பிரான்சு தேசத்தின் ஒப்பற்ற நாடக நடிகையான ஸாரா பெர்ன்[ஹா]ஆர்ட், ஐரோப்பிய கலாரசிகர்களின் உள்ளக் கோவில்களில் குடியிருந்த ஒரு கலைத்தேவதையாவார். ஸாராவின் கலைச்சேவையின் எல்லைகளை விரிவாக்க விரும்பும் கலை ஏஜெண்டான ஜாரெட், அமெரிக்காவில் ஸாராவின் கலைச்சுற்றுப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறான். அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைக்கும் கலைப்புயலின் சூறாவளிப் பயணத்தில், அவளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக அமெரிக்க ராமராஜன் லக்கி லூக்கை நியமிக்கிறார் ஜனாதிபதி ரதர்ஃபோர்ட் ஹேய்ஸ் [ ஆட்சிக்காலம்.. 1877-1881]….
இப்பதிவின் முதல் வரிகளில் கூறியிருப்பது எவ்வளவு நிஜமானதோ அவ்வளவு நிஜமானது ஸாரா பெர்ன்ஹார்ட் எனும் பாத்திரமும். அவரது நடிப்புத் திறமையில் தம் மனதை பறி கொடுத்த இதயங்கள் ஏராளம் ஏராளம். 1844ல் பாரிசில் பிறந்தவர் ஸாரா. நடிப்புத் துறையில் பிரபலமாகும் முன்பாக தன் அழகையும் திறமைகளையும் சிருங்கார சேவைக்கு அள்ளி வழங்கியிருக்கிறார் அவர்.
ஸாராவிற்கு கலைஞர்கள், அரசியல் புள்ளிகள், இலக்கியவாதிகள், பிரபலங்கள் என எக்கச்சக்கமான காதல் உறவுகள் இருந்திருக்கிறது. விக்டர் ஹ்யூகோவிற்கும் ஸாராவிற்குமிடையில் காதல் இலக்கியம் ஓடியதாக ஒரு கிசுகிசு உண்டு. தன் காதல் உறவுகளில் அவர் ஆண், பெண் என்ற பேதம் பார்த்ததில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
பிரேதப் பெட்டி ஒன்றினுள் உறங்குகிறேன் என்று கூறி பெரும் சர்ச்சையை உருவாக்கிய ஸாரா, அதனை போட்டோக்களாகவும், போஸ்டு கார்டுகளாகவும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியவர். அதேபோன்ற தீவிரம் அவரது கலைச்சேவையிலும் இருந்தது. நோயொன்றின் பின்னர் ஸாராவின் கால் ஒன்றை அகற்றியாக வேண்டிய கட்டாயம் உருவானது. மேடை நாடக கலைஞர்களிற்கு வதனம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்களின் கால்களும் முக்கியமானவையே. முடவன் வேடம் போடுவதானலும் கால்கள் வேண்டும் என்பதை நாம் இங்கு மறந்து விடலாகாது. சிகிச்சையின் பின்பாக ஒரு கால் அகற்றப்பட்டாலும் நாடக மேடைகளில் இருக்கைகளில் அமர்ந்த நிலையில் அம்மணி ஸாரா நடிப்பில் வெளுத்து வாங்கினார். அப்போது அவரின் வயது 71 ஆகும்.
ஒரு சமயம் அமெரிக்க கலைச் சுற்றுப் பயணத்தின்போது, அரங்கில் இருந்த கலாரசிகர்களின் கலையுணர்வுகள் சுனாமி அளவிற்கு சென்றுவிட அரங்கில் கலையுணர்வுகளின் இரைச்சல் அதிகமாகிவிட்டிருக்கிறது. இது நாடகத்தை தொடர்ந்து நடாத்த இடைஞ்சலாக இருப்பதாக உணர்ந்த ஸாரா, இப்போது நீங்கள் அமைதியாகாவிடில், இரண்டாம் அங்கத்தில் நான் இறந்துவிடுவேன் என கலாரசிகர்களை மிரட்டியிருக்கிறார். ஸாராவின் மேல் மயங்கியிருந்த அந்த கலைச்சுனாமி அமைதியானது. இது ஸாரா, தன் ரசிகர்கள் மீது கொண்டிருந்த பலமான கவர்ச்சிப்பிடிக்கு ஒரு சிறிய உதாரணமாகும்.
Sarah Bernhardt எனும் தலைப்புக் கொண்ட லக்கி லூக் சாகசமானது 1982ல் முதலில் வெளியாகியது. இது லக்கி லூக்கின் ஐம்பதாவது ஆல்பமாகும். சித்திரங்களை மொரிஸ் வரைய, கதை இலாகவை Xavier Fauche மற்றும் Jean Léturgie ஆகியோர் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
ஸாரா பென்ஹார்ட்டின் அமெரிக்க விஜயமானது, கலாரசிகர்களின் அதீத வரவேற்பையும், அறக்காவலர்களின் அபாரமான எதிர்ப்பையும் கிளப்புகிறது. அறக்காவலர்களின் சீற்றம், ஏதேனும் விபரீதமான செயல்களாக உருவெடுத்துவிடலாம் எனும் அச்சத்தினாலேயே அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் லக்கிலூக்கை ஸாராவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிக்கிறார்.
அமெரிக்க ஜானாதிபதி அஞ்சியது போலவே ஸாராவின் கலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டைகள் வந்து சேர்கின்றன. ஸாரா பயணம் செய்யும் ரயில் பெட்டி கழற்றி விடப்படல், பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் மாயமாதல், அவர் பயணம் செய்யும் ரயில் வண்டி குண்டு வைத்து தகர்க்கப்படல், ஸாராவை ஆற்றில் மூழ்கடிக்கும் முயற்சி, ஸாரா பயணிக்கும் படகில் தீ வைத்தல், ஸாரா குழுவினரை செவ்விந்தியர்களிடம் மாட்டி விடுதல்.. இவ்வாறான பல தடைகளை ஸாரா தன் கலைப்பயணத்தில் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவங்களில் எல்லாம் நகைச்சுவையின் அளவு ஸாரா பெர்ன்ஹார்டின் நடிப்புத் திறமையின் அளவிற்கு இல்லை என்பது வேதனையானது.
விளம்பரப் பிரியனும், செவ்விந்தியர்களிடம் கூட ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதில் விற்பனனுமான ஸாராவின் ஏஜெண்டான ஜாரெட், பழக்கேக்கு ஒன்றை பக்குவமாக உருவாக்கத் தெரியாமல் திணறும் சமையல்காரன் ச்சுய்னார், ஸாராவின் மீது மையல் கொண்ட நீராவிக் கப்பலின் காப்டன், தொழிலதிபர் ஸ்மித், குத்து டான்ஸ் புகழ் மேடை மேனகா [Pamela Podium], செவ்விந்திய பெருந்தலைவர் போன்ற பல பாத்திரப் படைப்புக்கள் வழி கதாசிரியர்கள் வாசகர்களை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி அதிக வெற்றி எதனையும் தந்து விடவில்லை. கதையில் சற்று சிரிப்பை வரவழைப்பது ஸாராவிற்கு உதவிகள் செய்வதாக கூறி அவள் பெயரை தன் நிறுவனம் தயாரிக்கும் பெண்களின் உள்ளாடை விளம்பரத்திற்கு தந்திரமாக பயன்படுத்திக் கொள்ளும் ஸ்மித்தின் செயல்களே.
வழமை போலவே லக்கி லூக், ஸாராவின் கலைப்பயணத்திற்கு தடைகளைப் போடும் சூத்திரதாரியை அந்த தடைகளை எல்லாம் வெற்றி கொண்டு இறுதியில் கண்டுபிடிக்கிறார். கதையில் நகைச்சுவை இல்லாது போனாலும் கூட மொரிஸின் சித்திரங்கள் தனியாக கதை கூறி வாசகர்களை சிரிக்க வைக்கும். இந்த ஆல்பத்தில் அது காணாமல் போயிருக்கிறது எனலாம். லக்கிலூக் கதைகளில் சுமாரான கதை ஒன்றாகவே இந்த ஆல்பத்தை என்னால் கருத முடிகிறது. கலைத்தேவதையின் அமெரிக்க சுற்றுப்பயணம் லக்கிலூக்கின் விசிறிகளிற்கு சோளப்பொரி மட்டுமே! [*]
wow.. :)
ReplyDeleteஇந்த கதையை ஏற்கனவே தமிழில் படித்த சுகானுபவத்தில் சொல்கிறேன் - இது ஒரு நல்ல முயற்சியே.
ReplyDeleteகுறிப்பாக அந்த சுறா மீன் (அல்லது திமிங்கிலம்?) கட்டம் கட்டமாக குறைந்துக்கொண்டே வருவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் லக்கியின் டோட்டல் சாகசங்களுடன் ஒப்பிடுகையில் காரம் சற்று குறைவே.
தமிழில் முதலில் முழு வண்ணத்தில் 25 ருபாய் விலையில் லயன் காமிக்ஸில் வரப்போகும் இந்த புத்தகத்தினை பற்றிய ஒரு முழு நீளப்பதிவு பயங்கரவாதியின் பாசறையில் தயாராக உள்ளது.
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, வாவ் என்றால் என்ன?
ReplyDeleteவிஸ்வா, இக்கதை இயூரோ புக் நிறுவனத்தால் ஆங்கிலத்தில் வெளிவந்தது தெரியும். ஆசிரியர்கூட அந்தப் பதிப்பையே தமிழாக்கத்திற்கு பயன்படுத்துகிறார் என எண்ணுகிறேன்:) ஆனால் இக்கதையை ஏற்கனவே தமிழில் படித்ததன் மூலம் லயன் ஆபீசில் தங்களிற்கு இருக்கும் செல்வாக்கை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். நான் இதனை பிரெஞ்சு மூலத்திலேயே படித்தேன். சுகானுபவத்திற்கும் அதற்கும் வெகுதூரம். ஆசிரியர் இக்கதையை தன் புதிய முயற்ச்சியின் முதல் இதழாக தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சர்யமே- கதையை படித்து முடித்த பின்பாக- தமிழாக்கம் அசத்தும் என்று நம்புவோமாக. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. தலைவரின் பதிவிற்காக வெயிட்டிங்.
//அமெரிக்க ராமராஜன்//
ReplyDeleteஹா ஹா ஹா....
//தன் காதல் உறவுகளில் அவர் ஆண், பெண் என்ற பேதம் பார்த்ததில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.//
//கலைதேவதைக்கு ஒரு கண்ணி?//
காதலரே, தலைப்பு சரிதானே?
கண்ணியா? இல்ல, கன்னியா ? ;)
//இது ஸாரா, தன் ரசிகர்கள் மீது கொண்டிருந்த பலமான கவர்ச்சிப்பிடிக்கு ஒரு சிறிய உதாரணமாகும்.//
அடடே,புல்லரிக்குது... :P
அப்ப இது மொக்கையா?விளங்காது னு சொல்றீங்க? அப்ப சரி,அப்ப சரி...
வழக்கம் போல ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
இப்படிக்கு,
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் சங்கம்... ;)
//வெட்டிகிச்சு...
மாட்டுபய மவனே ...
திமிங்கலமா திங் பண்றான்
//
ஹாஹா... அருமை.. :)
ஏன் தல, உங்க வீட்ல கொசுத் தொல்ல கூடிப் போச்சாமே ? காது பக்கத்துல வந்து கேவலமா கி கி னு சவுண்ட் கொடுக்குதாமே? ;)
ReplyDeleteவீட்டுக்குள்ளேயே நுழைய முடியாத அளவுக்கு ராவடி பண்ணுதாமே?அப்படியா? :)
நண்பரே இலுமினாட்டி, ஆம் இங்கும் கொசுத்தொல்லை உண்டு. பயங்கரமாக ஓசையிட்டு அதைவிடப் பயங்கரமாக கடிக்கும் கொசு இங்கு உண்டு. என் உள்ளாடைகளைகூட சத்தமேயில்லாது உருவி எடுக்கும் திறமை கொண்டவைகளாக்கும் இங்கிருக்கும் கொசுக்கள். அது என்ன தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் சங்கம். நீங்கள் தலைவராகும் கனவு இப்படியாவது நிறைவேறட்டும். தலைவர் இலுமினாட்டி வாழ்க.. வாழ்க.. :)
ReplyDelete//தலைவர் இலுமினாட்டி வாழ்க.. வாழ்க.. :)//
ReplyDeleteஆமா,இனிமே என் பேர தலைவர் மாமன்னர் இலுமி என்று மாற்றிக் கொள்ளப் போகிறேன்.அப்ப தான எல்லாப் பயலும் என்னய அப்படியே கூப்பிடுவான்? :)
//அது என்ன தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் சங்கம்.//
ReplyDeleteஅது ஒரு வீணாப் போன எழவு தல.. :)
அப்புறம், இந்த காக்கா தொல்ல கூட இருக்காமே.. அப்டியா?:)
ReplyDeleteநண்பரே இலுமினாட்டி, நல்ல வேளையாக இங்கு காகங்கள் அதிகம் இல்லை. ஆனால் எக்கசக்கமான புறாக்கள் இருக்கின்றன. நகர சேவை அவற்றை பெருகாமல் தடுப்பதற்காக திணறிக் கொண்டிருக்கிறது.
ReplyDelete//இங்கு காகங்கள் அதிகம் இல்லை. //
ReplyDeleteஅப்படி தெர்லையே. ;)
தமிழ் காமிக்ஸ் ரசிகர் சங்க தலைவர் மாமன்னர் இலுமினாட்டி ஒழிக.. ஒழிக.. ஒழிக
ReplyDelete/* அமெரிக்க ராமராஜன் லக்கி லூக்கை */
ReplyDeleteகாதலரே,
இப்படியா ராமராஜன் வீரதீரத்தை சாடுவது...அவரின் ஒரு பாட்டுக்கு ஈடாகுமா லக்கியின் துப்பாக்கியின் வேகம்???????????
// பாதுகாப்பிற்கு பொறுப்பாக அமெரிக்க ராமராஜன் லக்கி லூக்கை //
ReplyDeleteகோசினியும் மோர்ரிசும் கேள்விப்பட்டார்கள் என்றால் நொந்து நூடுல்ஸாகி விடுவார்கள் காதலரே :))
.
kanavukalin kathalare valga! yenenil varapogum comicsin kathaiyai veliyittamaikaga...............illumi, neer yen maraimuga thakuthalil irangugireer.............K.K. appdiye, innum veli varatha "Pul veliyil oru mul veli" , "Nadodigal naalvar" , "Oru yennai vayal padalam" , & "Pisasu nagaram" aagiya kathaigalin vimarsanathaiyum veliyittu kalai sevai seiviraaga! scan-kaluku nan poruppu.... P.S; idhu, sombu alla.................................................. mr.r.s.k.
ReplyDeleteசுகானுபாவம் கிடைக்கவேண்டுமெனில், இது அடல்ட்ஸ் ஒன்லி காமிக்ஸாக வெளிவந்தால் மட்டுமே உண்டு :-)
ReplyDeleteஅட இந்த ஐடியா நல்லா இருக்கே? யாரையாவது ஓவியரைப் பிடித்து, லக்கி லூக்கை அடல்ட்ஸ் ஒன்லி பாணியில் படம் வரைந்து வெளியிடுமாறு காதலரைக் கேட்டுக்கொள்கிறேன் :-)
ReplyDelete//அட இந்த ஐடியா நல்லா இருக்கே? யாரையாவது ஓவியரைப் பிடித்து, லக்கி லூக்கை அடல்ட்ஸ் ஒன்லி பாணியில் படம் வரைந்து வெளியிடுமாறு காதலரைக் கேட்டுக்கொள்கிறேன் :-)//
ReplyDeleteஏற்கெனெவே சில பல காமிக்ஸ் வந்துள்ளது! இனையத்தில் தேடினால் இன்பம் கிடைக்கும்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நண்பர் லக்கி லிமட், நம் கவ்பாயின் பாடலை மறக்க முடியுமா :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் nis, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் சிபி, அவர்கள் செய்யாத கொடுமையையா நாம் செய்துவிடப்போகிறோம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் r.s.k. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. நீங்கள் கூறியிருக்கும் கதைகளின் மூலங்களின் பெயர்களை தாருங்கள் முயற்ச்சி செய்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி. இலுமினாட்டி ஒழிக!
நண்பர் கருந்தேள் சுகானுபவ காமிக்ஸ் அனுபவத்திற்கு தயாராகுங்கள் :) இலுமினாட்டி விரைவில் ஒரு கதையை பதிவிடுவதாக கூறியிருக்கிறார். விரைவில் என்றால் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
தலைவர் அவர்களே, சுகானுபவ பவ :)
தொடர்ந்து இரண்டாவது பதிவையும் காமிக்ஸ் பதிவாக இடும் காதலருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete//லக்கி லூக்கை அடல்ட்ஸ் ஒன்லி பாணியில் படம் வரைந்து வெளியிடுமாறு காதலரைக் கேட்டுக்கொள்கிறேன் //
ஏதாவது லேடி கதாபாத்திரத்தை டிரை பன்னுங்களேன் பிளீஸ்
மேற்படி நடிகையின் முடி அழகைப் பார்த்து சிலர் பொறாமைப் படுவதாக ரகசியத் தகவல்!
ReplyDeleteகாதலரே, லக்கிலூக் கதைகளில் சரித்திர நிகழ்வுகளை பிண்ணி பிசைந்து கற்பனை கதையோட்டத்தில், நகைச்சுவை கலந்து வெளியிடுவது சிறப்பு என்றாலும், அப்பாணி மோரீஷ் காஸினிக்கு மற்றுமே கைவந்த கலை என்பதை நிரூபிக்கும் இன்னொரு பாகம் இந்த ஸாரா கதை. உங்கள் விமர்சனம் அதை நாடி பிடித்து பார்த்திருக்கிறது. வார இறுதியில் மொக்கை கதைகளை விரயம் செய்வதற்கு இந்த கதையை தானா தேர்ந்தெடுத்தீர்கள்.
ReplyDeleteயூரோ புத்தகத்தினரின் இந்திய வெளியீடில், இதையும் கண்டேன், ஆனால் ஏனோ கதையின் முடிவு வரை படிக்க கூட மனம் லயிக்க மாட்டன் என்கிறது. லயன் காமிக்ஸில் இதை தமிழில் எப்படி செதுக்கினாலும், அது சிறப்பாக வெளிவரமுடியுமா என்பது சந்தேகமே... இதற்கு பேசாமல் அவர்கள் ஏற்கனவே ஆங்கில மொழிமாற்றம் செய்யபட்ட பழைய ஆல்பங்களை தேர்ந்தெடுத்திருந்தக்கலாம்.
ஒரு ஸ்டார், வெறும் சித்திர தரத்திற்கு மட்டுமே கொடுக்க முடியும்.
பி.கு.: மொழிமாற்றத்தில் பேட்டை பாஷை... நல்லாந்தீச்சு நைனா. 2 பக்கா புல்லா ஜிரிப்புதான். :)
நண்பர் சிவ், சவிதா மாமியின் கதை ஒன்றை பதிவாக இடலாம் என்பது குறித்து மாநாடு நடக்கிறது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் அவெ அவர்களே, அட அதுவே டோப்பாககூட இருக்க வாய்ப்பிருக்கிறதே. மேலும் முடியின்மையிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ரஃபிக், நான் தேர்ந்தெடுக்கவில்லை, விதி விளையாடிவிட்டது. தமிழில் மொழிபெயர்ப்பில் புகுந்து விளையாட--- நாடக வசனங்கள்--- நல்ல வாய்ப்பிருக்கிறது உதாரணமாக
பிரான நாதா[ ஜோஸ்], என் அழகிய மார்புகள் உனக்காக துடிக்கின்றன, துவள்கின்றன, துளிர்க்கின்றன.. ஆனால் உன் கொடிய விரல்களோ அவற்றை கொடிய விஷம்போல் விலத்துவது ஏனோ :)
தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/12/blog-post_09.html
நன்றி!
நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமி, நன்றி.
ReplyDeleteகாதலரே அடுத்த பதிவும் ஒரு காமிக்ஸ் பற்றியதாக போட்டு
ReplyDeleteஒரு ஹாட் ட்ரிக் பதிவாக ஏன் போடக்கூடாது :))
.
நண்பர் சிபி, எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன, பதிவும் தயார் ஆனால் தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் சங்கத் தலைவர் மாமன்னர் இலுமி என்று அழைக்கப்படுபவர் எனக்கு கொலை எச்சரிக்கை விடுத்ததால்- உண்மையில் இவர் ஒரு தமிழ் காமிக்ஸ் விரோதி- உயிரிற்கு பயந்த சமான்யனாக பதிவுகளை இடமால் இருக்கிறேன் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete//எனக்கு கொலை எச்சரிக்கை விடுத்ததால்-//
ReplyDeleteஇந்த மாதிரியான காரியங்களில் எல்லாம் இலுமி ஈடுபட மாட்டார் என்றும்,எச்சரிக்கை விடுக்கும் பழக்கமே இலுமிக்கி கிடையாது என்றும், ஒரே அடியாய் போட்டுத் தள்ளுவது தான் அவருக்கு தெரியும் என்றும்,அதனால் இந்த முழுப்பொய்யை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். :)
நண்பர் இலுமினாட்டி, கொலை எச்சரிக்கையை அகற்றிய தாராள மனதிற்கு நன்றி.
ReplyDelete