க்ரூ, அகில உலகின் வில்லாதி வில்லானாக, பிறர் கண்டு அஞ்சி நடுங்கும் பொல்லாதவனாக இருக்க விரும்புகிறான். அவனது இந்த விருப்பை நிறைவேற்ற வயதுபோன டாக்டர் நெஃபாரியோவின் கில்கில் கண்டுபிடிப்புக்கள் துணை நிற்கின்றன. ஆனால் க்ரூவின் லட்சிய பாதையில் குறுக்கே வருகிறான் வெக்டர். புதிய தலைமுறையின் இளம் பிரதிநிதியான வெக்டரின் ஜிகிடித்தனங்கள் க்ரூவை உலகின் மாபெரும் வில்லானகும் லட்சிய பாதையில் பின்னடைய செய்கின்றன. வெக்டரை போட்டியில் பின்னுக்கு தள்ள விரும்பும் க்ரூ, நிலவைத் திருடி விட திட்டம் தீட்டுகிறான். கில்லாடி வெக்டரை கவிழ்க்கும் திட்டத்தில் பயன்படுத்தும் நோக்கில் மூன்று அனாதை சிறுமிகளையும் க்ரூ தத்தெடுத்துக் கொள்கிறான்….
பிறர் மனதில் இடம்பிடிப்பதற்கு வில்லத்தனத்துடன் கூடிய அசரவைக்கும் சாகசங்களை விட பாசம் நிறைந்த அன்பு போதுமானது என்பதை நகைச்சுவையுடனும், நெகிழவைக்கும் தருணங்களுடனும் பார்வையாளர்களிடம் எடுத்து வருகிறது யூனிவெர்சல் ஸ்டுடியோ வெளியீடாகிய Despicable Me எனும் இந்த 3D அனிமேஷன் திரைப்படம். இயக்குனர்கள் Chris Renaud மற்றும் Pierre Coffin இயக்கத்தில் இத்திரைப்படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கண்களை அகல விரித்து வியக்க வைக்கும் அனிமேஷன் உத்திகளோ, அதிரடியான காட்சி அமைப்புக்களோ இன்றி காதல் கொண்ட அருவிபோல் நிதானமான வேகத்தில் நகரும் இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் தங்கள் மென்மையால் ரசிகர்கள் மனதை வேகமாக வந்தடைகிறார்கள்.
சிறுவயது முதல் நிலவிற்கு செல்லும் ஆசையை தன் மனதில் இருத்தி வளரும் க்ரூ, அதற்காக நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளிற்கும், கனவுகளிற்கும் அவன் சொந்த தாயிடமிருந்துகூட ஊக்கம் கிடைப்பதில்லை. சிறுவயதில் அவனின் ஒவ்வொரு முயற்சிக்கும் கிடைப்பது ஏளனப் புன்னகையுடன் கூடிய க்ர்ர்ர்ர் எனும் உறுமல் மாத்திரமே. ஆனால் அவன் தன் கனவைக் கைவிடுவதாக இல்லை. உதாசீனங்கள் அவன்மீது ஏற்படுத்திய வடு அவனுடன் கூடவே வளர்ந்துவிடுகிறது. பிறர் கவனத்தை தன் பக்கமாக திருப்ப வேண்டும் எனும் ஏக்கத்தை மெளனச் செடியாக தன்னுள் வைத்திருக்கிறான் க்ரூ. இதனால் பிறர் தன்னைக் கண்டு அஞ்சும் அளவிற்கு அவன் தன்னை மெல்ல மெல்ல மாற்றிக் கொள்கிறான். அச்சம் மூலம் அவன்மீது பிறரின் கவனத்தை திருப்ப முனைகிறான் க்ரூ. ஆனால் அவன் மனதிலோ தீமை இல்லை. தன்னை ஒரு பொல்லாதவனாக காட்டி பிரபலமாக இருப்பதே அவன் நோக்கம். இந்தப் போலி பொல்லாதவன் பாத்திரத்திற்கு உருவம் தந்திருக்கும் க்ரூ ஒரு சிறப்பான படைப்பு.
பெங்குவின் போல் தோற்றம் தரும் க்ரூவும், அவனது நடையும், உடையும், வில்லத்தனங்களும் சிரிக்கவே வைக்கின்றன. க்ரூவின் வில்லத்தனங்களோடு கைகோர்த்துக் கொண்டு வரும் Despicable Me எனும் பாடலின் இசை, ஜேம்ஸ்பாண்ட் தீம் இசைபோல் ரசிக்க வைக்கிறது. பிரெஞ்சு மொழியில் க்ரூ பாத்திரத்திற்கு குரல் வழங்கியிருக்கும் கலைஞரான Gad Elmaleh பிய்த்து உதறியிருக்கிறார். அவரது தனித்துவமான மொழி உச்சரிப்பு க்ரூவின் மீதான கவர்ச்சியை கணிசமாக அதிகரிக்க செய்கிறது.
ஜேம்ஸ்பாண்டிற்கு புதிய புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கி தரும் Q போலவே க்ரூவிற்கு வாய்த்த அரிய பொக்கிஷம்தான் டாக்டர் நெஃபாரியோ. அவரின் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் பார்வையாளனை சிரிப்பு டைனமைட்டுகளாக கொளுத்துகின்றன. க்ரூ கேட்பதை சரியாகப் புரிந்து கொள்ளாது அவர் உருவாக்கும் அயிட்டங்கள் கலகலக்க வைக்கின்றன. படு சீரியஸாக டாக்டர் நெஃபாரியோ ஆராய்ச்சியில் ஈடுபடும் காட்சிகள் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. க்ரூவிற்கும், டாக்டர் நெஃபாரியோவிற்கும் அடிபொடிகளாக வரும் மஞ்சள் வண்ண மினியோன்கள் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வணக்கம் வரை அடிக்கும் அபத்த லூட்டிகள் ரசிக்கவைக்கின்றன.
மிகவும் கூலான வாலிப வில்லனாக அறிமுகமாகும் வெக்டர் பாத்திரம் துரதிர்ஷ்டவசமாக அதிக ஈர்ப்பை ஏற்படுத்த தவறிவிடுகிறது. ஆனால் க்ரூவின் வாழ்வின் போக்கையே மாற்றி அமைக்கப் போகும் அனாதை சிறுமிகளில் அன்னியெஸ் எனும் சிறுமியின் பாத்திரப் படைப்பு அருமை. உடனே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல் மென்மையான தேவதைக் குறும்புகளோடு உலாவரும் அன்னியெஸ் பல தருணங்களில் மனதை நெகிழ வைத்து விடுகிறாள்.
அந்த மூன்று அனாதைச் சிறுமிகளிற்கும் க்ரூவிற்கும் இடையில் பிடிவாதமாக வேர்விட ஆரம்பிக்கும் உறவுதான் படத்தின் பலமான அம்சம். தத்தெடுக்கப்பட்ட சிறுமிகளால், அன்பு என்பது அரிதான ஒன்றாக இருக்கும் க்ரூவின் வாழ்க்கை மெதுவாக மாற்றம் பெற ஆரம்பிக்கிறது. அன்பையும், அரவணைப்பையும் வேண்டும் சிறுமிகளிற்கு அதனை தர மறுக்கும் க்ரூ, அவனையறியாமலே அவற்றை அச்சிறுமிகளிற்கு வழங்க ஆரம்பித்து விடுகிறான். படிப்படியாக ஒரு பொறுப்பான தந்தையாக அவன் மாற்றம் கொள்கிறான். சிறு வயதில் அவனிற்கு கிடைத்திருக்காத அன்பை அவனிடமிருந்து எதிர்பார்த்து அவனை சந்தேகத்துடன் பார்க்கும் மூன்று சிறுமிகளும் இயல்பாகவே அவனை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிறுமி அன்னியெஸ், க்ரூ மீது காட்டும் அன்பு அசர வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த அழகான உறவின் மலர்ச்சி ரசிகனை மென்மையாக ஆனால் உறுதியான வகையில் இபாத்திரங்களுடனும், திரைப்படத்துடனும் பிணைத்துவிடுகிறது. ஆனால் தன் லட்சியக் கனவா இல்லை பாசமா எனும் கேள்வி க்ரூ முன் எழுகையில் அவன் எடுக்கும் முடிவு அவன் வாழ்வையே மாற்றி விடுகிறது.
வெக்டரின் மாளிகைக்குள் பொருட்களை சிறிதாக்கும் துப்பாக்கியை திருடப்போகும் காட்சிகள், நிலவைத் திருடியபின் நடக்கும் உச்சக்கட்டக் காட்சிகள் என்பன நல்ல விறுவிறுப்பை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சிறுமிகளிற்கும், க்ரூவிற்கும் இடையில் வரும் புத்தகம் படிக்கும் காட்சிகள் மனதை அள்ளி எடுக்கின்றன. க்ரூவின் நடனம்கூட ரசிக்ககூடியதாகவே இருக்கிறது. க்ரூ நிலவைத் திருடியவன்தான் ஆனால் அவன் வாழ்வை பூரணமான ஒன்றாக மிளிர வைப்பது அன்பு மட்டுமே. Despicable Me, ஆர்பாட்டங்கள் அற்ற, தொடுவது தெரியாமல் உங்களைத் தொட்டுவிடும் ஒரு நுண் தென்றல். [***]
பிரெஞ்சு ட்ரெயிலர் [ காட் எல்மலேயின் மொழி உச்சரிப்பிற்காக]
mein hu ek....
ReplyDeleteமெயின் ஹூ நா... அடச்சீ.. மெயின் ஹூ தோ..
ReplyDeleteஅந்த ரேப் டிராகன் ஃபோட்டோ கமெண்ட்டு சூப்பரு !
ReplyDeleteஇந்தப் படத்துக்கு வெயிட்டிங்கி... ஒரிஜினல் டிவிடிக்கி
ReplyDeleteசூப்பரப்பு....
ReplyDeleteஇப்பதான் என்னய மாதிரி ஆட்களுக்கு ஏத்த மாதிரி ஒரு பதிவு...trailerல் பிரம்மாண்ட அனிமேஷன் இல்லாட்டியும் அனைவரையும் கவரும் எளிமைத் தன்மை இருப்பதாக தெரிகிறது...பார்த்திருவோம்...
யாருங்க அது பி.பா கருந்தேள் அவர்களா...பி.பா னா
ReplyDeleteபின்னுட்டங்களுக்கு பதில் போட மாட்டாங்கன்னு ஊருக்குள பேசிக்கிறாங்களே..நிஜமா...
//பின்னுட்டங்களுக்கு பதில் போட மாட்டாங்கன்னு ஊருக்குள பேசிக்கிறாங்களே..நிஜமா...//
ReplyDeleteஆஹா... எண்ணிக்கி இப்புடி ஒரு அவப்பெயர் வந்ததோ, இனிமேல் நானே பின்னூட்டங்களையும் போட்டுவிடுகிறேன் ;-)
//இப்பதான் என்னய மாதிரி ஆட்களுக்கு ஏத்த மாதிரி ஒரு பதிவு//
ReplyDeleteஅதென்ன?? உங்களுக்குத் தான் ரேப் டிராகனில் ஒரு பாத்திரமே தயார் ஆகி வருகிறதே.... !
காதலரே - புரட்சி வீரன் ரஃபீக்குக்கு ஒரு தொலைந்து போன தம்பி உண்டல்லவா.. (ஹலோ.. நான் பிரதரைச் சொன்னேன்)... அந்தப் பாத்திரத்துக்கு ஆள் ரெடி :-)
தல...
ReplyDeleteஇந்த பிஞ்சு நெஞ்சு தாங்குமா...
(கவனிங்க..நெஞ்சு)
ட்ரெய்லர் ரொம்ப நல்லாயிருக்கு. விமர்சனமும் சூப்பர்!
ReplyDeleteநண்பர் கொழந்த, எளிமையான ஆனால் நல்ல உணர்வுகளை தூண்டும் படைப்பு. உங்கள் வசதிப்படி பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் கருந்தேள், நண்பர் கொழந்தையை இரண்டாம் பாகத்தில் மர்மயோகி ஆக்கிவிடலாம் :)அவரின் பிஞ்சு நெஞ்சு தாங்கும் வகையில் அப்பாத்திரத்தை உருவாக்கி உலாவரச்செய்யலாம் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் எஸ்.கே, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
நண்பரே, பகிர்வுக்கு நன்றி அவசியம் பார்த்துவிடுகிறேன்
ReplyDeleteநண்பர் வேல்கண்ணன், நன்றி. கண்டிப்பாக பாருங்கள்.
ReplyDelete// வாழ்வை பூரணமான ஒன்றாக மிளிர வைப்பது அன்பு மட்டுமே //
ReplyDeleteசரியாக சொன்னீங்க காதலரே
கண்டிப்பாக பாத்துடுவோம் :))
.
நண்பர் சிபி, நன்றி.
ReplyDelete