வாழ்க்கை சில சந்தர்ப்பங்களை மிக அரிதாகவே உங்களிற்கு வழங்குகிறது. அந்த அரிதான சந்தர்ப்பங்களில் சிலவற்றை நீங்களே தேடிச் சென்று கண்டடைவதுண்டு. ஏனையவை நீங்கள் எதிர்பார்த்திராத தருணங்களில் பாரிஸின் பாதாள ரயில்களின் டிக்கெட் பரிசோதகர்கள் போல் மூலைகளிற்குள் ஒளிந்து நின்று உங்களை தெனாவெட்டாக எதிர் கொள்ளும். என்ன செய்வது என்ற முடிவிற்கு நீங்கள் வருவதற்குள் அந்தச் சந்தர்ப்பம் உங்களை தன் அதிர்ஷ்டக் கரங்களால் அடித்து வீழ்த்தி விடும். சுறா காவியத்தை நான் பார்த்து உவகை எய்வதற்கான சந்தர்ப்பமும் எனக்கு இவ்வாறாகவே வாய்த்தது.
பதிவுலகமே சுறாவைத் துண்டு துண்டாகக் கூறு போட்டு, பங்கு பங்காகக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்த சமயத்தில், சுறா இருக்கும் பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்ற எண்ணமே என் மனதில் ஓங்கி நின்றது. ஆனால் பதமான விஸ்கியை ஊற்ற ஊற்ற, கண்ணாடிக் குவளை கூட ஒரு அழகிய பெண்போல் தெரியும் என்பதுபோல் என் நண்பர்கள் சுறா பாருங்கள் என்று கமெண்டுகள் போட்டே சுறா மீது ஒரு ஈர்ப்பை என்னையறியாமல் என் மனதில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அவர்களிற்கெல்லாம் எப்படி நன்றி கூறப் போகிறேன்! பதிலுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்!
பரந்து விரிந்த கடலின் ஓயாத அலைகளைப் போலவே யாழ்நகர் குப்ப மக்களின் வேதனைகளும் ஒய்ந்ததில்லை. ஆனால் இருளிற்குள் உதிக்கும் சூரியனைப் போலவே அக்குப்பத்தில் வாழ்கிறான் ஒருவன். அவன்தான் சுறா. இந்த யாழ்நகர் குப்பத்தை ஒரு கொடிய அரசியல்வாதியின் பிடியிலிருந்து மீட்டு, அந்தக் குப்பத்தை எவ்வாறு பிரான்ஸ் நாட்டின் செல்வம் கொழிக்கும் அழகிய Cote d’Azur போல் மாற்றிக் காட்டுகிறான் என்பதே சுறா காவியத்தின் அற்புதமான கதை.
சுறா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் அல்லது நீந்தியிருக்கும் டாக்டர் விஜய் அவர்கள் இந்த திரைப்படத்தின் வழியாக எடுத்துக் கூற வரும் கருத்துக்கள் சமுத்திரங்களை விட ஆழமானவையாகவும், அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கின்றன.
ஒரு வாரமாக கடலில் தத்தளித்த மீனவர்களை, அவர்கள் படகுகளுடன் ஒரு தீவில் கரையேற்றுகிறான் சுறா. இங்குதான் சுறா காலத்தை உறைய வைக்கிறான். ஒரு வாரத்தின் பின்பாக கடற்படை, வான்படை போன்றவர்களினால் காப்பாற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்படும் மீனவர்களின் முகங்களில் பசியின் களைப்பையோ அல்லது கூடுதலாக துளிர்த்து விட்ட ஒரு முடியையோ நீங்கள் காட்ட முடியாது. காலத்தை சுறா கட்டிப் போட்ட விதம் அப்படி. ஊக்க மருந்து குடித்த விளையாட்டு வீரர்கள் போல் மீனவர்கள் கரையில் இறங்கி ஓடி வரும் காட்சி! அடடா. சுறா, HAITI ல் பூகம்பம் வந்தபோது நீ எங்கு சென்றிருந்தாயோ?
கடலில் புயலில் அகப்பட்ட மீனவர்களைக் காப்பாற்றிய சுறா கடலில் மறைந்து விடுகிறான். யாராலுமே அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்குதான் சுறா கிரேக்க புராணத்திற்கு கிச்சு கிச்சு மூட்டுகிறான். பெர்சி ஜாக்சன் மட்டும்தான் சமுத்திரங்களின் மடிகளிலே உலவித் திரிய முடியுமா என்று திருப்பிக் கேட்கிறான். கடல்களின் தேவன் பொசைடனுடன் கில்லி விளையாடுபவன் சுறா என்பது பல ரசிகர்களிற்கு புரியவில்லை என்பது வேதனையானது.
அதிலும் பொசைடனுடன் கில்லி விளையாடி விட்டு, டால்பின் மீன்கள்போல் பாய்ந்து பாய்ந்து சுறா கடலில் நீந்தி வருவது, உலகின் நீச்சல் வீரர்கள் எல்லாம் தம் கண்கள் குளிரப் பார்த்து, அதைப் போலவே பயிற்சியும் எடுத்து பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் சுறா நடாத்திக் காட்டும் டெமொ. அடுத்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் தமிழ் இளைஞர்களின் பெயர்களின் பின்னே பதக்கங்கள் பிரகாசிக்க வேண்டும் என்று விரும்பும் சுறாவை நாங்கள் பாராட்ட வேண்டாமா?
உலகில் பல வகையான நடனங்கள் உண்டு. ஆனால் உலகிற்கு புதிதாக ஒன்று காட்ட விரும்புகிறான் சுறா. அதற்காக அவன் கடுமையாக உழைத்திருக்கிறான். நியூசிலாந்து வீதிகளில் வேகமாக விரைந்து வந்து சுறாவைச் சப்பையாக்கி விட்டு செல்லக்கூடிய வாகனங்களையெல்லாம் துச்சமாக மதித்து அவன் ஆடும் அந்த நடனம்! கல்லறைக்குள் இருந்து Bambi பற்றி கனவு கொண்டிருக்கும் மைக்கல் ஜாக்சனையே திரும்பி குப்புற படுக்க வைக்கும் ரகம். சற்று உங்கள் காதுகளை தீட்டி நீங்கள் கேட்டால் ஜாக்சனின் மெல்லிய அழுகுரல் உங்கள் காதுகளிற்கு கேட்கும். சுறாவின் நடனம் சிவ தாண்டவத்தின் மாறுவேடம்.
மாறுவேடம் என்றால் என்ன?! ஒரு மனிதன் தன்னை அறிந்த மனிதர்களின் கண்களிற்கு வேறு ஒரு மனிதனாக தோன்றுவது. உலகப் படங்களில் எத்தனை வகையாக இதனை நாம் கண்டு களித்திருப்போம். பெஞ்சமின் பெர்ட்டன், மிஸன் இம்பொசிபில், இதயக் கனி போன்றவற்றை நாம் மறக்க முடியுமா என்ன. ஆனால் சுறா ஒரு புதிய வகை மாறுவேடத்தை நாம் வாழும் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்கிறான்.
மறு பிறப்புக்களில் உங்களிற்கு நம்பிக்கை உண்டு எனில் சுறாவில் சீக்கிய மாலுமியாகவரும் சுறா சிங் ஒரு மறு பிறப்பே. கண் மொழி, மூக்கு மொழி, விரல் மொழி, தாடி மொழி என முழுமையான ஒரு புது அவதாரம் எடுத்து உலகின் தலை சிறந்த மேக் அப் கலைஞர்களை எல்லாம் வேறு வேலை தேட வைத்திருக்கிறான் சுறா. கிரேக்க புராண அழகுச் சிட்டு மெடுஸாவின் விழிகளைப் பார்க்கும் மானுடர்கள் கற் சிலைகளாக உறைவதைப் போல் தன் ஈடிணையற்ற நடிப்பால் ரசிகர்களை அவர்கள் இருக்கும் இருக்கைகளிலேயே கற் சிலைகளாக மாற்றுகிறான் சுறா. அந்தக் காட்சியில் சுறாவின் தேனும் காரமலும் கலந்து குழைத்த குரலில் வெளிவரும் வசனங்களே அந்தச் சிலைத்தன்மையிலிருந்து ரசிகர்களை மீட்டெடுக்கின்றன.
கேத்தரின் பிகலோவாம்! ஹர்ட் லாக்கராம்! ஆஸ்கார் விருதுகளாம்! செம காமெடிதான். அணு குண்டு ஒன்றை ஐந்து செக்கனிற்குள் எப்படிச் செயலிழக்க செய்வது என்பதனை ஒரு பாடமாக நடத்திக் காட்டியிருக்கிறான் சுறா. தங்களால் மட்டுமே வெடிகுண்டுகளை நுணுக்கமான முறையில் செயலிழக்க செய்ய முடியும் என்ற மேற்குலக ஆதிக்க மனப்பான்மைக்கு அந்த ஐந்து செக்கனிற்குள் சாவு மணி அடித்து தலைகுனிய வைக்கிறான் சுறா. கேத்தரின் பிகலோ, சுறாவைப் பார்த்தார் எனில் தனது ஆஸ்கார்களை ஆஸ்கார் கமிட்டியிடம் மறு பேச்சிலாது திரும்பக் கையளிப்பார் என்பது நிச்சயம். இதே சமயத்தில் எந்தக் குண்டாக இருந்தாலும் சுறா அதனை தனியாளாக சாமாளிப்பான் என அவன் உலக வல்லரசுகளை நோக்கி விடும் ஒரு எச்சரிக்கைதான் அக்காட்சியின் உண்மையான அர்த்தம் என்பது எத்தனை பேரிற்கு புரிந்திருக்குமோ தெரியாது.
இது மட்டுமல்ல என்னும் எத்தனையோ, எத்தனையோ. சுறா ஒரு பிள்ளையார் ஆனால் நான் ஒரு வியாசன் இல்லையே. சுறா சும்மா ஒரு படமல்ல, அது ஒரு சர்வதேசக் குளோபல் பிரபஞ்ச மா காவியம். அதனை ஒரு முறை பார்த்தால் பேரானந்தம், பலமுறை பார்த்தால் பரமானந்தம். உலகின் வழமைப்படி இந்தக் அற்புதக் காவியமும் ஒரு குப்பையாகவே கருதப்படும், விமர்சிக்கப்படும். கிறிஸ்துவையே சிலுவையில் அறைந்த உலகமிது, சுறாவையா விட்டு வைக்கப் போகிறது. சுறாவைப் பார்த்தேன், என் பிறவிப் பயன் கண்டேன் எம்பெருமானே. [*******]
முடியல பாஸ்.
ReplyDeleteஉங்களுக்கு என்ன திமிர் இருந்தா.. காவியத்துக்கு வெறும் ஏழு ஸ்டார் கொடுப்பீங்க??
ReplyDeleteஎங்க ஊர்ல... ரிலீஸ் பண்ண மாட்டேங்கறாங்க.. கடங்காரப் பசங்க.
ReplyDeleteஇராமசாமி.. நாம ஒரு ஸ்ட்ரைக் பண்ணுவோமா?
விஸ்வா வந்து கமெண்ட் போடுறதுக்குள்ள... மீ த செகண்ட் போட்டுடுறேன். ;)
ReplyDeleteஅன்பு நண்பரே,
ReplyDeleteஒன்ணும் சொல்ல முடியலை. எதுவுமே தோணலை. இருந்தாலும் நான் பாக்க மாட்டேனே!
இதற்க்கு முன்பு போடப்பட்ட கமெண்ட்டுகளை எல்லாம் நம்ம நாட்டாமை (பசுபதியோட அண்ணன்) கேன்சல் செய்து விட்டதால்,
ReplyDeleteமீ த பஸ்ட்.
me the 4th
ReplyDeletewill back with comments
மாறுவேடத்தை பற்றிய கருத்தை நான் வன்மையாக புறக்கணிக்கிறேன்.
ReplyDeleteஏனென்றால் கடந்த வேட்டைக்காரன் படத்திற்கும் இந்த சுறா படத்திற்கும் கூட பல வித்தியாசங்களை தன்னுடைய உடலில் காட்டியிருக்கிறார் சுறா.
குறிப்பாக கழுத்தில் தொங்கும் அந்த புலி நக டாலர். இதை விட வேறென்ன மாறுபட்டு இருக்க வேண்டும்?
அதிலும் பணக்காரனாக மாறும்போது அவரின் சட்டைகளை கவனித்தீர்களா?
A. சரக்கை எடுக்கும்போது வெள்ளை நிறம்.
B. கைமாற்றும்போது புரோக்கரிடம் பேசும்போது கட்டம் போட்ட சட்டை.
C. பணம் வாங்கும்போது கருப்பு சட்டை.
ச்சே, மன நிலையை வெறும் சட்டை மூலம் விளக்கிய அந்த மகானை புரிந்து கொள்ள முடியாத ரசிகர்களை எண்ணி நான் மனம் நொந்து விட்டேன்.
சில படங்களை "இவை காலத்தை கடந்த படங்கள் - இன்னும் பத்து வருடம் கழித்து தான் இந்த படத்தின் மகான்மியம் புரியும்" என்று சொல்வார்கள். அந்த வரிசையில் இந்த சுறா அடத்தை, ச்சே படத்தை சாதாரண ரசிகன் புரிந்து கொள்ள இன்னும் பதிமூன்று வருடங்கள் ஏழு மாதங்கள் ஆகும்.
மற்றபடி எதிர் முரண் சிந்தனையாளர்கள், விளிம்பு நிலை கவிஞர்கள், பின் நவீனத்துவ எழத்தாளர்கள் ஆகியோருக்கு ஏற்கனவே புரிந்து விட்டதாம்.
இந்த படத்தில் இருக்கும் மற்றுமொரு மகத்தான நுண்ணரசியலை பற்றி காதலர் கூறாதது ஏனோ?
ReplyDeleteமிகவும் அருமை... பதிவுகளும் சரி உங்கள் ரசனையும் சரி... நீங்கள் என்ன செய்து கொண்டு இருகின்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா??
ReplyDeleteநண்பர் ரமசாமி கண்ணன், இதற்கே முடியவில்லை என்றால் கீழே விஸ்வா வழங்கப் போகும் நுண்ணரசியல் தகவல்களை எப்படித் தாங்கப் போகிறீர்கள் :) கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் ஹாலிவூட் பாலா, சர்வதேச ரீதியாக இந்தப் பிரபஞ்சப் படைப்பை முடக்குவதற்கான சதியின் ஒரு பகுதியே அது உங்கள் ஊரில் வெளியாகமைக்கு காரணம். ப்ளாக்கரில் கலர் தட்டுப்பாட்டினால் மேலும் நட்சத்திரங்களை வழங்க முடியவில்லை. வெள்ளை மாளிகைக்கு முன்பாகவா ஸ்டிரைக் செய்வீர்கள் :))வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.
பின்னூட்ட ஜாக்குவார் விஸ்வா அவர்களே, ரசித்து ரசித்து பார்த்து விட்டு மனதில் உங்கள் உணர்வுகளை அடைத்தா வைத்திருக்கிறீர்கள். அது என்ன நுண்ணரசியல் என்று போட்டு உடையுங்கள். தங்களின் அதிரடிக் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் சிபி, வருகைக்கு நன்றி நண்பரே.
நண்பர் வழிப்போக்கன், உங்களைப் போலவே வாழ்க்கை எனும் பாதையில் நடைபோடும் வழிப்போக்கன் தான் நான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
அடச்சே me the 5th சைக்கிள் கேப்புல இந்த விஸ்வா அண்ணன் உள்ள பூந்துட்டார்
ReplyDeleteபதிவை படித்ததும் கொஞ்ச நேரம் எதுவுமே பண்ண தோனல
என்ன ஒரு கம்பேரிசன் இங்கே சுறா அங்கே ஜாஸ்
// அதனை ஒரு முறை பார்த்தால் பேரானந்தம், பலமுறை பார்த்தால் பரமானந்தம் //
ஏதேது ஏதோ ஆஸ்ரமத்திலிருந்து பதிவு போட்டது போல தெரிகிறது
மொத்ததுல
போதும் இதோட நிறுத்திக்குவோம் .......
ஜோஸ், பார்த்தே தீருவீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பு நண்பரே.
ReplyDeleteநண்பர் சிபி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நுண்ணரசியல் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? படம் முழுவதுமே கட்டுடைப்பின் பிம்பமாகவே எனக்கு தெரிகிறது.
ReplyDeleteவேண்டுமானால் ஒன்று சொல்கிறேன்: படத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் சுறா (அதாவது சர்ச்சில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் சுறா) தன்னை அழிக்க எதிரிகள் செய்யும் சதிக்கு இரையாகி மயக்கமுற்று ஒரு அம்மன் சிலையின் அடியில் கிடக்கிறான். பின்னர் அந்த அம்மன் சிலையை தன்னுடைய புஜபல பராக்கிரமத்தால் தூக்கி அங்கிருந்து வருகிறான்.
இங்கு அம்மன் சிலை என்பது காலம் காலமாக நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கைகள் ஆகும். நம்முடைய பல பழக்க வழக்கங்களை கூட அவ்வாறு கூறலாம். அதன் அடியில் மயங்கி கிடக்கும் சுறா ஒரு சாதாரண மண்டிஹன். ஆனால் அந்த சிலையை தூக்கி விட்டு வெளிவரும் சுறா ஒரு கட்டுடைப்பு காளை. சமுதாயத்தின் பல மயக்க நிலை எண்ணங்களை தூக்கி எரிய நம்மை தூண்டும் அந்த காட்சி ஒன்று போதாதா?
இன்னும் வேண்டும் என்றால் சில சீன்களை சொல்கிறேன்.
a. அம்மன் சிலையை தூக்கி விட்டு நடக்கும் சுறா, மாலையை கழட்டி விட்டு சிவப்பு துணியை தலையில் கட்டி கொள்வது
b. பணக்காரன் ஆகிவிடும் சுறா கருப்பு கண்ணாடி அணிவது.
c. ஒரு பாடல் காட்சியில் தமன்னாவின் கால்சட்டையை கழட்டி விடுவது.
etc, etc, etc
என்று படம் முழுக்க தன்னுடைய முற்போக்கு சிந்தனை மலர்களை தூவி உள்ளார் இளைய தளபதி.
Better watch out.
விஸ்வா, பின்னி எடுத்து விட்டீர்கள். மீன் கறி வைத்து ஆண் பெண் சமத்துவத்தை சுறா எடுத்தியம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே.
ReplyDeleteஆஸ்ரமத்தை பற்றி யார் பேசியது?
ReplyDeleteஆழ்நிலை தியானத்தில் கூடுவிட்டு கூடு பாய்ந்து சுராவாக நடித்தது நானல்ல.
நானாக நானில்லை தாயே, (ரஞ்சிதா தாயே) நல்வாழ்வு தந்தாயேயே நீயே.
//ஒரு முறை பார்த்தால் பேரானந்தம், பலமுறை பார்த்தால் பரமானந்தம்.//
ReplyDeleteஅடிக்கடி பார்த்தால் நித்யானந்தம்.
ஸ்வாமி, உள்ளே இருந்து கொண்டே இவ்வளவு செய்கிறீர்களே படா கில்லாடி ஸ்வாமி நீங்கள்.
ReplyDelete//உலகின் வழமைப்படி இந்தக் அற்புதக் காவியமும் ஒரு குப்பையாகவே கருதப்படும், விமர்சிக்கப்படும். கிறிஸ்துவையே சிலுவையில் அறைந்த உலகமிது, சுறாவையா விட்டு வைக்கப் போகிறது. சுறாவைப் பார்த்தேன், என் பிறவிப் பயன் கண்டேன் எம்பெருமானே//
ReplyDeleteதேங்க் யூ வெரி மச் காதலர்.
உங்களுக்காவது என் படம் நன்றாக இருந்ததே.
ஹே பாலா, ஹவ் ஆர் யூ?
வாங்க டாக்டர் ஜோஸஃப், உங்கள் மா காவியத்தை வெறுப்பவர்களின் ஞானக் கண்கள் விரைவில் திறக்கும்.
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteஇன்னமும் பல நுண்ணரசியல் பாக்கி இருக்கிறது. இருந்தாலும் நம்ம ஒலக காமிக்ஸ் ரசிகர் ஒரு விமர்சனம் போடப்போவதால் அதனை எல்லாம் விட்டு வைக்கிறேன். அவர் இன்னமும் சுராவை விட்டு வரவில்லை.
மதியம் ஒரு உணவகத்தில் அவர் சுறாப்புட்டு சாப்பிட்டார். டைமிங்?
விஸ்வா, ஒலக காமிக்ஸ் ரசிகரின் விமர்சனம் நிச்சயமாக சுறா குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteதெலுங்கில் இந்த படத்தை சுறாலு அல்லது சுறாகாரு என்ற பெயரில் டப்பிங் செய்தால் இமாலய வெற்றி பெற்று பாலைய்யாவின் சமீப ஆந்திரா ரெக்கார்டை உடைக்கும் என்பது என் எண்ணம், உடைத்தே தீரும் என்பது திண்ணம்.
விஸ்வா, ஒன்றே சொன்னீர்கள் அதனை நன்றே சொன்னீர்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் இப்படத்தைப் பற்றி உலவும் கிண்டல் குறுஞ் செய்திகள். சுறாவின் இதயம் எப்படி வேதனை கொள்ளும் என்று அவர்களால் ஏன் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. பிரபஞ்சக் கலைஞனை ஏன் இப்படி சிலுவையில் அறைகிறார்கள். இது சுறாவை உயிரோடு தோலுரிப்பதை விட மோசமான ஒன்றாகும்.
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteகாய்க்கிற மரம்தானே கல்லடி படும்? சுராவை கிண்டல் செய்யாமல் பசுநேசன் நடிக்கும் மேதையையா கிண்டல் செய்ய முடியும்?
விடுங்க காதலரே, தீயை பஞ்சு அணைக்கும்? கிண்டல் குறுஞ்செய்திகள் அண்டம் நடுங்கும் சுறாவையா தடுக்கும்?
விஸ்வா, என்ன ஆச்சர்யம் பசுநேசன் பாடி நடிக்கும் செண்பகமே..செண்பகமே என்ற பாடலைப் பார்த்து அதில் அவரின் அபாரமான திறமையைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் அவரைப் பற்றி எழுதுகிறீர்கள். மாபெரும் சதியினால் ஒதுக்கப்பட்ட கலைஞர் அவர். சுறா லத்தின் மொழியில் வெளியாகி இருந்தால் போப்பாண்டவர் அதனை ஞாயிறு திருப்பலியின் பின் ஆலயங்களில் திரையிடச் சொல்லியிருப்பார்.
ReplyDeleteப்ளாஷ் நியூஸ்: சுறா படத்தை பற்றி கேள்விப்பட்ட ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஜாஸ் படத்தை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்ய உத்தேசித்து உள்ளாராம்.
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகரே, ஸ்பீல்பெர்க்கிற்கு தெரிவது எல்லார்க்கும் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ReplyDeleteஅருமை நண்பரே,
ReplyDeleteசிரித்து சிரித்து மாளவில்லை,இப்படி ஒரு வாய்ப்பை வழங்கியமைக்கு மிக்க நன்றி.இது போல அடிக்கடி எதிர்பார்க்கிறோம்.(அதற்கென்று சுரா பார்க்க கட்டாய்ப்படுத்தாதீர்கள்:)))
நண்பர் கார்திகேயன், நீங்கள் பார்க்கா விட்டால் வேறு யார் பார்ப்பார்கள். கோயன் சகோதரர்களின் உணர்வைக் கலந்தல்லவா சுறாவை உருவாக்கியிருக்கிறார்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDelete//மீனவர்களின் முகங்களில் பசியின் களைப்பையோ அல்லது கூடுதலாக துளிர்த்து விட்ட ஒரு முடியையோ நீங்கள் காட்ட முடியாது//
ReplyDeleteஇது . . இதேதான் அய்யா சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலீஃப் . . இத்தகைய உயரிய ஒரு தத்துவத்தைத் திரைப்படங்களில் புகுத்தி, எம்மைப்போல் ஞானசூன்யங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்து, கடைத்தேற்றிக் கொண்டிருக்கும் பண்டிதத் திலகம், டாக்டர் ஜோஸப் ச்சேண்ட்ராவைப் பற்றி எழுதப் பட்டிருக்கும் இந்தக் கட்டுரை, என் மனதைப் புண்ணாக்கியதால், நான் தியானம் செய்யச் செல்கிறேன் . . :-)
நிற்க. பசுநேசன் ஒரு மனிதருள் மாணிக்கம். அகில உலக மாடுகள் கடைத்தேற்றும் சங்கத்து அண்டத் தலைவர். அவர் புன்னகைத்துக் கொண்டே ஸ்டெப்புகள் போடும் உலக சினிமா ஒன்று விரைவில் வெளிவரப்போகிறது.. அப்படம் வெளிவந்தவுடன், தமிழகத்து ஸ்டீவன் சீகல், தமிழ்பேசும் டாம் க்ரூஸ் ஜோஸப் ச்சேண்ட்ரா பசுநேசனுடன் சேர்ந்து நடிக்கத்தான் போகிறார். . அப்போது இவ்விருவரையும் கிண்டல் செய்யும் குறுஞ்செய்தி அனுப்புபவர்கள், வாயடைத்துப் போய் ஓடப்போகின்றனர். .
சீக்கிய சிகாமணியாக வரும் சுறாவின் உயரிய மாறுவேடத்திறனை நீங்கள் வழங்கியதைப் படித்தவுடன், எனது உடலில் ஒரு மகா புல்லரிப்பு ஏற்பட்டது . . சுறாவின் இத்திறனுடன் ஒப்பிட்டால், நமது இதயக்கனி, ஒரு மருவை மட்டும் ஒட்டவைத்துக்கொண்டு, டோட்டலாக வேறு வேடத்திற்கு மாறும் திறமை எல்லாம் சுண்டைக்காய் அல்லவோ??
ReplyDeleteசுறாவும் வாளாவிருந்துவிடவில்லையே? இதோ தனது திறன்மிக்க குளோபல் நடிப்பௌ உலகுக்கே எடுத்துக்காட்ட, காவல் காரனாக வருகிறார். . அப்படத்தையும் இதே அளவு அவதானித்து, ஒரு பிரபஞ்ச விமரிசனம் எழுதவேண்டும் என்ற அன்புக்கோரிக்கையை வைக்கும் இந்த நேரத்தில், பின்னூட்டப்புலியாக மீண்டும் மாறிவிட்ட விஸ்வாவிடமும் ஒரு கோரிக்கை - சுறாவின் முந்தைய பிரபஞ்ச காவியங்களான நெஞ்சினிலே, விஷ்ணு, ராஜாவின் பார்வையிலே இத்யாதி இத்யாதி படங்களைப் பற்றி உலக ரசிகர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தினால் என்ன?
கனவுகளின் காதலரே
ReplyDeleteநீங்க சொல்லறத பார்த்தா பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல; படத்தை பாக்கலாம்; உடம்புக்கு சேதாரம் ஏதும் ஆகாதுன்னு தோணுது! ஆனாலும்... படம் பார்த்தபின் உங்களடைய எழுத்துகளிளும் விஸ்வாவின் எழுத்துகளிலும் தெரியும் ஒருவித கொலைவெறி மனதளவில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்பா...!
ஆமாம் சுறா பற்றிய பதிவில் புறாக்களுக்கு என்ன வேலை?
நண்பர் கருந்தேள், சுறா படத்தைப் பார்பதே ஒரு வகைத் தியானம்தானே. உங்கள் மனதை புண்படுத்தியதற்காக வருந்துகிறேன். பசுநேசனின் உலக சினிமாவும் உலகால் புறக்கணிக்கப்படும். ஜோஸஃப்பும், பசுநேசனும் இணைந்து வழங்கும் கோசுறா படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் கருந்தேள், அந்த சீக்கிய வேடத்தை நினைக்கையில் என் உடம்பு விறைக்க ஆரம்பிக்கிறது. என்ன ஒரு பெர்பார்மன்ஸ். யாரும் அருகே நெருங்கவே முடியாது. விஸ்வா உங்கள் ஆசையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
ReplyDeleteநண்பர் அ.வெ. அவர்களே, கலையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம், தரத்தால் தாக்கப்பட்டிருக்கிறோம். சுறாவைத் தேடி சிறகடிக்கும் காதல் புறாக்கள்தான் அவை நண்பரே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
"அதனை ஒரு முறை பார்த்தால் பேரானந்தம், பலமுறை பார்த்தால் பரமானந்தம்"
ReplyDeleteஅண்ணன் ஜெயிலில் நித்யானந்தருக்கு "சுறா" போட்டு காட்டித்தான் உண்மையெல்லாம் 'கக்க' வைக்கிறார்களாம் என்று ஒரு தகவல்.
விஜய் ஒரு மகான்.. அவர் படம் நடிப்பதே நாம் அந்த படத்தை பார்த்து கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக.. இதுவும் ஒரு வகை காமெடி தானே????????????/
சுறா படத்தை பார்த்தவர்கள் தைரியசாலிகள்... நானும் தைரியசாலிதான்....
ReplyDelete//விஸ்வாவிடமும் ஒரு கோரிக்கை - சுறாவின் முந்தைய பிரபஞ்ச காவியங்களான நெஞ்சினிலே, விஷ்ணு, ராஜாவின் பார்வையிலே இத்யாதி இத்யாதி படங்களைப் பற்றி உலக ரசிகர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தினால் என்ன?//
ReplyDeleteஎன்ன ஒரு கொலைவெறி?
கருந்தேளார் அவர்களே,
மற்ற மூன்று படங்களை பார்த்துவிட்டேன்.
ஆனால் இந்த //இத்யாதி இத்யாதி // படத்தை மட்டும் இன்னமும் பார்க்கவில்லை.
பயங்கரவாதியிடம் போன் செய்து கேட்டால் அவர் " உன்னாலே உன்னாலே" படத்தின் முதல் பாகம் தான் அந்த இத்யாதி இத்யாதி" என்று சொல்கிறார். உண்மையா?
//அதிலும் பொசைடனுடன் கில்லி விளையாடி விட்டு, டால்பின் மீன்கள்போல் பாய்ந்து பாய்ந்து சுறா கடலில் நீந்தி வருவது, உலகின் நீச்சல் வீரர்கள் எல்லாம் தம் கண்கள் குளிரப் பார்த்து, அதைப் போலவே பயிற்சியும் எடுத்து பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் சுறா நடாத்திக் காட்டும் டெமொ//
ReplyDeleteஆஹா,ஆரம்பிச் சுட்டானுங்களே... :)
//அதனை ஒரு முறை பார்த்தால் பேரானந்தம், பலமுறை பார்த்தால் பரமானந்தம்.//
சிவகாமியின் சபதம் கதையில் நாகநந்தி சொல்வாரு,”நான் பல வருடங்கள் கொஞ்சம் கொஞ்சமா விஷம் சாப்பிட்டதனால எனக்கு உடம்பில் விஷம் எதிர்ப்பு வந்துட்டு”ன்னு... இது அந்த கேசு போல......
//சுறா சும்மா ஒரு படமல்ல, அது ஒரு சர்வதேசக் குளோபல் பிரபஞ்ச மா காவியம்.//
சிக்க மாட்டான் இலுமு....
மிகவும் ரசித்தேன்.பிகருங்க போடோவ....பின்ன,சுறா படத்தையா ரசிக்க முடியும்? :)
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதற்கு ஏற்ப செயல்படும் எங்கள் “டாக்டர்” விஜய் வாழ்க.... ;)
என்னது,எப்ப நடிகன் ஆவாரா?
அட,பட்டத்துக்காகவே ஆயிரம் பேரக் கொன்னாச்சு....எப்படியாவது கோடி பேரக் கொன்னாவது அவர் நடிகன் ஆயிடுவாருங்க.... :)
ஹலோ.. ஹலோ... என் car key-யை காணலை. யாருனாச்சும் கண்டுபிடிச்சி கொடுங்க.. ப்ளீஸ்.
ReplyDeleteபதிவு பட்டாசுன்னா... பசங்களோட கமெண்ட்டெல்லாம் கன்னி வெடி...!!! :) :)
ReplyDeleteஹை.. நானும் பஞ்ச் எழுதறேன்.
//கன்னி வெடி./
ReplyDeleteஹி.. ஹி.. ஸாரி.. டச் விட்டுப் போச்சா.. அதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
ஹைய்யோ.. அப்படியே அந்தக் கமெண்ட்டை விட்டா... விஷ்வா வில்லங்கம் பண்ணுவாரு.
ReplyDelete‘கண்ணி வெடி’ என திருத்திப் படிக்கவும்.
//விஷ்வா வில்லங்கம் பண்ணுவாரு//
ReplyDeleteபாலா அண்ணே, ஒரு குழந்தையை பார்த்து இப்படி சொல்லலாமா? என்ன கொடுமை சரவணன் இது? இதுக்கு தண்டனையாக நீங்கள் உடனே சுறா தி அல்டிமேட் மூவி படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டுகிறேன். டவுன்லோட் பண்ணியாவது பாருங்க சார்.
வாழ்க்கைல சில நல்ல விஷயங்களுக்காக கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
நானும் வந்துட்டேன் நண்பரே , தலைப்பு பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி அடைந்தேன்(வெயில் வேறு அதிகமாக அடிக்கித .. அதனால யாருக்குவேணா எப்படி நடக்கலாம் எதுவும் நடக்கலாம் ) பின்பு படித்த பிறகு ஹா ... ஹா.... ஹா...
ReplyDeletegood good
ReplyDeleteசூப்பரப்பு
ReplyDeleteஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதற்கு ஏற்ப செயல்படும் எங்கள் “டாக்டர்” விஜய் வாழ்க.... ;)
ReplyDeleteஎன்னது,எப்ப நடிகன் ஆவாரா?
அட,பட்டத்துக்காகவே ஆயிரம் பேரக் கொன்னாச்சு....எப்படியாவது கோடி பேரக் கொன்னாவது அவர் நடிகன் ஆயிடுவாருங்க.... :)
This is toomuch will take action against you in soon
தலை கிர்ர்ருன்னு சுத்துடுடா சாமி
ReplyDeleteஇதிலும் தலிவர் ஒரு சாதனை படைத்து விட்டார் ஆமாம் அரை நாளில் ஐம்பது comments
ReplyDeleteஅட தலிவரின் 50 படத்துக்கு 50 வது போஸ்ட் நாந்தான் அப்படின்னு சொல்லிகிரதுல நானும்
ஜோஸஃப் ச்சேண்ட்ரா வும் பெருமிதம் கொல்கிறோம் மன்னிக்கவும் கொள்கிறோம்
// ஆஸ்ரமத்தை பற்றி யார் பேசியது? //
மன்னிக்கவும் "ஸ்வாமி குத்தானந்தா" தங்களின் தியானத்தை கலைத்ததற்காக ஆனால் சுறா படம் பார்ப்பதும் ஒருவகை தியானம்தான்
சந்தேகம் இருந்தால் விஸ்வா / ஒலக காமிக்ஸ் ரசிகன் இருவரிடமும் கேட்டு பாருங்கள்
விடிய விடிய யாருமே தூங்கல போலிருக்குதே ...??????!!!!!!!!!!!!!!!
ReplyDeleteகாதலரே ஹெய்டி பூகம்பத்தை தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் இதயத்தில் ஏற்படுத்தி விட்டீர்கள்
இதிலிருந்து மீள மாற்று ஏற்பாடு சுறாவிடம் சொல்லி செய்ய சொல்லுங்கள்
அனானி அன்பரே, டாக்டர் விஜய் எங்களை சிரிக்க வைப்பதற்காக தன்னைக் கிண்டல் செய்யும் குறுஞ் செய்திகளை பொருட்படுத்தாது தொடர்ந்தும் நடிக்கிறார் என்பது எவ்வளவு மகத்தானது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteவிஸ்வா, சுறாவின் அதிரடிகளைக் கண்டு களித்த பின் பாங்காக்கில் இருக்கும் தன் வெடிகுண்டு ஆலைகளை மூடி விடுவதென பயங்கரவாதி டாக்டர் செவன் முடிவெடுத்திருக்கிறாராமே உண்மையா! பாலாவிற்கு ஒரு சுறா ஃப்ளுரே பார்சல் பண்ணுங்கப்பா.
நண்பர் இலுமினாட்டி, நீங்கள் என்னதான் சொன்னாலும் உங்கள் உள்மனம் சுறாவிற்காக ஏங்குவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல காரியத்திற்காக சில உயிர்கள் பலியாவது தவிர்க்க முடியாதது. இது உலக நியதி. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ஹாலிவூட் பாலா, உங்கள் கார் சாவியை எடுத்தது சுறா. ஆம் இது சுறாவை விரும்பும் அன்புள்ளங்களின் அன்புக் கண்ணி, ஆசைக் கண்ணி, நேசக் கண்ணி வெடிகள்தான். இப்படி நண்பர்கள் சுறா மீது தங்கள் பாசத்தை வெடிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
நண்பர் வேல்கண்ணன், அருமையான படம் தவறாது பாருங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
அனானி அண்ணன்களிற்கு நன்றி.
நண்பர் சிபி, அண்ணனின் சாதனைகள் தொடரும். தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் ஏற்பட்ட மகிழ்சி பூகம்பத்தை சற்று ஆற்ற மதிப்பிற்குரிய திரு ஜோஸஃப் சேண்ட்ரா அவர்களை ஒரு கவிதை பாடும் படி அன்புடன் வேண்டுகிறேன்.
dai thevudiya pasangala oru appanukku poranthavana iruntha intha mari commentsum publish pannasollunga da paakkalam intha editor oru potta naainu yenakku therium kandippa ithai publish panna maattan.
ReplyDeleteஅனானி அன்பரே, நன்றி நன்றி நன்றி.
ReplyDeleteடாஷ்போர்டில் சுறா தி லெஜன்ட், கனவுகளின் காதலன்னு பார்த்ததும் பயந்துட்டேன். என்னாது நம்ம காதலர் சுறா பத்தி எழுதுறதான்னு வந்து பார்த்தா... கலக்கிட்டீங்க காதலரே..
ReplyDelete'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படம் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.
ReplyDeleteகனவுகளின் காதலரே.. உலக சினிமா விமர்சன வரிசையில் சுறாவை சேர்த்து, கோலிவுட்டுக்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள்.. அகிரா குரோசோவாவின் ரோஷோமன் போல சுறாவும், ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும்..
ReplyDeleteஇப்பதான் பார்த்தேன்.. IMDB-ல சுறா இருக்கு..!! http://www.imdb.com/title/tt1650433/
நண்பர் சரவணக்குமார் அவர்களே, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை, பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் அது குறித்த என் எண்ணங்களை பதிவாக்க முயல்கிறேன் :) தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் வெகு விரைவில் IMDB டாப் 5க்குள் சுறா தன் இடத்தை தேடிக் கொள்ளும். சுறாவைப் பார்த்ததால் நானே எனக்கு பெருமை சேர்த்துக் கொண்டேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
குழந்தை இஸ் ஆன் தி வே டு சென்னை - சன்டே இன் சென்னை ஹோம். வாவ், மறுபடியும் ஒரு முறை சுறா பார்க்கலாம்.
ReplyDeleteஎஸ், சுறா ஒரிஜினல் டிவிடி வந்துவிட்டதாம்.
// இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை//
ReplyDeleteபட் வை? நானும் அந்த படத்தை ஸ்பெஷல் ஷோவில் (சென்னையில் பார்க்காமல் விட்டு விட்டேன் - படத்தின் P.R.O நிகில் வழக்கம் போல பிரசாத் ஸ்டுடியோவில் ஸ்பெஷல் ஷோ வைத்தார்-அதான்). இன்று நானும் ஒலக காமிக்ஸ் ரசிகரும் அந்த படத்தை பார்த்தோம். அருமை.
வழக்கம் போல சிம்பு பின்னி பெடலேடுத்து விட்டார்.
//சுறாவைப் பார்த்ததால் நானே எனக்கு பெருமை சேர்த்துக் கொண்டேன்.//
ReplyDeleteபயங்கரவாதி ஒரு பேட்ஜ் தயார் செய்கிறாராம். அந்த பேட்ஜில் "ஐ சப்போர்ட் சுறா" என்று போட்டு இருக்கிறது. அந்த பேட்ஜை ஒவ்வொரு பதிவரும் தங்களுடைய சைட் பாரில் போட்டு வைத்தால் அவர்களுக்கு ஒரே வாரத்தில் முன்னூறு பாலோயர்கள் வருவார்களாம்.
காதலருக்கு வேண்டுமா?
விஸ்வா, பார்க்க பார்க்க புதிய அர்த்தங்களை அள்ளி அள்ளி வழங்கும் காவியம் சுறா. இகோமுசியை விரைவில் பார்த்திட முயல்கிறேன். "ஐ லவ் சுறா" என்றிருந்தால் எங்கள் அன்பை ஆழமாக வெளிக்காட்டிய மாதிரி இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து நண்பரே.
ReplyDeleteஐ லவ் சுறா - வாவ் சூப்பர். பயங்கரவாதி நோட் பண்றார் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteமுடியல.வலிக்குது.அழுதுருவேன்.
ReplyDelete//முடியல.வலிக்குது.அழுதுருவேன்.//
ReplyDeleteஇதுக்கேவா? இன்னும் காவல்காரன், எங்க ஊரு ஆட்டுக்காரன், குட்டிப் பிசாசு பாகம் ரெண்டு (எல்லாவற்றிலும் மருத்துவர் நடிக்கிறார்) என்று பல வர இருக்கிறதே? அது எல்லாம் வந்தால் என்ன சொல்வீர்கள்?
ஒரு வருடத்திற்கு பின் செய்திதாள்களில் வரும் பேட்டி இது.
ReplyDeleteகேள்வி : சுறா படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா? எப்படி உண்ர்கின்றீர்கள்?
கமல் : மிகவும் பொறாமையாக இருகிறது. படம் ஸ்டில் பார்த்தவுடன் முடிவு செய்து விட்டேன். விஜயை பார்த்து தான் நான் திரைஉலகில் கடக்க வேண்டிய தூரம் இன்னம் நிறைய உள்ளது
என்பதை உண்ர்ந்து கொண்டேன்.
(மனதிற்குள் - எங்கையாவது கண்காணாத ஊருக்கு ஓடி போய்விட வேண்டும்)
கலைஞர் : அன்றே தெரியும் அன்பு தம்பி சுறா மக்களை தாக்குபவன் அல்ல ஆஸ்கர்களை அள்ளுபவன் என்று.
சந்திரசேகர் : ஆஸ்கர் விருதுகளுடன் உங்கள் விஜய் அடுத்த மாதம் கட்சி ஆரம்பிக்க போகிறார். வந்து குத்திட்டு போங்க
ஆஸ்கார் விருது வாங்கியபின் மருத்துவரின் பேட்டி:
ReplyDeleteமருத்துவர்: நடிக்க வராட்டி, நான் எஞ்சினியர் ஆகி இருப்பேன்.
நிருபர்: உங்களுக்குத்தான் (சுட்டு போட்டாலும்) நடிக்க வரலியே, இன்னும் ஏன் எஞ்சினியர் ஆகலை?
// வந்து குத்திட்டு போங்க //
ReplyDeleteஓ...தாராளமா!! :)
தமிழக அரசு ஒரு விருது வழங்க முடிவெடுத்து அனைத்து ஹீரோக்களையும் வரவழைத்தார்கள்.
ReplyDeleteஎல்லோரிடமும் ஒரு வெள்ளைத் தாளை கொடுத்து அவர்களின் மோசமான / ப்ளாப் ஆன படங்களை எழுத சொன்னார்கள். ஒவ்வொரு ஹீரோவும் எழுத ஆரம்பித்தார்கள்:
ரஜினி: பாபா, குசேலன்
கமல்: மும்பை எக்ஸ்பிரெஸ்
சூர்யா: ஸ்ரீ
விக்ரம்: கிங், பீமா
மாதவன்: ஆர்யா
அஜித்: திருப்பதி, ஏகன், அசல்
கடைசியாக,
இளைய தளபதி மருத்துவர் விஜய்: பேப்பர் பத்தல, அடிஷனல் ஷிட் பிளீஸ்.
நோயாளி: "நெடு நாள் வாழ மருந்து ஏதாவது இருக்கா டாக்டர்?".
ReplyDeleteபயங்கரவாதி டாக்டர் செவன்: "உடனடியாக சுறா படத்தை பாருங்க".
நோயாளி: "அந்த படத்தை பார்த்தா ரொம்ப நாள் வாழலாமா டாக்டர்?".
பயங்கரவாதி டாக்டர் செவன்: "அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஆனால் ரொம்ப நாள் வாழனும்கிற ஆசையை இந்த படம் போகடிச்சுடும்".
தியேட்டர் மேனஜர்: "சார், யாருமே சுறா படத்தை பார்க்க வரமாட்டேங்குறாங்க சார், நமக்கு பெருத்த நஷ்டம் ஆயிடும் சார். என்ன பண்ணலாம்?".
ReplyDeleteதியேட்டர் ஓனர்: "டிக்கெட் ஒன்னு ஒன்று ரூபா என்று வித்துடு".
தியேட்டர் மேனஜர்: "சார், அப்படி வித்தா நமக்கு இன்னும் நஷ்டம் ஆகும் சார்".
தியேட்டர் ஓனர்:"அது சரி, படம் பாக்க அவங்க உள்ளே வந்ததுக்கு அப்புறம், ரெண்டு நிமிஷம் கழிச்சு வெளியே போக டிக்கெட் விலை ஆயிரம் ருபாய் என்று வித்துடு".
தியேட்டர் மேனஜர்: "சார், சூப்பர் ஐடியா சார்".
நண்பர் மயில் ராவணன் தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர்கள் விஸ்வா, இலுமினாட்டி, ஒலக காமிக்ஸ் ரசிகன், கொண்டாடுங்க
படத்தில் கெவின் ஸ்பேசி கவரவ வேடத்தில் நடித்ததை பற்றி காதலர் கூறாதது ஏனோ?
ReplyDelete//படத்தில் ஒரு காட்சி...
சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்க, பாம் ஸ்குவாட்டை சேர்ந்த ஒரு காவலர் ஒரு சூட்கேஸை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். சுற்றியிருப்போர் முகத்தில் பரபரப்பும் பதட்டமும்.
சூட்கேஸை திறந்து பார்த்தவர் அதிர்ச்சியோடு முகத்தைப் பிதுக்க,
“பாம் இருக்கா?” ஒரு காவல்துறை அதிகாரி
“பணம் இருக்கா?” அமைச்சர்
“மயிறுதான் சார் இருக்கு!” சூட்கேஸைத் திறந்தவர்.//
அந்த சூட்கேசை திறந்தவர் கெவின் ஸ்பேசி தானாம். எப்படியாவது இளைய தளபதி படத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம், சிறிய வேடமே என்றாலும் கூட ஒக்கே என்று சொன்னதால் இந்த வேடம்.
ஸ்ரீமன் வேடத்தில் நடிக்க தாம் க்ரூயிஸ் ஆசைப்பட்டாராம். ஆனால் ஸ்ரீமன் தொடர்ந்து இளையதளபதி படத்தில் / கேப்டன் படத்தில் நடிப்பதால் கண்டினியூட்டி கேட்டுவிடக்கூடாது என்று அவரையே நடிக்க வைத்தார்கள்.
அந்த கலெக்டர் வேடத்தில் கூட மார்கன் ப்ரீமேன் நடிக்க ஆசைப்பட்டாராம், கால்ஷீட் கிடைக்காததால் முடியவில்லை.
படத்தை பார்த்ததில் இருந்து காதலர் நடக்கும்போது தன்னுடைய இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னே கட்டிக்கொண்டு நடக்கிறாராம். எல்லாம் சுறா செய்த மாயம்.
ReplyDeleteவிஸ்வா, பல சர்வதேச சினிமாக் கலைஞர்கள் சுறா பிரபஞ்ச காவியத்தில் பங்கு பெற்ற ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் ஆனால் திரு சுறா அவர்கள் அவர்களிற்கு எதிர்வரும் தன் அண்டவெளிக் காவியங்களில் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராதாரவி அவர்கள் நடித்த பாத்திரத்தில் க்ளுனி நடிக்க பலத்த முயற்சி செய்ததாகவும், ஆனால் நெஸ்கபே குடிக்கும் போட்டியில் அவர் ராதாரவியிடம் தோற்றதால் அந்த வாய்ப்பு அவரிற்கு கிடைக்கவில்லையெனவும் வட்டாரங்கள் அறிவிக்கின்றன. கைகளை முதுகிற்கு பின்னால் கட்டிக் கொண்டு, காலையும் ஒரு அரை வட்டம் போட்டுக் கொண்டே நடக்கிறேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteகனவுகளின் காதலன் அவர்களுக்கு........ என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை ...... தாங்கள் கூறிருக்கும் இந்த விமர்சனம் என்னைப்போல் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு ஓர் படிப்பினை... தங்கள் சொல்லிய அனைத்து பட காட்சிகளும் எப்படி இருக்கும் என்று என் கண்முன் கொண்டு வந்துவிட்டர்கள்... டாக்டர். விஜய் அவர்களின் மகா மெகா தமிழ் உலகம் கூறும் நல்காவியம்... நானும் காணப்பெற்றேன்.... நீங்கள் கூறியது போலவே இது உலகமாக காவியம்...அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.... இப்படி பட்ட காவியத்தை நான் பார்த்தது நான் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம்.... மேலும் பல உலக மகா காவியத்தை டாக்டர் விஜய் அவர்கள் எடுத்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்திற்கும் இடம் இருக்காது.... டாக்டர் விஜய் கூறும் ஒரு வசனம்.... " எனக்காக உயிரை கொடுக்க ஒரு கூட்டம் இருக்கு " என்று கூறும்போது திரைஅரங்கில் கைதட்டும் ரசிகர்கள் இருக்குவரை விஜய் உலக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.... (இப்படி எல்லாம் கருத்துக்கள் போடவேண்டும் என்று இருந்தாலும் என் மனசாட்சி இடம் கொடுக்க வில்லை..... என்ன செய்வது நாம் செய்த ஒரு பாக்கியம் வலைபக்கத்தில் நாம் உலவும் போது "கனவுலகின் காதலன்" பக்கத்தை நாம் பார்க்க நேர்ந்ததால் நான் மற்றும் என்னைப்போல் அப்பாவி தமிழர்கள் தப்பினார்கள்...) நன்றி.........
ReplyDelete//கைகளை முதுகிற்கு பின்னால் கட்டிக் கொண்டு, காலையும் ஒரு அரை வட்டம் போட்டுக் கொண்டே நடக்கிறேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//
ReplyDeleteயாழ் நகரத்து மேயர் கனவுகளின் காதலர் வாழ்க.
மக்கள் படம் பார்த்துட்டு மனதளிவில் பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு தெளிவா தெரியுது! அது சரி! வேட்டைக்காரன், சுறான்னு ரெண்டு அண்ட சினிமாக்களை பாத்துட்டு எந்த வித பாதிப்புமில்லாமல் தப்பி வருவதற்கு அனைவரும் அ.கொ.தீ.க. தலைவர் இல்லையே?!!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
படம் பார்க்க நினைத்திருப்போருக்கு ஒரு எச்சரிக்கை:
ReplyDeleteபடம் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவ நல்லா யோசனை பண்ணிட்டு பாரு! ஒரு தடவ பாத்துட்ட அப்புறம் யோசிக்கவே முடியாது!
தலைவர்,
அ.கொ.தீ.க.
இந்த அண்டவெளி சினிமாவின் அற்புத விமர்சனத்தில் 80வதாக கமெண்ட் போடுவது நானேதான்!
ReplyDeleteஅதாவது...மீ த 80வது!
தலைவர்
அ.கொ.தீ.க.
வேட்டைக்காரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் அருகிலேயே 'சுறா' ஓடும் திரையரங்கிற்குப் படம் பார்க்க செல்லக் கூடாது. இடைவேளையின் போது திரையரங்கு மாறிப் போய் விட்டால் எந்தத் திரைப்படம் என்று குழப்பமாக இருக்கும்.
ReplyDeleteநண்பர் பாலசந்தர், தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.
ReplyDeleteவிஸ்வா, யாழ் நகரின் இலச்சினை இனி சுறாதான் :)
தலைவரே வேட்டைக்காரன், சுறா மட்டுமா இனி வருவதையும் நீங்கள் தாங்கிக் கொள்ளும் வல்லமை கொண்டவரே. சுறா, மூளைக்கு விட்டமின் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். பிரபஞ்சக் காவியப் பதிவில் 80வது கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி தலைவரே.
நண்பர் Savi, இரு பிரபஞ்சங்களிற்கிடையில் மாட்டிக் கொள்கையில் குழம்புவது இயல்பானதே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
கேள்வி : எனக்கு ஓர் நண்பன் இருக்கிறன் நல்லா பேசுவான், நன்றாகத்தான் இருக்கிறான் ஆனால் சமீபத்திய சுறா சூப்பர் ஹிட் என்று சொல்கிறான் என்ன செய்வது?
ReplyDeleteபதில் : ஒ அப்படியா.. அவர் இப்படி சொல்வதை பார்த்தல் அவர் சொந்த காசில் பார்க்கவில்லை என்று தெரிகிறது. முதலில் அவருக்கு மூளை இருக்கிறதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால், இந்த வியாதிக்கு பெயர் சுறா கோமா என்று பெயர். இதற்க்கு மருந்து கிடையாது ஆனால் சில முரட்டு வைத்தியத்தினால் குணப்படுத்தி விடலாம் அவற்றை சொல்கிறேன்.
எளிய வகை
1) சுறா சூப்பர் ஹிட் என்று 100 முறை சொல்ல சொல்லவும்
இது கொஞ்சம் கடினம் - ஆள் தற்கொலை செய்ய வாய்ப்புள்ளது
2) சுறா இல்லை ஆஸ்கார் அவார்ட் வாங்கிய வீராசாமி படத்தை இன்னொரு முறை பார்க்கச்சொல்லவும்
இந்த 2 வழிகளுக்கு சற்று நேரமாகும் என்பதால் 3 ஆவதாக ஒரு வழி உள்ளது ஆனால் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால் முயற்சி செய்யும்போது மிக கவனம் தேவை,
3) அடுத்த விஜய் படத்துக்கு அவர் சொந்த காசில் டிக்கெட் வாங்கி வர சொல்லவும்.
meenkuzhambu.blogspot.com
நண்பர் ராஜ்,
ReplyDeleteஎங்கள் தலைவர் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள் தன் சொந்தக் காசிலேயே டிக்கட் வாங்கி டாக்டர் விஜய் படங்களை தவறாது கண்டு களித்து வருகிறார் இருப்பினும் வீராசாமி படத்தை பார்க்கச் சொல்லிக் கேட்பது மனித உரிமைகளை மீறுவதாக தெரிகிறது. தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
காதலரே,
ReplyDeleteதமிழில் வந்த சுராவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?
நண்பரே,
ReplyDeleteஏம்பா, அவருக்கு அரசியலுக்கு வரணும்னு ஆச! அதுகாக சில பல (பொய்) பன்ச் வசனங்கள் பேசினா தப்பா? ஒரு மீனவ தாத்தா ஓடி வந்து கேட்பாரு “ என்னடா எல்லாரும் வந்துடீங்களா?” ஒருவர் “ இல்லனே, சுறா வ காணோம்” தாத்தா “ யாருடா அது? உடனே கலெக்டர் தாத்தாகிட்ட கேட்பாரு “ ஒரு வரலேனா என்னயா? “ தாத்தா “ இல்லயா, அவன் எங்கள்ல ஒருத்தன், ஆனா, அன்புல 1000 தாயுக்கு சமம், அறிவுல 10000 சாணக்கியனுக்கு சமம்”
அய்யோ.... என்னால இதுக்கு மேல எழுத முடியல... அவ்வ்வ்வ்வ்வ்.....
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சு!
நண்பர் cap tiger, வயிறு மட்டுமா புண்ணாகியது :))
ReplyDelete