தமிழ் காமிக்ஸில் அற்புதங்கள் தனித்து வருவது இல்லை. அதுவும் துப்பறிவாளர்களின் கதை எனில் உரையாடல் குமிழிகளில் அற்புதங்கள் கூடி நின்று கும்மி அடித்து குலவை எழுப்பும். துப்பறிவாளர் ஜெரோம் கதையில் ஏற்கனவே இது நடந்திருக்கிறது. ஜில் ஜோர்டானும் ஒரு துப்பறிவாளர் என்பதைக் கண்டு கொண்ட அற்புதங்கள் அவரையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.
198ம் பக்கத்தில் மூன்றாவது கட்டத்தில் ஹென்ரி கூறும்.... கரையிலிருந்து 4 கிமீ தொலைவில் பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருப்பதால் வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.... என வாக்கியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது பாலத்தின் மத்திய பகுதியில் கார் மாட்டிக் கொண்டிருந்தால் கடல் இறக்கம் நிகழும்போது யானைப்படை குதிரைப்படையுடன் சென்று காரை கட்டி இழுத்து வந்துவிடலாம் அல்லவா... அட இந்த வாக்கிய உருவாக்க குளறுபடியை விட்டுவிடலாம்!
பக்கம் 200 கட்டம் 5ல் அபெஸ் தெருவில் கருகியது என்னவென்பதை கண்டுபிடிக்க நாம் சங்கர்லாலைத்தான் அமர்த்திக் கொள்ளவேண்டும், அட இதையும் விட்டு விடலாம், பாரிஸில் 1960 களில் மிளாகாய்த் தூளை பயன்படுத்தி லிபெலூயுலின் கண்களை கண்ணீர்க் குளமாக்கிய குற்ற நுட்பத்தையும் நாம் விட்டுவிடலாம்!
பக்கம் 206 கட்டம் 10ல் பிரான்சின் தெற்குப்பகுதியான MIDI க்கு செல்கிறேன் என்பதை பிற்பகல் என அர்த்தம் கொண்டு [ மதியம் எனும் அர்த்தம் Midi எனும் சொல்லிற்கு உண்டு] பிற்பகலில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன் எனச் சொன்னதையும் விட்டுவிடலாம்!
சைடரை அடித்த குஷியில் பக்கம் 213 கட்டம் 10ல்.. போகவர 8 கி.மீ தூரம் என அருள்வாக்கு கூறும் ப்ரொகார்டையும் மன்னித்து விட்டு விடலாம்!
பக்கம் 217ன் இறுதிக்கட்டத்தில் வித்தியாசியமான குணாதிசயம் கொண்ட இந்த பிரகிருதிகளை கணிக்கவே முடியவில்லை எனக் கடலில் மூழ்கிய காரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் காணப்பட்ட டெம்பளர்களின் சங்கேதக் குறியீடுகளை சொல்கிறாரா இல்லை காரில் இருக்கும் நபர்களை சொல்கிறாரா எனும் மயக்கநிலை உருவாக்கத்தையும் விட்டுவிடலாம்!
குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் பாத்திரங்களிற்கிடையில் நிகழும் உரையாடல்களின் பெரும் பகுதி தமிழ் வாசக ரசனையை இதமாக பதமாக வருடிக் கொடுத்திடும் விதமாக முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடலாம்! [ மாரிஸ் திலியூதான் பூட்டாரே நைய்னா]
பக்கம் 229 கட்டம் 3ல் Phare எனும் சொல் காரின் முற்பகுதியில் அமைந்திருக்கும் விளக்குகளைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளாது கலங்கரை விளக்கம் என அர்த்தம் கொள்ளப்பட்டு காரின் முற்பகுதி விளக்குகளின் ஒளியால் எழுப்பப்படும் SOS சமிக்ஞை அப்படியே பல்டி அடித்து கலங்கரை விளக்கத்தில் உள்ளவர்களிற்கான சமிக்ஞை ஆகியதையும், லாப்ரானில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்திருந்தால், அவ்வளவு உயரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கார் தாழ்வான பகுதியில் நிற்பதால் அது அவர்களிற்கு தெரியாது என கூறப்படும் அற்புதமான வரிகளையும் தூக்கி கடாசி விடலாம்!
கூடவே போக்கா வந்தது சிறு மோட்டார் படகில்தானா என்பதையும் அவன் கயிற்றில் கட்டி வைத்தது படகையா அல்லது பிளாஸ்டிக் பையில் போட்டு பாதுகாப்பாக கடலில் மூழ்க்கியிருக்க செய்த மோட்டாரையா என்பதையும் மறந்துவிடலாம்! குஜால் குதிரை வீரன் கோட்டைப் பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய ஜில் அண்ட் கோ மொக்கை பீஸ் எனும் முடிவையும் இதனால் நாம் உருவாக்கி கொள்ளலாம்!
ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!
அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். அதை நான் இங்கு எழுதப்போவது இல்லை. மாறாக காமிக்ஸ் ஒரு டைம்பாஸ், ஜாலியாக படித்து விட்டு செல்ல வேண்டும், இப்படியான தீவிர அலட்டல்கள் எல்லாம் உடல் நலத்திற்கு தீங்கானது, இந்த மொழிபெயர்ப்பே இக்கதைக்கு மிக அதிகம், தட்டில் போடுவதை உண்டு விட்டு சூப்பராக இருக்கிறது எனச் சொல்லிவிட்டால் எல்லாம் சுபமாகி விடும் எனும் மனநிலையைக் கொண்டிடவும் உங்களிற்கு முழுமையான உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது.
நான் கூறிய மேலும் கூறிடாத அற்புதங்களை தன்னில் கொண்டுதான் அலைகளின் ஆலிங்கனம் எனும் ஜில் ஜோர்டான் கதை NBS ல் வெளியாகி இருக்கிறது. ஒரு கதையில் இவ்வகையாக முன்னெப்போதும் கண்டிராத அற்புதங்கள் நிறைந்திருப்பதால் NBS எனும் நாமம் மிகவும் பொருத்தமாக இங்கு அமைந்துவிடுகிறது. இந்த சமயத்தில் இக்கதையை தமிழில் படித்து முடித்தபின் என் மனதில் ஊற்றெடுத்து உந்தித் தள்ளிய சில கேள்விகளை இந்த சுபதின சுபவேளையில் இப்பதிவில் சேர்த்திடலாம் என விரும்புகிறேன்.
அப்படி தெரிந்து கொண்டு இக்கதையை வெளியிட அனுமதிக்கும் நிலையில் தன் வாசகர்கள் சிந்தனைத்திறன் குறித்து அந்த ஆசிரியபீடம் கொண்டுள்ள மதிப்பீடுதான் என்ன?
இக்கதையின் வாசிப்பின் பின்பாக இந்த ஆசிரியபீடம் மீதும் அதன் வெளியீடுகள் மீதும் நான் உருவாக்கி கொள்ளும் மதிப்பீடு என்ன ?
கில்லிங் ஜோர்டான் நிறைவுற்றது.

40 வருடங்கள் பராம்பரியம் கொண்ட ஒரு தமிழ் காமிக்ஸ் பதிப்பகம் தனது 40வது ஆண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளியிடும் தொகுப்பில் அலைகளின் ஆலிங்கனம் எனும் இக்கதையையும் சேர்த்து வெளியிட்டு இருக்கிறது எனும் வகையில் இதன் ஆசிரியபீடம் இக்கதையில் இப்பதிவில் கூறப்பட்டு இருக்கும் விடயங்களை தெரிந்து கொண்டுதான் அதை அனுமதித்ததா?