Thursday, November 18, 2010

மால்கோவா மரண ரயில்


பேரழிவை ஏற்படுத்திடக்கூடிய நச்சுப்பொருளையும், எரிபொருளையும் ஏற்றிக்கொண்ட ஒரு சரக்கு ரயில்வண்டி, ஓட்டுனர் அற்ற நிலையில் தறிகெட்ட வேகத்தில் பொதுமக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியை நோக்கி விரைகிறது. நிறுத்தப்பட முடியாத ரயில் வண்டியாக கருதப்படும் இவ்வண்டியை நிறுத்தியே தீருவது எனும் முடிவிற்கு வருகிறார்கள் பிறிதொரு ரயில் வண்டியில் சரக்குகளோடு சென்று கொண்டிருக்கும் பிரான்க் [Denzel Washington] எனும் ரயில்வண்டி ஓட்டுனரும், வில்[Chiris Pine] எனும் நடத்துனரும்…..

இயக்குனர் Tony Scott, தனது அபிமான நடிகரான Denzel Washington ஐ இம்முறை ஒரு ரயில் வண்டி ஓட்டுனராக என்ஜின் பெட்டிக்குள் உட்கார வைத்து Unstoppable திரைப்படத்தில் அழகு பார்த்திருக்கிறார். கூடவே டென்சலிற்கு பேச்சுத்துணையாகவும், சிறிது ஆக்சனிற்காகவும் இளம் நடிகர் Chris Pine துணை வந்திருக்கிறார்.

பிரான்க், ரயில்வே நிர்வாகத்தால் ஒரு வகை கட்டாய ஓய்விற்கு அனுப்பப்படும் நிலையில் உள்ளவன். இளைஞன் வில், சேவையில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகும் நிலை. புதிய தலைமுறை இளைஞர்களின் வரவால், நீண்ட காலமாக ரயில்வண்டி ஓட்டும் சேவையில் இருந்த அனுபவம் பெற்றவர்களை நிர்வாகம் வெளியே அனுப்பும் நிலையைக் கொண்டு ஆரம்பாமாகும் இருவரினதும் முதல் ரயில் ஓட்டம் இருவரிற்குமிடையிலான வேறுபாடுகளின் வெளிப்பாடுகளில் ஆரம்பமாகி, தமது வாழ்க்கை கதைகளை பரிமாறி, அவர்கள் பின்பு ஒன்றுபட்டு எதிர் கொள்ளும் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் மதிப்பு மிகுந்த ஒரு உறவாக பரிணமிக்கிறது.

unstoppable-2010-15331-1242763733 எவ்வாறு ஒரு ரயில் வண்டி, ஓட்டுனர் இல்லாத நிலையில் வேகமெடுத்து பேரழிவை தரிப்பாக கொண்டு பயணமாகிறது என்பதுடன் வேகமெடுக்கும் திரைப்படம், உச்சக்கட்டக் காட்சிகள்வரை தன் வேகத்தை குறைப்பதில்லை. தறிகெட்டு பயணிக்கும் ரயில், ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், ரயில்சேவை நிர்வாகம், தொலைக்காட்சி சேவைகளின் நேரடி ஒளிபரப்பு என்பவறின் ஊடாக மாறி மாறி பயணிக்கும் காட்சிகளில் வேகத்தையும், விறுவிறுப்பையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் பரபரபரப்பையும் சிறப்பாக பரிமாறியிருக்கிறார் டானி ஸ்காட். இவ்வகையான வேகமான பயணத்தினூடும் பிரான்கினதும், வில்லினதும் கதைகளை மிகச்சுருக்கமாக அவர் திரையில் பதித்தும் விடுகிறார்.

டென்ஸலிற்கு நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பெட்டியினுள் அவரின் பிரசன்னம் ஒன்று மட்டுமே போதுமான ஒன்றாகவிருக்கிறது. சற்றுத் துருத்த துடிக்கும் தனது வெண்பற்களை பளிச் அடித்து சிரித்தவாறே, உட்கார்ந்த நிலையிலேயே ஜாலியாக தன் திறமையை வழங்கியிருக்கிறார் அவர். இறுதிக் காட்சிகளில் ரயில் வண்டியின் கூரைமேல் ஓடி ஆக்‌ஷன் செய்வதாக நம்ப வைக்க கடுமையாக முயல்கிறார். இளம் நடிகரான கிரிஸ் பைன் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த இரு பாத்திரங்களினதும் வாழ்க்கைகள் கூட இந்த ரயில்வண்டியால் சிறு அழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றன எனலாம்.

தனது வழமையான முறையில் திரையில் பதட்டத்தை தேர்ந்த கலைஞன் போல் உருவாக்கி, திகிலையும், விறுவிறுப்பையும் வேகமாக பயணிக்க வைக்கிறார் இயக்குனர் டானி ஸ்காட். ஒர் ஆபத்தான சூழ்நிலையின் முன்பாக கூட தம் லாப நஷ்டங்களை எடைபோட்டு பார்த்து முடிவெடுக்கும் அதிகாரங்களை அவர் தனக்கேயுரிய பாணியில் நகைப்பிற்குரிய வகையில் சித்தரித்திருக்கிறார். ஓடும் ஒரு ரயிலை வைத்துக் கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டுவிட முடியும் என்பதை அவரின் இத்திரைப்படம் மறுக்கவியலாத வகையில் நிரூபிக்கிறது. குறிப்பாக உச்சக்கட்டக் காட்சிகளில், எடிட்டிங், ஒளிப்பதிவு[ அபாரம், அட்டகாசம்] இசை, இயக்கம் என யாவுமே டைனமைட் கூட்டுப் பக்குவத்துடன் அமைந்திருக்கிறது. செண்டிமெண்ட், ஆக்‌ஷன், நாயக பிம்ப கலவையாக வந்திருக்கும் Unstoppable, கிழட்டு டானி ஸ்காட்டால் இன்றும் கூட ரசிகர்களின் அடிவயிற்றில் திகில் பம்பரம் விட முடியும் என்பதை தெளிவாக்குகிறது. [***]

ட்ரெயிலர்

22 comments:

 1. அருமையான விமர்சனம் நண்பரே.

  ReplyDelete
 2. // மால்கோவா மரண ரயில் //

  சூப்பர் டைட்டில் காதலரே

  அது சரி மல்கோவா மாம்பழம் கேள்வி பட்டிருக்கேன்

  அது என்னங்க புதுசா " மால்கோவா "
  .

  ReplyDelete
 3. காதலரே,
  மீ தி போர்த்து. தலைப்பு பின்னுகிறது.

  படம் எப்படியோ, போஸ்டரும் ட்ரைலரும் சூப்பர். அதைவிட சூப்பர் உங்கள் முத்தான பதிவு.

  ReplyDelete
 4. சமீபத்தில் தான் ஒரு தேன்சளின் இரயில் சம்பந்தப்பட்ட படம் (The taling of pelham 1-2-3) பார்த்துவிட்டு சற்றே கடுப்பானேன். இந்த படம் (உங்களின் பதிவை பார்க்கும்போது) பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 5. விஸ்வா அண்ணே

  கவுன்டிங் மிஸ்டேக்கு

  Your are 3rd ;-)
  .

  ReplyDelete
 6. பிம்பிளிக்கி பிளாப்பி :-)

  ReplyDelete
 7. மூணு ஸ்டார்... அப்ப பார்க்கலான்றீங்க .. ரைட்டு

  ReplyDelete
 8. நல்ல விமர்சனம் - டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுபவர்கள் சங்கம்

  ReplyDelete
 9. பில்டப் எல்லாம் கொடுத்து படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வெச்சிட்டீங்களே.. பார்த்தே ஆகணுமே

  ReplyDelete
 10. //King Viswa said...
  சமீபத்தில் தான் ஒரு தேன்சளின் இரயில் சம்பந்தப்பட்ட படம் (The taling of pelham 1-2-3) பார்த்துவிட்டு சற்றே கடுப்பானேன். இந்த படம் (உங்களின் பதிவை பார்க்கும்போது) பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.//  சமீபத்தில் தான் ஒரு டென்சலின் இரயில் சம்பந்தப்பட்ட படம் (The taking of pelham 1-2-3) பார்த்துவிட்டு சற்றே கடுப்பானேன். இந்த படம் (உங்களின் பதிவை பார்க்கும்போது) பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

  மேம்படுத்தப்பட்ட மீள் பின்னூட்டம்.

  ReplyDelete
 11. //விஸ்வா அண்ணே

  கவுன்டிங் மிஸ்டேக்கு //

  கொடுரம்ஸ் ஆப் இந்தியா. சிபி அண்ணன் என்னை அண்ணே என்று சொல்கிறார்.

  யா, கவுண்டிங் மிஸ்டேக். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் அண்ணே என்று சொன்னதை ஒத்துக்கொள்ள முடியாது.

  ReplyDelete
 12. super விமர்சனம். நான் unstoppable படம் பார்ப்பதை யாராலும் stop பண்ண முடியாது ;))

  ReplyDelete
 13. டிரைலரும் உங்கள் விமர்சினமும் அருமை. லக்கி லூக்கின் பூம் பூம் படலம் தான் நியாபகத்திற்கு வருகிறது.

  ReplyDelete
 14. நண்பர் சிபி, மால்கோவா என்றால் அர்த்தம் எனக்குத் தெரியாது ஒரு பெப்பிற்காக மரண ரயிலுடன் சேர்த்த அர்த்தமற்ற சொல்லது :) முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சரவணக்குமார், வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

  விஸ்வா, நீங்கள் கூறும் அந்தப் படமும் டானி ஸ்காட்டின் இயக்கத்தில் வெளியான படம்தான் :) மரண ரயில் திரைப்படத்தின் கதை சுமாரான ஒன்றுதான் ஆனால் அதை திரையில் டானி வழங்கியிருக்கும் விதத்திற்காகவே இரு நட்சத்திரங்களிற்கு பதில் 3 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள், ஜில்ஜிக்காங் ஜிப்லாங்கி :) நல்ல வேகமான படம் என்பதற்காக பார்க்கலாம் அவ்வளவுதான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கவிதைகளின் காதலன், திரைப்படத்தின் ட்ரெயிலரில் இல்லாத பில்டப்பா :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் nis, பார்த்து மகிழுங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிவ், பூம் பூம் படலம்கூட ஒரு வேகமான கதைதான், அதிலும் அந்தக் கழுகும், சவப்பெட்டி செய்பவரும் அட்டகாசம். கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 15. படத்தின் அறிமுகத்திற்கு நன்றிகள் நண்பரே..!

  ReplyDelete
 16. mr.r.s.k. pakalamnu sollitinga.... parthuruvom.

  ReplyDelete
 17. டிரெய்லர் நல்லாயிருக்கு! பார்க்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 18. நண்பர் உண்மைத்தமிழரே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  அனானி அன்பரின் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் எஸ்.கே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கண்ணன், நன்றி.

  ReplyDelete
 19. நேற்றுதான் unstoppable-யை பார்த்தேன் படத்தில் நிறைய சென்டிமண்ட் காட்சிகள்.
  அதுபோல் நண்பா Atomic Train - (1999) நேரம் கிடைத்தால் பார்க்கவும் இந்த படத்தின் பல காட்சிகள் unstoppable பார்க்கலாம்.

  http://www.youtube.com/watch?v=QipAk4bhC-k

  நன்றி....

  ReplyDelete
 20. நண்பர் புதுவை சிவா, நேர வசதிப்படி பார்த்துவிடுகிறேன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete