எந்த அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அரிதாக நிகழும் ஒன்று. Jazz Maynard கதை அவ்வகையானது.
பத்து வருடங்களிற்கு மேலாக பார்சலோனாவிலிருக்கும் தன் பிறந்த இடமான எல் ராவலை விட்டு நீயூயார்க் சென்று இசைக் கலைஞனாக ஜீவிதம் நடாத்தி வரும் ஜாஸ் மெய்னார், மீண்டும் தன் நகரிற்கு திரும்பி வருகிறான். அதுவும் தன் தங்கையுடன் !!
தங்கை ஏன் நியூயார்க் சென்றாள், எவ்வாறு ஜாஸ் மெய்னாரை அங்கு கண்டுபிடித்தாள் என்பதை ஜாஸ் தன் நண்பனான தியோவிற்கு சொல்கிறான். ஒரு ப்ளாஷ்பேக்காக, இரு நண்பர்களும் கதிரைகளில் முதுகைக் காட்டிய நிலையில் அமர்ந்திருக்க விலங்கிட்ட நிலையில், அவர்களை சூழ கோட் சூட் அணிந்த முரடர்கள் துப்பாக்கியும், நரகத்தின் சாயல் கலந்த பாவனையும் கொண்டு காவல் நிற்க.
ஏன் ஜாஸும், அவன் நண்பன் தியோவும் கதிரைகளுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கிறார்கள்? அதற்கான காரணத்தை அட்டகாசமானதொரு கதை சொல்லலால் மிக வேகமாக ப்ளாஷ்பேக், ஃபாஸ்ட் கட் உத்திகளால் சொல்கிறார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கதாசிரியரான Raule.
எல் ராவல் ஒரு குற்ற நகரம், அடக்குமுறையும் அராஜகமும் கொண்ட காவல்துறை, தெய்வீக நிஞ்சா ரவுடிகள், இனிதாகப் பேசி இளம் பெண்களை மாஃபியாவிற்கு விற்கும் ஆசாமிகள், Snuff திரைப்படங்களை நெறியாளும் பெண், காவல்துறை அதிகாரிகளையே மரண அடி அடிக்கும் மாஃபியா கும்பல், அதன் தலைவனான யூதாஸ், முதலாளித்துவத்திற்கும், பூர்ஜுவாஸிகளிற்கும் எதிராக முளைவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு புரட்சி என கதையின் பக்கங்களில் ஆச்சரயங்கள் மேல் ஆச்சர்யம் உண்டு. கதை சொல்லலும் அலட்டல் இல்லாதது. தேர்ந்த ஒரு சமையற்காரன் தன் கத்தியால் காய்கறிகளை வேகமாக நறுக்கி துண்டாக்குவது போல் கச்சிதமான கதை சொல்லல் என்பேன்.
நியூயார்க்கில் தன் தங்கை அனுப்பிய கடிதம் மனதில் ஒலிக்கும் குரலாய் தொடர Hells Kitchen எனுமிடத்தில் இருக்கும் உயர்மட்ட விபச்சார விடுதி ஒன்றில் ஜாஸ் நிகழ்த்தும் அதிரடிகளை பார்க்கும்போது அட்டைப்படத்தில் இருக்கும் ஜாஸ்தானா இவன் என விரியும் ஆச்சர்யம், பக்கங்களை புரட்ட புரட்ட அதிகமாகும். ட்ரம்பெட் கலையிலும் சரி துப்பாக்கியை கையாளுவதிலும் சரி, வேறு எவராலும் ஆற்ற முடியாத குற்றங்களை ஆற்றுவதிலும் சரி ஜாஸ் ஒரு கலைஞன். என்ன அவன் இசையில் காட்டாத வன்முறை அவன் அதிரடிகளில் இறங்கும்போது சங்கீதமாகும்.
த்ரில்லர் நுவார் அதுவும் Neo Noire வகை கதைகளின் ரசிகர்களிற்கு இக்கதை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும். கதைக்கு சித்திரங்களை வழங்கியிருக்கும் ஸ்பெயின் நாட்டு சித்திரக் கலைஞரான Roger தன் அசாத்தியமான திறமையை பக்கங்களில் நிரூபித்து இருக்கிறார். அற்புதமான நவபாணியும், கம்பீரமும் கொண்ட சித்திரங்கள் கதையின் வேகத்தின் உந்துவிசையாக இருந்து கொண்டே இருக்கும்.
ஜாஸ் மெய்னார் கதையின் முதல் மூன்று ஆல்பங்களும் பார்சலோனா ட்ரையாலஜி என அழைக்கப்படுகிறது. கதை, சித்திரங்கள், இவற்றில் கலந்திருக்கும் வேகம், வன்முறை என இதன் முதன் ஆல்பம் ஏமாற்றாத ஒன்று. இதுவே இதன் அடுத்த இரு ஆல்பங்களையும் உடனடியாக படிக்க வேண்டும் எனும் ஆவலையும் பற்ற வைத்து விடுகிறது. அவையும் இதனைப் போல ஏமாற்றாது வாசிப்பின்பத்தை நல்கும் என நம்புகிறேன் !