"நீ மிருகமாக மாற விரும்பாத வரை மிருகங்களுடன் மோதாதே, பாதாளத்தின் உள்ளே நீ எட்டி பார்க்கும் போது பாதாளமும் உன் உள்ளே எட்டிப்பார்க்கும்"
Wednesday, December 31, 2008
பாதாளத்தின் கண்கள்
Monday, December 22, 2008
லார்கோ வின்ச் -விமர்சனம்
Sunday, December 21, 2008
ட்ரெயிலர்
Friday, December 19, 2008
ஒன்று.. இரண்டு.. XIII- (2)
நண்பர்களே,
பதிவினைப் படித்து, உங்கள்
கருத்துக்களை வெளியிட்ட அனைவரிற்கும் என் இதயங்கனிந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன்.
JOSH உங்களிற்கு மட்டும் ஒர் சிறப்பான கைகுலுக்கல், அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உங்கள் நண்பர்களிற்கும் கூறிடுங்கள். யார் அந்த வாக்கியத்தை அவதானிப்பார்கள் என இருந்தேன், உங்கள் நுண்ணிய ரசனை அபாரம்.
சென்ற பதிவில் இதனை 3 பகுதிகளாக எழுதுவதாக கூறியிருந்தேன், அதில் ஒர் சிறு மாற்றம். இதுவே இறுதிப்பகுதியாகும். ஏன்? காரணம் எளிமையானது. XIIIல் மொத்தமாக 19 ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. விரைவில்!!!!!! வெளிவரவுள்ள லயன் ராட்சத ஸ்பெஸலில் இக்கதை இடம்பெறாது போகலாம் எனும் ஒர் சந்தேகம் என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.ஆனால் பின் பதிவிற்காக தேடல்!!? செய்தபோது 13வது ஆல்பமான XIII THE MYSTERY- THE INQUIRY ன் ஞாபகம் வந்தது. ஒர் பத்திரிகையாளனின் விசாரணையை மையமாக வைத்து, வெளியான இவ்வால்பத்தில் சித்திரப் பக்கங்களை விட, விசாரணையின் TEXT பக்கங்கள் அதிகம். சரி அதற்கு இப்போ என்ன? என்று கேட்பீர்களானால் பின்வரும் கேள்விக்கு பதில் கூறுங்கள்.
"தொடர்ந்த நாட்கள் இருண்டவை. எனது மாமா PARNELL , எங்கள் மறைவிடத்தை பொலிசாரிற்கு காட்டிக்கொடுத்த நபரைக் கண்டுபிடித்தார். IRAன் ரகசிய மறைவிடத்திற்கு நான் அழைக்கப்பட்டேன்.
காட்டிக்கொடுத்த நபர் எங்கள் அறைக்குள் அழைத்து வரப்பட்டார். அவர் தலை ஒர் சிறிய சாக்குப்பையால் மூடப்பட்டிருந்தது. என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நபரின் தலையிலிருந்த சாக்குப்பை நீக்கப்பட்டது. வேகமாக அடித்துக்கொண்ட என் இதயம் ஒர் கணம் ஸ்தம்பித்தது. என் எதிரில், என்னால் ஆதர்சிக்கப்பட்ட சரித்திர ஆசிரியர் O'SHEA இருந்தார். அவரின் துரோகத்திற்கு அவரிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் எனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லையென நிரூபிக்க வேண்டி, என் கையில் ஒர் துப்பாக்கி என் மாமாவால் திணிக்கப்பட்டது. O'SHEA அழ ஆரம்பித்தார். தன் நிலையைக்கூறி கதறினார். கைகள் கட்டப்பட்ட நிலையில், தன் உயிரிற்காக என்னிடம் மன்றாடினார் அவர். நான் அவர் தலையில் சுட்ட போது எனக்கு வயது 17. சிதறிய குருதி வரைந்த ஒவியத்தை நான் மறக்கவேயில்லை, அந்த ஒவியம் என்னை விட உயிருடன் இருந்தது.
இச்சம்பவத்தின் பின் IRAவினை பற்றிய என் கருத்துக்கள் மெல்ல, மெல்ல மாற ஆரம்பித்தன. அதனை விட்டு விலகி விட வேண்டுமென தீர்மானித்தேன். பல நாட்களாக காணமல் இருந்த என் தாயாரை பார்க்க விரும்பி, என் வீடு சென்ற என்னை, வீட்டைச்சுற்றி மறைந்திருந்த பொலிசார் கைது செய்தார்கள். என் வழக்கின் தீர்ப்பு கூறும் நாளில், எனது மாமா செய்த ஏற்பாடுகள் மூலமாக பொலிசாரிடமிருந்து தப்பினேன். அயர்லாந்தை விட்டு வெளியேறினேன். அமெரிக்காவை வந்தடைந்தேன்.
பிறகு என்ன நடந்தது என்பதை அறிய சற்றுக்காத்திருங்கள் நண்பர்களே. இவ்விரு இளைஞர்களில் மலையை விட்டு உயிருடன் இறங்கப்போகும் இளைஞன் ஒருவனே. அவனை FRANK GIORDINO மிரட்டி, தனக்காக பணிபுரிய வைக்கிறான். தன் முதல் பணிக்காக CUBAவிற்கு செல்கிறான் அந்த இளைஞன்.
THE IRISH VERSION என அழைக்கப்படும் XIIIன் 18வது ஆல்பமானது, ரகசிய ஏஜண்ட் XIIIன் உண்மை அடையாளத்தை,ரசிகர்களிற்கு விரிவாகவும், விளக்கமாகவும் தர வேண்டி வெளியான ஒன்று. 2007ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில், 19 வது ஆல்பமான THA LAST ROUND உடன் வெளியாகியது. இந்த விற்பனைத் தந்திரம் பிரதிகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக என நான் எண்ணுகிறேன். XIIIன் ஆஸ்தான ஒவியரான WILLIAM VANCE இந்த 18வது ஆல்பத்திற்கான சித்திரங்களை வரையவில்லை, மாறாக பிரான்சின் மிகப் புகழ் பெற்ற, ஒர் பிரபலமாக மதிக்கப்படுகின்ற, தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிற்கு காப்டன் டைகர் எனப்படும் செல்லப்பெயரால் அறிமுகமான BLUEBERRY தொடரின், அற்புதமான ஓவியர் அவர். அவர் பெயர் தான் JEAN GIRAUD.
ஆல்பத்தின் தரம் *****
போட்டோக்களில் இடமிருந்து வலமாக, WILLIAM VANCE, JEAN GIRAUD, JEAN VAN HAMME
Saturday, December 13, 2008
ஒன்று.. இரண்டு.. XIII
வணக்கம் கூறி வரவேற்கிறேன், நண்பர்களை என் முதல் பதிவிற்கு. முதலாவது பதிவாக XIIIன் 18 வது ஆல்பத்தை பற்றி எழுதுகிறேன். சற்றுப் பெரிய பதிவு என்பதால் 3 பதிவுகளாக இட எண்ணியுள்ளேன். கணணி உலகில் எனக்கு எதுவும் தெரியாது, எதோ என்னால் இயன்றதை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். இத் தருணத்தில் இம்முதல் பதிவை சக காமிரேட்களான,
கிங் விஸ்வா, தலைவர் டாக்டர் செவன், ரஃபிக்ராஜா ஆகியோர்க்கு சமர்ப்பிக்கிறேன். என் துரோணர்கள் இவர்களே. சிறப்புகள் எல்லாம் அவர்களிற்கே உரியது.
கனவுகளின் காதலன்.
அன்று மாலை நான் வீடு திரும்பியபோது என் அப்பா இறந்த சேதியை எனக்கு அம்மா தெரிவித்தார். என் அப்பா BRENDAN O'NEIL , 1979ல் LORD MOUNTBATTENன் கொலையின் பின் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் எதுவுமின்றி 30 வருட கடுங்காவல் தண்டனை அவரிற்கு அளிக்கப்பட்டது. ஐரிஷ் விடுதலை ராணுவத்தின் தொண்டர் என் அப்பா, தனக்கு அரசியல் கைதி அங்கீகாரம் வேண்டி, மற்றும் பல கைதிகளுடன் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார். சாதரண கைதிகளிற்குரிய உடைகளை நிராகரித்து, உணவு உண்ணாது, நீரை மட்டும் ஆகாரமாக கொண்டு, கடும் குளிரில் ஒர் கிழிந்த போர்வையினோடு மெல்ல மெல்ல உறைந்தும், இறந்தும் கொண்டிருந்தார் அவர். விரதத்தின் 56ம் நாளில் அவர் இறந்து போனார்.
கல்லறையில் வீசிக்கொண்டிருந்த எலும்புகளை உறைய வைக்கும் குளிர்காற்று என் மனதில் கனன்று கொண்டிருந்த வஞ்சத்தை அணைக்க முயன்றதில் தோற்றது. என் மாமா TERRENCE PARNELL , IRAவின் ஒர் சிறிய பொறுப்பாளாராக இருந்தார். என்னை IRAவில் சேர்த்துக் கொள்ளும் படி அவரிடம் வேண்டினேன். குண்டு வைப்பவர்களை விட, நன்கு கற்றவர்களே எங்கள் போராட்டத்தினை மேலெடுத்து செல்ல எங்களிற்கு தேவை எனக்கூறி, என் கல்வியை தொடர சொன்னார் அவர்.
குளிரும், வெறுப்பும் நிறைந்த மூன்று வருடங்கள் ஓடியது. BELFASTல் பள்ளியில் இறுதி ஆண்டில் பயின்று கொண்டிருந்தேன். சரித்திரப்பாடம் என்னை மிகவும் கவர்ந்தது. சரித்திர ஆசிரியர் EAMON O'SHEA அயர்லாந்து மக்களின் வீரமும், போராட்டமும், வலிகளும் நிறைந்த சரித்திரத்தை எங்களிற்கு கற்பித்தார். ஒர் நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தவேளையில் O'SHEA வகுப்பறையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார் . அவரை பொலிசாரிடமிருந்து காப்பாற்றப்போய், நான் IRAல் இணந்துகொள்ள நேர்ந்தது. MAIREADம் என் வாழ்வின் குளிர்ந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
MAIREAD, BELFASTல் உள்ள காய்கறி கடையொன்றில் வேலையில் இருந்தாள். ஆனால் அவளின் உண்மையான பணி என்னவெனில் மறைவிடங்களிலிருந்து பிறிதோர் மறைவிடத்திற்கு ஆயுதங்களை கடத்துவது ஆகும். IRAவில் நான் அவளிற்கு கீழே பணிபுரிந்தேன். உண்மையை கூறினால், என் கனவுகளிலும் நிலை அதுதான்.அவள் என்னுடன் சிறிதே பேசுபவளாகவும்,சிரிப்பே இல்லாதவளாகவும் இருந்தாள். MAIREADன் அப்பா 1972ல் ஏற்பட்ட ரத்த வெள்ளி கலவரத்தில் இறந்து போனார், கடந்த வருடத்தில் அவள் தாயும் நோயுற்று இறந்தாள். அனாதையான அவளை என் கைகளில் அள்ளிக் கொள்ளவே விரும்பினேன் ஆனால் அன்று அதற்குரிய துணிச்சல் இருக்கவில்லை. இச்சமயத்தில் ஒர் புதிய நடவடிக்கைக்கான உத்தரவு, எங்களிற்கு கிடைத்தது.
IRAவின் ஆயுதப்பிரிவினர், வெடிகுண்டு பொருத்திய கார் ஒன்றினை புரொடெஸ்டாண்ட் மத மக்கள் வாழும் குடியிருப்பிலுள்ள பல்பொருள் அங்காடிக்கருகில் நிறுத்தி வைப்பார்கள். குண்டு வெடிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, MAIREAD பொலிசிற்கு போன் செய்து இதனை தெரியப்படுத்த வேண்டும். இதுதான் திட்டம். ஆனால் குண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வெடித்தது. என் கண்களின் முன்பாக அழுகையும், ஓலமும் உயிர்களும் சிதறிப்போயின. நாங்கள் ஓடத்தொடங்கினோம். பொலிஸ் தன் தேடல் வேட்டையை தொடங்கியது. எங்கள் மறைவிடத்தை கண்டுபிடிக்க அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை. தோட்டாக்கள் எல்லாப்பக்கங்களிலும் சீறின, நானும், என் மாமாவும், MAIREADம் ஒர் சிறிய படகில் ஏறி ஆற்றைக்கடக்கும் வேளையில், சீறி வந்த தோட்டாக்கள் MAIREADன் உடலை வெட்டிப்போட்டன. அவள் உடலை என் கைகளில் ஏந்திக்கொண்டேன். அவள் உயிர் பிரிந்த அத்தருணத்தில் முதன்முதலாக என்னைப்பார்த்து புன்னகைத்தாள். நண்பனே JASON FLY, அந்தப் புன்னகையை மட்டும், என்றும் மறவாது என் உயிரின் அருகில் வைத்துக்கொண்டேன்.
[தொடரும்]