Wednesday, September 8, 2010

பிரான்ஹாக்களின் ஸ்பிரிங் பிரேக்


சிறிய நிலநடுக்கம் ஒன்றின் காரணமாக விக்டோரியா ஏரியின் அடித்தரையின் ஒரு பகுதி பிளவுற, அந்த ஏரியின் தரையின் கீழ் இருந்த ஒரு நிலகீழ் ஏரியானது விக்டோரியா ஏரியுடன் இணைகிறது. இதனால் அந்த நிலத்தடி ஏரியினுள் இன்னமும் வாசம் செய்து கொண்டிருந்த, 2 மில்லியன் வருடங்களிற்கு முன்பு வாழ்ந்திருந்த, கொடிய பிரான்ஹா மீன்களின் மூதாதையர்களும் விக்டோரியா ஏரியினுள் குடிபுகுகிறார்கள். இந்தக் கொடிய ஆதி பிரான்ஹாக்களின் அகோரப் பசிக்கு விருந்து படைப்பதற்குத் தயாராக ஏரியில் காத்திருக்கின்றன ஸ்பிரிங் பிரேக் கேளிக்கை கொண்டாட்டத்தில் கலந்து கும்மாளமிட, விக்டோரியா ஏரியில் குழுமியிருக்கும் வனப்பான, வாளிப்பான, செழிப்பான அமெரிக்க இளம் சமுதாயத்தின் உடல்கள்…

1980களில் வெளியான பிரான்ஹா திரைப்படங்களின் ரீமேக் அல்ல பிரெஞ்சு இயக்குனர் Alexandre Aja இயக்கியிருக்கும் Piranha 3D. ஆனால் 1980களில் பல்கிப் பெருகிய திகில் காமெடி வகைத் திரைப்படங்களின் வரிசைக்கு களங்கம் விளைவிக்காதவாறு அவர் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

piranha-3d-2010-14883-415851601 நிறைய பிகினிக்கள், எக்கச்சக்கமான சிலிக்கோன் முலைகள், லீட்டர் லீட்டராக போலி ரத்தம், 3D நுட்பம், படத்தின் நிஜ ஹீரோக்களான அட்டகாசமான கிராபிக்ஸ் ஆதி பிரான்ஹாக்கள், ஒரு வரிக்கதை, நீர் நிலைகளை குப்பைத் தொட்டிகள் ஆக்காதீர் என்ற ஒரு உபதேசம்!! இவற்றுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு பக்கம் காவல்துறையின் எச்சரிக்கையை சட்டை செய்யாது ஏரியில் கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களை, மாமிசப் பிரியர்களான பிரான்ஹாக்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக காவல்துறை போராடுகிறது. மறுபக்கம் போர்னோ படப்பிடிப்பிற்காக வந்த ஒரு குழுவின் படகு கொடிய பிரான்ஹாக்கள் நிறைந்த ஏரியில் மூழ்க ஆரம்பிக்கிறது.

இந்த இரு நிகழ்வுக்களிற்குமிடையில் மாறி, மாறி திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர். போர்னோ படப்பிடிப்புக் குழுவினரின் படகில் லோகேஷன் காட்டச் செல்லும் அண்ணன், அவன் பேச்சைக் கேட்டு வீட்டில் இருக்காது படகில் மீன் பிடிக்க சென்று ஒரு தீவில் தனியே மாட்டிக்கொள்ளும் அவன் சிறுவயதுச் சகோதரங்கள், ஆபத்தில் மாட்டிக் கொண்ட தன் குழந்தைகளை மீட்க ஓடோடி வரும் ஷெரீப் அம்மா என திகில், காதல் சென்டிமெண்ட், அம்மா பிள்ளைகள் சகோதர செண்டிமெண்ட், பாலியல் காட்சிகள் என்பவற்றின் கலவையாக படம் நீந்துகிறது.

இதில் பாலியல் காட்சிகள் முதல் கொண்டு திகில் காட்சிகள் வரை பெரிதான தாக்கம் எதனையும் பதிவை எழுதும் முதிர்ந்த வாலிபர் மீது ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே சில காட்சிகளில் சிரிக்க முடிகிறது. விறுவிறுப்பு பீர் குடித்தது போல் மிதமான உணர்வில் அலைகிறது. அற்புதமான போர்னோ நடிகையான Riely Steele, மற்றும் கவர்ச்சி சுனாமி Kelly Brook ஆகியோரின் மார்பகங்களையும், மன்மத மேடுகளையும், பிருஷ்டங்களையும் 3D யில் பார்ப்பது என்னவோ புதிய அனுபவம்தான். ஆனால் ஒளிப்பதிவு இன்னமும் தெளிவாக இருந்திருக்கலாம். கடற்கன்னிகள்போல் அவர்கள் ஏரி நீரினுள் ஆடும் ஆட்டம் செம காமெடி. இரு அற்புதமான அழகுகளின் திறமையை வீணே ஏரியில் தூக்கி கடாசியிருக்கிறார்கள்.

piranha-3d-2010-14883-1397131742 பிரான்ஹாக்கள் விதம்விதமாக மனித உடல்களை சுவைப்பதையும், பிரான்ஹாக்களின் தாக்குதலிலிருந்து தப்பி ஓட விழையும் மனிதர்களின் உடல்கள் குரூரமான முறைகளில் சிதைக்கப்படுவதையும் சூடாக ரத்தம் வழிய வழிய அழகாக காட்டியிருக்கிறார்கள். பிரான்ஹாக்கள் ஏரியில் குழுமியிருக்கும் இளைஞர்கூட்டத்தை தாக்கும் அந்தக் காட்சி ரத்தக் களரிக்கு சரியான உதாரணம்.

போர்னோ நடிகையின் மார்பகங்களில் பொதிந்திருந்த சிலிக்கோன்கள் பிரான்ஹாக்களின் அன்பான கவனிப்புக்களின் பின்னே நீரினுள் மேலெழுவதை காமெடி என்று ஏற்றுக் கொண்டாலும் துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை பிரானாக்கள் விழுங்கி, கடித்து, குதறி, சப்பி, வெளியே காறி உமிழ்வது ஆண்களின் அடிவயிற்றை டச் பண்ணுகிறது. அதுவும் 3Dயில். இக்காட்சியை கைதட்டி ரசித்து மகிழ்ந்த பெண் ரசிகைகளிற்கு என்ன தண்டனை தரலாம்.[ பிரான்ஹா தொட்டிக்குள் இறக்கலாமா ] ஆண்களின் மனதை நோகடிப்பதற்கு ஒரு எல்லையே இல்லையா.

படத்தில் உண்மையிலேயே கொட்டம் அடிப்பவர்கள் ஆதி பிரான்ஹாக்கள். அவலட்சணமான அழகில் அவை அடிக்கும் கூத்து அருமை. ஒரு மனிதனைக்கூட மிச்சம் விடாமல் கடிக்க துடிக்கும் பிரான்ஹாக்களின் வேகம், அசைவு, நளினம், முகபாவம் என்பன ரசிக்க வைக்கின்றன. உண்மையில் இது பிரான்ஹாக்களின் ஸ்பிரிங் பிரேக் என்றால் அது மிகையல்ல. சில தருணங்களில் வேகமாக நீந்தி வந்து விட்டு அவை அடிக்கும் அந்த பிரேக், கூல்.

பிரான்ஹாக்களை அழித்தொழிக்கும் முயற்சிக்கு இயக்குனர் அதிகம் சிரமப்பட்டிருக்கவில்லை. எனவே உச்சக்கட்டக் காட்சிகள் சற்று ஏமாற்றத்தையே தருகின்றன. மேலும் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போட்டுத்தான் திரைப்படத்தை நிறைவு செய்கிறார்கள். இவ்வகையான திரைப்படங்களில் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக நல்ல ஆச்சர்யங்கள் கிடைப்பதுண்டு. துரதிர்ஷ்ட்டவசமாக பிரான்ஹா 3D யில் முலைகளையும், பிருஷ்டங்களையும், பிரான்ஹாக்களையும், ரத்தத்தையும் தவிர பாராட்டிக் கொள்ள ஏதுமில்லை. [*]

ட்ரெயிலர்

20 comments:

 1. அன்பிற்கினிய நண்பரே..,

  நல்ல விமர்சனம்...ஆனால் 18+ போட்டிருக்கலாம் என்பது எனது கருத்து.

  நன்றி..
  மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
  அன்புடன்.ச.ரமேஷ்.

  ReplyDelete
 2. பார்கலாமா? வேண்டாமா பாஸ்

  ReplyDelete
 3. //துரதிர்ஷ்ட்டவசமாக பிரான்ஹா 3D யில் முலைகளையும், பிருஷ்டங்களையும், பிரான்ஹாக்களையும், ரத்தத்தையும் தவிர பாராட்டிக் கொள்ள ஏதுமில்லை//

  Same feeling :)

  ReplyDelete
 4. அடடா.. மிஸ் பண்ணிட்டனே தல. ட்ரெய்லர் பிடிக்கலையா. அப்படியே டீல்ல விட்டுட்டேன். நீங்க சொன்ன.. மேட்டரெல்லாம் படிச்சா 3டி-யில் மிஸ் பண்ணக் கூடாத படம் போல தெரியுதே. ;)

  அப்புறம்... இப்பல்லாம் போர்ன் படங்களே 3டியில் வந்துடுங்கறனால... (அதையெல்லாம் ஒரு ரெஃபரன்ஸுக்காக பார்த்து வச்சிட்டேன். நாளைக்கு யாரும் இந்தத் தொழில்நுட்பத்தை பத்தி கேட்டு நமக்கு பதில் சொல்ல தெரியாம போய்டுச்சின்னா..) இந்த மாறி அரைகுறைகள் எல்லாம் 3டியில் பார்த்தா நல்லாயிருக்குமா?

  ReplyDelete
 5. //ஆனால் 18+ போட்டிருக்கலாம் என்பது எனது கருத்து.//

  ரேப் ட்ரேகனுக்கே 18+ போடம எழுதும் தல எங்க காதலன் மட்டும்தான். இதெல்லாம் ஜுஜுபிங்க.

  ReplyDelete
 6. நண்பர் எஸ். ரமேஷ், எனது எந்தப் பதிவுகளிலும் நான் 18+ ஐ நான் பயன்படுத்தியது இல்லை. அது தேவையற்ற ஒன்று என்பது என் எண்ணம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் அருண்பிரசாத், வேறு ஏதாவது நல்ல படைப்புக்களை பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் பேபி ஆனந்தன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலக்கிய இளவல் பாலா அவர்களே :) நீங்கள் சொல்வது மிக்க சரி, ஆனால் படத்தை மிஸ் பண்ணியதால் உங்களிற்கு சில டாலர்கள் லாபம். 18 + போடும் அளவு ஆபாசமாகவா இருக்கிறது என் பதிவுகள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 7. // 1980களில் பல்கிப் பெருகிய திகில் காமெடி வகைத் திரைப்படங்களின் வரிசைக்கு //

  சரியா சொன்னீங்க காதலரே
  .

  ReplyDelete
 8. // இக்காட்சியை கைதட்டி ரசித்து மகிழ்ந்த பெண் ரசிகைகளிற்கு என்ன தண்டனை தரலாம்.[ பிரான்ஹா தொட்டிக்குள் இறக்கலாமா ] ஆண்களின் மனதை நோகடிப்பதற்கு ஒரு எல்லையே இல்லையா. //

  காதலரே இந்த லிஸ்டில் குந்தவியையும் டேனியையும் சேர்த்து கொள்ளுங்கள்/கொல்லுங்கள்

  வாழ்க புரட்சிக்காரன் ரஃபிக்
  .

  ReplyDelete
 9. யோவ்,என்னய்யா பிரான்ஹா? சுறா மாதிரி வருமா? ;)

  // ஒரு வரிக்கதை//

  ஹாஹா...எதிர்பார்த்த விஷயம் தான். சுறாவுல அதுவும் கிடையாது ஓய்.எது பெட்டர் ? ;)
  சந்தேகமே இல்லாம சுறா தான்.. ;)
  என்னது எப்படியா? அதுல 'தளபேதி' ச்சே,தளபதி இல்ல?

  //அற்புதமான போர்னோ நடிகையான Riely Steele, //

  இதெல்லாம் எப்படி அய்யா உமக்கு மட்டும் தெரியுது? இதுவும் இப்படிதான்.டேனி மேட்டரும் இப்படி தான். ;)
  எது எப்படியோ, ரபிக் பாட நினைச்சா தான் எனக்கு பாவமா இருக்கு.. ;)

  //மார்பகங்களையும், மன்மத மேடுகளையும், பிருஷ்டங்களையும் 3D யில் பார்ப்பது என்னவோ புதிய அனுபவம்தான்.//

  ஹாஹா...
  இந்தப் பதிவுக்கு facebook ல லிங்க் கொடுக்கலாம் னு நினைச்சுகிட்டு இருந்தேன்.அதுக்கு சரியான அடைமொழி கிடைச்சுடுச்சு..
  என்னது யார் wall ல போஸ்ட் பண்ணப் போறனா? இது கூடவா தெர்ல? ;)

  //இக்காட்சியை கைதட்டி ரசித்து மகிழ்ந்த பெண் ரசிகைகளிற்கு என்ன தண்டனை தரலாம்.//

  ரபிக் கிட்ட கேளும் ஓய்.. ;)

  //துரதிர்ஷ்ட்டவசமாக பிரான்ஹா 3D யில் முலைகளையும், பிருஷ்டங்களையும், பிரான்ஹாக்களையும், ரத்தத்தையும் தவிர பாராட்டிக் கொள்ள ஏதுமில்லை. //

  இதுல அதை தான் ஓய் பார்க்கப் போவணும்.இது கூட தெரியாம என்னத்த படம் பார்த்து,என்னத்த பதிவு எழுதி... (குறிப்பு:நான் rape dragon அ எந்த விதத்திலும் சொல்ல.. ;) )

  ReplyDelete
 10. அடடா ! இப்படி வேஸ்ட் பண்ணிட்டாங்களே :)

  ReplyDelete
 11. நண்பர் சிபி, அப்பாவியான குந்தவியை ஏன் பிரான்ஹாக்களிடம் தரவேண்டும், ரஃபிக் இதற்கு சம்மதிப்பாரா :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, சுறா 3டியில் வந்ததா, அதில் முலைகளைக் காட்டினார்களா எனவே பிரான்ஹா தான் சிறந்தது...போர்னோ நடிகைகளை அறிந்து கொள்ளாமல் ஏன் வாழ வேண்டும், டேனி என் செல்லமாக்கும்.... ஏன் இந்தக் கொலைவெறி, பேஸ்புக்ல லிங் தந்து என்னை ஹாஸ்பிடலிற்கு அனுப்பி வைக்க சதி செய்யும் இலுமினாட்டி ஒழிக...ரஃபிக்கின் இதயம் மென்மையானது அவர் பெண்களை தண்டிக்க மாட்டார்.... முலைகளை பார்க்கத்தான் போனேன் ஆனால் அதிலும் ஒரு ரசனை இருக்கிறதல்லவா, மேலும் என்னத்த படம் நான் பார்க்கவில்லை இது என்னத்த குறித்த பதிவும் அல்ல :))

  ReplyDelete
 12. நண்பர் பின்னோக்கி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 13. //18 + போடும் அளவு ஆபாசமாகவா இருக்கிறது என் பதிவுகள் :)//

  ஏங்க... அப்ப 18+ -ன்னு போட்டு நாங்க எழுதற பதிவெல்லாம் ஆபாசமா இருக்குன்னு சொல்லுறீங்களா?? எட்ரா அருவாள... வுடுடா வண்டிய ஃப்ரான்ஸுக்கு.

  எலேய்.. கிஷோர்... இங்கன வந்து நம்ம காதலனை என்னன்னு கவனிலே!! :)

  ReplyDelete
 14. நண்பர் ஹாலிவுட் பாலா, நான் இப்போதே ஓட ஆரம்பிக்கிறேன் :)

  ReplyDelete
 15. ஆஹா... பிரான்ஹா போலாம் என்று நினைச்சேன்

  ReplyDelete
 16. //அற்புதமான போர்னோ நடிகையான Riely Steele, மற்றும் கவர்ச்சி சுனாமி Kelly Brook ஆகியோரின் மார்பகங்களையும், மன்மத மேடுகளையும், பிருஷ்டங்களையும் 3D யில் பார்ப்பது என்னவோ புதிய அனுபவம்தான்//

  இப்ப ,மறுபடி போலாம்னு நினைக்கிறேன் ;-)

  ReplyDelete
 17. // இக்காட்சியை கைதட்டி ரசித்து மகிழ்ந்த பெண் ரசிகைகளிற்கு என்ன தண்டனை தரலாம்.[ பிரான்ஹா தொட்டிக்குள் இறக்கலாமா ] ஆண்களின் மனதை நோகடிப்பதற்கு ஒரு எல்லையே இல்லையா. //

  தண்டனை - நான் போன ரேப் டிராகனில் எழுதினேனே ஒன்று... அதுதான் ;-) ஹீ ஹீ

  ReplyDelete
 18. நண்பர் கருந்தேள், இந்தப் பெண்களிற்கான தண்டனையை கொஞ்சம் குறைக்கப்படாதா :) நண்பர்களுடன் சேர்ந்து போங்கள் ஜாலியாக விசிலடித்துவிட்டு வரலாம் :) கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 19. நானு படிக்கலைங்க... ஒரே கசமுசா படமா இருக்கு :)

  ReplyDelete
 20. நண்பர் மரா, இதைப்போய் கசமுசா படம் என்கிறீர்களே :)

  ReplyDelete