Thursday, September 23, 2010

வீட்டுப்பேயின் கொடுமைகள்


அம்ப்ரெல்லா நிறுவனத்தின் தயாரிப்பாகிய டி வைரஸின் கைங்கர்யத்தினால் உலகின் மனிதகுலத்தின் பெரும்பகுதி ரத்தவெறி கொண்ட நடைபிணங்களாக உருமாறிவிடுகிறது. இந்த கொடிய வைரஸின் தாக்குதலிருந்து தப்பிப்பிழைத்த மனிதர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை பாதுகாப்பான இடமொன்றிற்கு அழைத்து செல்லும் தன் பயணத்தை தொடர்கிறாள் அம்ப்ரெல்லா நிறுவனத்தின் பிறிதொரு உற்பத்தியான ஆலிஸ் [Milla Jovovich]. ஆனால் ரத்தவெறி கொண்ட நடைபிணங்களையும், பலம்வாய்ந்த அம்ப்ரெல்லா நிறுவனத்தையும் தன் பயணத்தில் இன்னமும் எதிர்த்துமோத வேண்டிய கட்டாயம் ஆலிஸிற்கு இருக்கிறது…

நல்ல கதை வேண்டாம். ஏன் கதையே வேண்டாம். சிறப்பான மோஸ்தருடன் உருவாக்கப்படும் ஆக்‌ஷன் காட்சிகளும், திறமை வாய்ந்த இயக்குனர் ஒருவர், தன் இயக்கம் மூலம் திரைப்படத்தை நளினமாக நகர்த்திச் செல்லும் வேகமும், பெரும்பாலான சமயங்களில் ஆக்‌ஷன் திரைப்பட பிரியர்களின் மனங்களை ஒரளவேனும் திருப்தி கொள்ளவைத்து களிப்பூட்டும். Paul W.S. Anderson இயக்கியிருக்கும் Resident Evil: After Life ல் சுவாரஸ்யமான புதிய கதைதான் இல்லை- தொடர்ந்து இதே கதைதானே என்ற உணர்வு எழாமலில்லை- என்றால், ஏனையவைகளும் அங்கு இல்லை. ஆனால் அவதாரில் பயன்படுத்தப்பட்ட 3D Fusion Camera System இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தில் அதன் பயன் என்ன என்பதை புரிந்து கொள்வதில்தான் சிரமமிருக்கிறது.

குளிர்பதனப்பெட்டியிலிருந்து அழுகிய தக்காளியை ஒத்த கதை ஒன்றை எடுத்துக்கொண்டு தைரியமாக படத்தை இயக்கியிருக்கிறார் ஆண்டர்சன். இந்த தைரியம் இனிவரும் நாட்களில் பல புதிய இயக்குனர்களிற்கு முன்னுதாரணமாக திகழும் என்றால் அதில் எந்த ஐயமும் எனக்கில்லை.

டோக்கியோவில் அமைந்திருக்கும் அம்ப்ரெல்லா நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆரம்பிக்கும் சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பமாகிறது திரைப்படம். அந்த முதல் நிமிடங்கள் முதலே ரத்த வெறி பிடித்து, மனித மாமிசம் தேடி அலையும் நடைபிணங்களைவிட தான் மிகவும் கொடியவன் என்பதை ரசிகர்களிற்கு உணர்த்துவதில் பெரும் வெற்றி காண்கிறார் இயக்குனர் திரு ஆண்டர்சன் அவர்கள். டோக்கியாவில் விழ ஆரம்பித்த அடி, அலாஸ்கா வழியாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரம்வரை தொடர்கிறது. பலமாக. படத்தின் பாதியில் எழுந்து சென்றவர்கள் பாக்யம் செய்த ஆத்மாக்கள்.
resident-evil-afterlife-2010-8882-1940635060 கவர்ச்சி என்பது பூஜ்ஜயத்திற்கும் கீழே இறங்கி உறைந்துவிட்ட தாரகை மிலா ஜோவோவிச், நுட்பமான மெல்லசைவில், விறுவிறுப்பு அற்ற விதமாக உருவாக்கப்பட்டிருக்கும், பார்த்துப் புளித்துப்போன சண்டைக் காட்சிகள் ஆ லா மேட்ரிக்ஸ், சாம்பலில் ஷாம்பூ குளியல் எடுத்த பூனைகள்போல் இயக்குனரின் ஸ்டார்ட் ஆக்‌ஷன் குரலிற்காக காத்திருக்கும் வீர்யமிழந்த நடைபிணங்கள் என ஏமாற்றம் மென்னியைக் கடிக்கிறது. இது போதாது என்று பின்னனி இசையானது ரசிகர்களின் செவிப்பறையை வெளியே இழுத்து எடுத்து கூரான ரம்பத்தால் உராய்கிறது.

கதையும் இல்லை, கதாநாயகியும் அவுட் என்றால் துணைப்பாத்திரங்களின் தெரிவு மகா கொடுமை. அவர்களின் நடிப்பு மெகா கொடுமை. இவர்கள் எல்லாரையும் விட வில்லன் பாத்திரம் அல்டிமேட் கொடுமை. ரெஸிடெண்ட் எவில் திரைப்படம் கொடுமையையே கண்ணீர் வடிக்க செய்யும் ஒரு கொடுமை.

அட படத்தின் முடிவிலாவது ரசிகர்களை நிம்மதியாக வெளியேற விட்டார்களா!!! திரையில் எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தை இடைநிறுத்தி, சனிபகவான் தனக்கு சந்தா கட்ட மறக்காதீர்கள் என மெயில் அனுப்பியதுபோல் ஐந்தாம் பாகத்திற்கு அச்சாரம் போடுகிறார்கள்.

ரெஸிடண்ட் ஈவில் திரைப்பட இயக்குனர், தமிழ் கூறும் நல்லுலகின் எந்த மோசமான இயக்குனருடன் போட்டியிட்டாலும், தமிழ் கூறும் நல்லுலகிற்கே வெள்ளிக் கரடி கிடைக்கும். அதேபோல் ரெஸிடெண்ட் ஈவிலின் நடிப்புத் திறமைகளுடன் தமிழ் சினிமா உலகின் இளைய தளபதி, கேப்டன், பசுநேசன் ஆகியோரின் முழுத்திறமைகளையும் கலந்துகட்டி மோதவிட்டால்கூட தமிழின் மும்மூர்திகளே ஆஸ்கார்களை அள்ளுவார்கள். உலகின் மிக மோசமான திரைப்படங்கள் பட்டியலில் உடனடியாக சேர்ந்து கொள்வதற்கான முழுத்தகுதியும் ரெஸிடெண்ட் ஈவிலிற்கு இருக்கிறது. ரெஸிடென்ட் ஈவில், ஆக்‌ஷன் சினிமாவினதும், அதன் ரசிகர்களினதும் அதி உச்ச அவமானம்.
DiableDiableDiableDiable

தலைப்பு உபயம் பாண்ண்ண்டி மைனர் அவர்கள்.

ட்ரெயிலர்[ ம்க்க்கும்]

24 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவைப் படத்டது விட்டு மீண்டும் வருகிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. காதலரே,

    ஏதேது? தலைப்பே பல (சொந்தக்) கதைகளை சொல்கிறதே?

    ReplyDelete
  3. ணா..என்னதான் தமிழ் மேல ஆர்வம என்றாலும்..ResidentEvil = வீட்டுப்பேயின்...முடியல..

    ஏன் ஹாலிவுட்டில sequels எல்லாமே படுமட்டமா இருக்கு?
    எப்படி துணிஞ்சு இந்தப் படத்துக்கு போனீங்க...

    ReplyDelete
  4. காதலரே,

    இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை இயக்கிய இயக்குனரே இந்த பாகத்தையும் இயக்கி இருந்தால் நாம் ஒரு வேளை ரசித்து இருக்கலாம் என்பது என் கருத்து. பால் ஆண்டர்சன் அந்த அளவுக்கு (கதையில் நகைச்சுவை அம்சங்களை) கொண்டு வருவதில்லை.

    ReplyDelete
  5. படத்த பாத்துட்டு ரொம்ப நொந்து போய் வந்திருக்கீங்கன்னு நல்லா தெரியுது! நான் இந்த தொடரிலே ஒரு படம் கூட பாத்ததில்ல! ஆகையால் பெருசா எதுவும் ஆர்வம் இல்லாமல் போனதால, மீ த க்ரேட்டஸ்ட்டு எஸ்கேப்பு!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. மொக்க படத்த முப்பரிமாணாத்துல வேற பாத்திருக்கீங்க! இதுல அஞ்சாவது பாகம் வேறையா?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. //ரெஸிடெண்ட் எவில் திரைப்படம் கொடுமையையே கண்ணீர் வடிக்க செய்யும் ஒரு கொடுமை.//

    ஹாஹா..

    //சனிபகவான் தனக்கு சந்தா கட்ட மறக்காதீர்கள் என மெயில் அனுப்பியதுபோல் ஐந்தாம் பாகத்திற்கு அச்சாரம் போடுகிறார்கள்.//

    அது வேறயா?

    //வீட்டுப்பேயின் கொடுமைகள்//

    ஹாஹா,எந்த அளவுக்கு கொடுமையா இருந்திருந்தா உமக்கு வீட்டு ஞாபகம் வந்திருக்கும்? ;)

    ReplyDelete
  8. ரெசிடெண்ட் ஈவில் கேம் மிக நன்றாக இருக்கும். இது அப்படியே நேர் எதிர். முதல் பாகம் நல்லாயிருந்தது. இரண்டாவது சுமார். 3, 4ம் பார்க்கலை. என்னிக்காச்சும் டிவியில் போட்டால் பார்க்கலாம்.

    ReplyDelete
  9. என்னையா படம் இது, நமிதாவின் சூத்,,குலுக்கள் இல்லை,விவெகின் மலையால சேச்சிகளை கலாய்க்கும் கமிடியில்லை,,ஒல்லிப்பீச்சான் ஹிரோ விட்டக் குத்தில் ஒரு மைல் தல்ளி விழும் ஆக்ரோஸ
    சண்டை காட்சிகள் இல்லை,,குத்து பாட்டில்லை,,
    இது போன்ற ஆச்கார் தரத்து தமிழ்படங்களின் எந்த சாயலும் இல்லாத் ஒரு ஆங்கிலப் படமா,,,கேனத்தனமான உலகத் தறம்வாய்ந்த தமிழ்நாட்டின் ரசனைகள் இல்லாமல் படமெடுத்துள்ள
    Samuel Hadda படத்தினை தலமை ரசிகர் கனவு காத்லனோடு சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம்

    ReplyDelete
  10. ச்சீ.. நல்ல கதையை ஏன்தான் கெடுக்கறாங்களோ..

    போரடிச்சா,
    http://cinemajz.blogspot.com/

    ReplyDelete
  11. தலைவர் அவர்களே, நீங்கள் தப்பியது மகிழ்ச்சியை அளிக்கிறது :) முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, பால் ஆண்டர்சனின் படங்கள் எல்லாம் சொதப்பல் வகையறாதான். ஆனால் ட்ரெயிலரில் மிரட்டுவார்கள்.ஈவில் அருகில் இனி நான் செல்ல மாட்டேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கொழந்த, துணிந்து எல்லாம் செல்லவில்லை, ஒரு நப்பாசை ஆனால் கவிழ்த்துவிட்டது :) தங்களின் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, வீட்டிற்கும் அதன் கொடுமைகளிற்கும் இப்பதிவின் தலைப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதை உலக மனைவிகள் கழகத்திடம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தலைப்பை தந்தவர் பாண்டி மைனர் என்பதால் இதற்குரிய தார்மீக பொறுப்புக்களை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் :) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் எஸ்.கே, டிவியில் கூட பார்க்காதீர்கள். நேரம் அநியாயம் ஆகும் என்பது என் கருத்து. கருத்துக்களிற்கு நன்றி.

    மூல்ப்ரிட் அல்லது மட்டிச்சிப்ஸ் அவர்களே, என்ன எழுதியிருக்கிறீர்கள், பதிவையாவது படித்தீர்களா:) தமிழ் படத்தை விட மிகமிகமோசம். வேண்டுமானால் சென்று ஒரு தடவை திரையரங்கில் பார்த்துவிடுங்கள் :) சாமுவேல் ஹடிடா தயாரிப்பாளர்களில் ஒருவர் தானே அவர் எங்கு படம் எடுத்தார்!!! தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் JZ, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  12. காதலரே,

    நிரம்ப நாட்கள் கழித்து உங்கள் பக்கம் வந்து சேர்ந்தேன். வந்தவுடன் ஒரு நல்ல படத்திற்கான விமர்சனத்தை எதிர்பார்த்தால், ரெஸிடென்ட் ஈவில் என்ற ஒரு கொடூர பட தொடருக்கான சாவு மணி விமர்சனத்தையா பார்த்து தொலைக்கே வேண்டும்.

    முதல் படமே பலவித மொக்கைகளின் சாராம்சம் என்றாலும், கொஞ்சம் வித்தியாசமான ஜாம்பி கதை என்பதற்காக ஆர்வத்துடன்தான் பார்த்திருந்தேன். ஆனால் 2 ம் 3ம் பாகங்கள் போடா வெண்ணை என்று செவிலில் அடிக்காத குறை.

    கல்யாணம் ஆகி குழந்தை பெத்த அம்மணி மிலாவுக்கு 4வது பாகம் தேவைதானா.... எலும்பும் தோழுமாக அவரை பார்ப்பதே தாங்க முடியவில்ல... இன்னும் 5ம் பாகம் வேறா... ஊத்தி மூட வேண்டியதுதான். அய்யா பால், உம் வீட்டு பேயை உம்முடனே வைத்து குடும்பம் நடத்தும், அதை 3டி யில் வேற ஆட வைக்கனுமா... நல்ல ரசனை தான் பயலுக்கு.

    3டி பரிமாணத்தில் தியேட்டரில் பார்க்கும் ஆர்வம் இருந்தது.... அதை இனி மூட்டை கட்டி வைத்து விடலாம் தான்.

    பி.கு.: சந்தடிசாக்கில் பகிரங்கமான தலைப்பின் மூலம் வீட்டம்மாளை முறைத்து கொண்ட உங்கள் வீரத்திற்கு எவ்வகை பாராட்டுகளை அளிப்பது. பாண்டி மைனரின் திட்டம் பலித்து விட்டது போல. என்னால் முடிந்தது, ஒரு பாக்ஸ் பர்ஸ்ட் அய்ட் கிட் தான்... அனுப்பிச்சு வைக்கிறேன்.

    ReplyDelete
  13. படம் செம மொக்க தல..... இதுல 3d வேற...

    ReplyDelete
  14. அய்யகோ... இது மொக்கையா? முதல் மூன்று பாகங்கள் எனக்கு மிகப்பிடித்திருந்தன.. :-(

    ReplyDelete
  15. அது எப்படி நான் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் அத்தனை படங்களும் மொக்கைத்தனமாகவே இருக்கின்றன ?? :-) என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  16. ரஃபிக், நீண்டநாட்களின் பின்பாக உங்கள் கருத்துக்களை காண்பதில் மகிழ்ச்சி. மூன்றாம் பாகத்துடனேயே இனி தொடராது எனக்கூறிய திரைப்படத்தை 3டி நுட்பத்தில் காசு பார்க்க வேண்டி தொடரந்ததால் வந்த வினை. கல்லா நிரம்பினால் போதும் என்பதே தாரக மந்திரம் :)வீட்டம்மாவை முறைப்பதா!! நடக்கிற காரியமா சொல்லுங்க புரட்சிக்காரரே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் டெனிம், நீங்கள் கூறுவது மிக்க சரியே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், இதை பார்க்கும் நேரத்தில் நீங்கள் குணா பார்க்கலாம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  17. முடியலை.. பரவாயில்லை எங்களை எல்லாம் இந்த மாதிரி மொக்கை படங்க கிட்ட இருந்து காப்பாத்தறீங்களே..

    ReplyDelete
  18. நண்பர் கவிதை காதலன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  19. காதலரே தலைப்பு மிக அருமை

    // ட்ரெயிலர்[ ம்க்க்கும்] //

    இத வேற பாக்குனுமாக்கும் அப்புடின்னு நீங்க சொல்லுறது புரியுது
    அதனால மீ தி எஸ்கேப்..........

    ரொம்ப தேங்க்ஸ் காதலரே

    எங்கள காப்பாத்துனதுக்கு :))
    .

    ReplyDelete
  20. அரைக்கிழவிகள் நடிக்கும் படங்களை பார்ப்பதில்லை என்ற முடிவோடு இருப்பதால் வீட்டுப்பேயின் கொடுமைகள் பார்க்க துணியவில்லை. எனது நல்ல முடிவு தான் என்பதை தங்களின் விமர்சனம் நிரூபிக்கிறது. எந்திரனையும் இதே காரணத்திற்காக பார்க்க போவதில்லை. :):)

    ReplyDelete
  21. நண்பர் சிபி, நன்றி.

    நண்பர் பென், எந்திரனில் படு கிழடு மற்றும் அரைக்கிழடு என்று ஒரு போட்டி உள்ளதே :))

    ReplyDelete
  22. adangappa saami.... nanum thala naditha aazhwar , ji, jana, anjaneya intha karumathai ellam parthutu innum mental aagaama iruken. but, intha padathai ( unga vimarsanathai padikum mun) parthathal enga veetula 3 thalaiyanai kilinjathu than micham. hi....hi...hi...ho...ho...ho...hu...hu...hu... sorry. control panna mudiyalai...

    ReplyDelete
  23. thankspa nan innum parkalayennu feel pannitirunthen!

    ReplyDelete
  24. நண்பர் ஜானி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete