Friday, January 30, 2009

மின்னலெனக் கொல்

பிரான்ஸ் பொது வேலை நிறுத்த ஸ்பெசல்!!!!

வணக்கம் நண்பர்களே,
உப்புக்கடல் பாடலிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு முதற்கண் என் நன்றிகள். பாடல்களை, கவிதைகளைப் பாடி ஒர் பின்னூட்டத்தை மிகவும் கலகலப்பாக்கி திருவிழாவாக்கி விட்டீர்கள். முதல் பாடலை தன் நினைவின் ஈரமான பக்கங்களிலிருந்து பதிந்து சென்ற செழியனிற்கு என் சிறப்பு கைகுலுக்கல். நீங்கள் இல்லாவிடில் இது நிகழ்ந்திருக்காது. ஆனாலும் கடந்த சில நாட்கள் காமிக்ஸ் ரசிகர்களிற்கு உண்மையான திருவிழாதான். ஒரு வார இடைவெளியினுள் மொத்தம் 5 பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. தமிழில் காமிக்ஸ்கள் சீரான கால இடை வெளியில் வராத குறையை இந்த அருமையான பதிவுகள் தீர்த்து வைக்கின்றன என்று கூறினால் அது மிகையல்ல.

மதியில்லாமந்திரி பற்றி சிறப்பான பதிவை வெளியிட்டு குடியரசுதின பதிவுகளிற்கு அச்சாரம் இட்டிருக்கிறார் காகொககூ அன்பர்.

டின்ஙிள் எனப்படும் இதழின் மறக்கமுடியாத காக்கை காளி, வேட்டைக்கார வேம்பு,சுப்பாண்டி எனும் பாத்திரங்களை தன்பதிவில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார் நண்பர் ரஃபிக்.

அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து, இவ்வருட ஹிட் பாடல் ஒன்றுடன் வெளியாகியிருக்கிறது VN [ அழகிய தமிழ்மகனை ATM எனும் போது, ஒப்பற்ற காவியமான வேதாள நகரத்தை VN என அழைப்பதில் தவறில்லை] கதாசிரியரான தமிழ்ஷேக்ஸ்பியர் தன் பாடல் வரிகளில் புது இலக்கியம் படைத்துள்ளார் என பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணமாகவே உள்ளன.

பற்றிஎரியும்பாலைவனமாக வந்ததுமில்லாமல், 3 மினிலயன் அட்டைகளைப் போட்டு சூடேற்றுகிறார் அன்பர் BB.

கடந்த சில வாரங்களாக நான் தினசரி படிப்பதில்லை எனும் குறையைத் தன் அற்புதமான பதிவுகள் மூலம் போக்கி வந்த எங்கள் அருமை அண்ணன் விஸ்வா கொள்ளைக்காரகார் மூலம் நிற்க, நிமிர, இருக்க வைத்து செஞ்சுரி அடித்திருக்கிறார்.இவ்வாரத்தின் செம ஜாலியான பதிவு.

காமிக்காலாஜி வலைப்பூவில் நடாத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற ரஃபிக், டாக் செவன், இளங்காளை விஸ்வா ஆகியோரிற்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் பங்கிற்கு இதோ நண்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மின்னலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறேன், விளையாடிப் பார்த்துவிட்டு முடிவுகளைச் சொல்லுங்கள்.

தற்பொழுது தமிழில் வெளியாகி கொண்டிருக்கும் 3 காமிக்ஸ்கள் முத்து, லயன் மற்றும் காமிக்ஸ் கிளாசிக் ஆகும். பிரகாஷ் பதிப்பகத்தார் தங்களால் முடிந்த அளவு,அதி உச்ச வேகத்துடன் இதழ்களை வெளியிடுவது வாசகர்கள் அறிந்ததே.

சிலமாதங்களாக,தொடர்ச்சியாக இதழ்கள் வெளிவந்ததைதொடர்ந்து, இது தான் தமிழ் காமிக்ஸின் மறுமலர்ச்சிக்காலமோ என வியந்த உள்ளங்களும் உண்டு. உள்ளங்களே அவசரப்படாதீர்கள். வருட ஆரம்பத்தில் நாங்கள் இருக்கிறோம், பிரகாஷ் பதிப்பகம், வழமை போன்று பாட, அப்பியாச புத்தகங்கள் அச்சிடுவதில் முனைப்புடன் இயங்கும் வேளையிது. தமிழ் காமிக்ஸ்களின் வருகையும் சில மாதங்கள் தாமதப்படலாம். திரு.விஜயன் அவர்கள் வழமைபோலவே தாமதத்திற்கு மனம் வருந்துவார். இதெல்லாம் எங்களிற்கு சகஜம் என்பது போலவே, லயன், முத்துகாமிக்ஸ்களில் அடுத்த வெளியீடு, விரைவில் வெளி வருகிறது, ராட்சத ஸ்பெஸல் என அறிவிப்புகள் வெளியாகி இன்னும் வெளிவராமல் இருக்கும் இதழ்களின் விடயங்களும் சகஜமே.

லயன் காமிக்ஸில் வெளி வந்த,"மரணத்தை முறியடிப்போம்" எனும் பெயர் கொண்ட மாடஸ்டி பிளைசியின்,சாகசக் கதை நண்பர்களிற்கு நினைவில் இருந்தால், அதில் வெளியாகிய அடுத்த வெளியீடு- கோட் நேம் மின்னல் -முதல் பாகம் பற்றிய அறிவிப்பும் ஞாபகத்திற்கு வரலாம். இப்பதிவு INSIDERS எனப்படும் கோட் நேம் மின்னலைப் பற்றியது.

OPERATION STAR GATE- ரஷ்ய, அமெரிக்க பனிப்போர் காலப் பகுதியிலிருந்தே, CIA, KGB ஆகிய இரு அமைப்புக்களுமே, தனி நபரொருவரின் மன எண்ணங்களுடன், தொலைவிலிருந்து தொடர்பு கொள்ளவும், அதனை கட்டுப்படுத்தவும் வழி தேடி, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள். காணாமல் போன பேர்வழிகளை கண்டுபிடிப்பதற்காக MEDIUMகளின் உதவி பெறப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் இத்தகவலை செப்டம்பர் 1995ல் வெளியிட்டார்.

செட்செனியாவின், மேற்குபுற பகுதியினை கடந்து செல்லும் பெட்ரோலியக் குழாய்களை தகர்ப்பதற்காக, தன் கிளர்ச்சிப்படை வீரர்களுடன் சென்ற காமாண்டர் நஹ்மட் சரிப், ரஷ்ய ராணுவத்தினால் கைது செய்யப்படுகிறார். இவரை மீட்டு வர கிளம்புகிறது செட்செனிய கிளர்ச்சி வீரர்கள் குழு. க்குழுவிற்கு இயூசுப்பும், நஜாவும் தலமை எற்கிறார்கள்.
சவுதி அரேபிய அரசு வழங்கிய பெட்ரொலிய ஒப்பந்தங்களில்,ஒன்றுகூட தன் நிறுவனமான TRADOILக்கு கிடைக்காததையிட்டு விசனப்படுகிறார், பெரும் தொழிலதிபரான சாம் நாட்சேஸ். அவசரமான கூட்டம் ஒன்றை முன்னிட்டு HONOLULUவிற்கு செல்லும் அவர் மனதில் ஒர் திட்டம் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது, டாலர், டாலராக பூத்தபடி.

அமெரிக்க அதிபரை சந்திக்கும் முன்னாள் CIA அதிகாரியான DICK MATHEWS, சர்வதேச அளவில் மாஃபியாக்களின் வளர்ச்சி பற்றிய தனது அச்சத்தினை தெரிவிக்கிறார். அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள் எனும் போர்வையின் கீழ், ரகசியமாக மாஃபியாவிற்காக வேலை செய்பவர்களினால் உள்ள ஆபத்தை பற்றி உரையாடும் அவர், இப்படிப்பட்ட விஷமிகளின் போர்வையைக் கிழிக்கவும், அவர்கள் திட்டமிட்டுள்ள உலகளாவிய சதியினை முறியடித்திடவும், INSIDERS எனும் மிக ரகசியமான திட்டத்தை செயல்படுத்த, ஜனாதிபதியடம் அனுமதி கேட்கிறார். அனுமதி வழங்கப்படுகிறது.

ரஷ்ய ராணுவ செயலகமொன்றில் நஹ்மடை சிறை வைத்திருப்பதை அறியும், இயூசுப்பும், நஜாவும் அவனை அங்கிருந்து மீட்கின்றனர். இம்மீட்பு பணியில் இயூசுப் தன் உயிரை விடுகிறான். கிளர்ச்சியளார்களின் மறைவிடமொன்றிற்கு திரும்பும் நஜாவிற்கும், நஹ்மட்டிற்குமிடையில் கருத்து வேறுபாடு வெடிக்கிறது.

HONOLULUவில் தொழிலதிபர் சாம் நாட்சேஸ், தனது சகாக்களுடன் கூட்டத்தினை ஆரம்பிக்கிறார். பெரும் செல்வந்தர்கள், வங்கி உரிமையாளர்கள், அரசாங்க அதிகாரிகள்,அதிகாரத்தின் ஏக போக வாரிசுகள் அடங்கிய இச் சிறிய குழுவிற்கு, ஆபிரிக்காவின் CONGO விற்கும், முன்னைய ZAIREக்கும் இடையில் அமந்துள்ள சிறியபிரதேசமான CABINDA வைப்பற்றி எடுத்துரைக்கின்றார். CABINDAவின் பெட்ரோலிய வளங்களை நிர்வகித்து வரும் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டிலிருந்து, பெட்ரோலிய வளங்களை தன் நிறுவனமான TRADOIL வசமாக்கும் ஒர் ரகசியதிட்டத்தை,தன் சகாக்களிடம் விபரிக்கிறார் அவர். பேராசை, காமம், குரூரம் போன்றவற்றின் நெடியை மீறி, அந்த அறையில் பணத்தின் நெடி கற்றை கற்றையாக வீச ஆரம்பித்தது.

கருத்து வேறுபாடுகளால் செட்செனிய கிளர்ச்சி போராட்டத்தினிலிருந்து விலகுகிறாள் நஜா. பிரான்சின் தென்பகுதிக் கடற்கரையொன்றில் நாட்களை கழித்துக்கொண்டிருக்கும் அவளை கடத்தி செல்கிறது ஒர் மர்மக் குழு.


நஜாவைக் கடத்தி சென்றவர்கள் , முன்னை நாள் CIA அதிகாரியான DICK MATHEWSன் ஆட்கள் என தெரிய வருகிறது. நஜாவின் உண்மையான பெயர் ISABEL MENDOZA என்பதும், தென் கொலம்பியக் கார்ட்டல்களின் கொலைஞர்களும், அமெரிக்க போதைப்பொருள் பரவல் தடுப்பு அலுவலகமும், இண்டர்போலும் அவளை வலை வீசித்தேடிக்கொண்டிருப்பதும் தெளிவாகிறது. [இந்த வலையிலெல்லாம் மாட்டமாட்டாள் இந்த மின்னலு] DICK MATHEWS, அவளை PROJECT INSIDERSல் பணியிலமர்த்த விரும்புகிறார். ஒர் வினோதமான பயிற்ச்சியின் பின் பணிக்கு தேர்வாகிறாள் நஜா.

பிரான்ஸ் அரசின் மறைமுக ஆசிர்வாதத்துடன், CABINDA வில் ஒர் அதிகாரக்கவிழ்ப்பை நடத்த சாம் நாட்சேஸ் தயாராகி விட்டது DICKற்கு[அது அவர் பேர் தானுங்கோ] தெரியவருகிறது. நஜா, அதிகாரக் கவிழ்ப்பில் பங்கேற்கும் ஒர் கூலிப்படையினளாக இணைந்து கொள்கிறாள். அமெரிக்க ஜனாதிபதியிடம், முக்கிய தகவல் ஒன்றை அறிவிக்க செல்லும் டிக் மாத்யூ, அவர் காரினுள்ளே வைத்து சுட்டுக் கொல்லபடுகிறார்...

வானமிழந்த மின்னலாய் நிற்கும் நஜாவின் கதி என்ன?[தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் அகொதீகவின் இளஞ்சிங்கம் ஒன்று நஜாவை காப்பாற்ற தயார் நிலையில் உள்ளது] PROJECT-INSIDERS என்னவாகப் போகிறது? லயன் காமிக்ஸில் நஜா வருவாளா?

கடைசிக் கேள்வியைப் புத்திசாலித்தனமாகத் தவிர்த்து விட்டு ஏனைய மர்மங்களிற்கெல்லாம் பரபரப்பாக விடை சொல்கிறது INSIDERS காமிக்ஸ் தொடர். பெட்ரோல், ஆயுத விற்பனை, ஆட்ச்சிக்கவிழ்ப்பு,பணம் இதன் பிண்ணனியில் மறைந்திருக்கும் மாஃபியாக்களின் சதித்திட்டம் என ஜெகஜ்ஜால சொக்குப்பொடி போடுகிறார் கதாசிரியர், JEAN CLAUDE BARTOL. ஸ்பெயின் நாட்டில் பிறந்த இவர் சட்டப்படிப்பில் பட்டதாரி ஆவார். பின் பாரிசில் செய்தியாளார் ஆவதற்குரிய படிப்பினை மேற்கொண்டார். 1985 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் ரிப்போர்ட்டராக பணியாற்றிய இவர் சூடான செய்தி அறிக்கைகளை உருவாக்கினார். RICH HOCHET அல்லது ரிப்போர்ட்டர் ஜானி தொலைக்காட்சி தொடரிற்கு சின்னத்திரைக்கதை எழுதியுள்ளார். INSIDERS இவரது முதலாவது காமிக்ஸ் தொடராகும்.

கதையின் சித்திரங்களை வரைந்தவர் RENAUD GAREETA இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். காமிக்ஸ் உலகிற்குள் வருமுன் 10 வருடங்கள் சினிமாவிலும், விளம்பரத்துறையிலும் பணியாற்றியவர். தன் மனதின் நீங்காத விருப்பமான காமிக்ஸிற்கு சித்திரங்கள் வரைவதை 1996ல் ஆரம்பித்தார். தான் தளர்ந்து போன போதெல்லாம் தன்னை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்தவர்கள் தன் பெற்றோர்களே என நன்றியுடன் நினைவு கூருகிறார்.

INSIDERS காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பம் 2002ல் வெளியாகியது. இதுவரை 6 ஆல்பங்கள் வெளியாகி உள்ளன. இப்பதிவிற்காக நான் முதல் 2 ஆல்பங்களையும் படித்தேன். கதை, சித்திரங்கள் தவிர்த்து, சித்திரங்களிற்கு வண்ணமிடலும் ஒர் துறையாக காமிக்ஸ் உலகில் இருப்பது ரசிகர்கள் அறிந்ததே. [லயன் காமிக்ஸில் வண்ணமிடல் துறைக்குப் பொறுப்பு கிங் விஸ்வா,ரஃபிக்,ஜோஷ் எனும் வெற்றிக் கூட்டணி] 1வது ஆல்பத்திற்கு SCARLETT என்பவரும், 2ம் ஆல்பத்திற்கு CHRISTIAN FAVRELLEம் வண்ணமிட்டுள்ளார்கள், இருவரின் பணியிலும் சிறப்பாக கூற எதுவுமில்லை. முதலாம் பகுதியில் கதையில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது ஆல்பத்தில் குறைந்தாலும், அதில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகள் பக்கங்களை நகர்த்த உதவுகின்றன. அதே போன்று சித்திரங்களும் சுமார் ரகம் தான். என்னதான் ஆக்ஷன் காட்சிகளில் தன் திறமையை GARRETA சிறப்பாக வெளிப்படுத்தினாலும்,சில தருணங்களில் ஒர் பாத்திரத்தின் முகச்சாயல், இது யார்? என என்னை குழப்புமளவிற்கு மாற்றம் அடைந்திருந்தது. கதையில் மீண்டும், மீண்டும் திருப்பிக்கூறப்படும் லாப, நட்டக் கணக்குகளை சிறப்பாக எடிட் செய்து, ஒர் எளிய மொழி நடையில், லயன் காமிக்ஸ் இதனை வெளியிட்டால் , இத் தொடர் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.

ஆல்பத்தின் தரம்*****"சார், விஜயன் சார், அகொதீக தலை டாக்டர் செவனோடு கொஞ்சூண்டு வெளயாடிட்டு வந்திடுறன், கதவைத்திறங்க... ப்ளீஸ்"

போட்டிகள்

1- பதிவில் நஜா ஒர் வினோதமான பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள் அப்பயிற்சி என்னவாக இருக்கும்?

2- ஒப்பற்ற தலைவரும்,நிகரற்ற வேங்கையுமான டாக் செவனை செல்லமாகச் சீண்டிப் பாத்திருக்கிறாள் பைங்கிளி நஜா[.. வாட் ஸ்வீட் நேம்] அந்த வண்ணக்கிளிக்கு பதிலடி கொடுக்க வேண்டாமா, நஜாவிற்கு ஆதரவாகவோ, கண்டனமாகவோ உங்கள் கவிதைகளை, பன்ஞ் டயலாக்குகளை எடுத்து விடுங்கள்."ஹேய் ஹேய்,தலைவர் பேர் தான் செவனு, அவர டச் பண்ணா, நீ போற இடம் ஹெவினு" இது எப்டி இர்க்கு-இது நமீதா சொன்ன பன்ஞ்.

பதிவைப் பற்றிய உங்களின் மேன்மையான கருத்துக்களை இட்டுச்செல்ல மறக்காதீர்கள்.


ஆர்வலர்களிற்கு

அனைத்தும் பிரென்சுமொழியிலுள்ள பக்கங்கள் google translatorன் துணை தேவைப்படலாம்.

17 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவை இன்னும் படிக்கவில்லை! படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. கனவுகளின் காதலனே,

  கோட் நேம் மின்னல்'ஐ எமக்கு அறிமுகப் படுத்தியதிற்கு மிக்க நன்றி.

  நேர்த்தியாக, கோர்வையாக கவிதை நயத்துடன் எழுதி எங்கள் மனதை கொள்ளை கொள்வதே உங்கள் வாடிக்கையாக போய் விட்டது. என்ன செய்வது, நீங்கள் சார்ந்து இருக்கும் கழகம் அப்படி பட்டது ஆயிற்றே?

  சற்று கவனத்துடன் படித்தால் மட்டுமே புரியுக் கூடிய இந்த கதையை மூன்று வருடங்களுக்கு முன்பே இரண்டு பாகங்களாக லயன் காமிக்ஸ் இதழில் வெளி இட திரு விஜயன் முயன்றார். ஆனால், சில பல காரணங்களால் அவர் அவ்வாறு செய்ய வில்லை. காரணங்கள் என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.

  இந்த கதையை டவுன்லோட் செய்யும் ஆர்வம் வந்து விட்டது. (நான் இதுவரையில் எந்த கதையையும் நான் டவுன்லோட் செய்தது இல்லை). ஆனால், நஜா'வுடன் மஜா'வான இந்த பதிவை படித்ததும் முழு கதையையும் படக்கும் ஆர்வத்தை ஏற்படித்தி விட்டீர்கள்.

  ஆள் கடத்தல், உலக அரசியல், உள்-நாட்டு குழப்பம், என்று மிகவும் சிறப்பாக இருக்கும் இந்த கதையை வெளியிட்டால் லயன் காமிக்ஸ் இதழுக்கு மீண்டும் ஒரு ஹிட் தொடர் கிடைக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க இயலாது.

  //அதில் வெளியாகிய அடுத்த வெளியீடு- கோட் நேம் மின்னல் -முதல் பாகம் பற்றிய அறிவிப்பும் ஞாபகத்திற்கு வரலாம். இப்பதிவு INSIDERS எனப்படும் கோட் நேம் மின்னலைப் பற்றியது// முதல் இதழின் பெயர் கோட் நேம் மின்னல், இரண்டாவது இதழின் பெயர் "கானகத்தில் கருப்பு தங்கம்" ஆகும். என்ன ஒரு அதிசயம் என்றால் இரண்டு மணி நேரத்திர்ற்கு முன்பு நானும் காமிக்ஸ் டாக்டரும் இந்த இதழை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தோம். ஆச்சர்யம்.

  //DICKற்கு[அது அவர் பேர் தானுங்கோ]// என்ன ஒரு நுண்ணிய கவனிப்பு.

  //வானமிழந்த மின்னலாய் நிற்கும் நஜாவின் கதி என்ன?[தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் அகொதீகவின் இளஞ்சிங்கம் ஒன்று நஜாவை காப்பாற்ற தயார் நிலையில் உள்ளது]// யார் அது? பூரிக் கட்டையால் அடி வாங்கி மருத்துவ மனையில் இருக்கிறதே அந்த சிங்கமா?

  கிங் விஸ்வா.

  ReplyDelete
 3. விஸ்வா,

  CABINDAவை கானகமாகக் கொண்டால் பெட்ரோல் கருப்புத்தங்கம் தானே,என்ன அற்புதமான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஆசிரியர் திரு. விஜயன் என்று பாருங்கள். இரண்டாவது ஆல்பம் முழுவதும் கருப்புத்தங்க வயல்களை கைப்பற்ற இடம்பெறும் அதிரடிகள் தான்.

  பி.கு.
  என்ன கட்டையால் அடிவாங்கினாலும், எங்கே இருந்தாலும் சிங்கம் சிங்கமே

  ReplyDelete
 4. கனவுகளின் காதலனே,

  இந்த கதையை தானே ஐஸ்பர்க் காமிக்ஸ் பிரசுரத்தினர் வெளியிட முயன்றனர்? அவர்களின் இணைய தளத்தில் இந்த படத்தை பார்த்ததாக நியாபகம்.

  கதையை முழுவதுமாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 5. இதோ என் கவிதை: மீ த பர்ஸ்ட்.

  இந்த கதையின் பெயர் கோட் நேம் மின்னல்.
  குஷ்பூ'வின் ஜாகெட்டில் இருக்கு பெரிய ஜன்னல்.

  இந்த கதையின் நாயகி பெயர் நஜா.
  அவளுடன் நான் செய்ய வேண்டும் மஜா.

  நஜா'வை காப்பாற்ற துடிக்குது ஒரு இளஞ்சிங்கம்.
  ஆனால் நடக்கப் போவதோ பெரும் அசிங்கம்.

  உண்மையான ஹீரோ பேரு செழி.
  அவரு ஆடப் போற்று நஜா'வோட பல்லாங்குழி.

  இது எப்படி இருக்கு? இது எப்படி இருக்கு?
  ஹே டேன் டணக்க, ஹே டனுக்கு டக்க.

  செழி.

  ReplyDelete
 6. இதோ என் கவிதை: மீ த செகண்ட் ஆல்சோ. (இது எப்படி)

  இரண்டாவது கதையின் பெயர் கானகத்தில் கருப்பு தங்கம்.
  அதை காப்பற்ற துடிக்குது ஒரு இளஞ்சிங்கம்.

  கிடைக்குமா அவருக்கு ஒரு வாய்ப்பு?
  தீருமா அவரது பருவ தவிப்பு?

  தலைவர் பேரு டாக்டர் செவன்னு.
  அவரு அடிச்சா போயிடும் உங்க நினைவு.

  ReplyDelete
 7. செழி,

  சூப்பர் கவிதை,தற்போதைக்கு உங்களிற்கு தான் ஃபர்ஸ்ட் பிரைஸ்
  //உண்மையான ஹீரோ பேரு செழி.
  அவரு ஆடப் போற்று நஜா'வோட பல்லாங்குழி.//

  நஜாவின் பல்லாங்குழியோ பெரும் சுழி
  அதனுள் வீழ்ந்தால் மீள இல்லை வழி..

  ReplyDelete
 8. கனவுகளின் காதலனே,

  என்ன ஒரு ஆச்சர்யம். உங்களுக்கே இது தெரிய வில்லையா? அப்படியானால் இந்த பதிவு பாதி வெற்றி அடைந்து விட்டதாக கருதுகிறேன்.

  செழி, உங்களின் கருத்தும் தவறு.

  ReplyDelete
 9. கலிகாலமய்யா இது. அவ்வளவுதான் சொல்வேன் இப்போதைக்கு.

  ReplyDelete
 10. அட, கனவுகளின் காதலர் ஒரு நாள் முன்பே பதிந்து விடீர்கள் போல இருகிறதே....

  மின்னல் அல்லது insider தொடரை சிறிது படித்து இருக்கிறேன். ஏனோ சித்திரங்களோ, கதை சொல்லும் பாங்கோ அவ்வளாவாக லயிக்க வில்லை. ஒரு வேலை பெண் சிங்கங்களை எப்போதும் மாடஸ்டியுடன் ஒப்பிட்டு பார்க்கும் மன பக்குவம் இருப்பதால், சில குறைகளுடன் உள்ள மின்னலை (கவனிக்கவும்: கதைகருவில் மட்டும்), பிடிக்காமல் போய் இருக்கலாம். உங்கள் முன்னோடதிர்க்கு பிறகு, மீண்டும் ஒரு முறை மொத்தத்தையும் படித்து விட்டு கருத்து பதிக்கிறேன். கதை கருவை வைத்து பார்க்கும் பொது லயன் காமிக்ஸில் இது இனிமேல் தோன்ற வாய்ப்புகள் மிகவும் கம்மி என்றே எண்ணுகிறேன்.

  // தற்பொழுது தமிழில் வெளியாகி கொண்டிருக்கும் 3 காமிக்ஸ்கள் //
  அன்பர்கள் ககோகு மற்றும் சிவ் வருத்தமடைய போகிறார்கள். இன்னொரு சுதேச கோமிக்சான தேசமலர் வெளி வருவதை (அது எவ்வொரு தரத்தில் இருந்த படியும்) சிவ் சமீபத்தில் பதிந்து உள்ளாரே

  // அருமை அண்ணன் // இன்னும் வயசு பிரச்சனை முடியல போல இருக்கே :)

  // திரு.விஜயன் அவர்கள் வழமைபோலவே தாமதத்திற்கு மனம் வருந்துவார் //
  கவலை படாதீர்கள் காதலரே... இப்படி எவ்வளோவோ ஆண்டுகளாக பழகி புழுத்து போன விஷயம் அது....... அதனால் எதிர்பார்ப்புகள் அவ்வகையிலே தான் இருக்கும் :)

  // அகொதீகவின் இளஞ்சிங்கம் ஒன்று நஜாவை காப்பாற்ற //
  அப்ப அது நாந்தேன் :)

  // வண்ணமிடல் துறைக்குப் பொறுப்பு //
  ஆமாம் குருட்டு உலகத்தில், நான் தான் வெள்ளை என்று கூறி கொண்டது போல... லயன் முத்துவை பொறுத்த வரை கருப்பு வெள்ளை தான் வாழ்க்கை என்று ஆகி போயிற்றே காதலரே...

  குத்துபாட்டுக்கும் நமக்கும் எவளவோ தூரம், ஜோஸ் அளவிற்கு வர முடியாவிட்டலும், என்னால் முடிந்தது....

  எங்க தலைவனுக்கிட வச்சுக்காத நஜா...
  அப்புறும் போயிடுவ நீ பேஜா (ர்)
  ஆடைகளை களைந்திடுவோம் பீஸ் பீசா... (;) )
  பொம்பளையா போயிட்ட ஓடி போ நீ சரசா...

  என் பதிவுக்கு மீண்டும் சுட்டி அமைத்து என்னை புளகாங்கித படுத்தி விடீர்கள்.. உங்களை போன்ற அன்பர்களே, பதிவுலக பயணத்தின் சரியான துணை. நன்றிகள் கோடி.

  எப்படி இந்த பதிவை நான் கவனிக்க தவறினேன் என்று தெரியவில்லை... காதலரே, நீங்கள் முதலில் பதிவிடும் பொது தேதியை தவறுதலாக பின்னோக்கி அமைத்துவிட்டு, பிறகு சரி பண்ணினீர்களா ? ஏனென்றால் feeds ல் இன்னும் உங்கள் முன்னோட்ட பதிவே இருக்க அது ஒன்றே காரணமாக இருக்க முடியும். அதனாலேயே நான் பதிவை தாமதமாக பார்க்க வேண்டி போனது..

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 11. ரஃபிக்,

  என்ன நடந்தது என்று தெரியவில்லை, நான் பலமுறை முயன்றும் பார்த்து விட்டேன், இப்பதிவின் feeds நண்பர்களின் வலைப்பூவில் இடம்பெற மறுக்கிறது. உங்கள் வலைப்பூவில் வெளிவந்த தேர்தல் பற்றி இன்று சேர்த்திருக்கிறேன். எது எவ்வாறாக இருப்பினும் நண்பர்கள் பதிவினைப்படித்து கருத்துக்களை கவிதைகளை போட்டு தாக்கி விட்டார்கள், தமிழ் ஷேக்ஸ்பியர் இன்னும் கவிதையுடன் வரவில்லை, பல்லாங்குழி நஜாவால் சீண்டப்பட்ட டாக்செவனும் கவிதையுடன் வரவேண்டும் என்பதே என் அவா.

  ReplyDelete
 12. இன்னைக்கு ரிலீஸ் ஆன தமிழ் படம் கஜா.

  அசின் விக்ரம் சேந்து நடிச்ச படம் மஜா.

  குத்து பாட்டு நடிகை பேரு சுஜா.

  இந்த கதை நாயகி பேரு நஜா.

  காமிச்கியல் நண்பர் பேரு ரபிஃ ராஜா.

  டாக்டருக்கு புடிக்காது யாரு தூக்குனாலும் கூஜா.

  டன் டணக்க டன் டணக்க டன். எதிரிங்க எல்லாம் ஓடப் போறாங்க ரன்.

  டன் டணக்க டன் டணக்க டன். எதிரிங்க மீசையில எல்லாம் மண்.

  ReplyDelete
 13. மஸா டைம்ஸ் ஃப்ளாஸ் இன்ஃபோJanuary 31, 2009 at 10:48 AM

  மின்னல் செய்தி.

  தமிழ் ஷேக்ஸ்பியரின் பேனா பழுதடைந்து விட்டது என்னும் ஒர் சிறிய காரணத்தினாலேயே அவரின் கவிதைகள் இன்னமும் இங்கு இடம் பெறவில்லை. இக்கால அவகாசத்தினை தங்களிற்கு சாதகமாக உபயோகித்து கவிதை பாடிச்செல்லும் பேரரசுக்களிற்கெல்லாம் தமிழ் ஷேக்ஸ்பியரின் பேனா தக்க தருணத்தில் பதிலடி வழங்கும்..

  ReplyDelete
 14. எனக்கு மற்றவர்களை போல கவிதை எழுத வராது. அதனால் நான் பதிவை பற்றி பேசுகிறேன்: இந்த கதை லயன் காமிக்ஸ் இதழில் வராமல் போனாலும் இந்த புத்தகத்தின் அட்டை படத்தை என்னுடைய நண்பன் வீட்டில் பார்த்து இருக்கிறேன். மதுரையை சேர்ந்த அவன் லயன் காமிக்ஸ் அலுவலகம் சென்று இதனை எடுத்து வந்ததாக கூறினான்.

  அப்போது கூட முத இதழ் அட்டை படம் தான் இருந்ததாம். அதைப் போலவே எஜன்ட் ஜெஸ் லாங் தோன்றும் நண்டு குகை மர்மம் என்ற அட்டை படமும் அங்கு பார்த்தேன். இவை எல்லாம் லயன் / முத்து காமிக்ஸ்'ல் வராதவை.

  மற்றபடி இது ஒரு சிறப்பான பதிவு. உங்கள் நடையே ஒரு கவிதை போல இருக்கும்போது எதற்கு இன்னொரு கவிதை?

  எப்படி?

  அம்மா ஆசை இரவுகள் விசிறி.

  ReplyDelete
 15. தலைவரே,

  உலகமே ஒரு நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள்.

  தத்துவம் நம்பர் முன்னுத்தி எட்டு.

  ReplyDelete
 16. From The Desk Of Rebel Ravi:

  very good post on the insiders. the depth in your writting amazes me. keep on doing and enthuse us with different posts such as this.

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 17. வலைப்பூவிற்கு வருகை தந்து, பதிவினைப்படித்து, உங்கள் மேலான கருத்துக்களையும், கவிதைகளையும், கானாப்பாடல்களையும் விட்டுச்சென்ற அன்புள்ளங்களிற்கு என் நன்றிகள். உங்கள் அன்பான ஆதரவை மேலும் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

  தலைவரே, முதலில் வந்துவிட்டு இன்னும் பதிவைப்பற்றிய கருத்துக்களைப் பதியாவிட்டால் கழகத்தலைவரின் நற்பெயரிற்கு களங்கம் வந்திடாதா?
  வாருங்கள் விரைந்து..

  விஸ்வா, மாடஸ்டியின் சமீப கால கதைகளுடன் ஒப்பிடுகையில், நஜாவின் கதைகள் உண்மயிலேயே வெற்றி பெறும். ஆனால் இதனை ஆசிரியர் ஏற்றுக் கொள்வாரா? சிலவேளை 2020 ஜொலி ஸ்பெஸலிற்க்காக கதையினைக் காத்து வருகிறாரோ, அவரிற்கே வெளிச்சம். டவுன்லோட் செய்து நீங்கள் கதையைப் படிப்பீர்கள் என்று கூறியதே, என் மனது குளிர்ந்து விட்டது. இந்தியா வந்தால் உங்களுடன் ஒர் பீர் பார்ட்டி நிச்சயம்.[தலைக்கு தெரிய வேண்டாம், ஒழுங்கு நடவடிக்கையை அமுல் படுத்திவிடுவார்]

  காகொககூ அன்பரே, இன்னுமா நீங்கள் கதையினைப் படித்து முடிக்கவில்லை, அல்லது கடற்கரையில் நஜாவுடன் காதல் டூயட் பாடுகிறீர்களா. கொடுத்து வைத்தவர் போங்கள்.

  செழி, கவிதைகள் யாவும் சூப்பர். உங்கள் கவிதைகளைக் கண்டு பல கவிஞர்கள் இங்கு கவிதை எழுதாமல் வாபஸ் வாங்கி விட்டார்கள் என்பதை அவதானித்தீர்களா.

  ஜோஷ், கலிகாலம் தான் இருந்தாலும் என்ஜாய் பண்ணுவோம். யார் வூட்ல பார்ட்டி, ஆஆஅ ஜோஷ் வீட்ல பார்ட்டி!!!

  ரஃபிக், தேசமலர் பற்றி குறிப்பிடாத பிழை பொறுத்தருள்க. செம கானாப்பாட்டு, இசையமைத்து,கடற்கரை ஓரமாக ஒர் கெட்ட ஆட்டம் போடவேண்டியதுதான் பாக்கி.தற்போது வெளியாகும் மாடஸ்டி கதைகளின் தரம், உண்மையிலேயே சொல்லிக்கொள்ளுமளவிற்கு இல்லை. காலம் விடை சொல்லட்டும்.

  அம்மா ஆசை இரவுகள், உங்கள் கருத்தின் மூலம் என்னை மகிழ்வித்துவிட்டீர்கள். தொடர்ந்து, தயங்காது உங்கள் கருத்துக்களை பதிந்திட வேண்டுகிறேன். இதே கதையின் அட்டைப்படத்தினை தேடிச்சென்ற இரு சிங்கங்களின் சாகசக்கதையும் விரைவில் வெளிவரலாம்.

  REBEL RAVI,முதல் தடவையாக என் பதிவிற்கு உங்கள் மேன்மையான கருத்துக்களினை பதிந்ததிற்கு முதலில் நன்றி. நிச்சயமாக இந்த இளம்சிங்கம் தாடி முளைக்க ஆரம்பிக்கும் வரையில் புதிய கதைகளை அறிமுகப்படுத்த தவறாது.

  மஜா நிருபர்,பேனா பழுதடைந்த சிங்கம், தொடர்ந்து ஆடுங்கள். நிறுத்தக்கூடாது. இது நாட்டாமையின் உத்தரவு.``என்றா பசுபதி’’

  ReplyDelete