் வேறு எந்த ஜீவராசிக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதனாலேயே தாங்கள் இதைப்பற்றி விரிவாக, வரிக்கு வரி, நொடிக்கு நொடி மிக மிக விரிவாக, உடல்மொழியுடன் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். ஓட்டும் போட்டாயிற்று.

  அஃதே போல், இருளை நோக்கிச் செல்லும் அந்த சோக ஜீவனுக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்கும் பெரும் பொறுப்பும் உம்மிடமே அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குந்தவியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான அந்த ஜீவனிற்கு, ஒரு அழகியை (மறுபடி) சேர்த்து வைத்து, அந்த ஜீவனின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்குமாறு வேண்டுகிறேன்.

  மேற்படி சம்பவத்துக்கு ஆதாரமான புகைப்படங்கள், கிளிப்பிங்குகள், ஓவியங்கள், நெகடிவ்கள், பாஸிடிவ்கள் ஆகிய அத்தனையும் எங்களுக்குப் பகிரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

  புரட்சிக்கவி ரஃபீக்குக்கு - அஞ்ச வேண்டாம் அன்பரே . .புரட்சிப்பாதை, இப்படிப்பட்ட பல மானபங்கங்கள் ஒருசேர நேரும் பாதை. உங்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் முன்னரே நடந்திருந்தாலும், அவற்றையும் தயங்காமல் பகிருங்கள். . .

  ஹூம்ம்ம்ம்... சத்திய சோதனை !

  ReplyDelete
 6. அந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' சம்பவம் பற்றி விரிவாக எழுதவும்.

  ஆமா இந்த சம்பவத்திற்கு பின் குந்தவியின் "ஸ்கோர்" என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்?

  ReplyDelete
 7. //பி கு கள்ள ஒட்டு போடுவது பிறப்புரிமை என்பதை மறவாதீர்கள்//

  உண்மையைக் காதலர் எழுத வேண்டும் என்ற பெரும் பொறுப்பினால், என்னால் இயன்ற அளவு மூன்று கள்லவோட்டுக்கள் போட நேர்ந்தது என்பதை வலியுடன் பதிவு செய்கிறேன் . . ஹூம்ம்ம்

  ReplyDelete
 8. ரஃபிக், உங்கள் வேதனை புரிகிறது. உங்கள் சார்பாக அன்பு இதயங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் கதாசிரியரை அந்த அத்தியாயத்தை எழுத விடாமல் செய்யட்டும் அன்பு நண்பரே.

  ஜோஸ், சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது, அதன் கையில் சிக்கும் அனைத்து ஆதாரங்களும் விரைவில் மக்கள்முன் பார்வைக்கு வைக்கப்படும் அன்பு நண்பரே :)

  நண்பர் கார்திகேயன், நன்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள், உண்மை வெளியே வர வேண்டும் எனப்பாடுபடும் உங்கள் உத்தம மனம் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மை வலிக்கும் :)

  நண்பர் சிவ், தற்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் உடல்மொழியுடந்தான் சம்பவம் விபரிக்கப்படும். குந்தவியின் ஸ்கோர் விரைவில் அறிவிக்கப்படும்.

  ReplyDelete