Friday, October 15, 2010

ரேப் ட்ராகன் - 23


வவ்வால் குடில்!

கபிலவிழியழகி, அசிங்கமான மொட்டைத் தலை சீனனை எண்ணிக் கொதித்து தன் வாழைத் தண்டுக் கால்களை தரையில் ஓங்கி அடித்ததால் அந்த அழகுப் பெண்ணின் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த இரு வவ்வால்களும் அவள் தலைக்கு மேலாக பறக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் கீய்ய்ய்..கீய்ய்ய் என்ற தம் கீறுப்பட்ட குரலில் தம் எஜமானியம்மாவை சாந்தப்படுத்தவும் முயன்றன.

வவ்வால்களின் கிய்ச்சாங், கிய்ச்சாங் ஒலியை தாங்கிக் கொள்ள முடியாத விரகதாப காதல் பொறாமையிலிருந்த புரட்சிக்காரன்… பீடைகளே ஒழிந்து போங்கள் இங்கிருந்து என்று வவ்வால்களை நோக்கி உரக்க கத்தினான். ஆனால் நடந்ததோ வேறு.

ரஃபிக்கின் குரலினால் கவரப்பட்ட அந்த இரு வவ்வால்களும் கபிலவிழியாளை விட்டு விலகி ரஃபிக்கின் கலங்கரை விளக்கின்மேல் வட்டமிட ஆரம்பித்தன. அவ்வாறு வட்டமிட்டவாறே அந்த இரு குறும்புக்கார வவ்வால்களும் தங்களிற்குள் பேசிக் கொண்டதை வவ்வால் மொழியிலிருந்து மொழிபெயர்த்து வாசக வெள்ளத்திற்கு வழங்குவது எமது கடமையன்றோ.

வவ் 1: மீ த பஸ்டு

வவ் 2 : மீ கடித்து விட்டு வருகிறேன்

- இந்தக் கோபுரம் சிறியதாக உள்ளது

- அளவைப் பார்த்தால் நாம் பிழைப்பு நடத்த முடியாது

- சிட்டியினதைவிட கெட்டியாக இருக்குமோ

- முட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும்

- கலங்கரை விளக்கின் அடிவாரத்தில் வட்டப் பாறைகள் தென்படுகின்றன

- ஆமாம், ஆமாம், அடிவாரத்தையும், பாறைகளையும் சூழ்ந்து புற்தரை ஒன்றும் இருக்கிறது

- எமக்கு ஒரு குடிலை அங்கு நாம் அமைத்து சல்லாபம் செய்து மகிழலாம்

- ச்ச்சீசீசீகீய்ய்ய்ய்…. உங்களிற்கு எப்போதும் இதே நினைப்புத்தான்

- தலை கீழாக தொங்குவதால் வந்த வினை, உனக்கு மட்டும் இஷ்டமில்லையா என்ன

- குறும்புக்காரர் நீங்கள்

- என் தலைகீழ் அன்பே, வா அந்தக் பாறைகளினுள் மறைந்திருந்து கொஞ்சி விளையாடலாம்

- எனக்கு வெட்கமாக இருக்கிறது

- வெட்கத்தைப் பார்த்தால் விளையாட முடியாது…ஹிஹிகீய்ய்ய்ய்ய்

இவ்வாறாக தமக்குள் உரையாடிய அந்த இரு வவ்வால்களும் புரட்சிக்காரனின் அடிவாரப் புற்தரையினுள் குடிசை கட்ட முயன்றதோடு மட்டுமல்லாது பாறைகளின் உறுதியை சோதிப்பதற்காக தமது பற்களையும், விரல்களையும் அவற்றின் மீது பதித்துவிடவே , நுண்ணிய ஊசிகள் பல தன் உயிரில் குத்தும் வலியை உணர்ந்த புரட்சிக்காரன், தன் இடுப்பை முன்னே உந்தி உந்தி வவ்வால்களை புற்தரையிலிருந்து உதறிவிட முயன்றான். குட்டிச் சாத்தான்களே, உங்களை உயிரோடு நசுக்காது நான் விடமாட்டேன் என்று குரலெடுத்துக் கத்தினான் அவன்.

ஆனால் அவனது கூச்சல்களை அந்த அறையிலிருந்த எவரும் மதித்ததாக தெரியவில்லை. கபிலவிழியாளின் கவர்ச்சியில் கட்டுண்டு கிடந்த டேனி, தன் ஈரமான உதடுகளை திறந்து… பச்சைக் கண்ணனை பற்றி இவ்வளவு நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்களே உங்களிற்கும் அவரிற்குமிடையில்…. டேனியின் வார்த்தைகள் முடியும் முன்பாகவே…. ஏதுமில்லை, இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை, அப்படி இருக்கவும் விடமாட்டேன் எனச் சீறியது புரட்சிக்காரனின் குரல்.

ரஃபிக்கை ஒரு மயக்கும் புன்னகையுடன் பார்த்த கபிலவிழியாளின் உதடுகள் அவர் என்ற சொல்லை அன்புடன் உச்சரித்தது. அவர்.. அவர்தான் என் வசீகரன், இதயத்திருடன், உள்ளம் கவர் கள்வன், காதலன், வருங்கால கணவன்… இதனைக் கூறிய கபிலவிழியாள் ஒரு கனவு நிலையை அடைந்திருந்தாள். அவள் கனவை வெட்டும் வாளாக உயர்ந்தது புரட்சிக்காரனின் குரல்.

- உன் வருங்கால கணவன் இதோ இங்கிருக்கிறான் அழகியே என்ற ரஃபிக்… உன் பச்சைக் கண்ணன் மட்டும் என் கைகளில் சிக்கினான் எனில் உன் காதலை நான் கைம்பெண்ணாக்குவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தான்.

ரஃபிக்கின் இந்த வார்த்தைகள் கபிலவிழியாள் மீது விஷ அம்புகள் போல் பாய்ந்தன. அவள் முகத்தில் படிந்திருந்த மென்மையான உணர்ச்சிகள் அவளை விட்டு நீங்கின. டேனியை தன் கைகளிலிருந்து நழுவவிட்ட கபிலவிழியாள், ரஃபிக் இருந்த பஞ்சணையை நெருங்கினாள். தமது எஜமானியம்மா பஞ்சணையை நெருங்கியதைக் கண்ட தொங்கட்டான் வவ்வால்கள் இரண்டும் பாறைகளிலிருந்து சல்லாபம் செய்வதை விடுத்து கபில விழியாளின் காதுகளில் போய் தொங்க ஆரம்பித்தன.

- அடேய், புரட்சிக்காரா என் காதலையா நீ கைம்பெண்ணாக்குவேன் என்றாய்?

- மன்னித்துவிடு அழகே, அதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.. ரஃபிக் வருத்தம் தோய்ந்த குரலில் பதில் தந்தான்.

- நான் யார் தெரியுமா?

- என் கைவிலங்குகள் கழட்டப்பட்டதும் என்னால் தழுவப்படப்போபவள் என்று கூறி ஒரு முழு மன்மத சிரிப்பை உதிர்த்தான் ரஃபிக்.

- நீ தழுவப்போவது என்பது உண்மை, ஆனால் என்னை அல்ல அற்பனே, கொடிய மரணத்தை. மென்னிக்கடி மொனிக்காவிடம் அகப்பட்ட எவரும் உயிருடன் மீண்டதில்லை என்று கூறிய கபிலவிழியாள் தன் உதடுகளை சற்று அகல திறந்தாள். அவளது நீண்ட வேட்டைப்பற்களும் சிறு குறுவாள்களைப் போல் ரஃபிக்கை பார்த்து புன்னகைத்தன.

- அழகே உன் கையால் என் ஜீவன் பிரிந்தால் அது என் பாக்யம், நீ என்னை உன் காதலனாக ஏற்காதது உன் அபாக்யம், பச்சைக் கண்ணன் என் கையில் சிக்கினால் அது அவன் துர்பாக்யம் என்று தளராமல் தொடர்ந்தான் ரஃபிக்.

- முதலில் நீ, அதன்பின் இந்த இரு பெண்கள், என் தீராத ரத்த தாகம் இன்று பூரண திருப்தியை எட்டட்டும். என் காதலின் கீர்த்திக்கு உங்கள் காமம் கரைந்த ரத்தம் அபிஷேகம் ஆகட்டும்… இதனைக் கூறியவாறே ரஃபிக்கை நோக்கி குனிந்தாள் மென்னிக்கடி மொனிக்கா.

மொனிக்காவின் அருகாமை ரஃபிக்கை எங்கோ கொண்டு சென்றது. ஒரு பெண்ணின் அருகாமை இவ்வளவு சுகத்தை வழங்க முடியுமா என வியந்தான் புரட்சிக்காரன். மொனிக்காவின் அழகிய உதடுகள் வழியாக நீண்ட அந்த இரு வேட்டைப் பற்கள்தான் எவ்வளவு அழகு.. ஆஹா.. அவை என் உடலில் பதியாதா என ஏங்க ஆரம்பித்தான் ரஃபிக்.

புரட்சிக்காரனின் அந்த ஏக்கத்தை உடனடியாக தீர்த்து வைப்பது போல் மொனிக்காவின் பற்கள் அவன் கலங்கரை விளக்கின் மீது பதிந்தது. ஆஹா என்ன சுகம் என்றவாறே திறந்திருந்த கூரையின் வழியாக தெரிந்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் ஒரு புன்னகையுடன் நோக்கினான் ரஃபிக். மொனிக்காவின் கூரான பற்கள் அவன் கலங்கரை விளக்கில் பதிந்து தந்த சுகத்தில் மயங்கிக் கண்களை மூடினான் புரட்சிக்காரன். ஒரு நொடி… இரு நொடி… சடார் என அவன் கண்கள் திறந்தன. ஆகாயத்தை மீண்டும் நோக்கின. அகல விரிந்தன. ஆகாயத்திலிருந்து அறையை நோக்கி வெகு வேகமாக விழுந்து கொண்டிருந்தன இரு ராட்சத ஆமைகள்.

10 comments:

 1. வவ்வால் பேசுவதையும் மொழிபெயர்த்துள்ளீர்களே! அருமை!

  ReplyDelete
 2. நல்லவேள....நா பஸ்டு இல்ல.
  //ஆகாயத்திலிருந்து அறையை நோக்கி வெகு வேகமாக விழுந்து கொண்டிருந்தன இரு ராட்சத ஆமைகள்//
  ஏன்ணே..ஆமை என்னைக்கு பறந்திச்சு..

  ReplyDelete
 3. நண்பர் எஸ்.கே, வவ்வால் மட்டுமா சிட்டுக்கள் பேசுவதையும் மொழிபெயர்ப்பேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கொழந்த, இன்று ரேப் ட்ராகனில் ஆமைகள் பறந்தன :) கருத்துகளிற்கு நன்றி.

  ReplyDelete
 4. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  ReplyDelete
 5. //வாரா வாரம் பரிசு மழை//

  அது இங்க ஆல்ரெடி நடந்துகிட்டு தான் இருக்கு... இந்த எபிஸோடில் கில்மா கம்மி .. இதைக் கண்டித்து, ‘மாமனாரின் இன்ப வெறி’ படத்தை டேப் தேயும் வரை பார்ப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் :-)

  ReplyDelete
 6. மீ த ஃபர்ஸ்ட்டு சொல்லிய வவ்வாலின் பெயர், கிங் விஸ்வாவோ? :-)

  ReplyDelete
 7. //சிட்டியினதைவிட கெட்டியாக இருக்குமோ//

  ஹாஹ்ஹாஹ்ஹா :-) ... சிட்டிக்கு அது இல்லையென்று தானே படத்தில் அவரே பேசுவார் ? :-) தெளிவு படுத்துங்கள் அய்யா :-)

  ReplyDelete
 8. நண்பர் கருந்தேள், மாமானாரின் இன்ப வெறி என்ன ஒரு தலைப்பு :) மாமி உயிருடன் இருக்கிறாரா :) கில்மா குறைவு மட்டுமல்ல இனி கில்மாவே இல்லை என்பதுதான் உண்மை. இனி ரேப் ட்ராகன் காதல் மொழி பேசும் ஒரு கிள்ளை. திவ்ய காதலின் பளிங்குரு. இரு மனங்களின் அன்பின் ஓயாக்காற்று. சிட்டிக்கு இருந்ததா என்பதை ஐஸிடம் கேட்டுப் பார்க்கலாம் :) கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 9. ஏன் சினிமா பற்றிய பதிவை நிறுத்தி விட்டீர்கள்?????

  ReplyDelete
 10. நண்பர் உலக சினிமா ரசிகர் அவர்களே, படங்களை குறித்து தொடர்ந்தும் எழுதுகிறேன். லத்தீன் ஆபிரிக்க இலக்கியவாதியாகிவிடும் முயற்சியில் இருப்பதால் இவ்வகையான இம்சைகளும் இடம் பெறுகிறது. வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete