Thursday, April 30, 2009

செட்டொனும் லின்க்ஸ் பூனையும்

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு முதலில் என் நன்றிகள். அப் பதிவுகளிற்கு நீங்கள் பதிந்த கருத்துக்களிற்கான பதில்களை அப் பதிவுகளின் கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.

உலக உழைப்பாளிகள் தினம் மே 1ல் கொண்டாடப் படுகிறது. அன்பு நண்பர்கள் அனைவரிற்கும் என் மே தின வாழ்த்துக்கள் உரித்தாகுக. குறிப்பாக, பதிவுகளை தயாரிப்பதற்காக சற்றுக் கூடுதலாக உழைக்கும் அனைத்து உழைப்பாளிகளிற்கும் என் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காமிக்ஸ் வலைப்பூக்களின் உலா.

1943ம் ஆண்டில் வெளியான வேதாளரின் திரைத் தொடர் பற்றிய ஒர் பதிவை தந்திருக்கிறார் நண்பர் காகொககூ.

பிலிப் காரிகனின், இரண்டு பாகக் கதையை முழுதாக தந்து விருந்து படைத்திருக்கிறார் நண்பர் புலா சுலாகி அவர்கள்.

தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடிகளில் ஒருவரான ஆர்.வி பற்றிய ஒரு பதிவுடன் ஒர் சித்திரக் கதையையும் வழங்கியுள்ளார் நண்பர் அ.வெ. அவர்கள்.

தமிழ்ப் புத்தாண்டின் தோற்றம் பற்றி வித்தியாசமான ஒர் பதிவை தந்திருக்கிறார் நண்பர் சிவ்.

எரிமலைத் தீவில் பிரின்ஸ் எனும் பதிவை வழங்கியிருக்கிறார் நண்பர் BB.

தலைவர் அவர்கள், லயன் காமிக்ஸில் இடம் பெற்ற ஒர் போட்டியினைப் பற்றிய பதிவை தந்திருக்கிறார்.

டிஸ்னி காமிக்ஸின் இந்திய வருகை பற்றிய பதிவை தந்திருக்கிறார் நண்பர் ரஃபிக்.

காப்டன் BLUE BERRYன் இரண்டு கதைகளை தரவிறக்கம் செய்ய உதவுகிறார் நண்பர் லக்கி லிமட்.

காமிக்ஸ் செய்திகளை தாங்கி வரும் விஸ்வாவின் பதிவு மீண்டும் வெளிவருகிறது. ஒர் மாதத்தில் 7 பதிவுகளை இட்டு அசர வைக்கிறார் காளை.

மேற்கூறிய பதிவுகள், மே தின சிறப்பு பதிவுகளால் ஓரங்கட்டப்படலாம்,செட்டொனின் கதைக்குள் நுழையும் முன்பாக ஒர் சிறு குறிப்பு. இது ஒர் மங்கா வகைக் கதையாகும், சித்திரங்களும், வசனங்களும் வலமிருந்து இடமாக பார்க்கப், படிக்கப் படல் அவசியம். அவ்வளவே.

அடர்ந்த காடு. மனிதர்களின் காலடிகள் இன்னமும் அதிகமாக அக்காட்டினுள் பதியவில்லை. புள்ளினங்களின் கீச்சு ஒலிகள், அவை பறக்கும் போது அசைந்து அடங்கும் கிளைகளின் மூச்சு. சிறகுகளின் இசை. இவற்றை ஊடுருவிக் கொண்டு கற்றை, கற்றையாக வனத்தின் தரையில் விழும் சூரியக் கதிர்கள்.

lyn1




காட்டின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறது ஒர் லின்க்ஸ் பூனை. நிறைக் கர்ப்பமாக இருக்கும் அப்பூனையின் வயிற்றினுள் இரு குட்டிகள் காட்டிற்கு வருகை தர ஆயத்தமான நிலையில் உள்ளன. குட்டிகளை ஈனுவதற்காக பாதுகாப்பான ஒர் மறைவிடத்தை தேடிக் கொண்டிருகிறது அத் தாய்ப் பூனை. ஆனால் அதன் கண்களில் தெரிகிறது அகோரமான பசி.


கடந்த வருடம் பனிக்காலத்தில் உருவான ஒர் நோயால் லின்க்ஸ் பூனைகளின் வழமையான உணவான அமெரிக்க முயல்கள் இனம் அழிந்து போயின.


அளவிற்கதிகமாகவிருந்த பனி வீச்சாலும், கடும் குளிராலும் தரையின் குளிர் நிலை உயர்ந்து விட, கானாங் கோழிகளில் பெரும்பாலானவை இல்லாது போயின.


இலை துளிர் காலத்தின் போது பெய்த அடை மழை வேறு நீர் நிலைகளின் நீர் மட்டத்தை உயர்த்தி விட, மீன்களும் தவளைகளும் லின்க்ஸின் பாதங்களிற்கு எட்டாத தூரத்தில் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன.

லின்க்ஸ் பூனை பசிக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அது தன் குட்டிகளை ஈனும் முன் பட்டினியால் இறந்து விடும் நிலை. இருப்பினும் அப்பூனை தனக்கு கிடைத்த ஆமை முட்டைகளையும், சிறிய இறால்களையும் உண்டு தன் உயிரை தக்க வைத்துக் கொண்டது. பின் ஒர் நாள் காட்டில் வீழ்ந்து கிடந்த பிரம்மாண்டமான மரமொன்றின் கோறையான நடுப் பகுதியில் தன் குட்டிகளை பாதுகாப்பாக ஈனுவதற்கான ஒர் மறைவிடத்தை கண்டு கொண்டது.



numérisation0007

1875- ஒண்டாரியோ, கனடா- இலை துளிர் காலம்

ERNEST THOMPSON SETON, வயது 15. படகில் பிரயாணத்தை முடித்துக் கொண்டு, பென்லொன் நீர் வீழ்சி தரிப்பில் தன்னை அழைத்து செல்ல வரும் டாமிற்காக காத்திருக்கிறான். சில நிமிடங்களின் பின் அங்கு குதிரை வண்டியில் வந்து சேரும் டாம், செட்டொனை மகிழ்சியுடன் வரவேற்று, அவனைத் தன் பண்ணைக்கு அழைத்து செல்கிறான். பென்லொன் பிரதேசத்தில் அண்மைக்காலமாகவே மனிதர்கள் குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள். நாகரீகத்தின் எல்லைகளிலிருந்து தொலைவில் இருக்கும் காட்டுப் பிரதேசம். இங்கு குடியேறும் மனிதர்கள் காட்டுப் பகுதிகளை அழித்து பண்ணை அமைப்பு, விலங்கு வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.numérisation0008

டாமின் பண்ணைக்கு செல்லும் பாதையில் கலை மான்கள் கூட்டமொன்றைக் கண்டு வியக்கிறான் செட்டொன். தான் ஏற்கனவே கரடிகளையும், லின்க்ஸ்குகளையும் இங்கு கண்டிருப்பதாகவும், எனவே செட்டொன் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறான் டாம். 7 கிலோ மீற்றர் தூரத்தை வண்டியில் கடந்த பின் அவர்கள் டாமின் பண்ணைக்கு வந்து சேர்கிறார்கள்.

செட்டொனை அங்கு வரவேற்கும் டாமின் சகோதரிகளான ஜேனும், கேட்டும் அவர்களிற்கு உணவு பரிமாற ஆரம்பிக்கிறார்கள். உணவு உண்டவாறே உரையாடல் தொடர்கிறது. தன்னுடன் ஒர் துப்பாக்கியை எடுத்து வந்திருப்பதாக கூறுகிறான் செட்டொன். இதனைக் கேட்டு மகிழும் டாம், தன் வேலைச் சுமையால் தான் வேட்டைக்கு செல்வது அரிதாகவே என்று கூறுகிறான். செட்டொன் வேட்டையாடச் சென்றால் இறைச்சி உணவாகக் கிடைக்கும் என்று உவகை கொள்கிறார்கள் டாமின் சகோதரிகள். ஆனால் தான் இது வரை வேட்டை மிருகங்களை குறி பார்த்து சுட்டதில்லை என்கிறான் செட்டொன்.

