ஆபத்திற்கு பாவமில்லை
மன்னன் குத்தலகேசியின் ஆலோசனை மண்டபத்தை ராஜ மந்திரவாதி கருந்தேள் அடைந்தபோது மந்திரி குத்துப்பிடி அவனை வரவேற்றார்.
- வாருங்கள் மந்திரவாதி அவர்களே, தாங்கள் அணிந்திருக்கும் நவநாகரீக உடைகளின் அழகு என் மனதில் பொறாமையை உண்டு பண்ணுகிறது என்றவாறே ஒரு ஆசனத்தை காட்டினார் மந்திரி குத்துப்பிடி.
மன்னன் குத்தலகேசியை வணங்கிய மந்திரவாதி கருந்தேள், மந்திரி காட்டிய ஆசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டான்.
- மதிப்பிற்குரிய மந்திரவாதி அவர்களே, நேற்றிரவு ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தேறி விட்டது என்று கூறியவாறே மதுக்குப்பிகள் இருக்கும் பக்கம் நகர்ந்த மந்திரி குத்துப்பிடி, மந்திரவாதி கருந்தேளிற்கு பிடித்தமான வெள்ளை மதுவை ஒரு கிண்ணத்தில் ஊற்றினார்.
- ஒலையைப் படித்தீர்களா என்ற குத்தலகேசி, குத்துப்பிடியை நோக்கி தன் குவளையை உயர்த்தி சைகை காட்டினார்.
இல்லை என்று உண்மையைக் கூறினால் மன்னனை அவமதித்தது போலாகும் என்பதை நன்கறிந்திருந்த ராஜ மந்திரவாதி
- படித்தேன், குந்தவி கடத்திச் செல்லப்பட்டது அறிந்தேன் எனக் கூறிமுடித்தவாறே மந்திரி குத்துப்பிடி வழங்கிய மதுக்கிண்ணத்திலிருந்து ஒரு மிடறு இழுத்தான். பக்குவமான பதத்தில் இருந்த வெள்ளை மது, நாக்கிலும், அண்ணத்திலும் கிச்சு கிச்சு மூட்டியது.
- விடயம் குந்தவி சம்பந்தப்பட்டதால் அவளால் பாதிக்கப்பட்ட ஒற்றர் படையையோ, நம் வீரர்களையோ இதில் நம்பி பொறுப்பை ஒப்படைக்க முடியாது. குந்தவி என்றதுமே அவர்கள் காரியத்தை தாமே விரும்பிக் கெடுப்பார்கள். எனவே எமக்கு உங்கள் உதவி தேவை மந்திரவாதி அவர்களே என்றார் குத்துப்பிடி.
வெள்ளை மதுவை மீண்டும் சுவைத்த மந்திரவாதி கருந்தேள், மது சிலவேளைகளில் சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது அதுவே எல்லை மீறும் போது மனிதனையே சிதைத்து விடுகிறது, என்ன விசித்திரம் என்று எண்ணியபடியே மந்திரியைப் பார்த்து
- இதற்கு ஒரு வழி இருக்கிறது மந்திரியாரே என்றான்.
- என்ன வழி? மந்திரி குத்துப்பிடியின் குரலில் ஆர்வம் குழைந்தது.
- கூலிப்படையை நாடுவது என்ற மந்திரவாதி கருந்தேள், காதும் காதும் வைத்தபடி காரியத்தை முடிக்க வேண்டுமானால் அதற்கு திறமையான ஆசாமிகள் தேவை என இழுத்தான்.
மந்திரி குத்துப்பிடியின் விழிகளும், மந்திரவாதியின் விழிகளும் நேரிற்கு நேர் சந்தித்துக் கொண்டன. மந்திரி குத்துப்பிடிக்கு கருந்தேள் எங்கு வருகிறான் என்பது மெல்லப் புரிய ஆரம்பிக்கவே சற்றுப் பயம் கலந்த குரலில் – அவர்களா என்றார்.
- அவர்களேதான் என்று பதிலளித்தான் கருந்தேள்.
- அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று தயங்கினார் குத்துப்பிடி.
- ஆபத்திற்கு பாவமில்லை என்ற மந்திரவாதியின் மதுக்கிண்ணம் காலியாகி இருந்தது.
மந்திரவாதியும், மந்திரியும் பேசுவதை, உன்னிப்பாக மதுவைக் குடித்தபடியே காதில் போட்டுக் கொண்டிருந்த மன்னன் குத்தலகேசி, யார் அவர்கள்? என்ற கேள்வியை அவ்விருவரையும் நோக்கி வீசினான்.
- மன்னர் பெருமானே, மிகவும் மோசமான கடற்கொள்ளையர்கள் அவர்கள் என மந்திரி குத்துப்பிடி அளித்த பதிலில் நடுக்கம் விளையாடியது.
- கடற்கொள்ளையர்களா!? என்று வியந்த மன்னன் குத்தலகேசி, அவர்களை நாம் எங்கு சென்று பிடிப்பது மந்திரவாதியே என்றவாறு தன் ஆசனத்தில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
தனது கடல் நீல வண்ண மேலங்கிக்குள் இருந்து ஒரு வெண்ணிற துணியை எடுத்த மந்திரவாதி கருந்தேள், அதனை ஆலோசனை அறையில் இருந்த மேசைமீது விரித்தான். நீள் சதுர வடிவில் அந்த வெண்ணிறத் துணி அமைந்திருந்தது. அவனது விரல்கள் அத்துணியின் மீது சில புள்ளிகளில் அழுத்தின, சில இடங்களில் கோடுகள் வரைந்தன. மெல்ல மெல்ல அந்த வெண்ணிறத் துணி உயிர் பெற ஆரம்பித்தது. சட்டகம் ஒன்றிற்குள் ஒரு காட்சி விரிய தொடங்கியது.
- மோசமானவர்கள், மிக மோசமானவர்கள் எனும் சொற்களை துணியைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரவாதி கருந்தேளின் உதடுகள் மெதுவாக முணுமுணுத்தபடியே இருந்தன.
[தொடரும்]
haiya me the 1st
ReplyDelete// மது சிலவேளைகளில் சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது அதுவே எல்லை மீறும் போது மனிதனையே சிதைத்து விடுகிறது //
ReplyDeleteஅஹா என்னே ஒரு தத்துவம் !!!!!!!!!
// - அவர்களேதான் என்று பதிலளித்தான் கருந்தேள். //
போச்சுடா சாமியோவ் அடுத்து யாரோட தல உருள போகிறதொ தெரியல :))
அந்த பகவானுக்கே வெளிச்சம் !!
அடச்சே!மீ த செகண்டுதான்!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
//மந்திரவாதி கருந்தேளிற்கு பிடித்தமான வெள்ளை மதுவை ஒரு கிண்ணத்தில் ஊற்றினார்.//
ReplyDeleteவெள்ளை மதுவா?!! அப்போ காய்ச்சுன சரக்கையா கருந்தேள் குடிக்கிறாரு?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//மோசமானவர்கள், மிக மோசமானவர்கள் எனும் சொற்களை துணியைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரவாதி கருந்தேளின் உதடுகள் மெதுவாக முணுமுணுத்தபடியே இருந்தன.//
ReplyDeleteஎன்னையா,இது புது ட்விஸ்டா இருக்கு?
//விடயம் குந்தவி சம்பந்தப்பட்டதால் அவளால் பாதிக்கப்பட்ட ஒற்றர் படையையோ, நம் வீரர்களையோ இதில் நம்பி பொறுப்பை ஒப்படைக்க முடியாது. குந்தவி என்றதுமே அவர்கள் காரியத்தை தாமே விரும்பிக் கெடுப்பார்கள். எனவே எமக்கு உங்கள் உதவி தேவை மந்திரவாதி அவர்களே என்றார் குத்துப்பிடி.//
ஹி ஹி ஹி ஹி...
என்னா ஒரு வில்லத்தனம்..... :)
//கருந்தேளிற்கு பிடித்தமான வெள்ளை மது//
ReplyDeleteபாயிண்ட்டைப் பிடித்தீர்கள் காதலரே . . வெள்ளை ரம் - அது ஒரு மந்திரம் . .ஸ்லர்ர்ர்ர்ர்ர்ப்!!
//மந்திரவாதியின் மதுக்கிண்ணம் காலியாகி இருந்தது//
ஆஹா. . இது என்ன ராஜதுரோகம் . . நிரப்புங்கள் குவளையை ( அதாவது அண்டாவை) . .
//வெள்ளை மதுவா?!! அப்போ காய்ச்சுன சரக்கையா கருந்தேள் குடிக்கிறாரு?!!
//
@ பயங்கரவாதி - அதையும் ருசிக்க ஆசைதான் . . ஆனா திரீரென்று கண்ணு குருடாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே அந்தப் பக்கம் இன்னும் போகவில்லை :-)
என்னங்க கருந்தேள்.. மலையாள படத்துல ஷகீலாவுக்கு வெயிட் பண்ற மாதிரி, குந்தவிக்கு வெயிட் பண்ண வேண்டியிருக்கு.. சீக்கிரம் தேடிக்கண்டுபிடிங்க..
ReplyDeleteஅடப்பாவி ஜெய் . . ஷகீலாவும் குந்தவியும் ஒண்ணா? குந்தவியின் ஃபோட்டோ, முந்தைய ஒரு பதிவில் வந்துள்ளது.. :-) அவளது சைசையும் ஷகீலாவின் சைசையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் !! :-)
ReplyDeleteநண்பர் சிபி, பகவானை விட்டு விடுங்கள் இல்லையேல் அவர் தலையும் உருளும் :) முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteதலைவர் அவர்களே, மந்திரவாதி கருந்தேள் அவர்கள் அவராகவே மது தயாரிக்கும் ஆற்றல் கொண்டவர்தான் எனினும் அடக்கம் காரணமாக ரம், வோட்கா, ஜின் முதலிய வெள்ளை மதுவகைகளை சுவைப்பதில் பிரியம் கொண்டவர். காய்ச்சுன சரக்கு பற்றிய அவர் அபிப்பிராயம் அதிர்ச்சியை தருகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் இலுமி, ஒரு ஆடு பூசாரியிடம் வந்து என்னப்பா என்னை வெட்டாமல் வேறு எங்கோ கத்தியை காட்டிக் கொண்டு நிற்கிறாய் என்று கேட்டதாம், அதற்குப் பூசாரி மன்னித்துவிடு ஆடே, உன் கடமையுணர்ச்சி என்னை கண்கலங்க வைத்து விட்டது இதோ வருகிறேன் என்றாராம் :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
மந்திரவாதி கருந்தேள் அவர்களே, ஆம் ரம், மந்திரம், சுவைத்தால் நன்றாக வேலை செய்யும் எந்திரம். கிண்ணங்கள் நிரப்பப்படும் :)) கண்ணைக் குருடாக்கும் கொடிய மதுவா, ஹா... நினைத்தாலே உடல் பதறுகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் ஜெய், யாரைக் காப்பாற்ற சொல்கிறீர்கள் மந்திரவாதி கருந்தேள் ரஃபிக்கை அல்லவா குந்தவியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
குந்தவி, ஷகீலா ... சைசை ஒப்பிடுக ?
ஒன்று ரோட்டு ரோலர் மற்றது தென்றல் கொடி
ஒன்று ஆலமரம் மற்றது நளினமான வெத்திலைச் செடி
போதுமா இன்னும் வேண்டுமா
ரசிகர்களின் கேள்விக்கு பதிலை நல்கிய அய்யா அரண்மனை வைத்தியர் ஏழு அவர்களிற்கு என் மனதார்ந்த நன்றி.
//ஒரு ஆடு பூசாரியிடம் வந்து என்னப்பா என்னை வெட்டாமல் வேறு எங்கோ கத்தியை காட்டிக் கொண்டு நிற்கிறாய் என்று கேட்டதாம், அதற்குப் பூசாரி மன்னித்துவிடு ஆடே, உன் கடமையுணர்ச்சி என்னை கண்கலங்க வைத்து விட்டது இதோ வருகிறேன் என்றாராம் :))//
ReplyDeleteஅடடே,அதுக்குள்ள என் என்ட்ரி வந்துருச்சா? :)
ஆஹா!!! மக்களே!
அடுத்ததாக அறிமுகம் ஆகப் போகும் இலுமிக்கு ஆரவாரத்தோடு கரகோஷம் எழுப்புங்கள்.... :)
என்ன க.க....(அட,கெட்ட வார்த்தை எல்லாம் கிடையாதுங்க...) :)
ReplyDeleteஇவ்ளோ சீக்கிரம் என் என்ட்ரிய வச்சுடீங்க?
கொஞ்ச நாள் ஆகும்னு நீங்க சொல்லல?சரி சரி,அப்புடியே,நம்ம அப்பாவி ஆடு ஜெய்(ஹிஹிஹி) மஞ்சத்தண்ணி,மாலை சகிதமா ஆர்வமா நிக்கிது...
அதை அடுத்து கவனிங்க....போதாகுறைக்கு ஆடு குந்தவிய வேற பாக்கணும்னு ஆசைப்படுது...
ஏதோ கடைசி ஆச போல இருக்கு!!
பாத்து பதவிசா போடுங்க,அதுக்கு வலிக்காம... :)
ஆனா என்ன சொல்லுங்க,ஆடு வித்யாசமான ஆடு தான்... ;)
எவ்ளோ ஆர்வம்.... :)
தொடர்ந்து வாசிக்கிறேன். மிக அருமை.
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, பார்ட்டி வைக்கும் ஆட்டை இன்றுதான் பார்க்கிறேன் :)) நண்பர் ஜெய் நிச்சயமாக குந்தவியைக் காண்பார். மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அது அமைய வாய்ப்பிருக்கிறது. இந்தப் பக்கமாக தலையை நீட்டுங்கள் இலுமினாட்டி :))
ReplyDeleteநண்பர் சரவணக்குமார் அவர்களே மிக்க மிக்க நன்றி.
கொள்ளையர்கள் என்ட்ரி கொடுத்தாச்சா... அப்ப அடுத்த பாகத்துல அறிமுகம் கிடச்சிடும்... இலுமி வந்து மாட்டிக்காட்டாரு டோய்...
ReplyDeleteவெள்ளை மது என்றால் என்னாங்கோ ? சரி கருந்தேளிடமே கேட்டுக்கிறேன். :)
ரஃபிக், கடற்கொள்ளையர்கள் வர இன்னம் அத்தியாயங்கள் சில இருக்கின்றன. கருந்தேள்தான் வெள்ளை மது எக்ஸ்பர்ட். அவர் உங்களிற்கு அருமையாக விளக்கிடுவார். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDelete