Thursday, February 12, 2009

மை நேம் இஸ் மங்கூஸ்ட்

வணக்கம் என் அன்புக்கினிய நண்பர்களே. சென்ற பதிவாகிய மின்னலெனக் கொல், மற்றும் ஒர் ஜாலி முயற்சியான கழுத்திற்கு ஒரு கயிறு என்பவற்றிற்கு நீங்கள் வழங்கிய ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கான எதிரொலியை அப்பதிவுகளிற்கான கருத்துப் பெட்டியில் நீங்கள் படிக்கலாம்.
உலகமெல்லாம் பிப் 14ல் கொண்டாடப்படும் காதலர் தினத்தை, தங்கள் அன்புள்ளங்களோடு கொண்டாடப்போகும் ஜோடிகளிற்கும், காமிக்ஸ்ஸை மட்டுமே காதலிப்போம் குட்டிகள் அப்புறமே எனக் கர்ஜிக்கும் இளம் சிங்கங்களிற்கும் என் காமிக்ஸ் காதலர் தின நல்வாழ்த்துக்கள். ஒர் நல்லகாதலி, நல்ல ஒர் காமிக்ஸ் போன்றவளே, காமிரேட்டுகள் இரண்டையும் பாதுகாப்பதில் கில்லாடிகள் என்பதை யாம் அறிவோம். காமிக்ஸ் வலையுலக நிகழ்வுகளை சுருக்கமாக பார்ப்போம்.

பிகில்ஸ்,ரகர் பாய்ஸ் என ஒரே பதிவில் 2 சினிபுக் ஆல்பங்களைப் பற்றி அருமையாக எழுதியுள்ளார் நண்பர் ரஃபிக்.
வெளியூரில் ஜாலியாக டைம் பாஸ் பண்ணிவிட்டு, காமிக்ஸ் உலக செய்திகளை அதே சூட்டுடன் வழங்கியிருக்கிறார் பதிவுச்சூறாவளி விஸ்வா.
சபாஷ் போடவைக்கும் சிஸ்கோ கிட் பதிவை இட்டார் அன்பர் ககொககூ, ஆவிகள் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டன. செமரகளைதான்.
விளம்பரம் வந்து 12 நாட்களிற்குள் ஒர் பக்கா பதிவை தயார் பண்ணி, லயன் குடும்ப காமிக்ஸ்களே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் அப்புத்தகத்தை புரமோட் செய்து இட்டார் தலைவர் ஒரு பதிவு,அது விண்வெளிக் கொள்ளையரையே அடிமையாக்கிடும் நிகழ்வு.
இனி உங்களிற்கு அறிமுகமே தேவையற்ற ஒருவனின் கதையை பார்ப்போம்.


XIII-MYSTERY (LA MANGOUSTE- RALPH MEYER & XAVIER DORISON )

8 ஒக்டோபர் 1947, பெர்லினின் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் XIIIல் உங்களிற்கு நன்கு அறிமுகமான அந்தக் கொலைஞனின் கதை ஆரம்பமாகிறது. தச்சுப்பட்டறை ஒன்றில் தச்சன் வேபரும் (WEBER) அவன் வளர்ப்பு மகன் சிரெயினரும்(SCHREINER) வேலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கதவைத்திறந்து உள்ளே நுழையும் மூன்று ரஷ்ய சோல்தாக்கள் பணம் கேட்டு வேபரை அடித்து துன்புறுத்துகிறார்கள். சிறுவன் சிரெயினர் ஒர் மூலையில் தூக்கி வீசப்படுகிறான். தச்சுப்பட்டறை அடித்து நொருக்கப்படுகிறது. இதே சமயத்தில் பட்டறையின் உள்ளே நுழையும் கென்ஸ் (HANS) அந்த மூன்று ரஷ்ய வீரர்களையும் மிக எளிதாக கொன்று போட்டு விடுகிறான். கென்ஸை பார்க்கும் தன் வளர்ப்பு தந்தையின் கண்களில் தெரியும் ஈரமான நன்றியும், மதிப்பும் சிறுவன் சிரெயினரின் மனதில் விதையெனப் பதிகிறது. தன் வளர்ப்புத் தந்தையை இதனைவிட நூறுமடங்கு மகிழ்ச்சியுற வைப்பேன் என தன்னுள் தீர்மானம் கொள்கிறான் சிறுவன் சிரெயினர்.

1951, சிரெயினரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கிறான் வேபர். அமெரிக்காவில் சரியான வேலை அமையாது சிரமப்படுகிறான் சிரெயினர். இந்நிலையில் அவனை தொடர்பு கொள்ளும் வேபர் தன்னை ரஷ்ய பொலிசார் கொலைக் குற்றத்திற்காக கைது செய்த தகவலை தெரிவிக்கிறான். தன்னை காப்பாற்ற வேண்டின் நிறையப்பணம் லஞ்சமாக கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறி அழுகிறான்.

வேறு வழி தெரியாத சிரெயினர், பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அமெரிக்காவில் கென்ஸ் இருப்பதை தெரிந்து கொள்கிறான். அவனை தேடிச்சென்று, தன் நிலையை அவனிடம் விளக்கி அவனிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறான். தன் இயலா நிலயை சிரெயினரிடம் எடுத்துரைக்கிறான் கென்ஸ். வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில் கென்ஸின்தொழிலை’’யாவது தனக்கு கற்றுத்தருமாறு அவனிடம் வேண்டுகிறான் சிரெயினர். பல்கொலைநுட்ப கல்வி ஆரம்பமாகிறது.

மிகக் கடுமையான பயிற்சிகள், அறிவுரைகள், தன் தனிக்கவனிப்பின் மூலம் சிரெயினரின் ஆழத்திலிருந்த ஒர் பக்குவமான கொலைகாரனிற்கு உயிர் கொடுக்கிறான் கென்ஸ். கென்ஸின் அறிவுரை ஒன்றைப் பார்ப்போம்.
`` விப்பர் பாம்பு மனிதனை விட வேகமானது அல்ல. அளவிலும், வலிமையிலும் சிறியது, சிறிதளவு அபாயகரமானது. ஆனால் அது எங்கள் மேல் கொண்டுள்ள பலத்திற்கு காரணத்தை ஒரு சொல்லில் கூறினால்=பயம். இரைக்கும், வேட்டையாடுபவனிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இது ஒன்றுதான். உன் பயத்தை ஒழி, அதை உன் மனதிலிருந்து இல்லாததாக்கு, எந்த பாம்பும் உன்னை தீண்டாது. முடியாது. எனக்கு கிடைத்தது போன்று உனக்கும் மங்கூஸ்ட் என்ற பெயர் கிடைக்கும்’’ [பக்.25]

யிற்சிகள் முடிவடைகின்றன, சிரெய்னரின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன, முதல் ஒப்பந்தக் கொலைக்காக லாகோஸ் செல்கிறான் அவன், அதில் வெற்றியும் காண்கிறான். அமெரிக்காவிற்கு திரும்பும் அவனிற்கு அதற்கான பணம் கிடைக்கிறது. லஞ்சம் கொடுத்தும் வேபரை விடுவிக்க முடியாமல் போய்விட, கென்ஸை தன்னுடன் பெயரளவில் இணைந்து பணியாற்றும்படி கேட்கிறான் அவன். டெய்லி போஸ்ட் எனும் தினசரியில் கென்ஸின் வாடிக்கையாளர்கள், அவன் திறமை பற்றி கேள்வியுற்றவர்கள் ஒர்`` மங்கூஸ்ட்’’ தேவை என விளம்பரம் செய்கிறார்கள். அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஒப்பந்தக் கொலைகளை நிறைவேற்றுகிறான் மங்கூஸ்ட். பணம் கொட்டுகிறது, அவன் வாழ்க்கை முறையும் மாறுகிறது. வாழ்வின் சிறப்பானவற்றையெல்லாம் அனுபவிக்கிறான் மங்கூஸ்ட். காலம் ஓடுகிறது தனிமை அவனைக்கொல்ல ஆரம்பிக்கிறது, வசதியான வாழ்வின் சுவைகளிலிருந்து விடுபட ஆரம்பிக்கின்றான் மங்கூஸ்ட். இந்நிலையில் அவன் வாழ்வின் ஓட்டத்தை நிரந்தரமாக மாற்றப்போகும் ஒர் மாபெரும் ஒப்பந்தம் அவனை வந்தடைகிறது.

து என்ன ஒப்பந்தம்? ஒப்பந்தத்தை மங்கூஸ்ட் நிறைவேற்றினானா? அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன? ஏஜண்ட் XIII மீது ஏன் இவ்வளவு வெறிகொண்டவனாக மங்கூஸ்ட் இருக்கிறான் என்பதை மீதிப்பக்கங்களில் பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பம் முதல் இறுதிப்பக்கம் வரை, ஒர் தேர்ந்த கொலையாளியின் நுட்பமும்,வேகமும் நிறைந்த அசைவுகள் போன்று தொய்வே ஏற்படாது பாய்ந்து செல்லும் கதையமைப்பு, அதனைக் கொலையாளியின் மொழியில் சொன்ன விதம், வில்லியம் வான்சின் சித்திர அமைப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, புது ரத்தம் பாய்ச்சப்பட்ட சித்திரங்கள் என வெற்றிக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் கதாசிரியர் சேவியர் டாரிசனும், சித்திரக்காரர் ரல்ஃப் மெய்ரும். பக்கங்களை, பணம் எண்ணும் இயந்திரத்தின் வேகத்தில் திருப்ப வைக்கும், கதையின் சிறப்பான எடிட்டிங்குக்கு காரணமான டார்கோட் அணியினரை பாராட்டியே ஆக வேண்டும். கென்ஸ், சிரெய்னரிற்கு வழங்கும் பாடங்களும், பயிற்சிகளும் அபாரம். தான் நேசிக்கும் இரு தகப்பன் பிம்பங்களிற்காக தன்னை தொலைக்கும் மங்கூஸ்ட் பாத்திரம் அருமை.

மொத்தத்தில் XIII ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஆல்பம் இதுவாகும். மெய்ரும், டாரிசனும் பிரெஞ்சுக்காரர்கள். டாரிசன்,1972ம் ஆண்டில் பிறந்தவர். வர்த்தகத்துறையில் கல்வி. பின்பு BARCLAYS CORPல் வேலை. இவரது கதைகளான THE THIRD TESTAMENT, SANCTUARY என்பன ரசிகர்கள் மத்தியில் இவரிற்குரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவையாகும். மெய்யர், பிறந்தது 1971ல். இளம் வயதில் பிங்-பாங் சாம்பியனாக வேண்டுமென கனவு கண்டவர், பின் பெற்றோரின் சொல்லிற்கேற்ப கலைத்துறையில் காலடி வைத்தவர். TOME, எனும் கதாசிரியருடன் இணைந்து இவர் பணியாற்றிய BERCEUSE MURDERS கதை நல்ல வரவேற்பை பெற்றது. டாரிசன்,மெய்யர், இருவரும் இணைந்து பணியாற்றியது இதுவே முதல் முறை. [கலக்கீட்டிங்கப்பு]

XIII பிரதான தொடர் முடிவடையவில்லை. அதற்கு தற்காலிக ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. வான் ஹாமும், வில்லியம் வான்ஸும் இன்னொரு கதைத்தொடரை ஆரம்பிக்க விருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் வான் ஹாம் சற்று இளைப்பாற விரும்பியதால், உடனடியாக அத்தொடர் வருவதற்குரிய சாத்தியங்கள் குறைவே அதற்கு ஈடாக வந்ததே XIII -MYSTERY தொடர்.

- XIII ன் பிரதான தொடரில் அறிமுகமாகிய உபபாத்திரங்களின் பெயரில், பாத்திரத்திற்கு ஒன்றென 54 பக்கங்கள் கொண்டஆல்பங்கள்.[ அடுத்து வருவது இரினா(IRINA)]

- XIII ன் பிரதான கதையுடன் தொடர்புடைய, ஆனால் நாங்கள் இன்னும் அறியாத மர்மங்கள்.

- கதைக்கு கதை, புதிய கதாசிரியர் அவருடன் முதல் முறையாக பணியாற்றும் சித்திரக்காரர்.

நண்பர்களே, ஆட்டம் முடியவில்லை XIII தொடர்கிறது.

ஆல்பத்தின் தரம் *****
மங்கூஸ்டின் கதையை ஒரளவு தெரிந்து கொண்ட பின் இதுவரை நீங்கள் படித்த XIII தொடரில் நீங்கள் கண்ட மங்கூஸ்டின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன? இனிவரப்போகும் கதைகளில் மங்கூஸ்ட் பாத்திரத்தின் மீதான உங்கள் பார்வை எவ்வாறு இருக்கும்?இவற்றைக் குறித்தும்,பதிவைப்பற்றியும் உங்கள் மேன்மையான கருத்துக்களை பதிந்து செல்லும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்வலர்களிற்கு

ஆல்பதின் சில பக்கங்கள்.

ட்ரெயிலர்
46 comments:

 1. அற்புதமான பதிவு, நண்பரே. எந்த எதிர்கதாநாயகனின் மனதிலும் ஒளி இருக்கும். கதாநாயகனின் மனதிலும் இருள் இருக்கும். பொதுவாக வெளிநாட்டு காமிக்ஸ்-ல் உள்ள உத்தி இதுவேயாகும்.

  தனி பாத்திரங்களை மிக துல்லியமாக வரையறுத்திருப்பார்கள். ஒரு பிரமாண்ட நாவலுக்கு எவ்வளவு மெனக்கெடுவார்களோ அவ்வளவு மெனக்கெட்டு, அந்த நாவலின் ஆயிரத்தில் ஒருபங்கு அளவிற்கு சுருக்கி கொடுப்பார்கள். சித்திர கதைகள் என்பது சாதாரணம் அல்ல என்பது இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை.


  நமக்கு நெருப்பு விரல் மாயாவியின் இளமை கால பருவம்தான் தெரியுமா? அவரின் உறவினரான செழிக்கே தெரியாதபோது நமக்கு எப்படி தெரியும்? அவர் ஷேக் வேடம் போட்டது பற்றிய மர்மம் குறித்து ஒ.கா.ர. தனிப்பதிவு போடாவிட்டால் நீங்களும் நானும் போடவேண்டி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பமே நெருப்பு விரலுக்கு பருப்பு விரல் என ஒரு சைக்கோ தம்பி இருந்தார் என ஆரம்பிக்கும் பரவாயில்லையா?

  நெருப்பு விரலின் நெஞ்சின் அலைகள் என்பதுதான் தலைப்பு. அவரின் குழந்தை பருவ நிகழ்ச்சிகளை எழுதுமாறு நெருப்புவிரல் சங்க குழுத் தலைவரை அழைக்கிறேன்.

  ReplyDelete
 2. கனவுகளின் காதலனே,

  வழக்கம் போல உங்கள் பதிவு என்னுடைய சைடு பாரில் அப்டேட் ஆகா வில்லை. காரணம் என்ன என்றும் தெரிய வில்லை. அதனால் தான் உங்கள் பதிவில் பின்னுட்டம் இட சற்று தாமதம் ஆகி விட்டது. மன்னிக்கவும்.

  மங்கூஸ் எனக்கும் பிடித்த ஒரு வில்லன் ஆவார். அவரை பற்றிய கதை என்றவுடன் ஆவலுடன் படித்தேன். இப்போது மாற்ற கத பாத்திரங்களும் வருகிறார்கள் என்றவுடம் மகிழ்ச்சி அடைந்தேன்.

  காமிக்ஸ் டாக்டரின் காதலி ஜோன்ஸ் எப்போது வருவார்?

  சிறப்பான பதிவு இது.

  தொடருங்கள்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 3. எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது தான்,

  பயம் = இரைக்கும், வேட்டையாடுபவனிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இது ஒன்றுதான்.

  கிங் விஸ்வா
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 4. where can i buy this book?

  ReplyDelete
 5. இரவில் 2 மணி வரை உங்கள் பதிவை பார்க்க அப்ப அப்ப உங்கள் வலைப்பூவை தடவி கொண்டு இருந்தேன்... ஆனால் நீங்கள் இம்முறை சற்று தாமதமாக பதிவிட்டு இருகிறீர்கள் என எண்ணுகிறேன்... ஆகவே தாமத பின்னூட்டம்.

  மீண்டும் ஒரு அறிய பதிவு... இனி பதிவு பற்றி:

  // ஒர் நல்லகாதலி, நல்ல ஒர் காமிக்ஸ் போன்றவளே, காமிரேட்டுகள் இரண்டையும் பாதுகாப்பதில் கில்லாடிகள் என்பதை யாம் அறிவோம்.//
  அருமையான வசனம்... முந்தய வாக்கியத்துக்கு அனுபவம் இல்லை என்றாலும்... பிந்தைய வாக்கியத்துக்கு என் முழு ஆதரவு உண்டு. :)

  // பயம். இரைக்கும், வேட்டையாடுபவனிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இது ஒன்றுதான் //
  அருமையான வாக்கியம்... மொழி பெர்யர்ப்புக்கு பாராட்டுகள் :)

  XIII -MYSTERY தொடர் உண்மையிலேயே ஒரு அறிய பொக்கிஷம் போல தெரிகிறது. புது எழுத்தர்கள், மற்றும் ஓவியர்களின் கை வண்ணத்தில்... ஒரிஜினல் ஆல்பம் திரும்ப நடை போடுமுன், நமக்கு ஒரு பெரிய விருந்து படைக்க தயாராகி விட்டது போல தெரிகிறது. கிளாசிக் கதைகளின் மைய புள்ளியான பிரான்சில் வாசம் செய்வதில் கிடைக்க கூடிய நன்மைகளில் இதுவும் ஒன்று, என்று உணர முடிகிறது.

  கதையை படித்த பின் மங்கூஸ் மீது ஒரு பரிதாபம் உண்டாகிறது என்றாலும், XIII
  ஐ அவர் வேட்டையாடி மீதி 18 ஆல்பகங்களில் கொட்டம் அடிப்பதன் மூலம் அவர் ஒரு விரோதியாகவே தெரிகிறார்.... ஆனால் XIII கூட முன்பு ஒரு குற்றவாளி தானே, என்று எதிர் வாதம் வைக்க படலாம்... அதை குறை கூறவும் முடியாது. திருடவதற்கு பல நல்ல காரங்கள் உண்டு என்றாலும், அது ஒரு குற்றம் தானே.... அப்படி இருக்கும் பொது கொலை மா பாதகர்களுக்கு மீது கரிசனம் ஏற்பட சாத்தியம் இல்லை....

  இப்புதங்கங்கள் இந்திய ரசிகர்கள் படிக்க எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை. ஒரு வேலை சினிபுக் மனது வைத்தால் முடியுமோ? பார்போம்...

  இன்னொரு அறிய காமிக்ஸ் பொக்கிசத்தை எங்களுக்கு அறிமுக படுத்திய காதலருக்கு நன்றிகள். சீக்கிரம் லக்கி லுக்கின் பிற பக்கங்களை தொடராக போடுங்கள். :)

  சென்ற முறை போல இப்போது உங்கள் பதிவு பீட் பக்கங்களில் பதிவாக வில்லை. அனேகமாக உங்கள் இணைய அமைப்பில் ஏதோ கசமுசா என்று நினைக்கிறேன். Feedburner சேவையை உபயகோது பாருங்களேன்... என் வலைபக்கத்தில் அதுதான் வேலை செய்து கொண்டு இருக்கிறது... கூகிள் அமைப்பின் சகோதர அமைப்பு, மற்றும் கூகிள் பீடை விட மென்மையானது என்பது துணை கூறு.

  கூடவே உங்களுக்கும் நவஜோ மதகுருக்கும் என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள். பதிவை படிக்கும் மற்ற (காதலர் தின சம்பந்தப்பட்ட) அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  காமிக்கியல்

  ReplyDelete
 6. அன்பிற்கினிய நண்பர்களிற்கு,சைட்பாரில் பதிவு அப்டேட் ஆகாததிற்கு நான் திகதியில் செய்து விட்ட குளறுபடியே காரணம் என்று கூற விரும்பினாலும், கப்ஸா கழுகுவின் மகள் விசில் விரியனை மணந்து கொள்ள நான் மறுத்துவிட்டதையடுத்து என்மேல் தொடுக்கப்பட்ட எச்சரிக்கை தாக்குதல் இது என்பதே உண்மை. இருப்பினும் தேடி வந்து பதிவினைப்படித்து கருத்து பதிந்திட்ட இவ்வளவு அருமையான நண்பர்கள் இருக்கும் போது சைட்பாரே தேவையில்லையே.

  ஜோஷ்,தாமஸ் ஹாரிஸின் கனிபல் ரைசிங் போல் டால்பிங்கர் ரைசிங் என்று சர்வதேச லெவலில் கலக்க வேண்டியது தான்.காஸாவில் ஓர் டூயட் உண்டு. உண்மையிலேயே பருப்பு விரலின் காதலி தான் பூங்காவனம், காத்தவ் இடையில் எப்படி நுழைந்தார் என்ற சஸ்பென்ஸ்ஸோடு போட்டு தாக்க வேண்டியது தான். காத்தவ் அப்பா வேடத்திலும் வருவதால் டபுள் ஆக்டிங்.போதுமா. சென்ற மாதம் லண்டனிலிருந்து வந்த ஒர் கல்லூரி நண்பரைக் காண சென்றிருந்தேன், அவர் என்னிடம் கேட்ட ஒர் கேள்வி என்னடா இப்பவும் காமிக்ஸ்ஸும், புத்தகங்களுமாவா அலையிறாய்?!! என்ன பதில் சொல்லலாம் ஜோஷ்.

  விஸ்வா, மன்னிப்பெல்லாம் தேவையற்றது, உங்கள் பிரசன்னமே போதுமே. அட்ரா சக்கை, தலைவரிற்கு ஜோன்ஸ் குட்டி மேலயும் ஒர் கண்ணா, தலவரிற்கு ஏற்ற குட்டி தான். செக்ஸி அண்ட் டேன்ஞ்சரஸ். தலவரிற்கு அப்பால இந்த சொத்தெல்லாம் எனக்குத்தான் என்றத நினைத்தாலே ஃபீலாவுதே.

  ரஃபிக், என் பதிவிற்காக காலை 2 மணிவரை காத்திருந்ததாக கூறி என்னை நெகிழ வைத்து விட்டீர்கள்.இது போதும். முதல் வாக்கியத்திற்கான் அனுபவம் உங்களிற்கு விரைவில் கிட்டட்டும்.
  விஸ்வாவும்,உங்களிற்கும் பிடித்த வசனம் தான் எனக்கும் பிடித்தது அதானாலேயெ அது பதிவில் இடம்பிடித்தது.கொலை என்பதை யார் செய்தாலும் அது தவறே, இருப்பினும் XIII தொடரை படித்து முடித்து விட்ட பின்பு இக்கதையினை நான் படித்ததால் மங்கூஸ்ட் என் மனதில் கதாநாயகனை தாண்டி இடம்பிடித்து விட்டார். XIIIம் சரி மங்கூஸ்ட்டும் சரி விரும்பிக் கொலையாளிகள் ஆனவர்கள் இல்லையே, ஜோஷ் கூறியது போன்று இருளும், ஒளியும் உள்ளவர்கள் தான் அவர்கள். கென்ஸ் தனது பயிற்சியை ஆரம்பிக்கும் முன் மங்கூஸ்டின் உறுதியைப் பரிசோதிக்க, சிறுவர்களை துஷ் பிரயோகம் செய்யும் ஒருவனைக் கொல்ல மங்கூஸ்டை ஏவுவான், அதில் மங்கூஸ்ட் தயங்கி தயங்கி செல்லும் காட்சியும், கொலையின் பின் அதிர்ச்ச்சியில் மங்கூஸ்டின் தலைமுடி முழுவுதும் சில மணி நேரங்களில் முழுதுமாக உதிர்ந்துவிட அவன் நிரந்தரமாக மொட்டையனாக ஆவதும் நெகிழ வைக்கும் சம்பவங்கள். அக்கறையான உங்கள் ஆலோசனைகளிற்கும் , வாழ்த்துக்களிற்கும் நன்றி.

  அனானி, இதோ நீங்கள் ஆல்பத்தினை வாங்க உதவும்
  சுட்டி. ஆல்பத்தினை வாங்க உங்களை தூண்டியிருக்ககூடிய பதிவைப்பற்றி ஒரு வார்த்தையேனும் கூறாமல் சென்றது ஏன் அன்பரே.
  http://www.amazon.fr/s/ref=nb_ss_w_0_12?__mk_fr_FR=%C5M%C5Z%D5%D1&url=search-alias%3Daps&field-keywords=la+mangouste+xiii&sprefix=la+mangouste

  ReplyDelete
 7. கனவுகளின் காதலரே,

  காதலர் தின வாழ்த்துக்கள்!

  மீண்டும் ஒரு அருமையான பதிவு! இக்கதையை நான் படிப்பது நிரம்பக் கடினம் (ஏன்னா எனக்கு ஃப்ரெஞ்சு தெரியாது), எனினும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்!

  வான்ஸ், வான் ஹம்மே இருவரும் இல்லாத XIII தொடரை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை! தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்க்கும் மடத்தனத்தை பதிப்பாளர்கள் எப்போதோ துவங்கி விட்டனர்! இனி என்ன நடந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை!

  XIII தொடரை ஆரம்ப காலங்களில் பிரபலமாக்கிய அந்த ஆழமான கதைக்கரு இப்போது எங்கே போனதென்றே தெரியவில்லை! கதையம்சம் குரைந்து ஆக்‌ஷன் மேலோங்கிட இத்தொடரின் சிறப்பம்சம் தொலைந்தே விட்டது!

  சமீபத்தில் வந்த கணினி விளையாட்டும், தொலைக்காட்சிப் படமும் இதையே பரைசாற்றுகின்றன!

  //பயம் = இரைக்கும், வேட்டையாடுபவனிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இது ஒன்றுதான்.//

  இதைப் படிக்கும் போது ‘குருதிப்புனல்’ கமல் சொல்லும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது...

  “வீரம்னா என்னன்னு தெரியுமா? பயமில்லாத மாதிரி நடிக்கிறது!”

  இந்த வசனத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (நான் படித்தது ஆங்கில வழிக்கல்வி பள்ளியில்) நானும் எனது நண்பனும் (அவனும் காமிக்ஸ் படிப்பான்) கரும்பலகையில் ‘இன்றைய சிந்தனை’ ரேஞ்சுக்கு எழுதி வைத்திருந்தோம்! அந்த வசனம்...

  "BRAVERY IS NOTHING BUT HIDING FEAR!"

  // தலைவரிற்கு ஜோன்ஸ் குட்டி மேலயும் ஒர் கண்ணா//

  அதென்ன ஒரு கண்? ரெண்டு கண்ணையும்தான் அவ மேல வெச்சிருக்கேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 8. என்னைய மாதிரியே எவனோ ஒருத்தன் இங்கன இருக்குறானே? யாரா இருக்கும்?

  ReplyDelete
 9. யாருப்பா இந்த மொட்டை தலை ஒற்றன்? இந்த ஜேம்ஸ்பாண்ட் கதையில வருவானே? அவனா?

  மரண மாமா

  ReplyDelete
 10. நம்முடைய காமிக்ஸ் டாக்டர் ஒரு கமல் பன்ச் வசனத்தை எடுத்து விட்டதால் நானும் என் பங்கிற்கு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி வசனத்தை எடுத்து விட்டிஅப்படியே மொழி பெயர்ப்பும் செய்து விடுகிறேன்.

  படம் : உழைப்பாளி

  வசனம்: நேத்து நான் கூலி இன்னைக்கு நான் நடிகன் நாளைக்கு.....
  சிலபேர் சொல்றாங்க நான் எப்படி வருவேன் அப்படி வருவேன்

  நான் எப்படி வருவேன்னு ஆண்டவனுக்கும் மட்டும் தான் தெரியும்..

  English: Yesterday I was a coolie, today I'm an actor, tomorrow...people may say what they want. But how I'll become, only god knows.

  செழி.

  ReplyDelete
 11. ஒஹோ, இந்த பதிவு பஞ்ச் டயலாக் பின்னுட்டமா?

  படம் உளியின் ஒசை.
  பாண்டிய அரச சபை.

  ‘இந்த பாண்டிய நாட்டில அப்படி யாரும் இல்லையா?’

  ‘முத்துநகை அரசே. முத்துநகை.’

  கிங் விஸ்வாவிற்கு மிகவும் பிடித்தமான படத்திலிருந்து பஞ்ச் டைலாக் கொடுத்திருக்கிறேன்.

  ReplyDelete
 12. காமிக்ஸ் பஞ்ச் அடுத்தது.

  கதையின் தலைப்பு நினைவில்லை.
  வெளியீடு இந்தர்ஜால் காமிக்ஸ்.
  மாண்ட்ரேக் சாகசம்.

  லொதாரிடம் அடி வாங்கிய அடியாட்களை பார்த்து மாண்ட்ரேக் சொல்லும் பஞ்ச்.

  ‘கூசி போகாதீங்க. அடி கொடுத்தது வல்லவரே.’

  ReplyDelete
 13. ஏதோ நானும் சொல்லிக்கிறேன்.

  \\மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா, சினம் கொண்ட சிங்கத்தின் முன் தோற்று ஓடும்// வாத்தியார் வசனம், படம் என்னவென்று தெரியல.

  வேதாளன் இந்திரஜால் காமிக்ஸ் கானகத்தில் களவாட வந்த ரவுடிகளைப் பார்த்து.
  \\ பம்மாத்து வாணாம்// இதனைக் கேட்ட ஆற்றிலிருந்த முதலைகள் ஸ்டைலு போஸ் குடுக்கின்றன.

  ReplyDelete
 14. நல்ல பதிவு..... XIII விரைவில் வரும் என எதிற்பர்கின்றேன் .... ஆங்கிலத்தில் மொழி மற்றம் செய்து உள்ளனர். வேண்டும் என்றால் சொல்லுஇங்கள் ... லிங்க் தருகின்றேன் .....

  ReplyDelete
 15. நானும் என்னுடைய பங்கிற்கு ஏதோ என்னால் முடிந்த பன்ச் வசனங்களை அளிக்கிறேன்:

  மதி காமிக்ஸ் - மாயவிக்கொர் மாயாவி

  பொன் போன்ற மனம் கொண்டவன்தான் மாயாவி.


  ராணி காமிக்ஸ் - பேய் காடு

  மாயாவியின் குத்து கும்மாங்குத்து.

  ஒலக காமிக்ஸ் ரசிகன்

  ReplyDelete
 16. லோதர் உலக பலசாலி

  (நன்றி - இந்திரஜால் காமிக்ஸ் ஜுனூன் தமிழ்)

  ReplyDelete
 17. As i do not have young fans, I - Myself- Posting my famous punch dialogues over here.

  வாடா என் மச்சி

  வாழக்க பஜ்ஜி

  உன் தோல உரிச்சி

  நான் போடப் போறேன் பஜ்ஜி.

  ReplyDelete
 18. நண்பர் ரமேஷ், மங்கூஸ்ட் கதையின் ஆங்கில மொழி மாற்றம் இருந்தால் நீங்கள் சுட்டியை தருவதன் மூலம் நண்பர்கள் பயனடைவார்கள் அல்லவா. உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பதிந்து ஆதரவு அளித்ததிற்கும் நன்றி.

  ReplyDelete
 19. நண்பரே என்னிடம் 1 முதல் 12 வரை இங்கிலீஷ் மொழி மற்றம் உல்ளது

  இதோ முகவரி

  http://rapidshare.com/files/193168740/xiii.rar.html

  ReplyDelete
 20. மன்னிக்கவும் என்னிடம் XIII mystery scanlation இல்லை

  ReplyDelete
 21. கனவுகளின் காதலரே, உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள

  "மை நேம் இஸ் மங்கூஸ்ட்" உங்கள் இன்னுமொரு சிற‌ன்த‌ ப‌திவு.

  "XIIIம் சரி மங்கூஸ்ட்டும் சரி விரும்பிக் கொலையாளிகள் ஆனவர்கள் இல்லையே, ஜோஷ் கூறியது போன்று இருளும், ஒளியும் உள்ளவர்கள் தான் அவர்கள்." ‍‍‍_ கூற்று உண்மையாயினும், கொலைகள் செய்வதை ஒரு போதும் நியாப்படுத முடியாது இல்லையா?

  "பயம் : இரைக்கும், வேட்டையாடுபவனிற்கும் இடையிலுள்ள வேறுபாடு இது ஒன்றுதான்"

  நல்ல கருத்து. ஆனால் நடைமுறைப் படுத்துவது மிகவும் கடினம் அத்தோடு, பயம் மனிதனை பலவேளைகளில் தவறு செய்யாமல் தடுக்கும் ஒரு கருவி.

  ReplyDelete
 22. நண்பர் ரமேஷ், உங்கள் சுட்டிக்கு நன்றி, நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டியதேயில்லை.

  ReplyDelete
 23. நண்பர் டேவிட் அவர்களே,

  நீங்கள் கூறியது உண்மையாகினும் இந்த கருத்து இவர்கள் (வேட்டையாடுபவர் மற்றும் வேட்டையாடப்படுபவர்) இருவரையும் வேறுபடுத்தும் ஒரே காரணி என்ற முறையில் கொண்டாள வேண்டும்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 24. நண்பர்களே,

  யார் யாரோ வண்டு பன்ச் வசனம் பேசும்போது இந்த மாதிரி வசனங்களை பிரபலம் ஆக்கிய நான் என் சும்மா இருக்க வேண்டும்?

  இதோ பிடியுங்கள் என்னுடைய வசனங்களை: இதனை இந்திரஜால் காமிக்ஸ் பற்றியும் எடுத்து கொள்ளலாம்.

  ஆலையில போறது அடிக் கரும்பா இருந்தா என்ன, நுனிக் கரும்பா இருந்தா என்ன?

  நமக்கு தேவையானது வெல்லம் தானே?

  அதைப் போலவே மொழி பெயர்ப்பு மோசமா இருந்தா என்ன, வண்ணங்கள் மட்டமாக இருந்தா என்ன? நமக்கு தேவை கதை தானே?

  ReplyDelete
 25. மேஜர் ஜோன்ஸ் மேல கண்ணு வச்சு இருக்கும் நானே அமைதியாக இருக்கும்போது இந்த டாக்டர் ஏன் அவரோட பேத்தி வயசுல இருக்கும் ஜோன்ஸ் மேல ரெண்டு கண்ணு வச்சு இருக்கார்? இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  இளைய பதிவர் கனவுகளின் காதலன் இதனை ஆமொதிப்பார் என்றே நம்புகிறேன். எனென்றால் ஒரு இளைய மனதின் எண்ணம் இன்னொரு இளைய மனதிற்கு தானே தெரியும்?

  ReplyDelete
 26. அடப்பாவிகளா,

  இந்த வயசான காலத்திலேயும் பொண்ணு பின்னாடி ஏன்யா சுத்துறீங்க? என் பூங்காவையும் இப்படிதானே நாசம் பண்ணிங்க.

  வளமுடன் நலமுடன் குணமுடன் திகழ்ந்த என் கண்ணாட்டி இப்போதெல்லாம் என் கூட பேச மாட்டேன் என சொல்கிறாள்.

  இப்போ ஜோன்ஸ் பின்னாடி அலையறீங்க. இந்த குரூப்ல நல்ல பையன்னா அது உலக காமிக்ஸ் ரசிகன்தான். நல்ல புள்ள. பச்ச மண்ணுய்யா அது. அது படிக்கிற இந்த இடத்துல ஏன்யா அக்கிரமம் பண்ணுறீங்க

  ReplyDelete
 27. ஐயா சைக்ளோப்ஸ் நீ யார் பெத்த மகராசனோ நல்லா இருப்பா. நான் இளைய பதிவர்னு சொல்லி என் நெஞ்சில பால் சுனாமியையே ஊத்திட்டியேப்பா. ஏம்பா சின்ன வயசில உங்க அம்மா உனக்கு சோறு ஊட்டும் போது நிலாவைக் காட்டி ஊட்டுவாங்களே, அப்ப பக்கத்து வீட்டுக் குழந்தை உங்க அருகிலே தவழ்ந்துகிட்டு இருக்குமே, நீ அந்தக்குழந்தை மேல பிரியமா, உங்கம்மா உன்கூட்டின சோதத்தை உன் கையால அந்தக் குழந்தக்கு ஊட்டுவியே, உனக்கு ஞாபகமிருக்காப்பா, அந்தக் குழந்த நான் தான்யா, நான் தான், [ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்]

  ReplyDelete
 28. ஷண்டாளர்கலே,

  சமயோசித புத்தியால் என்னுடைய பூங்காவனத்தின் "பெயரையும்" ஏனடா கெடுக்கிறீர்கள்? துரோகிகளே?

  வேண்டாம் இந்த அநியாயம்.

  அடுக்காது இந்த அக்கிரமம்.

  பொறுக்காது இந்த பொல்லாப்பு.

  இத மறக்காது எந்தன் மனம்.

  ReplyDelete
 29. கும்மியடியால் கருத்துக்கள் 40 வரை எகிறினால் தண்டனையாக கழுத்திற்கொரு கயிறு 5 பக்கங்கள் வெளியிடப்படும் என்று எச்சரிக்கிறேன்.

  ReplyDelete
 30. அந்த குழந்தையே நீங்க தான் சார்

  (மகாநடிகன் படத்தில் சத்யன் சத்தியராஜ் அவர்களிடம் கூறுவதை போல படிக்கவும்).

  ReplyDelete
 31. ராஸ்கல்களா,

  வரவன் போறவல்லாம் என் புருஷன்னு சொல்றான். என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல. வேண்டாம்யா, அந்த கருமத்தை வெளியே சொல்லி வைக்காதீங்க.

  எனக்கும் என் அத்தான் காத்தவ்க்கும் இப்ப பேச்சு வார்த்தை இல்லைதான். அதற்காக சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்ட பாக்கிறீங்கலா.

  யோவ் காதலரே, ஸ்டீல்ல செஞ்ச பூரிக்கட்ட என்கிட்ட இருக்கு. வரியா, வந்து பார்க்கிறியா?

  கிங்கு, உனக்கு இருக்குடி.

  ReplyDelete
 32. என்னையா நடக்குது இங்க? எங்க தலைவர் ரெண்டு நாள் ஊருக்கு கிளம்பி போன இப்படியா கும்மி அடிப்பது?

  சரி சரி ஏன் பங்குக்கு நானும் ஒரு பன்ச் சொல்றேன்: இந்த கரகாட்டக்காரன் படத்துல கனகாவோட அப்பாவ ஒரு பெரியவர் வந்து எப்பவும் இஞ்சி மொரப்பா சாப்பிட்ட மாதிரியே பேசுவார். ராமராஜன் அம்மா தான் அவரோட அக்கான்னு தெரிஞ்சதும் அவர் ஒரு வசனம் பேசுவார்.

  அக்கா, என்னக்கா சொல்றே? அப்பா எனக்கு எப்படி இருந்ததுன்னு உனக்கு தெரியுமா? அப்படியே நாலு பேர் என்னோட நெஞ்சுல ஏறி மிதிச்ச மாதிரி இருந்ததுக்கா. நெஞ்சுல ஏறி மிதிச்ச மாதிரி இருந்தது.

  ReplyDelete
 33. அப்பா சைக்ளோப் பாலையும் ஊத்திட்டு, சங்கையும் நீயே ஊதிட்டியேப்பா. பரவால்லப்பா, பரவால்ல. அடிவாங்கி வாங்கி இந்த மனசுக்கு வலின்னா என்னான்னே தெரியாமா போச்சு. ஆனா இந்த கண்ணீர் தான் கைவீசம்மா கைவீசுன்னு பாடிக்கிட்டே வழியுதப்பா.

  அம்மா பூங்காவனம் ஏம்மா, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு என் மேல கோபமா இருக்க, என்கிட்டத்தான் ஏற்கனவே ஆண்டவன் குடுத்த ஒரு ஸ்டீல் பூரிக்கட்ட இருக்கேம்மா, என் ராசாத்தி மகாராசியா வாழுடியம்மா.

  ReplyDelete
 34. பூங்காவனம் அம்மையாரே,

  நான் ஒரு ஏக பத்தினி விரதன் என்பது உமக்கு தெரியாதா? அதனால் எனக்கு இருக்கு என்று நீங்கள் கூறும் எதுவும் எனக்கு வேண்டாம். என்னை மன்னியுங்கள், மனதாலும் என்னுடைய வருங்கால மனைவிக்கு துரோகம் செய்ய நான் விரும்ப வில்லை. அதனால், உங்கள் அழைப்பை நான் மறுக்கிறேன்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 35. நீர்தான் கனவுகளின் காதலனோ?

  யாரிடம் கேட்கிறீர் கும்மி பின்னுட்டங்களை?
  எம்முடம் பிரவுசிங் சென்டருக்கு வந்தீரா?
  கியு'வில் நின்றீரா?
  அல்லது நாங்கள் பிரவுசிங் முடித்தவுடன் அதற்க்கு பணம்தான் கொடுத்தீரா?

  யாரிடம் கேட்கிறீர் கும்மி பின்னுட்டம்?

  செழியன், சேர நாட்டு மன்னன்.

  ReplyDelete
 36. அருமையான பதிவு என்று கூறி அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவிக்க ஒரு வந்தால் இங்கே ஒரு கொண்டாட்டமே நடந்து கொண்டு இருக்கிறதே?

  அம்மா ஆசை இரவுகள் விசிறி.

  ReplyDelete
 37. அய்யன்மீர்,

  என்னை பற்றி ஏதோ பரு பதிவு இடப் போவதாக கேள்விப் பட்டேன். என்னுடைய பெயர் மற்றும் படங்களின் வியாபார உரிமை சட்டப்படி காப்புரிமை செய்யப் பட்டதாகும். எனவே, ஜாக்கிரதை.

  இது எச்சரிக்கை அல்ல, Warning.

  ரெண்டும் ஒண்ணுதான் என்று சொல்பவர்களே, அவை வேறு வேறு ஆகும்.

  ஒன்று தமிழில் உள்ளது. மற்றது ஆங்கிலத்தில் உள்ளது.

  ReplyDelete
 38. ஏம்பா செழியா, என்கிட்ட தான் குடுக்கறதுக்கு ஒன்னும் இல்லையே, இப்ப வந்து பிரவுசிங்குக்கு பணம் கேக்கிறியே நான் என்ன பண்ணுவேன், இப்ப உனக்கு தர்றதுக்கு என்கிட்ட என் உயிர விட்டா வேற எதுவுமில்லப்பா எதுவுமில்ல

  ஆட்டுவித்தால் யார் ஒருவன்
  ஆடாதாரே கண்ணா
  ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
  நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
  என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு
  பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
  ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
  நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே

  ReplyDelete
 39. ஏன்பா பேரன்டிகளா,

  என்னதான் நடக்குது இங்க? நாட்டுல கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க முடியல.

  இந்த பூங்காவன் இருக்காங்களே, அவங்க என்னோட ஒன்னு விட்ட அத்தோயோட, ரெண்டாவது மச்சினனோட, பெரியப்பா பைய்யனோட, மாமியாரோட, தங்கச்சியோட, புஷனோட, தம்பியோட, ரெண்டாவது தாரத்தொட, சக்கலத்தியோட, அம்மாவோட, .....இப்படி எல்லாரும் ஓட பாக்கி இருக்கும் ஒரே சொந்தம்.

  அவங்களோட "பெயரையும்" கெடுக்காதிங்க பேரன்டிகளா.

  வெள்ளைக்கிழவி (கறுப்புக்கிழவியின் சகோதரி)

  ReplyDelete
 40. நண்பர்களே,

  நாப்பதாவது கமண்ட் இடும் பாக்கியம் எனக்குதானே, இனிக்கும் தேனே....

  கிங் விஸ்வா
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 41. ஜி,

  வேர் இஸ் த பார்ட்டி? அ, செழி வூட்ல பார்ட்டி..

  ஆனா, செழி இப்போ திருப்பதில பார்ட்டி. ஜருகண்டி ஜருகண்டி தான்.

  ReplyDelete
 42. தயவு செய்து என்னோட பெயர மறுபடியும் படியுங்க சார்.

  ReplyDelete
 43. தலைவரே, கதையின் அழகில் மயங்கிய தலைமுறை மறைய, வேகத்தையும், மிகச்சுருக்கமான கதை சொல்லலையும் விரும்பும் தலைமுறையை காமிக்ஸ் வெளியிடுபவர்கள் இப்போது கருத வேண்டியுள்ளது.மங்கூஸ்டின் கதையினை 30 நிமிடங்களுக்குள் படித்து விட முடியும் இருப்பினும் நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள் கதையில் இருக்கின்றன. படிக்கும் வாய்ப்புக்கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

  டேவிட்,ஒருவன் பயத்தினால் தவறு செய்யாமலிருப்பதை காட்டிலும், அவன் சக மனிதர்கள் மேல் கொண்டுள்ள நேயத்தாலும், மதிப்பாலும் தவறிழைக்காமல் இருக்க வேண்டுமென்பதையே நான் விரும்புகிறேன். இன்று சிறைச்சாலைகள் மிக நுட்பமான குற்றவாளிகளை உருவாக்குவதில் முன்னனி வகிக்கிறது.ஏன் என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள். இருப்பினும் தயங்காது உங்கள் எதிர் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துக்களிற்கு நன்றி.

  அம்மா ஆசை இரவுகள், நீங்களும் ஜாலியாக கும்மியடியில் பங்குபெற்றிருக்கலாமே, வாழ்த்துக்களிற்கும் தொடர் ஆதரவிற்கும் என் நன்றிகள்.

  காதலர் தின கும்மியடி மூலம், கருத்துப்பெட்டியை மூச்சுத்திணறவைத்த அனைத்து ஜாலி நண்பர்களிற்கும் என் மனதார்ந்த நன்றிகள். தொடருங்கள் உங்கள் கலைச்சேவையை.

  ReplyDelete
 44. நண்பர் ஜானி அவர்களே வருகைக்கும் கருத்து பதிந்து சென்றமைக்கும் நன்றி.

  ReplyDelete
 45. அருமையான பதிவு நண்பரே (y)

  ReplyDelete