Friday, May 28, 2010

ரேப் ட்ராகன் - 1


பட்டுக் கைக்குட்டை

குத்து நகரில் இரவு தியானித்துக் கொண்டிருந்தது. நகரின் கேளிக்கைகளிற்கு அடிமையாகிவிட்ட நீசர்களின் போதை கலந்த குரல்கள் மட்டும் இரவின் தியானத்தைக் கலைத்தபடியே இருந்தன. பிரபஞ்சம் எங்கும் புகழ் பெற்ற குத்து நகர அழகிகளின் மோகம் கலந்த க்ளுக் சிரிப்பொலிகள் இரவின் குளிரை ஊதிப் போக்கின. ஆஹா!! அழகிகளின் சிரிப்பொலிகளில்தான் எத்தனை ராஜ்யங்கள் புதையுண்டு கிடக்கின்றன.

நகரின் அழகான பகுதியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது குத்து நகர அரண்மனை. புரட்சிக்காரர்களின் புண்ணியத்தால் நகரில் காவல் கெடுபிடிகளிற்கு பஞ்சமில்லாது இருந்தது. அரண்மனையைச் சுற்றி சுற்றி கடுங்காவல் உடுக்கடித்தது.

அரண்மனையின் மேற்குப்புறத்தில் ராஜலேடிகள் தங்கும் அந்தப்புரம் அமைந்திருந்தது. அழகிய பூங்காவனம், நீச்சல் தடாகம், அல்லி, செந்தாமரை, நீர் மல்லி போன்ற பூக்கள் மிதக்கும் சிறு வாவிகள் , பள்ளியறைகள், பஞ்சணைகள், அனுபவசாலிகளின் கண்களிற்கு மட்டுமே தெரிந்திடும் வியாக்ரா குளிகைகள்.

அந்தப்புரத்தின் அந்த அழகான பூங்காவனத்தினுள் ஒளிர்ந்த விளக்குகளின் மந்தமான பிரகாசத்தைக் கிழித்துக் கொண்டு அந்த உருவம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தில் ஒரு அழகு ஒட்டியிருந்தது. தன் வேகமான நகர்வால் அந்தப்புரக் கட்டிடத்தை நெருங்கிய அந்த உருவம், அந்தப்புரத்தின் தூண் ஒன்றைப் பற்றி பரபரவென உடும்பு ஸ்டைலில் தூணில் ஏற ஆரம்பித்தது.

அந்தப்புர மாடமொன்றில் குதித்து இறங்கிய அவ்வுருவம், சத்தம் எழுப்பாது மாடத்தின் அருகே அமைந்திருந்த பள்ளியறையை நோக்கி நகர்ந்தது. பள்ளியறையின் உள்ளே கிடந்த பஞ்சணை மீது அழகெல்லாம் ஒன்றாய் சேர்த்து செய்த சிலையென உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறாள் குத்து நகர இளவரசி குந்தவி.

பஞ்சணையில் மலர்ந்து குலுங்கும் பூந்தோட்டமாக உறங்கும் இளவரசி குந்தவியின் அழகை அந்த உருவம் ஒரு கணம் ரசிக்கவே செய்தது. ஆனால் அதன் மனம் இது நல்லதல்ல என்று உருவத்திற்கு சுட்டிக்காட்டியது. தன் மனதை திட்டிக் கொண்டே இளவரசி குந்தவியின் மயக்கடிக்கும் அழகிலிருந்து விடுபட்ட அந்த உருவம் உடனடியாக செயலில் இறங்க ஆரம்பித்தது.

பைங்கிளி குந்தவியின் பஞ்சனையை பூனைப் பாதங்களில் நெருங்கிய அவ்வுருவம், அவள் மார்புகள் அலைகள் போல் ஏறி இறங்குவதைக் கண்டு ஏங்கியது. குந்தவி தன் வாளிப்பான தேகத்தில் பூசியிருந்த வாசனைத் திரவியங்களின் கிறங்க வைக்கும் நறுமணம் உருவத்தை உன்மத்தம் கொள்ளவைத்தது. சிறிதும் தயங்காது அவ்வுருவம் குந்தவியின் முகத்தின் மேல் ஒரு பட்டுக் கைக்குட்டையை மென்மையாக விரித்தது.

அப்பட்டுக் கைக்குட்டையில் தடவியிருந்த மயக்கமருந்தானது இளவரசி குந்தவியின் சுவாசத்தோடு கலந்து அவள் உடலினுள் பரவ ஆரம்பித்தது. குந்தவியின் சுவாசம் பட்ட அப்பட்டுக் கைக்குட்டையில் ஒரு விசித்திர உருவம் புலனாக ஆரம்பித்தது. குந்தவி முழு மயக்க நிலையை அடைந்தபோது பட்டுக் கைக்குட்டையில் புலனாகிய உருவம் தெளிவாக தெரிந்தது. தன் சிறகுகளை தூக்கி மடக்கியபடி நின்றிருந்த ஒரு ட்ராகனின் உருவம் பட்டுக் கைக்குட்டையில் முழுமையாகியிருந்தது.

பஞ்சணையில் மயங்கிய நிலையில் கிடந்த குந்தவியை தன் கைகளில் அள்ளிக் கொண்ட மர்ம உருவம், மாடத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கியது.

[தொடரும்]

20 comments:

  1. அன்பு நண்பரே

    எல்லாம் நல்லாதானே இருந்துச்சி. இது என்ன தீடீரென?

    குந்தவையின் கதியை எண்ணி பல்லாயிரம் கோடி வாசகர்கள் கலங்கி நிற்கிறோம்.

    ReplyDelete
  2. மிகவும் ஆவலை தூண்டிவிட்டது . உங்களின் அடுத்தப் பதிவை எதிர்பார்க்கிறேன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. என்னது?!! தொடருமா?!!

    வேதாள நகரம் மாதிரி இது என்ன பாதாள நகரமா?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. ஜோஸ், இது ஒரு ஜாலிக்காக. வாசகர்களை குந்தவி கதற வைப்பாள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் பனித்துளி சங்கர், இது மிகவும் மோசமான ஒரு தொடர் என்பதை இப்போதே உங்களிடம் கூறி விடுகிறேன். நண்பர்களிடையே கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு தொடர். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    தலைவர் அவர்களே, வேதாள நகரம் ஒரு நோபல் இலக்கியம். அது இமயம். இது கொல்லி மலை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  5. ஏற்கெனவே நீங்கள் ஆரம்பித்து பாதியில் விட்டுவிட்ட நியாயப்படையைத் தொடரலாமே?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. ஆஹா . . என்னவொரு ஆரம்பம்!! ஆனால், குந்தவியின் வயதையும் நீங்கள் குறிப்பிட்டால், இன்னபிற அம்சங்கலைப் பொருத்திப் பார்க்க வசதியாக இருக்குமே . . :-)

    மாடத்தை நோக்கி அவசரமாக ஓடிய அந்த உருவம், அடுத்து என்ன செய்தது என்பதை சீக்கிரம் வெளியிட்டு, எங்கள் மனதைக் குளுமையாக்க வேண்டுகிறேன் . .

    எங்களுக்கெல்லாம் ரோப் தெரியும்.. அதுஎன்ன ரேப் ட்ராகன்? தெளிவியுங்கள் . . :-)

    ReplyDelete
  7. ஆஹா, சூப்பர். தொடருங்கள் நண்பா.

    ReplyDelete
  8. ப்ளீஸ் ப்ளீஸ் மீதியை இன்னிக்கே தொடரலாமே ?

    ரொம்ப ஏங்க / காக்க வைக்காதீங்க

    ReplyDelete
  9. தலைவரே, நியாயப்படையை அதன் ஆசிரியர் தந்தால் ஒழிய என்னால் பதிவிட முடியாது :)) அவர் கருணை செய்தால்தான் உண்டு.

    நண்பர் கருந்தேள், குந்தவியின் வயது சொல்லப்படாது :) சற்றுப் பொறுமை காருங்கள் யாவும் தெளிவாகும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சரவணக்குமார், மிகவும் மோசமான தொடர் இது. பின்பு என்னை வையக்கூடாது. கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, எழுதினால்தானே போடுவதற்கு. கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நண்பரே. கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  10. காதலரே முதல பாகத்திலேயே குந்தவையை எங்கள் மனதில் குந்த வைத்து விட்டீர்கள். ரேப் ட்ராகனிடம் மாட்டி அவர் மென்னுடல் என்னன் கொடுமைகளை அனுபவிக்க போகிறதோ... நமது டிராகன் மங்க் யாராவது ஹீரோவாக சீக்கிரம் என்ட்ரி கொடுக்க வையுங்கள்... இல்லையேல் அது பெரும் பாவம்.

    ReplyDelete
  11. ரஃபிக்,

    ஒரு நாள் பூசாரி கத்தியை தீட்டிக் கொண்டு இருந்தார், அப்போது அவ்வழியே வந்த ஆடு, பூசாரி சார் ஏன் கத்தியை தீட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலாக பூசாரி ஹாஹாஹாஹா என்று வில்லச் சிரிப்பு சிரித்தார். தொடர் முடியும் வரை வந்து கருத்துக்களை இடுவதற்கு என் முன்கூட்டிய நன்றிகள் அன்பு நண்பரே :))

    ReplyDelete
  12. இந்த பதில் கருத்தில் ஏதோ "உள்குத்து" இருக்கும் போல தெரிகிறதே.... தேவை இல்லாமல் கருத்திட்டு நானே வழிய வந்து சிக்கி கொண்டேனா...

    காதலரே, நம்மிடையே இருக்கும் பகைமையை தனிபட்ட முறையில் பேசி தீர்த்து கொள்ளலாம்...வேண்டும் என்றால் பாண்டி மைனரிடம் சொல்லி ஸ்பெஷல் பாக்கேஜ் ஒன்று அனுப்பி வைக்கவும் தயார்.

    டீல் ஓகே? ஹி ஹி ஹி

    ReplyDelete
  13. ரேப் ட்ராகன் திகிலான ஆரம்பம் தொடருங்கள்...

    ReplyDelete
  14. ரஃபிக், பயம் வேண்டாம் :))

    நண்பர் உதயன், ஆரம்பம்தான் திகில், பின்பு பிகில். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  15. இது ஒரு சைனீஸ் மற்றும் இந்திய கலவை போல் உள்ளது... குந்தவை மற்றும் டிராகன் பெயர்கள் இப்படி நினைக்க தோன்றின........ Unthinkable படத்தை பற்றி ஏதாவது கருத்துகள் உள்ளனவா.....

    ReplyDelete
  16. நண்பர் ரமேஷ், உங்கள் ஊகம் சரியானதே :)) நண்பரே அன்திங்கபில் திரைப்படம் இன்னமும் இங்கு வெளியாகவில்லை. ஆனால் உங்கள் கருத்தின் பின் அப்படம் குறித்து படித்தேன், மிக வித்தியாசமான ஒரு கதையாக- அதாவது தேச நலனிற்காக எந்த எல்லையையும் ஒருவன் தாண்ட அதிகாரங்கள் கண்ணை மூடிக் கொண்டு அனுமதிக்கின்றன ஆனால் அதன் விளைவுகள் எப்போதும் சாதகமாக அமையுமா என்பது உறுதியல்ல- இருந்தது. வெளியாகினால் தவறவிடமாட்டேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  17. என்னா காதலரே,
    குந்தவை...குத்து... னு ஒரே உள்குத்தா இருக்கே.... :)
    அய்...இங்கனையும் ரபிக் பத்தியா?கும்மி,ஆரம்பமாகட்டும். :)
    the kummi starts again....

    ReplyDelete
  18. குத்து நகர இளவரசி குந்தவியின் படத்தை உடனடியாக வெளியிடவும்.

    ReplyDelete
  19. நண்பர் இலுமினாட்டி, ஒரு உள்குத்தும் இல்லை. ஒரு ஹீரோ உருவாகிறான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிவ், குத்து நகர இளவரசி குந்தவையின் படத்தை விரைவில் வெளியிட முயல்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete