துர்திஸ்தான் சோசலிச ஜனநாயகக் குடியரசு, அல் டெஸிர் நகரம்:
பழுப்பு வண்ணத்தில் சூரியன் அஸெர் மலைக்குன்றுப் பகுதியை நிறமாக்கி இருக்க, சிதைந்த மலைக் கோட்டை ஒன்றை நோக்கி செல்லும் பாதையில் முன்னேறுகின்றன சில ட்ரக்குகளும், ஒரு காரும். சிதைந்த கோட்டையின் வாயிலில் நிறுத்தப்படும் ட்ரக்குகளிலிருந்து ஆயுததாரிகள் குதித்து இறங்குகிறார்கள்.
வண்டிகளிலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் நிறைந்த பெட்டிகள் இறக்கப் படுகின்றன. நிறுதப்பட்டிருக்கும் காரின் கதவை துப்பாக்கி தாங்கிய வீரனொருவன் திறக்க, கரு நீல ஆடையில் கம்பீரமாக இறங்குகிறது அழகு.
அவள் நடையில் ஒர் மிடுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவள் உயரம் ஆண்களை நாணம் கொள்ளச் செய்யும். கண்களில் வசியம். இதழ்கள், சுவைத்திடு என்று அழைப்பவை. சுவைத்திடாது போனால் சொர்க்கம் இருந்தென்ன, இல்லாது போனாலென்ன. ஒடுங்கிய இடுப்பில் தொங்கும் வாள், ஒர் துப்பாக்கி என்பன இந்த அழகை மேலும் அழகாக்க, திறந்த அவள் மேலாடையினூடு இரு இமயங்கள் எட்டிப் பார்க்கின்றன.
அவள் கண்களில் கடந்த கால நினைவுகள் விழிக்க, காதுகளில் முன்னோரின் குரல்கள் ஒலிக்கின்றன. அஸெர்களின் சிரிப்பு அவளை வரவேற்கிறது. வெண்சிறகு பிறந்த தொட்டில் அல்லவா இந்தப் பிரதேசம். சிசியாவின் பார்வையில் அழிந்து போய்விட்ட வெண்சிறகு குழுவை மீண்டும் பிறப்பிக்கும் வைராக்யம் துடிப்புடன் இருந்தது. அதற்கு அவள் என்ன விலை தரவும் தயாராக இருந்தாள்.
இரு வாரங்களின் பின்…
இரவின் நிறத்தை அவன் லாரியின் விளக்குகள் அழிக்க, தன் தங்கை ஒவ்லிவியாவைக் காண்பதற்காக, அல் டெஸிர் நகரத்தை நோக்கி குறுகலான மலைப்பாதை வழியே வந்து கொண்டிருக்கிறான் ஜிப்சி [ட்சாகோய்]. வெளிநாட்டு முதலீட்டாளர்களை களிப்பூட்டுவதற்காக அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருக்கும் வேடிக்கையான ராணுவ மோதல் ஒன்றின் பாதையில் வந்து விடும் ஜிப்சி, பாதையில் தொடர்ந்து செல்ல முடியாததால், குறுக்குப் பாதை ஒன்றை தேர்ந்தெடுக்கின்றான்.
அப்பாதை அவனை ஒர் மலைக்குன்றின் உச்சியிலிருக்கும் ஒர் சிறிய தகர கொட்டகைக்கு அழைத்து வருகிறது. தகர கொட்டகையின் முன்பாக நெருப்பு வளர்த்து, தேனீர் குவளை சகிதம், கீழே நடக்கும் ராணுவ மோதலை தொலை நோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒர் முதியவர். ஜிப்சியை வரவேற்கும் அம்முதியவர் அவனிற்கு தேனீர் தந்து உபசரிக்கிறார். இந்நகரைக் காப்பாற்ற தான் கலந்து கொண்ட ஒர் போர் பற்றியும் அவனிடம் கூறுகிறார். ஆனால் தற்போது தான் வறுமையில் வாடுவதையும் ஜிப்சிக்கு விளக்குகிறார். அன்றிரவு அம்முதியவரின் நிலத்தில் தங்கிக் கொள்கிறான் ஜிப்சி.
அல் டெஸிர் நகரத்தில் தங்கியிருக்கும் ஜிப்சியின் அழகிய தங்கை ஓவ்லிவியா, நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் பின் முற்றாக இல்லாது அழிக்கப்பட்ட வெண்சிறகு குழுவின் மர்மங்கள் பற்றி ஆராய்ந்து ஒர் புத்தகம் எழுத விரும்புகிறாள். தன் புத்தகங்களின் எடிட்டரான, பொன்னிறத் தேவதை எவா டார்கோல்ட்டுடன் ஒர் ஹோட்டலில் தங்கியிருக்கும் அவள், நகரில் வாழும் மக்களிடம் தகவல்களை சேகரிக்க முயல்கிறாள். நகர மக்கள் வெண்சிறகு குறித்து பேச மறுக்கிறார்கள்.
நகரில் வாழும் ஒரு பெண் வெண்சிறகு குறித்து ஒவ்லிவியாவுடன் பேச முன்வருகிறாள். நகரின் ஒடுங்கிய தெருக்கள் கூடும் சந்தி ஒன்றில் அமைந்திருக்கும் நீர்த்தொட்டி ஒன்றினருகில் அப்பெண்ணைச் சென்று சந்திக்கிறாள் ஒவ்லிவியா. சூன்யக்காரி என்று மக்களால் கருதப்படும் சிசியா எனும் பெண்பற்றி அவளிற்கு ஏதேனும் தகவல் தெரியுமா என வினவுகிறாள் ஒவ்லிவியா.
சிசியா பற்றி அப்பெண் சில தகவல்களை ஒவ்லிவியாவிற்கு தெரிவிக்கிறாள். சிசியா பத்து வயது சிறுமியாக இருந்த போதே வெண்சிறகு குழுவால் தத்தெடுக்கப்பட்டவள். உருமாறுவதில் தேர்ந்தவள். தன் கண்களின் நிறங்களை இமைத்துடிப்பிற்குள் மாற்றிக் கொள்பவள் என அப்பெண் சிசியா பற்றி கூறிக் கொண்டிருக்கும் போதே அப்பெண்ணின் கண்களின் நிறம் மாற்றம் கொள்கிறது. முக்காடு அணிந்த அப்பெண்ணின் காதில் செருகப்பட்டிருந்த ஒலிவாங்கியில், சிசியா, ஒவ்லிவியாவின் கதையை அப்புறம் முடிக்கலாம். நண்பன் சிர்லெப் மூன்று லாரிகளுடன் வந்து சேர்ந்து விட்டான் என தகவல் சொல்கிறான் அஹ்மட். பெண் கூறிய தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒவ்லிவியாவின் தலை நிமிர்ந்த போது தகவல் தந்த பெண் மறைந்து விட்டதைக் கண்டு அவள் ஆச்சர்யம் கொள்கிறாள்.
அஸெர் கோட்டையில் வந்து நிற்கும் மூன்று பிரம்மாண்டமான லாரிகளை நெருங்கும் சிசியா, திறந்திருக்கும் பின் கதவு வழியாக, மலையாக லாரியுள் அடுக்கப்பட்டிருக்கும் பணத்தை நோக்குகிறாள். இவ்வளவு பணத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கும் சிர்லெப்பிடம், வெண்சிறகின் தொட்டிலை சீர்படுத்தப் போகிறேன், கொலைஞர்களின் சொர்க்கம் அதன் பூரண அழகில் மிளிரப்போகிறது என்கிறாள் சிசியா.
நகரில் தன் தங்கை தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு, நவ நாகரீக உடை அணிந்து வருகிறான் ஜிப்சி. அங்கு தன் தங்கையின் எடிட்டரான எவா டார்கோல்டுடன் அறிமுகம் செய்து கொள்ளும் அவனை எவாவிற்கு பிடித்துப் போய்விடுகிறது. ஜிப்சியை நோக்கி தன் மன்மத பானங்களை சளைக்காமல் வீசுகிறாள் எவா. ஜிப்சிக்கு மன்மத பானங்கள் என்றால் அல்வா. ஆனால் குறுக்கே வந்து விடுகிறாள் அவன் அன்புத் தங்கை ஒவ்லிவியா. சில அன்பான குசல விசாரிப்புக்களின் பின் மூவரும் உணவருந்த செல்கிறார்கள்.
உணவருந்திக் கொண்டே தான் அல் டெஸிர் நகரிற்கு வந்த காரணத்தை ஜிப்சிக்கு விளக்குகிறாள் ஒவ்லிவியா. கடந்த வருடத்தின் வசந்த காலத்தின் போது ஜெர்மனியில் ரஷ்ய மாஃபியாவிற்கு சொந்தமான மூன்று லாரிகள் அதனுள் இருந்த பணத்துடன் சிசியாவினால் கடத்தப்பட்டன என்பதையும் தெரிவிக்கும் ஒவ்லிவியா, தான் எழுதப் போகும் நூல் வெண்சிறகு அமைப்பு குறித்து இது வரை வெளிவராத பல ரகசியங்களை வெளிக்கொணரும் என்று உற்சாகமாக பேசுகிறாள். சுவாரஸ்யமான இவ்வுரையாடலின் மத்தியிலும் ஏவாவின் கால் விரல்கள் மேஜைக்கு கீழாக ஜிப்சியின் தொடையில் கவிதை எழுதிக்கொண்டிருந்தன.
அன்றிரவு ஏவாவுடன் இரவை களிப்புடன் கழிக்கிறான் ஜிப்சி. அவன் மனதில் முன்னைய இரவை தன்னுடன் தேநீருடன் பகிர்ந்து கொண்ட முதியவர் லாமி நினைவிற்கு வருகிறார். ஏவாவோ மறுநாள் காலை ஒவ்லிவியாவின் ஆத்திரத்தை எப்ப்படி சாமாளிப்பது என்று எண்ணுகிறாள். பக்கத்து அறையில் ஒவ்லிவியாவை வைத்துக் கொண்டு இவர்கள் ஆடிய லீலைகளின் சங்கீதம் ஒவ்லிவியாவின் காதை எட்டவே செய்தது.
அடுத்த நாள் காலையில் கோபமாக இருக்கும் ஒவ்லிவியா, அஸெர்க் கோட்டைக்கு அண்மையில் உள்ள கடைகளில் புரட்சிக்கு முந்தைய அஞ்சல் அட்டைகள் கிடைக்குமா என்பதை தேடிப்பார்க்க செல்கிறாள். ஜிப்சி சவரம் செய்து முடித்ததும் அவனுடன் வந்து ஒவ்லிவியாவுடன் இணைந்து கொள்வதாகக் கூறுகிறாள் ஏவா.
நகரில் அமைந்துள்ள ராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் லஞ்சமாக ஏராளமான பணம் தந்து, தன் திட்டத்தை வேகமாக முன்னேறச் செய்யும் படி கேட்டுக் கொள்கிறாள் சிசியா. பணத்தை பெற்றுக் கொள்ளும் அதிகாரி இனிக் காரியம் வேகமாக நடைபெறும் என சிசியாவிற்கு உறுதி அளிக்கிறார்.
ராணுவ அலுவலகத்திலிருந்து தன் காரில் அஹ்மட்டுடன் திரும்பும் சிசியா, வழியில் கடைத்தெருவில் ஒவ்லிவியாவைக் கண்டுவிடுகிறாள். அவள் முகத்தில் ஒர் மென் புன்னகை விரிய, அஹ்மட்டிடம் ஒவ்லிவியாவை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறாள். காரை நிறுத்தி விட்டு கையில் பளபளக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த குறுவாளுடன் ஒவ்லிவியா நிற்கும் கடை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான் ராட்சதன் அஹ்மட்.
ஒவ்லிவியாவின் கோபத்தை பேசி தீர்க்க நினைக்கும் ஏவா அவளைத் தேடி கடைத்தெருவிற்கு வருகிறாள். ஒவ்லிவியா நின்ற கடைக்குள் நுழையும் அஹ்மட், கடைக்காரனின் நெஞ்சில் குறுவாளால் குத்துகிறான். அவன் ஒர் கையின் பிடிக்குள் அடங்கிப் போகிறது ஒவ்லிவியாவின் கழுத்து. ஒவ்லிவியாவின் கழுத்தில் பிடித்த பிடியை தளர்த்தாது அவளை கடைக்கு வெளியே தள்ளிச் செல்கிறான் அஹ்மட்.
கடையிலிருந்து வெளியே வரும் ஒவ்லிவியாவையும், அஹ்மட்டையும் கண்டுவிடும் ஏவா அவர்களை நோக்கி செல்ல, காற்றைக் கிழித்து கொண்டு வேகமாக வெட்டுகிறது அஹ்மட்டின் குறுவாள், அவன் வைத்த குறி தப்பி ஏவாவின் கைப்பை துண்டாகி விழுகிறது. அதிர்ச்சியில் கீழே விழுகிறாள் ஏவா. காத்திருக்கும் காரில் ஒவ்லிவியாவை தூக்கிப் போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு சிட்டாய் பறக்கிறது சிசியா, அஹ்மட் கூட்டணி.
சுதாரித்துக் கொண்டு எழுந்து விடும் ஏவா, ஜிப்சி சவரம் செய்து கொண்டிருக்கும் கடையை நோக்கி ஓடுகிறாள், சவரம் செய்து கொண்டே ஊர்க்கதை பேசிக்கொண்டிருக்கும் ஜிப்சியிடம் ஒவ்லிவியா கடத்தப்பட்ட செய்தியை கூறுகிறாள் ஏவா. துடித்து எழும் ஜிப்சி, சவரம் செய்ததிற்கு பணத்தை தராமலேயே தன் தங்கையை கடத்தியவர்களை தேடி ஓடுகிறான். ஆரம்பமாகிறது அதிரடி சாகசம்….
சிசியா,அல்டெஸிர் ராணுவ அதிகாரிகளுடன் கூட்டாக செய்யும் சதி என்ன? ஒவ்லிவியாவை ஏன் சிசியா கடத்தினாள்? தன் தங்கையை பலம் பொருந்திய வெண்சிறகு அமைப்பிடமிருந்து ஜிப்சி மீட்டானா? சிசியாவின் சதி முறியடிக்கப்பட்டதா? இக்கேள்விகளிற்கு விறுவிறுப்பாக விடை தருகிறது GIPSY எனும் காமிக்ஸ் தொடரின் ஐந்தாவது ஆல்பமாகிய L’AILE BLANCHE.
ஒர் பக்கா மசாலாக் கதைக்குரிய அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது கதை. வாசகர்களை எதிர்பார்க்க வைக்கும் ஆரம்பம், கட்டு மஸ்தான உடல் கொண்ட அழகிய [ அரை வேக்காட்டு ] ஹீரோ, இரண்டு சித்திரக் கட்டங்களிலேயே ஹீரோவினால் வசீகரிக்கப்படும் ஒர் இளம் சிட்டு. கிளு கிளு கட்டங்கள், சஸ்பென்ஸ், மலிவான காமெடி, அசத்த வைக்கும் ஆக்ஷன், அண்ணன் தங்கை செண்டிமெண்ட் என்று நல்ல காக்டெயில்.
இந்தக் காக்டெயிலை அற்புதமாக பரிமாறியிருக்கும் கதாசிரியர் THIERRY SMOLDEREN ஆவார். புருசெல்லில் 1954ல் பிறந்தவர். அனிமேஷன் துறையில் கல்வி. நாடகத்துறை அனுபவங்கள். ஜாஸ் இசை கித்தார் கலைஞர். ஒவியம், இசை சம்பந்தமாக கட்டுரைகள் என்று பலதுறை மன்னன். 1981 களில் காமிக்ஸ் துறைக்குள் நுழைந்தவர். இன்று காமிக்ஸ் உலகில் மதிப்பு பெற்ற ஒர் கலைஞர். வாசகரின் நாடித்துடிப்பு அறிந்து பக்கத்திற்கு பக்கம் பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார் அவர். அதிலும் உரையாடல்களில் ஜிப்சி பேசும் ஆண்மை தெறிக்கும் [ கெட்ட ] வசனங்கள், பன்ச் டயலாக் தோற்றது போங்கள்.
ஆசிரியரின் கதைக்கு பிரம்மிக்க வைக்கும் வகையில் சித்திரங்களை வரைந்திருப்பவர் எங்களிற்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள ஓவியர் ஒருவர். சித்திரங்களை வைத்தே நண்பர்கள் அவரை யாரெனக் கூறிவிட முடியும். ஸ்கார்பியோன் புகழ் ஓவியரான ENRICO MARINI தான் அவர். அழகிய பெண்களின் கண்களாகட்டும், அவர்களின் அபிநய உடல்களாகட்டும், கூரை விட்டு கூரை பாயும் ஆக்ஷன் காட்சிகளாகட்டும், துப்பாக்கிகள் பேசும் மோதல் காட்சிகளாகட்டும், பக்கத்திற்கு பக்கம் பின்னியிருக்கிறார் மாரினி. ஆக்ஷன் கதைகளிற்கு மாரினியின் ஓவியங்கள் ஒர் தனித்தன்மையை வழங்குகின்றன என்றால் அது மிகையல்ல.
1993ல் முதல் 2002 வரை மொத்தம் ஆறு ஆல்பங்கள் வெளியாகியுள்ள ஜிப்சி, மசாலா கதைப்பிரியர்களை கண்டிப்பாக திருப்தி படுத்தும். [***]
ஆர்வலர்களிற்கு
அருமையான பதிவு..
ReplyDelete//அவள் நடையில் ஒர் மிடுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவள் உயரம் ஆண்களை நாணம் கொள்ளச் செய்யும். கண்களில் வசியம். இதழ்கள், சுவைத்திடு என்று அழைப்பவை. சுவைத்திடாது போனால் சொர்க்கம் இருந்தென்ன, இல்லாது போனாலென்ன. ஒடுங்கிய இடுப்பில் தொங்கும் வாள்//
ம்ம்ம் அழகிய சொல்நடை வாழ்த்துக்கள்
ஆஹா.... மீ த செகண்டு ;-)
ReplyDeleteவழக்கப்படி, ஆங்கிலத்தில் இன்னும் இல்லையல்லவா ... க்ர்ர்ர்ர்ர்....
ReplyDelete//ஹீரோவினால் வசீகரிக்கப்படும் ஒர் இளம் சிட்டு//
ReplyDeleteஒருவேளை குந்தவையாக இருக்குமோ?
இப்ப வருமோ.. எப்ப வருமோ.. - ’அந்த’ போஸ்ட் எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு அப்பாவி மனிதன்...
ReplyDeleteஇக்கதைகளையெல்லாம் யாராவது தமிழில் பதிப்பித்தால் எப்படி இருக்கும்? ஹூம்ம்ம்
ReplyDeleteஆஹா,
ReplyDeleteஇந்த கதையை எங்கோ படித்தது போல இருக்கே? ஸ்கான்லேஷன் காபி ஏதாவது உள்ளதோ?
பல கதைகளை படிப்பதால் நினைவில் கொணர சிரமமாக இருக்கிறது.
தமிழ் வசனங்கள் கொண்ட பக்கங்கள் அருமை. மறுபடியும் ஒரு முறை முழு கதையை இடும் எண்ணம் உள்ளதா ஐயா?
நண்பர்களே!இந்தக் கதை Heavy metal magazine மூலம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.இதுவும்,gipsi யின் ஆரம்ப trilogy கதையும் அதகளமாக இருக்கும்.
ReplyDeletegipsy கதைதொடரில் பர பர கதை மட்டுமில்லாது,இன்னொரு முக்கிய attraction, rough and tough,no nonsense ஹீரோ ஜிப்சி (ட்ஸாகோய்)...
ReplyDeleteஅண்ணாத்த பேசும் வசனங்கள் செம (கெட்ட) குத்து..
Dracu ! னு கத்திகிட்டு இவரு பண்ணுற அலும்பு.. சூப்பரப்பு..
கூடிய சீக்கிரம் இவரோட முதல் மூன்று கதைகளின் தொகுப்பான trilogy கதையைப் பற்றி பதிவு போடுகிறேன்.
வாவ்.. வாவ்... உங்களுக்குள் இருக்கும் ரசிகன் வியக்க வைக்கிறான்
ReplyDeleteசிறப்பான மொழியாக்கம் மற்றும் பகிர்வு நண்பரே,
ReplyDeleteதமிழில் வர வழியில்லை என்ற ஒரு குறை தவிர. எப்பொழுதும் போல் எனது நன்றியும் அன்பும்
நண்பர் ரியாஸ், தங்கள் ஆதரவிற்கும் கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் கருந்தேள், கதைகளின் ஆங்கிலப் பிரதிகள் இளவரசர் இலுமினாட்டியிடம் இருக்கிறது, கவனிக்க வேண்டிய வகையில் அவரைக் கவனித்து காமிக்ஸ் பிரதிகளை கையகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் பதிவு வரும் :) கவலை வேண்டாம். தமிழில் இக்கதைகள் வர வேண்டுமென்பது என் ஆசையும் கூட. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
விஸ்வா, ஸ்கான்லேஷன் பிரதிகள் இருக்கலாம். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இலுமினாட்டி இக்கதைகள் யாவும் ஆங்கிலத்தில் வந்திருப்பதைக் கூறி என்னை ஆச்சர்யப்படுத்தினார், எனவே நீங்கள் இவற்றை படித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. முழுக்கதைகளை வெளியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் இலுமினாட்டி, அஸ்டெக் புன்னகை எனும் கதையில் வரும் கிளுகிளு காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக ஊசி போடும் நர்ஸ் :) Dracu பயங்கரமான கெட்ட வார்த்தை ஆகும் :)) அடுத்த வருடமாவது நீங்கள் பதிவை வெளியிட்டு எம்மை மகிழ்விக்க வேண்டுகிறேன். தங்கள் கருத்திற்கு நன்றி.
நண்பர் கவிதை காதலன், வருகைக்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி.
நண்பர் வேல்கண்ணன், தங்கள் அன்பு நிறைந்த ஆதரவிற்கு என் மனம் நிறைந்த நன்றிகள். நண்பர் இலுமினாட்டி டவுன்லோட் லிங்கை வெளியிட்டார் எனில் உங்களிற்கு உடனடியாக அறியத்தருகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர்களே!புத்தகத்தினை flipkart மூலமாக வாங்கிக் கொள்ளலாம். அதில் தேடினாலே கிடைக்கும்.
ReplyDeleteகாதலரே! aztec laugh கதைல வர்ற பிட்டு ஒண்ணுமே இல்ல ஓய்.முதல் கதைல ஏகப்பட்ட பிட்டு இருக்கு ஓய். ;)
ReplyDelete//அடுத்த வருடமாவது நீங்கள் பதிவை வெளியிட்டு எம்மை மகிழ்விக்க வேண்டுகிறேன். //
ஹீ ஹீ,அவ்ளோ சீக்கிரமாவா? :)
இளவரசர் இலுமினாட்டி அவர்களே, நீங்கள் என்ன பிலிப்கார்ட் முகவரா :)) டவுன்லோடு லிங்கு தாங்க சாமியோவ்... முதல் கதைல ஏகப்பட்ட பிட்டா.. விடமாட்டான் இந்த வீர சிங்கம், அந்த மூன்று பாகங்களையும் பிரிச்சு மேய்ஞ்சுவிடுகிறேன்...ஆனால் இதுவும் செக்ஸ் அண்ட் லூசியா போல் இருந்தால் உமக்கு கதையில் கண்டம் வைத்து விடுவேன் என்று எச்சரிக்கிறேன் :)) இலுமினாட்டி ஜிப்சி பதிவை இடும் காலத்தில் தமிழில் காமிக்ஸ்கள் வாரம்தோறும் வெளியாகும் :))
ReplyDeleteஇவ்வளவு நல்ல எழுதிட்டு யாருமே டவுன்லோட் லிங்க் கொடுக்கலன்ன எப்புடி?
ReplyDeleteகாதலரே,
ஆவண செய்யுங்கள்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
Hi I got link for gipsy.......
ReplyDeletehttp://www.mediafire.com/file/zdyne1zwzhz/gipsy1.rar
http://www.mediafire.com/file/t4oeznmjgnn/gipsy2.rar
or
http://rapidshare.com/files/320263480/Gipsy.rar
I just downloaded and found 6 stories.....
ReplyDeleteFriends,இது தான்னு இல்ல.எந்த காமிக்ஸயுமே டவுன்லோட் பண்ண சிறந்த வெப்சைட் ஒண்ணு இருக்கு.இது தான் லிங்க்.
ReplyDeletehttp://komics-live.com/live/index.php
இதுல இல்லாத ஸ்கேன்ஸ் இருக்காது.அப்படி இல்லன்னா கூட நீங்க request forum ல போய் கேட்டா translate கூட பண்ணித்தருவாங்க.நம்மள மாதிரி காமிக்ஸ் பிரியர்களுக்கு இது உண்மையிலேயே சொர்க்கம்.நான் முதல்ல போய் தேடுறது இங்க தான்.
ரமேஷ் அவர்களே,நானே கொடுக்கலாம் னு இருந்தேன்.நீங்க முந்திகிட்டீங்க.லிங்க் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்.. :)
அப்புறம் காதலரே,நானு ஜிப்சி பத்தி போஸ்ட் போடுறப்ப தினம் தினம் காமிக்ஸ் வந்தாக் கூட அதிசயம் இல்ல. :)
ReplyDeleteசெக்ஸ் அண்ட் லூசியா சப்ப மேட்டர்.இதுல கொஞ்சமே வந்தாலும்... :)
நண்பர் வெடிகுண்டு வெங்கட், லிங் வழங்கப்பட்டுவிட்டது அனுபவித்து மகிழுங்கள். அனுஷ்கா ஆபாச போஸ்டரை ஆதரிப்போர் ஷங்கம் :)[எமக்கு ஸ்பெயினில் கிளைகள் கிடையாது ]
ReplyDeleteநண்பர் ரமேஷ், சுட்டிகளிற்கு நன்றி.
நண்பர் இலுமினாட்டி, உங்க லிங்கிற்கும் நன்றிகள். ஆமா ஆமா.. ஜிப்சில நல்லாத்தான் இருக்கும் :)) நீங்கள் பதிவு போட்டால் தினம் தினம் காமிக்ஸ் மட்டுமல்ல அவை இலவசமாகவும் கிடைக்கும் :))
// முழுக்கதைகளை வெளியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை //
ReplyDeleteம்ஹும்ம் அப்புடி எல்லாம் சொல்லக் கூடாது
அப்புறம் விஸ்வா அண்ணன் கூட சேர்ந்து புட்டு சாப்பிடும் போராட்டம் நடக்கும் :)
// ஏன் சிஸ்டர் எங்க இருக்கா
ReplyDeleteமீன் குழம்புக்கு மசாலா அரச்சி கிட்டு இருக்கா மச்சான் //
காதலரின் பஞ்ச் என்பது இது தானோ
// இதுல இல்லாத ஸ்கேன்ஸ் இருக்காது.அப்படி இல்லன்னா கூட நீங்க request forum ல போய் கேட்டா translate கூட பண்ணித்தருவாங்க //
ReplyDeleteதமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி தருவாங்களா இலுமி அண்ணே :)
.
ஆகா தலைவரே,
ReplyDeleteமிகவும் அருமையாக கொஞ்சும் தமிழில் எழுதியிருக்கிறீர்கள்,நண்பர்கள் சிலருக்கு பட்டப்பெயரிட்டு அழைப்பதும்,ஊடே வரும் பகடிகளும் மிகச்சிறப்பு!!!
பின்னூட்டங்களும் ஒவ்வொன்றும் அருமை,
ReplyDeleteநான் காமிக்ஸ் வெறியனாய் இல்லாமல் போனேனே என வருந்துகிறேன்.
நண்பர் சிபி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் கீதப்ப்ரியன், மிக்க நன்றி நண்பரே.