Monday, June 14, 2010

ரேப் ட்ராகன் - 7


குத்தலகேசியின் கண்ணீர்

அபசகுனம் என்று கூறியவாறே தன் நீண்ட கால்களை எட்டி வைத்து விரைவாக நடக்க ஆரம்பித்த இளவரசன் இலுமி, அங்காங்கே தன்னைக் கடந்து சென்ற அரண்மனை பணிப்பெண்களைப் பார்த்து தன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே நடந்தான். அவன் கண் சிமிட்டலிற்கு கிடைத்த பதில்கள் காஸனோவாவையே பொறாமைப்பட வைப்பதாக இருந்தன.

மந்திராலோசனை மண்டபத்தை அடைந்த இளவரசன் இலுமி, தந்தை குத்தலகேசியை வணங்கினான். மந்திரியைப் பார்த்து தலையை அசைத்தான். மந்திரவாதி கருந்தேளைக் கண்டு விட்டு… பாஸ், நீங்கள் இங்கு என்ன செய்கீறீர்கள்… என்றான்.

தன் மதுக் கிண்ணத்திலிருந்து உதடுகளைத் திருப்பி மந்திரவாதி கருந்தேள் பதிலளிப்பதற்கு முன்பாக குத்தலகேசியின் சிம்மக் குரல் கர்ஜனையாக எழுந்தது.

- லுமினாட்டி

- ந்தையே

- உன்னிடம் ஒரு முக்கிய விடயத்தை ஒப்படைக்கப் போகிறேன்… என்றவாறே மந்திரி குத்துப் பிடியைப் பார்த்த மன்னன் குத்தலகேசி, வெறுமையாகவிருந்த தன் மதுக் கிண்ணத்தை மந்திரியிடம் நீட்டினார்.

- விடயமா?! என்ன விடயம் தந்தையே?

- அரண்மனைக்கு இருவரை நீ இட்டு வர வேண்டும் மகனே.

- அதற்கு நானெதற்கு தந்தையே, இந்த அரண்மனை எங்கும் மந்திரி குத்துப்பிடி போல் வெட்டி வேலையாட்கள் நிறைந்திருக்கிறார்களே!!

இளவரசன் இலுமியின் சொற்களைக் கேட்ட மந்திரி குத்துப் பிடியின் கண்களில் உஷ்னம் ஏறியது. அவர் கைகளில் இருந்த மன்னனின் மதுக் கிண்ணம் நடுக்கம் கண்டது. இதனை அவதானித்துவிட்ட மன்னன் குத்தலகேசி….இலுமினாட்டி, முதலில் பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்..என்று சீறினார்.

- யார் பெரியவர்? அரிய சிந்தனைகள் எனும் பெயரில் குப்பைகளை அப்பாவிகள் தலையில் கட்டும் இவர் பெரியவரா? ஆலோசனைகள் எனும் பெயரில் மொக்கைகளையும், வெற்றுக் கிண்ணங்களில் மதுவையும் நிரப்பும் இவர் பெரியவரா… ஹாஹாஹா தந்தையே நீங்கள் பேரானந்த விகடனிற்கு ஜோக் எழுத முற்படவேண்டும். அல்லது…… இளவரசன் இலுமி இழுத்தான்.

- அல்லது… மன்னன் குத்தலகேசியின் குரலில் கோபம் எல்லை மீற முற்பட்டது.

- அல்லது.. மதுக்கிண்ணம் காலியாகவே இருக்கக்கூடாது என துடிதுடிக்கும் நீர் பெரியவரா.

இலுமினாட்டியிடம் இருந்து வந்த இந்த சொற்களைக் கேட்டதும் தன் ஆசனத்தில் இருந்து துள்ளி எழுந்தான் மன்னன் குத்தலகேசி. மந்திரவாதி கருந்தேள் நிலைமை சூடாவதை உணர்ந்தான்.

- ஹாஆஆஆ…… அரண்மனையில் இருக்கும் பணிப்பெண்களிடம் நவராவா குறுவோலை வீசி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்களிடம் மன்மத ஒளடதங்கள் பெற்று, எம் நாட்டுப் பெண்டிரை வெறுத்து விதேசிகளான கொரியப் பெண்டிரை தேடி ஓடி, மன்மத சுகத்தில் திளைத்து, உடல் இளைத்து, களைத்து திரியும் நீ எனக்கு மகனாக வாய்த்தது நான் பெற்ற சாபமடா, நன் பெற்ற சாபம்… எனப் பாய்ந்த குத்தலகேசியின் குரல் தழுதழுத்தது.

- நான் உங்கள் சாபம், நீங்கள் என் சாபம்… இரக்கமில்லாமல் வெட்டினான் இளவரசன் இலுமினாட்டி. நிலைமை மோசமாகிக் கொண்டே செல்வதைத் தடுக்க விரும்பிய மந்திரவாதி கருந்தேள்… இளவரசே இலுமினாட்டி, தந்தை சொல்வதைக் கேள், உன் உதவி இப்போது எமக்கு அவசியம் என்றான்.

மந்திரவாதியின் தலையீட்டால் சற்று சாந்தம் கொண்ட இளவல் இலுமி…. யாரை இங்கு இட்டு வர வேண்டும் என்றான் வெறுப்பாக.

- இளவரசே என்னருகே வா என்றழைத்தான் மந்திரவாதி கருந்தேள்.

இலுமினாட்டி மந்திரவாதியை நெருங்கி வரவும் மேசையிலிருந்த வெள்ளைத் துணியை இலுமிக்கு சுட்டினான் மந்திரவாதி. அந்த துணியில் ஒரு காட்சி ஓடிக் கொண்டிருந்தது… இதோ, இவனையும், இவனையும் என துணியில் தெரிந்த இரு உருவங்களை இளவரசனிற்கு காட்டினான் ராஜ மந்திரவாதி.

- இவர்கள் இப்போது எங்கு உள்ளார்கள் மந்திரவாதி அவர்களே?

- குத்து நகரில் இன்ப விடுதிகள் நிறைந்த குத்துக் கார்னரில், ஒரு இன்ப விடுதியில்…. மந்திரவாதி உச்சரித்த இன்ப விடுதி எனும் சொல் இளவரசன் இலுமிக்கு தேனாக காதில் வழிந்தது.

- ஒஹோ..பலே..பலே. இந்த இன்ப விடுதி யாருடையது என்பது உங்களிற்கு தெரியுமா மந்திரவாதி அவர்களே?

- சீன அழகி ஸிங்ஸிங்கின் இன்ப விடுதி அது இளவரசே… மந்திரவாதியின் பதிலில் புன்னகை கலந்திருந்தது.

- ம்.. உடனே புறப்படு என்று இலுமினாட்டியைப் பார்த்து உத்தரவிட்ட மன்னன் குத்தலகேசி…. நாசக்குத்து நாவலனையும் உன்னுடன் அழைத்துச் செல் உன் வீரதீரம் நாம் அறியாததல்ல என்று முழங்கினார்.

சற்று அமைதியாக நின்ற இளவரசன் இலுமி, தந்தையே நன்றாகக் குடி, ஏனெனில் நாளை என் தலையில் உன் முடி.. என்று இரக்கமில்லாத வார்த்தைகளை உதித்துவிட்டு மந்திராலாசோனை மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

தன் மகனின் சொற்கள் கூரிய அம்புகளாக தன் இதயத்தில் வந்து பாய்வதை உணர்ந்த மன்னன் குத்தலகேசி தன் ஆசனத்தில் வீழ்ந்தார். வெறுமையாக இருந்த தன் மதுக்கிண்னத்தை பார்த்த அவர் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அக்கிண்ணத்தை நிரப்ப ஆரம்பித்தது.

[பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் ஜின்னு]

16 comments:

 1. haiya me the 1st......!!!!!

  ReplyDelete
 2. // நாசக்குத்து நாவலனையும் உன்னுடன் அழைத்துச் செல் உன் வீரதீரம் நாம் அறியாததல்ல என்று முழங்கினார். //

  இது யாருடா இது புதுசா இருக்கே யாரு மாட்டுனங்கோனு தெரியலையே


  // [பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் ஜின்னு] //

  அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க ............

  ReplyDelete
 3. // குந்தவி ரஃபிக்கை பலாத்காரம் செய்ததை //

  இதைப் பற்றி ஒன்றுமே சொல்லலையே

  Awaiting eagerly

  ReplyDelete
 4. மீ த செகண்டு!

  பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. //எம் நாட்டுப் பெண்டிரை வெறுத்து விதேசிகளான கொரியப் பெண்டிரை தேடி ஓடி //

  வரலாற்றுல ஒரு சின்ன திருத்தம்.எந்த நாட்டு பிகரா இருந்தாலும் பிகர் நல்லா இருந்தா இலுமி லந்து பண்ணுவான் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.வரலாறு மிக முக்கியம் அல்லவா? :)

  அப்புறம்,புரட்சிக் கவிக்கு என்ன நேர்ந்தது என்பதை பற்றி நான் பதைபதைத்துக் கொண்டு இருக்கையில்,நீங்கள சொன்னது போல்,வரிக்கு வரி விவரிக்காததால் இலுமி வெளிநடப்பு செய்கிறான்.

  ReplyDelete
 6. // வரலாற்றுல ஒரு சின்ன திருத்தம்.எந்த நாட்டு பிகரா இருந்தாலும் பிகர் நல்லா இருந்தா இலுமி லந்து பண்ணுவான் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.வரலாறு மிக முக்கியம் அல்லவா? :) //
  // அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்களிடம் மன்மத ஒளடதங்கள் பெற்று, எம் நாட்டுப் பெண்டிரை வெறுத்து விதேசிகளான கொரியப் பெண்டிரை தேடி ஓடி, மன்மத சுகத்தில் திளைத்து, உடல் இளைத்து, களைத்து திரியும் நீ :)) //

  இதுக்கு பேரு உங்க ஊருலே லந்தா ......

  ReplyDelete
 7. எனக்கு லந்து பண்ற அளவு தானுங்க தெரியும்.உங்களுக்கு நெறைய தெரியும் போல இருக்கே? :P

  கொஞ்சம் சொல்லித் தர்றது. ;)

  ReplyDelete
 8. அச்சச்சோ நீங்க என்ன தப்பாவே புரிஞ்சுக்கிரீங்க ( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் )

  இத நான் சொல்லுலிங்கோ நம்ம காதலர் சொன்னத சொன்னேனுங்கோ

  ReplyDelete
 9. அப்புடி எல்லாம் சொல்லி நீரு தப்பிக்க முடியாது ஓய்!இப்புடியே பேசிக்கிட்டு இருந்தீர்னா,அனேகமா அந்த நாசக்குத்து நாவலன் பாத்திரம உமக்கு தான். :)

  ReplyDelete
 10. நண்பர் சிபி, நாவலன் யார் என்பது அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துவிடும். ரஃபிக் இன்னமும் 4 அத்தியாயங்களில் வந்து விடுவார். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

  தலைவர் அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி.

  நண்பர் இலுமி, உங்கள் வரலாற்று ஆர்வம் நாங்கள் அறிந்ததுதானே :) புரட்சிக் கவியின் கதை இன்னமும் சில அத்தியாங்களில் இடம்பெறும்.

  ReplyDelete
 11. அட..கலக்கலா எழுதுறீங்க பாஸ்

  ReplyDelete
 12. வரட்டும் நாசக்குத்து நாவலன்.. பெயர்க்காரணத்தையும் சொல்வீர்களா . . ;-)

  //தந்தையே நன்றாகக் குடி, ஏனெனில் நாளை என் தலையில் உன் முடி//

  என்னா ஒரு டயலாக்கி . . அப்புடியே இந்த மதுக்கோப்பையைக் கொஞ்சம் புடி.. வாசல்ல போட்டாங்க வெடி . .மாட்டுக்கு இருக்கு மடி . .அது திங்குறது செடி ;-)

  ReplyDelete
 13. நண்பர் சதீஷ்குமார், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், நாவலனின் பெயர்க்காரணம் விளக்கப்படும் :). டயலாக்கிற்கு நீங்கள் தந்திருக்கும் பதில் டயலாக்கும் அருமை மந்திரவாதி அவர்களே. கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 14. // மன்மத சுகத்தில் திளைத்து, உடல் இளைத்து, களைத்து திரியும் நீ ..‘ //

  இலுமியை நேரில் பார்க்கவில்லை, ஆனால் இப்படி ஒரு நிலையில் அவரை கற்பனை பண்ணி பார்க்க போகிறேன்... ஹி ஹி :)

  // இன்ப விடுதிகள் நிறைந்த குத்துக் கார்னரில் //

  குத்து கார்னர்... சமீபத்தில் எங்கோ கேட்ட இடம் போலிருக்கிறதே..... சரி சரி குத்துகள் தொடரட்டும் :)


  // நான் உங்கள் சாபம், நீங்கள் என் சாபம்…
  பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் ஜின்னு //

  ஆஹா..... தந்தை பிள்ளைக்கு இடையில் இருக்கும் உன்னத உறவை கல்வெட்டில் பொறிக்க கூடிய வார்த்தைகள்.... உதிர்த்த காதலருக்கு செம்மொழி மாநாட்டுக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா.....

  நாச குத்து நாவலன் என்பது யாரையோ உள்குத்து குத்துவது போலிருக்கே... அந்த அப்பாவி சீக்கிரம் வெளியாகட்டும் :)

  ReplyDelete
 15. ரஃபிக், டிக்கெட் போடும்போது அருகில் சிட்டு உள்ள சீட்டாக போட்டுவிடுங்கள். இலுமினாட்டிதான் மன்மதனின் வாரிசு என்பது உலகிற்கு தெரிந்த உண்மை. எனவே அவர் உடல் இளைத்து, களைத்துதான் இருப்பார். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் மவராசன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete