ஸ்லோமோஷன் க்ரீன் ஐஸ் நாவல்பழம்!
சீன அழகி ஸிங்ஸிங்கின் இன்ப விடுதியில், நாசக்குத்து நாவலனின் கேள்வி நாராசமாக ஒலித்து அடங்கியபோது அங்கு குடிபுகுந்த அமைதி அந்த இன்ப விடுதிக்கு பொருத்தமற்ற ஒன்றாக இருந்தது.
மேலும் நாவலனின் புரவி கேசரி, இறுதிவரை அவனிற்கு பிடிகொடாது டிமிக்கி நல்கியதும், இளவரசன் இலுமி தன் ரதத்தின் பக்கவாட்டு தட்டில்கூட நாவலன் தொங்கியவாறு பயணித்து வருவதற்கு அனுமதிக்காததும், இலுமியின் ரதம் கிளப்பிய தூசியைப் பருகியவாறே ரதத்தின் பின்னால் வேகமாக இன்ப விடுதி வரை ஓடி வந்ததும், இன்ப விடுதியின் முன்னால் இருந்த இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு அட்டையில் இருந்த அழகிய சிட்டின் யெளவனத்தில் மயங்கிய இலுமினாட்டி, தன்னிடம் பொறுப்புக்களை தட்டி விட்டு முழுமுங்கு முங்கச் சென்றதும் நாவலனின் குரலில் வழமைக்கு மீறிய அனலைக் கலந்திருந்தன.
நாவலனின் அனல் குரல் கேள்விக்கு விடையளிக்க முயன்ற சீனன் ஷங்லிங்கை, பச்சைக் கண்ணன் தன் விழிகளால் தடுத்தான். மேலும் தன் குரலில் ஒரு பவ்யத்தை வரவழைத்துக்கொண்ட பச்சைக் கண்ணன்,
- கேள்வி கேட்கும் வீரர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாமா? என்று பதிலுக்கு ஒரு கேள்வியை நாவலனிடம் வீசினான்.
- ஹாஹாஹா…. என்ற ஒரு முரட்டுச் சிரிப்பை உதிர்த்த நாவலன்…. நாவலன், நாசக்குத்து நாவலன் என்று தன் பெயரை ஸ்டைலாக உச்சரித்துவிட்டு கடகடவென நகைத்தான்.
- வினோதமான பெயர்தான் உங்களிற்கு வீரரே என்றான் பச்சைக் கண்ணன்.
- என் குத்தும் வினோதமாகவே இருக்கும் எனப் பதில் அளித்த நாவலன் தன் கரங்களை வேகமாக காற்றில் செலுத்தினான், அடிவாங்கிய காற்று பச்சைக் கண்ணனின் கேசத்தினுள் தஞ்சம் புக முயன்றது.
- அப்படியா! வீரரே எங்கே, என்னைக் குத்துங்கள் பார்க்கலாம் என்று கூறியவாறே நாவலனை நெருங்கி சில எட்டுக்கள் எடுத்து வைத்தான் பச்சைக் கண்ணன்.
பச்சைக் கண்ணன் இலகுவாக ஆறு அடி உயரத்தை தாண்டியிருந்தான், திடமான அகன்ற தோள்கள், திமிறிய புஜங்கள், இறுகிய தசைகள் தெறித்த கால்கள், தீர்க்கமான அசைவு; இந்தக் கலவையுடன் நாவலனை அண்மித்த பச்சைக் கண் அசுரன், தன் கையிலிருந்த மதுக் கிண்ணத்திலிருந்து அழகாக ஒரு மிடறு இழுத்தான். பிரெஞ்சு ஒயின் அவன் வாய்க்குள் அமிர்தமாக அசைந்தது. ஒயினின் சுவையில் ஒரு கணம் தன்னையிழந்த பச்சைக் கண்ணன்…வீரனே, உன்னை என்னைக் குத்தச் சொன்னேன் என்றான்.
இதைக்கேட்ட நாவலன், வலிய வந்து தன்னிடம் நாவல் குத்தை கேட்கும் பச்சைக் கண்ணனை பரிதாபமாகப் பார்த்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நாவலனின் கரங்கள் இயங்கின. அவன் இரு கரங்களும் வெறி கொண்ட இடிகளாக பச்சைக் கண்ணனின் முகத்தை நோக்கிப் பாய்ந்தன. பின்பு அங்கு நடந்தவற்றை கொஞ்சம் ஸ்லோமோஷனில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்லோமோஷன்…
நாவலனின் கரங்கள் இயங்க ஆரம்பித்ததை படுவேகமாக அவதானித்து விட்ட பச்சைக் கண்ணன் வேகமாக செயல்பட்டான். தன் கையிலிருந்த மதுக் கிண்ணத்தை மேலே எறிந்தான். யாரோ கயிறால் கட்டி மேலே இழுத்தாற்போல் அக்கிண்ணமும் ஒரு துளி ஒயினைக்கூட சிந்திவிடாது நேர்கோட்டில் மேலே உயர்ந்தது. தன் முகத்தை நோக்கி வந்த நாவலனின் கரங்களிலிருந்து சாமர்த்தியமாக விலகிய பச்சைக் கண்ணன், அதே வேகத்தில் தன் கால்கள் இரண்டையும் அகலவிரித்து நிலத்தில் வீழ்ந்தான். அதே நேரத்தில் உறுதியான அவன் இரு முஷ்டிகளும் நாவலனின் கச்சையிலிருந்த நாவல் பழச்சின்னத்தின் மேல் மின்னலாக வெடித்தன..
- யம்மாஅம்மாஆஆஆஅஹோஓஓஓ… என்றலறியவாறே தன் நாவல்பழத்தை கையில் பிடித்துக் கொண்டு சாய்ந்தான் நாவலன். அவன் வாழ்நாளில் அவனை யாரும் திருப்பி அடித்ததில்லை. அதுவும் அங்கு!! அகல விரித்த கால்களை மீண்டும் வேகமாக பழைய நிலைக்கு இழுத்து நிமிர்ந்தெழுந்த பச்சைக் கண்ணன், மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த மதுக் கிண்ணத்தை தன் கைகளில் பிடித்துக் கொண்டான்…. ஸ்டாப் ஸ்லோமோஷன்… உன் குத்து வினோதக் குத்து ஆனால் என் குத்து வீழ்த்தும் குத்து என்று முழங்கிய க்ரீன் ஐஸ், கிண்ணத்திலிருந்து ஒயினை ஒரு மிடறு உறிஞ்சினான். ம்ம்ம்ம்ம்… இந்த ஒயின் அற்புதத்தின் வரைவிலக்கணம் என்று சீன அழகியைப் பார்த்து பாராட்டவும் செய்தான் அவன்.
நாவல் பழத்தில் அடிவாங்கிய நாவலன், வேதனை வலியில் முனகியவாறே… பச்சைக் கண் வீரரே என்னை இதுவரையில் யாரும் அடித்ததேயில்லை என்றான்.
- எதற்கும் முதல்முறை என்று ஒன்று உண்டு நாவலனே.. என்று புன்னகைத்தவாறே பதில் தந்தான் பச்சைக் கண்ணன்.
- நீங்.. நீங்கள் யார்? நாவலனின் கேள்வியில் மரியாதை கலந்திருந்தது.
நாவலனின் இந்தக் கேள்வியைக் கேட்ட பச்சைக் கண்ணன் கடகடவென சிரித்தான். தன் மொட்டைத் தலையை தடவி, தொங்கு மீசையை நீவி விட்ட சீனனும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டான். தன் சிரிப்பை ஒரு கணம் நிறுத்திய பச்சைக் கண்ணன்….
- நாவலனே, நாங்கள்தான் நீ இங்கு தேடி வந்த மனிதர்கள். இதோ மதிப்பிற்குரிய சீனக் கடற் கொள்ளையன் ஷங்லிங்.. என்று சீனனை அறிமுகப்படுத்தினான் பச்சைக் கண்ணன்.
- சமுத்திரங்களின் தரைகள்கூட இவர் காலடித் தடம் பதித்திட தவமிருக்கும், கொடும் புயலும் இவர் முன் அடங்கும், கன்னிகள் இவர் கண்டபின் கைபட்ட கனிகள், எதிரிகளின் எமன், எமனின் ஹிட் கவுண்டர், வரலாற்றின் வரிகளில் தேடினாலும் கண்டடையமுடியாத உண்மையின் குரல், ஜெமினி கணேசனின் குருநாதர், இதோ பெருமைமிகு கடற்கொள்ளையன் க்ரீன் ஐஸ் காமா ஜோஸ்….. பச்சைக் கண்ணனை இவ்வாறு அறிமுகப்படுத்திய சீனன், காமா ஜோஸைப் பார்த்து தன் உடலை முன் வளைத்து நாடகபாணியில் சலாம் அடித்தான்.
இதைக் கண்ட காமா ஜோஸும், சீன அழகி ஸிங்ஸிங்கும் பலமாக சிரிக்க ஆரம்பித்தார்கள். சீனனும் சிரித்தான். வலியுடன் கீழே கிடந்த நாவலன், அந்த வேதனையின் மத்தியிலும், உடலில் பொட்டுத் துணி இல்லாமலிருந்த ஸிங்ஸிங்கின் அழகிய உடலைப் பார்த்து செம நாவல் கட்டையப்பா இவள் என மனதுக்குள் எண்ணிக் கொண்டான். நாவல் பழத்திற்கு மட்டும் வாயிருந்தால் தன் வேதனையில் அது அன்று ஒரு ஒப்பாரியே வைத்திருக்கும்.
[ ரேப் ட்ராகன் தீம் சாங் கீழே நைனா... நன்றி மைக் சேகர் ]
மீ த ஃபர்ஸ்ட்டு நைனா!!!!!!!!
ReplyDeleteமைக் மோகன், மைக் முரளி எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்! அது யாரது மைக் சேகர்?!!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
ஹீ ஹீ,slow motion படா சோக்கா இருக்குது.இத்தே எபக்ட நீரு ரபிக் எபிசொட்க்கும் வைப்பீரா ? :P :D
ReplyDeleteஎதுவும் சொல்றதுகில்லை.
ReplyDeleteஅந்த மாதிரி எழுதீட்டிங்க.
:) @rafiq :)))))))))))))))
@world :((((((((((((((((
அன்பு நண்பரே,
ReplyDeleteசங்லிங் அறிமுகம் ஆகும் அத்தியாயத்தில் Jumping Jack Flash தானே நியாயப்படி இருக்க வேண்டும்.
// பின்பு அங்கு நடந்தவற்றை கொஞ்சம் ஸ்லோமோஷனில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்லோமோஷன்… //
ReplyDeleteஅடுத்த டைரெக்டர் கிளம்பிட்டாரய்யா கிளம்பிட்டாரய்யா ..... :)
// ஜெமினி கணேசனின் குருநாதர், இதோ பெருமைமிகு கடற்கொள்ளையன் க்ரீன் ஐஸ் காமா ஜோஸ்….. //
இன்னாது ஜெமினி கணேசனின் குருநாதரா படா ஷோக்கா கீது மாமூ :D
அப்பாலே அப்புடியே கண்டிநியூ பண்ணு மாமூ :))
// பின்பு அங்கு நடந்தவற்றை கொஞ்சம் ஸ்லோமோஷனில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்லோமோஷன்… //
ReplyDeleteஅடுத்த டைரக்டர் கிளம்பிட்டாரய்யா கிளம்பிட்டாரய்யா :)
// ஜெமினி கணேசனின் குருநாதர், இதோ பெருமைமிகு கடற்கொள்ளையன் க்ரீன் ஐஸ் காமா ஜோஸ்….. //
ReplyDeleteஇன்னாது ஜெமினி கணேசனின் குருநாதரா!! படா ஷோக்கா கீது மாமு :)
நண்பர் கருந்தேள், தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteதலைவர் அவர்களே, பாட்டுப் பாடுபவர் எவரோ அவரே மைக்கு சேகர் :)) மைக் மோகன், மைக் முரளி ஆகியோரை எண்ணுகையில் ஒரு இனம்புரியாத உணர்வு உருவாகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் இலுமினாட்டி, ஸ்லோமேஷனை ரஃபிக்கின் எபிசோடில் வைத்தால் அது இழுத்துக் கொண்டு போகுமே :) தங்கள் கருத்துகளிற்கு நன்றி.
ஜோஸ், இது பிரபல கடற்கொள்ளையன் காமா ஜோஸ் அறிமுகம். மற்றும் ஷங்லிங் ஒரு ஹீரோ அல்ல எனவேதான் இப்பாடல் உபயோகப்படுத்தப்பட்டது. ரஃபிக்கை நோக்கி ஏன் இந்த அட்டகாசமான சிரிப்பு :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
நண்பர் சிபி, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
தொடர் பத்துக்கும் சேர்த்து ஒரு 'ஓ......................' போடவேண்டும் நண்பரே. ரேப் டிராகன் போல் வேறு ஏதாவது ... உண்டா ...?
ReplyDeleteநண்பர் வேல்கண்ணன், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteஹ ஹா.. .சில நாட்கள் முன்பு நீங்கள் பதிவிட்ட போது, ஜோஸின் அந்த ஆழ்ந்த சங்கேத கருத்து எதை குறிக்கிறது என்று எண்ணி கொண்டேன். இப்போது தான் தெரிகிறது, அதன் உள் அர்த்தம்.
ReplyDeleteஸ்லோ மோஷன் காட்சிகள் விவரிப்பு அருமை... மேட்ரிக்ஸ் என்ற ஒரு ஆங்கில படத்தில் இதை முன்கூட்டியே காப்பி அடித்து தமிழ் இலக்கியத்தில் முதன்முதல் என்ற பெருமைய சேர்க்காமல் அநியாயம் செய்து விட்டார்கள். நீங்கள் உங்கள் ஸ்க்ரிப்டை பகிரங்கரமாக அந்த ஹாலிவுட் ஆசாமிகளிடம் காட்டியிருக்க கூடாது காதலரே.
க்ரீன் ஐஸ் காமா ஜோஸ் என்ற பெயரை கேட்டவுடன் கிலி வருவதற்கு பதில், எனக்கு அது ஏதோ ஒரு நல்ல ஐஸ்க்ரீம் பண்டத்தின் பெயர் போல தான் தெரிகிறது. ஹி ஹி :)
ரஃபிக், காமா ஜோஸை ஐஸ்க்ரீம் பேபியாக நீங்கள் மாற்ற முயல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், மேலும் அவரிற்கும் எனக்கும் இடையில் எந்த சங்கேத தொடர்புகளுமில்லை என்பதையும் தெளிவு படுத்துகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDeleteகாமா ஜோஸ் = ஐஸ்க்ரீம் பேபி... ஹ ஹா... என்ன ஒரு அடைசொல்லல்.....
ReplyDeleteஎனக்கு பாக்கியராஜின் ப்ரூட் ஐஸ் ஐயர் தான் நியாபகம் வருகிறது ... ஹி ஹி :)