2091, பல்துறை நிபுணர்கள் சிலரை தன்னகத்தே ஏந்திக் கொண்டு பிரபஞ்சத்தின் தொலைதூரச் சந்திரன் ஒன்றை வந்தடைகிறது ப்ரொமீதியஸ் விண்கலம்......
யார் அந்த Space Jockey !? ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தினை இயக்கியபோதே இயக்குனர் ரிட்லி ஸ்காட் தன்னுள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு, ஏலியன் திரைப்பட வரிசையின் எந்தப் பாகமும் விடைகாண முற்பட்டதேயில்லை. ஏலியன் திரைப்படத்தின் முதல்பாகத்தில் நொஸ்ட்ரோமோ விண்கலம், ஆபத்துதவி சமிக்ஞை ஒன்றை இடைமறித்துக் கேட்டதன் பின்பாக தன் பயணப் பாதையை மாற்றிக் கொண்டு சமிக்ஞை உருவான இடத்தை நோக்கி செல்லும். அங்கு கேன் எனும் அதிகாரி தலைமையில் நடக்கும் தேடலின்போது வினோதமான ஒரு விண்கலம் அகப்படும். அவ்விண்கலத்தினுள் படிமநிலையில் காட்சியளிக்கும் ஒரு ராட்சதனை கலவோட்டி இருக்கையில் தேடல் குழு கண்டு வியக்கும். இந்த ராட்சதனையே இங்கு இயக்குனர் ரிட்லி ஸ்காட் Space Jockey எனக் குறிப்பிடுகிறார். மனிதனின் உருவ அமைப்பை கொண்ட இந்த ராட்சதன் யார் எனும் இயக்குனரின் கேள்விக்கு விடையாக வந்திருக்கிறது Prometheus எனும் இத்திரைப்படம்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பறக்கும் தட்டு ஒன்றிலிருந்து இறங்கும் ராட்சதன் ஒருவன் பூமியில் தன்னை அழித்துக் கொள்வதன் மூலம் உயிர்கள் பூமியில் தோன்ற ஆரம்பித்தது என்பது தெளிவாக்கப்படுகிறது. பின், பல நாகரீகங்கள் தோன்றி வாழ்ந்த பகுதிகளில் காணப்பட்ட சுவர் சித்திரங்களில் ராட்சதர்கள், மானுடர்களிற்கு சில நட்சத்திர அமைப்புக்களை சுட்டிக் காட்டுவதும், அதை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பின், ராட்சத மனிதன் சுட்டிக் காட்டிய நட்சத்திரங்களை நோக்கி ப்ரொமீதியஸ் கலத்தில் பயணிப்பதாகவும் கதை நகர்கிறது. இங்கு திரைக்கதையின் பிரதான இழையானது மனிதனை படைத்தவர்களாக இருக்ககூடியவர்களை தேடிச் செல்லுதல் என்பதாகவே பின்னப்பட்டிருக்கிறது. ஆகவே திரைப்படமானது வேற்றுக் கிரக கொடிய ஜந்துக்களான ஏலியன்கள் பற்றி பேசுவதிலிருந்து தன்னை தள்ளி வைத்துக் கொள்ளுகிறது. ஆகவே பிசுபிசுப்பாக மின்னும், அமிலத் திரவம் ஒழுகும், பளபளப்பான கறுப்பில் அட்டகாசம் காட்டி அராஜகம் செய்யும் வேற்றுக்கிரகக் குலக் கொழுந்துகளான ஏலியன்களையும், அவற்றுடனான மோதல்களையும் மனதில் எண்ணிக் கொண்டு இத்திரைப்படத்தினுள் நுழைந்தால் ஏலியன்களிற்கு பதிலாக கொடிய ஏமாற்றம் உங்களிற்காக அங்கு காத்திருக்கும் என்பதுதான் உண்மை.
கெத்தான என் போட்டோவ போட்ட மவராசன் யாருலே |
படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே திரையில் அவர் விரிக்கும் காட்சிகள் மூலம் ரசிகனைக் கவர ஆரம்பிக்கிறார் இயக்குனர். உயிரிகள் இன்னம் தோன்றா பூமியின் நிர்மலம், இனிய செவ்விசை ஒழுக விண்வெளியில் பயணிக்கும் விண்கலம், அதனுள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமர்த்தான அண்ட்ரொய்ட் என்பன வழியாக கதையின் சூழலிற்குள் மென்மையாக ஒருவரை எளிதாக இழுக்கிறது திரைப்படம்.
எவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட, ஒரு அண்ட்ரொய்ட் மனிதனின் ரசனையை எட்ட முயல்கிறது, அவன் அறிவையும், ஆற்றலையும் எளிதாக தாண்டிச் செல்ல தயங்காது இயங்குகிறது என்பதை ஆரம்பக் காட்சிகளில் சிறப்பாக காட்சிப்படுத்துகிறார் ரிட்லி ஸ்காட். படைத்தவன் திறமையையும், மாட்சிமையும் தாண்டிச் செல்ல விழையும் மனித இயல்பையும், அதைப் பற்றிக் கொள்ள துடிக்கும் ஒரு அண்ட்ரொய்டின் செயற்பாடுகளையும் மெல்லிய ஒரு கோடாக இந்தக் காட்சிகள் உணர்த்தியவாறே நகர்கின்றன.
சந்திரனை நெருங்கிய பின்பாக வழமைபோலவே துயில் கலையும் நிபுணர்கள் குழுவின் அறிமுகம், அவர்களின் திறமைகள், தனித்தன்மைகள், அவர்களிற்கிடையே உள்ள வேறுபாடுகள் என கதையை வழமை மாறாது நகர்த்துகிறார் இயக்குனர். இங்கு நடிகை சார்லைஸ் தெரோன் சுயநலமிக்க ஒரு செல்வந்தனின் வாரிசாக காட்டப்படுகிறார். இறுக்கமான, கண்டிப்பான பாத்திரமாக அவர் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் வீண்டிக்கப்பட்ட ஒரு நடிகையாகவே திரைப்படத்தில் காணப்படக்கூடியவராக இருக்கிறார். அவர் மார்புகளில் ஒன்றையாவது காட்டியிருந்தாலாவது அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என இங்கு என்னால் எழுத முடிந்திருக்கும். ஆனால் என்ன செய்வது. என்னிடம் நல்ல நடிகை எனும் பெயர் வாங்க அவரிற்கு இம்முறை சந்தர்ப்பம் அமையவில்லை.
சிவ்காசி எங்க இருக்குலே... |
தனக்கு மேலான சக்தி ஒன்றின் மீது மனிதர்கள் கொண்டிருக்ககூடிய நம்பிக்கையையும் திரைப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. மரணத்தை எம்மை படைத்தவர்களால் தள்ளி வைக்க இயலுமா என்பதற்கு வேதனையான கிண்டலை திரைப்படம் பதிலாக தருகிறது. நித்திய வாழ்வு என்பது பிரம்மாக்களிற்கே கூட இல்லாத ஒன்று என அது கேலி செய்கிறது. ராட்சதன், மனிதன், ஆண்ட்ரொய்ட் எனும் படைப்புக்கள் வழியாக படைப்பின் அர்த்தம் என்ன எனும் கேள்வியையும் அது எழுப்புவதிலிருந்து விலகிச் செல்வதில்லை. எந்த ஒரு மேலான படைப்பின் அழிவும் ஒரு சிறு உயிரிலிருந்து உருவாகிவிடக்கூடும் எனும் உண்மையையும் அது திகிலுடன் காட்சிப்படுத்துகிறது.
திரைப்படத்தின் மிகச்சிறந்த பாத்திரம் அன்ட்ரொய்ட் டேவிட். அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் மிக்கேல் ஃபாஸ்பெண்டெர் சிறப்பாக தன் நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரைத் தவிர திரைப்படத்தில் சிறப்பான நடிப்பு என்பதை குகைகளிற்குள் தேடித்தான் அலைய வேண்டும். விண்கலமும், இயந்திர வண்டிகளும் நடிகை நூமி ரப்பாஸை விட அருமையாக நடித்திருக்கின்றன. அவரை வைத்து இப்படத்தின் தொடர் எதையும் உருவாக்கும் எண்ணம் தயாரிப்பாளர்களிற்கு இருப்பின் அதை அவர்கள் எங்காவது தொலைதூரச் சந்திரனில் சென்று தீர்மானித்தால் அது ரசிகப் பெருமக்களிற்கு ஒரு நல்ல சேதியாக அமையும்.
படத்தில் சிறப்பு வரைகலைநுட்பக் காட்சிகள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ராட்சதர்களின் வினோதக் கட்டமைப்பு, அதில் மறைந்திருக்கும் அந்த வாகனம் !! என்பன எல்லாம் அற்புதமான ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குகை போன்ற அந்தக் கட்டமைப்பினுள் மனிதர்கள் நுழையும் போதெல்லாம் சிறப்பான ஒளிப்பதிவு எம்மை திகிலோடு ஒன்றச் செய்கிறது. இதற்காக அதிரடி ஆக்ஷன்களை எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். கதையில் உள்ள மர்மம்தான் படத்தினை விரைவாக நகர்த்தி செல்கிறது. திரைப்படத்தில் இருக்கும் ஆக்ஷனை அதிரடி என வகைப்படுத்த முடியாது. இருப்பினும் உச்சக் கட்டக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. ரத்தம் தெறிக்கும் காட்சிகளின் ரசிகர்கள் சப்புக் கொட்டிக் கொண்டே பார்க்கலாம். போனால் போகிறது என்று கொடிய அராஜக ஜந்துவான ஏலியன் எவ்வாறு தோன்றியது என்பதையும் இயக்குனர் இறுதியில் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பில்லாமல் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார் ரிட்லி ஸ்காட். அழிவிலிருந்தே சில வேளைகளில் சில ஆரம்பங்கள் துவக்கம் பெறுகின்றன. ஆக்குபவனே அழிக்கவும் செய்வான், அதற்கான காரணங்கள் அவனிற்கே வெளிச்சம் என்பதாக திரைப்படம் கேள்வியுடன் நிறைவுறுகிறது. அதிக ஆக்ஷன் இல்லாத, கதையம்சத்துடனும், சிந்திக்க வைக்கும் கேள்விகளுடனும் கூடிய மென் அறிபுனை திரைப்படம் இது. மீண்டும் சொல்கிறேன் ஏலியன்களையும், ஆக்ஷனையும் எதிர்பார்த்து சென்று ஏமாறாதீர்கள்.
ம்ம்க்கும் ... இன்னும் அவெஞ்சர்ஸே தியேட்டர்ல சென்று பார்க்கக் கிடைக்கல. இது எப்ப இலங்கைல ரிலீஸ் ஆகுமோ தெரியல.
ReplyDeleteட்ரெயிலர் அட்டகாசம். அது போதாததற்கு அன்ட்ரொயிட் டேவிட்டின் சில வீடியோக்கள் வேறு ஹைப்பை ஏற்றிவிட்டிருந்தன.
//அதிக ஆக்ஷன் இல்லாத, கதையம்சத்துடனும், சிந்திக்க வைக்கும் கேள்விகளுடனும் கூடிய மென் அறிபுனை திரைப்படம் இது.//
இது போதும் ...
அதிக எதிர்பார்ப்புக்களை உருவாக்கி கொள்ளாதீர்கள்..... ட்ரெய்லர் பரபரப்பாக உருவாக்கப்பட்டிருப்பது உண்மை, இருப்பினும் படம் அவ்வளவிற்கு பிரம்மிக்க வைக்காது...:))
Deleteஅதே அதே சபாபதி. கடந்த வாரம்தான் அவென்சர்ஸ் பார்த்தேன். இம்முறை இரண்டு நாட்களுக்கு முன்னர் MIB III வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் எப்போ வெளியாகுமோ தெரியாது.
Deleteமுன்பு ஆங்கிலப் படங்கள் அத்தி பூத்தாப்போல் கொழும்பில் வெளியாகும். இப்போது பரவலாக வெளியாகத் தொடங்கியுள்ளமை ஓரளவு மகிழ்ச்சியே.
முன்பு கொழும்பில் லிபேர்ட்டி, மற்றும் மஜெஸ்டிக் ஆகியவற்றில் பிரபலமான படங்கள் சற்று தாமதாகவேனும் வந்து விடும்.....பெரும்பாலும் ஒரு படம் தவறாது பார்த்து விடுவேன் [ பாமென்கடே அரங்குகளையும் விட்டு வைப்பதில்லை ], மாணவனாக இருந்ததில் உள்ள செளகர்யம் அது ஆனால் இன்று.....:))
Delete// அவர் மார்புகளில் ஒன்றையாவது காட்டியிருந்தாலாவது அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என இங்கு என்னால் எழுத முடிந்திருக்கும். ஆனால் என்ன செய்வது. என்னிடம் நல்ல நடிகை எனும் பெயர் வாங்க அவரிற்கு இம்முறை சந்தர்ப்பம் அமையவில்லை.//
ReplyDeleteபடத்துக்கு தனியா போனீர் போல... :)
//அடைப்பட்ட இரு வெளிகளினுள் மனிதர்கள் மனதில் உருவாகும் கேள்விகள், தகராறுகள் போன்றவற்றை அவற்றின் அழுத்தத்துடனும்,பதட்டத்துடனும் எடுத்து வருகிறார் ரிட்லி ஸ்காட்.//
ஆதி காலத்தில இருந்து எல்லாப் பயலும் ஒரே ஸ்கிரிப்ட் தான் யூஸ் பன்றாணுக போலயே.. :)
//திரைப்படத்தின் மிகச்சிறந்த பாத்திரம் அன்ட்ரொய்ட் டேவிட். அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் மிக்கேல் ஃபாஸ்பெண்டெர் //
இந்தாள் பேருக்கு மேல எதுனா சொல்லணுமா என்ன? :)
நூமி ரப்பாஸ்ன்னா இந்த ஷெர்லாக் படத்தில குதிரைல போற கழுதையா வருமே, அந்த பீஸா? இது கிறிஸ்டினாவிற்கு "ஒண்ணு விட்ட" அக்காவமே,மெய்யாலுமேவா? :)
படத்தின் trailer ஐ பார்க்கையில், படம் ஏலியன்ஸ் படத்தின் அடித்தடத்தை அப்படியே பின்பற்ற முயல்வது போலத்தான் தெரிகிறது. ஏலியன் பட ரசிகர்களை ஈர்க்க செய்யப்பட்ட வியாபார தந்திரமாகவும் இருக்கலாம். ஆனால், Sigourney Weaver போன்ற பாத்திரத்தில் நூமியா? அய்யகோ! :)
Aliens படத்தை சில காலத்துக்கு முன்பே பார்க்க நேர்ந்தது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். படம் என்னை சுத்தமாகக் கவரவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த slasher படங்களில் இதுவும் ஒன்று.அவ்வளவே. இரண்டாம் பாகம் entertainer. ஆனால் அதிலும் பெரிதாக எதுவும் கிடையாது என்பது எனது அபிப்பிராயம். மூன்றாம் பாகத்தை நான் பார்க்கக் கூட முயற்சிக்கவில்லை.
Nice Post Anna. தமிழ்ல எங்க ஊருக்கு வந்தவுடன் பார்க்கிறேன். //சிவ்காசி எங்க இருக்குலே...// எங்க ஊரு மேல இவ்வளவு பாசமா?
ReplyDeleteபடத்த பார்த்தாதான் பாசமா இல்ல பயங்கரப் பாசமா என்பது புரியும்....:)
Deleteboss movie june 8th thana release?
ReplyDeleteஇங்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகிவிட்டது....:)
Delete// அவர் மார்புகளில் ஒன்றையாவது காட்டியிருந்தாலாவது அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என இங்கு என்னால் எழுத முடிந்திருக்கும். ஆனால் என்ன செய்வது. என்னிடம் நல்ல நடிகை எனும் பெயர் வாங்க அவரிற்கு இம்முறை சந்தர்ப்பம் அமையவில்லை.//
ReplyDeleteபடத்துக்கு தனியா போனீர் போல... :) //
பய புள்ளைக எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ;-)
.
இதற்கும் இலுமி பயங்கரமான ஒரு பதிலுடன் கிளம்பி வருவார்....:)
Deleteஇந்த படத்துக்கு போயி (முதல் நாள் முதல் ஷோ), என்னை நானே அறுந்த செருப்பால் அடித்துக்கொண்டேன் :-)
ReplyDeleteநண்பரே, என்னை இத்திரைப்படம் அதிகம் ஏமாற்றிவிடவில்லை..... பிடித்திருந்தது...:))
Deleteடியர் கனவு ,,,,, பதிவு சூப்பர் .........ஆனால் கடைசி வரை படம் நன்றாக இருந்ததா,,,,,,,,,இல்லையா என்று சொல்லவே இல்லையே ? நாளை family யோடு இந்த movie போகலாம் என்று பிளான் செய்து இருந்தேன் ...........படம் action தேவை இல்லை .போர் இல்லாமல் இருந்தாலே போதும் .........! படம் மொக்கை யாக இருந்தால் ஷாப்பிங் போய் பொழுதை ஒட்டி விடுவேன் ............! படம் ஓகே வா? நாட் ஓகே வா ?
ReplyDeleteஅது உங்கள் ரசனையைப் பொறுத்த விடயம்.... எனக்கு நன்றாக தோன்றுவது மற்றவர்களிற்கும் நன்றாக தோன்ற வேண்டும் என்பது ஒரு நியதி அல்லவே.... எனவே உங்கள் முடிவு....உங்கள் அனுபவமாக அமையும்...:)
Delete// நித்திய வாழ்வு என்பது பிரம்மாக்களிற்கே கூட இல்லாத ஒன்று என அது கேலி செய்கிறது // கிருபானந்தவாரியாரின் ஒரு புராணகதையில் கூறுவார் ”மனிதனின் 365 நாள் தேவர்களுக்கு 1 நாள், தேவர்களின் 100 வருடம் பிரம்மாவிற்கு ஒரு நாள், அந்த பிரம்மாவுக்கும் நாறுவருடங்களே ஆயுள்” என்று! நம்முடைய இதிகாசபுராணங்களும் கூட ஏதோ சில வேற்றுலகவாசிகளை பற்றி சொல்ல முயல்வதாக தோன்றுகிறது!
ReplyDeleteபடம் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது! மிசன் டூ மார்ஸ் படத்திலும் இவ்வாறே கதை அமைக்கப்பட்டுருக்கும், அதாவது அழியும் நிலையிலுள்ள செவ்வாய்கிரகவாசிகள் முன்னெச்சரிக்கையாக தங்கள் டி என் ஏ வை பூமியில் அனுப்ப அதுவே உயிர்தோன்ற காரணமாகிறது என்று!
புராணங்களை எல்லாம் கட்டுக்கதை என ஒதுக்கிட இயலாது அல்லவா நண்பரே, பல கலாச்சாரங்களின் புராணங்களிலும் மனிதர்க்கு மேலான சக்தி கொண்டவர்களை நாம் பொதுவாக காணலாம். நம் புராணங்களும் அதற்கு விதிவிலக்கு அல்லவே. கிருபானந்தவாரியார் குரலே தனி. சிறப்பாக ஆன்மீக சொற்பொழிவுகளை அவர் ஆற்றுவார். முன்பு அவர் சொற்பொழிவுகளை ஒலி நாடாக்களில் பதிவு செய்து வெளியிட்டார்கள். அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி கொள்ளாது படத்தைக் காணச் செல்லுங்கள் நண்பரே.
Deletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..
.
படம் நன்றாகவே இருந்தது, மூண்டும் கேள்வியை நம்மிடமே திருப்பிவிட்டு, எதற்காக பிறந்தோம் என்ற கேள்வியை நமக்குள்ளே எழுப்பவைத்துவிட்டது இயக்குனரின் திறமை!
ReplyDeleteதங்களிற்கு நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி நண்பரே.
Deleteகாதலரே,
ReplyDeleteபடம் பார்த்தேன். எதிர்பார்ப்புள் மூலம் என்னை நானே கட்டுபடுத்தி கொள்ளாமல், கதையின் ஊடே என்னை ஐக்கியபடுத்தி கொண்டேன். மொத்தத்தில் ஸ்காட்டின் ஆரம்ப கால நுகர்வுகளை கிரகிக்க முடிந்தது என்றே கூறலாம்.
வழக்கமான அறிவியில் சார்ந்த கற்பனை கதைகளில், அன்னிய உயிர்கள் மற்றும் மானுடர்களுக்கிடையே நடக்கும் ஸ்லாஷர் வகை கதைகருகளை மட்டுமே (இலுமி கூறியது போல, ஏலியன் திரைப்படங்கம் இதற்கு விதிவிலக்கல்ல) முக்கியத்துவம் கொடுக்கபடும். ஆனால், அவற்றை தவிர்த்து நமது குலத்தின் ஆரம்ப கால பரிணமாங்களுக்கு காரணா காரணிகளை கோடிட்டு காட்டி, முழு கருத்தையும் அவரவர் கிரகிப்புக்கு ஏற்ப உள்வாங்க வைத்திருக்கும் ரிட்லி ஸ்காட்டின் திரைக்கதை அமைப்பு பாராட்டபட வேண்டியதே.
கொலை வெட்டு குத்து கோரங்களை தவிர்த்து, நம்மை சிந்திக்க வைத்த சில படங்களில் ப்ரொமிதியஸ் கட்டாயம் அங்கம் வகிக்கும். இன்ஜினியர்களின் மூல கிரகங்களை நோக்கி பயணத்தில் விடுபடும் விடைகளுக்கா, அடுத்த பாகத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.
பி,கு,: சார்லிஸ் தெரோன் போன்ற ஒரு அம்மணியை இப்படி முழு உடையில் நிமிர்ந்து நடப்பதை தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகபடுத்தாத வகையில் ரிட்லி ஏமாற்றி விட்டார். ஆனாலும், தெரோன் உதிர்க்கும் "10 Minutes, My Room" என்ற அழைப்பிற்கு எந்த அர்த்ததையும் விளக்காமல் விட்ட உங்கள் மீதும் கோபம் தான். போங்க சார் போங்க. :D
ரஃபிக், பத்து நிமிஷத்தில என் ரூமில இருன்னாங்க....அப்புறமா எதையும் காட்டலையே...:)) அவர் ரோபோவா இல்லையா என்பதை அறிய எனக்கு மட்டும் ஆசை இருக்கவில்லையா என்ன.... இருப்பினும் ஒரு சின்ன ஆறுதல் இதோ......
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=ngw_KRdzXpM