இதே காலப் பகுதியில் லிங்ஸ் பூனையானது அழகான இரு குட்டிகளை மரத்தின் மறைவிடத்திற்குள் ஈன்றெடுக்கிறது. தன் குட்டிகளை தன் நாவால் நக்கி அன்பு சொரியும் அதன் பசி இன்னமும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.குட்டிகளின் பராமரிப்பு பூனையின் இரை தேடல் நேரத்தைக் குறைக்கவே செய்தது. அதன் இரை தேடலின் போது கிடைக்கும் சிறிய அணில் போன்ற விலங்குகள் அதன் பசியை தீர்ப்பதாக இல்லை. பசி தீராது போனால் குட்டிகளிற்கு எவ்வாறு பால் தருவது. குட்டிகள் பசியால் ஒலி எழுப்புகின்றன.இவ்வாறு தானும் தன் குட்டிகளும் உயிர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் லின்க்ஸின் பாதையில் விதி குறுக்கிட வைக்கப் போவது, வேறு யாரையுமல்ல இளைஞன் செட்டொனைத்தான்.

பண்ணை வாழ்வு மிக அமைதியாகவே நகர்ந்தது. தினந்தோறும் செட்டொன் வனத்தினுள் உலாவுவதற்கு செல்வான். ஆனால் இது வரை அவன் எப் பிராணிகளையுமே வேட்டையாட முடிந்ததில்லை. செட்டொன் துப்பாக்கியைத் தன் தோளில் வைத்து குறி பார்க்கும் போதெல்லாம் பறவைகள் அதனை உணர்ந்து கொண்டது போல பறந்து சென்றன. செட்டொன் வெறுங் கையாக பண்ணைக்கு திரும்புவான்.

லின்க்ஸ் பூனை, தவளை, பாம்பு, முள்ளம் பன்றி என தான் உணவாக கொள்ளக்கூடிய எதனையும் விட்டு வைக்காது வேட்டையாட முயன்றது. ஆனால் முள்ளம் பன்றி மட்டும் லின்க்ஸின் பாதங்களில் தன் முட்களை பதித்து விட்டு தப்பி சென்றது. முள்ளம் பன்றியின் வாடையும், அப் பிராணி தரக்கூடிய அபாயமும் லின்க்ஸ்க்கு தெரிந்தே இருந்தது. ஆனால் பசி, என்ன செய்வது.

numérisation0009

இவ்வாறாக ஒர் நாள் லின்க்ஸ் இரை தேடலிற்காக வனத்தின் எல்லையைக் கடந்து டாமின் பண்ணைக்கருகே வந்து சேர்ந்தது. அது முன்பு வந்திராத இடம், அதன் மூக்கு, அது இது வரை அறிந்திராத புதிய வாடையை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

பண்ணையை நோக்கி அவதானமாக முன் நகர்ந்த லின்க்ஸின் கண்களில் அங்கு உலவிக் கொண்டிருந்த கோழிகள் கண்ணில் பட்டன. அதன் மிருக உணர்வு இங்கு நல்ல உணவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க, லின்க்ஸின் உடலில் ஒர் சிறிய நடுக்கம் மின் சாரலாக ஓடியது. உணவுடன் கூடிய அபாயமும் அங்கு இருக்கும் என்று அது சற்று அவதானமாக கோழிகளை நோக்கி, மரக் கட்டைகளின் பின் பதுங்கி , உடலை தரையில் தேய்த்தவாறே நகர்ந்தது.

கோழிகளின் கொக்கரிப்பு சத்தம் அவைகள் கிளப்பும் எச்சரிக்கை கத்தலாக இருக்குமோ எனச் சற்று தயங்கிய லிங்ஸ், நிதானித்தது. சூழ் நிலையில் எம் மாற்றங்களும் இல்லை என்பதை உணரும் லின்க்ஸ், கொக்கரிப்பு, எச்சரிக்கைக் கத்தல் அல்ல என தெரிந்து கொள்கிறது. மீண்டும் கோழிகளை நோக்கி நகரும் லின்க்ஸ், ஒர் அசுரப் பாய்ச்சலில் கோழிகள் மீது பாய்ந்து, ஒர் கோழியை வாயில் கவ்விக்கொண்டு தான் வந்தபாதையிலேயே திரும்பி வேகமாக ஓடுகிறது.

காட்டினுள் வழமை போன்று உலவச் சென்ற செட்டொன், இயற்கை அழகை ரசித்த படி, பிராணிகள் எழுப்பும் ஒலி வாயிலாக அவற்றை இனங் கான முயல்கிறான். திடீரென ஒர் அடர்ந்த புதர்ப் பகுதியில் இருந்து தன்னை நோக்கி ஒர் ஒலி அண்மிப்பதை அறியும் அவன் திகைத்து நிற்கிறான். புதர்களை விலக்கி கொண்டு தன் வேகமான ஒட்டத்தில் செட்டொன் முன் வந்து நிற்கிறது லின்க்ஸ்.

செட்டொன், முகத்தில் அதிர்ச்சி, மனதில் பயம். செட்டொனைத் தன் பாதையின் குறுக்கே இடையூறாக கண்டு விட்ட லின்க்ஸ், வாயில் கவ்வியிருந்த கோழியை கீழே போட்டு விட்டு, செட்டோனை நோக்கி சீற ஆரம்பிக்கிறது. லின்க்ஸின் வாயில் இருந்தது பண்ணையிலிருந்த கோழி என்பதை தெரிந்து கொள்ளும் செட்டொனிற்கு, பயத்தையும் மீறி ஆத்திரம் பொங்குகிறது, ஆனால் அன்று அவன் கைகளில் துப்பாக்கி இல்லையே. மிருகமும், மனிதனும் கண்களில் பார்த்துக் கொள்கிறார்கள். அக் கண்கள் மொழி பேசியிருக்கக் கூடுமா? தன் கண்களை செட்டொனின் கண்களில் இருந்து நகர்த்தாது, தன் தலையை சற்றுக் கீழிறக்கி, கோழியை வாயில் கவ்வும் லின்க்ஸ், செட்டொனிற்கு எதிர் திசையில் ஓடி மறைகிறது.

numérisation0010

தன் குட்டிகள் இருக்குமிடம் வரும் வரையில் லின்க்ஸ் ஒட்டத்தை நிறுத்தவேயில்லை. கோழியின் ரத்தத்தின் சுவை, அதன் பசியைக் கூட்டிய போதிலும் அது கோழியை ஒர் கடி கூடக் கடிக்கவில்லை. தன் தங்குமிடத்தை அடையும் அத் தாய்ப் பூனை, தன் குட்டிகளை ஒலி எழுப்பி அழைக்கிறது, தான் பிடித்த கோழியை தன் குட்டிகள் முன்பாக போடுகிறது. தன் குட்டிகளை தன் முகத்தால் கொஞ்சி விளையாடும் லின்க்ஸ் பின் தன் குட்டிகளுடன் சேர்ந்து கோழியை உண்டு பசியாற ஆரம்பிக்கிறது.

அன்று மாலை பண்ணையில் அனைவரும் லின்க்ஸ் பற்றியே பேசிக் கொள்கின்றனர். இரை கிடைக்காமையாலேயே லின்க்ஸ் பண்ணை வரை வந்திருக்க கூடும் என்கிறான் டாம். கோழிக் களவாணி லின்க்ஸை மறு முறை தான் கண்டால் அதன் கதையை தீர்த்து விடுவதாகக் கூறுகிறான் செட்டொன்.

சம்பவத்தின் பின், நாட்கள் பல, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி கழிந்தன. செட்டொன் வழமை போல் காட்டினுள் உலவச் செல்கிறான். காட்டின் புதிய பகுதிகளிற்கு உலவச் செல்ல ஆரம்பிக்கும் செட்டொன் ஒரு நாள் கலை மான் தடமொன்றினைக் காண்கிறான். மானை அருகில் இருந்து பார்க்க விரும்பும் அவன், தடங்களை தொடர்ந்து செல்கிறான். ஒர் சிறிய பள்ளத்தாக்கை கடந்த பின் வரும் ஒர் புல் தரையில் கலைமானும் ஒர் குட்டியும் நிற்பதைக் காணும் அவன் மகிழ்ச்சி அடைகிறான். மெதுவாக மான்களை நோக்கி செட்டொன் முன்னேறிய போது, அவனைக் கண்டு விடும் மான்கள் ஒடி விடுகின்றன. மான்களைப் பார்த்த பரவசத்தில் காட்டினுள் உற்சாகமாக முன்னேறுகிறான் செட்டொன்.

கோழி வேட்டையின் பின்பு லின்க்ஸிற்கு திருப்திகரமான இரைகள் எதுவும் அகப்படவில்லை, மறுபடியும் அந்த பெரிய கூட்டிற்கு செல்லலாமா என அது தனக்குள் கேட்டுக் கொண்டது. இவ்வாறாக அது இரை தேடி நடந்து வருகையில், மேய்ந்து கொண்டிருக்கும் கலை மானையும், அதன் குட்டியையும் கண்டு விடுகிறது. அருகில் இருக்கும் புதர்களின் பின்னே பதுங்குகிறது லின்க்ஸ். மான் குட்டி தாயை விட்டு விலகி வரும் தருணத்தை பாத்திருக்கும் லின்க்ஸ், அத் தருணம் கிடைத்த போது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மான் குட்டியை தன் பாதத்தால் அடித்து விழுத்தி, அதனை தன் வாயில் கவ்விக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறது.

காட்டினுள் நடந்து செல்லும் செட்டொன் தரையில் வீழ்ந்து கிடக்கும் ஒர் மரத்தின் அருகில் வரும் போது பூனைகளின் கத்தலைக் கேட்டு விடுகிறான். மரத்தினை அண்மிக்கும் அவன் அதன் கோறையான உட் பகுதியில் இரண்டு லின்க்ஸ் குட்டிகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான். தன் துப்பாக்கியால் அக் குட்டிகளை குறி பார்க்கிறான். துப்பாக்கி ஒன்று தங்களை குறி பார்க்கிறது என்பது அறியாமல் குட்டிகள் எக் கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அக்குட்டிகளை சுடுவதற்கு செட்டொனின் மனம் இடம் தரவில்லை.

numérisation0011

அவன் தயங்கி நின்ற அத் தருணத்தில் புதர்களை கிழித்துக் கொண்டு வாயில் மான் குட்டியுடன் செட்டொன் முன்பாக பாயும் லின்க்ஸ், மானை கீழே வீசி விட்டு சீறியவாறே செட்டொன் மேல் பாயத் தயாராக, செட்டொன் துப்பாக்கி விசையை அழுத்துகிறான், அவன் குறி தவறுகிறது, துப்பாக்கி ஓசையால் மிரண்டு போன லின்க்ஸ் மான் குட்டியை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு ஓட, அதன் பின் தொடர்ந்து ஓடுகின்றன அதன் குட்டிகள்.

பண்ணைக்கு திரும்பும் செட்டொன் நடந்தவற்றை டாம் குடும்பத்தினரிடம் விபரிக்கிறான். இரவு உறங்கப் போகும் முன்பாக தன் நாட் குறிப்பில் சம்பவங்களை எழுதிக் கொள்கிறான்.

சில நாட்களின் பின் டாம் நோய்வாய்ப் படுகிறான். காட்டில் காணப்படும் மருத்துவ மூலிகைக் கசாயங்கள் தந்து சிகிச்சைகள் அளித்தும் அவன் காய்ச்சல் குணமாகாததால், குதிரை வண்டில் மூலம் தன் தாய் வீட்டிற்கு சிகிச்சைக்காக செல்கிறான் டாம்.

இதனைத் தொடர்ந்து டாமின் சகோதரிகளும், செட்டொனும் பண்னை வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தொடரும் சில நாட்களில் கேட்டும், ஜேனும் காய்ச்சல் உண்டாகி படுக்கையில் வீழ்கிறார்கள். காடு தன் இன்னொரு முகத்தை செட்டொனிற்கு காட்டுவதற்கு தயாராகியது.

லின்க்ஸிற்கும் அதன் குட்டிகளிற்கும் மான் குட்டி ஒரு வாரத்திற்கு பசியை தீர்த்து வைத்தது. பின் குட்டிகள் பசியால் கத்த ஆரம்பிக்கின்றன. காட்டினுள் இரை தேடி அலையும் லின்க்ஸ் இரை ஏதும் கிடைக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கிச் செல்கிறது.

சுகவீனமான நிலையிலிருக்கும் கேட்டையையும், ஜேனையும் பராமரிக்கிறான் செட்டொன். அவனே தனி ஆளாக செயற்பட வேண்டிய கட்டம். ஒர் நாள் அவன் கேட்டிற்கு மூலிகைக் கசாயம் அருந்த தந்து கொண்டிருக்கும் வேளையில், கோழிகளின் கொக்கரிப்பு பலமாகவே, தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். தன் வாயில் ஒர் கோழியைக் கவ்விய படியே ஒடிக் கொண்டிருக்கும் லின்க்ஸைக் காணும் அவன் தன் துப்பாக்கியால் அதனை சுடுகிறான், ஆனால் லின்க்ஸ் காட்டிற்குள் ஓடி விடுகிறது.

பண்ணையில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் கோழிகள் அனைத்தையும் கோழிக் கூட்டிற்குள் அடைத்து விடுகிறான் செட்டொன். இத்தருனத்தில் அவன் உடல் நடுங்க ஆரம்பிக்கிறது, மற்றவர்களை தாக்கிய காய்ச்சல் அவனையும் தன் அணைப்பில் எடுத்துக் கொண்டது. உடல் பலவீனமாக இருந்தாலும், ஆற்றில் சென்று தண்ணி அள்ளுவதை தொடர்கிறான் செட்டொன், இரவில் காய்சல் அவர்களைப் படுத்தும் போது உருவாகும் தாகத்தை தீர்க்க பெருமளவு தண்ணீர் தேவைப்படும். மூலிகைக் கசாயங்கள் நோயின் வலிமையை தணிப்பதாக இல்லை, தாயின் வீடு சென்ற டாம் திரும்பவில்லை. பண்ணையில் இருக்கும் உணவுப் பொருட்களின் அளவு குறைகிறது.

கோழி ருசி கண்ட லின்க்ஸ் வேறு இரைகள் சிக்காததால் மீண்டும் பண்ணையை நோக்கி வருகிறது. வழமையாக அங்கு உலவும் கோழிகளைக் காணாது ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அதன் மோப்ப சக்தி கோழிகள் அங்கு எங்கோ இருப்பதை அதற்கு உணர்த்தி விடுகிறது. இருள் வரட்டும் எனக் காத்திருக்கும் லின்க்ஸ், நன்றாக இருண்ட பின் பண்ணையை நோக்கி நகர்கிறது. கோழிக் கூட்டிற்கு பதிலாக மனிதர்கள் தங்கும் வீட்டிற்குள் மண்ணைக் கிளறி உட் புகும் லின்க்ஸ், மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கிறது. இறுதியாக செட்டொன் பாதுகாப்பாக வைத்திருந்த பன்றி வற்றலை எடுத்துக் கொண்டு காட்டினுள் ஓடி விடுகிறது.

காலையில் எழும் செட்டொன் பன்றி வற்றல் காணமல் போனதை எண்ணி திகைக்கிறான். இது லின்க்ஸின் வேலையாகத்தான் இருக்கும் என தீர்மானிக்கிறான். உணவிற்காக வளர்க்கும் கோழிகளை கொல்ல வேண்டிய நிலைக்கு பண்ணையில் உள்ளவர்கள் தள்ளப்படுகிறார்கள். கோழிக் கூட்டிற்கு செல்லும் செட்டொன் கோழியை ஒடிப் பிடிக்க உடலில் வலிமை இல்லாததால் தன் துப்பாக்கியால் சுட்டுக் கோழியைக் கொல்கிறான். கூட்டின் கதவைத் திறந்த போது வெளியே ஓடி விட்ட கோழிகளை மீண்டும் கூடு சேர்க்க அவனிடம் வலிமை இல்லை. எனவே கோழிகளை வெளியில் உலவித் திரிய விட்டு விடுகிறான்.

lyn2

மனிதர்கள் பலவீனமாகி விட்ட நிலையில், கோழிகளை லின்க்ஸ் மட்டுமன்றி காட்டுக் கீரி, நரி போன்றவையும் வேட்டையாடுகின்றன. கோழிகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் செட்டொனின் மனதில் லின்க்ஸ் மீதான ஆத்திரம் அதிகரிக்கிறது. ஒர் நாள் இரவு காய்ச்சலின் மயக்கத்தில் விழிக்கும் செட்டொன், தன் படுக்கையில் அருகில் உள்ள தண்ணி வாளியில் லின்க்ஸ் நீர் அருந்திக் கொண்டிருப்பதைக் காண்கிறான், செட்டொன் விழித்ததைக் கண்ட பூனை தப்பி ஒடி விடுகிறது. மறு நாள் காலை தான் கண்டது கனவா என எண்ணும் செட்டொன், கோழி சூப்பிலிருந்து கோழி மாமிசம் மறைந்து விட்டதைக் காண்கிறான். லின்க்ஸ் வீட்டினுள் நுழைய தோண்டிய துளையை சிறு மரக்கட்டைகளால் மூடுகிறான். கோழிகள் யாவையும் பூனை வேட்டையாடி தீர்க்கிறது. மரக் கட்டைகளை விலக்கி வீட்டினுள் நுழைந்து கோழி சூப்பிலிருந்த மாமிசத்தை எடுத்துக் கொண்டு ஓடி தன் குட்டிகளிற்கு உண்ணத் தருகிறது. கோழிகளும் தீர்ந்து விட்டன, வேறு உணவுகளும் இல்லை, டாம் சென்று 3 வாரங்கள் ஓடி விட்டன. நோய் அவர்களை விடுவதாக இல்லை. செட்டொனும், டாமின் சகோதரிகளும் காட்டு பெரிகளையும், நீரையும் மட்டும் உணவாக உட் கொண்டு உயிர் வாழும் வேதனையான நிலை உருவாகிறது.

செட்டொன் தனது துப்பாக்கியின் தோட்டாக்கள் யாவும் தீர்ந்து போனதால், தங்கள் பாதுகாப்பிற்காக ஒர் குத்துக் கோலை உருவாக்கி கொள்கிறான். காட்டில் பசியெடுத்த லின்க்ஸ் உள்ளுணர்வால் உந்தப்பட்டு பண்ணையை நோக்கி நடக்கிறது.

இரவு தூக்கம் கலைந்து எழும் ஜேன், தன் கட்டிலின் அருகில் லின்க்ஸ் நீர் அருந்துவதைக் கண்டு விடுகிறாள். பயத்தில் செட்டொனை கூப்பிடும் அவளின் குரலால் செட்டொனின் தூக்கம் கலைகிறது. செட்டொன் குத்துக் கோலையும், மெழுகுதிரி விளக்கையும் கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் மறைந்து விட்ட பூனையை தேட ஆரம்பிக்கிறான். இருளில் தீக்கங்குள் போல் பிரகாசிக்கும் காட்டுப் பூனையின் கண்களை கண்டு விடும் செட்டொன் அம் மூலையை அனுக அவன் தோளின் மீதாக சீறிப் பாய்ந்து ஒர் மேஜையின் மேல் இறங்குகிறது லின்க்ஸ்.

தன் கையிலிருந்த விளக்கையும், குத்துக் கோலையும் முன் நீட்டி லின்க்ஸிற்கு பயம் காட்ட முனைகிறான் செட்டோன், உக்கிரமாகும் பூனை செட்டொன் மேல் பாய்கிறது, அதிர்ச்சியால் செட்டொன் கீழே விழ, அவனைக் கடந்து விழும் பூனை கட்டிலின் அடியில் மறைந்து கொள்கிறது.

கட்டிலின் அடியினுள் தன் கோலால் குத்துகிறான் செட்டோன், பதிலுக்கு சீறிப்பாயும் பூனை செட்டொனைக் காயப்படுத்துகிறது, வன்மம் தலைக்கேறும் செட்டொன், பூனையின் நகங்களின் கீறல், மரத்திலான தரையில் ஏற்படுத்திய தடம் பார்த்து கட்டிலை நோக்கி தன் குத்துக் கோலை இறக்குகிறான். ரத்தம் தெறிக்கிறது. ஆக்ரோஷமாக வெளியேறும் பூனை, செட்டொனின் கோலை கடித்து, தன் பாதத்தால் அடித்து முறிக்கிறது. பலமிழந்து செட்டோன் தரையில் விழ வீட்டை விட்டு ஓடுகிறது லின்க்ஸ்.

இதன் பின் டாம் பண்ணைக்கு திரும்புகிறான். அவன் கொண்டு வந்திருந்த மருந்துகள், அவன் சகோதரிகளையும், செட்டொனையும் குணப்படுத்துகின்றன. புதிய கோழிகளையும், ஒர் நாய்க் குட்டியையும் வாங்குகிறான் டாம். பண்ணை வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புகிறது. லின்க்ஸ் மறுபடியும் பண்ணைப் பக்கம் தென்படவில்லை. ஒரு மாத காலத்தின் பின் சலவை வாளி தயாரிக்க மரமொன்றை காட்டினுள் தேடிச் செல்கிறார்கள் டாமும், செட்டோனும்.

முன்பு லின்க்ஸ் குட்டிகளை செட்டொன் பார்த்த இடத்தில் வீழ்ந்து கிடந்த மரத்தடிக்கு வந்து சேர்கிறார்கள் இருவரும். பிரம்மாண்டமான அம் மரம் தன் தேவைக்கு போதுமானது எனக் கூறுகிறான் டாம். இருவரும் சேர்ந்து மரத்தை அறுக்க ஆரம்பிக்கிறார்கள். ஒர் துண்டம் அறுத்து எடுத்ததும் மறு துண்டத்தை அறுக்கப் போகும் டாம் கண்களில் கோறையான மரத்தின் உள்ளே ஏதோ இருப்பது தெரிகிறது. மரத்தினைக் கோடாரியால் கொத்தி ஒர் சிறிய பகுதியை திறக்கிறான் டாம். திறந்த அப் பகுதி வழி உள் நுழையும் சூரியக் கதிர்கள் அணைப்பில் இறந்து கிடக்கின்றது தாய் லின்க்ஸ், அதனுடன் அதன் முலைகளை கவ்வியபடி காய்ந்து போய் இறந்து கிடக்கின்றன அதன் குட்டிகள். செட்டொனின் குத்துக்கோலின் உடைந்த நுனி , லின்க்ஸின் உடலில் இன்னும் குத்திக் கொண்டே நிற்கிறது… திறந்திருக்கும் லின்க்ஸின் உயிரற்ற விழிகள் செட்டொனின் மனதில் என்றும் விழித்துக் கொண்டேயிருக்கும்.

lyn3

ஒர் காட்டில், தனதும், தன் குட்டிகளினதும் பசி தணிக்க இரை தேடும் ஒர் லின்க்ஸிற்கும், அக் காட்டில் விடுமுறையைக் கழிக்க வந்த இளைஞனிற்குமிடையிலான போராட்டத்தை இயல்பாக சித்தரிக்கிறது கதை.

எர்னஸ்ட் தாம்ப்சன் ஸெட்டொன் என்ற இயற்கை ஆர்வலனின் வாழ்வின் ஒர் சிறிய பகுதியே கதையாக விபரிக்கப் படுகிறது. பிரதான கதையுடன், இணைந்து செட்டொனிற்கு இயற்கையிலும், உயிரிகள் மேலும் ஆர்வம் ஏற்படக் காரணமான வில்லியம் புரொடி என்பவரின் அறிமுகம் வாசகர்களிற்கு தரப் படுகிறது. செட்டொன் முக்கியமான நிகழ்வுகளையும், உயிரிகள் பற்றிய குறிப்புகளையும் நாட் குறிப்புகளாக எழுத வேண்டுமென அறிவுரை வழங்கியவர் புரொடி எனக் காட்டப் படுகிறது.

சுகவீனமான நிலையில் இருக்கும் கேட்டிற்கு, செட்டொன் கூறும் கதையில், செட்டொனின் தந்தை மிகவும் கண்டிப்பானவராக சித்தரிக்கப் படுகிறார். காட்டில் அலைதல் ஒர் கனவானிற்குரிய செயல் அல்ல என்ற கொள்கையுடையவர் அவர். தந்தையின் கொடுமை தாளாது செட்டொன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

தன் வீட்டிற்கருகில் இருந்த ஒர் காட்டில், தனக்காக ஒர் குடிலை மிகவும் சிரமப் பட்டு செட்டொன் உருவாக்குவதும், வீட்டை விட்டு வெளியேறிய ஒர் சமயம் இக் குடிலுக்கு தங்க வரும் செட்டொன் அதில் குடிகாரக் கும்பல் ஒன்று குடியேறிவிட்டதை காண்பதும், பின் அக் குடிகாரக் கும்பல் அவன் குடிலை சிதைத்து செல்வதையும் நெகிழ்வாக கூறியிருக்கிறார்கள்.

காட்டு உயிரிகள் பற்றிய விபரங்கள் எளிய முறையில் கூறப் படுகின்றன. கரடியை இது வரை கண்டிராத செட்டொன், கனேடிய முள்ளம் பன்றியை கரடி என நினைத்து ஒதுங்கல் போன்ற மென் நகைச் சுவையும் உண்டு.

இயற்கை ஆர்வலன் செட்டொன் எனும் இம் மங்காத் தொடரில் இது இரண்டாவது கதையாகும். பிரென்ச்சு மொழியில் இது வரை நான்கு கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

செட்டொன் எழுதிய நூல்களிலிருந்து மிருதுவான இக் கதையை அமைத்திருப்பவர் YOSHIHARU IMAIZUMI. மிகவும் இயல்பாக கதையை தந்திருக்கிறார் ஆசிரியர். கதையின் ஒர் தருணத்தில் பசி என்பது மனிதர்க்கும் சரி மிருகத்திற்கும் சரி பொதுவானதே, உயிர்வாழ்தலின் போராட்டமும் பொதுவானதே என்பதை அழகாக உணர்த்தி இருக்கிறார். லின்க்ஸின் மரணம் செட்டொனின் வாழ்வில் ஒர் முக்கிய திருப்பம் எனவும், பின் அவர் இயற்கையில் எவ்வாறு மனிதன் காட்டு விலங்குகளுடன் இசைவாக வாழலாம் என்பதை பற்றி உலகிற்கு தெரிவிக்க காரணமாய் அமைந்தது எனவும் குறிப்பிடுகிறார் [WOODCRAFT]

நல்ல மங்கா கதைகளில் சித்திரங்கள் கதையுடன் கை கோர்த்துப் பயணிக்கும். இக்கதைக்கு அற்புதமான சித்திரங்களை வரைந்திருப்பவர் JIRO TANIGUCHI எனும் மங்கா கலைஞர். சிறப்பான விருதுகள் வென்றவர். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர். காட்டின் வனப்பை மிக அழகாக வரைந்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் சூரியக் கதிர்களையும், அதன் பரவலையும், காட்டில் வாழும் உயிரிகளையும் மிக இயல்பாக சித்தரித்திருக்கிறார். பூனையின் உக்கிரமான மோதல் காட்சியையும் சிறப்பாக தந்திருக்கிறார். ஜான் ஜிரொட்டுடன் [MOEBIUS] இணைந்து ICARE எனும் கதையில் பணியாற்றியிருக்கிறார்.

காட்டுடன் இசைவாக வாழ விரும்புவன் காட்டில் வாழ வேண்டும் என்கிறார் செட்டொன். உண்மையே. சென்று விடலாமா?!

நண்பர்களே இப் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****

ஆர்வலர்களிற்கு

ERNEST THOMPSON SETON

JIRO TANIGUCHI

SETON LE NATURALIST

29 comments:

  1. கனவுகளின் காதலனே,

    வழக்கம் போல மீ த பஸ்ட்.

    //ஒர் மாதத்தில் 7 பதிவுகளை இட்டு அசர வைக்கிறார் காளை//

    இணைப்பு பதிவை (Connecting Blog Post) பொறுத்து இன்று இரவே எட்டாவது பதிவும் வலை ஏறலாம்.

    //இது ஒர் மங்கா வகைக் கதையாகும், சித்திரங்களும், வசனங்களும் வலமிருந்து இடமாக பார்க்கப், படிக்கப் படல் அவசியம். அவ்வளவே.//

    நல்ல வேளை, உங்களின் வார்த்தைகளையும் நாங்கள் அவ்வாறு படிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

    //காட்டுடன் இசைவாக வாழ விரும்புவன் காட்டில் வாழ வேண்டும் என்கிறார் செட்டொன். உண்மையே. சென்று விடலாமா?! // என்னுடைய நண்பர் ஒருவர் (பம்ப்பு செட்டில் குளிப்பவர்) அவ்வாறுதானே செய்து வருகிறார்.

    மேலும் அ.கொ.தீ.க தலைவரின் நிலை பற்றி உங்களுக்கே தெரியும்.

    //இயற்கை ஆர்வலன் செட்டொன் எனும் இம் மங்காத் தொடரில் இது இரண்டாவது கதையாகும். பிரென்ச்சு மொழியில் இது வரை நான்கு கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன// நான் படித்த இயற்கை ஆர்வலர்கள் பற்றிய காமிக்ஸ் கதைகளில் பெட் மண் கதை ஒன்று (மிருகம் என்று பெயர்). அதில் வரும் ஒரு இயற்கை ஆர்வலர் தன்னுடைய உடல் வருத்தங்களையும் பொருட்படுத்திக் கொண்டு வில்லன்களின் செய்கைகளை மட்டுப் படுத்துவார்.

    ஆனால், அவருக்கு பிடித்தமான ஒரு சிட்டுக் குருவியை ஒருவன் கொள்ளும்போது அவர் மீண்டும் வன்முறையில் இறங்கி தன உயிர் துறப்பார். அந்த கதையின் முடிவும் ஒரு கவிதைத்தனமான ஒன்றாகும்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  2. கனவுகளின் காதலனே,

    மேலே உள்ள பெட் மண் கதை என்பதை BatMan கதை என்று மாற்றி வாசிக்கவும்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  3. கனவுகளின் காதலனே,

    இந்த பதிவை படித்து விட்டு நானும் கடந்த ஒரு மணி நேரமாக என்னுடைய தமிழ் நாவல் கலெக்ஷனை அலசிக் கொண்டு இருக்கிறேன். இதனைப் போலவே இருக்கும் ஒரு தமிழ் மாத நாவலை தொண்ணுருகளின் ஆரம்பத்தில் படித்ததாக நியாபகம். என்னுடைய நேரம், இன்னும் அந்த புத்தகம் கிடைக்கவில்லை.

    அந்த நாவல் ஒரு முன்னணி எழுத்தாளரால் எழதப் பட்டதில்லை என்பதால் நினைவுக்கு கொண்டு வருவது சிரமமாக இருக்கிறது. அந்த கதையை படிக்கும்போது வித்தியாசமாக இருப்பதை கண்டு வியந்தேன். ஆனால் இந்த Manga கதைகள் மூன்று வருடங்களுக்கு முன்னரே வந்து இருப்பதால் இது ஒரு தற்செயலான சம்பவம் என்றே கருத வேண்டும்.

    தமிழ் கதையில் ஒரு சிறுத்தை வரும். விரைவில் தேடித் பிடிக்க பார்க்கிறேன். கொடுமையான விஷயம் என்னவெனில் நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு பல நூற்றுக்கணக்கான நாவல்களை நண்பர்களுக்கு தந்து விட்டேன். அவற்றில் இருக்குமோ என்ற ஐயம் இப்போது எழுகிறது.

    உங்களிடம் நான்கு ஸ்டார் பெற்று உள்ள இந்த ஆல்பம், பீ.டி தளத்திலும் 7.6 ஸ்டார்கள் பெற்று உள்ளது. சிறப்பான ஒன்று.

    இந்த மெய் மாதம் மாங்கா நிறைந்த மாதம் ஆகி விடும் போல இருக்கிறதே? டாக்டர் செவன் இரண்டு மாங்கா பதிவுகளை பிளான் செய்து வைத்து உள்ளார். நானும் ஒரு மாங்கா (அல்லது, இரண்டு மாங்கா பதிவுகள் - அந்த படத்தையும் சேர்த்த்துக் கொண்டால்)இடலாம் என்று எண்ணி உள்ளேன். பார்க்கலாம்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  4. விஸ்வா, நீங்கள் 8,9,10.... எனப் பதிவுகள் இட வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். தொடர்ந்து கலக்குங்கள்.

    பம்பு செட்டில் குளிப்பதில் உள்ள சுகம் நான் அறிவேன், அது ஒர் மினி நீர் வீழ்ச்சி. குட்டிக் குற்றாலம். அதெல்லாம் ஒர் காலம்.

    பம்பு செட்டில் குளித்த பையன், டாக்7, காட்டில் வாழ்கிறார்களா, கொடுத்து வைத்த ராஜாக்கள்.

    விஸ்வா உங்கள் தேடல் வெற்றி பெற்றால் தயங்காது அக்கதை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழில் வெளிவந்த காடு நாவலும் மிகச் சிறப்பான ஒர் நாவலாகும். அதில் மிளா எனும் ஒர் வகை மான், ஒர் கொம்பன் யானை என மறக்க முடியாத பாத்திரங்கள் உண்டு.

    முதன்மைக் கருத்துக்களிற்கும் தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. அடி தூள், வாக்களித்தபடி மங்கா பதிவுடன் வருகை தந்து விட்டீர்கள். உங்கள் அயரா முயற்சி வாரா வாரம் தவறாமல் பதிவின் மூலம் பளிச்சென தெரிகிறது. என் காமிக்கியல் பதிவை முடித்துவிட்டு மீண்டும் வந்து ஆர அமர படிக்கிறேன்.

    ReplyDelete
  6. ரஃபிக், இவ்வார இறுதியில் பதிவு மழை பெய்யப் போகிறது, நான் நனைவதற்கு ரெடி. கலக்குங்க ரகசிய உளவாளி.

    ReplyDelete
  7. மங்கா கதைகள் நான் படித்தது இல்லை மேலும் விருப்பட்டதும் இல்லை... நீங்கள் அதை தகர்த்து விட்டிர்கள்.... வாழ்த்துக்கள்..... நான் இந்த கதையை படிக்க முயாரச்கின்றேன்...

    ReplyDelete
  8. ரமேஷ், மங்கா கதைகளில் அருமையான மாணிக்கங்கள் உண்டு, ஆனால் அனைத்து மங்கா கதைகளும் சிறப்பானவை என என்னால் கூற முடியாது. நான் படிக்கும் சிறப்பான மங்காக்களை நண்பர்களிற்கு அறிமுகப்படுத்துவது எனக்கு முக்கியமாகப் படுகிறது. மங்கா பற்றிய உங்கள் கருத்தை இப்பதிவு மாற்றி விட்டது எனக் கூறியிருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. கருத்துக்களிற்கும் , உற்சாகமூட்டும் ஆதரவிற்கும் நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  9. நண்பர் மன்னிக்கவும். சென்ற முறை ஆங்கிலத்தில் தவறாக கமெண்ட் இட்டு விட்டேன்.

    அருமையான கதை. நல்ல நீர்வீழ்ச்சி போன்ற எழுத்து நடை உங்களுடையது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    கடைசியில் எனக்கு அந்த பூனையின் மேல் பரிதாபமே வருகிறது. அதே சமயம் அந்த சொட்டேன் மேலும் பரிதாபம் வருகிறது. இது தான் கதையின் வெற்றி.

    எந்த ஒரு கதையின் இரு எதிர்மறை துருவங்களுமே வாசகர்களால் கவரப் படுகிறார்களோ, அந்த கதை நிச்சயமாக வெற்றி அடையும். உதாரணம்: ஜோக்கர் மற்றும் பேட்மேன்.

    இந்த மாங்க ஆங்கிலத்தில் உள்ளதா? இருந்தால் டவுன்லோட் அல்லது வாங்கும் அமேசான் லிங்க் கொடுக்க முடியுமா?

    தனிமையில் புத்தகங்களே துணையாக உள்ளன.

    ReplyDelete
  10. கனவுகளின் காதலனே,
    போன வரம் வரை மங்கா கார்டூன்களை பற்றி தவறான எண்ணம் வைத்திருந்தேன் . அதை மாற்றியது share hunter இன் பதிவு தான் . அவர் Hayao Miyazaki's Movies பற்றிய பதிவு என்னை மாற்றியது . Hayao Miyazaki இன் ஒரு படம் பார்த்த பிறகு அவரின் ரசிகனாகி விட்டேன் . ஒரே வாரத்தில் ஆறு Hayao Miyazaki's Animation Movies டவுன்லோட் செய்து பார்த்து விட்டேன் .

    த்ற்போது உங்கள் பதிவு வேறு சேர்ந்து கொண்டது , நன்றி .அருமையான கதை , உங்களுடைய பதிவு அந்த காமிக்ஸ் ஐ என் கண் முன்னால் வந்து நிறுத்தியது . டவுன்லோட் லிங்க் தேடி கொண்டு இருக்கிறேன்

    என் பதிவு பற்றி உங்கள் பதிவில் குறிப்பிட்டதற்கு நன்றி .. ஆனால்

    மே 1 இல் இருந்து என் Blog இன் பெயரை மாற்றி விட்டு லிங்க்ஸ் எதுவும் தராமல் நீங்கள் மற்றும் மற்றவர்களை போலவே இனி பதிவுகள் இடலாம் என நினைத்து இருந்தேன் . அதற்கான வேலைகளில் ஈடுபட்டு template மாற்றும் பொது குளறுபடி ஆகி 'Error' ஆகி விட்டது. பழைய பதிவுகளை மீட்க முயன்று கொண்டு இருக்கிறேன் . அதனால் blog ஐ தற்காலிகமாக மூடிஉள்ளேன்

    Lovingly,
    Lucky Limat

    ReplyDelete
  11. கதை சிங்கம் ஒரு பூனையை பற்றிய பதிவை வழங்கி உள்ளது. அதுவும் மலைப் பூனை.

    நல்ல கதை. நல்ல முயற்சி. உங்களின் பதிவு எப்போது வெற்றி அடைத்தது என்றால் மாங்கா என்றாலே வெறுப்புடன் பார்த்த இருவர் இப்போது அதனை படிக்கும் ஆர்வத்துடன் முன்வந்து இருப்பதே.

    தொடருங்கள். உங்களின் பதிவுகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக கூட வெளியிடலாம். தமிழில் லயம் காமிக்ஸ் புத்தகங்களில் ஆர். அமுதா, வடுக விருட்சியூர் என்ற பெயரில் வாசகர் கடிதம் எழுதிய ஒருவர் பின்னர் அதனை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

    அதெல்லாம் வரும்போது, இதனை போன்ற அட்டகாசமான பதிவுகள் வருவதில் என்ன தவறு?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம் குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  12. இதுவரை நீங்கள் படைத்த பதிவுகளிலேயே இந்த கதை தான் மனதை வருடியது.

    ஏன் நீங்கள் ஐந்து நட்ச்சத்திரங்களை வழங்கவில்லை என்று கேட்க்க தோன்றுகிறது.

    //ஆனால் இந்த Manga கதைகள் மூன்று வருடங்களுக்கு முன்னரே வந்து இருப்பதால் இது ஒரு தற்செயலான சம்பவம் என்றே கருத வேண்டும்// விஸ்வா, இடங் ஆங்கில மூலக் கதை நூறு வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது.

    ReplyDelete
  13. காமிக்ஸ் பிரியரே,உயிர் வாழும் போராட்டத்தில் இரு பாத்திரங்களுமே அவர் அவர்களிற்கான நியாயமான காரணங்களுடன் ஈடுபடும் போது யாரை வெறுக்க முடியும். டவுன் லோட் செய்யலாமா என்பதை நண்பர் லக்கி லிமட் தான் கூற வேண்டும். இத் தொடரின் முதல் கதையான, லோபோ- ஒநாய்களின் அரசன் மட்டுமே ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது சுட்டியை இங்கு தந்திருக்கிறேன். ஜெயமோகனின் காடு நாவல் படியுங்கள். அது ஒர் அற்புதமான நாவல். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
    http://www.amazon.fr/seton-Comics-Graphic-Novels-Livres-anglais/s/qid=1241256387/ref=sr_nr_n_22?ie=UTF8&rs=69633011&keywords=seton&bbn=69633011&rnid=69633011&rh=n:!69633011,i:english-books,k:seton,n:81551011

    நண்பர் லக்கி லிமட், விரைவில் உங்கள் வலைப்பூவை சீராக்கி எங்கள் மத்தியில் வந்து விடுங்கள். கதையின் லிங் கிடைத்தால் அதனை இங்கு தயங்காது பதிந்து செல்லுங்கள். பதிவு காமிக்ஸை உங்கள் கண் முன் நிறுத்தியதற்கு காரணம், அதன் சிருஷ்டி கர்த்தாக்களே. கருத்துக்களிற்கும், அன்பான ஆதரவிற்கும் நன்றி.

    நண்பர் புலா சுலாகி, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

    அம்மா ஆசை இரவுகள் அன்பரே, பதிவு மனதை வருடியது என்று கூறி என் மனதை வருடி விட்ட்டீர்கள். உங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  14. கனவுகளின் காதலனே,

    என்னுடைய நாவல் புத்தகப்பெட்டிகள் அனைத்திலும் தேடித் பார்த்து விட்டேன். அந்த மாத நாவலை காண வில்லை. நண்பர்களிடம் இந்த வாரத்தில் விசாரித்து விடுகிறேன். (இன்னும் சில பேர் அதெல்லாம் படித்து, சேகரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்).

    அம்மா ஆசை இரவுகள்// விஸ்வா, இடங் ஆங்கில மூலக் கதை நூறு வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது.// ஆமாம், நானும் கூட அந்த கமெண்ட்'ஐ போடும்போது கவனித்தேன். நினைவூட்டியதற்கு நன்றி.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  15. விஸ்வா, நாவல் கிடைக்காவிட்டால் என்ன உங்கள் நினைவாற்றலில் எனக்கு நம்பிக்கையுண்டு. உங்கள் இன்றைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. காதலரே, இதோ நான் ஆஜர். இனி பதிவை, இல்லை இந்த காவியத்தை பற்றி....

    // புள்ளினங்களின் கீச்சு ஒலிகள், அவை பறக்கும் போது அசைந்து அடங்கும் கிளைகளின் மூச்சு. சிறகுகளின் இசை. இவற்றை ஊடுருவிக் கொண்டு கற்றை, கற்றையாக வனத்தின் தரையில் விழும் சூரியக் கதிர்கள். //
    ஆரம்பமே அமர்க்களமான நடை.....

    // நல்ல உணவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க, லின்க்ஸின் உடலில் ஒர் சிறிய நடுக்கம் மின் சாரலாக ஓடியது //
    சில நேரங்களில் இந்த சிலிர்ப்பை நாம் எல்லோரும் உணர்ந்திருப்போம், ஆனால் அதற்கு மின் சாரல் என்று அழகிய பெயர் சூட்டி விட்டீர்கள்.

    தன் குட்டிகளின் பசியை போக்க, மான் குட்டியை தாயிடம் இருந்து அபகரிக்கும் கட்டம் நெஞ்சை அடைத்தாலும், இயற்கை விதியின்படி அந்த உணவு அதற்கு விதிக்கபட்டது என்று மனதை தேற்ற வேண்டி இருக்கிறது.

    கடைசி காட்சியில் லினக்ஸ் பூனை மற்றும் குட்டிகள் உலர்ந்த இலைகள் போல வீழ்ந்து கிடக்கும் வேலையிலும் தாய் பூனையில் வெறித்த பார்வைகள் ஒன்று போதும், ஜென்மத்திற்கும் தனக்கு ஆபத்து ஏற்பட்டாலும் இனி இன்னொரு உயிரை பறிக்க செட்டோனின் கைகள் ஒத்துழைக்குமா என்று கேள்வி மனதில் எழுகிறது. கதாசிரியர் YOSHIHARU IMAIZUMI, பூனை மற்றும் மனிதனின் போராட்டங்களை நடுநிலைமையுடன் விவரித்திருப்பதால், கதை முடியும் போது இரண்டு சாராரிடமும் பச்சாதாபம் ஏற்படுவதே, அவரின் கதை பாணிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.

    லினக்ஸ் பூனை மற்றும் அதன் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அதே உடைந்த மரம் செட்டோனுக்கும் உதவுவதாக காட்சி அமைத்திருப்பது இன்னும் சிறப்பு.

    கதையமைப்பு, அதற்கு துணை போகும் சகஜமான அதே நேரத்தில் நேர்த்தியான ஓவியங்கள், இது போதாது என்று தங்க தமிழில் கவிதை போல உங்கள் மொழிபெயர்ப்பு, பசியுடன் அலையும் கர்ப்பமான லினக்ஸ் பூனை அனுபவிக்கும் வேதனைகளை நாமும் சேர்ந்து உணர்வது போலவும், தன்னை நம்பி ஒப்படைக்கபட்ட பண்ணை மற்றும் சகோதரிகளை காப்பாற்ற செட்டோன் படும் பாடை நாம் அனுபவிப்பது போலுவும் இருந்தது பதிவை படித்து முடிக்கும் வரை.

    காட்டிற்கு செலல நானும் ரெடி.... என்ன அங்கு விஜய்காந்தின் மரியாதை போன்ற படங்களை பார்க்காமல் நாம் தவித்து போய் விடுவோமே என்ற அச்சம் தான் :)

    இன்னொரு அருமையான மங்கா கதைகயை அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் காதலரே. உங்கள் 4 நட்சத்திர ரேட்டிங்கிற்கு மிக தகுதியான கதைதான். மீதி கதைகளையும் தேடி பிடித்து படங்களிளாவது பயணிக்க முயல்கிறேன். வசனங்கள் அதிகம் இல்லாமல் படங்கள் மூலம் கதை அமைத்திருப்பது அதற்கு சரியாக உதவும். மங்காகள் மீது இருந்த என் அபிப்ராயத்தை மாற்றியதில் பெரும் பங்கு உங்களுக்கே. இன்னும் எத்தனை மாணிக்கங்கள் அந்த கடலில் ஆழத்தில் புதைந்து கிடக்கிறதோ. உங்களுக்கு பெருமை சேர்க்க மங்கா பதிவு ஒன்றை இம்மாததிற்குள் காமிக்கியலில் அரங்கேற்றி விட வேண்டியது தான்.

    வாரா வாராம் வித்தியாசம், கலக்குங்கள் காதலரே.... கூடவே யாரும் கவனிக்கவே இல்லை, இது நீங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட 7 ம் பதிவு.... அதுவும் கழுத்துக்கு ஒரு கயிறின் 3 அங்கங்களை கணக்கிட்டால் அது 10 பதிவுகளுக்கு வரும். உங்கள் பதிவு அதிரடியை தொடர்ந்து படிக்கவே ஒரு நாள் ஒதுக்க வேண்டும் போல இருக்கிறது. தொடருங்கள் அதிரடியை...

    ÇómícólógÝ

    ReplyDelete
  17. ரஃபிக், சில சிட்டுக்களைத் தெருவில் காணும் போது இந்த மின் சாரல் உடலில் பாயும். அது முகத்தில் வேறு தெரிந்து விடுவதால் நவாஜோ மதகுருவிடம் நன்றாக வாங்கிக் கட்டுவேன்.

    செட்டொனின் மனதில் பூனையின் மரணம் விளைவித்த தாக்கமே அவரை மனிதனும், விலங்குகளும் இயற்கையில் ஒத்து வாழ வேண்டுமென்பதை பின்னால் உலகிற்கு உரத்துக் கூற உந்தலாக அமைந்தது. இயலுமானவரையில் ஜிரோ டனிகுச்சியின் கதைகளை பதிவுகளாக்கலாம் என எண்ணுகிறேன், உங்கள் மங்கா பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    //லினக்ஸ் பூனை மற்றும் அதன் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அதே உடைந்த மரம் செட்டோனுக்கும் உதவுவதாக காட்சி அமைத்திருப்பது இன்னும் சிறப்பு.// ரஃபிக், நீங்கள் எங்கோ சென்று விட்டீர்கள். நான் இப்படி சிந்தித்து பார்க்கவேயில்லை. நன்றி ரஃபிக். சிறப்பான கருத்து.

    மரியாதை படங்களின் திருட்டு விசிடிக்களை காட்டிற்குள் கடத்த மாட்டார்களா. ஏன் யாரும் மரியாதை படத்திற்கு விமர்சனம் எழுதுகிறீர்களில்லை. ஜோஸிற்கு ஒர் டிக்கட் புக் பண்ணி விடலாமா.

    ரஃபிக், 10 பதிவுகளில் இரண்டு ஜோஸ் சானுடையது, கஒக வை நான் பதிவுக் கணக்கில் சேர்ப்பதில்லை. உண்மையிலேயே நான் 3 பதிவுகள் தான் இட்டுள்ளேன். சிறப்பான மங்காக்களின் அதிரடி தொடரும். வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  18. என் பதிவை ஒர் பூனை பொறுமையாகப் படித்துவிட்டு, மியாவியும் விட்டு சென்றது, மனதை நெகிழ வைத்து விட்டது. பூனையே நீ வாழ்க.

    ReplyDelete
  19. நண்பரே

    உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், உங்கள் பதிவுகளிலே மிகச் சிறந்த பதிவுகளில் இதற்கும் ஒரு இடம் இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

    ஒரு நல்ல கதைக்கு எவ்வித படங்களும் தடையாக இருக்கப் போவதில்லை என்பது இதன் மூலம் நிருபணம் ஆகிவிட்டது.

    இந்த புத்தகத்தை தற்செயலாக எடுக்க நேர்ந்தால் புரட்டி பார்த்து விட்டு வைத்து விடவே நான் முயல்வேன். இது போன்ற புத்தகங்களை தற்போது தேடுமளவுக்கு கொண்டு வந்துவிட்ட மாயாஜாலமான மொழி நடைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    முதல் வரியில் சொல்லியதை முறியடிக்க முயல்வீர்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. என் கருத்துகளை மாற்றிக் கொள்ளப் போவதில் எனக்கும் எவ்வித வருத்தமும் இல்லை.

    ReplyDelete
  20. நண்பர் ஜோஸ்,

    பதிவுகள் சில வேளைகளில் தாமாகவே தமக்குரிய சொற்களை உருவாக்கி விடுகின்றன. நான் செய்வதெல்லாம் இக்கதையைப் படிக்கும் போது எனக்குள் நிகழும் ஓட்டங்களை இயலுமான வரை வார்த்தையில் விபரிப்பதே. என் மன வருத்தம் எல்லாம் இதனை விட சிறப்பாக செய்ய முடியவில்லையே என்பது தான். தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  21. Suberbb... KK. Expecting more from you.

    ReplyDelete
  22. dear sir, this Seton comics is so realistic.
    Thanks a lot for giving us chance to get to know & enjoy this comics. Keep it up your fantastic work.

    ReplyDelete
  23. அனானி நண்பரே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. உங்கள் ஆதரவை தொடருங்கள்.

    ReplyDelete
  24. Hey! Quiсk queѕtіοn that's completely off topic. Do you know how to make your site mobile friendly? My website looks weird when viewing from my iphone. I'm tгуing to find a theme oг plugin that might be able to fix this prοblem.
    If you have any suggestiοns, pleaѕe share. Aρpreciate іt!


    Feel frеe to surf to my web blog :: [url=http://Www.Sfgate.com]http://Www.Sfgate.com
    my web page :: please click the up coming article

    ReplyDelete
  25. Ηello all, herе evеry person is
    ѕharіng ѕuch experіence, thus it's nice to read this website, and I used to pay a quick visit this website every day.

    Also visit my web page :: Www.Sfgate.Com
    Also see my webpage > http://sakuras-tausend-traeume.blogspot.fr/2012/10/pflegezeiten-fur-fernstudium-oder.html

    ReplyDelete
  26. Terrific wοrk! That is thе tyρe of information that
    аrе supposed tо bе shаreԁ acroѕs the nеt.
    Shame on Goοgle for now not ρositioning thіs submit hіgher!
    Come on over and discuѕs wіth my web
    sіte . Thank yοu =)

    My weblog :: cruissingzone.com

    ReplyDelete
  27. Hοwdy! Thiѕ is kind оf off topіc but I need sοme adѵicе from an establiѕhed blog.

    Is it hard to set up уour own blog? I'm not very techincal but I can figure things out pretty quick. I'm thinkіng
    about makіng my oωn but I'm not sure where to start. Do you have any tips or suggestions? Thanks

    My blog - Your Domain Name

    ReplyDelete