வணக்கம் அன்பு நண்பர்களே,
சிறு விளையாட்டாக ஆரம்பித்த இரு பக்கங்கள் இன்று நீங்கள் தந்த ஆதரவாலும், உற்சாகத்தாலும் ஒர் முழு ஆல்பமாக நிறைவு பெறுகிறது. இதனை சாத்தியமாக்கியவர்கள் நீங்களே. உங்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
லக்கி லூக் கதைகள் உலகமெங்கும் அதிகமான ரசிகர்களை வென்றிருக்கும் கதைகள் ஆகும். டார்கோட் குழுமமே இதனை வெளிப்படையாக அறிவித்தும் உள்ளது. அப்படியான பெருமை பெற்ற நாயகர் கதை ஒன்றினை தமிழில் வழங்கியது எனக்கு மகிழ்ச்சியே. புரட்சித் தீ எனும் லக்கி லூக் கதையை நான் முதலில் படித்த போது ஒர் லக்கி லூக் கதையை நான் தமிழில் வழங்குவேன் என்று கனவு கண்டது கூட கிடையாது.
La Corde Au Cou எனும் இந்த ஆல்பம் 2006ம் ஆண்டில் வெளியாகியது. லக்கி லூக்கை மையமாக கொண்டு 90க்கு மேற்பட்ட கதைகள் வெளியாகி உள்ளன என்று இதன் முன்னுரையில் படித்தேன். பிரமிப்பாக இருந்தது. அவரின் கதை வரிசைகள் மேலும் தொடரும் என்பதை இதனால் நான் புரிந்து கொண்டேன்.
கதையின் நேரடியான தமிழாக்கம் வாசகர்களிடம் எவ்வித வரவேற்பையும் பெறாது என்பதனை நான் ஆல்பத்தின் சில பக்கங்களிலேயே உணர்ந்து கொண்டேன். அவ் வேளையில் எனக்கு உதவியாய் வந்து சேர்ந்த காவியம் வேதாள நகரம். அதனை சற்று உல்டா பண்ணி லக்கி லூக்கின் மையக் கதை கெடாது என்னால் இயன்றளவு இக்கதையை உங்களிற்கு வழங்கினேன். இக் கதையின் நேரடி மொழி பெயர்ப்பை ஒரு நாள் படிக்கும் சந்தர்ப்பம் உங்களிற்கு கிடைக்கையில் என் மொழி பெயர்ப்பையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். வேதாள நகரத்தின் இலக்கிய சிற்பிக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொடரில் உங்கள் பெயர்களை நான் சகட்டு மேனிக்கு உபயோகித்த போதெல்லாம் பொறுமையின் இமையங்களாக நின்று இன்று வரை என்னைத் தட்டிக் கொடுத்த அனைத்து நண்பர்களிற்கும் நன்றியைத் தவிர என்னால் வேறு என்ன கூறிட முடியும்.
ஆல்பத்திலிருந்து சில முக்கிய குறிப்புகள்.
Joe Dassin எனும் பிரெஞ்சுப் பாடகரால் Voila les Daltons எனும் பாடல் பாடப்பட்டுள்ளது, கதையில் அதனை நான் தமிழ் ஷேக்ஸ்பியரின் பாடல் எனக் குறிப்பிட்டிருப்பேன்.
கப்ஸா கழுகு எனும் செவ்விந்தியப் பாத்திரம் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கை நகலெடுத்து வரையப்பட்டிருக்கும்.
லக்கி லூக் கவச வண்டியில் பணத்தை கொண்டு செல்லும் காட்சிகளில் அவருடன் இணைந்து செல்பவர்கள் பிரபல ஹாலிவூட் தாத்தாக்களான Jhon Wayne மற்றும் Kirk douglas ஆவார்கள்.
தூக்குத் தண்டனைக்கு தன் எதிர்ப்பை கதையின் மூலம் கதாசிரியர் கூறியிருக்கிறார்.
கதையைப் பற்றி, அதனை இது வரையில் பொறுமையாகப் படித்த வாசகர்கள் தான் இனி உங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க வேண்டும். ஆகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியவர்கள் பற்றி ஒர் சிறிய அறிமுகத்தினுள் நுழைவோம்.
Laurent Gerra, எனக்கு அறிமுகமானது தொலைக்காட்சியில். மிகச் சிறந்த, நகைச்சுவை உணர்வு தேவைக்கதிகமாக, கையிருப்பிலுள்ள மிமிக்ரி கலைஞர். இவரால் கிண்டல் செய்யப் படாத பிரபலங்களே இல்லை எனலாம். பிரபலங்களை மிமிக்ரி செய்தே பிரபலமானவர். போப்பாண்டவர் முதல் பிரென்ச்சு ஜனாதிபதி ஜாக் சிராக் வரை இவரிடம் அகப்பட்டுக் கொண்டவர்கள் பாடு அம்பேல் தான். தொலைக்காட்சி, வானொலி, மேடை நிகழ்ச்சி என சக்கை போடு போட்ட கலைஞர் இவர். 2004ல் லக்கி லூக்கின் ஆல்பங்களிற்கான கதைகளை எழுதுகிறார். இது வரை 3 லக்கி லூக் ஆல்பங்களிற்கு இவர் கதை எழுதியுள்ளார்.
Achdé (Darmenton Hervé), ஆஷ்டே-இது என்ன பெயர் என்று வியப்பவர்களிற்கு ஒர் சிறு விளக்கம். HD எனும் இரு எழுத்துக்களின் பிரென்ச்சு உச்சரிப்பே ஆஷ்டே. மருத்துவ துறையில் பணியாற்றி (Radiology) பின் காமிக்ஸ் உலகிற்குள் நுழைந்தவர். ஜெராவுடன் இணைந்து லக்கி லூக் ஆல்பங்களிற்கான கதையையும் எழுதி சித்திரங்களையும் வரைகிறார். இந்த கூட்டணியின் முதல் ஆல்பம் [ படத்தில் உள்ளது] டார்கோட் வெளியீடுகளிலேயே கடந்த சில வருடங்களில் அதிகம் விற்று சாதனை படைத்த ஒன்றாக திகழ்கிறது.
ஆல்பத்தின் தரம் *****
இந்த சிறிய முயற்சி உங்களை மகிழ்வித்திருந்தால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கும். நன்றி என் இனிய நண்பர்களே.
கதையைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் என் மின்னஞ்சல் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
கனவுகளின் காதலரே,
ReplyDeleteஇறுதி பாகம் மனதை கொள்ளை கொண்டது. இரண்டு ஸ்டார் வாங்கிய கதையையே காதலர் இப்படி வழங்குகின்றார் என்றால், நான்கு, ஐந்து ஸ்டார் வாங்கும் லக்கி லுக் கதைகளை எப்படி வழங்குவார் என்று வியக்கிறேன்.
ஒன்பது பக்கங்களை ஒரேயடியாக வழங்கி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். நன்றி என்னும் வார்த்தை இங்கு பொருளற்றது. உங்களின் உழைப்பும், நேர்த்தியும் நன்றி என்ற வார்த்தை ஈடு செய்யாது என்பது என் கருத்து.
கிங் விஸ்வா
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
கனவுகளின் காதலரே,
ReplyDeleteஅற்புதமான ஒரு முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டதற்குப் பிடியுங்கள் பாராட்டுக்களை!
ஒரு மொக்கைக் கதையை இவ்வளவு தூரம் மெருகேற்றி ஜனரஞ்சகமாக வழங்கியதில் உங்கள் திறமை குன்றின் மேலிட்ட விளக்காய், உள்ளங்கை நெல்லிக்கணியாய் அனைவருக்கும் விளங்கியிருக்கும்!
உங்களின் பொன்னான நேரம் இம்முயற்சியால் எவ்வளவு செலவாகியிருக்கும் என்பது தெரிந்திருந்தும் உங்களிடமிருந்து இதேப் போல் மேலும் சிலபல அரிய படைப்புகளை எதிர்பார்க்கலாமல்லவா? 10 பக்க சிறுகதைகளே இது போன்ற முயற்சிகளுக்கு சிறந்தவை என்பது என் கருத்து!
அதிரடிப் பதிவுகளைத் தொடருங்கள்! அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கிறீர்கள்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
காதலரே,
ReplyDelete//அ.கொ.தீ.க காமிக்ஸ் கள்வர்கள்// ஆமாம், ஆமாம். இவர்கள் வழியில் யாரும் குறுக்கிட மாட்டார்கள்.
//தூங்கு காதலா தூங்கு// என்னது தலையில் அடி வாங்குபவர் தான் காதலரா?
உண்மையில் மூன்று சகோட்கரர்களும் ஆவெரல்'ஐ விட்டு விட்டு செல்வது எதிர்பாராத ஒன்று.
பஞ்சாயத்து என்றாலே மரத்தடியும் சொம்பும் தானா? நிறைய தமிழ் படங்கள் பார்ப்பீர்களோ?
என்னது லக்கி விஸ்வா மாதிரி நடக்கிறாரா? Amazing.
//கதையை தமிழ்'ல சொல்றவன அடிக்கலாமா?// ரசித்தேன்.
கதைய வாசிக்குரவங்க சார்பா அடித்தான் குடுக்கணுமா? என்ன வில்லத்தனம்?
//வேலு நாயக்கர நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன்// சூப்பர்.
//பாறைய இங்க வரஞ்ச புள்ள நல்ல இருக்கணும்// கதையா இல்லை உங்கள் சொந்த திறமையா?
//ஐ லவ் ரமேஷ்// ரமேஷ் இப்போ சந்தோஷப் படுவார்.
//காமிக்ஸ் பிளாக்கர்சுக்கு வீடு கட்டி தரப் போறோம்// நல்ல விஷயம். சூப்பர். அடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி கனவுகளின் காதலன் வாழ்க.
//வில்லிற்கு ஆஸ்கர் தர்றோம்// அட்டகாசம்.அப்போ குருவி? ATM?
கடைசியில் வரும் லக்கி லுக் பாடல் அருமை.
கிங் விஸ்வா
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
விஸ்வா, பாராட்டுக்களிற்கு நன்றி. கடினமாக உழைத்தேன் என்பது உண்மை. சில நாட்களில் இதை ஏன் தொடக்கினேன் என்று நினைத்தது கூட உண்டு. ஆனால் அன்பு நண்பர்களின் ஆதரவு என்னை ஊக்கப்படுத்தியது. இக்கதையின் கடைசிப் பக்கத்தை முடித்த போது நான் உண்மையிலேயே சந்தோஷம் கொண்டேன். சில சமயங்களில் ஒர் பக்கத்தை தயாரிக்க 1 மணி நேரம் கூட ஆகியிருக்கிறது. ஆனால் இன்று என் உவகையை சொல்லித் தீராது.
ReplyDeleteதமிழ் படங்கள் நிறையப் பார்க்க மாட்டேன். உண்மையைக் கூறினால் பதிவுகள் தயாரிப்பதால் முன்பை விட குறைவாகவே திரைப் படங்களையும், நூல்களையும் அனுக முடிகிறது.
பாறைய இங்க வரைஞ்ச- என்னால் ஆன ஒர் சிறு கற்பனை.
ஜூன் போனால் அந்தப் பாடலை எனக்கு மிகவும் பிடித்த ஒர் பாடல் அதனால் அதனையும் இணைத்துக் கொண்டேன். வருகைக்கும் விரிவான உங்கள் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
தலைவரே, நீங்கள் தானே கதையை வாரம் 2 பக்கம் வழங்கவும் என்று அன்புக் கட்டளை இட்டது. இன்று கதை முடிந்து விட்டது. அகொதீக காமிக்ஸ் வெளியீடாக இதனை வெளியிட வேண்டியது தான் பாக்கி. பாராட்டுக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி தலைவரே, இருந்தாலும் நீங்கள் லக்கியின் தலையில் ஒன்றும் செய்யவில்லையே எனும் குறை உண்டு.
//Achdé (Darmenton Hervé), ஆஷ்டே-இது என்ன பெயர் என்று வியப்பவர்களிற்கு ஒர் சிறு விளக்கம். HD எனும் இரு எழுத்துக்களின் பிரென்ச்சு உச்சரிப்பே ஆஷ்டே. மருத்துவ துறையில் பணியாற்றி (Radiology) பின் காமிக்ஸ் உலகிற்குள் நுழைந்தவர்//
ReplyDeleteகாமிக்ஸ் உலகில் இரண்டாவது மருத்துவரா?
ஒருத்தர் பண்ற ரவுசுக்கே தாங்க முடியாம தற்கொலை ஐடியாவுல இருக்கோம். இப்போ ரெண்டாவதா?
ஜுடோ ஜோஸ்.
Once a cobra bit Judo Josh’ leg. After five days of excruciating pain, the cobra died.
கனவுகளின் காதலரே,
ReplyDelete//பாறைய இங்க வரைஞ்ச- என்னால் ஆன ஒர் சிறு கற்பனை// எதிர்பார்த்தது தான்.
கிங் விஸ்வா
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
மறந்து விட்டேன்.
ReplyDelete//உண்மையைக் கூறினால் பதிவுகள் தயாரிப்பதால் முன்பை விட குறைவாகவே திரைப் படங்களையும், நூல்களையும் அனுக முடிகிறது// உண்மை, உண்மை. நூறு சதவீதம் உண்மை.
இதனை நான் வழி மொழிகிறேன்.
கிங் விஸ்வா
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
ஜூடோ ஜோஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி கணம் டாக்.7 ஐ வேண்டுகிறேன்.
ReplyDeleteவிஸ்வா,பதிவர்களிற்கு எப்போது விடுமுறை கிடைக்கும்!!
சூப்பர் தல,,,,,,
ReplyDeleteஆனா... இந்தக்கதைய நான் இப்பத்தான் படித்தேன்,
உங்கள மாதிரியே எல்லாரும் இருந்தா எல்லா காமிக்கும் படிச்சிருவேன்,
தல,
ReplyDelete//உங்கள மாதிரியே எல்லாரும் இருந்தா எல்லா காமிக்கும் படிச்சிருவேன்//
பழனிக்கே பஞ்சாமிர்தமா?
King Viswa
Carpe Diem.
Tamil Comics Ulagam
கனவுகளின் காதலரே!
ReplyDeleteதீராத ஆர்வம் ஒன்றையே அடிப்படையாக கொண்டு ஒரு காமிக்ஸை தமிழில் வடித்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல வரிக்கு வரி மொழிப்பெயர்த்தால் லக்கி லுக்-ஐ தமிழில் சுவைக்க முடியாது. நமது சூழலுக்குக் ஏற்ப சற்று மாற்றம் செய்வது அவசியமானது. அதனை நன்றாகவே செய்துள்ளீர்கள்.
மேலும் ஆங்கில வசனங்களை மறைத்து தமிழ் வசனைங்களை அடித்துள்ளீர்கள். போட்டோஷாப் போன்ற சாப்ட்வேரில் நன்றாக பரிச்சயம் உள்ளவர்களுக்கே சாத்தியம். இருப்பினும் நன்றாக செய்துள்ளீர்கள். நேரம் கிடைத்தால் போட்டோஷாப் HELP படியுங்கள். உங்களது படைப்பு திறன் மேலும் கூடும்.
உங்களுக்காக ஒரு பொன்மொழி சொல்ல ஆசை /இன்று உங்களால் முடிந்த மட்டும் நன்றாக செய்யுங்கள். நாளை இதனைவிட நன்றாக செய்யக்கூடிய திறன் தானே வரும்/ முடிந்தளவு நன்றாக செய்துள்ளீர்கள். நாளை இன்னும் நன்றாக செய்வீர்கள்! வாழ்த்துக்கள்.
மொழிமாற்றம் செய்யும் போது ஆங்கில வார்த்தைகள் கலவாமல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நமது லயன் குடும்ப இதழ்களில் இந்த பாணியை நீங்கள் காணலாம்.
ஆஹா கலக்கலக கதைய முடிசிடிங்க... என்னவேர இதுல இழுதுவிட்டீங்க... எனக்கு இது தேவையா?.... ஒரு புஸ்பவனம் அல்லது ஒரு பூங்கவனும் இவங்க சொல்லீ இருந்த நான் ரொம்ப சந்தோஸ்சப்பட்ருபேன்... ... என்ன பன்றது,,, நான் கொடுத்து வைச்சது இவளுதன்... சரி சரி ..... அடுத்த தடவை பார்க்கலாம்....
ReplyDeleteஅடுத்தது எப்போலுது ஐயா?
நண்பர் சுரேஷ் அவர்களே நீங்கள் எல்லா காமிக்ஸும் படிச்சிடுவேன் என்று கூறியது ஒன்றே போதும். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
ReplyDeleteவிஸ்வா, பஞ்சாமிர்தம் பூங்காவனத்தின் அக்கா மகள்தானே!!!
நண்பர் அ.வெ. அவர்கட்கு, மென்பொருள்களைப் பொறுத்த வரை நான் ஒர் கத்துக்குட்டியே, ஆனாலும் இணையத்தில் கிடைத்த ஒர் இலவச மென்பொருளைக் கொண்டு ஒர் வழியாக கதையை தமிழ்ப் படுத்தினேன். தயாரிப்பில் மிகக் கடினமான பகுதி பிரெஞ்சு மொழியில் இருந்த வசனங்களை கறுப்பு வண்ணத்தால் மறைத்ததே. நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது போட்டோ ஷாப்பையும் கற்றுக் கொள்வேன், ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய் ஒன்றைக் கற்றிடவே பிறக்கிறது.
ஆங்கில வார்த்தைகள் உரையாடல்களை இயல்பாக்க வேண்டி கலந்தது மட்டுமே, தமிழ் எங்கள் மூச்சல்லவா.
அருமையான பொன் மொழி இதனை உங்கள் ஆசீர்வாதமாகவே ஏற்றுக் கொள்கிறேன். நீண்ட காலத்தின் பின் உங்கள் கருத்துக்களை காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. வருகைக்கும், கருத்துக்களிற்கும் மிக்க நன்றி.
என்ன ரமேஷ் இளைய நிலாவைப் பிடிக்கவில்லையா, சரி விடுங்கள் இன்னொரு சிட்டைப் பிடித்து விடலாம் , இத் தொடரிற்கு நீங்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி நண்பரே.
வார்த்தெய்கலை மறைப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை... சிரிதளவு ADOBP Photoshop தெரிந்தால் மட்டும் போதும்... அத்துடன் ஒரு action command இருந்தால் போதும்...
ReplyDeleteகனவுகளின் காதலரே,
ReplyDeleteகலக்கி விட்டீர்கள்!!! வெற்றிகரமாக முதல் இதழை முடித்து விட்டீர்கள். அடுத்த பதிப்பு என்ன ?
Lovingly,
Lucky Limat
கனவுகளின் காதலரே,
ReplyDeleteநியாயப் படை என்னாச்சு? அவர்களின் அடுத்த சாகஸங்களை எப்போது படிக்கலாம்?
தலைவர்,
அ.கொ.தீ.க.
காதலரே, ஒரு வழியாக வாக்களித்தபடி, லக்கி கதையை ஒரே வாரத்தில் முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள். பக்கங்களை படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
ReplyDeleteகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்
வந்துட்டேன் காதலரே..... 9 பக்கங்கள் ஒன்றாக பதிந்து பரவசபடுத்தி விட்டீர்கள். இனி கதையை பற்றி.....
ReplyDelete// அண்ணனை பொம்மனாட்டிக்காக தூக்கி எறிஞ்சிட்டான் //
குடும்பத்தில் இதெல்லாம் சகஜமப்பா :) ;)
ரண்டன் ப்ளான் காமிக்ஸ் கள்வர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது அதற்கு நல்லது. வெறி பிடித்தவர்கள் நாங்கள் :)
// ரஃபிக் வீடு காலி போல இருக்கே //
அடப்பாவி டால்டன்களா உங்களை நம்பி லக்கியை விட்டு வந்ததற்கு எனக்கு ஆப்பா.... காதலரே அநியாயமயா இது.... தீர்ப்ப மாத்தி சொல்லு நாட்டம்மா....
// ஆருயிரான மனைவிகளையையும் கை கழுவி விட்டு //
இது ஏதோ நவஜோ மதகுருவுக்கு பயந்து எழுதியது போல தெரிகிறதே...?
// ராத்திரி பூரா பதிவர்கள் தண்ணி...கட்டிபிடிச்சிகிட்டு //
நான் அந்த கூட்டணியில் இல்லை என்பதை தெளிவாக கூறி கொள்கிறேன் நண்பர்களே... ஆம்பிளைய ஆம்பிளை கட்டி பிடிச்சு தூங்குறதா... வே....
அட நம்ம ஜோஷ் எப்ப நாட்டாமை வேலை பண்ண ஆரம்பிச்சாரு... சொம்பும் மரமுமா... பேஷ் பேஷ்
// கதையை தமிழில் சொல்றவன அடிக்கலாமா //
அடடா... என்ன ஒரு வாய்ப்பு.... நான் தான் முதலில் ஆரம்பித்து வைப்பேன்... ஆங்க்க்க்க்க்க்....
ஆவ்ரெல்லின் சாப்பாட்டு ராமன் உபயோகத்தை டால்டன்கள் உண்வது சூப்பர் கட்டம்
மாட்டுக்காரன் தொப்பி... ஓகே.... ப்ளீஸ் கொரியர் அனுப்பிச்சு வச்சிடுங்கப்பா
கோவணம் கட்டுற வயக்கரா தாத்தாவிற்கு ஜட்டி என்னத்துக்கு மேன்....
குட் பை சீ ய இன் த நெக்ஸ்ட் பேஜா... லக்கிக்கு எப்படி தெரியும் தான் தப்பிக்க போவது?
நல்ல வேலை டைம் பாத்து என்னை வெற்றி கூட்டணியில லக்கியோட கோத்து விட்டதற்கு நன்றிகள் காதலரே.... லக்கி பத்தி நான் சொன்னதெல்லாம் அவனுக்கு போட்டு குடுத்துறாதீங்க.... ஆமாம் ஆமாம் நான் தான் போட்டு குடுத்தேன்.. ஹி ஹி...
அடடா ரமேஷ்க்கும் என்ட்ரியா... கலக்குங்க.... இளைய நிலாவின் பத்தினித்தனம் புல்லரிக்க வைக்குதப்பா...
வயக்கரா தாத்தாவை கடைசியில் ஜனாதிபதியின் தூதுவராக அமர்க்கள் என்ட்ரி கொடுத்துள்ளீர்கள்... இவரை தூதுவராக நியமித்த ஜனாதிபதி யாருப்பா.. ஒரு வேளை கிளின்டனின் சொந்தகாரரா... :)
பிளாக்கர்ஸ்தான் மாமாவா.... அய்யோ அம்மா.... ஆள விடுங்க சாமி... வேணா அந்த அழுது கொண்டிருக்கிற பெண் ஓகே.... ஹி ஹி ஹி
// கண்ணாலம் என்கிறது இரு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இமய மலையையே புரட்டிப் போடுற பந்தமப்பா //
காமடி நேரத்திலும் பஞ்ச் டயலாக்கே... கலக்குங்க காதலரே...
// அது தாலி கட்டாத வரைக்கும் தான்....//
அதானே பார்த்தேன்.... நக்கலை பஞ்ச் டயலாக்கோடு கலந்து விட்டீர்களே...ஆமா, இது யாரு சொன்னது... காதலரின் சொந்த அணுபவமா ;)
வழக்கமான லக்கி லூக்கின் தனிமைப் பாட்டை நவீனபடுத்தியதற்கு நன்றிகள் காதலரே... எனக்கு மிகவும் பிடித்த பாட்டு வேறு... பிடியுங்கள் பாராட்டை :)
ஒரு வழியாக ஒரு அமர காவியம் முடிவிற்கு வந்திருக்கிறது. வழக்கம் போல உங்கள் தனித்துவமான புத்தக விமரிசனத்தோடு முடித்திருப்பது இன்னும் சிறப்பு.. ஒவ்வொரு பக்கம் என்ன, ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் உழைப்பு தெரிகிறது... இது வரை கருத்தே வெளியிடாமல் தூங்கி கொண்டிருந்த பல நபர்களை விழித்தெழ செய்து கமெண்ட் இட வைத்ததே உங்களுக்கு கிடைத்த வெற்றியின் அடையாளம்...
ஜாக் சிராக் உருவ ஒற்றுமை அதிசயமான விஷயம், அந்த இரண்டு தாத்தாகளை ஆனால் எங்கோ பார்த்த நியாபகம் இருக்கிறதே என்று நினைத்தற்கு இப்போது காரணம் காட்டி விட்டீர்கள்... கதாசிரியர் உண்மையிலேயே நிகழ் கால மனிதர்களை காமடியாக கதையில் சேர்த்து அவரின் ரசிப்புத்தன்மையை பரை சாற்றியிருக்கிறார்.
இந்த புத்தகம் கையில் கிடைக்கும் போது உங்கள் மொழி பெயர்ப்பு நியாபகம் வரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. தற்போதைய லக்கி லூக் கதைகளில் முன்பு இருந்த காமடி தொனி இப்போது இல்லை என்பதும், நம்மையும் அறியாமல் சிரிக்கும் காட்சிகளும் குறைவு என்பதும் உலகலாவிய காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் உள்ள எண்ணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படிபட்ட ஒரு கதையை உங்கள் எழுத்துகள் மூலமும், ப்ளாக்கர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் பேசி கொண்ட வார்த்தைகளை சரியான முறையில் பயன்படுத்தியும் சாதித்துள்ளீர்கள்.
புத்தகத்திற்கு வேண்டுமானாலும் இரண்டு ஸ்டார் கிடைத்திருக்கலாம், உங்கள் மொழிபெயர்ப்புக்கு ஃபைவ் ஸ்டார் அந்தஸ்து கட்டாயம் உண்டு.
// தமிழ் படங்கள் நிறையப் பார்க்க மாட்டேன். //
உங்கள் நேரத்தை சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.
// உண்மையைக் கூறினால் பதிவுகள் தயாரிப்பதால் முன்பை விட குறைவாகவே திரைப் படங்களையும், நூல்களையும் அனுக முடிகிறது. //
சில நேரம் நாம் எதை அதிகமாக நேசித்தோமா அதை இப்போது இந்த பதிவுகளின் மூலம் இழக்கிறோமா என்ற எண்ணம் என் மனதிலும் எழும்... ஆனால் தினமும் வருகை தரும் எண்ணற்ற நண்பர்கள் நம் பதிவுகளை நேரம் ஒதுக்கி படிக்கிறார்கள் என்று பார்க்கையில் அந்த எண்ணம் பறந்து போகும் என்பதில் ஐயம் இல்லை. அந்த எண்ணம் என்னை விட அதிகம் வாசகர்களை சுண்டி இழுக்கும் உங்கள் பதிவுகளின் மூலம் உங்களிடம் அதிகம் எழும் என்பதில் என்ன கேள்வி இருக்க போகிறது.
//பாறைய இங்க வரைஞ்ச- என்னால் ஆன ஒர் சிறு கற்பனை//
கதாசிரியருக்கு கூட தோன்றாத எண்ணம்.. காதலரின் கற்பனை சிதறல்கள்... சே முத்துகள்...
உங்கள் உழைப்பிற்கும் நேரத்திற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. மேலும் இப்படிபட்ட கதைகளை உங்கள் மொழி பெயர்ப்பில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நெஞ்சத்தில் எழுந்தலும், இனி மொத்த புத்தகத்தையும் ஸ்கான் செய்த அமர காவியம் படைத்து, அதனால் பதிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்த வித பிரச்சனை வராமல் தடுக்க, சின்ன கதைகளை நீங்கள் நேரம் அமையும் போது மொழி பெயர்த்து மற்றவர்களை மகிழ்விக்கலாம் என்பது என்னுடைய கருத்து. மற்றவர்களும் அதையே ஆமோதிப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
நீங்கள் நியாய படைக்கு ஜாகை மாற்றி கொண்டு உங்கள் அதிரடி பதிவுகளை தொடருங்கள்.... ஜாலி ஜாலி லைப்...உங்களுக்கும் எங்களுக்கும்.
ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
என் அபிமான நண்பர்களின் பிண்ணூட்டத்திற்கு சில பதில்கள்
ReplyDelete// உங்கள மாதிரியே எல்லாரும் இருந்தா எல்லா காமிக்கும் படிச்சிருவேன், //
சுரேஷ் அப்ப, காமிக்ஸ் பதிப்பாளர்கள் எல்லாம் துண்டை தலையில் போட தான் வேண்டும்... :)
// மொழிமாற்றம் செய்யும் போது ஆங்கில வார்த்தைகள் கலவாமல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். //
அய்யம் நண்பரே, தமிலிங்கிலீஷ் கலந்தால் வரும் காமடிக்கு இணை உண்டா, நக்கலுக்கு அது மிகவும் தேவை ஆயிற்றே...
இந்த வார்த்தையில் கூட காமடி என்ற வார்த்தைக்கு பதிலாக நகைச்சுவை என்ற நான் எழுதினால் அதே கலோக்கியல் இல்லாமல் போகலாம் ;) :)
கூடவே காதலக்கு ஒரு வேண்டுகோள் வழக்கம் போல இந்த பதிவையும் சில காலங்களில் நீங்கள் நீக்காமல், வெறும் அந்த ஸ்கான் பக்கங்களை மட்டும் நீக்குங்களேன்... உங்கள் உழைப்பிற்கு சான்றாக இந்த பதிவும், பிண்ணூட்டங்களும் மறைமுகமாக வாழும் அல்லவா... முடிந்தால் உங்களின் மற்ற பதிவுகளில் விழுந்த பிண்ணூட்டங்களையும் நீங்கள் இங்கு இணைக்கலாம்.. அந்த பிண்ணூட்டங்கள் உங்கள் உழைப்பின் பிரதிபலன் ஆயிற்றே.
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
ரமேஷ், கருத்துக்களிற்கு நன்றி. நீங்கள் கூறியதை செயல்படுத்த முனைகிறேன்.
ReplyDeleteநண்பர் லக்கி லிமட், அடுத்த பதிப்பு பற்றி எண்ணவில்லை பார்க்கலாம். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
தலைவர் அவர்களே, இளமை வேங்கை ஜோஸ் சான் அவர்கள் ஒர் முக்கிய சரித்திர ஆதாரம் ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறார். எனவே தேடல் நிறைவுறும் வரை காத்திருக்க வேண்டும்.[நானும் தான்]
நண்பர் ரஃபிக், இது தான் பின்னூட்டம் என்ற ரேஞ்சில் போட்டுத் தாக்கி இருக்கிறீர்கள். நன்றி ரகசிய உளவாளி அவர்களே.
நீங்கள் கூறிய படி இப் பதிவை மட்டும் விட்டு வைக்கிறேன்,மொழி பெயர்த்த பக்கங்கள் நீக்கப்பட்டிருக்கும். வரும் காலத்தில் என்னாலான சிறிய கதைகளை பதிவிட முயற்சிக்கிறேன்.
தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும், ஆலோசனைகளிற்கும் மீண்டும் என் நன்றிகள்.
வயக்கரா தாத்தா கோவணம் கூட அணிவதில்லை என்பதை உங்களிற்கு தெரிவிக்க சொன்னார்.
அருமை. அடுத்து நியாயப் படையா? அட்டகாசம்.
ReplyDeleteதொடர்ந்து தூள் கிளப்புகிறீர்கலே, இதன் ரகசியம் தான் என்னவோ?
அம்மா ஆசை இரவுகள் விசிறி.
hi KK,
ReplyDeletevery well done. iam amazed by your dedication and hard work to compile all the 48 pages patiently and compile this.
hats off to you.
Shame... Shame... Puppy Shame.... வயக்கரா தாத்தாவிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்... :)
ReplyDeleteநண்பர் அம்மா ஆசை இரவுகள், நீங்கள் எல்லாரும் வழங்கும் உற்சாகத்தின் வழியே எல்லாம் நிறைவேறுகிறது. நியாயப் படைக்கு நண்பர் ஜோஸ் சான் அவர்களின் அற்புதமான கற்பனைத்திறனும், கடும் உழைப்புமே காரணம் எல்லாப் புகழும் அவரிற்குரியதே. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteகாமிக்ஸ் பிரியரே, நன்றி, நன்றி. உங்கள் அன்பான ஆதரவைத் தொடருங்கள்.
ரஃபிக், உங்களை ஒரு முறை அதனை முயற்சி செய்து பார்க்கும் படி வயக்கரா தாத்தா வேண்டுகிறார். அதற்கு பின் நீங்கள் ஒர் சுதந்திரப் பறவையாக உணர்வீர்கள் என்பதனையும் தெரிவிக்கிறார்.
கலக்குறீங்க தோழர். நல்ல முயற்சி!
ReplyDeleteதோழர் லக்கிலுக் அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.
ReplyDelete