வணக்கம் அன்பு நண்பர்களே,
சென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களிற்கு என் பதில்களை நீங்கள் அப்பதிவின் கருத்துப் பெட்டியில் காணலாம்.
மதிப்பிற்குரிய தலைவர் டாக்டர் 7 அவர்களிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று இச்சொற்களை நான் எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணம் அவர்தான். அவர் வலைப்பூவின் கருவறையில் பூத்ததுதான் கனவுகளின் காதலன்.
இங்கு காணப்படும் எல்லாப்பதிவுகளுமே அவரிற்குரியவைதான். அவர் மேல் நான் கொண்டுள்ள மதிப்பு என் மனதறியும்.
அவரிற்கென ஒரு பதிவு நிச்சயம் இடம் பெறும் அது வரையில் டீசராக இப்பதிவு.
மனிதகுலத்தின் இறுதி நம்பிக்கையான ஜான் கானரின் தலைமையில், டெர்மினட்டர்களின் தலைமையகமான ஸ்கைநெட் கோட்டையின் மீது இறுதி தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிடுகிறது போராளிகளின் கூட்டமைப்பு. ஆனால் ஸ்கைநெட்டின் ரகசியத்திட்டமோ ஜான் கானர், மற்றும் கைய்ல் ரீஸ் இருவரையும் ஒழித்துக்கட்டுவதோடு மட்டுமல்லாது போராளிகளின் கட்டளை அமைப்பையும் சிதைத்து விட, அவதானமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை முறியடிக்க ஜான் கானரிற்கு உதவ முன் வருகிறான் புதியவனான மார்குஸ்…….
ஹெலிகாப்டர் ஒன்று டெர்மினட்டரின் தலையின் மீது தரையிறங்க, ஹெலியிலிருந்து கீழே இறங்கும் ஜான் கானர் [ கிறிஸ்டியன் பேல்] அகப்பட்டுக்கொண்ட டெர்மினட்ரின் தலையில் தோட்டாக்களைப் புதைத்து அதன் கதையை முடிக்கிறான். இந்த முதல் காட்சியில் நிமிர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள் நண்பர்களே, திரைப்படத்தினை தொடர்ந்து பார்க்கப் போகும் ரசிகர்களின் கதியும் இதேதான் என்பதை சிம்பாலிக்காக எடுத்துக் காட்டிய இயக்குனர் McG யின் புத்திசாலித்தனத்தினை பாராட்டியே ஆக வேண்டும்.
நீர், நிலம், ஆகாயம் என டெர்மினட்டர்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். உளவு பார்த்தல், துரத்தல், அழித்தல், கொல்லுதல் என அவைகள் செய்யாத சாகசங்களே இல்லை எனலாம். பேசாமல் ஒர் லோக்கல் டச்சாக பான்பாராக் விற்கும் ஒர் பெட்டிக்கடை டெர்மினட்டரையும் சேர்த்திருக்கலாம்.
கிறிஸ்டியன் பேல், சாம் வார்திங்டன் [ மார்குஸ் ] ஆகிய இரு நடிகர்களுமே ரொம்ம்ப நல்லவர்கள். இப்படியொரு டப்பாக் கதையில் மனம் வந்து நடித்திருக்கிறார்களே!!
சண்டைக்காட்சிகள் யாவும் சலிப்பையே தருகின்றன. ஒரு காட்சி கூட ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்த தவறிவிடுகிறது. தலையில் துண்டு கட்டிக்கொண்டு காவல் காக்கும் டெர்மினட்டர் மட்டும் நினைவில் நிற்கிறார்.
திரைப்படத்தின் உச்சக்கட்ட மோதல் காட்சிகளில் அம்மணமாக வந்து பங்கேற்கும் கலிபோர்னியாவின் கவர்னர் உருவம் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. ஒர் ஹாலிவுட் மயிலை அக்காட்சியில் போட்டிருந்தாலாவது கொஞ்சம் சூடாகியிருக்கலாம்!!!
இறுதிக்கட்டம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும், இது அக்காட்சியால் வந்த கண்ணீரல்ல, அப்பாடா படம் முடிந்ததே என்பதால் சொரிந்த ஆனந்தக் கண்ணீர்.
திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களிற்கு கிடைக்கும் விடுதலை உணர்வு மட்டும் தான் இப்படத்தின் மூலம் கிடைக்கும் உண்மையான இரட்சணியம்!!! (*)
கனவுகளின் காதலரே,
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டு!
உங்கள் கணினி சரியாகி விட்டதில் மகிழ்ச்சி! அந்த கேப்பில் பார்த்து ரசிக்க உங்களுக்கு இந்த மொக்கைப் படம் தானா கிடைத்தது?
//தலையில் துண்டு கட்டிக்கொண்டு காவல் காக்கும் டெர்மினட்டர் மட்டும் நினைவில் நிற்கிறார்.//
ஒரு வேளை நம்மூர் சோளக்காட்டு பொம்மைகளின் பாதிப்போ?!!
//திரைப்படத்தின் உச்சக்கட்ட மோதல் காட்சிகளில் அம்மணமாக வந்து பங்கேற்கும் கலிபோர்னியாவின் கவர்னர் உருவம் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை.//
அவர் இந்தப் படத்தில் வருகிறாரா என்ன?
தலைவர்,
அ.கொ.தீ.க.
காதலரே,
ReplyDeleteவணக்கம்,மீ த செகண்டு!
//திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களிற்கு கிடைக்கும் விடுதலை உணர்வு மட்டும் தான் இப்படத்தின் மூலம் கிடைக்கும் உண்மையான இரட்சணியம்!!//
Terminator - Salvation: உண்மையில் படம் முடிந்தவுடன் ரசிகர்களுக்கு வெளியே வருவதால் கிடைத்தது தான் Salvation.
தலைவரே,
ReplyDelete//அவர் இந்தப் படத்தில் வருகிறாரா என்ன?// எவ்வளவு முக்கியமான கேள்வி.
கனவுகளின் காதலனே,
ReplyDeleteமீ த தேர்டு. என்ன செய்வது, நம்முடைய நேரம் அப்படி.
நானும் இந்த மொக்கையை பார்த்து தொலைத்து விட்டேன்.
நம்ப மாட்டீர்கள், என்னுடன் படம் பார்த்த நண்பனுக்கு இது மிகவும் பிடித்து விட்டதாம். அது சரி, அவன் கடைசியாக பார்த்த இங்கிலீஷ் படம் ஷோலே.
பார்த்து நொந்த மற்றொரு படம் ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ். (நல்ல படம் தான், ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றதால் வருத்தம்).
//இறுதிக்கட்டம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும், இது அக்காட்சியால் வந்த கண்ணீரல்ல, அப்பாடா படம் முடிந்ததே என்பதால் சொரிந்த ஆனந்தக் கண்ணீர்.//
ReplyDeleteஉண்மை. உண்மை. மறுக்க முடியாத உண்மை.
இந்த படத்தின் பட்ஜெட்டை நம்ம பேரரசுவிடம் கொடுத்து இருந்தால் அவர்,
நாமக்கல்
திருத்துறைப் பூண்டி
பட்டினப் பாக்கம்
அய்யம்பாளையம்
பாண்டிச்சேரி
நோவடி
என்று ஒரு பதினைந்து படங்களை ஊர் பெயரிலேயே எடுத்து அவற்றை மினிமம் கியாரேன்டி ஆக ஓட வைத்தும் இருப்பார். என்ன செய்வது,C.I.A செய்த சதியால் அவர் புகழ் இன்னும் உலக அளவில் பரவாமல் இருக்கிறது.
ஏதோ நொந்து போய் எழுதியிருக்கிறீர்கள். படம் பார்ப்பது எல்லாம் நம்ம வாழ்க்கையில சில பல மாதங்களுக்கு ஒரு முறைதான். அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் போல!
ReplyDeleteஆனால் ஒன்று மொக்கையாக இருந்தாலும் கூட இது போன்ற கான்செப்ட் உள்ள படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
வாழ்க நீங்கள் வாழ்க..,
ReplyDeleteஇந்தப் படத்தை பயங்கரவாதிக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பித்திருக்கலாம்
நண்பரே
ReplyDeleteஒரு நல்ல படத்தினை பார்த்தால் ஒரு வாரம் கூட நேரம் எடுத்துக் கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற படங்களை பார்த்தால் உடனே தெரியப்படுத்த வேண்டும். மனித நேயமிக்கவர்கள் செய்யக் கூடியது இதுவே.
அவர்களுக்கு இந்த கதையை சரியாக எடுக்கத் தெரியவில்லை. நாம டெவலப் பண்ணிக் கொடுத்தால் அடுத்த படமாவது நல்லா வருமுல்ல..
ஒரு அழகிய கிராமம். பச்சை வயல்கள். பம்ப் செட்டுகள். முக்கியமாக கிராமத்து குமரிகள். பண்ணை வீடு. அக்கிராமமே பண்ணையாரின் கொடூரப் பிடியில் சிக்கி இருக்கிறது.
காவல் துறையினர் யாருமே காலடி எடுத்து வைக்க முடியாது. ஊரே அவரின் பிடியில் சிக்கி சின்னா பின்னாப்படுகிறது.
அந்த பண்ணையாரின் பெயர் R2D2. ஆம். அவர் ஒரு வேட்டி கட்டின டெர்மினேட்டர்.
அவரின் ப்யூசை புடுங்க ஆம்பளையே இல்லையா என கிராமத்து மக்களெல்லாம் கோவிலில் பொங்கல் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
ஒரு மாட்டு வண்டி உள்ளே நுழைகிறது...
தம்பி ஜோஸ்,
ReplyDeleteஇந்த கதை ஏற்கனவே பொன்னி காமிக்ஸ் இதழில் வந்து விட்டது. கதையின் பெயர் "மாயாவியும் மரண ரோபோவும்". இது நாட்டுப் புற மாயாவி என்ற கதைக்கு அப்புறம் வந்த புத்தகம் என்பதால் சிறப்பாக விற்பனை ஆனது.
இந்த கதையில் அப்போதே ஜாதி பிரச்சினையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து இருப்பார்கள். மாயாவி வேறு ஜாதி என்பதால் (ஒரு ரோபோ இல்லை என்பதால்) அவரை கதாநாயகியின் தந்தை மறுத்து விடுவார். அதனால் மனம் நொந்த மாயாவி இந்த ரோபோக்களையே நான் அழித்து விடுவேன் என்று சவால் விட்டு உலகில் உள்ள அனைத்து ரொபோக்களுககும் எதிராக போர்க்கொடி தூக்குகிறார்.
அதனால் ஒரு மாறுதலுக்காக அவர் பக்கத்து ஊருக்கு போகிறார். அங்கே இருக்கும் மக்கள் எல்லாம் வேட்டி கட்டின டெர்மினேட்டர் ரோபோ ஆன R2D2 பண்ணையாரின் கொட்டத்தை அடக்க கோவிலில் பூசை செய்து குழவி இடும்போது மாயாவி மாட்டு வண்டியில் வந்து இறங்குகிறார்.
அப்போது அந்த கிராமத்தில் இருக்கும் அப்பாவியான SD45 ரோபோவின் தங்கையாகிய B36H24B36 ரோபோவை வேட்டி கட்டின டெர்மினேட்டர் ரோபோ ஆன R2D2 பண்ணையாரின் மகன் ஆகிய LUV2BI ரோபோ துரத்துவதை பார்த்து விட்டு உடனே சென்று B36H24B36 ரோபோவை காப்பாற்றுகிறார்.
அதற்க்கு பிறகு நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே?
இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகம் (மோகினி ரோபோவின் காதல் சூழ்ச்சி) உங்களிடம் இருக்கிறதா? என்னிடம் இல்லை. இருந்தால் தாருங்களேன். அந்த கதையில் இந்த வேட்டி கட்டின டெர்மினேட்டர் ரோபோ ஆன R2D2 பண்ணையாரின் தம்பி மகள் மாயாவியை பழி தீர்ப்பதே கதை. ஓவியர் சிரீகாந்த்தின் கை வண்ணத்தில் மிகப் பிரமாதமான சித்திரங்களுடன் வந்தது.
ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteநீங்கள் சொல்லும் புத்தகம் தற்போது கிடைத்தற்கரிய புத்தகம். ஒரே ஒரு காப்பி மட்டும் அலெக்ஸாண்டிரியா நூலகத்தில் உள்ளதாக தகவல்.
ஒரே கதையா என தெரியவில்லை. காட்டேறிகள் கதைகளில் பல கிளைகள் உள்ளது போல இதிலும் இருக்க வாய்ப்புண்டு.
இந்த கதையில் பண்ணையார் தன்னுடைய கோமணத்தில் உள்ளே ஒரு ரகசிய ஆயுதம் வைத்திருப்பார். அட, அவர் டெர்மினட்டருங்க. தப்பா நினைக்காதீங்க. அது ஒரு கன். அட, பாருய்யா. திரும்ப, திரும்ப....
என்ன கொடுமை சார் இது?
ReplyDeleteஅப்போ, அந்த புத்தகத்தை என்னால் மீண்டும் படிக்க முடியாதா?
பண்ணையாரின் ரகசிய ஆயுதத்தை பற்றி சற்று விரிவாக விளக்குங்களேன்?
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,
ReplyDeleteதலையில் துண்டு கட்டிய டெர்மினேட்டர் அசப்பில் நம்ம நாட்டாமை போல் இருக்கிறார்.
ஆர்னால்ட்டின் உருவத்தினை கிராஃபிக்ஸ் உத்தி மூலம் உருவாக்கி படத்தில் சில நிமிடங்களிற்கு உதைக்க விட்டிருக்கிறார்கள்.
என்ன செய்வது தலைவரே ஒர் படத்தினைப் பார்த்தால் தானே அதனைப்பற்றித் தீர்மானிக்க முடியும். இம்முறை நல்ல ஏமாற்றம்.
முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.
விஸ்வா, இனி டெர்மினேட்டர் படங்கள் வெளிவந்தால் அவற்றைப் பார்ப்பதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன். வருகைக்கும் அன்பான ஆதரவிற்கும் நன்றி நண்பரே.
ஒலக காமிக்ஸ் ரசிகரே, ஃபுல் பார்மில் இருக்கிறீர்கள் அப்படியே தொடருங்கள். இத்திரைப்படம் மிகச்சிறந்தது என்று கூறும் ரசிகர்கள் இருக்கவே செய்வார்கள். ரசனைகள் மனிதர்க்கு மனிதர் வேறுபடும் அல்லவா. அதில் தப்பில்லை. இருந்தாலும் ஜேம்ஸ் கமரூனின் படங்களில் உள்ள அந்த சுவை இதில் இல்லை என்பதை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்.
ஏன் பேரரசுவையே இப்படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்வதற்கு வார்னர் நிறுவனம் முன் வரக்கூடாது என்பது தான் என் கேள்வி. வருகைக்கும், கலகலப்பான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
நண்பர் அ.வெ அவர்களே, நொந்து போனது உண்மைதான் இருப்பினும் இப்படத்தை பார்க்காதீர்கள் என்று நான் கூறவில்லை, கூறவும் கூடாது. இப்படம் குறித்து என் பார்வையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது மட்டுமே பதிவின் நோக்கம். வருகைக்கும் தொடர்ந்த உங்களின் அன்பான ஆதரவிற்கும் நன்றி நண்பரே.
நண்பர் ஜோஸ் அவர்களே, நீங்கள் கூறிய வேட்டி கட்டிய டெர்மினேட்டர் தான் வேட்டியைக் கழட்டி தலையில் துண்டாக கட்டிக்கொண்டு படத்தில் வருபவராக இருக்கும். ஒலக காமிக்ஸ் ரசிகரும், நீங்களும் இணைந்து வேட்டிர்மினேட்டர் என்று ஒர் படத்தினை இயக்க வேண்டியது தானே.
அது என்ன, கிராமத்துக் குமரிகள், டெர்மினட்டரின் கோமணத்தில் ஒர் ஆயுதம் என சிலிர்க்க வைக்கிறீர்கள். ரேப் சீனில் நடிக்க நான் தயார். வருகைக்கும், மேலான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
நண்பர் சுரேஷ் அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பரே.
here is the download link for the movie terminator 4 - salvation:
ReplyDeletehttp://rapidshare.com/files/243638033/TS-DEViSE.part1.rar
http://rapidshare.com/files/243638882/TS-DEViSE.part2.rar
http://rapidshare.com/files/243638016/TS-DEViSE.part3.rar
http://rapidshare.com/files/243638861/TS-DEViSE.part4.rar
http://rapidshare.com/files/243639103/TS-DEViSE.part5.rar
http://rapidshare.com/files/243637963/TS-DEViSE.part6.rar
http://rapidshare.com/files/243638964/TS-DEViSE.part7.rar
http://rapidshare.com/files/243637663/TS-DEViSE.part8.rar
நண்பர் ரவீந்தர் அவர்களே, உங்கள் வருகைக்கும் நீங்கள் வழங்கிய லிங்குகளிற்கும் நன்றி நண்பரே.
ReplyDeleteதம்பிகளா,
ReplyDeleteமுடிந்தால் அடுத்த பாகத்தில் நான் நடிக்கிறேன். ஆனால், அடுத்த பாகம் வர வேண்டும் என்றால் இந்த படம் ஓட வேண்டும். அதனால் தயவு செய்து இந்த படத்தை ஓட வையுங்கள்.
சற்று முன் கிடைத்த செய்தி: அடுத்த வெள்ளியன்று இந்தியாவில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் தமிழாக்கத்தில் சில பிட்டுகளை இணைத்து உள்ளார்கள். யாரோ ஷகீலவாமே? அவர்களின் சிறப்பு காட்சியும் இந்த படத்தில் இடம் பெறுமாம். மறக்காமல் பாருங்கள்.
ஆர்னால்டு துரை அவர்களே, உங்களிற்கு ஷகீலா ஆண்டியை இன்னமும் தெரியாதா, அவர் தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய ஒர் படத்தின் டிவிடியை கலிபோர்னியாவிற்கு உடனே அனுப்பி வைக்கிறேன்.
ReplyDeleteTerminator படத்தை என்னால் மறக்க இயலாது . சிறுவயதில் ஆங்கில படங்கள் பார்ப்பதற்கு தூண்டுகோலாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று. அதுவும் Judgement DAY வை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாதது .Terminator 3 படமே அவ்வளவாக ரசிக்க முடியவில்லை . இப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை . நீங்கள் சொல்வதை இந்த படமும் அது போல் தான் போல. ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
ReplyDeleteLucky Limat
Browse Comics
நண்பர் லக்கி லிமட் அவர்களே,விமர்சனங்கள் எவ்வாறாக இருப்பினும் நீங்கள் இத்திரைப்படத்தைப் பார்த்து உங்களிற்குரிய பார்வையை அதன் மேல் ஏற்படுத்திக் கொள்ளுதல் மிகச்சிறப்பானது. நானும் அதனைத்தான் விரும்புகிறேன்.
ReplyDeleteடெர்மினேட்டரின் முதல் பகுதி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. முதல் முறை படத்தை பார்க்க சென்ற போது ஆர்னால்ட் மோட்டார் சைக்கிளில் துரத்தி வரும் காட்சியுடன் மின்சாரம் தடைப்பட்டு விட்டது. பிறகு மறு நாள் அதே டிக்கட்டுடன் முழுப்படத்தையும் பார்த்தேன். அந்த அனுபவம் தனித்து நிற்கிறது. வருகைக்கும் ,கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
காதலரே,
ReplyDeleteஉங்களின் கணினி சரியானது குறித்து மகிழ்ச்சி.
முதலில் லார்கோ வின்ச் -விமர்சனம், இப்போது டப்பா மிநேட்டார் விமர்சனமா?
அடி தூள், காதலர் புல் பார்மில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி.
என்ன திடீரென்று இந்த தடவை வியாழன் அன்றே பதிவிட்டு உள்ளீர்கள்? வழமையாக வெள்ளி அன்று தான் நான் உங்கள் பதிவை பாத்து பழககப்பட்டு விட்டது.இப்போது சற்று வருத்தம் தான். ஏனென்றால், நான் கருத்திடுமுன் உங்கள் கருத்து பெட்டி மற்ற ரசிகர்களாள் மொய்க்கபட்டு விடுவதால், நான் கடைசியோ என்ற எண்ணம் வர செய்வதினால் தான் :)
ஒரு முக்கிய விவரம் சென்ற கமெண்ட்டில் விட்டு போயிருப்பதால் ...
ReplyDeleteபெயருக்கு கீழே ஸ்லோகன் போட மறந்து விட்டேன்.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியரே,
ReplyDeleteவெள்ளி மாலையில் தான் இப்பதிவை இட்டேன், இப்போது வார இறுதியில் பதிவிடுவதையே விரும்புகிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கருத்தை உங்கள் நேர வசதிக்கேற்ப பதியுங்கள், சங்கடம் கொள்ளாதீர்கள், தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி நண்பரே.
காதலரே,
ReplyDeleteடெர்மினேட்டர் பட வரிசைகள் முதல் இரண்டு பாகங்களோடு முடிந்து போனதாகவே நான் நினைக்கிறேன். மூன்றாவதாக எடுத்த படமும் சரியான மொக்கையாக தான் வெளிவந்தது. ஆனால் சமீபத்திய டிவி தொடரான சாரா கார்னர் க்ரோனிகில்ஸ் நல்ல முறையில் எடுக்கபட்டதாகவே எண்ணுகிறேன், அதை வைத்து ஒரு வேளை படம் சரியாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனாலும் அதற்கும் ஏமாற்றமே. இந்த படத்தை இந்த பகுதியிலிருந்த 3 பாகமாக எடுக்க போவதாக எங்கோ படித்த நியாபகம், இனி அந்த விஷ பரீட்சையில் யாரும இறங்க மாட்டார்கள்.
முன்பு நீங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது பார்த்து ரசித்த படங்களுக்கும் விமரிசனத்தை காமிக்ஸோடு பதிவதாக கூறி விட்டு, விஞ்ச் படத்துடன் நிறுத்தி கொண்டீர்கள். இப்போதாவது அது நியாபகம் வந்து தொடர்ந்து பதிவிடுவதாக கூறினீர்களே, அது போதும். உங்கள் மொழி நடையில் படங்களை இன்னொரு முறை நினைவு காணும் சுமே தனி, அது மொக்கை படமாக இருந்தாலும :).
ÇómícólógÝ
ராம்போ ரஃபிக் அவர்களே, நீங்கள் கூறுவது சரிதான் கிறிஸ்டியன் பேல் மொத்தம் 3 படங்களிற்காக சானி நிறுவனத்துடன் ஓப்பந்தம் ஆகியுள்ளார்.
ReplyDeleteஉண்மைதான் வின்ச்சுடன் திரைப்படங்கள் குறித்த என் பார்வையை நான் தொடரவில்லை, இனி வரும் காலங்களில் காமிக்ஸ், சினிமா, நூல்கள் என என் பார்வையை தொடர முயல்கிறேன்.
உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.