Friday, November 5, 2010

ரேப் ட்ராகன் - 26


காதல் கடல், கண்ணீர் அலை

கலெக்டிக் ரோமியோ காமா ஜோஸ் அவர்களின் காதல் இம்சை

நலம்தானா என்னுயிர்க் காதலரே என்ற காதல் ஜீவக் கேள்வியை காதல் கணையாக காமா ஜோஸை நோக்கி ஏவிய மொனிக்காவை பதறிப் போனவனாக தன் பாதங்களில் இருந்து அள்ளி எடுத்தான் காமா ஜோஸ்.

- மொனிக்கா, என் அன்பே, என்ன இது, என் பாதங்களில் உன் இதழ்கள் பதிவதற்கு நான் தகுதியானவன் இல்லை. என்னைப் போன்ற ஒரு கயவனிற்காகவா நீ உன் கண்ணீரை செம்முத்துக்களாக உதிர்க்கிறாய். கூடாது பெண்ணே கூடாது. உன்னை விட்டு, உன் உயிர் காதலைவிட்டு விலகிச் சென்றவன் நான் என்பதனை மறந்துவிடாதே.

- இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்திலும், உணர்வுகளிலும் என்றும் என்னையும் நம் காதலையும் பரிசுத்தமாக காத்து வந்திருக்கிறீர்கள். என் காதலரே, உங்களை என் கண்களில் கண்டதும் எனக்குள் நிகழும் மாற்றங்கள் வேதியியலையும் வெல்கின்றனவே.

- என் உயிரே, கட்டிக் கரும்பே, காதல் எறும்பே உன்னைவிட்டு நான் பிரிந்த நாள் முதலாய், உன் கொடிய சாபத்தை நீக்குவதற்கான வழிகளை கண்டறிய விழைந்தேன். உன் சாபத்திலிருந்து உன்னை விடுவிக்கும் விமோசனத்தைக் கண்டறியாது உன்னைக் காண்பதில்லை என தவமிருந்தேன். ஆனால் கண்கள் காணாவிடிலும், என் கரங்கள் உன் அழகை தழுவாவிடிலும் என் இதயத்தின் நினைவுகளின் ஏகபோக ராணி நீ. மொனிக்கா என் பேரின்பக் காதல் மோகினி.

- அத்தான்

- அப்படி அழைக்காதே, கூசுகிறது.

- அத்தான், அத்தான், அத்தான்

- ஹொய், ஹொய், ஹொய்

இவ்வாறாக இரு காதல் புறாக்களிற்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த குலவல் காதல் சம்பாஷணையைக் காது கொடுத்துக் கேட்ட குந்தவியும், டேனியும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார்கள்.

- டேனி, எமக்கு மட்டும் இப்படி ஒரு காதலர் கிடைக்காமல் போய் விட்டாரேயடி, ஆகா….காதல் என்றால் இதுவன்றோ அமர காதல் என்றவாறே டேனியைக் கட்டிப்பிடித்து கண்ணீரை சொரிந்தாள் குந்தவி.

- ஆம் இளவரசி, கொடுத்து வைத்தவள் இந்த மொனிக்கா. காட்டேரியாக இருக்க சபிக்கப்பட்டாலும், ஒரு உண்மையான ஆண்மகனின் காதலில் அவள் உயிர் வாழ்கிறாள் என்றவாறே மூக்கை உறிஞ்சினாள் டேனி.

மென்னிக்கடி மொனிக்காவிடம் மரண அடி வாங்கிய சீனன் ஷங்லிங், காதல் புறாக்களின் பரிபாஷனையை வெறுப்புடன் பார்த்தான்… உலக மா கவி செக்ஸ்பீர் மட்டும் உங்கள் காதல் நாடகத்தை காண்பார் எனில் காதல் காவியங்களை எழுதுவதை நிறுத்திவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்து விடுவார். என்ன உருக்கம், என்ன நெருக்கம். காமா, இன்றுடன் இந்த மொனிக்காவின் கதையை முடித்து உன்னை இந்த கொடூரமான காதல் சிறையிலிருந்து விடுவிக்கிறேன். ம்ம் அவளை விட்டு விலகு என்றவாறே வெள்ளிக் குறுவாள் ஒன்றை உருவினான் சீனன்.

- அத்தான், தயவுசெய்து உத்தரவு தாருங்கள் மொட்டையின் இருப்பிற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன்…

- முற்றுப்புள்ளி வைப்பது நீயல்ல அழகுப் பெண்ணே, நான்…. ரஃபிக்கின் குரல் அறையை அதிர வைத்தது. பஞ்சணையில் இருந்த தன் உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கிய ரஃபிக்…. அடேய், பச்சைக் கண்ணா, நீ ஒர் உண்மையான ஆண்மகன் என்றால் என் விலங்குகளிலிருந்து என்னை அவிழ்த்து விடு. மதம் கொண்ட களிறுகள் பொருதுவதுபோல் நாம் பொருதுவோம், உன் காதலிற்கும், ஆயுளிற்கும் நான் முற்றுப்புள்ளி இடுகிறேன். மொனிக்கா… என் காதல் மொனிக்கா, உன் காதலனை நான் அழிக்கப் போகிறேன் என்று என்னை வெறுக்காதே, உன் மேல் நான் கொண்ட காதலிற்காகவே இந்த செயலை நான் செய்யப் போகிறேன். இது காதல் யுத்தம். அதன் வெற்றிச் சங்காக ஒலிக்கப் போவது என் இதயத்தின் சத்தம்…. யாரங்கே… அடேய் மொட்டைத் தலை சீனா என் விலங்குகளிலிருந்து என்னை விடுவியடா, என்னுள் இருக்கும் விலங்கை நான் விடுவிக்கிறேன்… ரஃபிக்கின் சொற்கள் தீ அம்புகளாக நாலா திக்கிலும் பறந்தன.

- ஒஹோ, இவன்தானா அந்தப் புரட்சிக்காரன். காமா, இவனைக் கொன்று விடவா, அதிகம் துள்ளுகிறான் என்றான் சீனன்.

- வேண்டாம், அவனை நம் கப்பலிற்கு எடுத்துச் சென்றுவிடலாம்..

- சபாஷ், அருமையான யோசனை காமா, இவனை அடிமை வியாபாரிகளிடம் விற்று அழகான பெண் அடிமைகளை வாங்கிக் கொள்ளலாம்…

- அத்தான், இந்த சீனனுடன் சேராதீர்கள். இவன் ஒரு நாசக்கிருமி.

vampire - அழகியே, அத்தான், அத்தான் என்று நீ அந்தக் கோழையை அழைக்கும்போது, அவன் செத்தான் செத்தான் என்று என் மனம் பாடுகிறது… இடையில் புகுந்தான் புரட்சிக்காரன். ரஃபிக் இருந்த பஞ்சணையை சில எட்டுக்களில் நெருங்கிய சீனன், ரஃபிக்கின் கழுத்தில் ஓடிய நரம்பொன்றினை தன் விரல்களால் ஊன்றி அழுத்தவே மொனிக்.. என்றவாறே தன் நினைவை இழந்தான் ரஃபிக்.

- ஷங்லிங், ராஜமாந்தீரிகனும், இலுமினாட்டியும் ஓட்டி வரும் புஷ்பக் விமானத்தில் குந்தவியை ஏற்றியனுப்பு. என்னை சற்று தனிமையாக மொனிக்காவுடன் இருக்க விடு. ம்ம்ம்.. கிளம்பு சீனா என்றான் காமா

- ஆமாம், கிளம்படா மொட்டைத்தலை சீனா என்றாள் கேலியாக மொனிக்கா.

- மொனிக்கா, அவனை வையாதே, அவன் ஒரு நாசக்கிருமிதான் ஆனால் அவன் உருவாக்கும் அழிவுகள் கொஞ்சமே…மொனிக்காவின் காதுகளில் மென்மையாக கிசிகிசுத்தான் காமா

- காமா, இந்த அழகியையும் கப்பலிற்கு இட்டுச் செல்லவா என்றவாறே டேனியை நோக்கி தன் தலையை நீட்டிச் சிரித்தான் சீனன்.

- அதனை விட நான் இறப்பதே மேல் என்றவாறே குந்தவியை அணைத்த டேனி... இளவரசி, பிறந்தால் அடுத்த பிறப்பில் உங்களிற்கு தோழியாக நான் பிறக்க வேண்டும் என்று கூறி இளவரசியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்து அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

ரஃபிக்கை விலங்குகளிலிருந்து விடுவித்த சீனன், அடடா இந்தக் கனம் கனக்கிறானே என்றவாறே அவனை அந்த அறையிலிருந்து இழுத்துக் கொண்டு சென்றான். அறையிலிருந்து வெளியேறுமுன்.. ஆகா என்ன அருமையான பஞ்சணை என்று கூறி காமாவை பார்த்து தன் கண்களை சிமிட்டினான். மொனிக்கா நாணினாள்.

மயங்கிய நிலையிலிருந்த ரஃபிக்கை ஆதரவுடன் நோக்கிய குந்தவி.. என் அன்பே, என் காதலே, என் விளையாட்டு இப்படி விபரீதத்தில் முடிந்துவிட்டதே, உன்னை நான் மீண்டும் காணும் நாள் வருமா என்று மனதினுள் அழுதாள். மனம் வடித்த கண்ணீர் அவள் விழிகளில் அரும்ப ஆரம்பித்த கணத்தில் அறைக்குள் சிதறிக் கிடந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் அவள். அறையில் காதலும், காதலரும் தனியே நின்றனர்.

- அத்தான் இனியும் உங்களை என்னால் பிரிந்திருக்க முடியாது, என்னுடன் வந்து விடுங்கள்.

- இல்லை மொனிக்கா. உன் காட்டேரி சாபத்தை போக்க வழிகள் உண்டு என்பதாக அறிகிறேன். மன்மதக்குகை தீவுகளை தேடுபவையாகவே என் பயணங்கள் அமைந்திருக்கின்றன. அதுவரை பொறுத்திரு பெண்ணே.

- நீங்கள் திரும்பாவிடில்..

- என் இதயத்தில் உன்னையும், உன் உயிரில் என்னையும் கொண்டு இந்தக் காற்றில் உன் காதல் தேடி வருவேன்..

- அய்யகோ, அத்தான் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்..

- பெண்ணே, பிரியும் நேரமிது, விடைகொடு.

மொனிக்காவின் இதழ்கள் காமாவின் இதழ்கள்மேல் பதிந்தன, காமாவின் கரங்கள் மொனிக்காவை அள்ளி அணைத்தன, அவர்கள் இருவரினதும் நாக்குகளும் ஆரத் தழுவிக் கொண்டன. சொர்க்கம் என்பது இதுதானே என்பதை இருவரும் உணர ஆரம்பித்த நிலையில் காமாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அறையின் கூரை வழியாக வெளியே பறந்தாள் மொனிக்கா.

சொகுசு விடுதியை விட்டு கனத்த மனதுடன் வெளியே வந்த காமா, வானில் ராஜமாந்தீரிகனின் புஷ்பக் விமானம், குத்து நகரின் திசையில் வேகமாக பறந்து கொண்டிருபதைக் கண்டான். புஷ்பக் விமானத்தை விழி வெட்டாது பார்த்த அவன் தோளின் மீது, மேலேயிருந்து வந்த ஏதோ ஒன்று விழுந்து உருண்டது. தன் கைகளில் அதனைப் பற்றிய காமா, நிலவு வெளிச்சத்தில் அது என்னதென்று நோக்கினான். அந்த செங்கண்ணீர் முத்து அவன் கண்களை காதலுடன் பார்த்தது. தன் கண்களை மேலே உயர்த்தினான் காமா. நிழலான ஒரு உருவம் அவனை விட்டு தூரமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது கலங்கலாக அவன் கண்களில் வீழ்ந்தது.

=================

கப்பலில் ரஃபிக்கிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான் ரஃபிக். இரவு நன்றாக ஏறிவிட்ட வேளையில் அவனது எதிர்காலமானது அந்த இரவைவிட இருளாக அவனிற்கு காட்சியளித்தது. கொடிய சீனன் தன்னை அடிமை வியாபாரிகளிடம் விற்று விடுவான் என்பதை ரஃபிக் உறுதியாக நம்பினான். இவ்வேளையில் அவன் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. கையில் விளக்குடன் அறையினுள்ளே நுழைந்தாள் ஒரு அழகி. அவள் கண்கள் கடலினதும், ஆகாயத்தினதும் நீலத்தைக் கலந்த வண்ணத்தைக் கொண்டிருந்தன. அவள் உடலெங்கும் அழகு தோரணம் கட்டி குதூகலித்துக் கொண்டிருந்தது. விளக்கை கீழே வைத்த அவள் ஏதும் பேசாது தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள். அந்த அழகி தன் ஆடைகளை களைந்ததால் பதறிப்போன ரஃபிக், பெண்ணே நீ யார், ஏன் ஆடைகளைக் களைகிறாய் என்றான்.

- ஆணழகே, இந்த துர்பாக்யவதியின் பெயர் நீல அழகி. கொள்ளையர் கப்பலில் இருக்கும் கொடியவர்களிற்கு என் உடலை பரிமாற வேண்டியது என் சாபம். அழகியின் வார்த்தைகளை கேட்ட புரட்சிக்காரனின் ரத்தம் சூடாக ஆரம்பித்தது. உள்ளம் கொதித்தது. மீசை துடித்தது.

- அழகியே, இந்தக் கொடிய செயலை உன்னை செய்யத் தூண்டியவர் யாரோ.

- வேறு யார், குரூர மனம் கொண்ட சீனன் ஷங்லிங்.

- பெண்ணே, பேரழகே, நீலப்புஷ்பமே நான் சொல்வதை நன்றாகக் கேள். கொடிய கடற்கொள்ளையர்களான காமா ஜோஸையும், ஷங்லிங்கையும் கடல் அரக்கன் புட்டுக் கிறுக்கனின் பலிபீடத்திற்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கப்பலை எனதாக்குவேன். உன்னை என் ராணியாக்குவேன். இது இந்த வானின் மீது ஆணை, இந்த வையத்தின் மீது ஆணை, இந்தக் கடலின் மீது ஆணை, ஏன் நான் உன் மேல் கொண்டிருக்கும் உயிர்க் காதல் மீது ஆணை…

ரஃபிக்கின் ஆவேசக் குரல் இருளில் ஓடிய காற்றில் கலந்து, கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை தழுவியது. இதைப்போல பல சபதங்களையும், காதல்களையும் தன் உடல் மேல் தழுவவிட்ட அந்தக் கப்பல், சிருங்காரமாக ஆடிய அலைகளில் தன் உடலை நளினமாக நகர்த்தியது. தன் முன்பாக பிரம்மாண்டாமாக உருவெடுத்த அலையைக் கிழித்து உடைக்க வேகமாக முன்னே பாய்ந்தது ரேப் ட்ராகன்.

rdfin

ராஜமாந்தீரிகன் கருந்தேள், இளவரசன் இலுமினாட்டி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்கள், புரட்சிக்காரன் ரஃபிக், காமா ஜோஸ் ஆகியோரிற்கு என் அன்பான நன்றிகள்.

நண்பர்கள் அனைவரிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

13 comments:

  1. //என் உயிரே, கட்டிக் கரும்பே, காதல் எறும்பே//

    நீங்க டி.ஆர் ரசிகர்னு சொல்லவே இல்லையே...

    ReplyDelete
  2. செக்ஸ்பீரா! கதைகளில் பெயர்களும் ஒரு தினுசா இருக்கே!:-)
    முதலாம் பாகம் முற்றிற்று. அடுத்த பாகம் வரை காத்திருப்போம்.
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அய்யா,

    இந்த கதை பெரும் வெற்றி பெற்ற ஹிந்தி படமான "கபி கபி ஜிந்தகி, நஹி நஹி ஜாவ்" (இனிய பாடல்கள் மற்றும் பயங்கர சண்டைக் காட்சிகள் நிறைந்தது) கதை போல் இருக்கிறது.

    முதல் பாகமானது இவ்வாறு பல கதைகளின் காப்பி அடித்தே உருவாக்கப்பட்டது. முடிவில் ரமணி சந்திரனுக்கு நன்றி சொல்லாதது தங்களின் கல்மனதை அல்லது மறதியை காட்டுகிறது.

    இரண்டாம் பாகத்திலாவது கதாநாயகன் ஏதேனும் புரட்சி செய்ய வாய்ப்பிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரே அறையிலேயே கதைக்களன் நடக்கின்றமாதிரி கதையை கொண்டு போய், அதிலும் அந்த அறை படுக்கை அறையாக இருப்பினும், பெண் வாசகர்களும் படிக்கும்படி அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.

    லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ஹென்றி ஒடும்பே-ன் (இவர் எழுதிய கதை முடிவு பிடிக்காமல் வாசகர்கள் இவர் இரு கைகளையும் உடைத்து விட்டடார்கள், அதை அவர் கதைக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொண்டார்) மாய எழுத்து நடை உங்களிடதிலும் இருக்கக் கண்டேன்.

    ஒரு இளிச்ச வாயனை கொலைவெறியுடன் ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டு துரத்திக் கொண்டு போகையில் அவன் ரயிலேறி டாட்டா காட்டினால் ஏற்படும் துயர உணர்வு இந்த முதல்பாகம் முடிவடைகையில் ஏற்பட்டது.

    இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. என்ன...முதலாம் பாகம் முடிஞ்சதா....என்னடாயிது..மதுரைக்கு வந்த சோதனை...தொடர முடிச்சிட்டு அப்பறம் என்ன 'அனைவரிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்' வேண்டிக்கிடக்கு????
    (அதுக்குன்னு மனசுமாறி ஆரம்பிச்சிராதீங்க)

    //ராஜமாந்தீரிகன் கருந்தேள்// சொல்லவேயில்ல...எந்தெந்த விஷயங்களுக்கு மருத்துவம் பார்ப்பாரோ????

    ReplyDelete
  5. மாந்திரீகன்னா மந்திரவாதிதானே! கருந்தேள் அவர்ளின் எழுத்துக்களே நம்மை மயக்குகின்றனவே!!!

    ReplyDelete
  6. ராஜமாந்தீரிகன்...அட..ஆமா...எஸ்.கே ரொம்ப கனகச்சிதமா கவனிச்சிருக்கீங்க...

    ReplyDelete
  7. நண்பர் கொழந்த, டீ. ஆரிற்கு யார்தான் ரசிகர் இல்லை :) வருத்தம் வேண்டாம் உடனடியாக தொடரும் எண்ணம் இல்லை:) ராஜமாந்தீரிகன் கருந்தேள் பசலை நோய்க்கு மருத்துவம் பார்ப்பதில் கில்லாடியாக்கும் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் எஸ்.கே, தங்கள் கருத்துக்களிற்கும், வாழ்த்துக்களிற்கும் நன்றி.

    ஜோஸ், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள் காமா ஜோஸிற்கு கதை முடியும் வரையில் ஒரே ஒரு காதலிதான். கைகள் உடைக்கப்பட்ட அந்த எழுத்தாளர் இப்போது இரும்புக்கைகள் உதவியுடன் எழுதுகிறாராம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  8. ஆன்புள்ள ஐய்யா ...

    இந்த தொடரின் அடுத்த பகாம் ஏப்போது வாரும்? இந்தத் தொடரை பாடிக்கமால் கை கால் இருதயம் மண்டையில் இருக்கும் முடி ஆகியவை நடுங்கிக் கொண்டே இருக்கின்றன. . என் நடுக்கம் தீர அடுத்த பாகாம் வாருவதே வாழி.... அவான செயுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் வெச்சுகிட்டா வஞ்சகம் செய்றேன்.... கோஸ்டு ரைட்ட்அர் செத்துட்டார்பா....ஹோஹோஹோ :))

      Delete
  9. ஏய்யா கருந்தேள்....

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கிற மாதிரி இப்படி ஒரு காரியத்தை செய்ய உமக்கு எப்படி மனம் வந்தது. முதல் பாகம் முடிவதற்குள் தாவு கிழிந்து, லுங்கியை தைக்க கூட தோன்றாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அவலபட்ட ஆன்மாக்கள், உம்மை சபிக்கும். இதற்குள், இன்னொரு முறை ஸ்டார்டா.... தாங்காது.... தாங்காது...

    இதற்கு பதில் முத்து லயன் சாணி இதழ்கள் நாலை படித்து தேற்றிக் கொள்ளலாமே.... ஏன் இந்த விஷ பரீட்சை :(

    ReplyDelete
    Replies
    1. அன்பு ரஃபிக் உங்கள் கருத்தை படித்த ஒரு உலவியல் நிபுணர் உங்கள் உள்மனதில் இத்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் எனும் அகக்கூவலின் எதிரொலிப்பே இக்கருத்து என்கிறார்.....:))

      Delete
    2. //லுங்கியை தைக்க கூட தோன்றாமல்//

      இதை எத்தனை நல்லதனமா யோசிச்சாலுமே ஒரு அம்பது ட்ரிப்பிள் மீனிங் வருதே

      Delete
  10. Marquis de sade-ன் மறுபிறவியே, கற்பனையில் கம்பனை விழுங்கியவரே,

    என்னே அருமையான தொடர். எந்தப் பதிப்பகத்தில் முழுப் புத்தகமாகக் கிடைக்கிறது?

    எப்போது இரண்டாம் பாகம் தொடங்குவதாக உத்தேசம்?

    ReplyDelete