Friday, December 19, 2008

ஒன்று.. இரண்டு.. XIII- (2)


மலை உச்சி மர்மம்-2
நண்பர்களே,

பதிவினைப் படித்து, உங்கள்

கருத்துக்களை வெளியிட்ட அனைவரிற்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்.

JOSH உங்களிற்கு மட்டும் ஒர் சிறப்பான கைகுலுக்கல், அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உங்கள் நண்பர்களிற்கும் கூறிடுங்கள். யார் அந்த வாக்கியத்தை அவதானிப்பார்கள் என இருந்தேன், உங்கள் நுண்ணிய ரசனை அபாரம்.


சென்ற பதிவில் இதனை 3 பகுதிகளாக எழுதுவதாக கூறியிருந்தேன், அதில் ஒர் சிறு மாற்றம். இதுவே இறுதிப்பகுதியாகும். ஏன்? காரணம் எளிமையானது. XIIIல் மொத்தமாக 19 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. விரைவில்!!!!!! வெளிவரவுள்ள லயன் ராட்சத ஸ்பெஸலில் இக்கதை இடம்பெறாது போகலாம் எனும் ஒர் சந்தேகம் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.ஆனால் பின் பதிவிற்காக தேடல்!!? செய்தபோது 13வது ஆல்பமான XIII THE MYSTERY- THE INQUIRY ன் ஞாபகம் வந்தது. ஒர் பத்திரிகையாளனின் விசாரணையை மையமாக வைத்து, வெளியான இவ்வால்பத்தில் சித்திரப் பக்கங்களை விட, விசாரணையின் TEXT பக்கங்கள் அதிகம். சரி அதற்கு இப்போ என்ன? என்று கேட்பீர்களானால் பின்வரும் கேள்விக்கு பதில் கூறுங்கள்.


18 பாகங்களை உள்ளடக்கிய ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பிடிக்காமல் போகப் போவது 13வது ஆல்பமா அல்லது 18 வது ஆல்பமா ?
[இரண்டுமே இடம் பெறாவிடில் கூட கதைத்தொடரில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்பதே என் கருத்து.] இந்த 18 வது ஆல்பம், ஸ்பெஸலில் இடம்பிடிக்க கூடிய சாத்தியமும் இருப்பதால், கதையின் பெண் பாத்திரம் ஒன்று மீதிக்கதையை கூறுவதாக இருந்த 3ம் பகுதியை நான் நீக்கியுள்ளேன். ஸ்பெஸல் கையில் கிடைத்ததும், 18வது ஆல்பம் அதில் இல்லையெனில் 3ம் பகுதியை பற்றி யோசிக்கலாம்.[ 13 வது ஆல்பம் நீக்கப்பட்டால் தப்பில்லை என்பது என் அபிப்பிராயம்] சரி இப்போது கதையின் தொடர்ச்சிக்கு செல்வோம்.

"தொடர்ந்த நாட்கள் இருண்டவை. எனது மாமா PARNELL , எங்கள் மறைவிடத்தை பொலிசாரிற்கு காட்டிக்கொடுத்த நபரைக் கண்டுபிடித்தார். IRAன் ரகசிய மறைவிடத்திற்கு நான் அழைக்கப்பட்டேன்.
காட்டிக்கொடுத்த நபர் எங்கள் அறைக்குள் அழைத்து வரப்பட்டார். அவர் தலை ஒர் சிறிய சாக்குப்பையால் மூடப்பட்டிருந்தது. என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நபரின் தலையிலிருந்த சாக்குப்பை நீக்கப்பட்டது. வேகமாக அடித்துக்கொண்ட என் இதயம் ஒர் கணம் ஸ்தம்பித்தது. என் எதிரில், என்னால் ஆதர்சிக்கப்பட்ட சரித்திர ஆசிரியர் O'SHEA இருந்தார். அவரின் துரோகத்திற்கு அவரிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லையென நிரூபிக்க வேண்டி, என் கையில் ஒர் துப்பாக்கி என் மாமாவால் திணிக்கப்பட்டது. O'SHEA அழ ஆரம்பித்தார். தன் நிலையைக்கூறி கதறினார். கைகள் கட்டப்பட்ட நிலையில், தன் உயிரிற்காக என்னிடம் மன்றாடினார் அவர். நான் அவர் தலையில் சுட்ட போது எனக்கு வயது 17. சிதறிய குருதி வரைந்த ஒவியத்தை நான் மறக்கவேயில்லை, அந்த ஒவியம் என்னை விட உயிருடன் இருந்தது.


