Showing posts with label ரேப் ட்ராகன். Show all posts
Showing posts with label ரேப் ட்ராகன். Show all posts

Friday, November 5, 2010

ரேப் ட்ராகன் - 26


காதல் கடல், கண்ணீர் அலை

கலெக்டிக் ரோமியோ காமா ஜோஸ் அவர்களின் காதல் இம்சை

நலம்தானா என்னுயிர்க் காதலரே என்ற காதல் ஜீவக் கேள்வியை காதல் கணையாக காமா ஜோஸை நோக்கி ஏவிய மொனிக்காவை பதறிப் போனவனாக தன் பாதங்களில் இருந்து அள்ளி எடுத்தான் காமா ஜோஸ்.

- மொனிக்கா, என் அன்பே, என்ன இது, என் பாதங்களில் உன் இதழ்கள் பதிவதற்கு நான் தகுதியானவன் இல்லை. என்னைப் போன்ற ஒரு கயவனிற்காகவா நீ உன் கண்ணீரை செம்முத்துக்களாக உதிர்க்கிறாய். கூடாது பெண்ணே கூடாது. உன்னை விட்டு, உன் உயிர் காதலைவிட்டு விலகிச் சென்றவன் நான் என்பதனை மறந்துவிடாதே.

- இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்திலும், உணர்வுகளிலும் என்றும் என்னையும் நம் காதலையும் பரிசுத்தமாக காத்து வந்திருக்கிறீர்கள். என் காதலரே, உங்களை என் கண்களில் கண்டதும் எனக்குள் நிகழும் மாற்றங்கள் வேதியியலையும் வெல்கின்றனவே.

- என் உயிரே, கட்டிக் கரும்பே, காதல் எறும்பே உன்னைவிட்டு நான் பிரிந்த நாள் முதலாய், உன் கொடிய சாபத்தை நீக்குவதற்கான வழிகளை கண்டறிய விழைந்தேன். உன் சாபத்திலிருந்து உன்னை விடுவிக்கும் விமோசனத்தைக் கண்டறியாது உன்னைக் காண்பதில்லை என தவமிருந்தேன். ஆனால் கண்கள் காணாவிடிலும், என் கரங்கள் உன் அழகை தழுவாவிடிலும் என் இதயத்தின் நினைவுகளின் ஏகபோக ராணி நீ. மொனிக்கா என் பேரின்பக் காதல் மோகினி.

- அத்தான்

- அப்படி அழைக்காதே, கூசுகிறது.

- அத்தான், அத்தான், அத்தான்

- ஹொய், ஹொய், ஹொய்

இவ்வாறாக இரு காதல் புறாக்களிற்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த குலவல் காதல் சம்பாஷணையைக் காது கொடுத்துக் கேட்ட குந்தவியும், டேனியும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார்கள்.

- டேனி, எமக்கு மட்டும் இப்படி ஒரு காதலர் கிடைக்காமல் போய் விட்டாரேயடி, ஆகா….காதல் என்றால் இதுவன்றோ அமர காதல் என்றவாறே டேனியைக் கட்டிப்பிடித்து கண்ணீரை சொரிந்தாள் குந்தவி.

- ஆம் இளவரசி, கொடுத்து வைத்தவள் இந்த மொனிக்கா. காட்டேரியாக இருக்க சபிக்கப்பட்டாலும், ஒரு உண்மையான ஆண்மகனின் காதலில் அவள் உயிர் வாழ்கிறாள் என்றவாறே மூக்கை உறிஞ்சினாள் டேனி.

மென்னிக்கடி மொனிக்காவிடம் மரண அடி வாங்கிய சீனன் ஷங்லிங், காதல் புறாக்களின் பரிபாஷனையை வெறுப்புடன் பார்த்தான்… உலக மா கவி செக்ஸ்பீர் மட்டும் உங்கள் காதல் நாடகத்தை காண்பார் எனில் காதல் காவியங்களை எழுதுவதை நிறுத்திவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்து விடுவார். என்ன உருக்கம், என்ன நெருக்கம். காமா, இன்றுடன் இந்த மொனிக்காவின் கதையை முடித்து உன்னை இந்த கொடூரமான காதல் சிறையிலிருந்து விடுவிக்கிறேன். ம்ம் அவளை விட்டு விலகு என்றவாறே வெள்ளிக் குறுவாள் ஒன்றை உருவினான் சீனன்.

- அத்தான், தயவுசெய்து உத்தரவு தாருங்கள் மொட்டையின் இருப்பிற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன்…

- முற்றுப்புள்ளி வைப்பது நீயல்ல அழகுப் பெண்ணே, நான்…. ரஃபிக்கின் குரல் அறையை அதிர வைத்தது. பஞ்சணையில் இருந்த தன் உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கிய ரஃபிக்…. அடேய், பச்சைக் கண்ணா, நீ ஒர் உண்மையான ஆண்மகன் என்றால் என் விலங்குகளிலிருந்து என்னை அவிழ்த்து விடு. மதம் கொண்ட களிறுகள் பொருதுவதுபோல் நாம் பொருதுவோம், உன் காதலிற்கும், ஆயுளிற்கும் நான் முற்றுப்புள்ளி இடுகிறேன். மொனிக்கா… என் காதல் மொனிக்கா, உன் காதலனை நான் அழிக்கப் போகிறேன் என்று என்னை வெறுக்காதே, உன் மேல் நான் கொண்ட காதலிற்காகவே இந்த செயலை நான் செய்யப் போகிறேன். இது காதல் யுத்தம். அதன் வெற்றிச் சங்காக ஒலிக்கப் போவது என் இதயத்தின் சத்தம்…. யாரங்கே… அடேய் மொட்டைத் தலை சீனா என் விலங்குகளிலிருந்து என்னை விடுவியடா, என்னுள் இருக்கும் விலங்கை நான் விடுவிக்கிறேன்… ரஃபிக்கின் சொற்கள் தீ அம்புகளாக நாலா திக்கிலும் பறந்தன.

- ஒஹோ, இவன்தானா அந்தப் புரட்சிக்காரன். காமா, இவனைக் கொன்று விடவா, அதிகம் துள்ளுகிறான் என்றான் சீனன்.

- வேண்டாம், அவனை நம் கப்பலிற்கு எடுத்துச் சென்றுவிடலாம்..

- சபாஷ், அருமையான யோசனை காமா, இவனை அடிமை வியாபாரிகளிடம் விற்று அழகான பெண் அடிமைகளை வாங்கிக் கொள்ளலாம்…

- அத்தான், இந்த சீனனுடன் சேராதீர்கள். இவன் ஒரு நாசக்கிருமி.

vampire - அழகியே, அத்தான், அத்தான் என்று நீ அந்தக் கோழையை அழைக்கும்போது, அவன் செத்தான் செத்தான் என்று என் மனம் பாடுகிறது… இடையில் புகுந்தான் புரட்சிக்காரன். ரஃபிக் இருந்த பஞ்சணையை சில எட்டுக்களில் நெருங்கிய சீனன், ரஃபிக்கின் கழுத்தில் ஓடிய நரம்பொன்றினை தன் விரல்களால் ஊன்றி அழுத்தவே மொனிக்.. என்றவாறே தன் நினைவை இழந்தான் ரஃபிக்.

- ஷங்லிங், ராஜமாந்தீரிகனும், இலுமினாட்டியும் ஓட்டி வரும் புஷ்பக் விமானத்தில் குந்தவியை ஏற்றியனுப்பு. என்னை சற்று தனிமையாக மொனிக்காவுடன் இருக்க விடு. ம்ம்ம்.. கிளம்பு சீனா என்றான் காமா

- ஆமாம், கிளம்படா மொட்டைத்தலை சீனா என்றாள் கேலியாக மொனிக்கா.

- மொனிக்கா, அவனை வையாதே, அவன் ஒரு நாசக்கிருமிதான் ஆனால் அவன் உருவாக்கும் அழிவுகள் கொஞ்சமே…மொனிக்காவின் காதுகளில் மென்மையாக கிசிகிசுத்தான் காமா

- காமா, இந்த அழகியையும் கப்பலிற்கு இட்டுச் செல்லவா என்றவாறே டேனியை நோக்கி தன் தலையை நீட்டிச் சிரித்தான் சீனன்.

- அதனை விட நான் இறப்பதே மேல் என்றவாறே குந்தவியை அணைத்த டேனி... இளவரசி, பிறந்தால் அடுத்த பிறப்பில் உங்களிற்கு தோழியாக நான் பிறக்க வேண்டும் என்று கூறி இளவரசியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்து அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

ரஃபிக்கை விலங்குகளிலிருந்து விடுவித்த சீனன், அடடா இந்தக் கனம் கனக்கிறானே என்றவாறே அவனை அந்த அறையிலிருந்து இழுத்துக் கொண்டு சென்றான். அறையிலிருந்து வெளியேறுமுன்.. ஆகா என்ன அருமையான பஞ்சணை என்று கூறி காமாவை பார்த்து தன் கண்களை சிமிட்டினான். மொனிக்கா நாணினாள்.

மயங்கிய நிலையிலிருந்த ரஃபிக்கை ஆதரவுடன் நோக்கிய குந்தவி.. என் அன்பே, என் காதலே, என் விளையாட்டு இப்படி விபரீதத்தில் முடிந்துவிட்டதே, உன்னை நான் மீண்டும் காணும் நாள் வருமா என்று மனதினுள் அழுதாள். மனம் வடித்த கண்ணீர் அவள் விழிகளில் அரும்ப ஆரம்பித்த கணத்தில் அறைக்குள் சிதறிக் கிடந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் அவள். அறையில் காதலும், காதலரும் தனியே நின்றனர்.

- அத்தான் இனியும் உங்களை என்னால் பிரிந்திருக்க முடியாது, என்னுடன் வந்து விடுங்கள்.

- இல்லை மொனிக்கா. உன் காட்டேரி சாபத்தை போக்க வழிகள் உண்டு என்பதாக அறிகிறேன். மன்மதக்குகை தீவுகளை தேடுபவையாகவே என் பயணங்கள் அமைந்திருக்கின்றன. அதுவரை பொறுத்திரு பெண்ணே.

- நீங்கள் திரும்பாவிடில்..

- என் இதயத்தில் உன்னையும், உன் உயிரில் என்னையும் கொண்டு இந்தக் காற்றில் உன் காதல் தேடி வருவேன்..

- அய்யகோ, அத்தான் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்..

- பெண்ணே, பிரியும் நேரமிது, விடைகொடு.

மொனிக்காவின் இதழ்கள் காமாவின் இதழ்கள்மேல் பதிந்தன, காமாவின் கரங்கள் மொனிக்காவை அள்ளி அணைத்தன, அவர்கள் இருவரினதும் நாக்குகளும் ஆரத் தழுவிக் கொண்டன. சொர்க்கம் என்பது இதுதானே என்பதை இருவரும் உணர ஆரம்பித்த நிலையில் காமாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அறையின் கூரை வழியாக வெளியே பறந்தாள் மொனிக்கா.

சொகுசு விடுதியை விட்டு கனத்த மனதுடன் வெளியே வந்த காமா, வானில் ராஜமாந்தீரிகனின் புஷ்பக் விமானம், குத்து நகரின் திசையில் வேகமாக பறந்து கொண்டிருபதைக் கண்டான். புஷ்பக் விமானத்தை விழி வெட்டாது பார்த்த அவன் தோளின் மீது, மேலேயிருந்து வந்த ஏதோ ஒன்று விழுந்து உருண்டது. தன் கைகளில் அதனைப் பற்றிய காமா, நிலவு வெளிச்சத்தில் அது என்னதென்று நோக்கினான். அந்த செங்கண்ணீர் முத்து அவன் கண்களை காதலுடன் பார்த்தது. தன் கண்களை மேலே உயர்த்தினான் காமா. நிழலான ஒரு உருவம் அவனை விட்டு தூரமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது கலங்கலாக அவன் கண்களில் வீழ்ந்தது.

=================

கப்பலில் ரஃபிக்கிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான் ரஃபிக். இரவு நன்றாக ஏறிவிட்ட வேளையில் அவனது எதிர்காலமானது அந்த இரவைவிட இருளாக அவனிற்கு காட்சியளித்தது. கொடிய சீனன் தன்னை அடிமை வியாபாரிகளிடம் விற்று விடுவான் என்பதை ரஃபிக் உறுதியாக நம்பினான். இவ்வேளையில் அவன் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. கையில் விளக்குடன் அறையினுள்ளே நுழைந்தாள் ஒரு அழகி. அவள் கண்கள் கடலினதும், ஆகாயத்தினதும் நீலத்தைக் கலந்த வண்ணத்தைக் கொண்டிருந்தன. அவள் உடலெங்கும் அழகு தோரணம் கட்டி குதூகலித்துக் கொண்டிருந்தது. விளக்கை கீழே வைத்த அவள் ஏதும் பேசாது தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள். அந்த அழகி தன் ஆடைகளை களைந்ததால் பதறிப்போன ரஃபிக், பெண்ணே நீ யார், ஏன் ஆடைகளைக் களைகிறாய் என்றான்.

- ஆணழகே, இந்த துர்பாக்யவதியின் பெயர் நீல அழகி. கொள்ளையர் கப்பலில் இருக்கும் கொடியவர்களிற்கு என் உடலை பரிமாற வேண்டியது என் சாபம். அழகியின் வார்த்தைகளை கேட்ட புரட்சிக்காரனின் ரத்தம் சூடாக ஆரம்பித்தது. உள்ளம் கொதித்தது. மீசை துடித்தது.

- அழகியே, இந்தக் கொடிய செயலை உன்னை செய்யத் தூண்டியவர் யாரோ.

- வேறு யார், குரூர மனம் கொண்ட சீனன் ஷங்லிங்.

- பெண்ணே, பேரழகே, நீலப்புஷ்பமே நான் சொல்வதை நன்றாகக் கேள். கொடிய கடற்கொள்ளையர்களான காமா ஜோஸையும், ஷங்லிங்கையும் கடல் அரக்கன் புட்டுக் கிறுக்கனின் பலிபீடத்திற்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கப்பலை எனதாக்குவேன். உன்னை என் ராணியாக்குவேன். இது இந்த வானின் மீது ஆணை, இந்த வையத்தின் மீது ஆணை, இந்தக் கடலின் மீது ஆணை, ஏன் நான் உன் மேல் கொண்டிருக்கும் உயிர்க் காதல் மீது ஆணை…

ரஃபிக்கின் ஆவேசக் குரல் இருளில் ஓடிய காற்றில் கலந்து, கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை தழுவியது. இதைப்போல பல சபதங்களையும், காதல்களையும் தன் உடல் மேல் தழுவவிட்ட அந்தக் கப்பல், சிருங்காரமாக ஆடிய அலைகளில் தன் உடலை நளினமாக நகர்த்தியது. தன் முன்பாக பிரம்மாண்டாமாக உருவெடுத்த அலையைக் கிழித்து உடைக்க வேகமாக முன்னே பாய்ந்தது ரேப் ட்ராகன்.

rdfin

ராஜமாந்தீரிகன் கருந்தேள், இளவரசன் இலுமினாட்டி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்கள், புரட்சிக்காரன் ரஃபிக், காமா ஜோஸ் ஆகியோரிற்கு என் அன்பான நன்றிகள்.

நண்பர்கள் அனைவரிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Friday, October 29, 2010

ரேப் ட்ராகன் - 25

சீனன் சம்ஹாரம்

ஆதிஜோக்களின் பிரதிநிதியும் பிங்பிங் மன்மதக்கலையில் வல்லவருமான மொட்டைப்பருந்து சீனன் அவர்களின் கும்மாங்கு குத்து

தன் உயிர் அவள் கைகளால் நீங்கினால் அது ஒரு பாக்யம் என்று வேண்டிய ரஃபிக்கின் கலங்கரை விளக்கில் தன் நீண்ட வேட்டைப் பற்களைப் பதித்து அவன் குருதியை உறிஞ்ச மென்னிக்கடி மொனிக்கா தயாரான தருணத்தில், பலத்த ஓசையுடன் அறையின் கூரைகளைச் சிதைத்த வண்ணம் தரையில் வந்து விழுந்து வெடித்து திறந்த பாதுகாப்புக் கவசங்கள் கபிலவிழியாளின் கவனத்தை ரஃபிக்கிடமிருந்து திசை திருப்பின.

ஆனால் பாதுகாப்பு கவசங்களிலிருந்து முதலில் வெளியேறிய அந்த உருவத்தைக் கண்டதும் மொனிக்காவின் கரங்கள் அந்த உருவத்தின் தலையை உடனடியாக கொய்து வீச பரபரக்க ஆரம்பித்தன. மேலும் தான் அந்த அறையில் இருப்பதை அவதானிக்காது தம் உடல் அழகை வெட்கம் ஏதுமின்றி உலகிற்கு காட்டி நின்ற இரு அழகுகளையும் தன் கண்களால் மேய்ந்தவாறே அந்த உருவம் நாடக பாணியில் செய்த சலாமும் மொனிக்காவினை எரிச்சல்படுத்தவே சற்றுக் கடூரமான குரலில்…அடேய், மொட்டைத்தலை சீனா என்று கத்தினாள் அவள்.

அழகுப் பதுமைகளை நோக்கி நளினமாக சலாம் வைத்த நிலையில் மொனிக்காவின் கடூரமான குரல் எதிர்பாராமல் வந்து தாக்கவே சற்று அதிர்ந்துபோன சீனன், நிமிர்ந்தான். திரும்பினான். மென்னிக்கடி மொனிக்காவை அங்கு கண்ட சீனனின் விழிகள் அச்சம் கலந்த வியப்புடன் விரிந்தன. தன் மொட்டைத்தலையில் எஞ்சியிருந்த நுரையை தடவிய சீனன்… வந்தனம் மொனிக்கா, உன்னை என் கண்கள் கண்டு காலங்கள் ஆகிவிட்டன என்றான்.

- அது உன் அன்னை செய்த புண்ணியம்… கபிலவிழியாளிடமிருந்து பதில் வெடுக்கென வந்தது…. டேய் சீனா, என் காதலை நிறைவேறாமல் செய்தது மட்டுமல்லாது என் காதலனையும் தவறான பாதையில் இட்டு செல்ல தூபம் போடுகிறாயாமே…தொடர்ந்தாள் கபிலவிழியழகி.

- உன் காதலை நான் நிறைவேறமால் செய்தேனா! இது என்ன புதுக்கதை மொனிக்கா.

- படுபாவி, நானும் அவரும் மாலைமாற்ற வேண்டிய வேளையில் நீ என் காதலரை கடத்தி செல்லவில்லையா.

- நீ உன் காதலனிடம் ஒரு முக்கிய உண்மையை தெரிவிக்காது மாலை மாற்றத் துணிந்தாய், மேலும் உன் காதலன் என் நண்பன்.

- என்ன உண்மையை நான் மறைத்தேன் சண்டாள மொட்டைப் புழுவே.

- நீ ஒரு ரத்தக்காட்டேரி எனும் உண்மையை..

சீனனின் பதில் கூரிய கட்டையாய் மொனிக்காவின் இதயத்தில் பாய்ந்தது. சீனனிற்கு எதிர் பதில் ஏதும் தர இயலாத ஒரு வெளிக்குள் தான் அடைபடுவதை கபிலவிழியாள் உணர்ந்தாள்.

- ரத்தம் உறிஞ்சும் உயிரற்ற பிறவியுடன் என் நண்பன் வாழ்ந்திருக்க நான் அனுமதியேன்… இன்றும், அன்றும், என்றும்… தன் முகத்தில் ஏளனப் புன்னகை ஒன்றை தவழ விட்டான் மொட்டைத் தலை சீனன்.

- ஏன்…ஏன்.. காதல் எனும் உணர்வை நீ எனக்கு மறுக்கிறாய். அதனைப் பருகுவதற்கு எனக்கு உரிமையில்லையா. என் காதலிற்கு குறுக்கே நிற்கும் உன்னை இன்றுடன் ஒழித்துக்கட்டுகிறேன்… ஆவேசமாக கத்திய மொனிக்கா தன் கால்களை தரையில் ஓங்கி அடிக்கவே அவள் அதி குட்டைப் பாவாடைக்குள் இருந்து சில வவ்வால்கள் அரண்டு வெளியே பறந்து சென்றன.

- ஹாஹாஹா…. உன் காதல் கோவிலில் வவ்வால்கள் வாழ ஆரம்பித்து விட்டனவா. சபாஷ், உன் காதலை நீ கோட்டை கட்டி பாதுகாத்திருக்கிறாய் மொனிக்கா.

- என் உடலும், உள்ளமும் என் காதலரிற்கு மட்டும்தான் சொந்தம்.

- அப்படியானால் உன் உயிர் யாரிற்கோ… சீனனின் இந்தக் கேள்வியால் மீண்டும் நிலைகுலைந்தாள் மொனிக்கா.

- அற்ப பதரே, என் மரணம்கூட என் காதலரிற்காகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். ஆனால் அதன் முன்பாக உன்னை நடைபிணமாக அலைய வைக்கிறேன். நள்ளிரவு வேளைகளில் உன்னை ரத்தப் பிச்சை எடுக்க செய்கிறேன். மொட்டைப் பேயாக உலாவ பண்ணுகிறேன். என் மீது விழுந்த இந்த சாபத்தின் வேதனையின் ஒரு கூறை உன்னை உணர வைக்கிறேன்… இதனைக் கூறியவாறே சீனனின் மீது வெகுவேகமாகப் பாய்ந்த மொனிக்கா, சீனனின் கால்களைப் பிடித்து அவனை தலை கீழாக தூக்கி எறிந்தாள்.

Rape Dragon அறையின் குறுக்கே வல்லூறு பாய்ச்சலில் பறந்து சென்ற சீனன் சுவரொன்றில் பலமாக மோதி கீழே விழுந்தான். கீழே வீழ்ந்த சீனனின் மீது தாமதிக்காது பாய்ந்த மொனிக்கா, தன் கரங்களால் சீனனின் தலையை அழுத்தியபடியே அவளது கூரான பற்களை சீனன் மேல் அழுத்திப் பதித்தாள்.

சுவரில் மோதியதால் கலங்கிப்போன சீனன் தன்னால் இயன்றவரை மொனிக்காவின் அசுரப்பிடியிலிருந்து தன்னை விடுவிக்க திமிறினான். ஆனால் மொனிக்காவின் பலத்தின் முன் அவன் திமிறல்கள் பஸ்பமாகின. தன் கழுத்தில் ஊசியாக ஏறிய மொனிக்காவின் பற்களை உணர்ந்தான் சீனன். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த சீனன், வாழ்கையில் தான் கண்ட அழகான பெண்களை நினைவில் கொண்டுவர முயன்றான். ஆனால் அந்த வேளையில்…. மொனிக்கா, அவனை விட்டுவிடு எனும் சொற்கள் அறையில் ஒலித்தன.

அந்த அறை கொண்டிருந்த வன்மத்தையெல்லாம் போக்கிவிடும் மென்மையுடன் எழுந்த அந்தக் குரலில் வாழ்ந்திருந்த இனிமை அறையிலிருந்த பெண்களின் இதயங்களை எல்லாம் ஆதுரமாக வருடிக் கொடுத்தது. அக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஒரு கணம் உறைந்தாள் மொனிக்கா. சீனனை தன் தலைக்கு மேல் தூக்கி அப்பால் வீசியெறிந்தாள். சிட்டுக்குருவிபோல் பறந்தான் சீனன்.

தன் நீண்ட கூந்தலை அழகாக கோதிவிட்ட மொனிக்கா, இனிமையான அந்தக் குரல் வந்த திக்கில் திரும்பினாள். குரலிற்கு சொந்தமான உருவத்தைக் கண்டாள். அந்த உருவத்தின் முன் மண்டியிட்டாள். தன் தலையை தாழ்த்தியவாறே அந்த உருவத்தின் பாதங்களை நோக்கி நகர்ந்து அவற்றை தன் இதழ்களால் முத்தமிட்டாள். அவள் இதயத்தின் ஆழமான ஊற்றுக்களிலிருந்து பீறிட்டு பொங்கி அவள் விழிகள் வழி வழிந்த கண்ணீர், அப்பாதங்களை செங்கண்ணீர் முத்துக்களால் குளிப்பாட்டியது.

- நலம்தானா என்னுயிர் காதலரே….. காமா ஜோஸின் பாலைவன இதயத்தை நோக்கி காதல் மழை அம்புகளாக பாய்ந்தன மொனிக்காவின் வார்த்தைகள்.

Friday, October 22, 2010

ரேப் ட்ராகன் - 24


1008 நைட்ஸ்

- பின்பு என்ன நடந்தது? சிந்துபாத்திடம் இருந்து வந்த கேள்வி உவர்ப்பு பூசிய கடல் காற்றோடு வந்து புரட்சிக்காரன் ரஃபிக்கை மெதுவாக தீண்டியது. கப்பலின் மேற்தளத்தில் கயிற்றுச் சுருள்கள் மத்தியில் அமர்ந்திருந்த ரஃபிக்கின் கண்கள் முடிவற்று பரந்திருந்த கடலை நோக்கிய வண்ணமிருந்தன.

கடல் வழமைக்கு மாறாக அன்று அமைதியுடன் இருந்தது. ரஃபிக்கின் மனம், அமைதியை கடலில் கரைத்து விட்டிருந்தது. அந்தி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையின் சூரியன், அடிக்கும் செவ்வண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தான். காற்றின் இசையும், அலைகளின் சங்கீதமும் அந்தக் கணத்திற்கு மேலும் ரம்யம் சேர்த்தன.

- புரட்சிக்காரா, உன்னிடத்தில் நானிருந்தால் சிந்துபாத்திடம் கதைகள் கூறுவதில் எச்சரிக்கையாக இருப்பேன்… தன் மொட்டைத் தலையை தடவியபடியே கூறினான் அவர்களை நெருங்கிய சீனன்.

- சீனா, என்ன இது! ஏன் இப்படிக் கூறுகிறாய்! நான் என்ன தவறு செய்தேன்.. சிந்துபாத் சற்று வருத்தம் கலந்த குரலில் கேட்டான்.

- இப்படியாக நீ கேட்ட கதைகளைத்தான் சிந்துபாத்தின் சாகஸங்கள் என்ற வகையில் 1008 நைட்ஸ் தொகுப்பிற்கு நீ விற்றுவிடவில்லையா, சாகசங்களை செய்தது வேறொருவர் ஆனால் காலத்திற்கும் நிலைத்திருக்கும் பெயரைப் பெறுபவர் வேறொருவர். ஏன் காமா ஜோஸின், முன்னைநாள் கன்னிகளின் தீவு சாகஸத்தைக்கூட உன் அதிரடியென நீ அளந்து கட்டி விற்கவில்லையா.

- சீனா, புகழின் போதைக்கு அடிமையாகாத உயிர்கள் இங்கு உண்டா, பிறந்த குழந்தையிலிருந்து தள்ளு வண்டியில் மரணத்தின் இதழ் முத்தம் காத்து நிற்கும் முதியவர்வரை அதனை யாசிக்கிறார்களே. மேலும் இந்த வகையிலாவது இந்த சாகசங்கள் காலத்தில் என்றென்றைக்கும் பதியப்பட்ட கணங்களாகுமே. இந்த நல்லெண்ணத்தில்தான் என் பெயரில் ஏனையோர் சாகசங்களை கதையாக்கி விடுகிறேன்.

- சிந்துபாத், நீ கூறுவதுபோல் புகழ் உயிரின் பின்னும் நிலைத்திருப்பதுதான். ஆனால் பிறரை நாம் முட்டாள் ஆக்குகிறோம் என்பதை நாம் மறந்து விடலாகாது. ஆனால் நீ என்ன செய்ய முடியும், தாம் படிப்பதை எல்லாம் அசல் என்று நம்பிவிடும் அப்பாவி உலகம் இது…என்று கூறியவாறே மேற்தளத்தின் ஒரு பகுதியில் அந்திச் சூரியனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த பச்சைக் கண்ணனை நோக்கி நகர்ந்தான் சீனன்.

- காமா… தன் அழைப்பிற்கு பச்சைக் கண்ணனிடமிருந்து பதில் ஏதும் கிடைக்காததால் சீனன் தன் பேச்சைத் தொடர்ந்தான்… கைகூடமுடியாக் காதலை நினைத்து உருகுவதில் என்ன பயன். இனியாவது நீ அவளை உன் இதயத்தின் துடிப்புகளிலிருந்து உதறிவிட்டு உன் வாழ்கையில் இன்பத்தின் தழுவல்களை அனுமதிக்க வேண்டும். இந்தக் குறுகிய வாழ்க்கையில் நீ அனுபவிக்க தவறுவதையெல்லாம் சற்று எண்ணிபார் காமா. காலம் முழுவதையும் இப்படியே கரைக்கப் போகிறாயா. போகிற போக்கில் காதலிற்காக கோவில் ஒன்றை கட்டினாலும் கட்டுவாய் போலிருக்கிறதே.

- சீனா, நீ காதலித்திருக்கிறாயா?

- அந்தக் கருமாந்திரம் எனக்கெதற்கு. காமம் அறிந்தவன் காதலை தேடுவதில்லை, காதலை தேடுபவன் தன் காமத்தை உரைப்பதில்லை. மேலும் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் என் இதயத்தில் இடம் தருமளவிற்கு கஞ்சனல்லவே நான்.

- என்னால் அவளை மறக்க முடியவில்லையே சீனா. என் உறக்கத்தினுள் சூரியனாக விடிகிறாளே அவள். என் விழிப்பிலே உயிரென துடிக்கிறாளே அவள். அவள் கண்ணீரிற்கு காரணம் அவள் என்மேல் கொண்ட திவ்ய காதல் அல்லவா. ஒரு வேளை அவள் என்னுயிரை எடுத்துக் கொண்டாள் எனில்..ஹாஆஆஆ…. இப்போது மட்டும் அவள் என்னுயிரை எடுத்துக் கொள்ளவில்லையா என்ன… என் மனம் அதன் அமைதியின் கருவறையை கண்டு கொள்ளும்.

- காமா என்ன உளறுகிறாய், காதலிற்காக உயிரை விடுவது முட்டாள்தனம்.

- இருக்கலாம். காதலில் வீழ்ந்தபின் எவன் புத்திசாலியாக இருக்கமுடியும். அவளிற்காக நான் முட்டாளாகவே இருந்துவிடுகிறேன் என்று கூறிய பச்சைக் கண்ணன் தன் வலது கையைத் திறந்தான். அந்திச் சூரியனின் கதிர்களின் ஜாலத்தில் ஒரு சிறிய தீப்பிழம்பாய் அவன் உள்ளங்கைகளில் எரிந்தது அந்த சிவப்பு முத்து.

- புரட்சிக்காரனே உன் கதையைத் தொடர்ந்து கூறு, பின்பு என்ன நடந்தது என்பதை அறிந்தால்தான் இக்கதையை நான் யாரிடமாவது விற்கலாம் என்றான் சிந்துபாத்.

புரட்சிக்காரன் ரஃபிக்கின் எண்ணங்கள் சொகுசு விடுதியின் அறையை நோக்கி நீந்தின. இதோ இந்தக் கொள்ளையர் கப்பலில் அவன் வந்து சேர்ந்திருக்க காரணமான நிகழ்வுகள் ஆரம்பித்த அந்த அறையை அவ்வளவு இலகுவாக அவனால் மறந்துவிடமுடியுமா என்ன.

- என் கண்களை நான் மீண்டும் திறந்து மேலே பார்த்தபோது, இரு ராட்சத ஆமைகள் அந்த அறையை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. ஆனால் அவை ஆமைகள் அல்ல….

ஆமை ஒட்டு வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கவசங்கள் இரண்டும் அந்த அறையின் கூரையினை உடைத்த வண்ணம் பலத்த சப்தத்துடன் தரையில் மோதின. மோதிய வேகத்தில் பாதுகாப்புக் கவசத்தின் காற்றுப்பைகள் வெடித்து வீங்கின. கவசம் பாதியாக திறந்தது. முதலாவதாக திறந்து கொண்ட கவசத்திலிருந்து வெளியேறிய உருவம் எழுந்து நின்று, விழுந்த அதிர்வால் சற்று தள்ளாடியது. சிறிது கணத்தின்பின் தன்னிலைக்கு வந்த அந்த உருவம் தன் உடலில் வழிந்த பாதுகாப்பு நுரையை வழித்துவிட்டபடியே… ராஜமாந்தீரிகன் கருந்தேளின் கண்டுபிடிப்பு அற்புதம். புஷ்பக் விமானத்தை எவ்வளவு சிறப்பாக அவன் ஓட்டி வந்தான். ஆனால் இந்த இலுமினாட்டிக்குதான் வாய் ஓயாத பேச்சு. யாரையாவது வெட்ட வேண்டும் என்ற வெறி, விதேசி மோகம்..என்று புலம்ப ஆரம்பித்தது. அறையினுள் தன் பார்வையை ஓட விட்ட அந்த உருவம் அங்கிருந்த அழகுகளை கண்டதும் உடனே உஷாரானது. தன் சிரிப்பு வகைகளில் ஓடித் தேடி மன்மத சிரிப்பை கண்டுபிடித்தது. அதனை அறைக்குள் நுரைகளுடன் தூவியவாறே… அழகுச் சிலைகளே தங்கள் அந்தரங்க நாடகத்தில் அத்துமீறி கூரையை உடைத்து நுழைந்ததிற்காக என்னை மன்னியுங்கள் என்றவாறே அறையிலிருந்த பெண்களை நோக்கி நாடக பாணியில் சலாம் வைத்தது மொட்டைத் தலை சீனன் ஷங்லிங்கின் உருவம்.

Friday, October 15, 2010

ரேப் ட்ராகன் - 23


வவ்வால் குடில்!

கபிலவிழியழகி, அசிங்கமான மொட்டைத் தலை சீனனை எண்ணிக் கொதித்து தன் வாழைத் தண்டுக் கால்களை தரையில் ஓங்கி அடித்ததால் அந்த அழகுப் பெண்ணின் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த இரு வவ்வால்களும் அவள் தலைக்கு மேலாக பறக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் கீய்ய்ய்..கீய்ய்ய் என்ற தம் கீறுப்பட்ட குரலில் தம் எஜமானியம்மாவை சாந்தப்படுத்தவும் முயன்றன.

வவ்வால்களின் கிய்ச்சாங், கிய்ச்சாங் ஒலியை தாங்கிக் கொள்ள முடியாத விரகதாப காதல் பொறாமையிலிருந்த புரட்சிக்காரன்… பீடைகளே ஒழிந்து போங்கள் இங்கிருந்து என்று வவ்வால்களை நோக்கி உரக்க கத்தினான். ஆனால் நடந்ததோ வேறு.

ரஃபிக்கின் குரலினால் கவரப்பட்ட அந்த இரு வவ்வால்களும் கபிலவிழியாளை விட்டு விலகி ரஃபிக்கின் கலங்கரை விளக்கின்மேல் வட்டமிட ஆரம்பித்தன. அவ்வாறு வட்டமிட்டவாறே அந்த இரு குறும்புக்கார வவ்வால்களும் தங்களிற்குள் பேசிக் கொண்டதை வவ்வால் மொழியிலிருந்து மொழிபெயர்த்து வாசக வெள்ளத்திற்கு வழங்குவது எமது கடமையன்றோ.

வவ் 1: மீ த பஸ்டு

வவ் 2 : மீ கடித்து விட்டு வருகிறேன்

- இந்தக் கோபுரம் சிறியதாக உள்ளது

- அளவைப் பார்த்தால் நாம் பிழைப்பு நடத்த முடியாது

- சிட்டியினதைவிட கெட்டியாக இருக்குமோ

- முட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும்

- கலங்கரை விளக்கின் அடிவாரத்தில் வட்டப் பாறைகள் தென்படுகின்றன

- ஆமாம், ஆமாம், அடிவாரத்தையும், பாறைகளையும் சூழ்ந்து புற்தரை ஒன்றும் இருக்கிறது

- எமக்கு ஒரு குடிலை அங்கு நாம் அமைத்து சல்லாபம் செய்து மகிழலாம்

- ச்ச்சீசீசீகீய்ய்ய்ய்…. உங்களிற்கு எப்போதும் இதே நினைப்புத்தான்

- தலை கீழாக தொங்குவதால் வந்த வினை, உனக்கு மட்டும் இஷ்டமில்லையா என்ன

- குறும்புக்காரர் நீங்கள்

- என் தலைகீழ் அன்பே, வா அந்தக் பாறைகளினுள் மறைந்திருந்து கொஞ்சி விளையாடலாம்

- எனக்கு வெட்கமாக இருக்கிறது

- வெட்கத்தைப் பார்த்தால் விளையாட முடியாது…ஹிஹிகீய்ய்ய்ய்ய்

இவ்வாறாக தமக்குள் உரையாடிய அந்த இரு வவ்வால்களும் புரட்சிக்காரனின் அடிவாரப் புற்தரையினுள் குடிசை கட்ட முயன்றதோடு மட்டுமல்லாது பாறைகளின் உறுதியை சோதிப்பதற்காக தமது பற்களையும், விரல்களையும் அவற்றின் மீது பதித்துவிடவே , நுண்ணிய ஊசிகள் பல தன் உயிரில் குத்தும் வலியை உணர்ந்த புரட்சிக்காரன், தன் இடுப்பை முன்னே உந்தி உந்தி வவ்வால்களை புற்தரையிலிருந்து உதறிவிட முயன்றான். குட்டிச் சாத்தான்களே, உங்களை உயிரோடு நசுக்காது நான் விடமாட்டேன் என்று குரலெடுத்துக் கத்தினான் அவன்.

ஆனால் அவனது கூச்சல்களை அந்த அறையிலிருந்த எவரும் மதித்ததாக தெரியவில்லை. கபிலவிழியாளின் கவர்ச்சியில் கட்டுண்டு கிடந்த டேனி, தன் ஈரமான உதடுகளை திறந்து… பச்சைக் கண்ணனை பற்றி இவ்வளவு நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்களே உங்களிற்கும் அவரிற்குமிடையில்…. டேனியின் வார்த்தைகள் முடியும் முன்பாகவே…. ஏதுமில்லை, இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை, அப்படி இருக்கவும் விடமாட்டேன் எனச் சீறியது புரட்சிக்காரனின் குரல்.

ரஃபிக்கை ஒரு மயக்கும் புன்னகையுடன் பார்த்த கபிலவிழியாளின் உதடுகள் அவர் என்ற சொல்லை அன்புடன் உச்சரித்தது. அவர்.. அவர்தான் என் வசீகரன், இதயத்திருடன், உள்ளம் கவர் கள்வன், காதலன், வருங்கால கணவன்… இதனைக் கூறிய கபிலவிழியாள் ஒரு கனவு நிலையை அடைந்திருந்தாள். அவள் கனவை வெட்டும் வாளாக உயர்ந்தது புரட்சிக்காரனின் குரல்.

- உன் வருங்கால கணவன் இதோ இங்கிருக்கிறான் அழகியே என்ற ரஃபிக்… உன் பச்சைக் கண்ணன் மட்டும் என் கைகளில் சிக்கினான் எனில் உன் காதலை நான் கைம்பெண்ணாக்குவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தான்.

ரஃபிக்கின் இந்த வார்த்தைகள் கபிலவிழியாள் மீது விஷ அம்புகள் போல் பாய்ந்தன. அவள் முகத்தில் படிந்திருந்த மென்மையான உணர்ச்சிகள் அவளை விட்டு நீங்கின. டேனியை தன் கைகளிலிருந்து நழுவவிட்ட கபிலவிழியாள், ரஃபிக் இருந்த பஞ்சணையை நெருங்கினாள். தமது எஜமானியம்மா பஞ்சணையை நெருங்கியதைக் கண்ட தொங்கட்டான் வவ்வால்கள் இரண்டும் பாறைகளிலிருந்து சல்லாபம் செய்வதை விடுத்து கபில விழியாளின் காதுகளில் போய் தொங்க ஆரம்பித்தன.

- அடேய், புரட்சிக்காரா என் காதலையா நீ கைம்பெண்ணாக்குவேன் என்றாய்?

- மன்னித்துவிடு அழகே, அதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.. ரஃபிக் வருத்தம் தோய்ந்த குரலில் பதில் தந்தான்.

- நான் யார் தெரியுமா?

- என் கைவிலங்குகள் கழட்டப்பட்டதும் என்னால் தழுவப்படப்போபவள் என்று கூறி ஒரு முழு மன்மத சிரிப்பை உதிர்த்தான் ரஃபிக்.

- நீ தழுவப்போவது என்பது உண்மை, ஆனால் என்னை அல்ல அற்பனே, கொடிய மரணத்தை. மென்னிக்கடி மொனிக்காவிடம் அகப்பட்ட எவரும் உயிருடன் மீண்டதில்லை என்று கூறிய கபிலவிழியாள் தன் உதடுகளை சற்று அகல திறந்தாள். அவளது நீண்ட வேட்டைப்பற்களும் சிறு குறுவாள்களைப் போல் ரஃபிக்கை பார்த்து புன்னகைத்தன.

- அழகே உன் கையால் என் ஜீவன் பிரிந்தால் அது என் பாக்யம், நீ என்னை உன் காதலனாக ஏற்காதது உன் அபாக்யம், பச்சைக் கண்ணன் என் கையில் சிக்கினால் அது அவன் துர்பாக்யம் என்று தளராமல் தொடர்ந்தான் ரஃபிக்.

- முதலில் நீ, அதன்பின் இந்த இரு பெண்கள், என் தீராத ரத்த தாகம் இன்று பூரண திருப்தியை எட்டட்டும். என் காதலின் கீர்த்திக்கு உங்கள் காமம் கரைந்த ரத்தம் அபிஷேகம் ஆகட்டும்… இதனைக் கூறியவாறே ரஃபிக்கை நோக்கி குனிந்தாள் மென்னிக்கடி மொனிக்கா.

மொனிக்காவின் அருகாமை ரஃபிக்கை எங்கோ கொண்டு சென்றது. ஒரு பெண்ணின் அருகாமை இவ்வளவு சுகத்தை வழங்க முடியுமா என வியந்தான் புரட்சிக்காரன். மொனிக்காவின் அழகிய உதடுகள் வழியாக நீண்ட அந்த இரு வேட்டைப் பற்கள்தான் எவ்வளவு அழகு.. ஆஹா.. அவை என் உடலில் பதியாதா என ஏங்க ஆரம்பித்தான் ரஃபிக்.

புரட்சிக்காரனின் அந்த ஏக்கத்தை உடனடியாக தீர்த்து வைப்பது போல் மொனிக்காவின் பற்கள் அவன் கலங்கரை விளக்கின் மீது பதிந்தது. ஆஹா என்ன சுகம் என்றவாறே திறந்திருந்த கூரையின் வழியாக தெரிந்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் ஒரு புன்னகையுடன் நோக்கினான் ரஃபிக். மொனிக்காவின் கூரான பற்கள் அவன் கலங்கரை விளக்கில் பதிந்து தந்த சுகத்தில் மயங்கிக் கண்களை மூடினான் புரட்சிக்காரன். ஒரு நொடி… இரு நொடி… சடார் என அவன் கண்கள் திறந்தன. ஆகாயத்தை மீண்டும் நோக்கின. அகல விரிந்தன. ஆகாயத்திலிருந்து அறையை நோக்கி வெகு வேகமாக விழுந்து கொண்டிருந்தன இரு ராட்சத ஆமைகள்.

Friday, October 8, 2010

ரேப் ட்ராகன் - 22


பச்சைக்கண் மச்சான் அல்லது எந்திரனை வெல்லும் சுந்தரன்

பஞ்சணையில் விலங்கிடப்பட்ட நிலையில், குந்தவி மற்றும் டேனி ஆகிய இரு பருவ அழகிகளின் உலக ஒழுக்க நெறிகளிற்கு ஒவ்வாத, நீதிமான்களால் சபிக்கப்படுகின்ற, சான்றோர்களால் ஒதுக்கப்படுகின்ற, கலாச்சாரக் காவலர்களால் நிந்திக்கப்படுகின்ற மன்மத இச்சைகளிற்கு இணங்குவதற்கு எதிராக மனவுறுதியுடன் போராடிய ரஃபிக், கூரையிலிருந்து குதித்த குளிர் நிலவைக் கண்டதும் தன் உள்ளம் நிலையிழந்து உதிர்த்த காதல் வார்த்தைகளையோ அல்லது பச்சைக் கண்ணன் மீது கொண்ட பொறாமையினால் உதிர்த்த வீர சபதங்களையோ அந்த கபிலவிழியழகி பெரிதும் பொருட்படுத்தினாள் இல்லை.

தன் காதுகளில் அலங்காரத் தோடுகளிற்குப் பதிலாக தொங்கிய இரு வவ்வால்களை ஆதுரமாகக் தடவிக் கொடுத்தவாறே அந்தக் கபிலவிழியழகி, தன் கவர்ச்சியால் புரட்சிக்காரனை மட்டுமல்ல அந்த அறையில் இருந்த இரு இளம் அழகிகளையும் தன் அழகுப்புலத்திற்குள் ஈர்க்க ஆரம்பித்தாள்.

மேலும் அவர், அவர் என ஒவ்வொரு தடவையும் அவள் உச்சரித்த அவர்கள், அவள் குரலின் இனிமையையும், அவள் அழகின் திரட்சியையும் மேன்மேலும் அதிகரித்தன. அவர் என்று அவள் அழைக்கையில் கபிலவிழியாளின் மீது ஒரு சாந்தம் சரிந்து கொள்ள ஆரம்பித்தது. டேனியிடம் தன் விசாரணையை தொடர்ந்தது அந்த கபிலவிழியழகு.

- அவரின் பச்சைக் நிறக் கண்கள், மரகதக் காடுகளின் குளிர்ச்சியையும், கடல் தேவன் பொசைடனையே தோற்கடிக்கச் செய்யும் காந்த சக்தியையும் கொண்டிருக்குமே..

- ஆம்

- அவரது கேசங்கள், ஓடிக் களைக்காத அஸ்வமேதப் புரவியின் பிடரி முடிகளின் அழகை கொண்டிருக்குமே…

- ஆம்… அழகியே… பதிலளித்தவாறே டேனி, கபிலவிழியாளை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

- பாபிலோனின் மன்மதக் காதல் களியாட்ட பூந்தோட்டங்களின் சுகந்த நறுமணம் அவர் சரீரத்திலிருந்து இயற்கையாக கமழுமே…..

- ஆம்

- எந்திரனை வெல்லும் சுந்தரன் அவர்...[ காப்பிரைட்- பாண்டி மைனர்]

- ஆம்

- ஸ்பார்ட்டானின் முந்நூறு தீர வீரர்களை தனியே அடித்து விழுத்தும் மாவீரர் அவர்….

- ஆமாம், ஆமாம், ஆமாம்… நீங்கள் கூறும் அத்தனை லட்சணங்களையும் கொண்டவர்தான் அவர். ஆனால்….. என இழுத்தாள் டேனி.

- ஆனால் என்ன பெண்ணே…. தன்னை நெருங்கிய டேனியின் ஆடையற்ற உடலின் அழகுகளை ரசித்த கபிலவிழியாள், தனது விரலின் கூரிய நகத்தால் டேனியின் மார்புகளின் இடுக்கிலிருந்து அவள் அடிவயிறுவரை ஒரு கோடிழுத்தாள்.

- ஆஹாஹா…ஆஆஆஆ என மென்மையாக, விலங்குபோல் முனகினாள் மராக்கோ மாதுளை டேனி. கபிலவிழியாள் அவள் உடலில் வரைந்த கோடு, குருதிக் கோடாகியது. அந்தக் குருதிக்கோட்டில் தன் நாக்கை மெதுவாக ஊர விட்டாள் அந்தக் கபிலவிழியழகி. குருதிக்கோட்டினை முழுமையாகச் சுவைத்த அவள்… என் கேள்விக்கு நீ விடை தரவில்லை பெண்ணே என்றவாறே டேனியை அவள் கண்களில் நோக்கினாள். கபிலவிழியாளின் காந்தக் கண்களில் தன்னை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்த டேனி…

- அழகியே மீண்டும் உன் நாக்கு என் உடலில் ஊரட்டும். அது தரும் சுகம் இன்றுவரை நான் சுகிக்காதது என்று கபிலவிழியாளிடம் மெதுவாக கிசுகிசுத்தாள்.

- என் கேள்விக்கு விடையளி, அதன்பின் நீ இதுவரை கண்டிராத சுகத்தை என் பற்களினால் உனக்கு வழங்குகிறேன் என்றாள் கபிலவிழியாள்.

- இவ்வளவு லட்சணங்களைக் கொண்டிருந்தாலும் அந்தப் பச்சைக் கண் மனிதர் பெண்களிடம் தன் மனதை இழப்பதில்லை. மேலும் அவர் விரல்கள் தப்பித் தவறிக்கூட பெண்களின் மீது விழுவதில்லை என்று மயக்கமான குரலில் கூறினாள் டேனி.

இதைக் கேட்ட கபிலவிழியாளின் நெஞ்சங்கள் பெருமையால் எழுந்து இறங்கின. அவள் கண்களில் எங்கிருந்தோ வந்து ஒரு பெருமிதம் குடிபுகுந்தது.

- பெண்களை விரும்பாமல், ஆண் சினேகம் விரும்புவரா என்று கூட நாங்கள் அவரை சந்தேகித்தோம்… கபிலவிழியாளின் கரங்களின் அணைப்பில் தன்னை இறுக்கிக் கொண்டிருந்த டேனி தொடர்ந்தாள்… ஆனால் அந்தப் பச்சைக் கண்ணன் தன் மனதை ஒரு பெண்ணிடம் தந்துவிட்டதாலேயே, அவர் மனதில் நூறுகோடி எரிமலைகளாக கொதித்து நிற்கும் ஒரு காதலாலேயே அவர் வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதை பின்பு அறிந்து தெளிந்தோம்.

டேனியின் வார்த்தைகளைக் கேட்க கேட்க, கபிலவிழியாளின் கண்கள் கலங்கின, அவள் அழகிய கபில விழிகளில் திரண்ட செந்நிறக் கண்ணீரானது அவள் கன்னங்கள் வழியே மெளன அருவியாக வழிந்தது. வழிந்த செங்கண்ணீர் இறுகி சிவப்பு கண்ணீர் முத்துக்களாக தரையில் விழுந்து உருண்டு ஓடி அடங்கியது.

- இந்த தகவல்களையெல்லாம் யாரிடமிருந்து நீ அறிந்து கொண்டாய் பெண்ணே…என்று வினவிய கபிலவிழியாளின் குரல் தழுதழுத்தது.

- மொட்டைத் தலை சீனன்… சற்றும் தயங்காது பதிலை தந்தாள் டேனி.

- ஆஆஆஆஆஆஆஆஆ…. அந்த அசிங்கமான மோசக்கார சீனன் இன்னமும் அவருடன்தான் இருக்கிறானா… கபிலவிழியாளின் குரல் சூடாக ஆரம்பித்தது.

- ஆம் அழகியே, அவருடன் இருப்பது மட்டுமல்ல, ஒரு உண்மைக்காதலை எண்ணி ஏங்கி உருகும் அந்த உத்தம பச்சைக் கண் மச்சானை காமக் களியாட்டங்களில் ஈடுபடச் சொல்லி இடைவிடாது தூண்டுவதும் அந்த அசிங்கமான சீனன்தான் என்று இழுத்தாள் டேனி.

- அடேய் அற்பப் பதரே, மொட்டைத் தலை சீனா, நூடுல்ஸ் மீசைக்காரா, சொர்க்கத்தின் முகவரியில் கட்டெறும்பை வைத்திருப்பவனே, அவரையா எனக்கு துரோகமிழைக்க தூபம் காட்டுகிறாய்… அது நடக்காதடா அப்பனே… உன் மென்னியைத் திருகி, உன் ரத்தத்தை உறிஞ்சி, நட்ட நடு ராத்திரியில் காமத்திற்கு அலையும் வவ்வால் போல் உன்னை உலவவிடாமல் நான் ஓயப்போவதில்லையடா… சீற்றமாகச் சூளுரைத்த கபிலவிழியாள் தன் காலை தரையில் அடித்தாள். அந்த அடியின் அதிர்வில் அவள் காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த தொங்கட்டான் வவ்வால்கள் இரண்டும் அரண்டு கபிலவிழியாளின் காதை விட்டு மேலே எழுந்து பறந்தன.

Friday, October 1, 2010

ரேப் ட்ராகன் - 21


அவர்

இணைய தளபதி ரஃபிக் அவர்களின் ரிஸ்க் ரொம்மான்ஸ்ஸ்ஸ்

சொகுசு விடுதியின் அறையினுள் தன்னுயிரை நீக்க திடம் கொண்ட ரஃபிக்கின் மனக் கண்களின் முன்பாக அவன் கடந்தகால வாழ்வின் பளபளக்கும் பக்கங்கள் விசிறிகளாக விரிந்து மடங்கின. அப்பக்கங்களை தீராத தாகத்துடன் சுவைத்துக் கொண்டு பஞ்சணை வீரமரணத்திடம் தன்னை மெல்ல மெல்ல அந்த வீர வாலிபன் கையளித்துக் கொண்டிருந்த சமயத்தில்… ஆம், நானும் அறிவேன்….என்று ஒலித்த அந்த இனிய குரல் ரஃபிக்கை மீண்டும் அந்த சித்தரவதை கூடத்திற்கு அழைத்து வந்தது.

- ஆகா.. என்னே இனிமையான குரல், இது என்ன குயின்ஸ்லேண்ட் குயிலின் கீதமா இல்லை கீரின்லேந்து கிளியின் சங்கீதமா… ஏன் இந்தக் குரல் என் நரம்புகளை கரைக்கிறது, என் ரத்தத்தின் வெப்பத்தை மூட்டுகிறது, ஏன் என் இதயத்தில் காதலின் வரவேற்பு சங்கீதம் ஆலாபனை செய்கிறது.. ஏன்.. ஏன்..ஏன்… ரஃபிக்கின் மனதில் கேள்விகள் அலை அலையாக கரைமோதின.

பஞ்சணையில் விலங்கிடப்பட்ட நிலையில் கிடந்த ரஃபிக்கின் விழிகள் அந்த இனிய குரல் வந்த வழியில் தம் பாதங்களை பதித்தன. மேலே பயணித்தன. அவன் விழிகளின் பயணம் முடிவடைந்த இடத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுருவம் அந்த வாலிபனின் மனதை லப்பு டப்பு என்று துடிக்க வைப்பதற்கு பதிலாக காதல்…காதல்.. காதல் என வேகமாக துடிக்க வைத்தது. அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய ரஃபிக்கின் விழிகள் கலங்க ஆரம்பித்தன.

சொகுசு விடுதியின் கூரையில் தலைகீழாக தன் பேரழகை தொங்க விட்டிருந்த அந்த நங்கையின் கபில நிற விழிகள் ரஃபிக்கின் இதயத்தை கூரான ஊசி முனைகள்போல் துளைபோட்டன. தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அங்க லாவண்யங்ளை தாகம் கொண்ட சிசு போல் பருக ஆரம்பித்தான் ரஃபிக். அவனது கலங்கரை விளக்கில் ஒரு விம்மல் உதித்தது.

கபிலவிழியாள் தலைகீழாக தொங்கினாலும் அவள் வாளிப்பான தொடைகளிலிருந்து பிடிவாதமாக கீழே இறங்க மறுத்த அந்த அதி குட்டைப் பாவாடையை தன் மனதில் சபித்தான் புரட்சிக்காரன். தட்டையாக வழுக்கி நீண்ட அவளின் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில் நிமிர்ந்து நின்ற குன்றுகள் அவனை எச்சில் விழுங்க வைத்தன. பின்புறமாக உதித்த மேடுகளை முழுமையாக தரிசித்திட அவன் உள்ளம் ஏங்கியது. திறந்திருந்த அவளது வயிற்றுப் பகுதியில் அழகான சிரிப்பாக இருந்த அந்த தொப்புளை ஊடுருவி நின்ற வளையலின் முனையில் மினுங்கிய பச்சைக் கல்லின் மீது ஜோ என்ற எழுத்து பதிந்திருந்தது. புரட்சிக்காரனின் ஒழுக்கம் அவனிடமிருந்து விடைபெற்றது. புரட்சி அவனில் கருகியது. அவன் உதடுகள் விடாது துடித்தன. நாக்கு அலைபாய்ந்தது.

- தலைகீழாக தொங்கும் பேரழகே, உன்னிடம் என் மனம் திறந்தேன். நான் உன்மீது காதல் கொண்டேன். என் உடல், பொருள், ஆவி என யாவும் இனி உனக்கே தந்தேன். என்னை ஏற்றுக்கொள் இல்லை மேலும் உன் விழிகளை என்மீது பாய்ச்சி என் உயிரைக் கொள்…. உணர்சிப்பிழம்பாக விழுந்த ரஃபிக்கின் காதல் வார்த்தைகளை கேட்ட அந்தக் கபிலவிழியாள் கூரையிலிருந்து அறைக்குள் குதித்தாள். அவள் கூரையிலிருந்து குதித்தது ஒரு கரும் பறவையின் தரையிறங்கலின் அழகை தன்னில் கொண்டிருந்தது.

கபிலவிழியாளின் இடையூறால் சற்று வெலவெலத்துப்போன இரு அழகிகளும் ரஃபிக்கின் இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு மனம் நொந்து புண்ணாகினார்கள்.

- நயவஞ்சக புரட்சிக்காரா, எம் காதல்களையும், கெஞ்சல்களையும் மறுத்து எம்மை வன்முறையின் பாதையினை அணைக்கத் தூண்டிய நீ, இந்த வவ்வால் மாமியைக் கொஞ்சிக் குலாவி சரசமாடத் துடிக்கிறாய், டேனி, இவனை இப்போதே கொல்ல வேண்டும் என என் மனம் துடிக்கிறது என்ற இளவரசி, அறையில் தன் மனத் துடிப்பை நிறைவேற்றக்கூடிய ஆயுதங்கள் ஏதேனும் உண்டா என தன் பார்வையை ஓட்டினாள்.

கூரையில் இருந்து அறையினுள் இறங்கிய கபிலவிழியழகி, இருளிற்கு கறுப்பு சாயம் பூசியது போன்ற வண்ணம் கொண்ட தன் நீண்ட கருங்கூந்தலை தடவிக் கொடுத்தாள். பருத்த தன் வாழைத் தண்டுத் தொடைகளை அசைத்து ஒரு கவர்ச்சியான நடை நடந்தவாறே ரஃபிக் விலங்கிடப்பட்டிருந்த பஞ்சணையை நெருங்கிய அவள், சாட்டை அடியால் ரஃபிக்கின் உடலிலிருந்து துளிர்த்துக் கொண்டிருந்த குருதியை நோக்கி தன் விழிகளை செலுத்தினாள். அவள் கரங்கள் ரஃபிக்கை நோக்கி நீண்டன. அவள் விரல்கள் ரஃபிக்கிலிருந்து துளிர்த்த ரத்தத்தை தொட்டு அவள் இதழ்களிற்கு மீண்டன. அவளது நீண்ட நாக்கு, விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்த குருதியைத் தீண்டியது. ம்ம்ம்ம்ம்…… ரத்தத்தின் உன்னத சுவையை அனுபவிப்பதுபோல் தன் கண்களை மூடினாள் கபிலவிழியாள்.

- புரட்சிக்காரனின் ரத்தமும் புனிதர்களின் ரத்தம் போல் இனிக்கவே செய்கிறது என்று ரஃபிக்கின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட கபிலவிழியாள் கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள். அளவிற்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டிருந்த கபிலவிழியாளின் வேட்டைப் பற்கள் தந்தங்கள் போல் தோற்றம் தந்தன. அந்தப் பற்களின் கவர்ச்சியில் ரஃபிக் தன்னை இழந்தான். ஆகா .. அந்தப் பற்கள் என் மேனியில் பதியாதா, என் உடலை செல்லமாக கடிக்காதா என அவன் மனதினுள் விம்மினான். கபிலவிழியாளின் விரல்கள் தன் மீது பட்டதால் தான் பிறந்த பலனை அடைந்த புரட்சிக்காரன்….

- புரட்சிக்காரனின் உதடுகளை உன் நாக்கு ஒரு முறை சுவைத்தது எனில், அமிர்தத்தின் இலக்கணம் என்ன என்பதை அது தெரிந்து கொள்ளும் பாக்யம் பெறும் பேரழகியே என்று குழைவாக பேசினான்.

ரஃபிக்கின் இந்தக் குழைவான குரலை பொறுத்துக் கொள்ளமுடியாத டேனி, துரோகி, ஓரவஞ்சனைக்காரா என்று ரஃபிக்கை பார்த்து கத்தினாள்.

- அடக்கு உன் குரலை என டேனியை நோக்கி சீறினாள் கபிலவிழியாள். அந்தக் குரலில் சேர்ந்திருந்த வன்மையில் டேனி ஒடுங்கினாள்.

- தங்கலிங்க ரஸவாதம் தெரிந்த ஒருவரை நீ அறிவாய் என்று சற்று முன் கூறினாய் அல்லவா கபிலவிழியாளின் கேள்வி டேனியை நோக்கி நீண்டது.

- ஆமாம்… அச்சம் கலந்த குரலில் பதில் தந்தாள் டேனி.

- அவரின் கண்கள் கிளிகள் பார்த்து வெட்கம் கொள்ளும் பச்சை வண்ணமாக இருந்திருக்குமே… கபிலவிழியழகின் குரலில் இனிமை எல்லை மீற ஆரம்பித்தது

அவர் என்ற சொல்லை கபிலவிழியாள் உச்சரிக்கையில் அவள் கொண்ட மாற்றங்களை கூர்ந்து அவதானித்துவிட்ட ரஃபிக்… அவன் யாரோ, எவனோ, அந்தப் பச்சைக் கண்ணனைக் கொல்லாது நான் என் உயிரை விடமாட்டேன் என உணர்சிவசப்பட்டுக் கத்தினான். யாரோ ஒரு முகம் தெரியாத அந்நியனை கபிலவிழியாள் அன்பு சொரியும் குரலில் அவர் என்று அழைத்தது ரஃபிக்கின் உயிரை உலுக்கியது.

- புரட்சிக்காரனே, அவரைக் கொல்லும் முன்பாக நீ என்னைக் கொல்ல வேண்டும் அதன் முன் நான் உன்னைக் கொன்றிருப்பேன் என்று ரஃபிக்கிற்கு பதிலடி தந்தாள் கபிலவிழியாள்.

அவர், அவர் என்ற சொற்களில் கபிலவிழியாள் சொரிந்த பிரியம் ரஃபிக்கிற்கு விஷமாகக் கசந்தது…. புரட்சித்தாயே இது என்ன புதிய சோதனை, இந்தக் கதையை எழுதுபவனிற்கு நல்ல புத்தியைக் கொடு தாயே என்று குரலெடுத்துக் கதறினான் ரஃபிக். அவன் மனதில் அரும்பிய காதல் மொட்டில் கண்ணீரின் பனித்துளி தன் மென்சோக சித்திரத்தை வரைய ஆரம்பித்தது.

Tuesday, September 7, 2010

ரேப் ட்ராகன் - 20


த மேன் வித் த கோல்டன்.....

ஜிங்கிடிச் சித்தர் ரஃபிக் திருவிளையாடல்

ஹாஹாஹா.. என்ற அந்த கதாநாயகச் சிரிப்பை உதிர்த்தவாறே புரட்சிக்காரன் ரஃபிக் தன் இடுப்பை மேலும் கீழுமாக பஞ்சணையின் மீது கிண்டலாக ஆட்டிக் காட்டினான். முழுப்பலம் பெற்றிருந்த புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கானது இப்போது உலோகத்தை போன்ற உறுதித்தன்மையை பெற்று மிளிர்ந்தது. புரியும்படி கூறினால் ரஃபிக்கின் அங்கம், ஜகஜ்ஜால லிங்கம், சொக்கத் தங்கமாக மாறியிருந்தது.

தம்முள் ஒளியை நிரப்பவேண்டிய கலங்கரை விளக்கு இப்படி அநியாயத்திற்கு தங்க உலோகமாக மாறிவிட்டதே என்ற உண்மை அந்த அறையிலிருந்த இரு அழகிகளையும் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் அந்த அதிர்ச்சியிலிருந்து அழகிகள் இருவரும் சிறிது கணத்திலே விடுபட்டார்கள்.

- ஒஹோ.. உங்களிற்கு ரஸவாதமும் தெரியுமா புரட்சிக்காரரே என்ற குந்தவி, ரஃபிக்கின் தங்கலிங்கத்தை தன் விரல்களால் சுண்டவே அது ணங் என்ற ஒலியை எழுப்பியவாறே சற்று அசைந்து ஆடியது.

வெகாமிபத்தின் விளைவும், ரஃபிக் குத்து வனச் சித்தர்களிடம் கற்றுத் தேர்ந்த ரஸவாத வித்தையும் இணைந்த விளைவால் கலங்கரை விளக்கானது மோசமான சக்திகளின் வாழ்விடமான பாரிஸ் பட்டணத்தின் அழுக்குக் கோபுரமான எய்ஃபல் கோபுரத்திற்கு யாரோ ஒரு கலைஞன் தங்கமுலாம் பூசிவிட்டதுபோல் தோற்றமளித்தது.

- இளவரசி யாம் கற்ற வித்தைகள் பலப்பல. இது அப்பலவுகளில் ஒரு பல. இன்னமும் என்னிடம் வித்தைகள் உண்டு ஆனால் நான் அடக்கமானவன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றான் ரஃபிக்.

- இந்த இரவு முடிவதற்குள் உங்களை அடக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. அதன்பின் நீங்கள் அடக்கமாக இருக்கலாம். ஹ்ம்ம்ம்.. டேனி, இந்த உலோகத்திற்கு முன்பாக நான் பின்வாங்கப் போவதில்லை. இது ஒரு அனுபவம். இதில் புரட்சிக்காரனை தோற்கடிக்க நான் முயலப்போகிறேன்.

- ஆலிலை மீது கொம்பு விழுந்தாலும், கொம்பின் மீது ஆலிலை விழுந்தாலும் சேதம் ஆலிலைக்குத்தானே இளவரசி என்றாள் டேனி சற்று தயக்கம் நிரம்பிய குரலில்.

- கிழிவதைப் பார்த்தால் விளையாடாக் கன்னியாகவே இருந்துவிட வேண்டியதுதான். இந்த தங்க அங்கம் இனி என்னுள் ஆகட்டும் அங்கம் என்று கூறியவாறே தன் அழகான கால்களை அசைத்து முன்னே வந்தாள் குந்தவி.

- சற்றுப் பொறுங்கள் இளவரசி, இதற்கு என்னிடம் ஒரு தந்திரம் இருக்கிறது என்ற டேனி, அறையின் ஒரு மூலையிலிருந்த மயிலிறகொன்றை எடுத்து வந்தாள். மயிலிறகை டேனியின் கைகளில் கண்ட ரஃபிக்….. இது குத்துவனசித்து, இந்த மயிலிறகிற்கெல்லாம் அஞ்சாது என்று வீராப்பாக கூறினான். அவன் கூறியதை ஆமோதிப்பதுபோல் அவன் தங்கலிங்கமும் முன்னும் பின்னுமாக தன் தலையை ஆட்டியது.

- அதனையும் பார்த்துவிடலாம் என்று கூறிய டேனி, புரட்சிக்காரனின் கால்களிற்கு மேலாக மயிலிறகால் மெதுவாக தடவிக்கொடுத்தாள். ரஃபிக்கின் உடலில் இருந்த மயிர்க்கால்கள் எல்லாம் இந்தப் புதிய தாக்குதலால் சடாரென தம் கண்களைத் திறந்தன. இதமாக, பதமாக ரஃபிக்கின் கால்கள் வழி மயிலிறகு மேலே ஏற ஆரம்பித்தது. பின் கால்களை விட்டுப் பறந்து அவன் மார்புகளை வருடியது. அதன் முனைகளில் சுழன்றது. மீண்டும் கால்களிற்கிடையில் இறங்கி ரஃபிக்கின் மதயானைத் தொடைகளை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தது. தொடைகளில் தன் பயணத்தை மேல்நோக்கி நகர்த்திய மயிலிறகு, தங்கக் கோபுரத்தின் அடிவாரத்தில் தன் மென்மையான விரல்களால் வருட ஆரம்பித்தது. கோபுரத்தின் மீது ஏறவும் முனைந்தது.

மயிலறகு தந்த உணர்ச்சிகள் தன் ரஸவாத சித்தியை மென்மையாக்குவதை ரஃபிக் உணர ஆரம்பித்தான். தங்கலிங்கம் தன் தங்க குணத்தை மெதுவாக இழக்கத் தொடங்கியது.

- சபாஷ் டேனி, மயிலிறகுப் பெண்ணே, மன்மத ரதியே இனி ஆரம்பிப்போம் எம் ஆட்டத்தை என்றவாறே ரஃபிக்கின்மீது பாய்ந்து அமர்ந்தாள் குந்தவி. தங்கமிழந்த லிங்கம் குந்தவியினுள் காணாமல்போனது. ம்ம்ம்ம்ம்ம்… புரவிமீது பயணித்து நாட்களாகி விட்டது என்று கூறிய குந்தவி, ரஃபிக்கின் மார்பில் ஓங்கி அடித்தாள்… கிளம்பு புரவியே உன் துள்ளலை இப்போது என்னிடம் காட்டு என்றாள்.

- இந்த சாட்டையை பிடியுங்கள் இளவரசி, புரவி முரண்டு பிடித்தாள் இதனால் நல்ல சாட்டையடி கொடுங்கள் என்றவாறே சாட்டையை குந்தவியிடம் தந்த டேனி… எனக்கும் புரவிமீது ஏற ஆசைதான் ஆனால் இடம் போதாமல் இருக்கிறதே என்று கூறவும் செய்தாள்.

- புரவியின் முகத்தின் மீது ஏறி அமர்ந்து கொள் டேனி, அந்தப் பயணம் ஒரு தனி அனுபவம் என்று கூறி ரஃபிகைப் பார்த்து சிரித்தாள் குந்தவி.

- வேண்டாம், வேண்டாம் புரவிக்கு மூச்சுத் திணறி உயிரைவிட்டுவிடும், நீங்கள் ஒரு சுற்று சுற்றிவிட்டு வாருங்கள், புரவிக்கு கொஞ்சம் தண்ணி காட்டி விட்டு நானும் ஒரு சுற்று சுற்றுகிறேன் என்றாள் இரக்கமான குரலில் டேனி.

- ஒரு மனிதனை மிருகம்போல் நடாத்துகிறீர்களே நீங்கள் என்ன பிறவிகள், இந்த உலகம் ஏன் இன்னமும் சுழல்கிறது. ரஃபிக்கின் இந்த வரிகள் முடியும் முன்பாகவே குந்தவியின் கையிலிருந்த சாட்டை சீறியது. அடி சிறிது பலமாக விழுந்துவிடவே ரஃபிக்கின் உடலிலிருந்து ரத்த துளிகள் அரும்பின.

- மனிதப் பிறவிகள் மட்டுமே ஏனைய பிறவிகளை மிருகங்கள்போல் நடாத்துபவர்கள் என்ற உண்மை தெரியாதவரா நீங்கள் புரட்சிக்காரரே... குந்தவியின் பதிலில் அனல் தெறித்தது.

- இளவரசி, இதில் என்ன வினோதம் எனில், இதனைப்போல் தங்கலிங்க வித்தை தெரிந்த ஒருவரை நான் ஏற்கனவே அறிவேன். தன் மன அமைதிக்காக மட்டுமே அவர் இந்த சித்தியை உபயோகப்படுத்துவார் என்ற டேனி, புரவியின் கேசத்தை ஆதரவாக கோதிவிட்டாள்.

- ஆம்.. நானும் அறிவேன்.

இதைச் சொன்னது புரவியை உற்சாகமாக ஓட்டிக்கொண்டிருந்த குந்தவியுமில்லை, வேதனை, வலியால் திணறிக்கொண்டிருந்த புரவியுமில்லை. ஆனால் அந்தக் குரல் இனிமையாகவிருந்தது. மயக்கியது. நடுநிசியின் யாழாய் இசைத்தது. இரவு பாடிய சங்கீதமாய் வழிந்தது. குந்தவியும், டேனியும் குரல் வந்த திசை நோக்கி தம் விழிகளை திருப்பினார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை பஞ்சணையிலிருந்து துள்ளிவிழச் செய்தது.

வானம் பார்க்கத் திறந்திருந்த அறையின் கூரையிலிருந்து வவ்வால் போல் தலைகீழாக அறைக்குள் தொங்கிக்கொண்டிருந்தாள் அந்த இனிய குரலிற்கு சொந்தக்காரி. தான்பட்ட வேதனைவலிகள் அனைத்தையும் கடந்து அவள் கண்களினுள் விழுந்த ரஃபிக்கின் ஹிருதயம் சிதறியது, துண்டுகளாகத் துடித்தது, காதல் காதல் என விம்மி வெடித்தது.

ரேப் [ட்ராகன்] வாரம் இனிதே நிறைவுற்றது.

Monday, September 6, 2010

ரேப் ட்ராகன் - 19


வெகாமிபம்

காவிய நாயகர் ரஃபிக் அட்டகாசம்

அய்யய்யோ அய்யய்யோ மோசம் போனோமே எனும் குந்தவியின் கதறல் பரிதாபமாக அந்த சொகுசு விடுதியறையின் சுவர்களை தழுவியது. வெண்ணெய் கசிந்து, ஒளி சுருங்கி, பிரகாசமிழந்து போன புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கை வேதனை கலந்த தன் விழிகளால் நோக்கினாள் குந்தவி. கலங்கரை விளக்கை மீண்டும் ஒளியூட்ட வேண்டுமானால் பொழுது விடிந்துவிடுமே என்ற மனக்கவலை அந்த அழகு மல்லிகையை ஆக்கிரமித்தது. ஆனால் புரட்சிக்காரன் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என்ற மன ஆறுதலை அடைந்தான்.

இனியாவது இந்த இளம் பருவப் பெண்களிடமிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்று அவன் மனம் கணக்குப் போட்டது. இந்த எண்ணத்துடன் தொண்டையை சற்றுச் செருமிய புரட்சிக்காரன்.. தாகமாகவிருக்கிறது அருந்த சிறிது நீர் கிடைக்குமா என்று குழைந்தான். நீரைக் குடித்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும் என்பது அவன் உடனடி விருப்பமாகவிருந்தது.

ஆனால் மாராக்கோ மாதுளை டேனியோ ஏதும் பேசாது அறையின் ஒரு பகுதிக்கு சென்று அங்கிருந்து ஒரு சிறு குப்பியை தன்னோடு எடுத்து வந்தாள்.

- டேனி, இது என்ன குப்பி? வினவினாள் குந்தவி. குந்தவியின் இக்கேள்விக்கு டேனியின் முகத்தில் ஒரு கள்ளப் புன்னகை பதிலாகப் பூத்தது. அப்புன்னகை தன் எண்ணங்களை தவிடு பொடியாக்கப் போகிறது என்பதை ரஃபிக் உணர்ந்தான். வெறுப்புடன் உயரந்தது அவன் குரல்,

- வேறு என்ன, என்னைக் கொல்லும் ஆலகால விஷம்தான் அது. ஆண்களின் சாபங்களே, காமக் கொடுரீகளே இப்படி துளித்துளியாக என்னை துன்புறுத்துவதற்குப் பதிலாக என்னைக் கொன்றுவிடுங்கள் என்றான் ரஃபிக். உங்கள் கைகளில் உருட்டப்படுவதைவிட மரணத்தின் மடியில் வீழ்கிறேன் என்ற அவன் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.

ஆனால் ரஃபிக்கின் புலம்பல்களை சட்டை செய்யாத டேனி…. இளவரசியே இதுதான் வெண்காண்டாமிருக இந்திரிய பஸ்பம். சுருக்கமாக வெகாமிபம் என்பார்கள். பிரபஞ்சம் எங்கும் இதன் புகழ் நிமிர்ந்து நிற்கிறது. இதனை இவரிற்கு புகட்டினால் ஒளியிழந்த விளக்கு ஒளிபெறும், மேலும் துரித வெண்ணெய் ஸ்கலிதங்களும் தடுக்கப்படும். விடிய விடிய பிரகாசம், தீராது சல்லாபம், நமக்கது உல்லாசம் என்றவாறே சிறிய கிண்ணமொன்றில் தேனை ஊற்றிய டேனி, வெகாமிபத்தை ஒரு சிட்டிகை அளவு அக்கிண்ணத்தினுள் இட்டாள், பின் எதையோ நினைத்துக் கொண்டவள்போல் குந்தவியைப் பார்த்த டேனி.. இளவரசி இந்த இரவின்பின் இவரை உயிருடன் விட்டு வைக்க வேண்டுமா? என தன் முகத்தில் ஒரு குறும்பு புன்னகையை வரவழைத்துக்கொண்டு வினவினாள்.

- இல்லை இந்த இரவின்பின் இவர் எமக்கு தேவையில்லை என்று குறும்பாக பதில் தந்தாள் குந்தவி.

- இதன்பின் நான் வாழ்ந்திருந்து என்ன பிரயோசனம். என்னை இப்போதே சாகடியுங்கள் ம்.. வாருங்கள் வந்து என் கதையை முடியுங்கள் என்று கதற ஆரம்பித்தான் ரஃபிக். ரஃபிக்கின் ஓலம் அடங்கும் முன்பாகவே வெகாமிபத்தை கிண்ணத்தினுள் வெறுமையாக்கிய டேனி அதனை தன் விரல்களால் வேகமாக குழைக்க ஆரம்பித்தாள். தன் அந்திம காலத்தின் உதயம் ஒரு கிண்ணத்தில் விடிவதை ரஃபிக் உணர்ந்தான். போர்க்களத்தில் வீரமரணம் அடைந்திருக்க வேண்டிய அவன் இந்தப் பஞ்சணையில் போரிட்டு மடிய வேண்டியிருப்பதை எண்ணி அவன் கண்கள் கலங்கின. ஆனால் அவன் தனக்குள் புதைத்திருந்த ஒரு வித்தை, அத்தருணத்தில் அவன் எண்ணங்களை மெதுவாக தட்ட ஆரம்பித்தது.

வெகாமிபத்தை தேனில் குழைத்தவாறே, அறையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கயிறை டேனி இழுக்கவே, அவர்கள் இருந்த அறையின் கூரை விரிய ஆரம்பித்தது. விரிந்த கூரையின் வழியாக ராப்பொழுது வானின் சந்திரனும், நட்சத்திரங்களும் ரஃபிக்கை மெளனமாக எட்டிப் பார்த்தன. சில நட்சத்திரங்கள் புரட்சிக்காரனின் நிலையைக்கண்டு தம் கண்களை கசக்கவும் செய்தன. புஷ்பக் விமானம் ஒன்று சந்திரனின் குறுக்காக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த டேனி..

- இளவரசி, புஷ்பக் விமானத்தில் காதல் செய்து களித்திருக்க வேண்டும் என்பது என் ஆசை என்று தன் மனதை திறந்தாள்.

- கவலை வேண்டாம் டேனி, புரட்சிக்காரரின் கதையை முடித்தபின்பாக வேறு யாராவது எம் கைகளில் மாட்டாமலா போய்விடுவார்கள். ஏமாளி ஆண்களிற்கா இந்தப் பாரிலே பஞ்சம்! என்று மயக்கும் சிரிப்புடன் பதில் தந்தாள் குந்தவி.

- சரியாகச் சொன்னீர்கள் என் அழகு இளவரசி, சரி அவரின் கன்னங்களை அழுத்துங்கள். நான் அவரிற்கு இந்தப் பஸ்பத்தை புகட்டுகிறேன் என்றாள் டேனி.

- அந்தச் சிரமம் உங்களிற்கு வேண்டாம், என் மரணம் என்பது உறுதியாகிவிட்டபின் அதனை ஒரு வீரனிற்குரிய லட்சணத்துடன், ஆசையுடன் ஆரத்தழுவிக் கொள்ளவே நான் விரும்புகிறேன். கொண்டுவா அந்த பஸ்பத்தை இங்கே காமமோக சாத்தானே என்று நிதானத்துடன் கூறினான் ரஃபிக்.

டேனி தன் உதடுகளில் பொருத்திய கிண்ணத்திலிருந்த பஸ்பத்தை ஒரே இழுப்பில் விழுங்கினான் ரஃபிக். வெகாமிபத்தின் ஓவர்டோஸால் சொர்க்கத்திற்கு அப்பால் சென்ற ஆன்மாக்களை அவன் உள்ளம் ஒரு கணம் எண்ணிப் பார்த்தது.

சிறிது நேரத்தில் வெகாமிபம் தன் பெருமையை நிலைநாட்ட ஆரம்பித்தது. கலங்கரை விளக்கில் ஒளி ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. ஒளி பெறுக.. ஒளி பெறுக…தலை நிமிர்க என்று ரஃபிக்கின் கலங்கரை விளக்கை பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் இரு பருவச்சிலைகளும்.

- இளவரசியே, கலங்கரை விளக்கின் ஒளியை நீங்கள் முதலில் உள்வாங்குங்கள் பின்பு நான் வாங்கிக் கொள்கிறேன் என்ற டேனி, குந்தவியின் இடையைத் தடவிக் கொடுத்தவாறே அவள் இடைக் கச்சையை மெதுவாக அவிழ்த்து விட்டாள்.

- என்ன ஒரு பெருந்தன்மை, என் வரலாறு இதை வெட்கமற்ற வரிகளாக எழுதட்டும் என்று கேலியுடன் கூறினான் ரஃபிக்.

டேனியின் ஈரமான உதடுகளில் ஒரு முத்தத்தைப் பதித்த குந்தவி, கலங்கரை விளக்கின் ஒளியைத் தேடிச் சென்றாள். ஆனால் ஒரு அதிர்ச்சி அவளை எதிர்பாரது எதிர்கொண்டது. அவள் கண்கள் வியப்பால் உறைந்தன. குந்தவியின் கண்களைப் பார்த்த டேனியின் பார்வை ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மீது வீழ்ந்தது. அவள் இருதயம் ஒரு கணம் அடிக்க மறந்தது.

- ஹாஹாஹாஹா… என்று வில்லத்தனமாக சிரிக்க ஆரம்பித்தான் ரஃபிக்… பெண்களே இந்தக் கதையின் கதாநாயகன் யார் என்பது இப்போது உங்களிற்கு தெரிந்திருக்குமே…. ரஃபிக் தன் கதாநாயகச் சிரிப்பை நிறுத்தவேயில்லை.

Sunday, September 5, 2010

ரேப் ட்ராகன் - 18


பஞ்சணைப் பஞ்சாமிர்தம்

வாலிபக் கனி ரஃபிக் அதிரடி

சொகுசு விடுதி பஞ்சணையின் மீது விலங்கிட்ட தேவன் போல் கிடந்த புரட்சிக்காரன் ரஃபிக்கின் உடல்மேல், சிறிய பாலைவனப் பாம்புபோல் ஊர்ந்த குந்தவியின் விரல்கள், மலைபோன்ற அவன் மார்பின் உச்சிகளை மென்மையாக வட்டமிட ஆரம்பித்தன. ஒரே சமயத்தில் பல புள்ளிகளை நோக்கி ரஃபிக்கின் உடலில் உணர்ச்சிப் பரிகள் பாய்ந்தன.

- என்னை விட்டுவிடுங்கள், என் தவத்தைக் கலைக்காதீர்கள், என் இலட்சியத்தை அழிக்காதீர்கள், என் புரட்சியை கற்பழிக்காதீர்கள் ஹோய்..ஹோய்.ஹோய் என்று கதறினான் ரஃபிக். ஆனால் டேனியும், குந்தவியும் மனம் இரங்கினார்களில்லை. அவர்களிருவரின் விரல்களும், பற்களும், நாக்குகளும், இதழ்களும் ஒய்வே வேண்டாம் என உறுதி எடுத்துக் கொண்டவை போல் ரஃபிக்கின்மேல் இயங்கின.

திடீரென தன் வேகமான இயக்கத்தை நிறுத்திய குந்தவி, அறையில் பழங்கள் இருந்த மேசையை மீண்டும் அணுகினாள். பழங்கள் நிரம்பிய ஒரு தட்டையும், ஒரு சிறு கத்தியையும் எடுத்துக்கொண்டு பஞ்சணைக்கு திரும்பினாள்.

- இளவரசி, பழங்கள் எதற்கு? உங்களிற்கு பசியெடுத்து விட்டதா என்ன என்று வினவிய டேனியின் விரல்கள் ரஃபிக்கின் தொடைகளை கீறியவண்ணம் இருந்தன. இடையிடையே புரட்சிக்காரனின் பாதிச் சந்திரன்களிலும் அவை இறங்கி மீண்டன.

- ஆம், பஞ்சாமிர்தம் சாப்பிட ஆசையாகவிருக்கிறது டேனி என்றாள் குந்தவி.

- அடியே பாவிகளே, குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளே, காம மோகினிகளே இங்கு ஒரு மனிதனின் உயிர் போன்ற மானம் பதினெட்டு அத்தியாயங்களாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் பஞ்சாமிர்தம் சாப்பிடப் போகிறீர்களா என்று ஓலமிட்டான் ரஃபிக்.

ரஃபிக்கின் இந்த உருக வைக்கும் ஓலத்தைக்கேட்ட இளவரசி தனது கையிலிருந்த சிறுகத்தியை ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் பதித்து, இந்தப் பழத்தையும் நறுக்கலாமா, பஞ்சாமிர்தத்தில் கலந்து உண்ணலாமா என்று கூறி உரக்கச் சிரிக்கவே, டேனி அந்த ஞானப் பழத்தை தன் கைகளால் மூடிக் காப்பதுபோல் நடித்தாள். கிராதகிகள் நறுக்கினாலும் நறுக்குவார்கள் என்று உள்ளூர நடுங்கினான் ரஃபிக்.

பழக்கூடையிலிருந்த பலவகையான கனிகளை வேகமாக நறுக்கிய குந்தவி, அந்தக் கனித்துண்டங்களை ரஃபிக்கின் உடலின் மீது பரவினாள். பழங்களின் குளிர்ச்சி ரஃபிக்கின் உடலை கிறுகிறுக்க வைத்தது. கனிந்து முற்றிய மாதுளை ஒன்றை உடைத்து அதன் செம்முத்துக்களை ரஃபிக்கின் மீது விதைத்தாள். அம்முத்துக்கள் ரஃபிக்கின் உடலில் ஜொலித்தன. ரஃபிக்கின் உடல் ஒரு பஞ்சாமிர்தக் கிண்ணமாக மாறியது. அவன் உடல் எங்கும் கனிச்சாறு வியர்த்தது. வியர்த்த கனிச்சாற்றை தன் நாவினால் ருசி பார்க்க ஆரம்பித்தாள் டேனி. கனித்துண்டங்களை கவ்வினாள். ரஃபிக்கை கவ்கவ்கவ்வினாள்.

இவ்வேளையில் தன் மார்க்கச்சையை அனாசயமாக களைந்த குந்தவி, அந்த மார்க்கச்சையை ரஃபிக்கின் வாயில் வைத்து அடைக்கவே ரஃபிக்கின் ஹோய் ஹோய் சங்கீதம் மட்டுப்பட்டது. ரஃபிக்கின் விழிகள் விரிந்தன. குந்தவியும் தன் பங்கிற்கு பஞ்சாமிர்தத்தை சுவைக்க ஆரம்பித்தாள். ஆகா.. என்ன உன்னதமான சுவை, அருமையான பஞ்சாமிர்தம் இது என அதன் சுவையையும் பாராட்டவும் செய்தாள்.

குந்தவி தன் மார்க்கச்சையை அவிழ்த்ததால், அந்த மார்க்கச்சை சிறையிலிருந்து விடுதலையடைந்த இரு தாமரைகளும், உணர்ச்சிகளின் உந்தலால் தம் மென்மையை இழந்தன. அழகான இரு ஸ்ட்ராபெர்ரிகளை பழத்தட்டிலிருந்து எடுத்த குந்தவி, அவற்றை கடினமாகிப்போயிருந்த தன் தாமரைகளின் நுனிகளில் குத்தி நிறுத்தியவளாக..

- புரட்சிக்காரரே பழம் சாப்பிடுங்கள் என்றவாறே ரஃபிக்கின் வாயிலிருந்த தன் மார்க்கச்சையை வேகமாக வெளியே இழுத்தெடுத்தாள். குந்தவி மார்க்கச்சையை வெளியே இழுத்த கணத்தில் ஆஆஆஆ என அகலத் திறந்த ரஃபிக்கின் வாயினுள் தாமரைகளையும், ஸ்ட்ராபெர்ரிகளையும் வேகமாகப் புதைத்தாள் குந்தவி. குந்தவியின் இந்த தகாத செயலைத் தடுக்க வேகமாக தன் வாயை ரஃபிக் மூடினான். ம்ம்ம்ம் மெதுவாக மெதுவாக புரட்சிக்காரரே என்று முனகினாள் குந்தவி. விருட்டென தன் தலையை அப்பால் திருப்பிய ரஃபிக், தாமரைகளும், ஸ்ட்ராபெர்ரிகளும் சேர்ந்தளித்த சுவையில் ஆகா என்ன சுவை… என்று உளறினான்.

- என்ன இன்னும் வேண்டுமா என்றவாறே குந்தவி தன் தாமரைகளை ரஃபிக்கின் முகத்தை நோக்கி அசைக்கவே, டபக் என முதலைபோல் தன் வாயை இறுக மூடினான் ரஃபிக். அவன் வாயை மூடினாலும் குந்தவி தன் தாமரைகளால் ரஃபிக்கின் முகத்தினை தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள். ரஃபிக்கிற்கு தாமரைகள் தாலாட்டுப் பாடின. அய்யய்யோ இந்த தாமரைகளால் நான் மூச்சடக்கி மாளப்போகிறேனே எனக் கலங்கினான் புரட்சிக்காரன். ஆனால் ரஃபிக்கின் மீசையோ, தாலாட்டுப் பாடிய தாமரைகளை குறுகுறுக்க வைக்கவே, தாமரைகளின் நுனிகளில் நகம் முளைத்தால் போல் ரஃபிக்கின் வதனத்தை அவை கீற ஆரம்பித்தன.

இதற்குள் ரஃபிக்கின் உடலின் பல பகுதிகளிலும் இரு அழகிகளும் சேர்ந்து நிகழ்த்திய பல்முனைத் தாக்குதல்களால் கிளர்ச்சியூட்டப் பெற்ற கலங்கரை விளக்கமானது தன் முழு பிரகாசத்துடன் ஒளிர ஆரம்பித்தது. அந்த ஜூவாலையின் கவர்ச்சி அழகிகள் இருவரினதும் உடல்களை கூசச் செய்தது.

- அற்புதமான ஒளி, உன்னதமான பிரகாசம், என்ன யெளவனம்… இந்த அற்புத ஒளியை எம்மில் உள்ளெடுத்துக் கொள்ளும் சுபவேளை நெருங்கி விட்டது இளவரசி என்றாள் டேனி.

ஆனால் கட்டற்ற உணர்ச்சிப் புரவிகள் புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கை தாக்கின, அதன் மீது சீறும் அலைகளாக மோதின. இதனால் கலங்கரை விளக்கம் கண்ட ஆட்டத்தில், துடிப்பில், அது கொண்டிருந்த உயிர் வெண்ணெய் உணர்ச்சி அலைகளாக வெளியே சீறிக் கசிந்தது.

- அய்யய்யோ… அய்யய்யோ மோசம் போனோமோ என்று விழிகள் துடிக்க பதறினாள் இளவரசி குந்தவி.

[ யாரங்கே... அந்த தீப்பந்தத்தை பற்ற வையுங்கள் ]

Saturday, September 4, 2010

ரேப் ட்ராகன் - 17


தொப்புள் தொட்டில் !

வைல்ட் ஸ்ட்ராபெர்ரி ரஃபிக் சாகஸம்

ஹோய்.. ஹோய்ய்ய்ய்.. ஹோய்ய்ய்ய்ய்.. என்ற ரஃபிக்கின் முனகல் ஒலி சொகுசு விடுதியின் அறையை கூசச் செய்தது. உடலில் வலியை உணரும்போது அய்யோ.. அம்மா.. கடவுளே .. வலி உயிர் போகிறதே.. ஆஆஆஆ என்றவாறாக மனிதர்கள் ஒலிகளை எழுப்புவது இயல்பான ஒன்று. ஆனால் புரட்சிக்காரன் ரஃபிக் எழுப்பிய அந்த ஒலியோ வினோதமான தன்மையைக் கொண்டிருந்தது. அது ஏன் என்ற காரணத்தை காண்பதற்கு செல்வோமா வெண்கமலங்களின் உள்ளங்களை விட பரிசுத்தமான மனம் கொண்ட வாசக வெள்ளமே.

டேனி தன் கையிலிருந்த சாட்டையால் ரஃபிக்கை அடித்தாள். பின் அடிவிழுந்த பகுதிகளை தன் அழகிய நாக்காலும், செவ்விதழ்களாலும் தடவிக் கொடுத்தாள். இங்கு, தூய உள்ளம் கொண்ட வாசக வெள்ளமானது சாட்டை அடியானது ரஃபிக்கின் கருங்கடல் போன்ற மார்பின் மீதோ, அல்லது கைகள் மீதோ, அல்லது இந்திரனின் அரண்மனைத் தூண்களை ஒத்த கால்களின் மீதோ விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டு கதையின் அடுத்த வரிகள் மேல் ஓடிச் சென்றிருக்கும்.

ஆனால் இந்தக் கதையை எழுதும் தீய சக்தியின் கற்பனை அப்படியான தூய்மையை கொண்டதாக இருக்கவில்லை. வவ்வால்கள் தம் இதயங்களில் பொறாமையுடன் பாதூகாக்கும் இருளைப்போன்றது அந்தக் கற்பனை. டேனி சாட்டையால் ரஃபிக்கை அடித்தாள். அந்த அடி குறி தவறாது ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மீது விழுந்தது. சாட்டை அடியால் துடித்துச் சரிந்த கலங்கரை விளக்கை டேனி தன் இதழ்களாலும், நாவினாலும் ஒத்தடம் தரவே சரிந்த விளக்கு நிமிர்ந்து உயிர்பெற ஆரம்பித்தது.

உடலின் விளக்கு உயிர்பெறும் வேளையில், ரஃபிக் அதுவரை காலமும் அடக்கி, அமுக்கி, சுருக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கட்டவிழ்த்துவிட்ட அரபுநாட்டுப் புரவிகள்போல் வேகமாக ஒரு புள்ளியை நோக்கி பாய ஆரம்பித்தன. இந்தப் புரவிகளின் பாய்ச்சலை தடுக்க முடியாத நிலையில் அந்தப் புரட்சி வீரன் ஹோய்ய்.. ஹோய்ய் என ஒரு இறுதி முனகலை எழுப்பினான். மராக்கோ மாதுளை டேனியின் நாவிற்கு மட்டும் விரல்கள் இருந்திருந்தால் அது குத்து நகர புத்தக கண்காட்சியில் ஒரு தலையணைப் புத்தகத்தை வெளியிடும் அளவிற்கு ஹோய் ஒலி அனுபவங்களை பெற்றிருந்தது என்பதை இலக்கிய வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

- டேனி, புரட்சிக்காரரிடமிருந்து புரட்சி மெல்ல மெல்ல விடைபெறுகிறது என்ற குந்தவி, அறையிலிருந்த மேசையொன்றில் வைக்கப்பட்டிருந்த பல வகையான கனிகளை நோக்கினாள். அவள் அழகிய விழிகள் நன்கு முற்றிக் கனிந்திருந்த ஸ்ட்ராபெர்ரிகள் மீது நிலைத்தன.

பழங்கள் இருந்த மேசையை நெருங்கிய இளவரசி குந்தவி, ஒரு கனிந்த ஸ்ட்ராபெரியை தன் விரல்களில் கவ்விக்கொண்டு ரஃபிக் மல்லாந்து கிடந்த பஞ்சணையை நெருங்கினாள். ரஃபிக்கை நோக்கி ஒரு மாயப் புன்னகையை வீசினாள். குந்தவியின் புன்னகையைப் பார்த்த ரஃபிக், இளவரசி போதும் இந்த விளையாட்டு, விலங்கிட்ட நிலையில் ஒரு அப்பாவியை சித்திரவதை செய்கிறீர்களே இதுவா உங்கள் பண்பு, என்னை விடுவியுங்கள் என்று கெஞ்சினான். ஆனால் அந்தக் கெஞ்சலில் உறுதி குறைந்திருந்தது.

கலங்கரை விளக்கிற்கு தொடர்ச்சியாக ஒத்தடம் தந்து கொண்டிருந்த தன் இதழ்களை அதனினின்று சற்றுப் பிரித்தெடுத்த டேனி, குந்தவியின் விரல்களிலிருந்த கனிந்த ஸ்ட்ராபெர்ரியை பார்த்தாள். அவள் விழிகள் குந்தவியை நோக்கி கேள்விகளாக உருவெடுத்தன.

- இளவரசி இந்தப் பழத்தை ஏன் விரல்களில் வைத்திருக்கிறீர்கள்!?

- டேனி, இனி இந்தக் கனி என் விரல்களில் இருக்கப்போவதில்லை என்றவாறே குந்தவி அந்த ஸ்ட்ராபெர்ரியை ரஃபிக்கின் வயிற்றில் வைத்து தன் நாக்கால் அவன் தொப்புளை நோக்கி அக்கனியை உந்த தொடங்கினாள். குந்தவியின் நாக்கும், ஸ்ட்ராபெர்ரியும் மாறி மாறி விதவிதமான உணர்வுகளை ரஃபிக்கின் உடலில் உந்தின. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ரஃபிக்கின் தொப்புளில் விழுந்தது அந்த சிவந்த ஸ்ட்ராபெர்ரி. சக்கரவர்த்திகளின் கீரிடங்களில் அழகாகப் பொருந்தி ஜொலிக்கும் சிகப்பு மாணிக்கம்போல் புரட்சிக்காரனின் தொப்புளில் பொருந்தி ஜொலித்தது அந்த ஸ்ட்ராபெர்ரிக் கனி.

strawberry_-7776 தன் விரல்களை அந்த ஸ்ட்ராபெர்ரியை சுற்றி நளினமாக நடனமாடவிட்டாள் குந்தவி. ரஃபிக்கின் தொப்புளைச் சுற்றி ஆயிரம் மின்னல் நுன்ணுசிகள் கும்மியடிக்க ஆரம்பித்தன. ஹோய்..ஹோய்ய்ய் என்று கதறினான் ரஃபிக். குந்தவியின் விரல்களை புகழ்ந்து உடனடியாக கவிதை பாட ஒரு கணம் அவன் மனம் துடித்தது ஆனால் புரட்சி அந்த வீரனை தடுத்தது.

- நன்றாக இருக்கிறதா புரட்சிக்காரரே என்ற டேனியின் நாக்கு இப்போது ரஃபிக்கின் தொப்புளை சுற்றி வட்டங்களை இட்டது. ஸ்ட்ராபெர்ரிக்கும் கலங்கரை விளக்கிற்கும் இடையில் அந்த பொல்லாத நாக்கு ஒரு பாதை சமைத்தது. ஆகா.. பேஷ் பேஷ் அருமையாக இருக்… என்று சொல்ல ஆரம்பித்த புரட்சிக்காரன் ரஃபிக், பாதகிகளே இந்த வித்தைகளை எல்லாம் எங்கு கற்றீர்கள், உங்களை நம்பி ஒரு ஆண்மகனை தனியாக விட்டுச் செல்ல முடியுமா, முடிந்தால்தான் அந்த ஆண்மகன் உயிருடன் இருப்பானா, கலிகாலம், கலிகாலம் என்று முடித்தான்.

ரஃபிக்கின் தொப்புள் தொட்டிலில் வீற்றிருந்த ஸ்ட்ராபெர்ரியை தன் முத்துப் பற்களால் கவ்வி பாதி கடித்தாள் குந்தவி. அவள் பற்கள் அளவான பதத்துடன் ரஃபிக்கின் தொப்புளை ஒரு செல்லக் கவ்வு கவ்வின. அதேவேளை டேனியின்பற்கள் கலங்கரை விளக்கின் மீது செல்லமாக தன் பற்களை பதித்தன. ஒஹோய்ய்ய்ய்ய்ய்ய் என்று துடித்தான் ரஃபிக். அவன் ஆவி அவனை விட்டு சற்று வெளியே எட்டிப்பார்த்து மீண்டது.

Friday, September 3, 2010

ரேப் ட்ராகன் - 16


ஒளி விளக்கு!

மல்லாந்த டைகர் ரஃபிக் சாகசம்

இருண்ட வீடு, மரணத்தின் கூடு என குத்து நகர இலக்கிய பெரும்புலவர் காருமேகம் அவர்கள் தன் ஏடுகளில் எழுதி வைத்திருக்கிறார். புரட்சிக்காரன் ரஃபிக்கின் இருண்ட கலங்கரை விளக்கில் ஒளியேற்ற விரும்பிய அழகிகளான குந்தவியும், டேனியும் அதற்கான முஸ்தீபுகளில் உடனடியாக இறங்க ஆரம்பித்தார்கள்.

கலங்கரை விளக்கை தன் கைகளால் மூடி மறைத்து, தன் மானத்தை கவரிமான் போல் காத்து நின்ற புரட்சிக்காரன் ரஃபிக்கை விரைந்து நெருங்கிய இரு அழகான பெண் வேங்கைகளும் ரஃபிக்கின் திமிறல்களையும், போராட்டங்களையும் முறியடித்து, அறையிலிருந்த பஞ்சணையில் அவனை இழுத்து வந்து வீசினார்கள்.

அந்த அழகுச் சிலைகளின் பிடிகளிலிருந்து விடுபடத் திமிறிய ரஃபிக்.. குந்தவி இது நல்லதல்ல, நானும் நீயும் காதல் வானில் கூடிப் பறந்த காலங்களை சற்று எண்ணிப்பார் என்று கெஞ்சினான். ரஃபிக்கின் இந்த சொற்கள் குந்தவியின் மனத்தை இளக்குவதற்கு பதில் மேலும் கடினப்படுத்தின.

- கடந்தகாலத்தில் நானும் இல்லை நீங்களும் இல்லை. எங்கள் ஆசைக்கு உடன்படுங்கள். உங்களை வருத்தாமல் நானும் டேனியும் நடந்து கொள்கிறோம்.. கண்டிப்பான குரலில் வார்த்தைகளை குந்தவி உதிர்த்தாள்.

- மன்னித்துவிடு இளவரசி உன் ஆசைக்கு என்னால் இணங்க முடியாது. இந்த புரட்சிக்காரனிற்கு தலை வணங்கிப் பழக்கமில்லை. தலையை எடுத்துத்தான் பழக்கம்.. அந்த இக்கட்டான நிலையிலும் தன் புரட்சித் தீயின் அனல் பொறி பறக்க பதில் தந்தான் அந்த ஒப்பற்ற புரட்சி வீரன்.

ரஃபிக்கின் வார்த்தைகள் குந்தவியை மேலும் சூடாக்கின. அறையில் இருந்த இரு கைவிலங்குகளை எடுத்து வந்த குந்தவி, அவ்விலங்குகளை ரஃபிக்கின் கரங்களில் மாட்டி பஞ்சணையின் தலைமாட்டிற்கு பின்பாக இருந்த வளையங்களில் அவற்றை பிணைத்தாள்.

குந்தவி, கைகளில் விலங்கை மாட்டியபோது அதனை எதிர்த்துப் போராடிய ரஃபிக்கை அழகி டேனி தன் வலிய கரங்களால் அழுத்திப் பிடித்தாள். மேலும் ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் தன் கால் முட்டிகளை பதித்து, அதில் சிறிது அழுத்தத்தை அளித்து ரஃபிக்கை எச்சரிக்கவும் செய்தாள்.

வீட்டில் விளக்கேற்றி வைத்து, வீட்டிற்கு ஒளியைத் தரும் அந்த தீபத்தை, தம் கண்களாக மதிக்கும் பெண்களே சில சமயங்களில் தவறுதலாக அத்தீபத்தை மிதித்து விடுவதும் உண்டு. தன் கலங்கரை விளக்கை காப்பாற்ற விரும்பிய ரஃபிக் தன் திமிறலை சற்று அடக்கினான். ஆனால் அவன் கைகள் விலங்கிடப்படுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

ஒரு பஞ்சணையில் ஒரு புலியை விலங்கிட்டு நிர்வாணமாக மல்லாக்க வளர்த்தினால் அந்தப் புலியின் ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது புரட்சிக்காரன் ரஃபிக்கின் ரியாக்‌ஷன். ஆனால் புலியை பஞ்சணையில் விலங்கிட்ட அழகுப் பெண்களோ இந்த ரியாக்‌ஷனால் அசந்தார்கள் இல்லை.

விலங்கு கேளிக்கைக் காட்சிகளில் அடங்க மறுக்கும் விலங்குகளை சாட்டையால் அடித்து அடக்குவான் அவ்விலங்குகளின் தலைவன். அறையிலிருந்த சவுக்கு ஒன்றை தன் கையில் எடுத்த டேனி, அதன் கைப்பிடியை தன் செவ்விதழ்கள் பொதிந்த வாயால் கவ்வியபடியே ஒரு விலங்கைப் போல் ரஃபிக்கின் பஞ்சணையை நெருங்கினாள். அந்தப் பஞ்சணை மேல் ஏறிய அவள், ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் அந்த சவுக்கை தன் உதடுகளிலிருந்து நழுவவிட்டாள். சவுக்கு கலங்கரை விளக்கின் மேல் விழுந்த அதிர்ச்சியால் ஹாஆ என்றான் புரட்சிக்காரன்.

- டேனி, மயிலே மயிலே இறகு தா என்றாள் இந்த மயில் எதுவும் தராது எனவே… அன்பால் பகிர்ந்து சுவைப்பதில் இன்பம் உண்டு, அடித்து சுவைப்பதிலும் பேரின்பம் உண்டு. துன்பம் என்பதை உணராது இன்பத்தை எப்படி டேனி முழுமையாக சுவைக்க முடியும்?… இளவரசி குந்தவியின் வார்த்தைகளை செவிமடுத்தவாறே மராக்கோ மாதுளை டேனியின் கைவிரல்கள் ரஃபிக்கின் கலங்கரை விளக்கின்மேல் கிடந்த சவுக்கின் கைபிடியை வருடிக் கொடுத்தன.

கார்மேகங்கள் சூல் கொண்டு தம் இதழ் திறந்து அமுதமென மழையாய்ப் பொழிய, விருட்சத்திற்கும், நெற்கதிர்களிற்கும் மேல் வழிந்த அவ்வமுதம், கவனிப்பாரற்ற சிறு புற்களையும் நனைத்தாற்போல், சவுக்கை தடவிய டேனியின் விரல்கள் ரஃபிக்கின் கலங்கரை விளக்கையும் வருடிவிட்டன. இந்தப் புதிய அதிர்ச்சியால் உணர்ச்சிகள் திடீரென உந்தப்பட்ட புரட்சிக்காரன் ஹோய் என்ன ஒரு முனகலை எழுப்பினான்.

- வலிக்கிறதா புரட்சிக்காரரே…டேனியின் விரல் நகங்கள் ரஃபிக்கின் கற்பாறை போன்ற தொடைகளில் மேலும் கீழும் கீறியவாறே சென்றுவர ஆரம்பித்தன. புரட்சிக்காரனிற்கு வலித்தது ஆனால் அது ஒரு புரட்சிகரமான வலியாக இருந்தது.

சந்தர்பங்களும், சூழ்நிலைகளும் தனக்கு எதிராக சதி செய்ததால் தான் இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த சில உணர்ச்சிகள் அழகிகள் பக்கம் கட்சி தாவ ஆரம்பித்து விட்டன என்பதையும் ரஃபிக் உணர ஆரம்பித்தான்.

- டேனி, நிறுத்து உன் தடவல்களை.. என்று சீறீய ரஃபிக்கின் குரல் அடங்கு முன்னரே டேனியின் கைகளிற்கு வந்திருந்த சாட்டை ரஃபிக்கின் மீது சடாரெனப் பதிந்தது. புதிதாய் முளைத்த செடி ஒன்றை, இரு நாள் பசி கொண்ட ஆடு வேரோடு புசித்தால் அச்செடிக்கு என்ன வலி நேருமோ அதனைவிட வலியை அந்த சவுக்கடி ரஃபிக்கிற்கு வழங்கியது. ஆனால் சாட்டையடி விழுந்த வேகத்திலேயே டேனியின் உதடுகளும், அழகிய கூரான நாக்கும் சவுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்மேல் பதிந்து நடாத்திய சிகிச்சை அவனை அந்த வலியை மறக்கடிக்கச் செய்தது. இன்னொரு உலகின் அருகில் வந்த ரஃபிக், ஹோய்..ஹோய்ய்ய்ய். ஹோய்ய்ய்ய்ய் என்றான்.

ஒரு அன்பான வேண்டுகோள்:

அன்னப்பறவைகளின் ஹிருதயம் கொண்ட வாசகத் தென்றலே, பல இன்னல்களையும், இக்கட்டுக்களையும், வேதனைகளையும், மேரு மலை போன்ற உறுதியுடன் தாங்கி வரும் புரட்சிக்காரன் ரஃபிக்கின் உணர்வுகளில் நீங்கள் பங்கெடுக்க துடிப்பதை நான் உணர்கிறேன், இருப்பினும் SMS, மெயில், தொலைபேசி வழியாகவோ அல்லது பூங்கொத்துக்களை அனுப்பியோ அந்த வெந்த உள்ளத்தின் வேதனையை நீங்கள் இந்த வார இறுதியில் இன்னமும் அதிகரிக்காதீர்கள் என்று உங்களிடம் இரந்து வேண்டுகிறேன்.

Thursday, September 2, 2010

ரேப் ட்ராகன் - 15


கறையற்ற சந்திரர்கள்

வெகுசனங்களின் சந்திரன் ரஃபிக் சாகஸம்

ஒரு கவரிமான் தன் முடிகளில் ஒன்றைக்கூட இழந்துவிடும் நிலையில் தன் இன்னுயிரை ஈய்த்துவிடும் என்பது தமிழ் வெகுசன இலக்கியங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்தாகும். அப்படிப்பட்ட கவரிமான் வம்சத்திலே உதித்த புரட்சிக்காரன் ரஃபிக், தனது ஆடைகள் அனைத்தையும் இழந்த நிலையில், தன் இயற்கை அழகு மேனியுடன், குந்தவி, டேனி ஆகிய இரு கொடிய வேங்கைகள் முன் கையறு நிலையில் நின்றான்.

அவன் அழுதிருப்பான் ஆனால் அவனை அழவிடாது மீண்டும் வெகுசன தமிழ் இலக்கியங்கள் தடுத்தன. அழுவது ஆணிற்கு அழகில்லை என்பதும் அந்த இலக்கியங்களால் பரப்பப்பட்ட ஒரு கருத்தல்லவா. எனவே அழவும் முடியாது, வேங்கைகளிடமிருந்து தப்பவும் முடியாத நிலையில் புரட்சி மாதாவை வேண்ட நினைத்தான் ரஃபிக். ஓ.. இது என்ன வன்கொடுமை… என்று தன் மனதில் விம்மினான். அறையிலிருந்த சாளரத்தின் வழியே வெளியே பாய்ந்து தப்பி ஓடிவிடலாம் என்று நினைத்த அந்த புரட்சிக்காரன் அந்த சாளரத்தை நோக்கி ஓடவும் செய்தான்.

ஆனால் பெண் வேங்கை டேனி, ரஃபிக்கிற்கு முன்பாக குறுக்கே பாய்ந்தாள். பாய்ந்ததோடு மட்டுமல்லாது ரஃபிக்கின் இரு கரங்களும் கூடி நின்ற இடத்தையும் தன் விரல்களால் சுட்டிக் காட்டி…புரட்சிக்காரரே கலங்கரை விளக்கை மறைப்பது நியாயமானது அல்ல. கப்பல்கள் பாறைகளில் மோதிடும், திசை தவறி பாதாளத்தில் அமிழ்ந்திடும். எங்கே உங்கள் கரங்களை சற்று விலக்குங்கள் பார்க்கலாம் என்றாள்.

- காமம் உன் கண்களை மறைத்து இருள் திரையை போர்த்துகிறது. உனக்கு தேவை பக்தியின் விளக்கு, அடக்கத்தின் ஒளி, பெண்மையின் பிரகாசம். டேனி மரியாதையாக எனக்கு வழிவிடு இல்லையேல்.. முரட்டுத்தனமாக பேசினான் ரஃபிக்.

- இல்லையேல்…என்ன செய்வீர்கள் பதிலிற்கு ரஃபிக்கை மேலும் சீண்டினாள் டேனி

- பெண்களே, என் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது, ஆணாள இயலாது. தானே கனிந்த பழம் இனிக்கும். கசக்கிக் கனிந்த பழம் தன் சுவை இழக்கும். மேலும் நான் ஒத்துழைக்காவிடில்… கலங்கரை விளக்கு ஒளி தராது.. எனவே… என்று இழுத்தான் ரஃபிக்.

- எனவே.. ம்.. மிகுதியையும் கூறுங்கள் என்றாள் குந்தவி.

- ஹாஆ… ஒளி தராத கலங்கரை விளக்கைக் கொண்டு எந்தக் கப்பலுமே அது செல்ல வேண்டிய உச்சத்தை அடைய முடியாது அழகுகளே… ஏளனமாக இதனைக் கூறிய புரட்சிக்காரன்… ஹாஹாஹாஆஆ என்று ஒரு வெற்றிச் சிரிப்பை உதிர்த்தான்.

- டேனி..

- என்ன இளவரசி?

- கலங்கரை விளக்கை இவர் கரங்கள் மறைக்கலாம் ஆனால் இந்த பாதிச் சந்திரன்களை அவை மறைக்கவியலுமா என்ற குந்தவி, ரஃபிக்கின் பின்னழகுகளை சுட்டிக் காட்டினாள்.

- ஆஹா..ஆஹா. இளவரசி..என்னே ஒரு கலை ரசனை. இந்த இரு பாதிச் சந்திரன்களின் அழகுகளும் வானத்து முழுநிலவின் வதனத்தையும் சிவக்கச் செய்யுமே.. என்ற டேனி, ரஃபிக்கின் பின்னால் ஓடிவந்து அவனின் சந்திரன்களை ரசிக்கவும் செய்தாள். முழு நிலவில்கூட கறை இருக்கிறது. ஆனால் இந்தச் சந்திரன்களின் அழகில் களங்கமில்லை. கறைபடாத சந்திரன்கள் இவை இளவரசி என்று மேலும் இழுத்தாள்.

- இந்தப் பாதிச் சந்திரன்களில் நாம் எம் தடங்களைப் பதிக்கலாம், களங்கத்தை கருக்கொள்ள வைக்கலாம் டேனி. கால்தடம், கைத்தடம், பற்தடம், நகத்தடம் என்று பல தடங்களை இன்று இந்த சந்திரன்களில் நாம் பதிந்திடும் பாக்யம் நமக்கு கிடைக்கப்போகிறது.

இரு அழகிகளினதும் இவ்வகையான விபரீதமான பேச்சுக்களும் புரட்சிக்காரனை சிறிது நிலைகுலைய வைத்தன. கலங்கரை விளக்கைக் காப்பதா, பாதிச் சந்திர அழகுகளை காப்பதா என்ற போராட்டத்தில் அவன் மனம் குதித்தது. ஒரு நீண்ட மனப் போராட்டத்தின் பின்பாக ஒரு கரத்தால் கலங்கரை விளக்கையும், மறுகரத்தால் சந்திரர்களையும் பாதுகாப்பது என்ற முடிவிற்கு வந்த ரஃபிக், அதனை நிகழ்த்தவும் செய்தான். இதற்காகவே காத்திருந்ததைப்போல் இரு பருவச் சிட்டுக்களும் அவன் முன்னால் ஓடி வந்து நின்றார்கள்.

- ஆஹா.. என்ன அழகான கலங்கரை விளக்கம். என்ன கம்பீரம். என்ன பிரம்மாண்டம். இரு பாறைகளிற்கு நடுவில் நின்று அது எழுந்து நிற்கும் அழகே என்னை கவிழ்க்கிறதே. இந்தக் கலங்கரை விளக்கு இனியும் இருண்டிருக்கக்கூடாது. பெண்கள் வீட்டின் விளக்குகளை ஏற்றுபவர்கள், ஒளியை உருவாக்குபவர்கள் என்று கூட தமிழ் வெகுசன இலக்கியத்தில் உண்டு என இந்தக் கதையை எழுதுபவன் எழுதக்கூடும். எனவே இருண்டிருக்கும் இந்த கலங்கரை விளக்கில் ஒளியை ஏற்றுவோம், அதன் பிரகாசம் எங்கள் கப்பல்களை நிரப்பட்டும். தானாகக் கனிந்த கனியைவிட கல்லால் எறிந்து வீழ்த்திய காயின் சுவையும் அதிகம் என்பதை புரட்சிக்காரரிற்கு உணர்த்துவோம். இவ்வாறு கூறிய குந்தவி, ரஃபிக்கை நோக்கி வேகமாக நகர்ந்தாள்.