இத்தாலிய சித்திரக்கதை ரசிகர்களின் அபிமான ஹீரோக்களில் ஒருவராகிய டைலான் டாக் அவர்களின் கதையான ஜானி ஃப்ரீக் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு தரவிறக்கி படிப்பதற்கு வசதியாக இணையத்தில் கிடைக்கிறது. மிகவும் எளிமையான, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத இக்கதை மென்மையான உள்ளங்கள் கொண்ட வாசகர்களின் மனங்களை கனக்க வைத்து, விழிகளின் ஓரத்தில் துளியாய் ஒரு கண்ணீரை உருவாக்க வல்லது. ஆர்வம் உள்ளவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம், தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.
தொடரும்
4 years ago
மிக்க நன்றி நண்பரே! தமிழுக்கு இது வந்தால் கண்டிப்பாக ஆதரிக்க தயாராக இருக்கிறோம்! பதிப்பிக்க நம்ம லயன் காமிக்ஸ் முயற்சி செய்தால் கண்டிப்பாக வாங்கி விடுகிறோம்!
ReplyDeleteசார் பதிவிரக்கம் செய்யமுடியவில்லை .....உதவவும்
ReplyDeleteநண்பர் தேவாரத்திடம் இரவல் வாங்கி படித்த கதை. டைலான் டாக் வரிசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை களம். மிகவும் ரசித்த ஒன்று. தமிழில் படிக்கும் வாய்ப்பு, விடுவேனா :P
ReplyDeleteதமிழாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றிய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். :)
தமிழ் பேசும் மார்ஜானே சத்ரபி வாழ்க :P
ReplyDelete//மிகவும் எளிமையான, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத இக்கதை மென்மையான உள்ளங்கள் கொண்ட வாசகர்களின் மனங்களை கனக்க வைத்து, விழிகளின் ஓரத்தில் துளியாய் ஒரு கண்ணீரை உருவாக்க வல்லது.// என்னா ஒரு கொலவெறி, டிலான் டாக் பத்தி எங்களுக்கு தெரியாதா? இப்பதான் டவுன்லோட் போட்டிருக்கேன், அடிக்கடி இப்படி இன்ப அதிர்ச்சி தரணும்! யென் செல்லம்.
ReplyDeleteஇதயம் ஒருமுறை நின்று பின் துடித்தது! கடைசியில் தன் சகோதரன் பிழைக்கட்டும் என எண்ணும் உயர்ந்த உள்ளம் படைத்தவர் இந்த கதையின் நாயகர் என்பது எவ்வளவு அருமையான நிறைவு? படிக்க வகை செய்த நண்பா நன்றிகள் பல! ஆங்கிலத்தில் இந்த பதிப்பு வைத்து இருந்தாலும் தமிழில் படிப்பதுபோல் வரவில்லை! உங்கள் பதிவை பார்த்த பின்னரே மற்ற டைலான் டாக் கதைகளையும் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். நன்றிகள் மறுமுறையும்!
ReplyDeletesupper
ReplyDeleteஅட உண்மையிலேயே டச்சிங் கதை! டிலான் டாக் என்றதும் பயங்கர விஷயங்களே மைன்டுக்கு வந்துட்டு போச்சு, ஆனாலும் உண்மையிலேயே வித்தியாசமான தளம், அருமையான மொழிபெயர்ப்பு, Keep it Up!
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி காதலரே
ReplyDeleteதாங்கள் இதுபோல அடிக்கடி இணையத்தில் சென்று எங்களுக்காக கண்டுபிடித்து தரவேண்டும் என்று ஒரு அன்பு வேண்டுகோள் முன் வைக்கிறேன் நண்பரே நன்றி
தங்களின் கொம்புக்குதிரைக்காகவும் காத்திருக்கிறேன் காதலரே :))
.
DYLAN DOG - விரைவில் எதிர்பாருங்கள் தமிழில் - "நைலான் நாய்" - "புகழ் பெற்ற இத்தாலிய சித்திரக் கதைகள் இப்போது உலகத் தமிழ் காமிக்ஸில் முதன்முறையாக" ... :-) :-)
ReplyDeletePlease clear my below doubts.
ReplyDelete1. At the start of the story it is said johnny is dumb then how he is able to speak in the later half of the story
2. It is seen johnny comes and sleep between Dylan and his lover in the bed. How is this possible? As far as i know they are in the girl house and johnny in dylan house.
3. I felt if the story was in color it would have been superb yet it is still an awesome story.
4. Can anyone provide me with the link for remaining stories of Dylan in english.
Waiting for ur view and answers
விக்னேஷ் குமார், ஒரு கதையில் அனைத்து விடயங்களுமே தெளிவாக சொல்லப்படாது வாசகர்களின் தேடலின் வழியான விடைகாணலிற்காக விடப்படும் தருணங்கள் உண்டு. உங்கள் முதல் சந்தேகத்திற்கான விடை அவ்வாறான ஒரு தேடலினதும், கதையின் புரிதலுடனுமே உங்களை வந்தடையும்... அதை நீங்களே காண வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் முயற்சி செய்யுங்கள். இந்தக் கதையின் ஜானி அதிகம் பேசும் வசனம் "ஒரு கேள்வி? சொர்க்கத்தில் பிராணிகளிற்கு இடமுண்டா" என்பதாகவிருக்கும். முக்கியமான அர்த்தம் உள்ள வசனம் அது. கூடவே கதையின் ஆரம்பத்திலிருந்து 14 பக்கங்கள், அதிலும் குறிப்பாக ஆறாவது பக்கத்தில் ஜானி வரைந்திருக்கும் சித்திரம், பின்னர் மருத்துவமனையில் ஜானி வரையும் சித்திரம் ஆகியவற்றின் ஒப்பிடல்களும் உங்களிற்கு சிலவற்றை உணர்த்தக்கூடும். அந்த உணர்தலின் வழியேதான் ஜானியின் வாழ்வு குறித்த ஒரு சித்திரத்தை நீங்கள் தீட்டிக் கொள்ள முடியும். அவன் திக்கி திக்கி சொல்லும் சில சொற்கள் எவ்வாறு சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
ReplyDelete57 ம் பக்கத்தில் டைலான் சக்கர நாற்காலியில் ஜானியை அவன் அறைக்கு அழைத்து வருகையில் அந்த அறையின் மூலையில் சில பெட்டிகள் இருக்கும், இதே பெட்டிகளை பெரிதாக 63 ம் பக்கத்தில் நீங்கள் காணலாம். சித்திரங்களை வாசிப்பது வரிகளை வாசிப்பதை போலவே மிக முக்கியமான ஒன்று.ஸ்டீல் க்ளோ பாரம்பரியம் அதை விரிவாக்க உதவிடாது, நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். அது போலவே டைலான் படுக்கை அறையில் இருக்கும் சில உருவ பொம்மைகளை டைலான் வீட்டிலிருக்கும் உருவ பொம்மைகளுடன் ஒப்பிடுவதன் வழியாகவும் அந்த படுக்கை அறை நர்ஸினுடையது அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒரு பூட்டை திறப்பதற்கும், முத்தமிடலிற்கும், படுக்கை ஒன்றில் வந்து சேர்வதற்குமான இயக்கத்தினிடையில் நிறைய சம்பவங்கள் நிகழ வாய்ப்புண்டு அல்லவா. ஆகவே வீடு யாருடையது என்பதற்கும் கதையிலேயே விடை இருக்கிறது.
காலகாலமாக தமிழ் காமிக்ஸ் உருவாக்கி வைத்திருக்கும் வாசிப்பு மரபிலிருந்து உங்களை விடுவிக்க என் பதில்கள் உதவுமேயானால் நான் இப்பதிலை எழுதியதற்கு ஒரு அர்த்தம் பிறக்கும். கதையிலேயே பதில் இருக்கிறது எனும் ஒற்றை வரியுடனும் உங்கள் சந்தேகத்திற்கு நான் பதில் தருவதுடன் முடித்திருக்கவும் இயலும். ஆனால் உங்கள் கேள்வி, நீங்கல் தேடலின் ஆரம்ப படியில் நிற்பதை எனக்கு உணர்த்துகிறது. தொடர்ந்து அடி எடுத்து வையுங்கள்.
டைலான் டாக் சில இதழ்கள் வண்ணத்தில் வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனவா என தெரியவில்லை.
பேஸ்புக்கில் நண்பர் ரமேஷ் சண்முகசுந்தரம் அவர்கள் "தமிழில் படிக்க ஆசை" எனும் பக்கத்தில் சில டைலான் டாக் கதைகளை பற்றி எழுதி இருக்கிறார் அவரை தொடர்பு கொண்டால் லிங்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
உங்கள் சந்தேகங்கள் தெளிவாகியிருக்கும் என நம்புகிறேன்.
//ஸ்டீல் க்ளொ பாரம்பரியம்//
ReplyDeleteஉய்ய்ய்
:-P
In page 24 the doctor says Johnny is deaf and mute. In page 52 johnny says "Vendam". Again in page 54,57, 70 and 72 Johnny speaks. How could the doctor say something like this wrong. These were the reasons for my confusions.
ReplyDeleteWith respect to Page 57 part. I can understand the point on the image reading too. Will follow it in future,
However, I always wanted to read the story with images but sometimes i miss it due to the medium through which i read it or the time and place I read it.
Thanks for your valuable comments. Will try to look the story from your said perspective hope I can understand what you did.
All things apart. The story was superb and thank you very much for sharing such a nice story
Steel Claw Parambariyam means??????????????
ReplyDeletePlease don't think I am pestering by my comments. Its the love to understand things and to know if I have understand something correctly or wrongly. Again Thanks for your reply
ReplyDeleteவிக்னேஷ் குமார், ஜானி தன் வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையாவது டாக்டர் அந்த 24ம் பக்க டாக்டர் ? டாக்டர்கள் சொல்வதை மீறியும் அன்பு அற்புதங்களை நிகழ்த்துவது இல்லையா ? டாக்டர்கள் சொல்வது எல்லாம் இறுதியான தீர்ப்புமாகி விடாது அல்லவா! ஜானி பேச ஆரம்பிப்பது அவனிற்கு கிடைத்த ..... விடுதலையால்! அது என்ன விடுதலை என்பதை நீங்கள்தான் கதையை படிப்பதன் வழி உணர்ந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteநாற்பதாண்டு காலமாக தமிழ் காமிக்ஸ் கட்டிக் காத்து வரும் மேற்பரப்பு மேய்ச்சல் வாசிப்பையே நான் ஸ்டீல் க்ளா பராம்பரியம் என்கிறேன்.
Rightly said. Accepted
ReplyDelete