Thursday, June 24, 2010

Aய்சலக்கா டீம்


அமெரிக்க ராணுவத்தின் அதிரடிப்படைத் துருப்புக்களில் அசகாய சூரர்களாக செயற்பட்டு வருகிறது ஒரு நால்வரணி. Hannibal [Liam Neeson] என்பவன் தலைமையில், Face [Bradley Cooper] , B.A [Quinton Jackson], Murdock [Sharlto Copley] எனும் மூவர் இணைந்து செயற்பட்டு வரும் இக்குழு A – Team என்று அழைக்கப்படுகிறது.

ஈராக் யுத்தத்தில், ஜெனரல் மாரிசன் எனும் அதிகாரியின் கீழ், தம் ஆற்றல்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி செயற்பட்ட இந்த நால்வரணி, தம் சேவை முடிந்து நாடு திரும்பவுள்ள நிலையில் CIA அமைப்பைச் சேர்ந்த Lynch [Patrick Wilson]எனும் நபர் ஹனிபலை வந்து சந்திக்கிறான்.

பாக்தாத்திலிருந்து மிக ரகசியமாக போலி டாலர் நோட்டுக்கள் பெருந்தொகையாக சதாமிற்கு நெருங்கியவர்களால் கடத்தப்படவுள்ளதை ஹனிபலிற்கு தெரிவிக்கிறான் சிஐஏ அதிகாரியான லின்ச். இப்போலி டாலர் நோட்டுக்களால் விளையக்கூடிய தீங்குகள் குறித்தும் ஹனிபலிற்கு விளக்குகிறான் அவன்.

யாரும் அறியாத வண்ணம், ஹனிபல் குழுவினர் பாக்தாத்திற்குள் நுழைந்து, போலி டாலர் நோட்டுக்களை எடுத்துச் செல்லும் கொள்கலனை வழியில் மடக்கி, கைப்பற்றி வரவேண்டுமென ஹனிபலிடம் கேட்டுக் கொள்கிறான் சிஐஏ அதிகாரியான லின்ச்.

இதனையடுத்து ஜெனரல் மாரிசனுடன் லின்ச் கூறியது குறித்து கலந்தாலோசிக்கும் ஹனிபல், ஏ- டீம் பாக்தாத்திற்குள் நுழைய அவர் அனுமதிக்க வேண்டுமென வேண்டுகிறான். முதலில் இத்திட்டத்திற்கு ஆதரவு தர மறுக்கும் ஜெனரல் மாரிசன், பின் அரை மனதுடன் இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இந்த திட்டமானது, ஹனிபல் குழு, சிஐஏ அதிகாரி லின்ச், ஜெனரல் மாரிசன் ஆகியோர் மட்டுமே அறிந்த ஒரு திட்டமாக செயற்படுத்தப்படுகிறது.

l-agence-tous-risques-2010-6677-1103997864 குறித்த ஒரு இரவில், அருமையான திட்டமிடல் ஒன்றின் உதவியுடன் பாக்தாத் நகரில் புகுந்து, போலி டாலர் நோட்டுக்களை கடத்திச் செல்லும் கொள்கலனை அபகரித்து, ஜெனரல் மாரிசனின் தளத்திற்கு எடுத்து வருகிறது ஹனிபல் குழு. வெற்றிகரமாக இத்திட்டத்தை நிறைவேற்றிய ஹனிபல் குழுவை வரவேற்க வரும் ஜெனரல் மாரிசன், அவர் பயணிக்கும் வண்டியில் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

ஹனிபல் குழுவினர் பாக்தாத்தில் இருந்து கைப்பற்றி வந்திருந்த போலி டாலர் நோட்டுக்களை கொண்ட கொள்கலனும் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. ஆனால் அந்த கொள்கலனில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி டாலர் நோட்டுக்களை அச்சடிக்கும் தகடுகளை அமெரிக்க ராணுவத்தில் செயற்பட்டுவரும் Black Forest எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கையகப்படுத்திக் கொண்டு மறைந்து விடுகிறார்கள்.

ஜெனரல் மாரிசனின் கொலை, மற்றும் போலி டாலர் நோட்டு அசம்பாவிதம் குறித்து நடாத்தப்படும் ராணுவ நீதி விசாரணையில், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஹனிபல் குழுவினர் அனைவரினதும் ராணுவ பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இதனையடுத்து ஹனிபல் குழுவைச் சேர்ந்த நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.

ஹனிபல் குழுவிற்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆறு மாதங்களின் பின், சிறையிலிருக்கும் ஹனிபலை மிக ரகசியமான முறையில் வந்து சந்திக்கிறான் சிஐஏ அதிகாரி லின்ச். ஹனிபலும், அவன் குழுவினரும் சிறையில் வாடக் காரணமான பிளாக் ஃபாரஸ்ட் குழுவின் தலைவன் Pike குறித்த சில தகவல்களை ஹனிபலிற்கு தருகிறான் சிஐஏ அதிகாரி லின்ச்…..

l-agence-tous-risques-2010-6677-976880361 பின் ஹனிபல் குழுவினர் எவ்வாறு சிறையில் இருந்து தப்பி, ஜெனரல் மாரிசன் கொலை மற்றும் கள்ள டாலர் நோட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அம்பலப்படுத்துகிறார்கள் என்பதை கலகலப்பும் ஆக்‌ஷனும் கலந்து திரையில் கூறுகிறது The A – Team திரைப்படத்தின் மீதிக் கதை.

ஏ டீம் திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியபோது, வழமை போலவே இன்னொரு சொதப்பல் இதோ என்ற எண்ணமே மனதை ஆக்கிரமித்தது. எனவே திரைப்படத்தைக் காணச் சென்ற போதும் அது குறித்த அதிக எதிர்பார்ப்புக்களை நான் கொண்டிருக்கவில்லை. ஆனால்… ஆச்சர்யம்! ஆச்சர்யம்!

1980களில் புகழ் பெற்றிருந்த ஒரு தொலைக்காட்சித் தொடரை அதே பெயரில் திரைக்கு வெற்றிகரமாகக் கடத்தியிருக்கிறார்கள். காதில் பூ வைப்போர் சங்க ஆக்‌ஷன்களை, நகைச்சுவை கலந்து வழங்கி ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைப்பதில் சிறப்பான வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர் Joe Carnahan.

ஏ டீமில் இடம்பெறும் ஹனிபல், ஃபேஸ், பிஏ, மற்றும் மெர்டொக் ஆகிய பாத்திரங்களை கலகலப்பு நிறைந்ததாக உருவாக்கி அப்பாத்திரங்களை ரசிகர்கள் மனதில் எளிதில் ஒட்டிக் கொள்ளச் செய்து விடுகிறார்கள். குறிப்பாக மிகவும் முரடனாக அறியப்பட்ட பிஏ பாத்திரம் சிறைத்தண்டனையின் பின் அமைதியின் உருவாக மாறி வருவது நன்றாக பொருந்திப் போகிறது. வாயில் சுருட்டைக் கடித்தபடியே கெட்ட கெட்ட திட்டம் தீட்டும் ஹனிபல் வேடத்தில் லியம் நீஷன் அழகாக செய்திருக்கிறார். அட்டகாசமான சிரிப்பு அவருடையது. உச்சக்கட்ட ஆக்‌ஷனில் கொள்கலன் ஒன்றிற்குள் அவர் போடும் சிறு ஆக்‌ஷன் தூள் மாமே தூள்.

l-agence-tous-risques-2010-6677-1970485591 பிளேபாய் ஃபேஸ், தடிமுரடனாக இருந்து சாந்த சொரூபியான பிஏ, தன் கிறுக்கு விளையாட்டுக்களால் கலகலப்பாக உலாவரும் மெர்டொக் என அப்பாத்திரங்களை ஏற்றிருக்கும் நடிகர்கள் யாவரும் அருமையான தெரிவு. பாத்திரங்களை உணர்ந்து கலகலப்பும், களிப்புமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் நடிகர்கள்.

