Thursday, July 15, 2010

ரேப் ட்ராகன் - 11


ஸ்னானத் தொட்டி இந்திரன்

லத்பானிய இலக்கியங்களிற்கு சவால்விடும் வகையில் அமைந்திருக்கும் இத்தொடர் வழியாக, வாசக அன்பர்களிற்கெல்லாம் நன்கு அறிமுகமாகிவிட்ட குத்து நகரின் இளவரசியை, அவள் பள்ளியறைக்குள் புகுந்து, அலுங்காமல், நலுங்காமல் கவர்ந்து சென்ற புரட்சிக்காரன் ரஃபிக் என்ன ஆனான்? அவன் முரட்டுக் கரங்களில் மாட்டிக் கொண்ட அழகுப் பைங்கிளி குந்தவிக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை இந்தப் பண்பாடு வழுவாத தொடரின் தீவிர வாசக அன்பர்கள் தங்கள் பரிசுத்தமான மனங்களில் எழுப்பியிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பகல் இருந்தால் இரவும் இருக்கும் என்பதைப்போல் சில துஷ்ட ஆன்மாக்கள், குந்தவியிடம் மாட்டிக்கொண்ட ரஃபிக்கின் நிலை என்னவாகிற்றோ என்பதை அறிய ஆவலாக இருந்ததையும், இதையே சாக்காக வைத்து, இந்த துர் ஆன்மாக்களின் தலைமை அலுவலகம், ரஃபிக்கின் நிலை குறித்த உண்மைகளை உலகின் கண்களிற்கு இட்டு வருவதற்காக பல ஊழல்கள் நிறைந்த தேர்தலை நடாத்தியதையும் பார்க்கும்போது, என்ன மாதிரியான ஒரு லோகத்தில் நாம் ஜீவிக்கிறோம் எனும் கேள்வி எம் முன் பூதாகரமாக எழவே செய்கிறது.

எனவே மேலும் சொற்களை வீணாக்காது, அழகுச்சிலை குந்தவியும், புரட்சிக்காரன் ரஃபிக்கும் தற்காலிகமாக தங்கியிருக்கும் அந்த சொகுசு விடுதியை நோக்கி எம் மன ஓடங்களில் பயணிப்போம் நண்பர்களே.

செந்நிற நாரைகளின் சிறகுகளும், பீனிக்ஸ் பறவையின் வயிற்றுப்பகுதியின் மென்சிறகுகளாலும் கலந்து உருவாக்கப்பட்டிருந்த சொகுசுவிடுதியின் பஞ்சணையில், அழகு மலராக மயங்கிக் கிடந்த குத்து நகர இளவரசி, மெல்லத் தன் கயல் விழிகளைத் திறந்தாள். தன் உடல் மிகவும் அயர்ச்சியுற்றிருப்பதை உணர்ந்த அவள், இரவு விசேட பூசைகள் எதுவும் நடக்கவில்லையே என தன் மன எண்ணங்களை ஓட விட்டவாறே பஞ்சணையில் சிறிது நேரம் கிடந்து தன்னை நிதானித்துக் கொண்டாள். இது தன் பள்ளியறை அல்ல என்பதை அவள் ஊகித்துக் கொண்டபோது அந்த உண்மை அவளிற்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.

பஞ்சணையில் கிடந்தவாறே இளமை நுரைக்கும் தன் உடலை, நளினமாக அப்படியும், இப்படியுமாக வளைத்து சோம்பல் முறித்தாள் இளவரசி குந்தவி. பஞ்சணை, தான் செய்யப் பெற்ற பாக்கியத்தை அந்தக்கணம் பெற்றதால் மெதுவாக முனகியது. தான் இருக்கும் அறையை தன் அழகிய விழிகளால் சற்று நோட்டம் விட்டாள் குந்தவி. தரமான சொகுசு விடுதியொன்றின் அறையில் அவள் இருப்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. இருப்பினும் குத்து நகர அந்தப்புர பள்ளியறையிலிருந்து அவள் எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தாள் என்பது அவளிற்கு புதிராகவே இருந்தது. மேலும் இவ்வாறான சொகுசு விடுதியை தேர்ந்தெடுப்பதில் தேர்ந்த திறமை பெற்றிருக்கும் கதாசிரியரின் அனுபவத்தையும் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

மென்மையான பஞ்சணையில் வளர்த்திவிட்ட தங்க வாழை எனக் கிடந்த தன் மலர் உடலை, அழகாக வழுக்கி, தரையில் கால் பதித்து நின்றாள் அழகுக் குந்தவி. அறையின் ஒரு பக்கமாக அமைந்திருந்த ஸ்னான அறையிலிருந்து வெளிவந்த வாசப் பொடிகளின் நறுமணம் அவள் நாசியில் தயக்கமின்றி நுழைந்தது. அந்த நறுமணத்தோடு கலந்திருந்த ஆண்வாசம் அவள் உடலில் ஒரு பசியை மெதுவாக தட்டி எழுப்ப தொடங்கியது. தன் பாதங்களால் மெதுவான அடிகள் எடுத்து வைத்து மெல்ல ஸ்னான அறையை நெருங்கினாள் இளவரசி குந்தவி. ஸ்னான அறையையும், பள்ளி அறையையும் பிரித்த மெல்லிய நூலிழை திரைச்சீலையை, தன் பட்டு விரல்களால் மெல்ல விலக்கிய அந்த அழகுச்சிலை, ஸ்னான அறையினுள் தன் மதன விழிகளை மெல்ல சுழலவும் விட்டாள்.

ரோஜா, செங்கமலம், அல்லி, தாழை, நீர் மல்லிகை போன்ற மலர்களின் இதழ்கள் வெதுவெதுப்பான நீரின்மேல் மிதக்க, பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நானாவித வாசனைப்பொடிகள் நீரில் கலக்கப்பட்டதால் அவை உருவாக்கிய சுகந்த வாசம் அந்த ஸ்னான அறையை நிரப்ப, வானுலக அதிபதி இந்திரனை ஒத்த அழகுடன் ஸ்னான தொட்டிக்குள் அமர்ந்திருந்தான் புரட்சிக்காரன் ரஃபிக். சிலை போன்ற அவன் மேனியில் நீர்த்திவலைகளும், மலரிதழ்களும் கோலம் போட்டிருந்தன. ரஃபிக் தன் கண்களை மூடி, புரட்சிமாதாவை ஸ்னான தொட்டியில் தியானித்தவாறு இருந்தான். அவன் தியானம் விஸ்வாமித்ரரின் தவம்போல் ஒளிர்ந்தது.

ஸ்னான தொட்டிக்குள் கண்களை மூடி தேவலோக மன்மதன்போல் அமர்ந்திருந்த ரஃபிக்கை கண்டு கொண்ட குந்தவியின் மார்புகள் சற்று விம்மித் தணிந்தன. அவள் மூச்சு சூடாக வெளியேறியது. அவள் உடலில் ஒரு வேகம் படர ஆரம்பித்தது. திரைச்சீலையை ஒருபுறம் தள்ளி விலக்கியவாறே ஸ்னான அறைக்குள் தன் பாதங்களை எடுத்து வைத்தாள் குத்து நகரின் இளவரசி குந்தவி.

