Monday, April 6, 2009

நியாயப் படை-1

எழுதுபவர்- இளமை வேங்கை ஜோஸ் சான் 
கதையின் கதை!
அமெரிக்க மற்றும் பிரன்ஞ் சித்திரக் கதைத் தொடர்களை தற்போதுள்ள சித்திரக் கதை இரசிகர்கள் போற்றி புகழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழில் வந்துள்ள சித்திரக் கதைகளை பற்றி எதுவுமே எழுதக் காணோம். ஏனென்றால் மிகவும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்துதான் படிக்க வேண்டும். ஆனால் அதில் சில வைரங்கள் உள்ளன. 
இதுபோன்று பிரென்ஞ் சித்திரக் கதைகளை பற்றியே எழுதிக் கொண்டிருந்த டாக்டர் கனவுகளின் காதலன் என்னிடம் தொடர்பு கொண்டு தமிழில் இது போன்ற கதைகள் உள்ளதா என கேட்டார். நான் பல நாள் அலைந்து கண்டுபிடித்த ஒரு சித்திரத் தொடரை பற்றிய உண்மையை சொன்னேன். அந்த சித்திரக் கதை இலக்கியம் வரலாற்றிலிருந்து கிட்டத்தட்ட மறைந்தே விட்டது என்றுக் கூடச் சொல்லலாம். உடன் பரபரப்பான கனவுகளின் காதலன் தன்னுடைய தனி விமானத்தில் நாலைந்து பிகர்களை அழைத்துக் கொண்டு உடன் இந்தியா கிளம்பினார்.

அவரும் நானும் தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து அந்த சித்திரக் கதை இலக்கியத்தின் சுவட்டினை கண்டுபிடிக்க கடுமையான முயற்சிகள் செய்தோம். கடுமையான உழைப்புக்கு பலன் உண்டு என கழிப்பறை வாசலில் எழுதி வைத்திருந்த வாசகத்தின் பலன் பொய்க்குமா என்ன?

கண்டுபிடித்து விட்டோம்.அந்த சித்திரக் கதை இலக்கியம் மற்றும் அதன் ஆசிரியர் சங்குண்ணி அவர்களை பேட்டியெடுக்கும் அரிய வாய்ப்பும் கிட்டியது. தள்ளாமையை நெருங்கியிருந்த சங்குண்ணி தனது நியாயப்படை அனுபவங்களை எங்களுக்கு விவரித்தார். இந்த சித்திரத் தொடர் வெளிவந்தால் அமெரிக்க சித்திரக் கதை கம்பெனிகளே அழிந்துவிடும் என சி ஐ ஏ இதனை தடுக்க முயற்சித்தாகவும் குறிப்பிட்டார். அவருடன் பேசியபோது எவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்கள். இதன் மூலம் பெற்ற பல அரிய தகவல்களை முதல் முறையாக இந்த வலைப்பூவில் தொடராக பதிய போகிறோம். 


முதலில் கதாசிரியரின் வரலாற்றுக் குறிப்புகளை பார்ப்போம். 

அவர் பெயர் சங்குண்ணி. 1961-ம் ஆண்டே எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அவர் ஒரு மிகச் சிறந்த கதையை எழுத முயன்றதாக அவர் ஜோஷ் மற்றும் கனவுகளின் காதலனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், அந்த கதை முதல் வரியில் இருக்கும்போதே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் பள்ளித் தலைமை ஆசிரியரால் தான் கடுமையாக கண்டிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். தன்னுடைய முதல் வரிக்கே உலகம் இவ்வளவு கடுமையாக எதிர்வினை ஆற்றியது குறித்து பெருமிதமும் அடைந்தார். 

இவ்வளவு காலத்திற்கு பிறகும் அவர் கரும்பலகையில் எழுதிய கதையின் முதல் வரிகளை சரியாக நினைவு கூர்ந்தது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

‘கணக்கு டீச்சரும், தமிழ் வாத்தியாரும் பள்ளிக்கொடத்துல ஜின்ஜின்..... ’

1983-ம் வருடம். ஜுலை மாதம். 13-ம் நாள். ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த சங்குண்ணியை மேலாளர் கூப்பிடுவதாக தகவல் வந்தது. மேலாளர் அறைக்கு சென்று அரை மணி நேரத்திற்கு பிறகு திரும்பிய சங்குண்ணியின் உலகம் தலைகீழாக மாறிவிட்டது. ஆம், அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தார். ஐயகோ, எவ்வளவு குரூரமான உலகம் இது! 

அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்பட்டன

1) அந்த கம்பெனி பணத்தில் ஒரு இலட்சம் ரூபாயை அவர் தன் கணக்கில் போட்டுக் கொண்டது

2) கம்பெனி சரக்ககத்திலிருந்த சரக்குகளை ஏழை எளிய மக்களிடம் குறைந்த விலைக்கு விற்றது.

3) கம்பெனி மேலாளர் மனைவியுடன் இருந்த சிநேகம்

அவர் அந்த கம்பெனியில் சேரும் போது நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி என மேலாளர் சொன்னதை அவர் நினைவு கூர்ந்தும், அந்த கல் நெஞ்சம் கொண்ட மேலாளர் அவரை வேலையை விட்டு அநியாயமாக நீக்கி விட்டார். 

இந்த இடத்தில் மற்ற மனிதர்கள் எல்லோரும் அழுது புலம்புவார்கள். வாழ்க்கையை, விதியை நொந்து கொள்வார்கள். சராசரி மனிதர்களின் அணுகுமுறையே அதுதான். 

ஆனால் மனதில் இலட்சியம் கொண்ட சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் இங்கே தான் மற்றவர்களுடன் மாறுபடுகிறார்கள்.

அப்பாவியான தனக்கு நேர்ந்தது போல இந்த நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணிய சங்குண்ணியின் மனதில் இது போன்ற அநீதிகளை தடுக்க ஒரு படை உருவாக வேண்டுமென கற்பனை செய்தார். அந்த கற்பனையின் விளைவாகதான் உருவானது நியாயப் படை அல்லது நியாயக் கும்பல் அல்லது ஜஸ்டிஸ் கேங் பேங்.(ஆசிரியர் குறிப்பு: கனவுகளின் காதலனுக்கு பேங் என்ற வார்த்தையை எடுத்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
[நான் எவ்வளவு முயன்றும் அவ்விலக்கிய தேனூறும் சொல் அழிய மறுத்து விட்டது, எனவே பேங் என்பதனை வாசக உள்ளங்கள், இங்கு வங்கியென அர்த்தம் கொள்ளவும்-காதலன்.]

அவர்களின் ஆரம்ப கால இலட்சியம் : நீதி, நேர்மை, தர்மம் நியாயம் மற்றும் நிஷா ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும். நிஷா அவருடைய அப்போதைய சிநேகிதி. 

காலப்போக்கில் அந்த இலட்சியமானது நீதி, நேர்மை, தர்மம் மற்றும் நியாயம் என ஆனது.

இந்த நியாயப்படையில் உள்ள கதாநாயகர்கள் மொத்தம் ஐந்து. சராசரி மனிதர்களை ஒற்றி உருவாக்கப்பட்ட நாயகர்கள் அவர்கள். அவர்களின் சாகசங்கள் அடங்கிய சித்திரத் தொடரானது ஸ்கேன் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் சில சாகசங்களை மட்டும்தான் உங்களுக்கு இந்த தொடரில் அளிக்க விரும்புகிறோம்.

அவர்களின் அறிமுகங்களை அடுத்த பகுதியில் காணலாம்.
படையின் ராஜ நடை தொடரும்....

13 comments:

 1. கனவுகளின் காதலன் மற்றும் ஜோஸ் சான்,

  ஆரம்பமே அதிரடியாக உள்ளது.

  //எழுதுபவர்- இளமைவேங்கை ஜோஸ் சான்// ஆரம்பமே சரி இல்லையே? இந்த வார்த்தைகளில் ஒரு OxiMoron உள்ளது. சரி செய்யுங்கள்.

  //நாலைந்து பிகர்களை அழைத்துக் கொண்டு உடன் இந்தியா கிளம்பினார்// எதற்கு? எப்போதுமே நண்பர்களுக்கு பரிசு கொண்டு வருவதில் அவரை மிஞ்ச ஆளே இல்லை.

  //கடுமையான உழைப்புக்கு பலன் உண்டு என கழிப்பறை வாசலில் எழுதி வைத்திருந்த வாசகத்தின் பலன் பொய்க்குமா என்ன// அருமை.

  //இந்த சித்திரத் தொடர் வெளிவந்தால் அமெரிக்க சித்திரக் கதை கம்பெனிகளே அழிந்துவிடும் என சி ஐ ஏ இதனை தடுக்க முயற்சித்தாகவும் குறிப்பிட்டார். அவருடன் பேசியபோது எவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்கள்// திடீரென ஒலக காமிக்ஸ் ரசிகனின் தலை சிறந்த காமிக்ஸ் வலைப் பதிவை படித்த மாதிரி இருக்கிறதே?

  //கம்பெனி மேலாளர் மனைவியுடன் இருந்த சிநேகம்அவர் அந்த கம்பெனியில் சேரும் போது நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி என மேலாளர் சொன்னதை அவர் நினைவு கூர்ந்தும், அந்த கல் நெஞ்சம் கொண்ட மேலாளர் அவரை வேலையை விட்டு அநியாயமாக நீக்கி விட்டார்// அருமையான வரிகள்.

  //நிஷா அவருடைய அப்போதைய சிநேகிதி// இப்போ நிஷா யாருடைய சிநேகிதி?

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 2. விஸ்வா, முதன்மைக் கருத்துக்களிற்கு முதலில் நன்றிகள்.

  இளமை வேங்கை= OxiMoron, ஜோஸ் சான், இதனைப் படிப்பார் என்றே எண்ணுகிறேன். கதையில் இனி அவர் என்னென்னெவெல்லாம் ஜாலம் காட்டப்போகிறாரோ.

  பதிலுக்கு, சில பரிசுகளை ஜோஸ் சான் எனக்கு வழங்கினார். வெரி நைஸ்.

  நிஷா -அதைச் சொன்னால் கதையே முடிந்து விடுமே.

  நிச்சயமாக, மனதை உருக்கும், அருமையான வரிகள் பல இக் கதையில் இடம் பெறும்.

  ReplyDelete
 3. // கதையின் கதை! //
  அர்த்தமுள்ள வரி

  // எழுதுபவர்- இளமை வேங்கை ஜோஸ் சான் //
  பாராட்டு குடுத்த உடனே குத்த வச்சுட்டீங்களே... இங்கே தானே உதைக்குது.... இளமை வேங்கை புலி கிலினு ஆரம்பித்திலேயே கிலியை கிளப்புறீங்களேப்பு......

  // தனி விமானத்தில் நாலைந்து பிகர்களை அழைத்துக் கொண்டு உடன் இந்தியா கிளம்பினார் //
  என்ன கொடுமை, ஒருவரையும் கண்ணில் காட்டாமல் எப்படி ஏமாற்றலாம் என்னை..... பழி வாங்க புகை சமிக்கை மதகுருவுக்கு அனுப்ப பட்டு விட்டது. இப்போதே ஆஸ்பத்திரி பெட் ஒன்றுக்கு ரிசர்வ் செய்து கொண்டாள் நலம்.

  // அவர் அந்த கம்பெனியில் சேரும் போது நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி என மேலாளர் சொன்னதை அவர் நினைவு கூர்ந்தும் //
  இனிமே சத்தியமா யாரும் இந்த வாக்கியத்தை உபயோக படுத்த மாட்டார்கள்

  // அப்பாவியான தனக்கு நேர்ந்தது போல //
  இவர் அப்பாவியா, கலி காலமடா...

  // ஆரம்ப கால இலட்சியம் : நீதி, நேர்மை, தர்மம் நியாயம் மற்றும் நிஷா //
  அதானே பார்த்தேன். எங்கடா கதையின் கதையில் ப்ளாஷ்பேக் ஜோடி இல்லையேன்னு....... ஒரு பால்ய பிகருக்காக நியாய படை வேறா....... என்னத்த சொல்ல

  // அவர்களின் சாகசங்கள் அடங்கிய சித்திரத் தொடரானது ஸ்கேன் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் //
  அப்பாடி, ரகசியம் காக்க படும்....

  //சில சாகசங்களை மட்டும்தான் உங்களுக்கு இந்த தொடரில் அளிக்க விரும்புகிறோம்//
  விட மாட்டீங்களே.... இனி என்ன நடக்குமோ,,,


  காதலரே, உங்கள் பதிவு ஸ்பீடில் முழுவதும் படிக்க முடியாமல் ஏற்கனவே உங்கள் பதிவுகள் இரண்டில் என் கருத்தை பதியாமல் இருக்கிறேன். இப்போது உங்களுக்கு துணையாக ஜோஷ் சான் வேறா,,,,, அய்யகோ கொடுமை தலை விரித்தாட போவது கண்களில் இரத்தம் வழிய தெரிகிறது. இனி கடவுள் விட்ட வழிதான்.

  ÇómícólógÝ

  ReplyDelete
 4. அன்பிற்கினிய நண்பர்களே ஜோஸ் சான் அவர்களின் இலக்கிய காவியத் தொடரைக் குறித்த உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்திடுங்கள். மேலும் கடிகாரத்திற்கே மணி பற்றி சொல்லித் தரும் ஜோஸ் சான் அவர்கள் தொடர் பற்றிய உங்கள் கேள்விகளிற்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறார். அம்புகளை ஏவுங்கள் ரசிகக் கண்மணிகளே.

  ReplyDelete
 5. ஜோஸ் சான் அவர்களே, என்னை மிக காலமாக அரித்து கொண்டிருக்கும் சில கேள்விகள்

  1. பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா? (இது உங்கள் சம்பந்தபட்ட சமாச்சாரம்)

  2. கோழி முதலில் வந்ததா? இல்லை முட்டை முதலில் வந்ததா? (சாப்பிடும் போது அடிக்கடி தோணும் நம் சமாச்சாரம்)

  3. காதலர் அழைத்து வந்த குஜிலிகளை என்ன செய்தீர்கள்? (இது எல்லாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் சமாச்சாரம்)

  ReplyDelete
 6. அன்பு வாசகர் ஐடிய்யா ஐய்யாமணி,

  உங்கள் ஆர்வமான கேள்விகளிற்கு பதில்கள் இதோ.

  1-பெண்களின் எப் பகுதியில் உள்ள கூந்தல் என்பதை தயவு செய்து குறிப்பிடவும்.

  2- இன்று காலை வினியோக லாரியில் இரண்டும் சேர்ந்தே வந்தது. பீர் வரவில்லை

  3- குஜிலிகளிற்கு தமிழ் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன், சேலை அணியக் கற்றுத் தருகிறேன், இரவில் குஜிலிகள் தனியே உறங்கப் பயப்படுவதால் அவர்களுடன் சேர்ந்தே உறங்குகிறேன். என்ன அவர்கள் ஊர் வழக்கப் படி அவர்கள் துணியில்லாமல் தூங்குவார்கள். நானும் பழகி விட்டேன்.

  பதில்கள்- ஜோஸ் சான்+கனவுகளின் காதலன்

  ReplyDelete
 7. //இப்போ நிஷா யாருடைய சிநேகிதி?//

  இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கறதுதான் இவங்களுக்கு வேலையா? இல்ல இதுக்கு முன்னாடி இந்த வேலை பாத்துட்டிருந்தாங்களா?

  -கவுண்டமணி (படம் - கரகாட்டக்காரன்)

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 8. அதிலென்ன சந்தேகம்?

  சோ (படம் - அதிசயப் பிறவி).

  ReplyDelete
 9. தலைவரே, திரும்ப வந்து இருக்கீங்க போல, கொஞ்சம் நம்ம கடை பக்கமும் வரது... :)

  ReplyDelete
 10. தலைவரே நீங்கள் செய்வது உங்களிற்கே நியாயமாகப் படுகிறதா. நிஷா தற்போது உங்கள் சினேகிதி என்பது ஒர் மர்மம் அல்லவா. அதை என்னை வெளிப்படுத்த செய்து விட்டீர்களே. பாங்காக்கில் அகொதீக சிறு குழு கூட்ட முடிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 11. பாரத தேசம் பார் புகழும் தேசம்

  - நாம் இருவர் படத்தில் குமாரி கமலா

  ReplyDelete
 12. No, I won't / can't take bang as "bank" ;-)

  The Indian cultural police is pretty strong in the blog world, so you better watch out and avoid writing bad words like "Gang Bang"!

  ;-)

  ReplyDelete
 13. நண்பர் ஜோ அவர்களே, அச்சம் வேண்டாம். ஜாலியை தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டதல்ல இத்தொடர், ஆனால் கதை எழுதியவரை பொலிஸ் கைது செய்தது உண்மைதான். :))

  ReplyDelete