குறிப்பாக பிஏவும், மெர்டொக்கும் பின்னியிருக்கிறார்கள். விமானத்தில் பிஏ ஏற மறுப்பதும். தூக்க மருந்து தந்து விமானத்தில் பயணம் செய்யும் பிஏ கண்விழிக்கும்போது அடிக்கும் கூத்துக்களும் சிரிக்க வைக்கின்றன. அழகான மங்கை ஜெசிக்கா பியல் அவர்களின் பாத்திரம் ஒரு டோட்டல் வேஸ்ட் என்பதை இங்கு மனவருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது. பிளாக் ஃபாரஸ்ட் அமைப்பின் தலைவனாக வரும் Pikeன் வில்லத்தனங்கள் அட்டகாசம்.

படத்தில் இடம்பெறும் பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் காதில் பூச்சுற்றும் ரகம். ஆனால் இவ்வகையான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாது ஏ டீமை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி. ஹனிபல் அறிமுகமாகும் ஆரம்ப ஆக்‌ஷன் காட்சி, பிராங்பர்ட்டின் வங்கி கட்டிடங்களில் நிகழும் அசர வைக்கும் ஆக்‌ஷன் காட்சி என்பன அபாரம். மாறாக இறுதி ஆக்‌ஷன் சிறிது ஏமாற்றத்தை தருகிறது. வானிலிருந்து கீழே விழும் டாங்கியில் நடக்கும் ஆக்‌ஷன் ஹிஹிஹி்!!!! படத்தில் கூடவே ஓடிவரும் ஜாலியான நகைச்சுவை, காதில் பூச் சுற்றல்களை புறந்தள்ள உதவுகிறது. சிஐஏ குறித்த கிண்டல்களை தயக்கம் காட்டாது அங்காங்கே அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

லாஜிக்கெல்லாம் பார்த்து மண்டையை உடைக்காமல், ஜாலியாகப் பார்த்து, ரசித்து, வாய்விட்டு சிரித்து அழுத்தங்களை ஒரு கணம் மறப்பதற்கு உதவும் இந்த ஏ டீம் ஒரு ஜாலி Aய்சலக்கா டீம். [**]

ட்ரெயிலர்

35 comments:

 1. haiya me the 1st

  Aய்சலக்கா டீம்

  ReplyDelete
 2. இங்கே நாளைக்குதான் ரிலீஸ் ஆகிறது.

  இன்றைக்கு இரவு ஸ்பெஷல் காட்சி ஒன்று இருக்கிறது.

  ஆனால், படம் பயங்கர மொக்கை என்று தகவல்(என்னுடைய நண்பர்கள் தான் இதன் மொழியாக்கத்தில் பனி புரிதார்கள் - அவர்கள் சொன்ன தகவல்)

  ReplyDelete
 3. // அழகான மங்கை ஜெசிக்கா பியல் அவர்களின் பாத்திரம் ஒரு டோட்டல் வேஸ்ட் என்பதை இங்கு மனவருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது. //

  உங்க மனசு பட்ட வேதனை தெரிகிறது எங்களுக்கும் தான் :)

  ReplyDelete
 4. //உங்க மனசு பட்ட வேதனை தெரிகிறது எங்களுக்கும் தான் :) //

  அப்புடியே நானும் பங்கேற்துகிறேன். :)

  //ஹனிபல் வேடத்தில் லியம் நீஷன் அழகாக செய்திருக்கிறார். அட்டகாசமான சிரிப்பு அவருடையது. உச்சக்கட்ட ஆக்‌ஷனில் கொள்கலன் ஒன்றிற்குள் அவர் போடும் சிறு ஆக்‌ஷன் தூள் மாமே தூள்.//

  லியம் நீஷன் அற்புதமான நடிகன். taken படத்துலயே எனக்கு அவர் நடிப்பு பிடிச்சு போச்சு.அடுத்ததா நடிச்சாரு பாருங்க batman begins... பின்னி இருப்பாரு.ரெண்டு நிமிஷம் வர்ற பாத்திரமா இருந்தாக்கூட,he steals the show...

  ReplyDelete
 5. ஏற்கனவே க்ளாஷ் ஆஃப் த டைட்டன் ரீமேக்கில் நொந்து நூலாயிருந்த நேரத்தில் இது வந்திருந்துச்சா... டீல்ல வுட்டாச்சிங்க.

  டிவிடில பார்த்துக்கலாம்.

  ReplyDelete
 6. Toy Story-3 கு டிக்கெட் கிடைக்காததால் இந்தப் படத்தை பார்த்து விட வேண்டியது தான்.

  ReplyDelete
 7. //அழகான மங்கை ஜெசிக்கா பியல் அவர்களின் பாத்திரம் ஒரு டோட்டல் வேஸ்ட் என்பதை இங்கு மனவருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது//

  :-( . . காதலரே . . ஜெஸிக்கா பியல், ‘முழு’ உடைகளுடன் நிற்கும் படம் ஒன்று கூடவா உங்களுக்குக் கிடைக்கவில்லை? என்ன கொடுமை இது?

  மற்றபடி, நான் வழக்கப்படி கேள்வியே படாத படம் இது. இங்கு வரட்டும் நைனா.. பார்த்துடலாம் ;-)

  விமர்சனம் மிக சுவாரஸ்யமாக இருந்தது. . நல்ல பதிவு.. நன்றி காதலரே ;-)

  ReplyDelete
 8. நண்பர் சிபி, எங்கள் மனவேதனையை யாருமே தீர்த்து வைப்பதாக இல்லை என்பது ஐநா சபையில் மேசையில் தட்டிப் பேசப்படவேண்டிய ஒன்றாகும். முதனமைக் கருத்துக்களிற்கு நன்றி.

  விஸ்வா, தங்கள் நண்பர்களின் கருத்துக்களுடன் நான் உடன்பட மறுக்கிறேன். மொழியாக்கம் மட்டும் ஆங்கில வசனங்கள் உணரச் செய்தவற்றை உணரச் செய்தால் இப்படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிட்டும் என்று எண்ணுகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பரே இலுமினாட்டி, சமீபகாலமாக வேதனைகள் தொடர்ந்து வருகிறது. நண்பரே இப்படத்தில் அவர் சுருட்டைக் கடித்ஹ்டுக் கொண்டு சிரிக்கும் சிரிப்பிற்கு நான் ரசிகனாகிவிட்டேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் ஹாலிவுட் பாலா, டிவிடியிலேயே பாருங்கள். டிவிலைட்- எகிலிப்ஸ் வருகிறதாமே :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் பென், அதிகம் எதிர்பார்த்து செல்லாதீர்கள், ஜாலியான மனநிலையோடு படத்தை ரசிக்கலாம். டாய் ஸ்டோரி இங்கு அடுத்த மாதமே வெளியாகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 9. நண்பர் கருந்தேள், செல்வி ஜெசிக்கா பியலிடம் நிறைய எதிர்பார்த்து சென்ற எனக்கு மனவேதனையை உண்டு பண்ணி விட்டார்கள். ஜாலியாக பார்த்து ரசிக்க இப்படம் உகந்தது. ஆனா கேள்விகள் கேட்காமல் பார்க்க வேண்டும். நல்ல கருத்து.. நன்றி கருந்தேள் :)

  ReplyDelete
 10. // [**] //
  நீங்க இவ்ளோ சொன்னப்பறம் தியேட்டரெல்லாம் எதுக்கு போயிகிட்டு.. டோரண்ட்தான்...

  // Ben said...
  Toy Story-3 கு டிக்கெட் கிடைக்காததால் இந்தப் படத்தை பார்த்து விட வேண்டியது தான். //
  அங்கதான் நிக்கிறான் ஜெய்... டாய் ஸ்டோரி ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ நாளைக்கி காலையில ஆபீஸ் கட் அடிச்சுட்டு போறேன்... :D

  ReplyDelete
 11. I love A-Team. Specially the "Murdock" =)) Should watch this. Let me watch first.

  ReplyDelete
 12. நண்பரே,
  அருமையாய் எழுதியுள்ளீர்கள்,இதோ டவுன்லோடு ஸ்டார்டட்,உங்களுக்கு ஃப்ரெஞ்சு மொழி நன்றாக எழுத, பேச வருமா?
  கீதப்ப்ரியன்

  ReplyDelete
 13. இங்க படம் சரியில்லை என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது நண்பரே. உங்கள் விமர்சனம் அது அத்தனையையும் பொய்யாக்கி விட்டது. இந்த வாரயிறுதி போய்விட வேண்டியது தான்.

  ReplyDelete
 14. நண்பர் ஜெய், என்ன ஒரு கடமை உணர்ச்சி :))அப்படியே டாய் ஸ்டோரிக்கு ஒரு பதிவையும் போட்டிடுங்கள் தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  அனாமிகா துவாரகன் அவர்களே, பாருங்கள் ஆனால் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை ஒரு பிடி பிடித்து விடாதீர்கள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கீதப்ப்ரியன், ஏதோ கொஞ்சம் பிரெஞ்சு மொழி தெரியும். அதை வைத்துக் கொண்டுதான் சிட்டுக்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது :) தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் பேபி ஆனந்தன், ஒரு படைப்புக் குறித்து பல கருத்துக்கள் வருவது சகஜமான ஒன்றே. நான் எதிர்பார்த்ததைவிட படம் ஜாலியாகவும், நகைச்சுவையுடனும் இருந்தது என்னைக் கவர்ந்தது. படத்தை சென்றுபார்த்துவிட்டு தங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 15. என்ன தான் 3.25 டாலருக்கு, என்னைப் போன்ற மாணவர்களுக்கு டிக்கெட் கிடைத்தாலும், சில படங்களை பார்க்கக் கூட தோணுவதில்லை. இந்த படம் அதில் ஒன்று. டிவிடி ரிப்பில் பார்ப்போம் என்று ஃப்ரீயாக விட்டு விட்டேன்...

  ReplyDelete
 16. காதலரே, சென்ற மாதம் திரையறங்கில் இதன் மெகா சைஸ் விளம்பர போஸ்டரில், ஒவ்வொரு ஆசாமியும் ஸ்டைலாக போஸ் கொடுத்து கொண்டிருந்ததை பார்த்தவுடன் இன்னொரு மொக்கை ஆக்ஷன் மூவியாக தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.படத்தின் ட்ரெயிலர் கூட வழக்கமாக காதில் பூ வகைறா தான்.

  ஆனால் உங்கள் விமர்சனத்தின் மூலம் வஞ்சகமாக வீழ்த்தபட்ட அணியின் உண்மை தேடல் என்ற பிண்ணணி கொண்ட படைப்பு என்று புரிய வருகிறது. காமடி வசனங்கள், மற்றும் நக்கல்கள் கலந்த இப்படிபட்ட ஒரு ஆக்ஷன் படத்தை சமீபத்தில் பார்த்த நியாபகம் இல்லை. இந்த படம் அந்த குறையை போக்கும் என்று நினைக்கிறேன்.

  4 முரட்டு ஆசாமிகள் இடையே கவர்ச்சி காட்டி நடித்தால் தான் தப்பிக்க முடியாது என்று தான் ஜெசிக்கா போர்த்தி நடித்திருககிறார் போலும். இல்லை இயக்குனரின் தடாவாக இருக்கலாம் :)

  ReplyDelete
 17. நண்பர் பிரசன்னா ராஜன், நானும் இப்படத்தை பார்ப்பதில்லை என்றே இருந்தேன் ஆனால் சென்ற வாரம் இதைவிட்டால் வேறு படமில்லை என்ற நிலையில் பார்க்க சென்றேன், பிடித்திருந்தது. டிவிடி ரிப்பில் பார்த்து சிரியுங்கள் :)) கருத்துக்களிற்கு நன்றி.

  ரஃபிக், ஜெசிக்காவிற்கு ஆதரவு தெரிவித்து நீங்கள் தந்திருக்கும் கருத்தை ஜொள்ளு ரசிகர் கிளப் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் :)) இது காதில் பூ வகைப் படம்தான், ஆனால் ரசிக்ககூடியதாக இருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 18. அமெரிக்காவின் MAD இதழின் இப்படத்திற்கான Parody Poster ஐ காண இங்கே கிளிக்கவும் :) http://twitpic.com/202h01#

  ReplyDelete
 19. ஹாஹஹா...குவிக் போஸ்ட் ரபிக்கு! இந்த வேலைய மட்டும் நல்லா பண்றீறு ஓய்!அப்புறம்,அண்ணாத்தக்கு நீரு கொடுத்த tag அ பார்த்தேன்.ஏன்யா,அது தான் பக்கத்துல 'முழு' (எவ்ளோ முழுசா?பார்க்க உடம்பின் நடுப்பகுதி :) )பெர்சனலிட்டியோட ஒரு சின்னப் பையன் மஞ்ச கலர் டி ஷர்ட் போட்டு நிக்காறு இல்ல?அதுக்கு tag பண்ணி இருக்க வேண்டியது தான? :P

  ReplyDelete
 20. அப்பா இலுமி, காதலரு இந்த வயசிலும் என்ன கம்பீரமா இருக்க ஆளு, அவர போய் அப்படி நம்ம உருவகபடுத்தமுடியுமா...

  இருந்தாலும் நீரு ரொம்ப ஆசபடுறீரு... அதனால உம்மையே அந்த மஞ்ச கலர் சட்ட ஆசாமியா மாத்திபுட்டாச்சு... தானா வந்து மாட்டிக்கிற உங்க நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு :)

  ReplyDelete
 21. யோவ்,நானு அவ்ளோ நல்லா கூட இருக்க மாட்டன்யா.அதனால தேங்க்ஸு.(ஹிஹி,நாங்க எல்லாம் மான ரோசமே இல்லாத பயலுக பிரதர். :) )
  அப்புறம்,ஏன்யா யோவ் எழவெடுத்த மனுசா,ஏன்யா விரல வச்சு கெட்ட சிக்னல் எல்லாம் காட்ரீறு? :P

  ReplyDelete
 22. நண்பரே,

  வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

  http://007intamil.blogspot.com/2010/06/x.html

  ReplyDelete
 23. ரஃபிக், தொடர்ந்த இரு நாட்களாக ராணிக்காமிக்ஸில் மிஸ்டு போஸ்டுகள் போட்டு குழப்பம் விளைவிப்பது மட்டுமல்லாமல் நான் இளம் வயதினனாகவுள்ள ஒரு போட்டோவையும் போட்டு அதகளம் செய்கிறீர்கள். இலுமினாட்டியை இவ்வளவு இளமையாக காட்டியிருக்க வேண்டாம் :)) வந்திட்டிருக்கேன், அரிவாளோட :))

  ஜேம்ஸ்பாண்ட் 007, வலையுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் நண்பரே.

  ReplyDelete
 24. //அனாமிகா துவாரகன் அவர்களே,//
  ஏனுங்க? அவர்களே இவர்களேன்னு போட்டு என்னை கிழவியாக்குறீங்க. அப்புறம் அனாமிகான்னே சொல்லுங்க.

  //பாருங்கள் ஆனால் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை ஒரு பிடி பிடித்து விடாதீர்கள் :)//
  ஏ டீம் வந்து எத்தனையோ வருசத்துக்கப்புறம் பிறந்த எனக்கு அதுவே பிடிச்சிருக்குன்னா, இது பிடிக்கும்ன்னு நினைக்கிறேன். மெர்டொக்காக ஜேஸன் லீ நடிச்சிருக்க வேண்டும். சீரிஸ் மெர்டொக்கும் இவரும் ஒரே மாதிரி கொஞ்ச தோற்றத்தில் இருக்கறாங்க. நடிப்பும் பின்னி எடுத்திருப்பார். அதனால தான் இதை பாக்காது விட்டேன். ஹி ஹி. எதுக்கும் பாத்திட்டு வருகிறேன்.

  ReplyDelete
 25. //ஏன்யா விரல வச்சு கெட்ட சிக்னல் எல்லாம் காட்ரீறு? :P //

  ரபிக் அவர்களே,விரல வச்ச சிக்னல் காட்டினதால்,

  விரல் வித்தை ரபிக் என்று இன்று முதல் நீர் எங்களால் அன்போடு அழைக்கபடுவீர். :P

  அப்பாடி,அடுத்த பட்டப்பேரு ரெடி. தேங்க்ஸ் ரபிக் அண்ணாத்த,இப்புடி நீரு தானே வந்து தலையக் குடுக்குற ஆடா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.உம்ம ஆர்வம் இருக்கே.ஆம்ம்ம்மா,அய்யய்யோ,என்ன ஒரு ஆர்வம்! தானே வந்து தலைய நீட்டுற ஆர்வம்? :)

  உம்ம நேர்மையும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ஓய்! அடுத்த புது பட்டப் பேரோட மீட் பண்றேன் க்விக் போஸ்ட் அண்ணாத்த.. :P

  ReplyDelete
 26. Nice post...!
  Nalla jollyana padam
  Worth watching!

  ReplyDelete
 27. படத்தை பார்த்தாயிற்று. வரிசையாக மொக்கைத் தமிழ்ப் படங்களைப் பார்த்து வெறுத்து போயிருந்த எனக்கு இப்படம் ஒரு விதமான ஆறுதல் அளித்தது என்றே கூற வேண்டும். இழுத்துப் போர்த்தி நடக்கும் பாத்திரத்துக்கு ஜெசிக்கா பியல் என்னதிற்காம்? இயக்குனரின் ரசனை நாசமாய்ப் போக!

  ReplyDelete
 28. அனாமிகா, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு பதிவைப் போட்டுவிடுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  இலுமினாட்டி, அன்பு நண்பர் ரஃபிக்கை பிங்கர் ட்ரிக் ரஃபிக் என்று பெருமையாக அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் :)

  நண்பர் ரெட்டைவால்ஸ், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் பென், இந்தப் படத்திலேயே மோசமான விடயம் ஜெசிக்கா பியலின் முழுக்கப் போர்த்தும் ஆடைகள்தான் :)) மீண்டும் வந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 29. காதலரே,பேசாம லக்கி லுக் கதையில வர்ற பட்டர் பிங்கர்ஸ் பேர வச்சுருவமா? :)

  ReplyDelete
 30. மக்களே,
  நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

  இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

  வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

  ReplyDelete
 31. நண்பர் இலுமினாட்டி, பட்டர் பிங்கர்ஸ் எனும் பெயரை நண்பர் ரஃபிக்கிற்கு அளித்து அன்பு நண்பரிற்கு மேலும் பெருமை சேர்த்து விட்டீர்கள்.

  வெடிகுண்டு வெங்கட், ஜமாய்ங்க நண்பரே.

  ReplyDelete
 32. ஆமா,அது கொஞ்சம் decent ஆ இருக்கும்.ச்சே,அது தப்பாச்சே! அப்ப ,நாம விரல் வித்தைனே கூப்பிடலாம் காதலரே! :P

  ReplyDelete
 33. அட பாவிங்களா... எல்லாரும் ஒரு நாள் மண்ணுக்குள்ளேன்னு சிம்பாலிக்கா காட்டியிருக்கேன்... அப்ப கூட அடைமொழியா? தமிழ் சினிமா பார்த்து கெட்டு போன கூட்டம்மய்யா நம்ம கூட்டம் :)

  ReplyDelete
 34. யோவ்,பிட்டு படம் பார்த்து கேட்டுப் போன மனுஷன் நீரு என்ன சைகை செய்வீர்னு தெரியாதா? சும்மா பீலா விடாதீர் ஓய்.. :)

  நீரு செய்த காரியம் இருக்கே?
  ச்சே,ச்சே,அதை எப்படி நானு சொல்லுறது?கொஞ்ச நாள்ல நாலஞ்சு எபிசொட் வரும்.அப்ப படிச்சு தெரிஞ்சுக்கோரும். :P

  ReplyDelete
 35. இலுமினாட்டி, அன்பு நண்பர் ரஃபிக் அவர்களை பிட்டுப் படம் பார்த்து கெட்டுப்போனவர் என்று நீங்கள் கூறுவதை வன்மையாக மறுக்கிறேன். அவர் சீனா சேம்ஸ் அம்மையாரின் முழுநீளப் படங்களை பார்த்து ரசித்த கில்லாடி என்பதையும் பெருமையுடன் உங்களிற்கு அறியத்தருகிறேன். உடனடியாக அந்த நாலஞ்சு எபிசோட்களை எழுதி அனுப்புங்கள் நண்பரே. நவராவா :))

  ReplyDelete