[ ஸ்னானத் தொட்டி இந்திரன் தவம் கலையுமா? ]


ரேப் ட்ராகன் ஹிட்ஸ் லிஸ்ட்: இலுமினாட்டி கிளப் சாங்

கவனிக்க வேண்டியவை: .26ல் வரும் ஹிப் மூவ்/ 1.29ல் கொரிய அழகி கிம்மின் பேக் மூவ்/ 1.40ல் இலுமினாட்டியின் செஸ்ட் மூவ்/ 3.22-3.36 வரை இலுமினாட்டியின் நான்ஸ்டாப் டான்ஸ்/ 4.25ல் இருந்து பாடலின் இறுதிவரை இலுமினாட்டியின் செக்ஸி டான்ஸ் மூவ் :)))) அம்மூசு மாமே அம்மூசு

11 comments:

 1. Haiya me the 1st..............
  .

  ReplyDelete
 2. // இந்தப் பண்பாடு வழுவாத தொடரின் தீவிர வாசக அன்பர்கள் தங்கள் பரிசுத்தமான மனங்களில் எழுப்பியிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. //

  இந்த கிண்டல் தானே வேண்டாம்கிறது


  // ஆனால் பகல் இருந்தால் இரவும் இருக்கும் என்பதைப்போல் சில துஷ்ட ஆன்மாக்கள், குந்தவியிடம் மாட்டிக்கொண்ட ரஃபிக்கின் நிலை என்னவாகிற்றோ என்பதை அறிய ஆவலாக இருந்ததையும், இதையே சாக்காக வைத்து, இந்த துர் ஆன்மாக்களின் தலைமை அலுவலகம், ரஃபிக்கின் நிலை குறித்த உண்மைகளை உலகின் கண்களிற்கு இட்டு வருவதற்காக பல ஊழல்கள் நிறைந்த தேர்தலை நடாத்தியதையும் பார்க்கும்போது, என்ன மாதிரியான ஒரு லோகத்தில் நாம் ஜீவிக்கிறோம் எனும் கேள்வி எம் முன் பூதாகரமாக எழவே செய்கிறது. //

  அப்புடி போட்டு தாக்குங்க அருவாள

  அட்ராசக்க அட்ராசக்க அட்ரா .....சக்க :)

  .

  ReplyDelete
 3. // ஸ்னானத் தொட்டி இந்திரன் தவம் கலையுமா? //

  நாங்களும் அதத்தான் எதிர் பார்க்கிறோம்
  எப்புடி கலையும் எந்த மாதிரி கலையுமுன்னு

  அட நான் தவத்ததான் சொன்னேன் :)

  .

  ReplyDelete
 4. // இலுமினாட்டி கிளப் சாங்

  கவனிக்க வேண்டியவை: .26ல் வரும் ஹிப் மூவ்/ 1.29ல் கொரிய அழகி கிம்மின் பேக் மூவ்/ 1.40ல் இலுமினாட்டியின் செஸ்ட் மூவ்/ 3.22-3.36 வரை இலுமினாட்டியின் நான்ஸ்டாப் டான்ஸ்/ 4.25ல் இருந்து பாடலின் இறுதிவரை இலுமினாட்டியின் செக்ஸி டான்ஸ் மூவ் :)))) அம்மூசு மாமே அம்மூசு //

  இலுமினாட்டியை எங்கள் ஆருயிர் அகில உலக "உலக நாயகன் கமலுடன் " ஒப்பிட்டதற்காக
  இன்று முதல் அம்மா அவர்களின் ஆசியுடன் சென்னையில் இருந்து வெள்ளை மாளிகை வரை பேரணி சென்று போராட்டம் நடத்தப்படும் :)

  .

  ReplyDelete
 5. ////உண்மைகளை உலகின் கண்களிற்கு இட்டு வருவதற்காக பல ஊழல்கள் நிறைந்த தேர்தலை நடாத்தியதையும் பார்க்கும்போது//

  ஆமா.பூரா மொள்ளமாறிப் பசங்க.கள்ள ஓட்டு கூட போட்டானுங்கலாமே! அப்புடியா காதலரே?கேடுகெட்ட பயலுவ!

  யோவ் காதலரே!என்னையா பாத்தீறு?அது 1.20 இல் வரும் ஷேக்யா.(டர்பன் போட்ட ஷேக் இல்லையா யோவ்!)

  அப்புறம்,இது போங்கு ஆட்டம்.நீரு மட்டும் தான் பாட்டு கொடுப்பீரா?இதோ நானும் கொடுக்கிறேன் ஓய்...

  http://www.youtube.com/watch?v=22Uwe3H2oBk&feature=related

  அப்புறம்,என்னய்யா சின்னப்பய (!!) கமல் கூட எல்லாம் என்ன compare பண்ணிக்கிட்டு.பீலா விடுறதுன்னு முடிவு பண்ணிட்டீர்.அப்புறம் என்ன கமலோட compare பண்ணிக்கிட்டு?சும்மா tom cruise,johny depp,leonardo dicaprio னு அடிச்சு விட வேண்டியது தான?

  ReplyDelete
 6. //ஸ்னானத் தொட்டி இந்திரன் தவம் கலையுமா? //

  கலைஞ்சாலும் சரி கலயலன்னாலும் சரி.. படிக்குறவய்ங்களுக்கு கில்மா தான் ;-) ஹீ ஹீ

  //இந்தப் பண்பாடு வழுவாத தொடரின் தீவிர வாசக அன்பர்கள் தங்கள் பரிசுத்தமான மனங்களில் எழுப்பியிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது//

  ஆஹா... அப்புடி சொல்லுங்க.. ரிப்பீட்டு... அதுவும், அந்த பரிசுத்த மனம் . . ஆஹா வாய்ப்பேயில்ல . . ;-)

  //அப்புறம்,என்னய்யா சின்னப்பய (!!) கமல் கூட எல்லாம் என்ன compare பண்ணிக்கிட்டு.பீலா விடுறதுன்னு முடிவு பண்ணிட்டீர்.அப்புறம் என்ன கமலோட compare பண்ணிக்கிட்டு?சும்மா tom cruise,johny depp,leonardo dicaprio னு அடிச்சு விட வேண்டியது தான?//

  அதானே... தனக்குத்தானே ஓட்டிக்கினா, அடுத்தவன் வந்து ஓட்டமாட்டான்னு ஒரு நெனப்பு ;-) உடமாட்டம்ல ;-) அப்புறம், அதென்ன நடுவுல .. பீலா அது இதுன்னு பீலா உட்டுக்கினு ;-) எப்ப அரசியல்னு வந்திச்சோ, அப்ப இந்த கில்மா டான்செல்லாம் சகஜம் மாமு ;-) ..என்சாய் ;-)

  ReplyDelete
 7. கருந்தேள் அண்ணே! அதாவது நான் அழகா இருப்பேன்னு பீலா விட ஆரம்பிச்சாச்சு.அப்புறம் என்ன சின்னப் பயலோட comparison ? அதான் சொன்னேன். :)

  ReplyDelete
 8. நண்பர் சிபி, தொடர்ந்த உங்கள் உற்சாகம் தரும் கருத்துக்களிற்கு நன்றி. கலைக்காமால் என் உயிர் ஓயாது :))

  இளவரசர் இலுமினாட்டி அவர்களே, நூறு பொற்காசுகளை எனக்கு ஓணான் பொதி மெயிலில் அனுப்பி, உங்களைப்பற்றி வானளவு புகழ்ந்து எழுதச் சொன்னது நீங்கள்தானே. பாடலை வழங்கச் சொன்னதும் நீங்கள்தானே. உமது வயசை இளமையாக்க சொன்னதும் நீங்கள்தானே. எப்போதும் விதேசிகளுடன் உங்களை ஒப்பிடும் நீங்கள் குத்து நகரிற்கே ஒரு இழுக்கு :)) பீலா யார் மாலாவின் சிஸ்டரா.. போன் நம்பர் கிடைக்குமா :))

  நண்பர் கருந்தேள், எழுதினாலும் கில்மாதான் :)) எம்மைவிட பரிசுத்த மனம் கொண்டோர் இவ்வையத்துள் உண்டோ!! தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 9. கேப் விட்டிருந்ததே என்று சந்தோஷபட்டால், அரங்கேறிய விட்டதா அம்பலம்... சரிதான்.

  // இந்த துர் ஆன்மாக்களின் தலைமை அலுவலகம், ரஃபிக்கின் நிலை குறித்த உண்மைகளை உலகின் கண்களிற்கு இட்டு வருவதற்காக பல ஊழல்கள் நிறைந்த தேர்தலை நடாத்தியதையும் பார்க்கும்போது, என்ன மாதிரியான ஒரு லோகத்தில் நாம் ஜீவிக்கிறோம் எனும் கேள்வி எம் முன் பூதாகரமாக எழவே செய்கிறது. //

  அத்துஷ்ட ஆத்மாக்களை வேட்டையாட வெறி கொண்டு கிளம்பியிருக்கிறேன். விரைவில் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

  // செந்நிற நாரைகளின் சிறகுகளும், பீனிக்ஸ் பறவையின் வயிற்றுப்பகுதியின் மென்சிறகுகளாலும் கலந்து உருவாக்கப்பட்டிருந்த சொகுசுவிடுதியின் பஞ்சணையில், //

  கவிதை வரிகளுக்கு வேண்டுமானாலும் அது ரைமிங்காக வரலாம்... ஆனால் உண்மையில் அங்க ஒடிக்கபட்ட சிறகுகள் என்னுடையது, சாம்பல் ஆகி கலந்து உருவாக்கபட்டது பீனிக்ஸ் பறவை மட்டுமல்ல நானும் தான்.

  மொத்தத்தில், அது பஞ்சனை அல்ல என் மனதில் நீங்கா வடு ஏற்படுத்திய வஞ்சனை. அதற்கு தேவை ஒரு கருணை மனை. இதற்கு பிறகாவது நடக்குமா இச்சோகத்தின் விவரிப்புக்கு ஒரு அணை?

  ReplyDelete
 10. இப்படிபட்ட சோக கட்டத்தில் கொரிய அழகியோடு கூத்தடித்த இலுமிக்கு வேட்டு வைக்காமல் விட கூடாது :)

  பி.கு/ இப்படி ஒரு பாட்டை நான் பார்க்கவே இல்லை... கமல் இக்காலத்தில் இந்த படத்திலேயே தான் நடித்ததை ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை... அதுவும் அந்த செஸ்ட் மூவ் மற்றும் கடைசியில் ரேபிட் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் என்ற பெயரில் அவர்கள் பண்ணிய அதகளம்.... தாங்க முடியவில்லை...

  அக்காலத்தில் இப்படிபட்ட படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த மன இரங்கல்கள். நல்ல வேளை நான் இல்லை அந்த லிஸ்டில் :)

  ReplyDelete
 11. ரஃபிக், உங்கள் கருத்துக்களைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். தெருவில் நடந்து சென்றாலும் உங்கள் கருத்து நினைவில் வந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறேன். படு அட்டகாசமான கமெண்ட்.. அதுவும்
  //கவிதை வரிகளுக்கு வேண்டுமானாலும் அது ரைமிங்காக வரலாம்... ஆனால் உண்மையில் அங்க ஒடிக்கபட்ட சிறகுகள் என்னுடையது, சாம்பல் ஆகி கலந்து உருவாக்கபட்டது பீனிக்ஸ் பறவை மட்டுமல்ல நானும் தான்.// சும்மா பின்னியிருக்கிறீர்கள். கதையின் அடுத்த அத்தியாயத்தை நீங்கள் எழுதித் தாருங்களேன். அந்தக்காலத்தில் இவ்வகையான பாடல்களை பார்த்த ரசிகர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதனை நான் உங்களிற்கு கூறவும் வேண்டுமா என்ன :)) தங்கள் அட்டகாசமான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.[ கோவில்பட்டி ரஃபிக் ரசிகர் மன்றம், நெய்காரன்பட்டி ரஃபிக் ரசிகர் மன்றம் என இரு மன்றங்கள் உங்களிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன]

  ReplyDelete