Wednesday, April 10, 2013

அன்புள்ள வேற்றுக்கிரகவாசிகளே.....


எம் அறிவிலும் சிறந்த பெருமதிப்பிற்குரிய வேற்றுக்கிரகவாசிகளிற்கு....

எப்போது பார்த்தாலும் நீங்கள் வாழ்ந்திருந்த நிலமானது தன்னுயிரை நீத்த பின்பாக அண்டம் விட்டு அண்டம் பாயும் நீங்கள், வாழுயிரிகள் வாழ் நிலங்களின் வளங்களை உறிஞ்சி அவற்றையும் மரிக்க வைப்பதாக காண்படைப்புக்களில் அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பூமியில் வாழ்ந்து வரும் முட்டாள்களாகிய நாங்களும் அவ்விடயத்தில் உங்களிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அறிவுள்ள எவரும் உடனே உணர்ந்து கொள்ள முடியும். இயற்கை வளங்களை சகட்டு மேனிக்கு நுகர்வுட்குட்படுத்திய அறிவியல், தொழில் நுட்ப, தொழில் துறை, சனத்தொகை வளர்ச்சி காரணமாக ஏற்கனவே எம் நிலம் முக்கால்வாசி கற்பழிக்கப்பட்டு விட்டது எஞ்சியிருப்பது சொற்பமே, அதுவும் விரைவில் அழிக்கப்பட்டு விடும்.

மேலும் நீங்கள் நினைப்பது போல் எங்களை எதிர்க்க சிறப்பான ஆயுதம் எதையும் உங்களை பிரம்மா என சொல்லியாக வேண்டிய அவசியம் தவிர்த்து நீங்கள் உருவாக்க தேவை இல்லை. எங்களை நாங்களே அழித்துக் கொள்வோம். இன, நிற, மொழி, கலாச்சார ஆயுதங்கள் மட்டுமன்றி அணு ஆயுதங்களும் நம்மிடம் உள்ளன. இல்லையேல் இருக்கவே இருக்கின்றன அணு உலைகளும், பூகம்பங்களும், சுனாமிகளும். அவைகள் அடங்கி இருந்தாலும் வேடிக்கை வாரிசுகளின் எல்லை தகராற்றில் எங்காவது, எப்போதாவது ஒன்று சும்மாவேனும் வெடிக்காமலா போய்விடும்.

ஆக உங்களிற்கு ஏன் வீண் அலைச்சல், சிரமம். நீங்கள் செய்ய போகும் இந்த உட்டாலங்கடியைதான் எந்த கிராபிக்ஸும் இல்லாது நாமே செய்து கொண்டிருக்கிறோமே ! எந்தக் கிலேசமும் இல்லாமல் !

உங்கள் உள்ளூர் ஏஜெண்டான ஜோசப் கொஸின்ஸ்கி கிராபிக் நாவல்கள் எழுதுவார் போல. அதைத்தான் உங்களிற்கு அறிக்கையாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதை நம்பி நீங்கள் உங்கள் இயந்திர அறிவு சேனைகளுடன் களத்தில் குதித்து அசிங்கப்பட்டு போக வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உறிஞ்ச ஏதுமற்ற உடம்பில் கொசுவிற்கு என்ன வேலை. அதுவேதான் வரும் காலத்தில் உங்களிற்கும் மற்றும் இதே ஐடியாவில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் அனைத்து அறிவில் சிறந்த வே.கி.வாசிகளிற்கும்.

