Monday, July 26, 2010

பொம்மைகளின் இதயம்


பதினேழு வயதை எட்டிவிடும் இளைஞன் Andy, அவன் சிறுவயதில் வாஞ்சையுடன் அரவணைத்து விளையாடி மகிழ்ந்த பொம்மைகளை முகட்டறையில் போட்டுவிட்டு தன் கல்லூரி வாழ்வை ஆரம்பிப்பதற்கு தயாராகிறான்.

முகட்டறையில் பொம்மைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக அவற்றை ஆன்டி ஒரு பையினுள் இட்டு வைக்கிறான். ஆனால் எதிர்பாராது குறுக்கிடும் சில திருப்பங்களால், பொம்மைகள் இருக்கும் அந்தப் பையை குப்பை எனக்கருதி அதனை தெருவில் வீசிவிடுகிறாள் ஆன்டியின் தாய்.

தாம் தெருவில் குப்பையாக வீசப்பட்டதை தாங்கிக் கொள்ளமுடியாத ஆன்டியின் பொம்மைகள், சிறுவர்கள் பராமரிப்பகம் ஒன்றில் தம் வாழ்வை தொடரலாம் என்ற தீர்மானத்திற்கு வருகின்றன….

சிறுவர்களின் கனவு மற்றும் கற்பனை உலகானது என்றும் புதிதானதும், வியப்பானதுமான கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறான ஒரு கற்பனைக் கதையுடனேயே Toy Story 3 திரைப்படம் ஆரம்பமாகிறது.

தன் பிரியத்திற்குரிய பொம்மைகளை நாயகர்களாகக் கொண்டு சிறுவன் ஆன்டி உருவாக்கி மகிழும் அந்தக் கதையே சிறுவர்களினது கற்பனை உலகில் பொம்மைகள் வகிக்கும் பங்கை அழகாக எடுத்துக் கூறுகிறது. அந்தக் கதையில் இருந்த கற்பனையின் வீச்சு, திருப்பம், நகைச்சுவை, விறுவிறுப்பு ஆகியவை சற்றும் குறைந்துவிடாது மனதை நெகிழ வைத்து நகர்கிறது இயக்குனர் Lee Unkrich இயக்கியிருக்கும் டாய் ஸ்டோரியின் மூன்றாம் பாகம்.

தம் நேசத்திற்குரிய ஆன்டியின் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டதாலும், தொடரும் சில நிகழ்வுகள் ஆன்டியின் பொம்மைகளிற்கு சாதகமாக அமையாததாலும், அப்பொம்மைகள் எடுக்கும் அவசரமான ஒரு முடிவு அவற்றை சிறுவர் பராமரிப்பகத்தில் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க வைக்கிறது. இந்நிலையில் மனிதர்களை மிகவும் நெருங்கிவிடுகின்றன இப்பொம்மைகள்.

toy-story-3-2010-6621-1217094912 உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவசர முடிவெடுத்து மீளமுடியாத சுழலில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள் போலவே, தமது புதிய வாழ்வு ஒரு சித்திரவதை என்பதை பொம்மைகள் மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கின்றன. அந்த வாழ்விலிருந்து தம்மை திசைமாற்றிக் கொள்ள அவை விரும்பும்போது தாம் சூழ்நிலையின் கைதிகளாக மாற்றிவிடப்பட்டிருப்பது அப்பொம்மைகளிற்கு புரிய ஆரம்பிக்கிறது. அன்பிற்கு மட்டுமே கைதிகளாக இருக்க விரும்பும் அப்பொம்மைகள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றன.

சிறுவர் பராமரிப்பகத்திலிருந்து ஆன்டியின் பொம்மைகள் தப்பிச் செல்லும் சிறையுடைப்பைப் போல ஜாலியான, சஸ்பென்ஸ் நிறைந்த ஒன்றை நான் சமீப காலத்தில் அனுபவித்ததேயில்லை. பராமரிப்பகத்தில் இருக்கும் கரடி பொம்மையான Lotso, ஒரு ஜெண்டில்மேன் தாதா. அந்தக் கரடி தாதாவின் அடியாள் பொம்மைகளின் கட்டுக் காவலிலிருந்து தப்பிச் செல்வதற்காக ஆன்டியின் பொம்மைகள் இயற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றும் அபாரம். இச்சிறையுடைப்பின் ஒவ்வொரு நிலையும் களிப்பின் எல்லைக்கு ரசிகனை இட்டுச் செல்ல முயற்சிக்கிறது.

பரபரப்பாக சிறை உடைப்பு நடந்து கொண்டிருக்கையில், ஸ்பானிய மொழி பேசுபவராக மாறிவிடும் Buzz Lightyear பின்னி எடுக்கிறார். அவர் பேசும் ஸ்டைலே சிரிப்பை வரவழைத்து விடுகிறது. இது போதாதென்று அவர் ஆடும் நடனங்கள் எல்லாம் அட்டகாசம் . அந்த நடன அசைவுகளில் இருக்கும் அழகே பிக்ஸாரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சான்றாக அமைந்து விடுகிறது. கவ் கேர்ல் ஜெசியுடனான காதல் காட்சிகளில் காதல் மன்னனாக பிய்த்து உதறுகிறார் பஸ் லைட்இயர்.

toy-story-3-2010-6621-471123531 கதையில் வில்லனாக உருவெடுக்கிறார் கரடி பொம்மை லொட்சொ. திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக இப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மென்மையாக, அழகாக வில்லத்தனம் செய்ய முடியுமா என்பதனை லொட்சோவிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். திரைப்படத்தில் இப்பாத்திரத்திற்கு வழங்கப்படும் முடிவானது அவர் ரசிகர் என்றவகையில் என் மனதினை வேதனைப்படுத்துகிறது. கதை இலாகாவாவது இந்தக் கரடியிடம் கொஞ்சம் இரக்கமாக நடந்து கொண்டிருக்கலாம். லொட்சொவிற்கு குரல் வழங்கி உயிர்ப்பூட்டியிருக்கும் கலைஞர் Ned Beatty ன் திறமை சிறப்பானது. திரைப்படத்தில் எனக்குப் பிடித்த பாத்திரமாக இருப்பவர் கரடி லொட்சொதான்.

Barbie மற்றும் Ken பொம்மைகள் திரைப்படத்தின் அருமையான புது வரவுகள். கென் பாத்திரத்தை எப்படியான ஒன்றாக சித்தரிக்க விரும்பியிருக்கிறார்கள் என்பது தெளிவு. அப்படி அது தெளிவுறாவிடிலும் கென் எழுதும் கடிதத்தை பார்ப்பதன் மூலம் அது தெள்ளத் தெளிவாகிவிடும். பார்பியின் கடைக்கண் பார்வையை பெற அவர் அடிக்கும் டயலாக்குகள் கிச்சு கிச்சு. பார்பியை அசத்துவதற்காக அவர் நிகழ்த்தும் Catwalk கலக்கல். அதேபோல் கென்னின் விருப்பத்திற்குரிய ஆடைகளை கிழித்து அவனிடமிருந்து ரகசியங்களை கறக்கும் பார்பி, தற்கால மனைவியர் சமூகத்தின் அச்சு அசல் பிரதிநிதி என்றால் அது மிகையாகாது.

கரடி லொட்சொவின் பிளாஷ்பேக் [அதனை சிரிப்பை தொலைத்த ஒரு கோமாளி பொம்மையை கொண்டு சொல்ல வைத்தது], நடு இரவில் தன்னந்தனியாக ஊஞ்சலில் அமர்ந்திருந்து வானில் காயும் நிலவை ஏக்கத்துடன் பார்க்கும் Big Baby, ஆன்டிக்கும் பொம்மைகளிற்குமிடையிலான இறுதிக் காட்சிகள் போன்றவை மனதை மென் தென்றலாக தொட்டு நெகிழவைப்பவை.

பிரிதல் குறித்து இவ்வளவு உணர்வுபூர்வமாக ஒரு திரைப்படத்தை அனிமேஷனில் வழங்க முடியுமா என்பதற்கான விடையாக அமைந்திருக்கிறது டாய் ஸ்டோரி 3 திரைப்படம். அற்புதமான கற்பனையில், அனிமேஷன்,நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், புதிய பாத்திரங்களின் அறிமுகம் என பிக்ஸார் அணியினரின் ஈடுஇணையற்ற உழைப்பில் உருவாகியிருக்கும் இப்படைப்பானது பிக்ஸாரிற்கு மேலும் புகழை ஈட்டித்தருகிறது.

தம் அன்பிற்குரியவர்களை தவிர்க்க முடியாத தருணமொன்றில் பிரிந்து செல்வதென்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. ஆனால் அந்தப் பிரிதலின் பின்பாக புதியதோர் வாழ்வு காத்திருக்ககூடிய சாத்தியமும் இருக்கவே செய்கிறது. ஆன்டியின் பொம்மைகள் சிலவற்றின் காலணிகளில் ஆன்டியின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அந்தக் காலணிகள் வெறும் காலணிகளாகவல்ல மாறாக அவை அந்தப் பொம்மைகளின் இதயங்களாகவே எனக்குத் தோற்றம் தருகின்றன. [****]


ட்ரெயிலர்

19 comments:

 1. முதலில் ஸ்டார்(தயக்கத்துடன்) பார்த்த பின்தான் படிக்க தொடங்கினேன். அருமை. இன்றே பார்த்து விடுகிறேன். பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 2. சூப்பர்.

  ஏற்கனவே சிவா வேறு இந்த படத்தை பற்றி பிரம்மாதமாக எழுதி இருந்தார். ஆகையால் பார்த்துவிட முடிவெடுத்துள்ளேன்.

  உங்களின் எக்ஸ்டிரா Star வேறு வகையில்லாமல் செய்துவிட்டது.

  ReplyDelete
 3. வெறும் நாலு ஸ்டார் கொடுத்த காமிக் எதிரி க.கா ஒழிக.

  ReplyDelete
 4. அருமையான படங்க.. பாலி பாலிய கோபபபடுத்தி பாக்காதீங்க யாரும். பின்விளைவுகள் மோசமா இருக்கும் :)

  ReplyDelete
 5. //பின்விளைவுகள் மோசமா இருக்கும் :) //

  இதுல எதுனா ரெட்டை அர்த்தம் இருக்கா என்ன? :)

  தல,ஏற்கனவே சொன்ன மாதிரி,இந்தப் பட சீரீஸ் ல நானு எதுவும் பார்த்தது இல்ல.அது எல்லாத்தையும் பார்த்துட்டு,இதை சீக்கிரம் (!!) பார்க்கறேன்.

  ReplyDelete
 6. ஆமா... எவ்வளவுக்கு நாலு ஸ்டார்? அஞ்சுக்கு நாலுன்னா நான் வெளிநடப்பு செய்கிறேன்...

  ReplyDelete
 7. முதல் கேள்வி: சகோதர வாஞ்சியும் ஜீவ காருண்யமும் பூண்டு, சன்னியாசியின் மந்திரக்கோலை அபகரித்து, இகபரம் புகழ மண்ணுலகை ஆளும் மன்னவன் இருக்கின்றானா? இறந்துவிட்டானா? அவன் யார்?

  இரண்டாம் கேள்வி: மண்ணுலகில் பெண்ணாக பிறந்து ஆண் வேடம் பூண்டு, அமைச்சர் தொழில் புரிந்து, பஞ்ச வஞ்சியர்களை மனம் செய்து கொள்வதாக கவர்ந்து வரும்போது, அப்பெண்களை சிறைகொண்ட சன்னியாசியை அடித்து துரத்திய அறிவை இருக்கின்றாளா? இறந்து விட்டாளா? அவள் யார்?

  மூன்றாவது கேள்வி: சன்னியாசிக்கு உதவிய சுதாவும், ஆகாத மதியும் உயர்ந்து நிற்கின்றார்களா? இறந்து விட்டார்களா? அல்லது சுதாமதி என்னது?

