Sunday, January 25, 2009

முன்னோட்டம்

கிசுகிசு

விக்கிரமாதித்தன் தோளில் சுமந்து செல்லும் பைங்கிளியின் பெயரைக் கொண்ட நகரத்தின் கதைக்கு ஏகப்பட்ட டிமாண்டாம். வலம், இடம், கிழக்கு, தமிழினி என பலபக்கங்களில் இருந்தும் எப்போது அடுத்த பகுதி என மெயில்,தொல்லைபேசி, நேரில் என அம்புகள் தொடர்ந்து வந்த வண்ணமாயிருக்கும் நிலையில்,கனவு உலகை வென்ற மாவீரன், தமிழ் ஷேக்ஸ்பியர் என்ற பட்டங்களை ஏற்கனவே தனதாக்கி கொண்ட காவியத்தின் ஆசிரியர், அப்பதிவின் குதிரை வீரர்களில் ஒருவரையும், ஒர் இளம் பெண்ணையும் வைத்து ஒர் திவ்யமான பாடலை புணைந்துள்ளாராம். எழுதிய பாடலை அவர் உத்தம தமிழ் கவிஞரிற்கு அனுப்ப, ஆம்ஸ்டர்டாம் ஸ்ட்ராங் பீரை பருகியவாறே அதனைப் படித்து ரசித்த அவர் மெகா புளகாங்கிதம் அடைந்து, இது ஆஸ்காரிற்கு தெரிவு செய்யப்படும் என அடித்துக் கூறியதுடன் பாடலை ஆஸ்கார் கமிட்டிக்கு கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.


தமிழ்நாட்டில், அகழ்வாராச்சியில் கிடைத்த ஏடுகளினை படித்த பெருசுக்கள், காமிக்ஸ்பதிவர் ஒருவரின் கணணி கிராஷ் ஆகும் எனவும், ஜனவரி 26ம் திகதி பதிவிடாத காமிக்ஸ் பதிவர்கள் சொர்க்க வாசலை காண்பார்கள் எனவும் அதில் எழுதப்பட்டுள்ளதை தெரியப்படுத்தியிருக்கிறார்கள், பட்சி ஒன்று இதனை, நேரில் இருப்பதை காதலிக்காமல் தூக்கத்தில் வருவதை காதலிப்பவர்க்கு தெரியப்படுத்த, கிலியாகிய அவர் மலையாள பகவதி பூஜைக்கு உடனடி ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.

6 comments:

 1. சீக்கிரம் வாம்மா மின்னலு.

  ReplyDelete
 2. அப்பா நான் கிளம்புறேன் பா.... பின்ன என்ன, மின்னளுங்குறீங்க, முன்னோட்டம்குறீங்க.. சரியா கண்ணுலே காட்ட மாட்டேன்குரீங்கலேப்பு....

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்
  ரா-கா|SDLC

  ReplyDelete
 3. என்ன இது? ஒரே மர்மமாய் இருக்கிறதே? எனக்கு கூட இது போன்று பல மர்ம ஈமெயில்கள் வந்த வண்ணம் உள்ளன. இது வெளிநாட்டு சதி என்று மட்டும் தற்சமயம் தெரிகிறது. இந்த திட்டமானது அகொதீகவில் தீட்டப்படவில்லை என தெளிவாக தெரிகிறது.

  இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 4. 'மின்னலெனக் கொல்'- அடடா! தலைப்பே அசத்துகிறதே! விரைவில் எதிர்பார்க்கிறோம்!

  கிசுகிசு கிலியேற்படுத்துகின்றனவே! ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. From The Desk Of Rebel Ravi:

  is it code name minnal?

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

  ReplyDelete
 6. இந்த கண்களே ஆயிரம் கதை சொல்லுதே........

  ReplyDelete