மேலும் இந்த ஏஜெண்டு நம்49 ஜாக் ஹீப்பர் போலவே ஒருவன் டாப் கன் எனும் படைப்பில் அதிவேக விமானத்தின் ஓட்டுனனாக எம்மை பழி வாங்கியிருக்கிறான். நம் 49 அச்சு அசல் அதே ஜாடை. என்ன இங்கு ட்ரான்களை ஓட்டுகிறான். அதுவும் ட்ரான்களை என்னவோ தானே ஓட்டுவது போல அவன் தரும் முக பாவங்கள் இருக்கிறதே அப்பப்பா. ஸ்டார் வார்ஸ் விண் ஓட துரத்தல்களை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். நீங்கள் நினைவூட்டியதற்கு அதனால்தான் நன்றி கூற முடியவில்லை. பெண் ஏஜெண்டுகள் எந்த கிரகத்தை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு திறமையா !

தயவு செய்து திரையரங்கு வாசலில் வைத்து ரசிகர்களின் நினைவுகளையும் ஒரு இரு மணி நேரத்திற்கு நீங்கள் அழித்து விடுவீர்களேயானால் டெட்டிற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

புண்ணியம் செய்யாத புவிவாசி.

11 comments:

 1. அதுசரி :))

  /பெண் ஏஜெண்டுகள் எந்த கிரகத்தை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு திறமையா !/
  இதெல்லாம் ஓவர் :)

  ReplyDelete
  Replies
  1. படத்தை பாருங்க... அப்புறம் தெரியும் :))

   Delete
 2. அன்பிற்குரிய அயல்கிரகவாசிகளே,

  மொக்கைப் படம் என்று சொல்ல வக்கில்லாமல் மூன்று பக்கத்துக்கு மொக்கை போட்ட பீசுகளை முதலில் கடத்திச் செல்லுமாறு கண்ணீரோடு கேட்டுக் கொள்கிறேன். பியர் வாங்கக் கூட காசில்லாத காலத்திலும் பக்கத்து சீட்டு பிகரை எட்டி எட்டி (!!) பார்க்கும் கபோதிகளையும் கண்டம் விட்டு கண்டம் மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  - இப்படிக்கு,
  ஸ்கை பை என்றாலே சட்டைப்பையை பிடித்துக்கொண்டு எதிர் திசையில் ஓடும் ஒரு அபாக்கியன். ;)

  ReplyDelete
  Replies
  1. கவலை வேண்டாம் செய்து விடுகிறோம்....

   இப்படிக்கு சாலி :))

   Delete
  2. Mokka Comics Ku Mokkaya Review Pottu Kolluravangalana Enna Pannalam

   Delete
  3. மீ த பஸ்டு, படித்துவிட்டு வருகிறேன், பின்னிட்டீங்க, சூப்பர், உங்க எழுத்தே தனி, உங்க பதிவே ஒரு பனி அப்டி சும்மா ஏத்தோ ஏத்துன்னு ஏத்தி விட்டு ஜாலியா என்சாய் பண்ணலாம்.... :)

   Delete
  4. படம் பார்க்கலாமா... வேணாமா... பட்டுன்னு சொல்லுங்கப்பு....

   லெட்டர்னா, ஸ்கூல்ல எழுதுன லீவ் லெட்டர் நியாபகம் வந்து டெரர் பண்ணுது :)

   Delete
  5. கீனு: ஒன்னியும் பண்ண முடியாது மச்சி. ஆனா கொலைவெறியோட சுத்திகிட்டு இருக்கிற பீசுக ஆர்வக்கோளாறில வந்து ஒரு ஆடு ஆடுதேன்னு குதூகலமா கும்மியடிக்க ரெடி ஆவலாம். ;)

   Delete
  6. ரஃபிக் படத்தை பாருங்க... ஆனா என்ன அப்புறமா ஏதும் சொல்லக்கூடாது... :)

   Delete
 3. // மீ த பஸ்டு, படித்துவிட்டு வருகிறேன், பின்னிட்டீங்க, சூப்பர், உங்க எழுத்தே தனி, உங்க பதிவே ஒரு பனி அப்டி சும்மா ஏத்தோ ஏத்துன்னு ஏத்தி விட்டு ஜாலியா என்சாய் பண்ணலாம்.... :)//

  Ha! Ha! Ha!

  ReplyDelete