இச்சம்பவத்தின் பின் IRAவினை பற்றிய என் கருத்துக்கள் மெல்ல, மெல்ல மாற ஆரம்பித்தன. அதனை விட்டு விலகி விட வேண்டுமென தீர்மானித்தேன். பல நாட்களாக காணமல் இருந்த என் தாயாரை பார்க்க விரும்பி, என் வீடு சென்ற என்னை, வீட்டைச்சுற்றி மறைந்திருந்த பொலிசார் கைது செய்தார்கள். என் வழக்கின் தீர்ப்பு கூறும் நாளில், எனது மாமா செய்த ஏற்பாடுகள் மூலமாக பொலிசாரிடமிருந்து தப்பினேன். அயர்லாந்தை விட்டு வெளியேறினேன். அமெரிக்காவை வந்தடைந்தேன்.

என்னை பொறுப்பேற்றுக்கொண்ட நீயுயார்க் வாழ் அயர்லாந்துக்காரர்கள், என் பாதுகாப்பிற்காக என்னை டென்வரிலுள்ள, காலராடோ எனுமிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அயர்லாந்தை சேர்ந்த தம்பதிகளின் இல்லமொன்றில் நான் தங்க ஏற்பாடாகியது. இப்போது என் பெயர், நீ அறிந்திருப்பதை போலவே KELLY BRIAN என்பதாகும். நான் உன்னை முதன் முதலாக சந்தித்த நாள் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது, JASON FLY. பனி விளையாட்டுத்திடல் ஒன்றில், தவறுதலாக உன்னுடன் நான் மோதி விழுந்தேன். கனிவுடன் என்னை மன்னித்த நீ, எனக்கு பனிச்சறுக்கலில் பயிற்சியும் தந்தாய். நாமிருவரும் ஒரே கல்லூரியில் தான் கல்வி கற்கிறோம் என்பதை நாம் அறிந்து கொண்டபோது எவ்வளவு மகிழ்சியடைந்தோம். நீயும் ,உன் 11 வயதில், கீரீன்பால்ஸ்ஸில் பத்திரிகையாளராக பணியாற்றிய உன் தந்தை, உங்கள் வீட்டில் ஏற்பட்ட ஒர் தீ விபத்தில் மரணமானதையும், அதன் பின் அனாதை விடுதியில் இருந்து வளர்ந்த நீ, உன் திறமையால் எங்கள் கல்லூரியின் உதவித்தொகையில் கல்வி கற்பதாகவும் கூறினாயே. எவ்வளவு இன்பமான நாட்கள் அவை. யாவும் நன்றாகவே இருந்தன, என்னைத் தேடி என் மாமா PARNELL இங்கு வரும்வரை. என்னை மன்னித்துவிடு JASON FLY. என் பொய்களிற்காக என்னை மன்னித்துவிடு. இரவின் மெளனமான ரகசியங்களுடன் மட்டும் உன்னால் பேசமுடியும் எனில், நான் செய்த ஒர் கொலைக்காக, என் மனம் நொருங்கி விழித்துக்கிடந்த இரவுகளின் சரிதத்தை அவை உனக்கு கூறும். என் இருண்ட வாழ்வின் ஒளியாகிய நம் நட்பின் அந்தி நேரம் இது நண்பனே...... "


KILLIAN மலை உச்சியில் காற்று,வீசியவாறே இவர்களை கேட்டுக்கொண்டிருந்தது. KELLY BRIAN, தன் பையிலிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தான்....


பிறகு என்ன நடந்தது என்பதை அறிய சற்றுக்காத்திருங்கள் நண்பர்களே. இவ்விரு இளைஞர்களில் மலையை விட்டு உயிருடன் இறங்கப்போகும் இளைஞன் ஒருவனே. அவனை FRANK GIORDINO மிரட்டி, தனக்காக பணிபுரிய வைக்கிறான். தன் முதல் பணிக்காக CUBAவிற்கு செல்கிறான் அந்த இளைஞன்.


XIII தொடரானது முதன் முதலாக SPIROU எனப்படும் பிரென்ச்சு-பெல்ஜிய காமிக்ஸ் வாராந்திரியில் 1984 ல் ஒர் தொடராக ஆரம்பமாகியது. அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த J.F.KENNEDY ன் கொலைச்சதியையும், 80 களில் பிரபலமாகவிருந்த, அமெரிக்க எழுத்தாளர் ROBERT LUDLUM அவர்கள் உருவாக்கிய JASON BOURNE எனப்படும், தன் கடந்த காலத்தை மறந்த ஒர் ரகசிய ஏஜண்ட்டின் கதையையும், இத்தொடரின் ஆசிரியர் JEAN VAN HAMME, தன் கதையின் ஆரம்ப கட்டங்களில் உபயோகித்தார் என ஒர் சர்ச்சை அப்போது கிளம்பியது. தன் தொடர் வெற்றியின் மூலம் இவற்றையெல்லாம் கடந்து வந்த JEAN VAN HAMME , ஆரம்பம் முதல் இறுதி வரை தன் வெற்றிக்கூட்டணியை WILLIAM VANCE உடன் தொடர்ந்தார்.


WILLIAM VANCE, பெல்ஜியத்தை சேர்ந்தவர் , ஆரம்பத்தில் விளம்பரத்துறையில் பணியாற்றினார். இவர் 1962 முதல் 1967 வரை பெல்ஜிய சஞ்சிகையான TINTIN ல் பணியாற்றியவர். அச் சமயத்தில், பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான GREG உடன் இணைந்து BRUNO BRAZIL எனும் தொடரை உருவாக்கினார். இத்தொடர் WILLIAM VANCE க்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.இவர் MARSHAL BLUEBERRY எனப்படும் ஒர் தொடரின் முதல் 2 ஆல்பங்களிற்கு, JEAN GIRAUD என்பவரின் கதைக்கான சித்திரங்களை வரைந்தார். சரி யார் இந்த JEAN GIRAUD?


THE IRISH VERSION என அழைக்கப்படும் XIIIன் 18வது ஆல்பமானது, ரகசிய ஏஜண்ட் XIIIன் உண்மை அடையாளத்தை,ரசிகர்களிற்கு விரிவாகவும், விளக்கமாகவும் தர வேண்டி வெளியான ஒன்று. 2007ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில், 19 வது ஆல்பமான THA LAST ROUND உடன் வெளியாகியது. இந்த விற்பனைத் தந்திரம் பிரதிகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக என நான் எண்ணுகிறேன். XIIIன் ஆஸ்தான ஒவியரான WILLIAM VANCE இந்த 18வது ஆல்பத்திற்கான சித்திரங்களை வரையவில்லை, மாறாக பிரான்சின் மிகப் புகழ் பெற்ற, ஒர் பிரபலமாக மதிக்கப்படுகின்ற, தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிற்கு காப்டன் டைகர் எனப்படும் செல்லப்பெயரால் அறிமுகமான BLUEBERRY தொடரின், அற்புதமான ஓவியர் அவர். அவர் பெயர் தான் JEAN GIRAUD.


JEAN HENRY GASTON GIRAUD என்பது இவரின் முழுப்பெயர். பாரிஸின் புறநகரங்களில் ஒன்றான NOGENT-SUR-MARNE ல் 1938 ல் பிறந்தார். இவர் முதல் கதையான FRANK AND JEREMY யை, தன் 18 வது வயதில் FAR WEST சஞ்சிகையில் வெளியிட்டார். 1962ல் PILOTE எனப்படும் பிரெஞ்சு காமிக்ஸ் வாராந்திரியில் JEAN CHARLIER உடன் இணைந்து FORT NAVAJO எனும் தொடரில் பணியாற்றினார். இது வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. MOEBIUS என்பது இவரின் புனை பெயராகும். MOEBIUS எனும் பெயருடன், எழுத்தாளர் ALEJANDRO JODOROWSKYயுட ன் இணைந்து இவர் உருவாக்கிய THE INCAL எனப்படும் விஞ்ஞான காமிக்ஸ் தொடர் மிகப்பிரபல்யமானது. GIRAUD ன், வித்தியாசமான சித்திரங்களை இத்தொடரில் காணலாம். XIIIன் 18 வது ஆல்பத்திற்கு GIRAUD சித்திரம் வரைய ஒத்துக்கொண்டதிற்கு தன் நன்றிகளை தெரிவித்திருக்கிறார் VAN HAMME.

நான் ஆல்பத்தை படித்த போது, கதையின் ஒர் முக்கிய பாத்திரம், எனக்கு BLUEBERRY போலவே தோற்றமளித்தார். WILLIAM VANCE ன் சித்திரங்களுடன் தொடரில் பழகிப்போய்விட்ட கண்களிற்கு, GIRAUD ன் சித்திரங்கள்,விழிகளை குளிர் நீரால் கழுவிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். சுருக்கமாக கூறினால், லயனின் ராட்சஸ ஸ்பெஸலில் இந்தக்கதை இடம்பெறுவதற்குரிய, முழுத்தகுதிகளும் THE IRISH VERSIONக்கு உண்டு. மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள், எவ் ஆல்பம் ராட்சஸ ஸ்பெஸலில் இடம்பெறும் என்பதனை எங்களிற்கு தெரிவிக்கலாமே. இல்லாவிடின் XIIIன் மலை உச்சி மர்மத்தை விட, இது ஒர் பெரிய மர்மமாகிவிடும்.


ஆல்பத்தின் தரம் *****


நண்பர்களே, மறக்காது உங்கள் கருத்துக்களை பதிந்திடுங்கள்.

போட்டோக்களில் இடமிருந்து வலமாக, WILLIAM VANCE, JEAN GIRAUD, JEAN VAN HAMME

9 comments:

 1. நண்பரே,

  இராபர்ட் லுட்லம்-ன் Bourne Series முழுக்க படித்திருக்கிறேன். அந்த கதையில் முதல் பகுதி மட்டுமே நன்றாக இருக்கும். மற்ற இரு பகுதிகளும் சுமார்தான். உலகமெங்கும் உள்ள இரசிகர்களின் கருத்தும் இதேதான். ஓற்றுமை இரு கதாநாயகர்களுமே நினைவை இழந்தவர்கள் என்பது மட்டுமே. அதிலிருந்து ஒவ்வொரு கதையுமே வெவ்வேறு திசையில் பயணிக்க தொடங்கிவிடும்.

  XIII தொடர் மட்டுமே கடைசிவரை விறுவிறுப்பை இழக்காமல் முடிந்திருக்கிறது. அந்த பெருமை அந்த கதாசிரியருக்கே போய் சேரும்.

  உங்களின் மொழிபெயர்ப்பும் அபாரமாக உள்ளது. இன்னும் பல புதிய தொடர்களை அறிமுகப்படுத்திங்கள். ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

  josh

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. JOSH .... அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உங்கள் நண்பர்களிற்கும் கூறிடுங்கள் //
  // என்ன எதோ double meaning ல் பேசுவது போல தெரிகிறேதே..... நான் சின்ன பயனுங்கோ... :)

  பின்வரும் கேள்விக்கு பதில் கூறுங்கள். //
  // திரு.விஜயன் மனநிலையை நான் அறியேன் என்றாலும், இது வரை வெளி வந்த விளம்பரங்கள் அத்தனையிலும் 1-18 என்றே குறிப்பிட்டு உள்ள படியால், அது Original புத்தங்களின் எண்ணையே குறிக்கும் என்று நினைக்கிறேன். சில காலம் முன்பு ஏதோ ஒரு Hot-Line ல் 19 வது பாகம் கதை கருவில் இருந்து வேறு திசையில் பயணிக்கிறது என்று அவர் குரிபிடத்தாக ஞாபகம். அதனால், 1-18 தான் லயனின் ஸ்பெஷல் என்று எண்ணுகிறேன்.

  3ம் பகுதியை பற்றி யோசிக்கலாம் //
  // நன்றி, torrent மூலம் மின்னணு XIII பதிவுகள் கிடைப்பதாக தகவல் கிடைத்தும், ஒரு மர்ம முடிச்சை புத்தக வடிவில் அனுபவிக்க வேண்டி தவிர்த்து வந்து கொண்டு இருக்கிறேன். அதற்க்கு உதவயிதற்கு நன்றி. அனேகமாக அடுத்த ஏப்ரல் குள் புத்தகம் கைக்கு கிடைக்கும் என்று தற்போதைய தகவல். மற்றபடி திரு.விஜயனுகே வெளிச்சம்.

  அந்த ஒவியம் என்னை விட உயிருடன் இருந்தது //
  // கவிஞர் ஜோஸ்'க்கு போட்டி அதிகரிக்கிறது போலும் :)

  பிறகு என்ன நடந்தது என்பதை அறிய சற்றுக்காத்திருங்கள் நண்பர்களே //
  // லயன் XIII சிறப்பு இதழுக்கு இதை விட பெரிய விளம்பரம் தேவை இல்லை. அனேகமாக இதை படிக்கும் அனைவரும் தங்கள் பிரதிக்கு முன்-பணம் அனுப்புவார்கள் என்று எண்ணுகிறேன்.

  Bourne கதையை அடிபடையாக கொண்டு தான் XIII உருவானது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால் XIII series, bourne கதையை விட அதற்க்கு பிறகு வெளியான இதழ்கள் மூலம் ஒரு காவியத்தை உண்டாகியது என்பதிலும் ஐயப்பாடு எழாது.

  Moebius பற்றிய சரித்திரத்தை ஏற்கனேவே தேடலின் போது சில பதிவுகளில் படித்து உள்ளேன் என்றாலும், தமிழில் அதை படிக்க மிகவும் அருமையாக இருந்தது. XIII புத்தகம் வெளியாகும் தருணத்தில் விமர்சனத்துக்கு உங்கள் பதிவில் இருந்து உத்தரவு இல்லாமல் சிலதை லவுடி கொள்கிறேன் :)

  இந்த 18 வது அல்பத்துக்கு 3 star தானா... ஒரு வேலை நீங்கள் எதிர் பார்த்த அளவு கவிதை நயத்துடன் இல்லாமல் இருந்ததா ?? :)

  மேலும் பல புதிய பதிவுகளை உங்கள் கால அவகாசதின்படி பதிவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

  பி.கு.: அப்புறம் செழியின் நக்கீரன் வேலையை சிறிது நானும் செய்கிறேன்..... உங்கள் வலைபூவுக்கு முகவரி அமைப்பதில் நீங்கள் தவறு செய்து விடீர்கள் தானே. http://kanavukalinkathalan.blogspot.com என்பதற்கு பதிலாக http://kanuvukalinkathalan.blogspot.com, என்று உள்ளதே :)

  ரஃபிக் ராஜா
  ராணி காமிக்ஸ் & காமிக்கியல்

  ReplyDelete
 4. Hi Dream Lover,

  Great review with great narrating style.
  But disappointed by knowing that, the 3rd portion of 18th part won't be available to read.

  With warm regards,
  Mahesh kumar

  ReplyDelete
 5. ஜோஸ், கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி.லுட்லமின் கதைகளை நானும் படித்துள்ளேன்,முதலாம் நாவலின் பின் வந்தவை நீங்கள் கூறுவது போல் சொதப்பல் ரகம் தான்.XII, வன் ஹாமின் செல்லப்பிள்ளை, அதற்காக அவர் சிறப்பாக உழைத்ததில் வியப்பில்லை. உங்கள் ஆதரவை தொடர்வீர்கள் என நம்புகிறேன்.

  ரஃபிக்,என்ன செய்வது 5 நட்சத்திரங்கள் கொடுக்க எனக்கு ஆசைதான் ஆனால் முடியவில்லையே. 13 வது ஆல்பம் இடம் பெறாது என்றே நான் நம்புகிறேன், என் விருப்பமும் அதுவே. கருத்துக்களிற்கு நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.

  மகேஷ் குமார், வருகைக்கும், கருத்து பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி. சஸ்பென்ஸை இப்போதே உடைத்தால், தமிழில் ஆல்பத்திற்காக காத்திருக்கும் நண்பர்களிற்கு சுவாரஸ்யம் இல்லாது போய்விடுமே.
  ஆதரவினை தொடருங்கள்

  ReplyDelete
 6. Annachi,

  eppo third part, padhivu poduveenga?

  Regards,
  Mahesh

  ReplyDelete
 7. நண்பர் மகேஷ் குமார் அவர்களே, 3ம் பாகத்தினை வெளியிட்டு சஸ்பென்ஸை உடைக்க நான் விரும்பவில்லை. விரைவில் லயன் காமிக்ஸ் ஜம்போ சிறப்பிதழை வெளியிடும் என்று நம்புகிறேன் அது வரை காத்திருங்கள். உங்கள் ஆர்வம் என்னை மகிழ்வித்தது நண்பரே. என்னால் இயலுமானால் XIII ன் 11ம் ஆல்பத்திலிருந்து 20வது வரை சுருக்கமான பதிவுகளை தர முயற்சிக்கிறேன், இது குறித்த உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.

  ReplyDelete
 8. Dude,

  We are eagerly waiting for your reviews about XIII's 11 to 20th parts.

  Regards,
  Mahesh

  ReplyDelete
 9. நண்பர் மகேஷ்குமார், XIII குறித்த இனிப்பான செய்தியை அகொதீகவின் புதிய பதிவில் படியுங்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete