தமிழ் காமிக்ஸில் அற்புதங்கள் தனித்து வருவது இல்லை. அதுவும் துப்பறிவாளர்களின் கதை எனில் உரையாடல் குமிழிகளில் அற்புதங்கள் கூடி நின்று கும்மி அடித்து குலவை எழுப்பும். துப்பறிவாளர் ஜெரோம் கதையில் ஏற்கனவே இது நடந்திருக்கிறது. ஜில் ஜோர்டானும் ஒரு துப்பறிவாளர் என்பதைக் கண்டு கொண்ட அற்புதங்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.
198ம் பக்கத்தில் மூன்றாவது கட்டத்தில் ஹென்ரி கூறும்.... கரையிலிருந்து 4 கிமீ தொலைவில் பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருப்பதால் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.... என வாக்கியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருந்தால் கடல் இறக்கம் நிகழும்போது யானைப்படை குதிரைப்படையுடன் சென்று காரை கட்டி இழுத்து வந்துவிடலாம் அல்லவா... அட இந்த வாக்கிய உருவாக்க குளறுபடியை விட்டுவிடலாம்!
பக்கம் 200 கட்டம் 5ல் அபெஸ் தெருவில் கருகியது என்னவென்பதை கண்டுபிடிக்க நாம் சங்கர்லாலைத்தான் அமர்த்திக் கொள்ளவேண்டும், அட இதையும் விட்டு விடலாம், பாரிஸில் 1960 களில் மிளாகாய்த் தூளை பயன்படுத்தி லிபெலூயுலின் கண்களை கண்ணீர்க் குளமாக்கிய குற்ற நுட்பத்தையும் நாம் விட்டுவிடலாம்!
பக்கம் 206 கட்டம் 10ல் பிரான்சின் தெற்குப்பகுதியான MIDI க்கு செல்கிறேன் என்பதை பிற்பகல் என அர்த்தம் கொண்டு [ மதியம் எனும் அர்த்தம் Midi எனும் சொல்லிற்கு உண்டு] பிற்பகலில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் எனச் சொன்னதையும் விட்டுவிடலாம்!
சைடரை அடித்த குஷியில் பக்கம் 213 கட்டம் 10ல்.. போகவர 8 கி.மீ தூரம் என அருள்வாக்கு கூறும் ப்ரொகார்டையும் மன்னித்து விட்டு விடலாம்!
பக்கம் 217ன் இறுதிக்கட்டத்தில் வித்தியாசியமான குணாதிசயம் கொண்ட இந்த பிரகிருதிகளை கணிக்கவே முடியவில்லை எனக் கடலில் மூழ்கிய காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட டெம்பளர்களின் சங்கேதக் குறியீடுகளை சொல்கிறாரா இல்லை காரில் இருக்கும் நபர்களை சொல்கிறாரா எனும் மயக்கநிலை உருவாக்கத்தையும் விட்டுவிடலாம்!
குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் பாத்திரங்களிற்கிடையில் நிகழும் உரையாடல்களின் பெரும் பகுதி தமிழ் வாசக ரசனையை இதமாக பதமாக வருடிக் கொடுத்திடும் விதமாக முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடலாம்! [ மாரிஸ் திலியூதான் பூட்டாரே நைய்னா]
பக்கம் 229 கட்டம் 3ல் Phare எனும் சொல் காரின் முற்பகுதியில் அமைந்திருக்கும் விளக்குகளைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாது கலங்கரை விளக்கம் என அர்த்தம் கொள்ளப்பட்டு காரின் முற்பகுதி விளக்குகளின் ஒளியால் எழுப்பப்படும் SOS சமிக்ஞை அப்படியே பல்டி அடித்து கலங்கரை விளக்கத்தில் உள்ளவர்களிற்கான சமிக்ஞை ஆகியதையும், லாப்ரானில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருந்தால், அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் அற்புதமான வரிகளையும் தூக்கி கடாசி விடலாம்!
கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்!
ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!
அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். அதை நான் இங்கு எழுதப்போவது இல்லை. மாறாக காமிக்ஸ் ஒரு டைம்பாஸ், ஜாலியாக படித்து விட்டு செல்ல வேண்டும், இப்படியான தீவிர அலட்டல்கள் எல்லாம் உடல் நலத்திற்கு தீங்கானது, இந்த மொழிபெயர்ப்பே இக்கதைக்கு மிக அதிகம், தட்டில் போடுவதை உண்டு விட்டு சூப்பராக இருக்கிறது எனச் சொல்லிவிட்டால் எல்லாம் சுபமாகி விடும் எனும் மனநிலையைக் கொண்டிடவும் உங்களிற்கு முழுமையான உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது.
நான் கூறிய மேலும் கூறிடாத அற்புதங்களை தன்னில் கொண்டுதான் அலைகளின் ஆலிங்கனம் எனும் ஜில் ஜோர்டான் கதை NBS ல் வெளியாகி இருக்கிறது. ஒரு கதையில் இவ்வகையாக முன்னெப்போதும் கண்டிராத அற்புதங்கள் நிறைந்திருப்பதால் NBS எனும் நாமம் மிகவும் பொருத்தமாக இங்கு அமைந்துவிடுகிறது. இந்த சமயத்தில் இக்கதையை தமிழில் படித்து முடித்தபின் என் மனதில் ஊற்றெடுத்து உந்தித் தள்ளிய சில கேள்விகளை இந்த சுபதின சுபவேளையில் இப்பதிவில் சேர்த்திடலாம் என விரும்புகிறேன்.
அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?
இக்கதையின் வாசிப்பின் பின்பாக இந்த ஆசிரியபீடம் மீதும் அதன் வெளியீடுகள் மீதும் நான் உருவாக்கி கொள்ளும் மதிப்பீடு என்ன ?
கில்லிங் ஜோர்டான் நிறைவுற்றது.
198ம் பக்கத்தில் மூன்றாவது கட்டத்தில் ஹென்ரி கூறும்.... கரையிலிருந்து 4 கிமீ தொலைவில் பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருப்பதால் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.... என வாக்கியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருந்தால் கடல் இறக்கம் நிகழும்போது யானைப்படை குதிரைப்படையுடன் சென்று காரை கட்டி இழுத்து வந்துவிடலாம் அல்லவா... அட இந்த வாக்கிய உருவாக்க குளறுபடியை விட்டுவிடலாம்!
பக்கம் 200 கட்டம் 5ல் அபெஸ் தெருவில் கருகியது என்னவென்பதை கண்டுபிடிக்க நாம் சங்கர்லாலைத்தான் அமர்த்திக் கொள்ளவேண்டும், அட இதையும் விட்டு விடலாம், பாரிஸில் 1960 களில் மிளாகாய்த் தூளை பயன்படுத்தி லிபெலூயுலின் கண்களை கண்ணீர்க் குளமாக்கிய குற்ற நுட்பத்தையும் நாம் விட்டுவிடலாம்!
பக்கம் 206 கட்டம் 10ல் பிரான்சின் தெற்குப்பகுதியான MIDI க்கு செல்கிறேன் என்பதை பிற்பகல் என அர்த்தம் கொண்டு [ மதியம் எனும் அர்த்தம் Midi எனும் சொல்லிற்கு உண்டு] பிற்பகலில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் எனச் சொன்னதையும் விட்டுவிடலாம்!
சைடரை அடித்த குஷியில் பக்கம் 213 கட்டம் 10ல்.. போகவர 8 கி.மீ தூரம் என அருள்வாக்கு கூறும் ப்ரொகார்டையும் மன்னித்து விட்டு விடலாம்!
பக்கம் 217ன் இறுதிக்கட்டத்தில் வித்தியாசியமான குணாதிசயம் கொண்ட இந்த பிரகிருதிகளை கணிக்கவே முடியவில்லை எனக் கடலில் மூழ்கிய காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட டெம்பளர்களின் சங்கேதக் குறியீடுகளை சொல்கிறாரா இல்லை காரில் இருக்கும் நபர்களை சொல்கிறாரா எனும் மயக்கநிலை உருவாக்கத்தையும் விட்டுவிடலாம்!
குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் பாத்திரங்களிற்கிடையில் நிகழும் உரையாடல்களின் பெரும் பகுதி தமிழ் வாசக ரசனையை இதமாக பதமாக வருடிக் கொடுத்திடும் விதமாக முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடலாம்! [ மாரிஸ் திலியூதான் பூட்டாரே நைய்னா]
பக்கம் 229 கட்டம் 3ல் Phare எனும் சொல் காரின் முற்பகுதியில் அமைந்திருக்கும் விளக்குகளைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாது கலங்கரை விளக்கம் என அர்த்தம் கொள்ளப்பட்டு காரின் முற்பகுதி விளக்குகளின் ஒளியால் எழுப்பப்படும் SOS சமிக்ஞை அப்படியே பல்டி அடித்து கலங்கரை விளக்கத்தில் உள்ளவர்களிற்கான சமிக்ஞை ஆகியதையும், லாப்ரானில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருந்தால், அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் அற்புதமான வரிகளையும் தூக்கி கடாசி விடலாம்!
கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்!
ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!
அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். அதை நான் இங்கு எழுதப்போவது இல்லை. மாறாக காமிக்ஸ் ஒரு டைம்பாஸ், ஜாலியாக படித்து விட்டு செல்ல வேண்டும், இப்படியான தீவிர அலட்டல்கள் எல்லாம் உடல் நலத்திற்கு தீங்கானது, இந்த மொழிபெயர்ப்பே இக்கதைக்கு மிக அதிகம், தட்டில் போடுவதை உண்டு விட்டு சூப்பராக இருக்கிறது எனச் சொல்லிவிட்டால் எல்லாம் சுபமாகி விடும் எனும் மனநிலையைக் கொண்டிடவும் உங்களிற்கு முழுமையான உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது.
நான் கூறிய மேலும் கூறிடாத அற்புதங்களை தன்னில் கொண்டுதான் அலைகளின் ஆலிங்கனம் எனும் ஜில் ஜோர்டான் கதை NBS ல் வெளியாகி இருக்கிறது. ஒரு கதையில் இவ்வகையாக முன்னெப்போதும் கண்டிராத அற்புதங்கள் நிறைந்திருப்பதால் NBS எனும் நாமம் மிகவும் பொருத்தமாக இங்கு அமைந்துவிடுகிறது. இந்த சமயத்தில் இக்கதையை தமிழில் படித்து முடித்தபின் என் மனதில் ஊற்றெடுத்து உந்தித் தள்ளிய சில கேள்விகளை இந்த சுபதின சுபவேளையில் இப்பதிவில் சேர்த்திடலாம் என விரும்புகிறேன்.
40 வருடங்கள் பராம்பரியம் கொண்ட ஒரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் தனது 40வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளியிடும் தொகுப்பில் அலைகளின் ஆலிங்கனம் எனும் இக்கதையையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறது எனும் வகையில் இதன் ஆசிரியபீடம் இக்கதையில் இப்பதிவில் கூறப்பட்டு இருக்கும் விடயங்களை தெரிந்து கொண்டுதான் அதை அனுமதித்ததா?
அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?
இக்கதையின் வாசிப்பின் பின்பாக இந்த ஆசிரியபீடம் மீதும் அதன் வெளியீடுகள் மீதும் நான் உருவாக்கி கொள்ளும் மதிப்பீடு என்ன ?
கில்லிங் ஜோர்டான் நிறைவுற்றது.
ஜெரோம்... ஜோர்டான்... உலகப்படைப்புகள் தமிழில் வருகின்றன அரைகுறையாக!
ReplyDeleteஅதைத்தான் சிவ்காசி டூர் போய் சலாம் போட்டு வாங்கி வருகிறீர்கள் அல்லவா :)
DeleteYou should be given the Name of Comics subbudu :)
ReplyDeleteகாசு கொடுத்தும் கபோதியாய் திரியும் குடும்பக் குத்துவிளக்குகளை என்னன்னு கூப்பிடலாம் அங்கிள்? :P
Delete'குப்புடு'ன்னு கூப்புடு தம்பி :) !
Deleteகூழைக் கும்புடுன்னு கூப்பிட்டா சரியா இருக்காது? :P
Deleteநண்பர் சுரேஷ் , என்ன சொல்லி அழைத்தால் என்ன இது சரியாக இல்லை என்பதைக் சுட்டிக் காட்டுவதுதானே ஆரோக்யமான செயலாகும் :)
Deleteசுபயோக சுபதினத்தில் கைத்துப்பாக்கியால் காது குடைந்து கொண்டிருந்ததொரு தருணத்தில், ஊற்றடித்த ஆர்வம் உந்தித் தள்ள தங்கள் ப்ளாக் வர நேர்ந்தது. வலிக்காத மாதிரி அடிங்க என்று கேட்ட பின்னரும் கூட வளைச்சு வளைச்சு அடித்ததால் அடுத்த பார்சலில் உமக்கு அனுப்பப்படும் புத்தகம் சீரிய அன்பின் வெளிப்பாடாக சிதைத்து அனுப்பப்படும்.
ReplyDelete//தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?//
இது ஆசிரியக் குடும்பத்துக்கும், வாசகக் குடும்பத்துக்கும் உள்ள பிரச்சனை. குடும்பப் பிரச்சனைல நீர் வீணாகத் தலையிடுவது ஏனோ? காசு குடுத்தமா காக்கா பிடிச்சமானு இருப்பது தானே தமிழ் காமிக்ஸ் பண்பாடு? அப்படிப் பண்ணுவதற்குப் பெயர் தானே விமர்சனம்? இப்படி பல்லை உடைச்சு பல்லாங்குழி விளையாடுவேன் என்பது தகுமா? ஒழுங்கா இனிமே சொம்பைத் தூக்கிட்டு சொஸ்தமா கூட்டத்தில சேர்ந்து உக்காந்து குலவை பாடுங்க. இல்லாட்டி எங்க வாசக குடும்பம் பல்க்கா பல்லு விளக்காம வந்து பல்லேலக்கா பாடிட்டு போயிரும் ஆமா.
இவன்,
சிவகாசி ஆரம்பநிலை பள்ளிக்கூட எட்டுமாஸ்டர்,
RTO அருகே,
ஆண்டியாசந்தாபட்டி,
சிவகாசி,
சோக்கு டிஸ்ட்ரிக்ட்.
பிகு: இதுபற்றிய தங்களது கருத்து எதுவானாலும் (மறுபடியும்) உடனே கொரியரில் (மட்டுமே) அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். வெள்ளிக்கிழமைக்குள் வருமாறு இருந்தால் மட்டுமே உங்கள் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும். அதுக்கு அப்பால வந்தால் கடிதம் நேராக குப்பைத்தொட்டிக்குத் தான் போகும் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், அதுக்கு முன்ன வந்தாலும் அங்கன தான் போகும் என்று சொல்லி உங்களை தேற்றவும் கடமைப்பட்டுள்ளேன். எதுனா கமெண்ட் கிமென்ட்டு எதிர்த்து போட்டா சுருக்கா சுருக்குப் பையில போட்டு சுளுவா எச்சி துப்பி அழிச்சுருவோம். ஆயிரக்கணக்குல அள்ளிக் கொடுத்தாலும் என்ன இருந்தாலும் நாமல்லாம் குதூகலமா கும்மி அடிக்குற குடும்பமில்லையா? அம்மிக் கல்ல ஆட்டுங்கல.
இலுமி, ஃபுல்லா குப்பைல போட்டார்.... என்ன ஒரு நாக்கு அய்யா ஒமக்கு :)
Deleteபடா ஷோக்கா கீதுப்பா! பேசாம நீங்களே ஒரு காமிக்ஸ் ஆரம்பிச்சுரலாமே? (ஓசீல படிக்கறமாதிரி!)
ReplyDeleteஎனக்கும் ஒரு டவுட்டுண்ணே. கரண்டு கம்பத்தில காக்கா உக்காந்தா என்னண்ணே ஆகும்? :)
Deleteதமிழ் நாட்டுலன்னா தப்பிச்சுக்கும். பெரும்பாலான டைம்ல கரண்டு கட்டுதானே? (யெப்பூடீ.....?)
Deleteநண்பர் பாண்ட், ஆப்பிள் எப்போது தன் சமர்த்துத் தொலைபேசியை இலவசமாக கொடுக்கிறதோ அன்று நானும் இலவசமாக காமிக்ஸ் வெளியிடுகிறேன் .. :) இவ்வளவு குளறுபடிகளுடன் 100 ரூ வாங்குகிறீர்களே எப்படி உணர்கிறீர்கள் நண்பரே... தமிழ் நாட்டில் என்பதால்தான் தப்பிக்க முடிகிறது :)
Deleteஅட அட!
ReplyDeleteபாண்டு வந்துருக்கார்!
பாண்டு ஐயா உலகப்படைப்புகளை தமிழ்ல கொலை பண்றது பத்தி உங்கள் கருத்து என்ன?
லயன் பிளாக்கின் போலீஷ்காரரான நீங்கள் மொழிபெயர்ப்பு தரம் பற்றி ஏன் கேள்விகள் எழுப்புவதில்லை?
தங்களுக்கும் இப்போது வரும் மொழிபெயர்ப்பு தரம் திருப்தி அளிக்கிறதா?
அங்கே கேள்வி எழுப்புனா சப்பைக்கட்டு பதில் வரும்னு தெரியாதா உங்களுக்கு? கடந்த ரெண்டு மூணு பதிவுகள்ள வந்த சரமாரியான வாசகர் தாக்குதல்ல ஆசிரியர் ஆடிப்போனாரே, அதுமாதிரி எல்லாருமா சேர்ந்து மொழிபெயர்ப்பு வெசயத்த கௌறுனா சரி. ஆனா, அங்கே மொழிபெயர்ப்பை ஆகா ஓகோனு புகழ்றவங்கதானே ஜாஸ்தி?
Deleteஅதை மொழிபெயர்ப்புனு பார்க்காம ரீ-மேக்னு நெனச்சுக்கிட்டே படிக்க பழகிட்டேன். அதனால சங்கடமில்லே!
இது ரீமேக்னா ரீமேக் செய்பவர் ஒதுக்கி தள்ளிய மொழிபெயர்ப்புகளை என்னவென்று சொல்வதாம்.... சீரியஸாக அவை அலைகளின் ஆலிங்கனத்தை விட மோசமாகவா இருந்தது.... :)
Deleteexcellent..... இந்த மூன்று பதிவையும் பிரிண்ட் எடுத்து அந்த புத்தகத்துடன் இணைத்து விட்டேன்...In Tamil they spoiled the beauty and soul of gil jourdan.
ReplyDeletethe screwed up the intelligence of gil and the story telling
"கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்."
Even when I read the book I was wondering how come they didn't notice the boat in such a small island.... Only after reading his review I got to know about the motor was covered with plastic bag and submerged under the water.... and there is no boat.....
நீங்கள் இதுபோல மேலும் பல பதிவுகளை எழுத வேண்டும்....
ஸ்ரீனி , பேசாமல் அலைகளின் ஆலிங்கனம் ஆங்கிலப் பதிப்பை வாங்கிவிடுங்கள்.... ஏற்கனவே வாங்கியிராவிடில்... :)
Deleteஎன்ன பாண்டு சார் பதிலை காணோம்?
ReplyDeleteவிலை கொடுத்து நீங்கள் வாங்கும் புத்தகத்தின் தரம் பற்றிய அக்கறை இல்லாத நீங்கள்.
தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பு தரம் பற்றிய விழிப்புணர்ச்சிக்காக தன் நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் ஒருவரின் முயற்சியை கிண்டலடிப்பது சரியா?
நான் கிண்டலடிக்கல, சீரியஸாதான் சொன்னேன்னு ILLUMINATI சாருக்கே புரிஞ்சிருக்கும். நீங்க தப்பா பாத்தா-எதுவும் தப்பு. சரியா பாத்தா-சரி!
Deleteகனவுகளின் காதலன் எனும் பெயரை குறை காணும் நாயகன் என்று மாற்றினால் நன்று. குறை கூறியே கும்மியடிப்பதில் என்ன சுகமோ??????...
ReplyDeleteநண்பர் கிறுக்கல் கிறுக்கன் அவர்களுக்கு,
Deleteநாம் சந்தித்துள்ளோம்!
ஷங்கர் இங்கே செய்வது குறைகாண்பதல்ல.
நானூறு ரூபாய் மதிப்பில் வரும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் வரும் ஒரு உலகப்புகழ் பெற்ற கதை திரிபுகள் கொண்டிடக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுவதே.
இதில் தவறென்ன? நான் இந்தக் கதையினை ஆங்கிலத்திலும் படித்துள்ளேன். ஆங்கிலத்தில் உள்ள மெல்லிய நகைச்சுவை இழைந்தோடும் நடை தமிழில் இல்லை. அது இருந்திருந்தால் இந்த வரிசை ஒரு சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
NBS புத்தகத்தில் எனக்கு பிடித்த கதைகள் உண்டு - உ.ம். சிக் பில் கதை - வாய் விட்டு சிரிக்க வைத்த கதை. ஆனால் நம்மை நாமே முன்னேற்றிக்கொள்ள சொல்லப்படும் கருத்துக்களில் தவறென்ன?
நமது அலுவலகத்தில் வருடா வருடம், நமது Area of Improvements சொல்லுவதில்லையா? அதை நாம் செவி மடுத்து நம்மை மெருகு செய்வதில்லையா? இதில் என்ன தவறு? சொல்லும் முறை காரசாரமாக இருப்பினும் சொல்லும் கருத்தில் போருளிருப்பின் அதனை ஏற்றிடல் தவறல்லவே?
தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பிலும் உலகத் தரம் எட்டுவது நமக்கு பெருமையா இல்லையா?
பெருமையே , ஆனால் சுட்டிக்காட்டுதலை முதலில் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் ஆசிரியருக்கு தெரிவித்துவிட்டு சரியான பதில் வராத பட்சத்தில நீங்கள் கூறும் திரிபுகளை சரியான முறையில் பதிவிடலாமே நண்பரே
Deleteநண்பரே,
Deleteசிலர் அதை தனியாகச் சொல்லுகிறார்கள். நான் அங்கேயும் ஓரிரு முறை நீண்ட பின்னூட்டங்கள் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிவிட்டேன். எடிட்டரிடம் மெயில் மூலம் தெரிவித்தும் விட்டேன் - அனால் பலருக்கு இன்னும் இது ஒரு பொருட்டாக தெரியவில்லை என்பதே நிஜம்.
காமிக்ஸ் மட்டும் அல்ல - எந்தப் புத்தகமாய் இருப்பினும் மூலம் தழுவிய மொழிநடை கொணர்வது தார்மிகப் பொறுப்பாகும். [இல்லுமி: மூலம் எப்பயுமே பிரச்சனைதான் இல்ல? :) :)]
இதனை வெறும் சப்பை காட்டாகச் சொல்லவில்லை. ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைந்து சில ஆன்மிகப் புத்தகங்களை மொழி பெயர்த்து வருகிறேன் - as a passion பகுதி நேரமாக - அங்கும் மொழி சார்ந்த திரிபுகள் இல்லாமல் இருக்க எங்களுக்கென ஒரு டீம் உண்டு. காரசாரமான விவாதங்கள் உண்டு - சில சமயம் வரம்பு மீறுவது போலக் கூட தோன்றும் - எனினும் ஒரு அன்னப்பறவை போல நீரிலிருந்து பாலை பிரிக்கத் தெரிய வேண்டியது அவசியம்.
நண்பர் கிறுக்கல் கிறுக்கன், என் பதிவுகள் உங்களிற்கு அதிருப்தியை அளித்தபோது நீங்கள் எனக்கு மின்னஞ்சலா செய்தீர்கள் :)கபோதித்தனமாக காமிக்ஸ் படித்துவிட்டு ஓடிப்போய் சொம்பு தூக்குவதில் என்ன சுகம் உள்ளதோ அப்படித்தான் இதிலும்... எடிட்டரிற்கு நான் மின்னஞ்சல் செய்யவில்லை என்பதை எப்படி உங்களால் அப்படி உறுதியாக சொல்ல முடிகிறது... குறையைக் கூறிக் கும்மி அடிக்க கூடாது ஆனால் புகழ் பாடி மட்டும் கும்மி அடிக்கலாமா .... நல்ல நியாயம்தான்... ஆனால் எனக்கு பொருந்தாது....
Delete//@MsakratesFebruary
ReplyDeleteஅட அட!
பாண்டு வந்துருக்கார்!
பாண்டு ஐயா உலகப்படைப்புகளை தமிழ்ல கொலை பண்றது பத்தி உங்கள் கருத்து என்ன?
லயன் பிளாக்கின் போலீஷ்காரரான நீங்கள் மொழிபெயர்ப்பு தரம் பற்றி ஏன் கேள்விகள் எழுப்புவதில்லை?
தங்களுக்கும் இப்போது வரும் மொழிபெயர்ப்பு தரம் திருப்தி அளிக்கிறதா?//
உமக்கு வேறு வேலையா கிடையதா
யோவ் சாக்கு, அண்ணன் கிட்ட கேட்டு கத்துக்கய்யா. :)
Delete@ கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )
ReplyDeleteஅந்த கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டிருந்தால் என்ன பதில் வரும் என்று புரிகிறது!
உங்கள் மனநிலை இதுதான் என்றால் அதுபற்றி எனக்கு கவலையில்லை...
எனக்கு தமிழ் மட்டுமே படித்து தெரிந்துக்கொள்ள முடியும். எனவே மற்ற மொழிகளில் என்ன அர்த்தத்தில் எழுதினாலும் எனக்கு கவலையில்லை. அதுமட்டுமல்ல குறைகாண எனக்கு நேரமுமில்லை
ReplyDeleteமற்ற மொழிகளில் என்ன அர்த்தத்தில் எழுதினாலும் கவலையில்லை எனும் உங்களிற்கு இப்பதிவும் எந்தக் கவலையையும் அளித்திருக்க நியாயமில்லை ... குறைகாண நேரமில்லை உங்களிற்கு குறைகாணும் இங்கு வேலை என்ன உங்களிற்கு...
Deleteஎனக்கும் தமிழ் மட்டும்தான் தெரியும் சார்!
ReplyDeleteஉண்மை என்னவென்றால் அரைகுறையான மொழிபெயர்ப்பினால் கதையின் அசலான சுவையில் பெரும்பகுதியை தமிழில் நாம் இழந்து விடுகிறோம்.
இனிவரும் கதைகளாவது முழு தரத்துடன் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் !
மொழிபெயர்ப்பில் ஏற்படும் இதுபோன்ற குளறுபடிகளின் விவரங்கள் லயன் காமிக்ஸ் ஆசிரியருக்கு இமெயில் மூலம் அனுப்பப்படுகிறது.
ReplyDeleteநல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறேன்!
உங்கள் எண்ணங்களையும் இமெயில் அல்லது கடிதம் மூலம் ஆசிரியருக்கு தெரிவியுங்கள் நண்பர்களே!
ReplyDeleteஇந்த விவாதங்கள் வெறும் குறைகாணும் முயற்சிகள் அல்ல.....
உங்கள் எண்ணங்களையும் இமெயில் அல்லது கடிதம் மூலம் ஆசிரியருக்கு தெரிவியுங்கள் நண்பர்களே!
ReplyDeleteஇந்த விவாதங்கள் வெறும் குறைகாணும் முயற்சிகள் அல்ல.....
மொழிபெயர்ப்பு பத்தி நெசமாலுமே நெறைய விவாதிக்கவேண்டியிருக்கு. ILLUMINATI சார் பண்றது பெரிய விஷயம்.
ReplyDeleteநம்ம டைகரை தமிழுக்கு ஏத்தமாதிரி மாத்துறோம்னுட்டு கழுதைல வர்றா மாதிரி படத்த மாத்தி வரைஞ்சா எப்டியிருக்கும்?
கொஞ்சூண்டு திங்க் பண்ணுங்க பசங்களா!
//ILLUMINATI has left a new comment on the post"கில்லிங் ஜோர்டான் - 3 - போக்கா போட்ட கியர்": யோவ் சாக்கு, அண்ணன் கிட்ட கேட்டு கத்துக்கய்யா. :)//
ReplyDeleteகத்துக்கலாம்தான் அண்ணன் மாயாவியால்ல திரியறாரு! :-P
ஷங்கர் பாஸ்!
இங்க போடுற கமெண்ட்ல பாதி ஸ்பாம்ல போயிடுற மாதிரி இருக்கே!
//Comic Lover (a) சென்னை ராகவன் has left a new comment on the post"கில்லிங் ஜோர்டான் - 3 - போக்கா போட்ட கியர்":
ReplyDeleteநண்பரே,
சிலர் அதை தனியாகச் சொல்லுகிறார்கள். நான் அங்கேயும் ஓரிரு முறை நீண்டபின்னூட்டங்கள் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிவிட்டேன். எடிட்டரிடம்மெயில் மூலம் தெரிவித்தும் விட்டேன் - அனால் பலருக்கு இன்னும் இது ஒரு பொருட்டாக தெரியவில்லை என்பதே நிஜம்.
காமிக்ஸ் மட்டும் அல்ல - எந்தப் புத்தகமாய் இருப்பினும் மூலம் தழுவிய மொழிநடை கொணர்வது தார்மிகப் பொறுப்பாகும். [இல்லுமி: மூலம் எப்பயுமே பிரச்சனைதான் இல்ல? :) :)]
இதனை வெறும் சப்பை காட்டாகச் சொல்லவில்லை. ஒருபெரிய நிறுவனத்துடன் இணைந்து சில ஆன்மிகப் புத்தகங்களை மொழி பெயர்த்து வருகிறேன் - as a passion பகுதி நேரமாக - அங்கும் மொழி சார்ந்த திரிபுகள் இல்லாமல் இருக்க எங்களுக்கென ஒரு டீம் உண்டு. காரசாரமான விவாதங்கள் உண்டு - சில சமயம் வரம்பு மீறுவது போலக்கூட தோன்றும் - எனினும் ஒரு அன்னப்பறவை போல நீரிலிருந்து பாலை பிரிக்கத் தெரிய வேண்டியது அவசியம்.//
லயன் காமிக்ஸ் மொழிபெயர்ப்பு டீம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதைகளை மூலக்கதையுடன் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்!
நண்பர்களே வணக்கம் !மொழி பெயர்ப்பு திறமை கொண்ட உங்கள் அனைவரின் கூற்றிலும் உண்மை உள்ளது !உண்மை ஒன்றுக்கு மட்டுமே அலங்காரம் தேவைபடாது !
ReplyDeleteகனவுகளின் காதலரின் மொழிபெயர்ப்பு,வார்த்தை ஜாலங்களோ யாராலுமே டச் செய்ய முடியாது என்பது எனது வலுவான எண்ணமும் !
ஆசிரியர் ஏற்கனவே கூறி உள்ளார் மொழி பெயர்ப்பில் உள்ள பிரச்சினை குறித்து,சிறந்த மொழி பெயர்ப்பாளர்களை அணுகினால் வார்த்தைகளுக்கு இவ்வளவு என மொழி பெயர்க்க ஆகும் செலவு குறித்து கூட !இப்போது நூறு ரூபாய் விலையில் தமிழ் காமிக்ஸ் என்பது யாருமே எதிர் பார்த்திருக்க முடியாது !ஆசிரியர் கூட !அதில் 1௦௦ பக்கங்கள் வண்ணத்தில் அந்நிய தரத்தில் என்பதும் சேரும் !செல்ல செல்ல பாதை தெளிவானதே இந்த வளர்ச்சி ..... பிற நிறுவன வெளியீடுகளை ஒப்பிட்டால் இந்த விலை எப்படி சாத்தியம் !ஓரளவு மொழி புரிந்தவர்கலை கொண்டு மொழி பெயர்த்தால் சாத்திய பட்டது ! பெண்மணி ஒருவர் மொழி பெயர்ப்பதாய் கூறியதாய் நினைவு !எல்லா வார்த்தைகளும் எல்லோருக்கும் தெரிந்திருக்காது !சில இடங்களில் இடறி இருக்கலாம் !அதனை நீங்கள் ஆசிரியருக்கு மின்னஞ்சல் செய்யலாமே அவர் மொழி பெயர்ப்பாளரிடம் கூறி ஏதேனும் மாற்றம் வரலாமே ...//அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?//இது வளர்ச்சிக்கு வழிகோலுமா !எதற்கு பிரச்சினை என ஆசிரியர் மொழி தெரியாத புத்தகங்களை ஒருவேளை நிறுத்தினால் .....உங்களுக்கு நேரடியாய் படிக்க இயலும் ,எங்களை போன்ற வாசகர்களுக்கு நீங்கள் புத்தகம் வெளியிட இயலுமா !
ஏதோ சில குறைகள் பெரிதாய் என்னை போன்ற அதிக வாசகர்களை கொண்ட ரசிகர்களுக்கு இது பெரிதாய் தெரியாது !
நீங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் என்பதால் உங்களுக்கு இது பெரிய தவறாய் தெரிந்திடும் !அதில் வியப்பில்லை ! எனக்கு நன்கு தெரிந்த விஷயம் என்ற எண்ணத்தில் ,தெரிந்த ஒருவரால் இதனை சாதாரணமாக எடுத்து கொள்ள இயலாது ,நமது திறமை அங்கே வெளிப்பட வாய்ப்பல்லவா !
சரி தேர்ந்த மொழி பெயர்ப்பாளர் என வைத்தால் புத்தகம் விலை உயர்த்த வேண்டுமே என்றால் அது கண்டிப்பாக முடியாது !எல்லோரும் ஏற்று கொள்வார்களா ...இப்போதைய ஐம்பது ரூபாய் முயற்சி கூட அது குறித்தே !இப்போது ஆசிரியர் ஏற்கனவே கூறியது போல இது ஒரு கலை வளர்க்கும் முயற்சி என்பதை விட ,ஒரு பொழுது போக்கும் சாதனமாய் அணுகினால் இந்த குறைகள் இருக்காதே !இல்லை என்றால் இந்த கதைகளை என்னை போன்றவர்கள் கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டோம் என்பதும் உண்மை !
விமர்சிக்க ஒப்பீடு செய்வதை விட ரசிக்க படித்தால் இந்த பிரச்சினைகள் தோன்றி இருக்காது ! நிச்சயமாய் இப்போதைய மொழி பெயர்ப்பு அற்புதமே என்னை பொறுத்தவரை !
ரசிப்போம் !ரசிகராய் இருப்போம் !
சந்தோசம் தரும் ஒருவனே கலைஞன்!நாங்கள் படிக்கும் பொது ரசிக்கிறோம் என்றால் புதிதாய் படிப்பதே !
நிச்சயமாய் இந்த புத்தகம் நான் முதல் முறை படித்த போது சிறிதும் உறுத்தவில்லை !மீண்டும் படிக்கிறேன் ......அந்த துவக்க மொழி பெயர்ப்பு அல்லது நம்மவர்களின் இடைசெருகல் அற்புதமே !
Deleteஉங்கள் கூற்றிலும் விஷயமிருக்கிறது.
Delete1) இந்த விலையினில் தமிழ் மட்டுமே நன்கறிந்த வாசகர்கள் படிப்பது வேறு வகையில் கஷ்டமே
2) பல நிலைகளில் வாசகர்கள் இருக்கிறார்கள் - நான் அறிந்த / பார்த்த வரை கூலி வேலை, தினப்படி வேலை செய்பவர்களும் நமது ரசிகர்கள் - இவர்களில் சிலர் சந்தா கட்டியுள்ளார்கள். கட்டிவிட்டு பொறுமையுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு 1750 என்பது பல மாதச் சம்பளம். எனினும் ஆவலாய் இருக்கிறார்கள்.
இவற்றை நான் மறுக்கவில்லை. புதிய மற்றும் தமிழ் மட்டுமே படிக்கும் வாசகர்களுக்கு இந்தத் தரம் ஒப்புக்கொள்ளக்கூடியது என்பதும் ஒரு ஏற்கத்தக்க வாதமே.
கேள்விகள் :
1) ஆசிரியரும், அவருடைய மொழிபெயர்ப்புக் குழுவினில் பல்லாண்டுகளாய் இருந்துவரும் ஒருவர் (பெயர் நினைவில்லை - தங்கக்கல்லறை பின்னூட்டங்களில் பாருங்கள் - முதல் முறையும் இரண்டாம் முறையும் இவரே மொழிபெயர்த்திருக்கிறார்) இந்தத் துறையினில் பல்லாண்டுகளாய் உள்ளவர்கள் தானே? அவர்களுக்குமா புரியாமல் இருந்திடும் என்று நினைக்கிறீர்கள்? அந்த புதிய பெண்மணி பற்றி சொல்லவில்லை.
2) கடினமான பல வேலைகள் செய்து இளைப்பாற காமிக்ஸ் படிப்பவர்களும் உள்ள ரசிகர் கூட்டம் இது. இவர்களுக்கும் ஒரு பெரும் தரம் கொண்ட மொழிபெயர்ப்பினைக் கொடுக்க வேண்டாமா?
3) ஷங்கர், ரபிக், ஈரோடு விஜய், கார்த்திக் சொமலிங்கா போன்ற ரசிகர்களை வைத்து ஒரு review team செய்திடலாமே! இந்த வலைப்பதிவுக்கு ஆகும் நேரம்தானே அதற்கும் ஆகும்? இதனை ஏற்கனவே தெரிவித்தாயிற்றே? குறைகள் நிறைகளாக மாறுமே !
@ ஷங்கர், @ ஸ்டீல் க்லா:
Deleteஸ்டீல் க்லாவின் பின்னூட்டமும் அதற்கு என்னுடைய பதிலையும் ரபிக் அவர்களின் குரூப்பில் பதிவேற்ற அனுமதி வேண்டும். கும்மி அடிப்பது நோக்கம் அல்ல - விவாதிக்கவே!
செய்யட்டுமா? காத்திருக்கிறேன்.
This comment has been removed by the author.
DeleteENGINEERING முன்னேற்றத்தில் ஒரு துறை உண்டு !QUALITY CONTROL அதாவது இருப்பதை கொண்டு கையை சுடாமல் விற்பனை செய்வது !இது அந்தந்த தொழிலில் உள்ளவர்களுக்கே தெரியும் தலையாய பிரச்சினை !எல்லாவற்றிலும் சிறந்ததை பொறுத்த வரை நீங்கள் விலையை விட்டு தர வேண்டி இருக்கும் ,அல்லது தரத்தை !இங்கு தேவை என்பது சந்தோஷமே !இது ஆராய்ச்சிக்குரிய விசயமும் அன்று ,இதன் நோக்கம் டைம் பாஸ் !அவ்வளவுதான் !ஆசிரியர் தனது பாதையை செல்ல செல்ல ஒழுங்கு செய்து வருவார் எனும் நம்பிக்கை என்னுள் அதிகம் !உங்களது குரலுக்கும் அவர் செவி சாய்ப்பாய் வாய்ப்பிருந்தால் என அறிய பாருங்கள் இன்றைய பதிவை கடவுள் பாதி..மிருகம் பாதி...@http://lion-muthucomics.blogspot.in/! !எனக்கு இப்படிதான் வேண்டும் என குழந்தைகள் அழும் ,ஆனால் நம்மிடம் உள்ள சிறந்ததை தருவோம் என்பதே தாய் தந்தையாரின் நிலை இருக்கும் !ஆனால் எனது குழந்தைக்கு சிறந்ததை தருவேன் என்பது அவர்கள் முயற்ச்சியில் இருக்கும் !ஆகவே விவாதம் புரிவது,பிறரை நோகடிப்பது எளிது !செயல் என்று வந்து விட்டால் ......
Deleteகமலஹாசன் கலையை வளர்க்க முயற்சி செய்ததும் ,ரஜினி ஜனரஞ்சனமாஹ தேவைப்பட்டதை கொடுத்து வெற்றி பெற்றதும் ,கமல் இப்போது அதே பாணிக்கு திரும்பி இருப்பதும் உணர்த்துமே !விரும்புவதை கொடுத்தால் வெற்றி ....ஆரம்பத்தில் ஸ்பைடரின் வெற்றி சிலருக்கு ஆச்சரியம் ,ஆசிரியரின் தந்தைக்குமே ...ஆனால் வெற்றி என்பது அதில்தானே உள்ளது ...
Deleteஸ்டீல் க்லா:
Deleteபீற்றுவதாக எண்ணாதீர்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் Head of Quality Control and Test - நான் என்ற தொழில் முறையில் சொல்லுகிறேன் - இருப்பதை கொண்டு கை சுடாமல் விற்பனை செய்வது அல்ல - அல்லவே அல்ல - இருப்பதில் மேன்மையான தரத்தினை, போட்டியாளர்களின் விலையைவிட ஒரு சற்று குறைத்து தயாரிப்பதே இங்கு சவால்.
Quality-க்கு நமது உத்வேகமே முதல் காரணம். பணம் அப்புறம் தான். காமிக்ஸ் நமக்கு தான் பொழுது போக்கே தவிர பதிப்பாளர்களுக்கு அல்ல. மிளிரும் தரத்தினில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இன்னும் கூடுதல் விலையினில் வந்தால் வாங்க மாட்டோமா என்ன?
சரி ரஜினி படம் பற்றி பேசுகிறீர்கள்? எந்திரன் பார்த்த உங்களால் மறுபடி சிவப்பு சூரியன் பார்க்க முடியுமா? தாய் மீது சத்தியம் என்ற படம்? அந்த தரம் எப்படி .. இந்த தரம் எப்படி? ஒரே நடிகர் தானே? சிறு வயதினில் பார்த்த பொது பிடித்ததே? அப்போதும் அவர் சூப்பர் ஸ்டார் தானே? குசேலன் மற்றும் பாபா ஜெயித்ததா? சுருண்டுக்கொள்ளவில்லை? தரமில்லை எனில் ரஜினி படமும் ஓடாது - பொழுதுபோக்காக இருந்தாலும் கூட.
நண்பர் ராகவன், தாமதமான பதிலை பொறுத்தருளுங்கள்... :) என்னிடம் நீங்கள் அனுமதி கேட்க வேண்டியதே இல்லை... நண்பர் ஸ்டீல் க்ளா சம்மதம் வழங்கினால் நீங்கள் இதை விவதாத்திற்கு எடுத்து சென்றிடலாம் .... :)
Deleteநண்பர் ஸ்டீல் க்ளா, தமிழ் காமிக்ஸ் மீது கொண்ட அன்பும் ப்ரியமும் உங்களை எதிர்வினையாற்ற செய்திருக்கிறது அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆசிரியர் 100 ரூ க்கு காமிக்ஸ் வெளியிடுவதால்தான் மொழிபெயர்ப்பு தரம் இப்படி அமைகிறது என உங்களிடம் கூறினாரா! அப்படி இருக்கும் பட்சத்தில் விலைக்கு ஏற்ற மொழிபெயர்ப்பு எனும் வணிக முத்திரையை அல்லவா தமிழ் காமிக்ஸ் பெறுகிறது [ அது வணிகம்தான் லாபம் இல்லாது வணிகம் இல்லை ] ஆனால் அது வாசகன் மத்தியில் உருவாக்கும் அதிர்வு என்ன... 10 ரூ க்கு இதை விட மோசமான மொழிபெயர்ப்பு கிடைக்குமா இல்லை 100 ரூ மொழிபெயர்ப்புதானா, 400 ரூக்க டக்கரா இருக்குமா.... ஆசிரிய பீடம் நீங்கள் ஊகிப்பதை வெளிப்படையாக தம் வாசகர்கள் முன் ஒத்துக் கொள்ளுமா... கண்டிப்பாக அது நடக்காது அல்லவா... மொழிபெயர்ப்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் உயிர் போன்றது நீங்கள் அதை என்ன நிலையிலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை உடையவராக உங்களைக் காட்டிக் கொள்கிறீர்கள்... ஆனால் நான் அந்த மனநிலை கொண்டவன் அல்ல.. என் பதிவுகளால் தமிழ் காமிக்ஸை வெளியிடுவதை ஆசிரியர் நிறுத்தி விடுவார் என்கிறீர்கள்.. உங்கள் நகைச்சுவை உணர்விற்கு அளவே இல்லை... இதைவிட மோசமான மொழிபெயர்ப்பில் வந்தாலும் அதை அற்புதம் எனப்போற்றும் வாசகர் ஆதரவு இருக்கும்வரையில் தமிழ் காமிக்ஸிற்கு இறப்பே கிடையாது... ஆனால் மொழிபெயர்ப்பு பாடையில்..... என்னால் உங்களிற்காக புத்தகம் வெளியிட முடியாது ஆனால் இப்படியான தரத்தில் வெளியிடுவதற்கு பதிலாக நான் வெளியிடாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பேன்... நீங்கள் ஒரு படைப்பு மொழிமாறும்போது அதனுடன் நிகழும் எல்லா தவறுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள் .... உங்களிற்கு அந்த படைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக... உங்கள் இருத்தலில் பற்றுநிலை ஒன்றை நான் அறுத்துவிடுவேன் என்கிறீர்கள்... கண்டிப்பாக அது நிகழாது... இதைவிட மொழிமாற்றக் குளறுபடிகளை அற்புதம் என நீங்கள் சொல்லத்தான் போகிறீர்கள்.... அது உங்கள் சுதந்திரம், உரிமை என இப்பதிவிலேயே எழுதி இருக்கிறேன்... இப்போது என் வேண்டுகோள்... நீங்களோ அல்லது ஆசிரிய பீடமோ என் பதிவில் நான் முன்வைத்த கேள்விகளிற்கு எந்த பதிலையும் தரவில்லை.... கலங்கரை விளக்கத்தில் இருந்து தெரியாத சிக்னல் கரையில் இருக்கும் கவிஞனிற்கு தெரியும் என்பதை எந்த உறுத்தலும் இல்லாது படித்து செல்லும் நீங்கள் நான் முன்வைத்திருக்கும் கேள்விகளிற்கு ஏன் ஆசிரியபீடத்திடம் பதிலைக் கேட்டு சொல்லக்கூடாது.... கண்டிப்பாக இதை ஆரோக்யமான மனநிலையுடன் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் நண்பரே. மேலும் தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பு முன்னேறும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை கிடையாது.. இப்படியான மொழிபெயர்ப்புகளிற்கு ஆதரவு எனும் பெயரில் அதன் முன்னேற்றத்திற்கு குழி தோண்டுபவர்கள் யார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.... குறை அறியாது அதை நிவர்த்தி செய்ய இயலாது... நிவர்த்தி செய்யுங்கள் என வேண்டுபவரை குறை காண்பதால் குறை நிவர்த்தியாகாது... புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் நண்பரே.
Deleteஉங்கள் கேள்விகள் சரிதான் !அதற்க்கான எனது பதிலும் நான் மேலே கூறியதே !ஆசிரியருக்கு கண்டிப்பாக நண்பர்கள் மின்னஞ்சல் செய்திருப்பார்கள் !இப்போதைய நிலை சந்தோசமே !நீங்கள் கேட்டு கொண்ட படி நடந்தால் கூடுதல் சந்தோசமே !நன்றி நண்பரே !
Delete//இருப்பதில் மேன்மையான தரத்தினை, போட்டியாளர்களின் விலையைவிட ஒரு சற்று குறைத்து தயாரிப்பதே இங்கு சவால்.//ஏற்று கொள்கிறேன் நண்பரே இதுவே இங்கே நான் கூற நினைப்பதும் வாங்குபவர்கள் உரிய விலை தந்தால்தானே அந்த பொருள் விற்பனைக்கு வரும் !
Deletenbs வெளியீட்டின் போதே விற்குமா என கேட்டவர்களும் ஏராளம் ,மேலும் பிறர் வாங்க இயலுமா என வினவியதும் அறிவோம் ,சில விசயங்களை காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி வரலாம் ,இங்கே விலையின் முன்னே தரம் ,ஆனால் நிச்சயமாக முகம் சுளிக்கும் அளவிற்கு இல்லை தரம் என்னை பொறுத்தவரை !கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் நிலையும் ஒரு நாள் வரும் !நீங்கள் உங்கள் ஆர்வத்தை கூறி உள்ளீர்கள் அது போல என்னை போன்றும் பலர் உண்டு என கூறவே இங்கே நான் கூறினேன்,நண்பர்கள் என்ற முறையில் !தட்டி கேட்க நினைப்பதை இதமாய் கேட்கலாமே !
ஆசிரியர் நிச்சயமாக சேவை செய்யவில்லை ,வியாபாரம்தான் !ஆனால் கொள்ளை அடிக்க வில்லையே ,சரிதானே எனது இந்த கேள்வி !
Delete//நீங்கள் ஒரு படைப்பு மொழிமாறும்போது அதனுடன் நிகழும் எல்லா தவறுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள் .... //
Deleteஎல்லா தவறுகளையும் அல்ல !சிறிய தவறுகளை !ஆனால் உங்களை பொறுத்தவரை பெரிதாய் இருக்கும் என்பதை மறுக்கவில்லை ,மொழி புரிவதால் ....எனக்கு அது சிறிய தவறாய் தெரிகிறது என்பதே எனது நிலை !பொறுமையாக பதிலளித்ததற்கு நன்றி !
அவர் சேவை செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை.... மொழிபெயர்ப்பு வழியாக அவர் ஏன் வாசகர் மனதை கொள்ளை அடிக்க கூடாது.... மீண்டும் கூறுகிறேன் வணிகத்தில் லாபம் என்பது மிகவும் நல்ல விடயம்... அதில் எனக்கு எதிர் கருத்து இல்லை.. ஆனால் படைப்பின் உருவாக்கத்தில் சமரசம் அதன் முழுச்சுவையையும் எட்டாக்கனி ஆக்கி விடும்.... என் வேண்டுகோள் காமிக்ஸ் ரசிகர்கள் எல்லாரிற்குமானது... அதில் நான் மட்டும் தனித்து பலனடையப் போவது இல்லை... :)
Deleteகாத்திருப்போம் நல்லது நடை பெற !
Deleteஎன் அன்புக் கண்மணிகளே,
ReplyDeleteஎட்டுக்கால் எலி கதையை ரீ பிரிண்ட் கேட்டு நீங்கள் கதறியழுத கதை என் காதுக்கு வந்து சேர்ந்தது. சீக்கிரமே டிங்கரிங் பார்த்து டெலிவரி செய்ய ஆவன செய்கிறேன். கார் பேட்டரில காக்கா கதையையும் கத்தரி போட்டு முப்பதாவது முறையாக மங்களம் பாடும் எண்ணம் இருக்கிறது என்பதையும் பாசத்தோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ரீபிரிண்ட் பற்றிப் பேசும் இந்தத் தருணத்திலே புதிய புத்தகங்களின் தரம் குறித்த புகார்களை அறிய நேர்ந்தது. என்ன பழக்கம் இது? பழங்கதை பேசி பல்லாங்குழி விளையாடுவதன்றோ நம் வழக்கம்? எங்கிருந்து வந்தது இந்த சுணக்கம்? எடிட்டிங் பற்றிய விதண்டாவிதமான கேள்விகளும் எழுவதைக் காண்கிறேன். புது புக்கு படிச்சா ரிஸ்க்கு, பழைய புக்கு படிச்சா பீடை எனும் எனது கொள்கை நீங்கள் அறியாததா? மொழிபெயர்ப்பு பற்றி கேள்வி எழுப்பும் துர்மதியாளர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார். ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர்!
சந்தா பற்றியும் தரம் பற்றியும் சத்தம் எழுப்புவர்களுக்கு, யாராவது காலை வாரிவிட்டால் காலைப் பிடித்தாவது என்னைக் காப்பாற்றத் தயாராயிருக்கும் என் குலவைக் கண்மணிகள் இருக்கும் போது எனக்கென்ன கவலை? பேப்பர் போடும் பையன் லேட்டா வந்தாலே ஒரண்ட பண்ணும் என் குலவைத் தங்கங்கள் புத்தகம் வராவிட்டாலும் எனக்காக உருண்டு படுக்கும் பாசமுள்ளவர்கள்.
திரு சங்கர் அவர்களுக்கு, வலிக்காத மாதிரி அடிங்க என்று கேட்ட பின்னரும் கூட வளைச்சு வளைச்சு அடித்ததால் பார்சல் சீரிய அன்பின் வெளிப்பாடாக சிதைத்து அனுப்பப்பட்டதைப் போலவே கனிவான அன்பின் வெளிப்பாடாக பக்கங்களை கசக்கியும் அனுப்பியுள்ளோம். ஓரவஞ்சனை உடம்புக்கு ஆகாது. ஒழுங்கா இனிமேலாவது சொம்பைத் தூக்கிட்டு சொஸ்தமா கூட்டத்தில சேர்ந்து உக்காந்து குலவை பாடுங்க.
தவழ்ந்து புரளுங்கள் என் தங்கங்களே.
இவன்,
சிவகாசி ஆரம்பநிலை பள்ளிக்கூட எட்டுமாஸ்டர்,
RTO அருகே,
ஆண்டியாசந்தாபட்டி,
சிவகாசி,
சோக்கு டிஸ்ட்ரிக்ட்.
//காமிக்ஸ் மட்டும் அல்ல - எந்தப் புத்தகமாய் இருப்பினும் மூலம் தழுவிய மொழிநடை கொணர்வது தார்மிகப் பொறுப்பாகும்.//
ReplyDeleteஇங்கே கதையின் நடையே மாறிப்போகுதே...
ஜெரோம் ஜோர்டான் கதைகளின் நுனுக்கமான விஷயங்கள் தமிழ் வாசகனை வந்தடையவில்லை. மேலோட்டமான மொழிபெயர்ப்பே நடந்துள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கிறது என்று அரைகுறை மொழிபெயர்ப்பில் அக்கறையின்மையில் திருப்திபடலாமா?
கிராபிக் நாவல்கள் புது அறிமுகங்கள் வர இருக்கின்றன அவையும் மொழிபெயர்ப்பில் சொதப்பினால் இழப்பு யாருக்கு?
இன்னும் சற்று முயற்சி செய்தால் நிச்சயம் நல்ல மொழிபெயர்ப்பை தர விஜயன் அவர்களால் முடியும்...
தூங்கி வழியும் ஜெரோம் கதைகள் என்னை பொறுத்த வரையில் தேவை இல்லை ,எனது குறைந்த ரசனையாக கூட இருக்கலாம் .....
Deleteபாருங்கள் மோசமான மொழிபெயர்ப்பால் உங்கள் ரசனையை நீங்கள் குறைத்துக் கொள்ள தயாராக இருப்பதை நண்பரே, ஜெரோம் உங்களிற்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அதற்கு காரணமாக மொழிபெயர்ப்பு அமைந்து விடக்கூடாது அல்லவா... ஆனால் நீங்கள் வேகமான கதைகளிற்கு பிரியர் என்பதால் :) ஜெரோம் கதைகள் உங்களிற்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.... எல்லாரிற்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்பது ஒரு கட்டாயம் இல்லை அல்லவா நண்பரே.
Delete// ஆனால் நீங்கள் வேகமான கதைகளிற்கு பிரியர் என்பதால் :) ஜெரோம் கதைகள் உங்களிற்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.... எல்லாரிற்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்பது ஒரு கட்டாயம் இல்லை அல்லவா நண்பரே. //
Deleteஅப்பட்டமான உண்மை !
அந்த "பின்னர் காரை கியரில் போட்டு ஓட செய்திருக்கிறான் " என்பதும்
ReplyDelete//அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும்// இந்த வரியும் சரியாக பார்த்திருக்கலாம்
கார் ரிப்பேர் ஆன காரணம் முன்பே நமக்கும் தெரிய அந்த காவல் துறை அதிகாரி கூறுவது ,பின்னர் துப்பறிவாளர் முடிச்சை அவிழ்க்க உதவ வேண்டும் என்ற சுவாரஸ்யத்தை குறைத்து விட்டது உண்மை !
இந்த மூன்று காரனங்களும் சொதப்பி விட்டன !
நீங்கள் கூறிய பிற தவறுகள் ஓரளவு ஏற்று கொள்ளலாம் என நினைக்கிறேன்
அந்த 8km தொலைவு என்ற கணிப்பு அல்லது புதிய சேர்ப்பு கார் பாதி தொலைவில் நிற்பதால் காருக்கு சென்று திரும்பி வரும் தொலைவே என நினைக்கிறேன் !அந்த உயர் மின்னழுத்த கம்பி மூலமாக மின் கடத்தலால் ,டெலிபோனை எடுக்க ,டெலிபோன் ஒயர் கருகியது ஓவியத்திலே உள்ளதே என கணிக்கும் படிதானே இருந்தது !
ஆனால் இந்த கதையை மிகுந்த ஈடுபாட்டோடு படித்தேன் !வசனங்கள் அருமை !வாய் விட்டு சிரித்தேன் லிபெல் , ஓவியங்கள் மூலமாகவே சிரிப்பு பிய்த்துகொண்டு வந்ததென்றால் உரையாடல்கள் இன்னும் அதிர்வெடி சிரிப்புகள் ,அந்த அற்புதமான வண்ண சேர்க்கை என மிக சிறந்த வாசிப்பு அனுபவம் முன்பு படித்ததை விட இப்போது உங்கள் கேள்விகளால் நான் படித்ததால் !இதனை அளித்த ஆசிரியரை எப்படி மறக்க இயலும் !நான் திட்டினால் நன்றி கெட்டவன் அல்லவா !ஆனால் உங்கள் முயற்சியையும்,அதில் உள்ள உண்மைதனையும் கேலி செய்தால் நீங்கள் கூறுவது போல நமக்கு நாமே கேடு செய்து கொள்வது போலத்தான் !ஆனால் மொழி பெயர்ப்பில் வசனங்கள் அனைத்தும் மிக மிக சிறப்பே !நீங்கள் கூறிய சில ஆனால் யோசிக்க கூடிய நிகழ்வுகள் ஏற்று கொள்ள இயலாது ! மின் வெட்டு என வேலை பளு அதிகரித்ததும் காரணமே !ஒட்டு மொத்தமாக பத்து கதைகள் !ஆனால் இந்த மொழி பெயர்ப்பு மிக வேகமாக நடை பெற்றதும் அறிவோம் !ஆசிரியர் கூறியவையே இவை !கதை நடையால் மயங்கி இருக்கலாம்!இந்த காரணங்களை நீங்கள் ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்றாலும் உண்மை உள்ளது! இப்போது நீங்கள் கூறா விட்டால் எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை !
நீங்கள் கூறியவற்றை ஆசிரியரும் சரி செய்ய முயற்சி எடுத்திருப்பார் தங்கள் கடிதம் அல்லது மின்னஞ்சல் கிடைத்தவுடன் என நினைக்கிறேன் !
ஸ்டீல்கிளா :
ReplyDelete// !நீங்கள் கூறிய சில ஆனால் யோசிக்க கூடிய நிகழ்வுகள் ஏற்று கொள்ள இயலாது ! மின் வெட்டுஎன வேலை பளு அதிகரித்ததும்காரணமே !ஒட்டு மொத்தமாக பத்து கதைகள் !ஆனால் இந்த மொழி பெயர்ப்பு மிக வேகமாகநடை பெற்றதும் அறிவோம்!ஆசிரியர் கூறியவையே இவை!கதை நடையால் மயங்கி இருக்கலாம்!//
உங்கள் வாதம் குழந்தையை ஆறே மாதத்தில் பெற்றெடுக்க வேண்டும். என்பதற்காக
கைகால் உடைந்தாலும் பரவாயில்லை. என்று கூறுவது போல் உள்ளது.
கதைகள் சற்று தாமதமாக வந்தால்தான் என்ன?
நன்றாக வரவேண்டிதுதானே முக்கியம்?
இல்லை இதனை நான் சப்பை கட்டும் சூழ் நிலையில் சொல்லவில்லை நானூற்று சொச்ச பக்கத்தில் இந்த கதைகள் சில இடங்களில் சிறிய தவறுகள் ஆனால் கதை கூறிய விதம் என மனதை ஈர்க்கதானே செய்கிறது ,இது எனது மனதளவில் இருந்து வரும் வார்த்தைகள் ,நிச்சயமாக நான் ஆசிரியர் செய்வது என்றால் சரி என வாதிடவில்லை ,அவருக்காக சப்போர்ட் செய்ய வேண்டுமே என்றும் சொல்லவில்லை !அந்த பிரம்மாண்ட முயற்ச்சியில் வசனங்கள் பிடிக்கவில்லை என இருந்தால் நானும் ஏற்று கொள்கிறேன் !கதை படிக்கும் பொது ஏமாற்ற உணர்வு,அல்லது நெளிய வைக்கும் உணர்வு இல்லை என்பதே நான் கூற விரும்புவது ! அவ்வளவு பக்கங்களில் ஏற்பட்ட இந்த சில தவறுகளை ஆசிரியரிடம் அனுப்பினால் ,மேலே நான் ஏற்று கொண்ட இரண்டு பெரிய தவறுகளும் ஆசிரியர் மொழி பெயர்ப்பாளரிடம் கூறினால் தக்க விளைவை ஏற்படுத்தும் !அதனை அந்த மொழி பெயர்ப்பாளரும் உணர்ந்து கொள்வார் !அவரையும் கோபபடுத்தாமல் நியாயத்தை சொல்லலாமே !இது பெரிய தவறு என அவரும் ஏற்று கொள்வார் ,நீங்கள் ஆசை படுவது போல மூலம் சிதையாமல் வர வாய்ப்புள்ளதே !// "பின்னர் காரை கியரில் போட்டு ஓட செய்திருக்கிறான் " என்பதும்
Deleteஅவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் இந்த வரியும் சரியாக பார்த்திருக்கலாம்
கார் ரிப்பேர் ஆன காரணம் முன்பே நமக்கும் தெரிய அந்த காவல் துறை அதிகாரி கூறுவது ,பின்னர் துப்பறிவாளர் முடிச்சை அவிழ்க்க உதவ வேண்டும் என்ற சுவாரஸ்யத்தை குறைத்து விட்டது உண்மை !//
ஜில்லின் அடுத்த கதை இது போல வந்தால் நீங்கள் இப்படி வறுத்த பட நியாயமுண்டு !
நூறு சதவீதம் குறைகள் இல்லாமல் கதைகளை தர முடியாது!பிரபல வெளியீடுகளிலும் பிழைகள் இல்லாமல் இல்லை !பின்னர் அவர்கள் திருத்தி வெளியிடும் பதிவுகளிலும் இதுவே நிலை !மீண்டும் திருத்தம் !அல்லவா !இந்த கதையிலுமே சில தவறுகள் ஏற்று கொள்ள இயலா வாதங்கள் என்பது மொழி பெயர்ப்பில் அல்ல மூலத்திலும் உள்ளது விஞ்சான ரீதியாக ஆகவே இந்த எதிர்பாராத தவறுகள் புறம் தள்ள கூடியனவே !ரசிப்போம் !இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம் !
வலிக்காத மாதிரி அடிங்க என்பதும் இதற்காகவே !யாரும் சண்டை போடாமல் சொல்லும் விதத்தில் சொன்னால் ஏற்று கொள்வார்கள் !பிறரை கோப படுத்தி நான் கூறுவதே நியாயம் என கூறுவது எதற்கு !
நன்றாக வந்திருக்கிறது !இதனை விட நன்றாக வர வேண்டும் என்ற நண்பர் சங்கரின் மற்றும் உங்களது ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் !
Deleteநண்பரே, எழுத்துப் பிழைகள் இருக்கலாம் கருத்துப் பிழைகள் கூடாது.
Deleteமொழிபெயர்ப்பு பற்றிய விவாதங்கள் பல மாதங்களாகவே நடக்கின்றன.
ReplyDeleteமொழி மாற்றம் செய்யும்போது கதையின் உயிர்நாடி கெட்டுவிடக்கூடாது. அதிலும், துப்பறியும் கதைகளில் வரும் சின்னச்சின்ன வசனங்களும் மிக முக்கியமாக கதையை நகர்த்துபவையாக, துப்பறிதலுக்குரிய சான்றுகளாக இருக்கும். அவற்றை சரியாகக் கண்டுகொள்ளாமல் போவது மோசமான பிழையே!
இப்போது, லயன், முத்து காமிக்ஸ்கள் மாதாமாதம் வெளிவருகின்றன. வெளிவந்தேயாகவேண்டும் என்ற ஒரு கட்டாயத்துக்குள் வெளியீட்டு நிறுவனம் தள்ளுப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன். வேகமான நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்படும் துரும்பு போல இப்போது தமிழ் காமிக்ஸ் வெளியீடுகள் வந்துவிட்டனவோ என்று தோன்றுகிறது. இந்தத் தேதியில் வெளியிட்டாகவேண்டும் என்று அவசரகதியில் வேலைகள் நடக்கும்போது தவறுகள் கண்டும் காணாமலும் விடப்படுவது சகஜம்.
'டைமிங்'கை மட்டும் கவனத்தில் கொள்ளாது தரத்திலும் கவனம் எடுக்கவேண்டியது அவசியம். கலரில் கொடுத்தால்போல மொக்கையான மொழிபெயர்ப்பை ஆகா ஓகோவென புகழமுடியாதல்லவா?
தமிழ்ல் இப்போதைக்கு வெளிவரும் ஒரே காமிக்ஸ் குழுமம் என்ற ரீதியில் எனது ஆதரவு லயன், முத்து விற்கு வலுவாகவே இருக்கிறது. ஆனாலும், அண்மைய 'வேக' கலாசாரம் - விவேகத்தை துடைத்தெறிந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
முத்துவில் முன்பு வந்த ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளின் மொழிபெயர்ப்பு அந்தக் கதைகளின் உயிர்நாடியாக இருந்ததை ரசித்திருக்கிறேன். அதில் சிறிதாக சொதப்பினாலும் கதையே குழறுபடியாகிவிடும்.
ஒரு ரூபாயில் இட்லி என்பதற்காக அதில் பூச்சி, புழு வந்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுவிட்டு தமிழ்நாட்டு முதல்வரை வாழ்த்தவேண்டும் என்று நினைத்தால் அது சரியாக இருக்குமா?
'நம்பிக் கட்டினோம் நன்றாக இருக்கிறோம்' என்று ஒரு விளம்பரம் போகும். ஆசிரியரை நம்பி சந்தா கட்டியவர்களை அவர் ஏமாற்றக்கூடாது - ஏமாற்றமாட்டார் என்றுதானே நம்புகிறார்கள் சந்தாதாரர்களும், வாங்குபவர்களும்?
மாதாமாதம் வெளியிடுகிறோம், கலரில், ஆர்ட் தாளில் என்று அச்சுத்தரத்தை அதிகரிக்கும்போது அதன் உள்ளடக்க - உயிரான மொழிபெயர்ப்பின் தரமும் அதிகரிக்கவே வேண்டும்.
கொரியர் கட்டணம் அதிகமென்று சண்டைபிடிப்பவர்கள், மொழிபெயர்ப்பில் உள்ள வலுவிழந்த தன்மையை கண்டுகொள்வதில்லை.
கலரை விட்டுவிட்டு, அதற்கு ஆகும் செலவை மொழிபெயர்ப்புத் தரத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாமே?
இன்றைய இளைய தலைமுறை ஆங்கிலத்தில் காமிக்ஸ் படித்து கலக்குகிறது. அவர்களிடம் நமது புத்தகங்களை கொடுத்தால், 'ஆங்கிலத்தில் இருப்பது இங்கே தப்புத்தப்பாக இருக்கிறதே' என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்வது?
அண்மையில் வந்திருக்கும் (நாங்கள் இன்னும் படிக்காத) வில்லனுக்கொரு வேலி கதையின் மொழிபெயர்ப்பை பலரும் பாராட்டுகிறார்கள். பார்ப்போம்...
லார்கோ,மற்றும் nbs ஜில் தவிர பிற கதைகளின் மொழி பெயர்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன !மோசமாக உள்ளதா !ஷங்கர் ,சாக்ரடீஸ்உங்கள் கருத்துகளும் அறிய ஆவலாய் உள்ளேன் !
Deleteபொடியன் சார்!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள் கடிதங்கள் பலனளித்தனவா என்பதை இனி வரும் கதைகள் சொல்லும்!
ஸ்டீல்கிளா :
ReplyDeleteஉங்கள் நிலைதான் எனக்கும்.
தமிழில் முதலமுறை படிக்கும் போது எனக்கும் எந்த நெருடலும் இருப்பதில்லை!
இதுபோன்ற விவாதங்களில் இருந்துதான் மொழிபெயர்ப்பின் குறைகளையும் தமிழில் நமக்கு ஏற்படும் இழப்புகளையும் என்னால் உணர முடிகிறது.
https://m.facebook.com/groups/113739122115070?view=permalink&id=144818395673809&refid=18&_ft_=src.24%3Asty.308%3Aactrs.100001422966362%3Apub_time.1358529751%3Afbid.144818395673809%3As_obj.4%3As_edge.1%3As_prnt.11%3Aft_story_name.StreamStoryGroupMallPost%3Aobject_id.113739122115070%3Aobject_timeline_token_map.Array
https://m.facebook.com/groups/37137139775?view=permalink&id=10151253696819776&p=10&refid=18
ஆனால் தங்கக்கல்லறை முதல் பதிப்பு படித்திருந்ததால் மறுபதிப்பில் உள்ள குறைகளை என்னால் உணர முடிந்தது!
ReplyDeleteஇன்றைக்கும் தங்கக்கல்லறை மறுபதிப்பை என்னால் ரசித்து வாசிக்க இயலவில்லை!
சாரி இப்போதுதான் பார்த்தேன் ,நீங்கள் அனுப்பிய லிங்கை,இது அறிவுசார் வட்டம் ,தங்கள் அறிவை மெச்சிகொள்ளும் ஒரு கூட்டம் என்பதனை உணர்ந்து கொண்டேன் ,சொம்பு தூக்கியாக நினைத்தாலும் பிடித்ததை ரசிக்கவே விரும்புகிறேன் ,ரசிக்க மட்டுமே ஆராய்ச்சிக்கல்ல என ஆசிரியர் கூறுவதை நான் வரவேற்கிறேன் நீங்கள் கூறிய லிங்கை பார்த்த பின் !சிறந்த புத்தகங்களை வாங்கி படிக்கலாம் அந்த விவாதங்களில் ஈடுபட்டவர்கள் !
Deleteஅதில் சிலரின் விவாதங்கள் தங்களது புலமையை காட்டவே,இதன் மூலம் புத்தக வளர்ச்சிக்கோ ,அல்லது தமில் படிப்பவர்கள் சிறப்பாய் படிக்க வேண்டுமே என்ற எண்ணம் கொண்டோ அல்ல !படிக்கும் போது சந்தோசம் தருகிறதா படிக்கிறோம் ,கதைகள் எப்போது சந்தோசம் தரவில்லையோ அப்போது நான் நிறுத்தி கொள்வேன் !பிறர் மனதை சந்தோசபடுத்தும் அற்புதமான களம் அது !
DeleteGood say. Don't waste your time in getting into discussion with these folks.
Deleteஆமா, பிரின்ஸீ சொல்லிட்டாரு கேட்டுக்கோங்க...இல்லீன்னா சீட்டக் கிழிச்சு வீட்டிற்கு அனுப்பிடுவாரு...
Deleteஸ்டீல்கிளா
ReplyDeleteஜெரோம், எமனின் திசை மேற்கில் இருக்கும் குறைகளை எடுத்துக்கூற விரும்பினேன்...
உங்களை புண்படுத்தும் நோக்கமில்லை!
அந்த விவாதங்களில் உள்ள உண்மைகளைப் பற்றி சிந்திக்காமல்
கதைகள் எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் தமிழ் வாசகனின் மனோபாவத்துக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
உங்களைப் போன்றவர்கள் சிந்திக்காதவரை தமிழ் காமிக்ஸ் முன்னேறப் போவதில்லை.
என்ன சொல்லி புரிய வைக்க முயன்றாலும்
waste of time! என்பதுதான் நிதர்சனம்!
ஐந்து பத்து ரூபாயிலிருந்து ஐம்பது நூறு ரூபாய்க்கு முன்னேறிய தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பிலும் முன்னேறினால் சந்தோஷமே...
I accept your view on the translation front. But the folk who write this article OR some of the comments from folks here just looks like; they are happy to find a fault in their own way; but not anything to do with feedback for improvement.
ReplyDeleteThe Tamil used in this forum articles is more of SriLankan-Tamil; Not the General Tamil used everywhere. If I want to find a fault; I can even find that as a fault.
பிரின்ஸி ரமா கார்த்திகை, நாம அப்டித்தான், இல்லாத பொல்லாத பொய் எல்லாம் எடுத்துவிட்டு எக்கசக்கமா இம்சை பண்ணுவோம்... கிச்சு கிச்சு காட்டுவோம்... முன்னேற்றத்திற்கு பாடுபட நாம என்ன கட்சி தொண்டர்களா.... இலங்கை தமிழில் குளறுபடிகளை சுபதின சுபவேளையில் ஊற்றடிக்கும் ஆர்வம் உந்தி தள்ள நீரோவிற்கு பிள்ளை பெத்துக்க முடியாது எனும் வகையில் வெட்டு ஒன்று துண்டு எக்கசக்கமாக என்று சொன்னால் அது ஏற்றுக் கொள்ளப்படாதா என்ன !!! வினோதமான நியாயம்... ஆனால் பதிவில் கேட்ட கேள்விகளிற்கு விடை சொல்லாமல் மழுப்பும், இதைவிட இன்னம் பத்து மடங்கு தவறுகளுடன் கதை வந்தாலும் அதனை மேய்ந்துவிட்டு சூப்பர் கதை என உவகை பூக்கும் காமிக்ஸ் ரீடிங் கழகத்திடம் இருந்து வருவதில் என்ன வியப்பு இருக்க முடியும்... உலகெங்கும் அல்லது பிரபஞ்சம் எங்கும் பயன்படுத்தப்படும் டேமிலிற்கு நீங்கள் டூசன் வழங்குவீர்களா .... சந்தா எவ்வளவு.... அடுத்த கமெண்டில் பதிவில் உள்ள கேள்விகள் ஒன்றிற்காகவது பதிலை நீங்கள் தந்தால் ஜாலியாக சந்தா கட்டுகிறேன்....
Deleteஇப்படிக்கு
தங்கள் வருங்கால டூசன் ஸ்டூடண்ட் FOLK
டொய்ங் டொய்ங் டொய்ங்
Me think this is british english. Me only speak indian english. ஆங்...
Delete