  ReplyDelete
 8. நண்பர் வேல்கண்ணன், அருமையான படம் தவறவிடாதீர்கள் தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

  விஸ்வா, திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள். நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளிற்கு பதில் மீ த எஸ்கேபு :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் ஹாலிவூட் பாலா, நாலுதானே இங்கே உச்சம் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இராமசாமி கண்ணன், இப்ப மட்டும் பின் விளைவுகள் சொல்லிக்கிறமாதிரியா இருக்கு :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, வசதிப்படி பார்த்து மகிழுங்கள். பின்விளைவுகள் எப்போதும் மோசமாகவே இருக்கும். கருத்துக்களிற்கு நன்றி.[ ஆடுகள் சில உங்கள் கையில் மாட்டி விட்டன போல் தெரிகிறதே :)]

  நண்பர் ஜெய், இதுக்கு போய் வெளிநடப்பா, நாலுதானே இங்க மேக்ஸிமம் :)) தங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 9. //வெறும் நாலு ஸ்டார் கொடுத்த காமிக் எதிரி க.கா ஒழிக.
  //

  அதை நான் வழிமொழிகிறேன். நல்ல எழுத்து நண்பரே.

  ReplyDelete
 10. //பின்விளைவுகள் மோசமா இருக்கும் :)

  இதுல எதுனா ரெட்டை அர்த்தம் இருக்கா என்ன? :) //

  எனக்கும் அதே சந்தேகம்.பாலா எங்கிருந்தாலும் உடனடியாக பதில் தரவும் :)

  ReplyDelete
 11. காதலரே... இந்தப் படத்தையும் என்னால் இன்னும் பார்க்கவே முடியவில்லை ;-(.. எனது மஸ்ட் வாட்ச் லிஸ்ட்டில் இது கண்டிப்பாக உண்டு.

  அப்புறம்,

  //முதல் கேள்வி: சகோதர வாஞ்சியும் ஜீவ காருண்யமும் பூண்டு, சன்னியாசியின் மந்திரக்கோலை அபகரித்து, இகபரம் புகழ மண்ணுலகை ஆளும் மன்னவன் இருக்கின்றானா? இறந்துவிட்டானா? அவன் யார்?

  இரண்டாம் கேள்வி: மண்ணுலகில் பெண்ணாக பிறந்து ஆண் வேடம் பூண்டு, அமைச்சர் தொழில் புரிந்து, பஞ்ச வஞ்சியர்களை மனம் செய்து கொள்வதாக கவர்ந்து வரும்போது, அப்பெண்களை சிறைகொண்ட சன்னியாசியை அடித்து துரத்திய அறிவை இருக்கின்றாளா? இறந்து விட்டாளா? அவள் யார்?

  மூன்றாவது கேள்வி: சன்னியாசிக்கு உதவிய சுதாவும், ஆகாத மதியும் உயர்ந்து நிற்கின்றார்களா? இறந்து விட்டார்களா? அல்லது சுதாமதி என்னது? //

  இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது????? இதெல்லாம் ஏதோ கோட் வார்த்தை தானே... ஆயுதக் கடத்தல் பாஸ்வேர்ட் தானே இது ??? உண்மையைச் சொல்லி விடுங்கள் ;-)

  ReplyDelete
 12. நண்பர் மயில்ராவணன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
  பின்விளைவுகள் வாழ்க வளர்க :))

  நண்பர் கருந்தேள், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. மேலும் அது ஆயுத கடத்தல் அல்ல ஆள் கடத்தல் கோட் வேர்ட்ஸ் ஆகும். குறிப்பாக சிட்டுக் கடத்தல் :))

  ReplyDelete
 13. பெண்டாட்டியின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே கடுப்பாகி கொண்டிருக்கும் என்னை போன்றவர்களை மேலும் கடுப்பேற்றும் வகையில் கேள்விகள் கேட்டு பின்னுட்டமிடும் விஸ்வா போன்றவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 14. நமச்சிவாயம்,

  ஞானிகளின் மனப்போக்கையும், செயல்களையும் அஞ்ஞானிகளால் அறிய முடியாது. அவமரியாதையை தாங்கவும் இந்த ஆத்மாவுக்கு சக்தி உண்டு நமச்சிவாயம்.

  பாவிகளின் பார்வை பட்டால் ஆத்ம பரிசுத்தம் பாழாய் விடுகிறது. எல்லாம் சிவன் செயல், நமச்சிவாயம்.

  விடையறியாத கேள்விகளுக்கும் விதைத்த வினைப்பயன்களுக்கும் விளக்கம் கூற வேண்டாமா?

  ReplyDelete
 15. சின்னப்பசங்க பார்க்கற படம்னு நினைச்சேன்,ஓகே நாமும் பார்த்துடலாம்

  ReplyDelete
 16. நண்பர் அ.வெ.அவர்களே மனைவிக்குமுன் வாய் மூடி நிற்பதை விட வேறு வழி உண்டோ :))

  விஸ்வா, ஓம் நமச்சிவாயா.

  நண்பர் சி.பி.செந்தில்குமார், படத்தை பாருங்கள் தரமான படைப்பு. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 17. //இது கன்ஃபர்மாக ஏதோ பழைய நாடக வசனமே தான் ;-) விஸ்வா, பழைய ஆங்கிலப் படங்கள் பார்த்துவிட்டு, அரதப்பழைய தூரதரிசன நாடகங்களையும் பார்க்கிறார் என்று கபால பைரவ் என் கனவில் வந்து சொன்னார்//

  நண்பர்களே,

  புதிய புராஜெக்ட் ஒன்றில் இறங்கியுள்ளேன். அதன் தாக்கமே இந்த வசனங்கள்.

  Latest One: பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மீதி ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை.

  அவன் யார்?

  ReplyDelete
 18. அன்பு நண்பரே,

  ட்ரையலஜி திரைப்படங்கள் என்று எடுத்துக் கொண்டால் முதலாவது பெரும் வெற்றியையும், நல்ல திரைக்கதையையும் கொண்டிருக்கும். அடுத்த இரண்டில் அவை தேய ஆரம்பிக்கும் என்பதே மரபு. ஸ்டார் வார்ஸ் திரைப்படமும் இதற்கு விலக்கில்லை. அதையும் மீறி வெகு சில படங்களே இந்த மரபினை உடைத்திருக்கின்றன.

  அதில் பிக்ஸரின் டாய் ஸ்டோரியையும் சேர்க்கலாம். பிரமாதமான திரைக்கதை. எதிரிகளிடம் தப்பிக்கும்போது ஒரு செடி மறைவில் நடக்கும் பஸ்ஸின் ஸ்பானிஷ் நடனம், வில்லனின் கடந்த காலம், கடைசியில் நெகிழ வைக்கும் இறுதிக் காட்சி என பின்னியெடுத்திருக்கிறார்கள்.

  கடைசியில் ஜப்பானிய டோடோரா பொம்மையை காண்பிப்பது என பிக்ஸரின் புத்திசாலித்தனம் நிறைய இடங்களில் பளிச்சிடுகிறது. பிக்ஸர் என்ற லேபிள் இருந்தால் எந்த விமர்சனத்தையும் பார்க்காமல் பார்த்துவிடலாம். குறைந்த பட்சம் நான்கு ஸ்டார்களையாவது போட்டுவிட்டு படம் பார்க்க செல்லலாம். இல்லையா?

  ReplyDelete
 19. ஜோஸ், ட்ரையலாஜி திரைப்படங்கள் குறித்து நீங்கள் கூறியிருப்பது உண்மை. டாய் ஸ்டோரி 3 மிகவும் சிறப்பான ஒரு திரைப்படம். அவர்கள் காட்டிய அந்தப் பொம்மை ஜிபிலி ஸ்டூடியோவினது என்பதை உணர்ந்தபோது பிக்ஸாரின் குறும்பை மெச்சாது இருக்க முடியவில்லை. டாங்ல்ட் பார்க்கும் வரையில் பொறுத்திருங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete