Sunday, April 26, 2009

நியாயப் படை- 2

அத்தியாயம்- 2 : லுங்கி லுக்

எழுதுபவர்- எழுத்து எவரெஸ்ட், ஜோஸ் சான்.

நியாயப்படை கதாநாயகர்களை பற்றி ஒருவர் ஒருவராக பார்ப்போம்

கேப்டன் கே என்கிற கபாலி .


இவரே முக்கிய கதாநாயகன். கையில் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி. வாரக்கடைசிகளில் மற்றவர்கள் சரக்கு வாங்க இவரைத்தான் எதிர்பார்ப்பதால் முக்கிய முடிவுகளை வகிப்பதில் முக்கியத்துவம் பெற்றவர். முதலில் கேப்டன் கே ( பதிப்பாளருக்கு குறிப்பு : பெயரை போல்ட்டாக போடவும். கதாநாயகர்கள் சமயத்தில் போல்டாக இல்லையென்றாலும் பெயர் போல்டாக இருக்கட்டுமே). முதலில் அவர் எவ்வாறு இருப்பார் என பார்ப்போம். சந்தன கலரில் ஒரு சட்டையும், பச்சைக் கலர் லுங்கியும் கட்டியிருப்பார். ஆனால் உள்ளே போட்டிருக்கும் பனியனில்தான் விஷயமே இருக்குது. அந்த பனியனில் ‘கேப்டன் கே ’ என எழுதியிருக்கும். அதற்கு கீழே ‘தரமான சலவைக்கு பொண்வண்டு சோப்’ என எழுதியிருக்கும்.

உச்சா பாபு

இவருக்கு ஏன் இந்த பெயர் என்பதை தனியாக ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பதாக சங்குண்ணி சொல்கிறார். வெள்ளைச் சட்டையும், கத்தரிப்பூ கலர் லுங்கியுமே இவர் அடையாளம். உள் பனியனில் ஆட்டின் சிம்பல் இருக்கும். கீழே ‘சுகமான சவாரிக்கு எம் ஆர் எப் டயர்’ என்ற வார்த்தை இருக்கும்.

சில்பா குமார்

முதல் பெயர் வந்த காரணம் மிகவும் அந்தரங்கமானது. இவரின் அடையாளம் மஞ்சள் சட்டை மற்றும் ஆரஞ்ச் கலர் லுங்கி. உள் பனியனில் ‘சமையலுக்கு தேவை எல் ஜி கூட்டு பெருங்காயம்’ என எழுதியிருக்கும்.

ரகளை ரகோத்தமன்

இவருக்கு ஏன் இந்த பெயரை வைத்தார்கள் என்பது இவருக்கே தெரியாது. நண்பர்களால் செல்லமாக கோத்து என அழைக்கப்படுபவர். இவரின் அடையாளம் நீல சட்டை மற்றும் சிகப்பு லுங்கி. உள் பனியனில் ‘சுகமானது உடும்பு மார்க் உள்ளாடைகள்’ என எழுதியிருக்கும்.

ஆப் ஆரோக்கியம்

இவரின் அடையாளம் கருப்பு சட்டை மற்றும் வயலட் கலரில் லுங்கி. உள் பனியனில் ‘நல்ல விளைச்சலுக்கு பாக்டம்பாஸ் 18 18 18’ என எழுதியிருக்கும்.

முக்கிய வில்லன் காஸ்மோஸ் கனகராஜ்

நிறைய உப வில்லன்கள் எல்லாம் வந்தாலும் மெயின் வில்லன் இவர்தான். இவர் வெறும் லுங்கி மட்டுந்தான். சட்டை எல்லாம் போட்டு அவரு தொப்பையை மறைக்க மாட்டார். இவர் பகலில் மளிகைக் கடை வைத்திருப்பார். இரவில் பக்கத்தில் ஒரு புரோட்டாக் கடை நடத்துவார். புரோட்டா கடை வைச்சுருக்கவரு எப்படின்னு சிலர் கேள்வி எழுப்புவார்கள். அடையாளம் இல்லாத அ.கொ.தீ.க. அண்டத்தை அழிக்க முயலும்போது, புரோட்டா கடை ஒனரு புவியை நசுக்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?

இந்த கதாநாயகர்கள் எல்லோருமே பொதுவாக பட்டாபட்டி அன்டர் வேர் அணிந்திருப்பார்கள். ஆபத்து வரும்போது சட்டையையும், லுங்கியையும் வீசிவிட்டு பனியன், பட்டாபட்டியுடன் பாய்ந்து விடுவார்கள்.




ஜோ : சங்குண்ணி சார், என்ன பெயர்கள் இப்படி இருக்கின்றன?

சங்குண்ணி : பேரு ஒரு பெரிய விஷயமே இல்லீங்க. கதாநாயகனின் பேர் இப்படிதான் இருக்க வேண்டுமா? செய்யற வேலையை வைச்சுதானே பேர் வரும். கதவுன்னு ஒராள் பேரு வைச்சுக்கிட்டாரு. பள்ளிக்கொடத்துதல அவர போட்டு எல்லோரும் பயங்கரமா கலாய்ச்சுருப்பாங்க. ஆனா அவரு மட்டும் ஜன்னலை கண்டுபிடிச்சு பெரிய பேர் வாங்கிட்டாரு. அது போல தாங்க. பேர் ஒரு பெரிய விஷயமே இல்ல.

ஜோ : அதுக்காக கதாநாயகர்களின் உடைகள் இவ்வளவு லோக்கலாக உள்ளதே?

சங்குண்ணி : அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் குளிர் தேசம். அங்கல்லாம் கொட்ட தெறிக்கிறா மாதிரி ஒரு பேண்ட போட்டு அதுமேல ஒரு ஜட்டிய போட்டுட்டு குதிக்கலாம், ஒடலாம். இங்க அந்த மாதிரி பண்ண முடியுமா? உஷ்ண பிரதேசம்பா. கட்டி வந்துடாது? நம்மூர்ல ட்ரெஸ்ல்லாம் இப்படிதான் இருக்குன்னும். வெளிநாட்டு காரன்களையே பார்த்து காப்பியடிக்கக் கூடாதுங்றேன்.

ஜோ : ஏதாவது ஒரு தனித்திறமை இருக்குற மாதிரி கூட காட்டலேயே?

சங்குண்ணி : சித்திரக் கதைகளில் வருகின்ற கதாநாயகர்கள் எல்லாமே ஒரே மாதிரியா இருக்காங்க. ஆனா பாருங்க, இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. எக்ஸ்ட்ரா ஜட்டி போட்டவன்லாம் சூப்பர் ஹீரோன்னு ஒரு தவறான கண்ணோட்டம் இருக்குது. நம்ம ஊரு சூப்பர் ஹீரோ ஒரு அடிமட்டத்து ஆளு. ஏழை. துட்டுக்கு சிங்கியடிக்கிறவன். வேலை இல்லாத தண்டச் சோறு. உடையால ஒரு கதாநாயகன் உருவாகக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணிதான் இவர்கள உருவாக்கினேன். லுங்கியில கூட்டத்துல கலந்து பிக்பாக்கெட் அடிக்கிற ஒரு சாதாரண ஆளு மாதிரி தான் இருக்குணும்னு உருவாக்கினேன்.

அவர்களுக்கு தனித் திறமைகள் போக போகத் தான் வரும். கதையின் ஆரம்பத்திலேயே இவரால் பறக்க முடியும். அவர் கையிலிருந்து கத்தி வரும். தெரியாமதான் கேட்கிறேன். கத்தி வைக்கிற இடமாங்க அது. அவசரத்துக்கு தொடையில சொறியும்போது கத்தி வெளியே வந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தீங்களா? தனித் திறமைகள் வில்லன்களை ஒடுக்க பயன்படுறமாதிரி இருக்கணும்.

நம்ம கதையில இப்படிதான் ஒரு காட்சி வரும். வில்லன் துப்பாக்கி வைச்சு மிரட்டுவான். நம்ம கதாநாயகன் பட்டாபட்டியிலிருந்து கத்திய எடுக்கும்போது கத்தியானது நாடாவை வெட்டி பட்டாபட்டி கழண்டு கீழே இறங்கிடும். வில்லன் அதிர்ச்சியடையும்போது, கதாநாயகன் அவன் கையிலிருந்து துப்பாக்கிய புடுங்கிப்பான். இது பாருங்க, எப்படி நம்புற மாதிரி இருக்குது? கதை இப்படிதாங்க
இருக்கணும். என்ன சொல்றீங்க.

இன்னொருத்தர் பாருங்க. இரும்புகை வைச்சுருப்பாராம். கரண்ட பிடிச்சதும் மொத்த ஆளும் மறைஞ்சுடுவாராம். ஆனா அவரு கைமட்டும் அப்படியே இருக்குமாம். அவரு போட்டுகிற பெல்ட் மொதக்கொண்டு மறைஞ்சுடுமாம். ஆனா அவரு இரும்புகை அப்டியே இருக்குமாம். எந்த ஊரு நியாயங்க இது.

நம்ப ஆளு கரண்ட புடிச்சா அவனுக்கு ஷாக் தான் அடிக்கும். அதான் நியாயம். இல்லீங்களா?

கனவுகளின் காதலன்: (உற்சாகமாகி) சரியா சொன்னீங்கண்ணே. மேலச் சொல்லுங்க.

ஜோஷ் திகிலடைகிறார்




படையின் அதிரடி தொடரும் …………


14 comments:

  1. கனவுகளின் காதலனே,

    வழக்கம் போல மீ த பஸ்ட்.

    ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே, இன்னும் போகப் போக என்னவெல்லாம் நடக்குமோ என்று பலர் கிலியில் உள்ளதாக தகவல்.

    //பதிப்பாளருக்கு குறிப்பு : பெயரை போல்ட்டாக போடவும். கதாநாயகர்கள் சமயத்தில் போல்டாக இல்லையென்றாலும் பெயர் போல்டாக இருக்கட்டுமே// இதெல்லாம் ரொம்ப ஓவர்.

    //உச்சா பாபுஇவருக்கு ஏன் இந்த பெயர் என்பதை தனியாக ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பதாக சங்குண்ணி சொல்கிறார்// அண்ணே, அது எந்த கதை? சொல்லவே இல்லையே?

    //சில்பா குமார்முதல் பெயர் வந்த காரணம் மிகவும் அந்தரங்கமானது// யோவ், இதெல்லாம் ரொம்ப மோசம். எங்களுக்கு சொல்லக் கூடாதா என்ன?

    //அடையாளம் இல்லாத அ.கொ.தீ.க. அண்டத்தை அழிக்க முயலும்போது, புரோட்டா கடை ஒனரு புவியை நசுக்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?// என்னது, அடையாளம் இல்லாத அ.கொ.தீ.க. வா? தலைவர் ஊரில் இருந்து திரும்பட்டும், அப்புறம் இருக்குடி உங்களுக்கு கச்சேரி.

    //ஜோ : அதுக்காக கதாநாயகர்களின் உடைகள் இவ்வளவு லோக்கலாக உள்ளதே?சங்குண்ணி : அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் குளிர் தேசம். அங்கல்லாம் கொட்ட தெறிக்கிறா மாதிரி ஒரு பேண்ட போட்டு அதுமேல ஒரு ஜட்டிய போட்டுட்டு குதிக்கலாம், ஒடலாம். இங்க அந்த மாதிரி பண்ண முடியுமா? உஷ்ண பிரதேசம்பா. கட்டி வந்துடாது? நம்மூர்ல ட்ரெஸ்ல்லாம் இப்படிதான் இருக்குன்னும். வெளிநாட்டு காரன்களையே பார்த்து காப்பியடிக்கக் கூடாதுங்றேன்.// சூப்பர்.

    //எக்ஸ்ட்ரா ஜட்டி போட்டவன்லாம் சூப்பர் ஹீரோன்னு ஒரு தவறான கண்ணோட்டம் இருக்குது// ஆதங்கம், ஆதங்கம்.

    //இரும்புகை வைச்சுருப்பாராம். கரண்ட பிடிச்சதும் மொத்த ஆளும் மறைஞ்சுடுவாராம். ஆனா அவரு கைமட்டும் அப்படியே இருக்குமாம். அவரு போட்டுகிற பெல்ட் மொதக்கொண்டு மறைஞ்சுடுமாம். ஆனா அவரு இரும்புகை அப்டியே இருக்குமாம். எந்த ஊரு நியாயங்க இது// அண்ணே, அவரது கடைசி காலகட்ட கதையை நீங்க படிக்க வில்லை போல இருக்கே? அந்த கதையில அவரு டிரெஸ் எல்லாம் மறையாம அப்படியே இருக்கும்.

    //படையின் அதிரடி தொடரும்// விதி வலியது என்று எனக்கு தெரியும். ஆனால் விதி கொடியது என்பதை கண்கூடாக பார்க்கிறேன்.

    கிங் விஸ்வா
    Carpe Diem

    ReplyDelete
  2. விஸ்வா, உச்சா பாபு, சில்பா குமார் போன்ற பெயர்கள் உருவானதன் காரணத்தை அறிய நானும் ஆவலாக உள்ளேன். குறிப்பாக சில்பா குமார்.

    முதன்மைக் கருத்துக்களிற்கும், வருகைக்கும் நன்றி விஸ்வா.

    ReplyDelete
  3. எல்லாம் சரிங்கண்ணே! அந்த மஞ்சள்,சிவப்பு,பச்சை அழகிகள் பற்றியெல்லாம் ஒண்ணும் சொல்லலைங்களே!கதையில கதாநாயகிகள் உண்டா இல்லையா, மறக்காம நம் ஊரு பாணியில ஒரு கனவு பாட்டு வைச்சுடுங்க!

    ReplyDelete
  4. நண்பர் அ.வெ. அவர்களே, கனவுப் பாட்டு, கதா நாயகிகள் இருக்குமா என்பதை இப்போதைக்கு என்னால் கூற முடியாது, ஆனால் மஞ்சள், சிவப்பு, பச்சை அழகிகள் எல்லாம் ஜோஸ் சானின் ரசிகைகள், அந்த அழகிகளின் கண்களில் தான் ஜோஸ் சானை எண்ணி ஏக்க சமுத்திரம் அலையடிக்கிறதே, தெரிகிறதா. வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. காதலரே, வழக்கம் போலவே மீ த ஃபஸ்டு இல்லை. :)

    எல்லாரும் எதிர்பார்த்த ஜோஸ் சான் காவியம் ஆரம்பமாகி விட்டதா... பலே பலே

    // சமையலுக்கு தேவை எல் ஜி கூட்டு பெருங்காயம்

    சுகமானது உடும்பு மார்க் உள்ளாடைகள்

    தரமான சலவைக்கு பொண்வண்டு சோப்

    நல்ல விளைச்சலுக்கு பாக்டம்பாஸ் 18 18 18 //

    இந்த பனியன்கள் கிடைக்குமா.. நண்பர்(?!!!!) ஒருவருக்கு போட்டு அழகு(??!!) பார்க்கணும்.

    கதாநாயகர்கள் பெயர் எல்லாம் அருமை... என்ன நம்ம சில்பா ஷெட்டி (சில்பா குமார்) பேரா டேமஜ் பன்றீங்க... ஐபிஎல் முடிஞ்சதும் அம்மணியிடம் வத்தி வச்சுடுறேன்.

    ஆமா யாரு அந்த சங்குண்ணினு சொல்லவே இல்லையே ? கூடவே அம்மணிகள் பத்தி சொல்லாம வுட்டீங்களே சான்....

    தொடருங்கள் அதிரடியை...

    ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  6. ரஃபிக், இந்த பனியன்களை ஜோஸ் சான் உங்களிற்கு அனுப்பி வைப்பார். என்ஜாய். ஒர் நண்பிக்கு போட்டு அழகு பார்க்க கூடாதா.!!!

    அம்மிணிகள் பற்றி ரசிகர்கள் அறிய ஆவலாயிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமளிக்கிறது. ஜோஸ் சான் அவர்களே, கொஞ்சம் காதலையும் கலக்கி எடுங்கள்.

    எல்லாப் புகழும் ஜோஸ் சான் அவர்களிற்கே. கருத்துக்களிற்கு நன்றி ரகசிய உளவாளி அவர்களே.

    ReplyDelete
  7. // அடையாளம் இல்லாத அ.கொ.தீ.க. அண்டத்தை அழிக்க முயலும்போது,//

    இப்படியே தொடர்ந்து பேசிகிட்டிருந்தீன்னா நீ அடையாளமே இல்லாம அழிஞ்சு போயிடுவே, ஜாக்கிரதை!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. தலைவரே, சங்குண்ணி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ஃப்லீங்கில் கொஞ்சம் வார்த்தைகளில் எல்லை மீறி விட்டார், நீங்கள் தயை கூர்ந்து அவரை மன்னிக்க வேண்டும்.அவரை அழித்து விடாதீர்கள். அதனால் இரண்டு பெண்களின் தாலியை அறுத்த பாவம் உங்களைச் சேரக் கூடாதல்லவா. இது சங்குண்ணி ரசிகர் மன்றம் சார்பாக நான் உங்களிடம் வேண்டிக் கொள்வது. தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி தலைவரே.

    ReplyDelete
  9. இப்படி ஒரு அருமையான ஆரம்பத்தை அளித்த திரு ஜோஸ் சான் அவர்களுக்கும், நண்பர் கனவுகளின் காதலன் அவர்களுக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இமாலய வெற்றி படைப்பான மரியாதை படத்தின் டிக்கெட்டுகள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அனைத்து ரசிகர்களின் சார்பிலும் நான் தெரிவிக்கிறேன்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  10. விஸ்வா என்றால் விஸ்வா தான், மரியாதை படத்திற்கு ஒரு வருடத்திற்கு டிக்கட் ஃபுல் என்று செய்தி வந்து கண்களை கலங்க செய்த தருணத்தில் இப்படி ஒர் ஆனந்த வெடிகுண்டு. ஜோஸ் சான் இவ்வாரம் மியாஷகியின் படத்திற்கு பதிலாக மரியாதை படத்தின் விமர்சனத்தை எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    காப்டன் வாழ்க.

    ReplyDelete
  11. கனவுகளின் காதலனே,

    நண்பர் ஜோஸ் மீது உங்களுக்கு இவ்வளவு கொலை வெறியா? கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

    அந்தப் படத்தை பார்ப்பதே ஒரு மிகப் பெரும் தண்டனை. இந்த நிலையில் அதற்க்கு விமர்சனம் வேறா? அய்யகோ, என்ன இது ஜோஸ்'உக்கு வந்த சோதனை.

    அப்படியும் ஜோஸ் விமர்சனம் எழுதினால் அதற்க்கு பெயர் தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  12. கில்லாடி கிரிகிரிApril 29, 2009 at 5:25 AM

    யோவ்,

    //நம்ப ஆளு கரண்ட புடிச்சா அவனுக்கு ஷாக் தான் அடிக்கும். அதான் நியாயம். இல்லீங்களா?//

    நீ கேப்டன் விஜய காந்த் நடிச்ச நரசிம்மா படத்த பாக்கவே இல்லையா? அதுல ராணுவ அதிகாரி ஒருத்தர் நம்ம கேப்டனுக்கு கரண்ட் ஷாக் கொடுப்பார். அப்போ கேப்டன் சொல்லுவார் "சாதாரண மனுஷனுக்கு மட்டும் தான் கரண்ட் ஷாக் அடிக்கும், நான் சிம்மா, நரசிம்மா. கரண்டுக்கே ஷாக் கொடுப்பேன்" என்று சொல்லுவார்.

    உடனே அந்த கரண்ட் கனெக்ஷன் ஷார்ட் சர்க்யுட் ஆகி வெடிக்கும்.

    இது எப்படி?

    கில்லாடி கிரிகிரி.

    ReplyDelete
  13. ஆரம்பமே அமர்க்களம். வித்தியாசமான முயற்சி. விரைவில் கதையை ஆரம்பியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  14. விஸ்வா, ஜோஸ் காப்டன் தான் தமிழகத்தின் மியாஷகி என்கிறார், டாக்.7, காப்டனின் ரசிகர் மன்றத்தில் ஒர் பெரும் புள்ளி. மரியாதை படத்தினை ஜோஸ் மட்டுமல்ல, அனைத்து நண்பர்களும் பார்த்து பயன் பெறுவதோடு நில்லாமல் பதிவுகளும் இடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கில்லாடி கிரிகிரி, நரசிம்மா கரண்டிற்கே ஷாக் குடுப்பார் என்பது உண்மையே ஆனால் காப்டன் கே கரண்ட் இல்லாமாலே ஷாக் தருவார்.

    அம்மா,ஆசை, இரவுகள் அன்பரே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி, ஜோஸ் சான் உங்கள் ஆசையை தீர்த்து வைப்பார். தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

    ReplyDelete