Friday, February 6, 2009

முன்னோட்டம்

புதுப்பதிவு பூஜை!!!!






















" தன் கண்களிற்கு தெரியும் தீமையினால் ஒருவன் கவரப்படுவதில்லை.   மாறாக, அதில் உள்ள பலன்களினால் கவரப்பட்டு அதனை நெருங்கும் அவன், அதன் மீள முடியா பொறியில் சிக்கிக்கொள்கிறான்."
EPICURUS.

10 comments:

  1. பொதுவாக அனைத்து வில்லன்களும் ஸ்டீரியோ டைப்பில் இருப்பார்கள். அதையும் மீறி வெகு சிலரே நம் மனதில் இடம் பிடிப்பார்கள். சில சமயங்களில் கதாநாயகனுக்கு கூட அந்த இடம் கிடைக்காது.

    அது போன்ற ஒரு வில்லன்தான் மங்கூஸ். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. கொலை வெறியன் மங்கூஸ்'ஐ கதாநயாகனாக கொண்டு ஒரு காமிக்ஸ் கூட வெளி வந்தது என்பதே எனக்கு ஒரு தகவல் தான். பற்றி எரியும் வீட்டின் முன்னே எப்படி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார்... நம் ஊர் அல்டாப்பு கதாநாயகர்களின் பட தாக்கமோ :) ?

    காதலரே, உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

    CoMiCoLoGy

    ReplyDelete
  3. ஜோஷ், சிறந்த ஒர் எதிர்ப்பாத்திரமே ஒர் கதையின் நாயகனின் திறமைகளை முழுமையான வகையில் வெளிக்கொணர உதவுகிறது. துரதிர்ஷ்டவசமாக XIIIல் வில்லன்களின் எண்ணிக்கை அதிகம், மங்கூஸ்ட் இவர்களில் சிறப்பானவராக தெரிந்தால் காரணம் 1- அவர்மேல் எங்கள் அபிமானம், 2- வான்ஹாம். மங்கூஸ்ட்டின் கதையைப்படிக்கும் எவரும் XIIIன் ஆல்பங்களை மீள வாசிக்கும் போது அவர் மீதான அபிமானம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. STAR WARS வில்லன் DARTH VADOR தான் உடனடியாக என் ஞாபகத்திற்கு வருகிறார்.

    ரஃபிக்,நான் டீசர் போட்டபோதே நீங்கள் ஊகித்துவிட்டீர்களே. நிச்சயமாக சில ஹாலிவுட் படங்களை பார்க்கும்போது அச்சச்சோ இவர்கள் ஏதாவது தமிழ் மசாலாப்படங்கள் பார்த்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றும். உம் TRANSPORTER3. வீறு நடை போட்டு மங்கூஸ்ட் கிளம்புவது, அருகில் சின்னக்கட்டத்தினுள்ளே இருக்கும் XIII ஐ போட்டுத்தள்ளத்தான். கதையின் இறுதிப்பக்கத்தின் இறுதி சித்திரக்கட்டம் இது. XIIIற்கு எதிராக மங்கூஸ்டின் பயணம் ஆரம்பாவது இங்குதான் ஆனால் இதற்குமுன்பாகவே XIIIன் அவன் சந்தித்திருக்கிறான்.

    ReplyDelete
  4. ஐயன்மீர்,

    எனக்கு ஒரு பெருத்த சந்தேகம்!

    வரும் பதிவில் இக்கதையின் கதாசிரியர் மற்றும் ஓவியர் யார் எனத் தெளிவுபடுத்துங்கள்! ஓவியர் நிச்சயம் வான்ஸ் இல்லை. கதாசிரியர் வான் ஹாம்மே தானா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. தலைவர் ஸமூகத்திற்கு, இது ஒர் புதிய கூட்டணி. அவர்களைப்பற்றி பதிவில் எழுதாமல் விடுவது என்ற பேச்சிற்கே இடமில்லை. தலைவரின் கண்களில் இருந்து எதுவும் தப்பாது என்பது நிருபணமாகிவிட்டது. முன்னோட்டத்திலுள்ள சித்திரக்கட்டத்தினை ஒர் புள்ளியாகக் கொண்டால், அதன் பின்பு வந்த மங்கூஸ்ட்டை, நண்பர்கள் லயன் மற்றும் திகில் மூலமாக அறிந்திருப்பீர்கள். இது அப்புள்ளியின் முன்னுள்ள மங்கூஸ்டின் வாழ்க்கை.அதுவே அடுத்தபதிவு.

    ReplyDelete
  6. காதலரே, Transporter பட வரிசையிலேயே மொக்கையாக வெளி வந்த மூன்றாம் பாகம் பற்றி தங்கள் கருத்து என்னுடன் ஒத்து போவதில் ஆச்சர்யம் இல்லை. கதாநாயகியுடன் almost ஒரு டூயட், முத்த காட்சி, ரொமான்டிக் ஊடல்கள் என்று இந்திய மசாலா படத்துக்கு ஒப்பாக எடுத்து இருந்தார்கள். :)

    XIII ஐ வரைந்து உள்ள பாணியிலேயே இது வழக்கமான வான்சின் ஓவிய கை வண்ணம் இல்லை என்று புரிகிறது... ஆனால் மோபியஸ் (ஜான் கிராட்) 18 வது அல்பத்தின் இரண்டாம் ஐரிஷ் பதிப்புக்கு மட்டுமே வரைந்தார் என்று நினைத்தேன்... ஒரு வேலை அவர் அதற்க்கு பிறகும் பணியாற்றினாரா ? ஆனால் படங்கள் அவர் ஓவிய பாணியில் கூட இல்லாமால் இருபது ஒரு சந்தேகமே. ஆனால் இம்முறை கதாசிரியர் வான் ஹம்மே இல்லை என்று மட்டும் உறுதி என்று நினைக்கிறேன். வான்ஸ் அந்த பொறுப்பிற்கு 18 வது ஆல்பத்தின் பின் இடம் மாறி கொண்டு வேறு ஒரு ஓவியரை அவரின் முந்தய ஓவிய பணியில் அமர்த்துவதாக எங்கோ படித்த நியாபகம்.

    நிறைய கேள்விகளை மனதில் விதைத்து விடீர்கள், உங்கள் பதிவினை படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டதுடன். :) அமர்களமாக தொடருங்கள். அடுத்த வார கடைசியில் தானே பதிவு ?? (உங்கள் இரு வார பதிவு இடைவெளி படி)

    பி.கு.: ஆமாம் கூடவே லக்கி லுக் துணை கூறு வெறும் தேங்காய் உடைப்புக்கு தானா, இல்லை அதன் அடிப்படையில் ஏதாவது இன்னொரு பதிப்புக்கு அச்சாரமா :)

    காமிக்கியல்

    ReplyDelete
  7. ரஃபிக்,
    கதாசிரியர் வான்ஹாம் இல்லை, ஓவியர் ஜான் ஜிராட்டும் இல்லை. பதிவு வரும் வாரம் நிச்சயம் இடம்பெறும்.லக்கி லுக் கதையின் முதல் பக்கத்தினை படித்த போதே எனக்கு பிடித்திருந்தது.படித்தது முதல் பக்க்கம் மட்டும்தான். மாரிஸ் இல்லை, கொச்சினியுமில்லை. நண்பர்களும் இன்புறட்டுமே என்று முதல் பக்கத்தை புதுப்பதிவு பூஜை ஸ்டில்கள் ஆக்கிவிட்டேன். லக்கிலுக் பதிவாக குதிரையில் வருவார் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  8. புதுப்பதிவு பூஜை பிரமாதம். களுத்திற்கு ஒரு கயிறு, காட்டூன் படங்களுடன் சிற‌ந்த முயற்சி.

    "தன் கண்களிற்கு தெரியும் தீமையினால் ஒருவன் கவரப்படுவதில்லை. மாறாக, அதில் உள்ள பலன்களினால் கவரப்பட்டு அதனை நெருங்கும் அவன், அதன் மீள முடியா பொறியில் சிக்கிக்கொள்கிறான்."

    அற்புத‌மான‌ கருத்து.

    ReplyDelete
  9. அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவருக்கு அடியேனின் அற்ப விண்ணப்பம்,

    தங்களின் லக்கி லூக் மொழிபெயர்ப்பு அற்புதம்! படித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது!

    வாராவாரம் இந்த லக்கி லூக்கின் கதையை இரு இரு பக்கங்களாக தாங்கள் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பதே எனது அவா!

    மக்கள் படித்து மகிழட்டுமே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  10. டேவிட், நன்றி. வரும் வாரம் பதிவினை தவறாது படியுங்கள்.

    தலைவரே, மொழிபெயர்ப்பு பற்றி பாராட்டி என்னை மகிழ்வித்து விட்டீர்கள். தங்களின் விண்ணப்பத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

    ReplyDelete